ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.18
அழகான அந்த இரவு நேரத்தில் இதமான பொழுதை பல மடங்காய் உயர்த்திக் காட்டுவது போல் வானத்தில் உதித்த வெள்ளி நிலா தன் குளுமையை கூட்டி ….. கொதிக்கும் மனதோடு குழம்பிய சிந்தையோடு திக்கு திசை தெரியாது தன் வாழ்க்கை தனக்கு இனிவரும் நாட்களில் என்ன வைத்திருக்கிறது என்பதை சற்றும் சிந்திக்க கூட பிடிக்காது சிலையாய் வெள்ளி பாவையாய் அசைவின்றி அமர்ந்திருக்கும் ஷிவானியின் மனதை குளிர்விக்க முயன்று தன் முயற்சியில் தோற்றுப்போய் பரிதாபமாய் மேகத்திற்குள் தன்னை மறைத்து கொண்டது…….
மிகப் பிரம்மாண்டமான சற்று பழமையான அந்த பங்களாவின் அதி நுட்பமான அழகிய வேலைப்பாடமைந்த அந்த அறையின் கலை பொருட்களும் அதன் ஆடம்பரமும் ஷிவானியின் கண்ணில் பட்டாலும் அவள் கருத்தில் பதிய வில்லை……எங்கோ தூரத்தில் இருளை வெறித்தபடி அமர்ந்து இருந்தவளின் மூலையில் மீண்டும் மீண்டும் எதிரொலித்த குரலின் இறைச்சல் தாங்காமல் அது உணர்த்திய செய்தியை புரிந்து ஏற்றுக் கொள்ளமுடியாமல் பாவை அவளின் மெல்லிய பசும் தளிர் மேனி மெல்லிய நடுக்கத்தில் துடிக்க கிட்டத்தட்ட சில மணி நேரங்களாகவே அதே நிலையில் அமர்ந்திருக்கும் அவளை பற்றிய கவலை சிறிதும் இன்றி…….
அன்றைய நாளில் மணம் முடித்த புதுமண தம்பதியர் காக பார்த்துப்பார்த்து அலங்கரித்து இருந்த அந்த பெரிய கட்டிலின் மலர்களின் மத்தியில் மிக சுகமான தூக்கத்தில் ஆழ்ந்த படி நிர்மலமான முகத்தோடு கம்பீரமாக படுத்திருந்தான் ஆரியரின்……
தான் தாலி கட்டி அழைத்துவந்த அவளை பற்றிய எண்ணம் அவனுக்கு துளி அளவேனும் இருப்பதாய் தெரியவில்லை எவ்வளவு பெரிய நெருப்பு கங்குகளை அள்ளி அவள் தலையில் கொட்டி இருக்கிறோம் அதனால் அவள் படும் வேதனையும் துன்பங்களும் என்ன என்ற யோசனை கூட இன்றி……ஏன் அப்படி ஒருத்தி அங்கு இருப்பதைக் கூட சட்டை செய்யாமல் மனிதத் தன்மையை மொத்தமாய் விலை பேசி விற்று விட்டு படுத்துறங்கும் அவனின் திமிர்த்தனம் ஷிவானிக்கு உள்ளுக்குள் பொங்கி எழும் சுனாமி பேரலைகளை உண்டு செய்தது……..
அவனின் தன்மீதான அலட்சியத்தை கண்டு கொதித்தெழுந்த மனம் அவன் பக்கம்கூட திரும்பாமல் இத்தனை நேரம் எங்கெங்கோ பார்வையைப் செலுத்தியிருக்க அவனின் வார்த்தைகள் மட்டும் அவள் மனதில் ஓயாமல் வலம் வந்தபடி இருந்தது….அதிலும் அவன் சொன்ன அவர்களின் உறவு நிலையான தாய் மாமன் மகன் என்னும் பதம் ஷிவானிக்கு உண்மையில் அது பேரதிர்ச்சி என்று சொல்ல வேண்டும்……தன் அன்னையையும் தந்தையையும் சற்றும் பிடிக்காத அவளின் தாய் வழி சொந்தத்தின் மீது என்றுமே ஷிவானிக்கு சற்றும் நல் மதிப்பு இருந்ததில்லை அவள் மனமார இவ்வுலகத்தில் யாரையாவது வெறுக்கிறாள் என்றால் அது அவள் அன்னையின் உடன் பிறந்தவர்களையும் பெற்றவர்களையும் தான்……
அப்படியிருக்க இத்தனை ஆண்டுகள் கழித்து இப்படி ஒருவன் திடீரென்று தோன்றும் சூறாவளி காற்றைப்போல் வந்து அவள் வாழ்க்கையை நாசமாக்க என்ன காரணம் இருக்க முடியும்……அதை நினைக்கும் போதே ஏன் அதற்கும் அவன் ஒரு பதில் சொன்னது உனக்கு நினைவில்லையா என்று அவள் மனசாட்சி குரல் கொடுத்தது….. நிச்சயம் அந்தப் பதில் அவளுக்கும் நினைவிருந்தது அத்தோடு அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் தான்……
தன்னைப் பார்த்து சற்றும் நம்ப முடியாது அதிர்ச்சியில் விழித்த ஷிவானியின் கண்களை கூர்ந்து நோக்கிய ஆரியனின் உதட்டில் அவள் அறியாத சிறு சிரிப்பு ஒன்று தோன்றி அவன் மீசைக்குள் மறைந்துபோக தன் கடுமையான முகத்தை சற்றும் மாற்றிக் கொள்ளாமல் வலது கைகளில் ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் சேர்த்து அவள் முன்பு சுட கிட்டு அவள் கவனத்தை திருப்பியவன்……அப்போதும் தன் வார்த்தைகளின் பாதிப்பு குறையாமல் பேந்த விழிக்கும் அவள் முகத்தின் அருகில் இன்னும் சற்று நெருங்கி என்ன ஆச்சு பூனைக்குட்டி என்று சற்று நக்கலாய் இதழ் பிரித்து கேட்க…….
தனக்கு வெகு அருகில் வெண் முத்துக்களாய் ஒளி வீசிய அவன் பற்களின் ஒளிர்வு அவள் கண்களை பறிக்க….சட்டென்று மின்சாரம் தாக்கியது போல் துள்ளிக்குதித்து எழுந்து அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டு கட்டிலில் இருந்து இறங்கி நின்ற ஷிவானி தன் இதழ்களில் அவன் சற்றுமுன் மிச்சம் விட்டிருந்த ஈரத்தோடு சேர்த்து துளிர்த்திருந்த ஒரு துளி ரத்தத்தையும் ஆவேசமாய் துடைத்துக் கொண்டவள்……எனக்கு அப்படி எந்த சொந்தமும் இல்லை நான் ஒரு அனாதை அப்படி இருக்கும்போது நீ எப்படி எனக்கு சொந்தமாக முடியும் பெயரளவில் கூட அப்படி எந்த உறவும் எனக்கு தேவையும் இல்லை…….. உன் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரின் பார்வையில் இருந்தும் தப்பித்து. எங்கேயோ ஒதுங்கி நாங்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தோம் எங்களைத் தேடி பிடிச்சு என் வாழ்க்கையை அழிக்கும் அளவுக்கு உனக்கு நான் என்னடா துரோகம் பண்ணினேன் சொல்லு……..அவன் சட்டையை கொத்தாக பிடித்து கேள்வி கேட்ட ஷிவானியின் கைகளை அலட்சியமாய் தன் மீதிருந்து ஒரு கை அசைவில் தட்டி விட்டவன்……..
தன் முன்பு பத்ரகாளி போல் கண்களை உருட்டி கனல் கக்கும் விழிகளால் அவனை எரிக்க முயலும் ஷிவானியின் முன்பு கட்டிலில் அலட்சியத்தோடு அமர்ந்து தன் இடது கால் மீது வலது காலை போட்டு கம்பீரமாய் அமர்ந்தவன்……. என்ன கேட்ட நீ எனக்கு என்ன செய்தாய் என்று தானே….. சொல்கிறேன் அதற்குள் என்ன அவசரம் நீ ஒரு பழமொழி கேட்டிருக்கிறாயா ஷிவானி பெற்றவர்களின் பாவம் பிள்ளைகளின் தலைமேல் என்று அதன்படி உன் பெற்றவர்கள் என் குடும்பத்திற்கு செய்த அநியாயத் திற்கு அவர்களின் மகளான நீ எங்களுக்கு ஈடு செய்ய வேண்டும் உன் மனதாலும் செயலாலும்……..திமிரின் உறைவிடமாய் அவள் விழிகள் பார்த்து அவன் கூற அகம்பாவமான பேச்சும் செய்கையும் ஷிவானி யின் நெஞ்சில் தீ மூட்டியது…….
பாவமா..?? எது பாவம்..?? காதலித்து தன் மனதிற்கு பிடித்தவரை மணந்து கொள்வது அத்தனை பெரிய பாவமா.. உன் குடும்பத்தில் அது பாவம் என்றால் தவறு உங்கள் மீது தானே ஒழிய என் பெற்றவர்களின் மீது இல்லை….. அவன் வார்த்தையில் குறுக்கிட்டு கிட்டத்தட்ட கத்திய ஷிவானியின் கைகளை பிடித்து தன்னை நோக்கி சுண்டி இழுத்தவன் தன் உடலோடு வந்து விழுந்தவளை கெட்டியாய் அழுத்திப் பிடித்து மடி மீது அவளை அமர்த்திக் கொண்டு இடையை வளைத்த அவனின் கரங்கள் ஏற்படுத்திய வலியை தன் உதடு கடித்து அடக்கிய ஷிவானியின் செவியோடு இதழ் பொருத்திய ஆரியன்…….
காதலிப்பதும் மணந்து கொள்வதும் தவறு இல்லை பெண்ணே ஆனால் பொய்யுரைப்பதும் தன்னை சேர்ந்தவர்களையே ஏமாற்றுவதும் தவறு…. தன் பெற்றவர்களுக்கு மறைத்து திருட்டுத்தனமாய் திருமண தினத்தன்று அனைவரின் முன்னிலையிலும் அவர்களை அவமானப்படுத்தி விட்டு ஓடிப்போவது தான் குற்றம் பெரும் குற்றம்……. அனல் தெறிக்கும் சூடு மூச்சோடு அவள் செவிப்பறை அதிர சொன்னவன் பக்கவாட்டில் திரும்பி தன்னைப் பார்த்த ஷிவானியின் பின் கழுத்தை அழுத்தமாக இருக்கி பிடித்து தன் முகத்தோடு அவள் முகத்தை சேர்த்து வைத்தவன்……அணுவணுவாய் அவள் கண்ணீர் கரை கட்டிய கருவிழிகளையும் அவனால் சிறிது நேரத்திற்கு முன்பு அழுத்தமாய் காயப்படுத்தி ஆழமாய் சுவைக்க பட்டும் சற்றும் தன் புது மெருகு குறையாமல் சிகப்பில் பல பலத்த தேன் இதழ்களையும் தன் பார்வையால் அளந்தவாறே மீண்டும் பேச ஆரம்பித்தான்…….
அப்படிப்பட்ட சுயநல வாதிகளுக்கு பிறந்த உனக்கு இத்தனை ஆவேசமும் கோபமும் எதற்கு….. அழுத்தம் திருத்தமாய் கேட்பவனின் பிடியில் இருந்து மிகவும் முயன்று தன்னை விடுவித்துக்கொண்டு தள்ளி நின்ற ஷிவானியின் உள்ளத்தோடு சேர்ந்து உடலும் அவன் பார்வையின் வீரியம் தாளாமல் படபடவென்று அதிர அவனுக்கு முகம் காட்டாமல் திரும்பி நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட ஷிவானி…….
இப்போது மீண்டும் அவனை நோக்கி அதற்காக இத்தனை வருஷம் கழித்து நீ எனக்கு செய்த அநியாயம் எப்படி சரியாகும் ஆரியன் இந்த விஷயத்தில் நான் என்ன செஞ்சேன்……தன் பெற்றவர்களைப் பற்றி அவன் கூறியதை ஒப்புக்கொள்ள முடியவில்லை என்றாலும் அவர்கள் இறந்து எத்தனையோ காலங்கள் கடந்து சென்ற நிலையில் இப்போது வந்து பழிக்குப் பழி என்று பிதற்றும் அவன் முட்டாள் தனமான வார்த்தைகள் அவளுக்கு கொதிப்பை கொடுத்தது…….
அவள் என்னதான் கொதித்து குமுறி வார்த்தைகளை கொட்டினாலும் அதை ஒரு அசட்டையான இதழ் சிரிப்பில் புறம் தள்ளியவன் தன் புன்னகை மாறாமல் ஓ..!! நீ அப்படி நினைத்துக் கொண்டாயா உண்மையில் உன் பெற்றவர்களின் தவறுக்கான தண்டனை உனக்கு கிடைக்க வேண்டும் என்று நான் கூறியது…. உன் பாவ கணக்கு ஆரம்பித்த புள்ளியை குறிப்பிடுவதற்காக….
ஆனால் உனக்கு நடந்த அனைத்திற்கும் காரணம் நீ மட்டுமே ஷிவானி நன்றாக வாழ வேண்டிய என் சித்தப்பா சித்தியின் வாழ்க்கையை உன் சுயநலத்திற்காக நாசம் செய்த காரணத்திற்கான தண்டனை தான் உனக்கு இப்போது கிடைத்திருப்பது தெளிவாகப் பேசி அவளை குழப்பிய அவன் வார்த்தைகளை புரிந்துக்கொள்ள முடியாமல் விழித்தவள்….. நீ இப்படித்தான் இப்போதும் புரிந்து கொள்ள முடியாதபடி பேசுவாய உன் சித்தப்பா சித்தி யார் என்றே எனக்குத் தெரியாது அப்படி இருக்கும்போது அவங்க வாழ்க்கைய நான் எப்படி அழிக்க முடியும் முட்டாள்…..
அவளின் முட்டாள் என்ற வார்த்தை உண்டாக்கிய ஆத்திரத்தில் அவளை நோக்கி எழுந்தவனின் வேகம் கண்டு மிரண்டு போய் அனிச்சை செயலாய் பின்னோக்கி நடந்தவளை பார்த்து என்ன நினைத்தானோ ஒரிரு நொடி தன் விழிமூடி திறந்தவன் இப்போது அவளை நோக்கி தன் ஒற்றை விரலை வேண்டாம் என்னும் விதமாய் அசைத்து……நாவடக்கம் வேண்டும் பெண்ணே என்னிடம் பேசும்போது அது உனக்கு மிகவும் உதவியாக இருக்கும்….. இன்னொரு முறை தவறிய உன் வார்த்தைகளுக்காக நீ வருந்தும்படி ஆகிவிடாமல் பார்த்துக் கொள்……
கடும் பாறையை உடைத்தெறியும் கடினதோடு வெளிவந்த அவன் வார்த்தைகளின் வீரியம் தாக்க மொத்தமாய் பயந்து அவனுக்க அஞ்சியபடி நின்றிருந்த ஷிவானியின் முன்பு சில புகைப்படங்களை தூக்கிப்போட்டவன் இதைப் பார்த்த பிறகு உனக்குத் தெரியும் நீ குற்றம் செய்தவள் தான் என்று…… உன் குற்றத்திற்கான பிராயச்சித்தம் செய்து தவறை திருத்திக்கொள்ள கிடைத்த வழியை உபயோகப்படுத்த. அதாவது மனிதத் தன்மையும் ஞாயமான புத்தியும் சிறிதளவேனும் இருந்தால் முயற்சி செய் என்றவன் அதற்கு மேல் அவளை சற்றும் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து விரைந்து பக்கத்தில் இருந்த குளியலறைக்கு சென்று கதவை அடைத்துக் கொண்டவன் சற்று நேரத்தில் குளித்து முடித்த புத்துணர்வோடு வெளி வந்து படுக்கையில் விழுந்தவன் எவ்வித சஞ்சலமும் இன்றி நிம்மதியான உறக்கத்தில் மூழ்கிப் போக……
நின்ற இடத்தில் நின்றபடி நிலைத்த கால்களோடு வெகுநேரம் எவ்வித சலனமும் இல்லாமல் நின்றிருந்த ஷிவானி மெது மெதுவாய் தன் சுயத்திற்கு திரும்பி தன் பாதத்தின் கீழே கிடந்த புகைப்படங்களை எடுத்து பார்க்க….அது கொடுத்த பேரதிர்ச்சி இந்த நாளில் இன்னும் எத்தனை அதிர் வெடிகளை தான் தாங்குவது என்ற பெரும் சோர்வை அவளுக்கு கொடுத்தது……. அத்தனை நேரம் இருந்த கோபமும் வீராப்பு என அனைத்தும் எங்கோ ஓடி மறைய கண்களில் துளிர்த்த நீர் அவள் பார்வை பதித்திருந்த புகைப்படத்தில் துளித்துளியாய் விழுந்து அவள் பார்வையை மங்கலாக்க தன் சேலைத் தலைப்பு கொண்டு அந்தப் புகைப்படத்தை துடைத்து அவளின் விழிகள் அந்த சிறிய கோவிலில் மாலையும் கழுத்துமாக மிகவும் இளைய வயதாய் கண்களில் அப்பட்டமாய் மிரட்சியும் பயமும் பிரதிபலிக்க சற்று ஆரியனின் சாயலை பெற்றிருந்த கம்பீரமான ஆண்மகனின் கைகளைக் கோர்த்தபடி திகைப்பாய் கொண்டிருந்த அவளது அத்தை பூர்ணிமாவின் முகத்தில் நிலைத்தது………
அப்படியானால் அவன் சொல்வது நிஜம் தானா..!!?? தன் அத்தையின் வாழ்க்கையில் அவள் பெரும் தடைக்கல்லாக இருந்து இருப்பது உண்மைதானோ….!!?? ஆனால் ஆனால்..!! இது எப்படி உண்மையாக இருக்க முடியும் அவருக்கு திருமணம் ஆனதோ அத்தையின் கணவர் பற்றியோ எதையுமே அவள் அறிந்திராத பொழுது இந்த ஆரியன் அவள் மேல் சுமத்தும் குற்றம் எப்படி உண்மையாக முடியும்…!!?? எவ்வளவு நேரம் முயன்றும் உருப்படியாய் ஒன்றும் யோசிக்க முடியாமல் அவள் அவதிப்பட காலையில்ருந்தே பெரும் அலைச்சல்களையும் நடுவில் ஒரு விபத்தையும் சந்தித்து முழு மொத்தமாய் துவண்டிருந்த அவள் மனதும் மூளையும் இதற்கு மேல் செயல்பட மாட்டேன் என்று அவளிடம் கெஞ்ச…. நின்ற இடத்தில் அப்படியே தோய்ந்துபோய் சரிந்து அமர்ந்தவளின் முழு இரவும் தூங்கா இரவாகி போக……விழிகளில் தேங்கி ததும்பி வழிந்த கண்ணீரைத் தவிர வேறு அசைவின்றி அமர்ந்திருந்த அந்தப் பெண் நிலவை பார்த்து துயரத்தோடு ஒளிந்துக்கொண்டு இருந்தது வானத்து வெண்ணிலவு……
அது நேரம் வரை அவள் புறமாய் படுத்திருந்த ஆரியன் அவளுக்கு முதுகு காட்டி படுக்கையில் புரண்டு படுக்க அவனின் கண்களில் இருந்து உருண்ட ஒரு துளி கண்ணீர் பிறர் அறியும் முன் அவன் தலையணையில் புதைந்து மறைந்து போனது……..
அதேநேரம் ஊரின் எங்கோ ஒரு மூலையில் இதுநாள் வரை தன்னுடன் இருந்த மருமகளின் பிரிவு மனதை பெரிதும் தனிமையில் ஆழ்த்தி இருக்க……இத்தனை காலத்தில் தான் காணக் கூட பிரியம் இன்றி எங்கோ வைத்திருந்த அந்த புகைப்படத்தை இன்று விழிகளால் வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்த பூர்ணிமாவின் மனதிலும்…. தன் முன்கோபம் என்னும் அவசர செய்கையால் கைக்கு எட்டிய சொர்க்கத்தை கை நழுவ விட்ட துர் பாக்கியத்தை வலிக்க வலிக்க எண்ணிப் பார்த்த படி பூர்ணிமாவின் வீடு இருந்த அதே தெருவில் சற்றுத் தள்ளி ஒரு மரத்தடியில் தன் காரினை நிறுத்தியிருந்த சூரிய பிரகாஷ்ன் மனதிலும் பழைய காலத்தின் நினைவலைகள்….…..
சின்ரெல்லா வருவாள்………