UD:14(2)
“ஏய் அனி… அம்மா கிட்ட சொல்லி எல்லா ஐட்டம்லையும் கொஞ்சம் எடுத்து வைக்க சொல்லு டி… வாசனை செம்மையா இருக்கு. கடைசியா நாம சாப்பிடும் போது ஒன்னும் கிடைக்காம போய்விட போகுது….“
“ம்ம்ம்…. ரம்யா இருந்து இருந்தா ஒரு பிடி பிடிச்சு இருப்பா… அவங்களுக்கு லீவு இல்லாமல் போச்சு இல்லாட்டி இரண்டு பேரும் கரெக்டா வந்து இருப்பாங்க. அதுவும் ரம்யா நிச்சயதார்த்ததிற்க்கு வந்து இருப்பாளோ இல்லையோ பந்திக்கு கரெக்டா வந்து இருப்பா….” என்று தன் தோழிகள் இல்லாத கவலையை வேடிக்கை பார்த்தவாரே பேசிக் கொண்டு இருக்க,
தங்கையிடம் இருந்து எந்த பதிலும் இல்லாமல் போக சந்தேகத்தில் திரும்பி பார்த்து ஒரு நொடி அதிர்ந்தவள் பின் சுதாரித்து, ” டேய் காண்டாமிருகம்….. நீ ஏன்டா உள்ளே வந்த? எப்ப வந்த?” என்று எகிர,
“ஆமா அது என்ன எப்ப பாரு காண்டாமிருகம்னு சொல்லுற …. என்னை பார்த்தா அப்படியா தெரியுது? ” பேசிக் கொண்டே அவள் அறையில் இருந்த ஆள்ளுயர கண்ணாடியில், ஒற்றை புருவத்தை உயர்த்தி, இடது கைவிரல்களால் தன் மீசையை நீவிய படி, தன்னை முன்னும் பின்னும் பார்க்க,
அவன் பின்னோடு வந்தவள், அவன் தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்டு இருந்த தோரணையில் அவள் விழிகள் அவனை ரசனையுடன் விழுங்கவும், மஹாவின் வாட்டர் டாப் தானாக திறந்து கொண்டது.
தன்னை பார்த்து கொண்டு இருந்தவன், கண்ணாடி வழியாக மஹாவின் கண்ணில் வழிந்த ரசனையில் இதழ்களில் புன்னகை தவழ, அவளை பார்த்து கண் சிமிட்டி,
“என்ன டி கொசுக்குட்டி…. இந்த காண்டாமிருகத்தை இப்படி சைட் அடிக்குற…. ” குறும்புடன் கேட்க,
அவனது குரலில் கலைந்தவள், ” உன்னையா…. நானா…..? சான்ஸே இல்ல….” கைகளை நெஞ்சுக்கு கூறுக்காக கட்டியபடி, முகத்தை திருப்பி கொண்டு கெத்தாக நின்றாள்.
“பாருடா…. கொசுக்குட்டிக்கு திமிர….” அவள் புறம் திரும்பி நின்று நக்கலாக சிரித்து வைத்தான்,
“ஏய்…. என்ன வம்பு பண்ணனும்னு பேசுறியா…. ஒழுங்கா வெளிய போ… ” அவனுடன் சரிக்கு சமமாக சண்டைக்கு நின்றாள்..,
“போக முடியாது…. என்னடி பண்ணுவ என் கொசுக்குட்டி…..” காற்றில் ஒரு முத்தத்தை அவளை நோக்கி பறக்க விட்டப்படி, படுக்கையில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு இரு கைகளையும் பின்னால் உண்றி அசால்ட்டாக அமர்ந்து அவளை ஒரு பார்வை பார்க்க,
கோபத்தின் உச்சிக்கே சென்றவள், அவனை அவளது படுகையில் இருந்து தள்ளி விட அவன் அருகில் சென்றவளின் நோக்கம் புரிந்து….
“பேச்சு பேச்சா இருக்கும் போது இந்த தொடுர வேலை எல்லாம் வச்சுக்காத…. எனக்கு குடுத்த வாக்கை காப்பாற்ற பாரு…. ” ஒரு விரல் நீட்டி அவளை எச்சரிக்கை செய்ய,
“என்னது வாக்கா….” குழப்பமாக பார்க்க,
“என்ன அதுக்குள்ள மறந்து போச்சா? என்னை தொட்டு பேச கூடாதுனு நான் போட்ட கண்டிஷன்க்கு நீ ஓகே சொன்னது மறந்து போச்சா….” கால் ஆட்டி கொண்டே இடது கையால் தலையை கோதியவாறு புருவம் உயர்த்தி கேட்க,
“டேய்…… உன்னை…..” கத்தி கொண்டே அவனை அடிக்க ஏதாவது சிக்குமா என்று அவள் தேடவும்,
கார்த்திகாவும், அவரது அண்ணி செல்வியும் மஹாவின் அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது. அவர்களை பார்த்ததும் எழுந்து நின்ற நந்தன், மஹாவை பார்த்து விஷமம்மாக சிரிக்க, பதிலுக்கு முடிந்த மட்டும் அவனை முறைத்தவள். கார்த்திகாவையும் , செல்வியும் பார்த்து புன்னகைத்து வரவேற்றாள்.
அவர்கள் சிறியவர்களின் பார்வை பரிமாற்றத்தை கவனித்து, தங்களுக்குள் சிரித்துக் கொள்ள, ” எப்படி மா இருக்க….” கார்திக்கா அவள் தலையை கோதி வாஞ்சையுடன் கேட்க,
‘ஆரம்பிச்சுடாங்கையா…. ஹேர் ஸ்டைலை கலைக்க…‘ மனதில் கவலை பட்டு கொண்டவள். வெளியே சிரித்தப்படி, ” நல்லா இருக்கேன் அத்தை… நீங்க எப்படி இருக்கீங்க….” பாவ்வியமாக பேசியவளை பார்த்துக் கொண்டு இருந்தவன்.
‘இது உலகமாக நடிப்பு டா சாமி…‘ மனதில் நினைத்தவன் வாய் போத்தி வியப்பது போல் பாவனை காட்டினான். அவனது செயலை கார்த்திகாவும், செல்வியும் கவனிக்க தவறியதை மஹாவின் விழிகள் கண்டு கொண்டது. அதில் கொலவெறி எழ, கடினப்பட்டு அதை அடக்கி கொண்டு பெரியவர்களுக்கு சிரித்த முகத்துடன் பதில் அளித்தாள்.
சிறிது நேரம் பேசிவிட்டு அவர்கள் கிளம்ப, நந்தனும் உடன் சென்றான். என்னென்றால் தனியாக அவளிடம் சிக்கினால் கண்டிப்பாக சேதாரம் அதிகம் ஆக வாய்ப்புகள் உண்டு என்பதை உணர்ந்தே இருந்தான்.
அவனும் செல்வதை பார்த்து ‘ சே…. வடை போச்சே….‘ என்ற ரீதியில் வருத்தப்பட்ட மட்டுமே முடிந்தது அவளால்.
மதியம் 1மணிவரை திருமணத்தை பற்றி பேசியவர்கள் திருமணத்திற்கு இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டியலிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்ய திட்டமிட்டனர். பின் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் விடைபெற்றுச் செல்ல. மஹாவிற்க்கு அப்பொழுது தான் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.
மஹாவோ அன்று மாலையே சென்னை பயணம் ஆனாள். காலேஜின் கடைசி வருடம் என்பதால் பிராஜக்ட் செய்ய வேண்டும் என்று அவளுக்கு ஒரு நாள் மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டது.
ஹாஸ்டல் சென்றவளுக்கு விசாரணை கமிஷன் போல் தோழிகள் கேள்வி கேட்டு சித்திரவதை செய்ய, சிலவற்றிக்கு குஷியாகவும், சில கேள்விகளுக்கு கடுப்பாகவும் பதில் அளித்தாள்….
நேரமும், காலமும் யாருக்கும் நிற்க்காமல் செல்ல, மஹாவின் கடைசி வருட கடைசி பரிட்சையும் முடிந்து இருந்தது. மூவரும் அவரவர் உடைமைகளை பேக் செய்துக் கொண்டு இருந்தனர் வீட்டிற்க்கு செல்ல.
ரம்யா,” நம்ம காலேஜ் லைஃப் அதுக்குள்ள முடிஞ்சுருச்சுடி…” சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு கூற,
சந்தியாவும், மஹாவும் அவளை வினோதமாக பார்க்க, “ஏன்டி அப்படி பார்க்குறீங்க?” தன்னை ஏதோ நம்பாத பார்வை பார்த்தவர்களை எரிச்சலோடு கேட்க,
“இல்ல… உனக்கு கூட ஃபீல் பண்ண வருதேனு பார்க்குறோம்….” மஹா சீரியஸாக முகத்தை வைத்தப்படி கூற,
சில நொடிகள் புரியாமல் விழித்த ரம்யா. புரிந்ததும் அருகில் இருந்த பக்கெட்டை தூக்கி கொண்டு அவர்களை அடிக்க துரத்தினாள். மூவரும் சிறிது நேரம் அடிதடி நடத்தி விளையாடி கலைத்தவர்கள் படுக்கையில் சரிந்தனர்.
“உண்மை தான் ரம்யா…. இந்த காலேஜ் டேஸை ரொம்ப மிஸ் பண்ணுவோம். நம்ம கிளாஸ்,கான்டீன், இந்த ரூம், அப்புறம் ஹாஸ்டல் காம்பௌன்ட்டு…. எனக்கும் கஷ்டமா தான்டி இருக்கு….” சந்தியா காலேஜ் வாழ்க்கை முடிவடைந்ததில் வருத்தத்துடன் சொல்லி கொண்டு இருக்க, ரம்யாவும் ஆம் என்று தலை அசைத்து வருத்தத்தை தெரிவித்தாள்.
மஹாவிடம் இருந்து பதிலேதும் இல்லாததால் இருவரும் அவளை திரும்பி பார்த்தனர். விட்டத்தை பார்த்து ஏதோ சிந்தனையில் இருந்தவளை இருவரும் உலுக்கி நினைவிற்கு இழுத்து வந்து என்னவென்று கேட்க எதுவும் இல்லை என்று கூறி சமாளித்தாள்.
சந்தியா காம்பௌன்ட் சுவரை பற்றி பேசியதும், மஹாவின் நினைவில் அன்று நந்தனிடம் பேசி விட்டு வந்தது, அவன் தாங்கி பிடித்தது என்று நினைவில் வர மௌனம் குடிக்கொண்டது அவளுள்….
“இப்ப ஏன் டி இப்படி ஃபீல் பண்ணுறீங்க? நம்ம காலேஜ் டேஸ் முடிஞ்சா என்ன…. அதான் நாம பக்கத்து பக்கத்து வீடு தானே… எப்பவும் போல இருப்போம் “என்ற மஹா தன்னை சமாளித்து கொண்டு பேச,
“லூசு தெரிஞ்சு தான் பேசுறியா? உனக்கு இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம்…. அப்புறம் ஜாப் வேற… அப்புறம் எப்படி டி ஜாலியா இருக்குறது?” இனி எப்பவும் போல் இருக்க முடியாதே என்று கவலை தோய்ந்த குரலில் கூற,
“ஆமா டி…. நீ தான் கல்யாணம் பண்ணிக்க போறீயே…. நாங்க, நீ உன் ஹஸ்பண்ட் கூட போகும் போது….
போறாளே பொண்ணு தாயி…
போகிற போக்கில் கண்ணீர் விட்டு…..
போறாளை பொட்ட புள்ள ஊர விட்டு……
அப்படினு பாடி வழி அனுப்பி வைப்போம்.” என்ற ரம்யாவை பரிதாபமாக சந்தியா பார்க்க, மஹா அவசரமாக தன் கைப்பையை துலாவி அதில் இருந்த ஒருபாய் காசை எடுத்து ரம்யா விடம் குடுத்து,
“இந்தா இந்த சில்லறையை வைச்சுகோ…. ” என்றவளை சோகம் மறைந்து சந்தியா வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க… எதுவும் புரியாமல் விழித்த ரம்யா, சந்தியாவை பார்த்து,
“இப்ப எதுக்கு இப்படி சிரிக்குற? சொல்லிட்டு சிரிச்சா நானும் சிரிப்பேன்ல….” என்றவளை பார்த்து மஹா நெற்றியில் அறைந்து கொண்டாள்..
“ஐயோ லூசு….. நீ பாடுறது பிச்சைக்காரி பாடுற மாதிரி இருக்குனு சில்லறை கொடுக்குறா ... அதுக்கு நீ…. காரணம் சொன்னா நானும் சிரிப்பேன்னு சொல்லுற….“ என சொல்லிட்டு மீண்டும் தன் சிரிப்பை தொடர,ரம்யா கொலவெறி ஆக அங்கு மீண்டும் ஒரு அடிதடி காட்சி நடந்தேறியது.
இரவு உணவை உண்டு விட்டு ரூமிற்கு வந்த மூவரும் தங்கள் லீலைகளையும், அற்புதங்களையும் மீண்டும் நினைவு படுத்தி பேசி சிரித்துக் கொண்டு இருக்க,
“ஹே…. நம்ம ஒரு பார்ட்டி பண்ணலாமா…. காலேஜ் முடிஞ்சது, மஹா கல்யாணம் வேற…. லெட்ஸ் என்ஜாய் அ பார்ட்டி கேர்ல்ஸ்….” ஆர்வத்துடன் ரம்யா கேட்க,
“பார்ட்டியா…. எங்கடி ? எப்படி பண்ணுறது? ” சந்தியா கேட்க,
“வீட்டுக்கு போய்ட்டு….. வீட்டுல வச்சே பண்ணிக்கலாம் அதான் சேஃப்வும் கூட….” ரம்யா யோசனை கூற,
“நாளைக்கு எங்க வீட்டுல யாரும் இருக்க மாட்டாங்க…. பத்திரிகை வைக்க வெளியூர் போராங்க…. சோ எப்பவும் போல வீட்டுக்கு வந்துடுங்க…. ” மஹா பிளானை போட, பார்ட்டி மஹாவின் வீட்டில் செயல் படுத்துவது என்று முடிவானது.
அடுத்த நாள் மாலை, கைக்குட்டையை சுருட்டி அதை நெற்றியில் கட்டி கொண்டு, கூலிங்கிளாஸ் அணிந்து ,கைலியின் நுனிப்பகுதி வாயிலும், கையில் தடிமனான வெள்ளி பிரேஸ்லெட் பளபளக்க, சோபாவின் இருக்கையில் ஒரு காலும் சாய்வில் ஒரு காலும் வைத்து கொண்டு….
மதம் கொண்ட யானை
என்ன செய்யும் தெரியுமா
சினம் கொண்ட சிங்கத்திடம்
தோற்று ஓடும்……..
என MGR பாணியில் உச்சாந்தியில் முவரும் சேர்ந்து கத்தி கொண்டே,
டமாலு டமாலு டூமிலு டூமிலு
டூமிலு டூமிலு டமாலு டமாலு
டமாலு டமாலு டூமிலு டூமிலு
டூமிலு டூமிலு டமாலு டமாலு….
என பாடி கொண்டே இருவர் தரையிலும் ஒருவர் சோபாவிலும் முழு மூச்சாய் ஆடி கொண்டு இருக்க…..
“மச்சி அந்த பாட்டிலை எடுடி“என சோஃபாவில் நின்று கொண்டு தன் கூலிங் கிளாஸை லேசாக கீழ் இறக்கி ரம்யாவிடம் கேட்டுக் கொண்டே தன் ஆட்டத்தை தொடர
“எது மச்சி பீயரா இல்ல விஸ்கியா?” ஆடியபடியே இரு பாட்டிலையும் இரு கையில் ஏந்தியபடி ரம்யா கேட்க,
ரம்யா கேட்டதிற்கு பதில் கூறாமல் ஆடி கொண்டே அடுத்த பாட்டை மாற்றி அதற்கு ஆட தயாரானாள் மஹா,
“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுறாலா பாரு… ஹே… மஹா சொல்லுடி எது வேணும்??? ” என ரம்யா கத்த,
“எதுவா இருந்தால் என்ன ? எல்லாம் ஒரே டேஸ்டு தான்டி. எனக்கு ஒரு பாட்டில் குடு” என சந்தியா ஆடி கொண்டே ரம்யாவிடம் இருந்து ஒரு பாட்டிலை பறித்து தன் வாயில் சரித்து கொண்டாள்.
டேய் குவோட்டர்க்க நோ…
பியறருக்கு தா நோ…
சத்தியமா நோ… இன்னயோட குடி நோ…
ஹேய் தலைவலிக்கு நோ….. உளரலுக்கு நோ…
வாமிட்டுக்கு நோ… இன்னயோட குடி நோ…
மஹா சோபாவில் இருந்து குதித்து, ரம்யாவிடம் இருந்த இன்னொரு பாட்டிலை பிடிங்கி பாடலோடு ஒவ்வொரு வரிக்கும் ஆக்ஷ்னோடு பாடி கொண்டே மூவரும் வட்டமாய் நின்று ஆடிக் கொண்டு இருக்க,
இரு ஜோடி விழிகள் இவர்களின் ஆட்டத்தில் சிலையென உறைந்தனர்…..
கண்டிஷன் தொடரும் …….