காதல் தோழா 9
”சரண்யா… என் பேக், பைல் எங்க??”
“ கம்ப்யூட்டர் பக்கத்துல இருக்குங்க”
“என் சார்ட், அயர்ன் பண்ணிட்டயா?”
“ட்ரெஸிங் டேபில் முன்னாடி இருக்கு”
“என் போன் எங்க”
“டிவி முன்னாடி இருக்கு” என அவன் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும், கிச்சனில் இருந்து பதில் சொல்லிக்கொண்டிருந்தால்.
“என் மனைவி எங்கனு பார்த்தியா” என அவளை அணைத்துகொண்டே கேட்டான்.
“இங்க தானே இருக்கேன்… “ அவன் அணைப்பில் இருந்துகொண்டே சமையலை கவனித்தால்.
“என்னை கவனி, அடுத்து சமையலை பார்க்கலாம்” அவளை, தன் பக்கம் திருப்பினான்.
“என்னங்க… அதான் நேத்து புல்லா நல்லா கவனிச்சேனே… இன்னும் என்ன கவனிக்கனும்”
“ நேத்து எங்க என்னை கவனிச்ச, பாதில தூங்கிட்ட நீ”
“என்னை தூங்க வச்சதே நீங்க தான்.” அவனை ஒரு மார்க்கமாக பார்த்துகொண்டே சொன்னால்.
“ம்ம்… தெரியாம உன்னை தூங்க வச்சுட்டேன். ஆனா இனிமே அந்த தப்ப செய்ய மாட்டேன்.”
“சரி… ஆபீஸ் டைம் ஆச்சு… ஈவ்வினிங் வந்து என்கிட்ட பேசலாம்…” என அவனுக்கு காலை உணவை பரிமாறினால்.
“பார்த்து போங்க… கார் வேகமாக ஓட்டாதீங்க… சீட் பெல்ட் போட்டுக்கோங்க… ஆபீஸ் போன உடனே எனக்கு மெசேஜ், இல்லைனா கால் ஒகே…”
“காலையில்ல பதினொரு மணிக்கு மாதுளை ஜூஸ் குடிங்க, மதியம் ஒரு மணிக்கு எல்லாம் சாப்பிடுங்க ஹாட் பேக்ல தான் இருக்கும். நீங்க சாப்பிடும் போது சூடாவே இருக்கும். எதையும் மறக்காதீங்க சரியா” என பள்ளிக்கு செல்லும் குழந்தைக்கு கொடுக்கும் அட்வைஸை இவனுக்கு சொல்லிக்கொண்டிருந்தால்.”
“சரி… இதெல்லாம் மறக்காம நான் செய்வேன்… இப்போ நீ தான் ஒரு விசயத்தை மறந்துட்ட…”
“என்ன விசயம், எல்லாமே கரெக்ட்டா எடுத்து வச்சுட்டேனே…”
“இதை மறந்துட்ட…” அவளை அணைத்து, இதழில் அழுத்தமாக ஒரு முத்ததை பதித்தான்.
“அவனின் செய்கையில் முதலில் திகைத்தாலும், அவளும் அந்த முத்தத்தில் உருகி போனால்.
“இனி நீ மறக்கமாட்டேனு நம்புறேன்…”
“ ஹூம்ம் மறக்கவே மட்டேன்…” அவள் அவனுக்கு ஏற்றப்படி சொன்னால்.
“ம்ம்…..”
“என்னை வரசொல்லிட்டு இவன் எங்க போனான். கரெக்ட் ஆனா டைம்க்கு தானே வரசொன்னான், அப்புறம் ஏன் அவன் மட்டும் இன்னும் வரலை” அந்த காஃபி ஷாப்பில் அமர்ந்து புலம்பிக்கொண்டிருந்தால் ஷனா”
“அவள் புலம்பல் அவனை அடைந்தது போல் அவன், அவளை நோக்கி வந்துகொண்டிருந்தான்… “சாரி சாரி… வந்து ரொம்ப நேரம் ஆச்சா…” அவளிடம் மன்னிப்பு கேட்டுகொண்டே அவளுக்கு எதிரில் அமர்ந்தான்.
“இட்ஸ் ஓகே… ஜஸ்ட் இப்போ தான் வந்தேன்…”
“ஓகே… என்ன சாப்பிடுற” அவளிடம் கேட்க.
“யூர் விஸ்”
“டூ கோல் காஃபி…” சர்வரிடம் சொல்லிவிட்டு அவளைப்பார்த்தான்.”
“ நான் உன்கிட்ட பேசனும் தான் வரச்சொன்னேன்.”
“ம்ம், ஞாயபகம் இருக்கு… சொல்லுங்க.”
“ஹேத்துக்கு இந்த கல்யாணத்துல கொஞ்சம் கூட விருப்பம் இல்லை… அவ இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டதுக்கு காரணம், என் மாமா மட்டும்.”
”இப்போ சந்தோஷமா இருக்குற மாதிரி தான் நம்ம எல்லோர் முன்னாடியும் நடிக்குறா. ஆனா அவ மனசுல உண்மையான சந்தோஷம் இல்லை.”
“ஹேத்து சந்தோஷமா இல்லைனு உங்களுக்கு எப்படி தெரியும். என்கிட்ட நல்லா பழகுறா.. பேசுறா… அப்புறம் எப்படி சந்தோஷமா இல்லைனு நீ சொல்லுற” அவள் கேட்க
“அவ கூட நான் சின்ன வயசுல இருந்து பார்க்குறேன், பழகுறேன். அவ ஒவ்வொரு அசைவும் எனக்கு தெரியும்.”
“தூங்குறவங்களை எழுப்பலாம், ஆனா தூங்குற மாதிரி நடிக்குறவங்களை எழுப்ப முடியாதுனு ஒரு பழமொழி சொல்லுவங்கள அது மாதிரி தான் ஹேத்துவும்.”
“இப்போ என்ன பண்ணனும்” அவள் கேட்க்கும் போது, அவர்கள் ஆர்டர் செய்த காஃபி வந்தது.
“காஃபி, குடித்துகொண்டே, முதல நீ ஹேத்துவையும், உன் மாமாவை கவனிச்சுப்பாரு, அப்போ புரியும் நான் சொல்லுறது.”
“சரி… “
“இன்னொரு விசயமும் இருக்கு.”
“என்ன…” அவள் கேட்டாலும், மனதில் “அந்த ஒரு நாள் அவனுடன் இருந்ததை பேச போறானோ…” நினைக்க.
“காஃபிக்கு, பில் பே பண்ணிரு…” அசால்ட்டாக சொல்லிவிட்டு கூலிங் க்ளாஸை மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டான்.”
“அவளோ, பழிக்கு பழியா… இருடா மகனே உனக்கு ஒரு நாள் இருக்கு” மனதில் நினைத்துகொண்டே பில் கொடுத்துவிட்டு அவளும் கிளம்பி சென்றால்.
“ஓகே ரகு நல்லபடியா, நம்ம டீலிங் முடிஞ்சது… இனி அடுத்த வேலையா, புது மாடல் கார் எல்லாம் எப்போ இங்க அறிமுக படுத்தலாம்”
“கிருஷ்ணவ்… உங்க ஐடியா என்ன?”
“ம்ம்ம்… ஃப்ர்ஸ்ட் நாம அறிமுகப்படுத்த போற கார்ஸ்க்கு விளம்பரம் மாடல், பார்க்கனும், அடுத்து நம்ம கார் விளம்பரம் கொஞ்சம் பெரிசா பண்ணனும்.”
“அதுக்கு அட்வடைஸ்மெண்ட் மேனேஜர பார்த்து நான் நாளைக்கு பேசிரலாம்.”
“ விளம்பரம் மாடலுக்கு என் பிரண்ட் மூலமா, நாம செலக்ட் பண்ணலாம்.”
“ஓகே ரகு, அப்போ நான் ஹோட்டலுக்கு கிளம்புறேன்.”
“எதுக்கு அங்க எல்லாம், என் வீடு பெரிசு தான் அங்க உங்களுக்கு கம்பர்டா இருக்கும், வாங்களேன்.” அவன் அழைக்க.
“இல்லை ரகு கொஞ்சம் பர்சனல் வேலை இருக்கு, அதுக்கு நான் ஹோட்டல் தான் எனக்கு பெஸ்ட் ஆஹ இருக்கும்.”
“இப் யூ டோண்ட் மைண்ட், என்ன வேலைனு தெரிஞ்சுக்கலாமா… சொன்னா என்னாலும் ஹெல்ப பண்ண முடியுமானு பார்க்க தான் கிருஷ்ணவ்.”
“ அவன் தயங்கினான்.”
“ஓகே சொல்ல முடியாதுனா விடுங்க…”
“அப்படி இல்லை ரகு… என் காதலியை தேடிதான் இங்க வந்தேன்…”
“அப்படியே, நம்ம கார் ஷோரும்க்கு பார்ட்னர்சிப் வேலையயும் சேர்த்து முடிக்கலாம்னு வந்தேன்.”
“ அப்போ நானும் ஹெல்ப் பண்ணியே தீருவேன் க்ருஷ்னவ், நீங்க என்னை தடுக்க கூடாது.”
“அவனோ சிரித்துகொண்டு,… உங்க இஷ்டம். நான் இப்போ ஹோட்டல் போயிட்டு ரெப்ரஸ் பண்ணனும்”
“வாங்க நான் ட்ராப் பண்ணுறேன்” இருவரும் ஆபீஸ் விசயத்தை பேசிக்கொண்டு கிளம்பினர்.
“அவன் சொல்லுற மாதிரி, ஹேத்துக்கு இந்த கல்யாணமும், வழ்க்கையும் பிடிக்கலையோ… ஆன அவளை பார்த்தா அப்படி தெரியலையே.” என யோசித்துக்கொண்டு, கீழே வந்தால்.
“அங்கு, கௌசியிடம் சிரித்துகொண்டே ஏதோ பேசிக்கொண்டிருந்தால். அவள் சிரிப்பில் கவலை மறந்த குழந்தை தனம் இருந்தது.”
“சரி அவளை கவனிச்சு பார்ப்போம், என்ன நடக்குதுனு” அவன் சொன்னதை அவள் செயலாற்ற முடிவு செய்தால்.”
“ஐம் இன் ஆபீஸ்.” சரண்யாவுக்கு மெசேஜ் செய்தான்.
“ஓகே… கேரி ஆன் யூர் வொர்க்… அண்ட் ஃபீரி டைம் கால் மீ” அவளும் அவனுக்கு பதில் மெசேஜ் அனுப்பிவிட்டு. வீட்டை ஒதுங்க வைக்க சென்றுவிட்டால்.”
“அந்த வீட்டீற்க்கு குடி வந்து இரண்டு வாரம் தான் ஆகிருந்தது. வீட்டில் ஒவ்வொரு பொருளையும் அதன் அதன் இடத்தில் எப்படி வைத்தால் நன்றாக இருக்கும் என அவள் யோசித்து செயல்படுத்தவே அவளுக்கு நேரம் பத்தவில்லை. அதனால் தான் விஜயை வேலைக்கு அனுப்பிவிட்டு, வீட்டை அழகு படுத்த தொடங்கினால்.”
“இன்னும் அவர்களின் அறையில் போட்டோ, மற்ற பொருளை வைப்பது மட்டுமே வேலை.”
“எங்க இருந்து ஆரம்பிக்க…, அவளை எங்க போய் நான் தேட…”
“இந்த ஊருல அவ எங்க இருக்கானு எனக்கு தெரியாதே… எப்படி தேட போறேனோ…”
“ஹோட்டல் பால்கனியில் இருந்து அவன், யோசித்து கொண்டிருந்தான்.”
“வீட்டிற்க்கு வந்த ரகுவோ, ‘ம்மா… ம்மா… எங்க இருக்கீங்க”
“என்ன ராஜா…”
“இன்னைக்கு என் கம்பெனியோட புது பார்ட்னர்சிப் டீல் நல்லபடியா முடிஞ்சது. இந்த ஹாப்பி நியூஸ் சொல்ல தான் உங்களை கூப்பிட்டேன்.”
“அப்படியா ராஜா… ரொம்ப சந்தோஷம். போய் அப்பாகிட்டயும், ஹேத்துகிட்டயும் சொல்லுப்பா”
“அவர்கிட்ட நீங்களே சொல்லிருங்க.., நான் என் ரூம்க்கு போறேன்.” தந்தையின் மேல் இருக்கும் கோவம் குறையாமல் சென்றான்.”
“அவனது அறைக்கு செல்லும் போது, கங்கிராட்ஸ் மாமா…” அவனை வழிமறைத்து கூறினால் ஷனா.
“தாங்க்ஸ் ஷ்னா…”
“போய் ஹேத்துக்கிட்ட சொல்லு…”
“ம்ம்ம்..” தலையச்த்துகொண்டே சென்றவனை ஒரு மாதிரி பார்த்தால்.
“ இவனுக்கும் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையோ…” ரகுவை பற்றி யோசிக்க ஆரம்பித்தால்.
“ஹாய் அர்ச்சனா… எங்க இருக்க…”
“அப்படியே திரும்பி பாரு அஞ்சலி… உன் பின்னாடி தான் இருக்கேன்”
“எப்படி இருக்க அர்ச்சனா…” தோழியை கட்டிக்கொண்டு நலம் விசாரித்தால்.
“ நல்லா இருக்கேன் அஞ்சலி… நீ?”
” இருக்கேன்…” சோகமாய் கூறினால்.
“எல்லாம் சரியாகும்டி… நீ பீல் பண்ணாத”
“ம்ம்ம்…”
“வா நம்ம வீட்டுக்கு போகலாம்…” அர்ச்சனா அழைத்து சென்றால்.
“இப்போ என்ன செய்ய போற.”
“அவனை கண்டுபிடிக்கனும்… ஆனா எப்படினு தெரியலை”
”சரி டீ, என் பிரண்ட்கிட்ட அவனை பத்தி சொல்லு, நாமளும் தேடலாம், அவனும் தேடட்டும் சரியா.”
”ம்ம்… சரி பார்க்கலாம்”
”ரகுவும், ஹேத்துவும் கோவிலுக்கு புறப்பட்டனர். கௌசியின் வேலை தான் இது. இருவரையும் முன்னே செல்ல சொல்ல. தாங்கள் பின் வருகிறோம் என சொல்லிவிட்டார்.”
“அவனும், அவளும் முதல் முதலாக தனியாக செல்லும் பயணம். அவர்களுக்கு ரசிக்கவில்லை, என அவர்களின் முகத்தை பார்த்து தெரிந்துகொண்ட ஷனா அவர்களின் பின்னே சென்றால் ஆட்டோவில்.”
” அவன் சொன்னது மட்டு உண்மையா இருந்தா. நானே அவங்ககிட்ட நேராடியா கேட்ப்பேன்.”
“கடவுளே, உண்மையா இருக்க கூடாது அவன் சொன்னது.” என கடவுளிடம் வேண்டுதலை வைத்துக்கொண்டே, அவர்களை பின் தொடர்ந்தால்.
தொடரும்………..