Episode 22
கதிர் அண்ணா நடந்து போன விசயங்கள் எல்லாம் கடந்து போய் விட்டது. இனிமேல் அதைப்பற்றி என்ன பிரயோசனம் சொல்லுங்க. அண்ணா இதைப்பற்றி பேச வேண்டாமே… !
அவள் பேசியதை கேட்ட இருவரும் அமைதியாக இருந்தனர்.
“அண்ணா நான் தப்பாக ஏதாவது தப்பாக பேசியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் எனக்கு முதல்ல இருந்து ஆரம்பிக்க விருப்பம் இல்லை. நாம் வேற ஏதாவது ரொப்பிக் பேசலாமா… .” என்றாள்.
“அதுவும் சரி தான் தியா. நாங்கள் இருவரும் உன்னிடம் இது பற்றி பேசியதை அவனிடம் காட்டிக்கொள்ளாதே” என்றான்.
அவர்கள் ஓடர் பண்ணிய சூப் வரவும் செந்தூரும் வந்து இணைந்து கொண்டான்.
இன்னும் பத்து நிமிடம் கழித்து அவர்கள் ஓடர் பண்ணிய உணவு வகை வரவும் அனைவரும் அமைதியாக உண்ணத்தொடங்கினர்.
ஆனால் செந்தூரால் தான்,குனிந்து உண்ணவும் முடியவில்லை,கையை தூக்கி உணவை வாயில் வைக்க முடியாமலும் வலியால் தடுமாறினான்.
அவள் அவனை திரும்பி பார்க்கவும்,அவன் சாப்பிடாமல் அலைந்து கொண்டு இருப்பதை கண்டு திகைத்தவள் அவனை தட்டி சாப்பிடவில்லையா? என கேட்க அவன் வலியால் முகம் சுழித்தான். அவன் முகத்தை பார்த்து அவனை உணர்ந்தவள் தனது உணவை வைத்து விட்டு, அவனது பிளேட்டை தனதருகில் இழுத்து கொண்டு “ஆ… காட்டு ” என்றவாறு அவனது உதடுகளிற்கு அருகில் உணவை கொண்டு செல்லவும் அவன் மறுக்காது வாயை திறந்து வாங்கிக் கொண்டான்.
கதிரும்,திலீப்பும் ஒருவரையொருவர் நிமிர்ந்து பார்த்து சிரித்து விட்டு தலையை கவிழ்ந்து கொண்டனர்.
திலீப், கதிரிடம் “கதிர் மச்சான் சீக்கிரம் இடத்தை காலி பண்ணு உன் தம்பி நம்மை பார்த்து முறைக்கிறான். ” என்றான்.
“ஆமாம் மச்சான் பயபுள்ள இந்த வலியிலும் ஒரு மார்க்கமாக தான் இருக்கு,நாம சீக்கிரமாக வெளியில போக வேணும்டா… இல்லை என்றால் இதுங்க இரண்டும் விடுகின்ற ஜொள்ளில் நனைந்து காணாமல் போய்விடுவோம். ” என்று ‘முனுமுனு’த்தான்.
ஓகே மச்சான் வாகிளம்பு என்று திலீபன் கூற இருவரும்கிளம்பினர்.
கார் அருகில் வந்தவர்கள் இருவரும் சிரிப்பை அடக்க முடியாது சிரித்து விட்டு, “என்னடா நடக்கிறது இங்கே.” என்றான் திலீபன்.
“ம்ம்… இரண்டும் லவ் பண்ணுதுகள் அது அவர்களுக்கே புரியவில்லை.”
“என் மச்சானுக்கு இப்பவே இவ்வளவு கவனிப்பாக இருக்கிறது. இரண்டும் ஒன்றாக இருந்தால் எங்களை எல்லாம் பொறாமைப்படும் அளவிற்கு லவ் பண்ணுங்களாயிருக்கும்.” என்று திலீபன் கூறினான்.
“ஆனால் விதியின் விளையாட்டை பார்த்தாயா? இரண்டு பேரையும் பிரித்து வைத்திருக்கின்றது.”
“ஆமாம் கதிர் மச்சான் இதுங்க இரண்டையும் எப்படியாவது ஒன்றாக சேர்த்து விடலாமா?” என்றான்.
“நாங்கள் எதுவும் பண்ணாமல் அதுவாக சரியாகி விடும்… “
“எப்படிச் சொல்கிறாய்.”
“நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால் சரியாகி விடும் என நினைக்கின்றேன்.” என்றான் கதிர்.
“எல்லா பிரச்சனையும் நல்லபடியாக தீர்ந்து அவர்கள் ஒன்றானால் நல்லது.”
அவள் அவனுக்கு உணவை ஊட்டி விட்டு,அருகிலிருந்த டிஸ்யூ பேப்பரை எடுத்து ஆனது வாயையும் துடைத்து விட்டு எழுந்து, “சரி வா போகலாம்.” என்ற அடுத்த வினாடி ஆஆ… என கத்திய வண்ணம் இருக்கையில் அமர்ந்து அவனை முறைத்தாள்.
“ஏற்கனவே உன் கண் யானை முட்டையை போல மூஞ்சி முழுக்க இருக்கும். அதையும் தாண்டி முறைச்சால் அப்புறம் முகம் எல்லாம் கண்ணாக மாறிடும் அந்த காட்சியையும் நான் தான் பார்க்கணும்… தேவையா எனக்கு.”
“இப்ப எதுக்கு என்னை இழுத்து உட்கார வைத்தாய்.”
“ம்ம்… உன் முகத்தை பார்த்துக்கொண்டிருக்க ஆசையாக இருக்கின்றது.” என்றவனின் குரல் மாறியது.
“இருக்கும்… இருக்கும் என்றவள் இப்போது எதற்கு என் கையை பிடித்து இழுத்து அமர வைத்தாய்.” என்றாள்.
“உன் தட்டில் இருக்கின்ற உணவை சாப்பிட்டு முடி அப்புறம்போகலாம்.”
இல்ல… எனக்கு போதும் என்று அவள் இழுக்கவும்,அவன் அதை கவனிக்ககாது அவனுடைய ஃபோனை எடுத்து நோண்டியபடி இருக்கவும்,’இவன் விடமாட்டான் போல’ என நினைத்த வண்ணம் தனது தட்டிலிருந்த உணவை உண்டு முடித்தாள்.
அவள் உண்டு முடித்ததை பார்த்தவன் “குட் அப்படித்தான் இருக்கணும். “
“போதும் போதும் உன் கரிசனம் ஒன்றும் எனக்கு தேவையில்லை.வா போகலாம்.”
“ஆனால் உன் கரிசனம் எனக்கு தேவை.கூடக்குறைய இருந்தால் தாயேன். “
“ச்சீ… போ. உனக்கு மட்டும் தரமாட்டேன்.என்றவள் இப்போது வழியை விடு நான் போக வேண்டும்.” என்றாள்.
“ம்… போ.உன் கையை பிடித்து யாரும் வைத்திருக்கவில்லை.” என்றான்.
“கையை பிடிக்கவில்லை.காலை குறுக்காக வைத்திருந்தால் எப்படி போவதாம்.”
இந்த அர்த்தமற்ற உரையாடலை அவன் விரும்பி வளர்த்தான்.அவளும் அதில் இணைந்து கொண்டாள். ஏதோ ஒரு புது வித அனுபவம் இருவருக்கும் இதமானதாக இருந்தது.
“பாய்ந்து போ.”
“நமக்காக வெளியே இரண்டு பேர் வெயிட்டிங். இங்கே நீங்க கடலை வறுத்தது போதும். வாங்க போகலாம்.”
அவளது கையில் அவன் கிள்ளவும் அவள் “அம்மா வலிக்குது. ஏன் என் கையை கிள்ளுகிறீர்கள்.” என்றாள்.
“அது நீ என்னை மரியாதையாக அழைத்ததும் கனவோ என்று நினைத்தேன் அதனால் தான் என்னுடைய சந்தேகத்தினை உன்னை வைத்து தீர்த்துக்கொண்டேன். “என்றான்.
“அதுக்கு உங்களது கையை கிள்ள வேண்டும். நானா கிடைத்தேன்.”
“அதை விடு தியா. நான் கேட்பதற்கு பதில் சொல்லு.”
“என்ன… ?கேள்வி கேளுங்கள். “
“நீ என்னுடன் வந்து விடேன்.”
“ம்… உங்கள் வீட்டில் உங்களை கொண்டு பேய் ‘விட்டுவிட்டு’ தான் நான் என் இடத்திற்கு போவேன்.ஓகே…டண்…” என தன் கட்டை விரல்களை உயர்த்திக்காட்டி பல் வரிசை தெரிய சிரித்தாள்.
“என்ன? ஜோக்கா…?சிரிப்பு வரவில்லை உனக்காக சிரிக்கட்டுமா?” என்றான்.
“வேண்டாம்.போகலாம்.” என அவள் எழுந்து நின்றாள்.
அவனும் எழுந்து, அவளை ஒட்டி நடந்த படி “அப்போது எனக்கு சரியான பதில் சொல் மாட்டாய் அப்படித்தானே. “
“…..”
“தியா ப்ளீஸ்.”
“அங்கே என்ன? இருக்கு. அப்படி என்னத்தை காட்டப் போகிறீர்கள்…?”
“நீயே சொல்லு தியா.இதை விட வேற எந்த வகையில் மன்னிப்பு கேட்டால் உன் மனது ஆறும்.என் குடும்பத்துக்கு முன் உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டால் உன் மனது இரங்குமா? “
“நீங்க உங்களுக்கு தேவை என்றால் கால்ல விழுந்து காரியம் சாதிப்பீர்கள் போல,ப்ளீஸ் இனிமேல் இப்படி பேசி என்னை பதில் சொல்ல முடியாத இடத்தில் நிறுத்தி சங்கடப்படுத்தாதீர்கள்.”
“அப்போது நீ வரவும் மாட்டாய்.மன்னிக்கவும் மாட்டாய் அப்படித்தானே.”
“உங்கள் மீது எனக்கு கோபம் இல்லை. கொலைவெறித்தனமா இருக்கேன். குவித்த குப்பையை கிளறாமல் வந்தால் நல்லது. அப்புறம் நான் பத்ரகாளியாக மாறினால் எப்படி என்று உனக்கே தெரியும்.”
“அதைத்தான் தினமும் பார்க்கிறேன்…! கையில் சூலம் இல்லாதது தான் குறை. நான் வேணும் என்றால் ஒரு சூலம் சொல்லி செய்து தரட்டுமா…?”
“ஒன்றும் தேவையில்லை நானே வைத்திருக்கின்றேன் தேவை என்றால் அதை கொண்டு வந்து உன்னை போட்டு தள்ளி காட்டவா…?”
“அதை முதல்ல செய்.நிமிடத்தில முடிஞ்சிடும் அலுவல்.”
“செய்யத்தான் போகின்றேன் பார்த்து கொண்டே இரு.”
இருவரும் பேசியபடி கார் நிற்குமிடத்தருகே வந்தனர். நான்கு பேரும் காரில் ஏறி அமரவும் கார் புறப்பட்டது.
இருபது நிமிடங்கள் கழித்து அவனது வீட்டு கேற்றுக்குள் நுழையவும், அவனது தமக்கை கார்ச்சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்தாள். அவளை கண்டவுடன் கதிரவன் கையில் இருந்து கார் நழுவி மீண்டது.
“மச்சான் உன் பெண்டாட்டி வருகிறா… இப்போது என்ன? பண்ணுவியோ தெரியாது,தடுத்து நிறுத்து.தியாவை பார்த்தால் தப்பாகி விடும்.” என்று கதிரவன் தாய்க்கு கேட்காத வண்ணம் திலீபனுக்கு கூறினான்.
“என்ன? மச்சான் திடீரென அப்படிச்சொன்னால் எப்படி? அவ புயல்டா… புயலை அணை போட்டு தடுப்பது எப்படி. என்னால் முயன்றதை செய்கின்றேன்.” என்று கூறி காரில் இருந்து திலீபன் இறங்கினான்.
“அவன் மனைவி அவனருகில் வந்து என்ன? திலீப் தம்பிக்கு என்ன? நடந்தது.” என்று பதறியவள் காரை நோக்கி போக முயற்சத்தாள்.
“உன் தம்பி பின்னாடி வருவான் முதலில் உள்ளே போய் மாற்றுதுணி, டவல்,சோப் எல்லாம் எடுத்து வை அவன் முதலில் குளிக்கட்டும். அப்புறம் உன் கேள்வி எல்லாத்தையும் கேள் என்ன?”
“ம் சரி. அவனுக்கு பெரிய அடியா…?”
“ஏய்…? இப்போது தானே உன் கேள்வி எல்லாத்தையும் பிறகு கேள் என்றேன். தலையை ஆட்டி விட்டு முதல்ல இருந்து ஆரம்பிக்கின்றாயா… ? போ முதல் சொன்னதை செய்.” என்று அவளை உள்ளே அனுப்பி விட்டு வெளியே வந்து கதிருக்கு சைகை சைகை காட்டினான்.
“காருக்குள் இருந்த செந்தூர் தூக்ககலக்கத்தில் ஏதாவது பிரச்சனையா?” என்றான்.
“ம்ம்… கவி வீட்டில் நிற்கின்றாள்.” என்றான் தமையன்.
“என்னது அக்காவா… ?என்றவன் முற்றாக தூக்க நிலையில் இருந்து வெளி வந்தவன் அண்ணா தியாவை பார்த்தால் பெரிய பிரச்சினையாக மாறி விடும் அக்காவை டைவேட் பண்ணி உள்ளே அனுப்பச்சொல்லி அத்தானை அனுப்பி விட்டீர்களா?” என்றான்.
“ஆமாண்டா, திலீப் கவியை உள்ளே கூப்பிட்டு போய்விட்டான். நீ முதலில் இறங்கி போ.”
“அவன் தயக்கத்துடன் அண்ணா தியா…”.என்றிழுத்தான்.
“தியாவை நான் கொண்டு போய் ‘விட்டுவிட்டு’ வருகின்றேன். நீ இறங்கி உள்ளே போனால் தான் கவி வெளியே வருவதை தடுக்கமுடியும்.”
அவன் திரும்பி அவளை பார்க்கவும் அவள் எந்த உணர்வுமின்றி உதடுகளை காது வரை நீட்டி புன்னகைத்தாள். தியா… என்று அவளது கையை தனது கரங்களால் அழுத்தியவன் திடுக்கிட்டான்.ஏனெனில் அவளது கரங்கள் நடுங்கிக்கொண்டிருந்தது. இதற்கு மேல் அவள் தாங்க மாட்டாள் அழுதுவடுவாள் என்று உணர்ந்தவன் காருக்குள் லைட் போடமல் இருப்பதை உணர்ந்தவன் அவளை இறுக்கிஅணைத்தான்.
அவளும் அந்த அணைப்பை ஏற்று அவனது மார்பில் புதைந்து சத்தமின்றி அழுதாள். அவன் செய்வதறியாது திகைத்தவன் ஹஸ்கி வாய்சில் “தியா ஐ ஆம் வெரி சாரிடா ப்ளீஸ் அண்ணா முன்னால் இருக்கிறார் கொண்ரோல் பண்ணுடா என கெஞ்சினான்.”
சில நிமிடங்களில் அவள் கண்களை கைகளால் துடைக்கவும்,அவன் தனது கைக்குட்டையை எடுத்து அவளது முகத்தை துடைத்து விட்டு “இப்போது ஓகேயா… ” என்றான்.
அவள் தலையசைத்து விட்டு நீங்க “இறங்குங்க நான் போக வேணும்.” என்றாள்.
“நானும் வருகின்றேன்.” என்றவனை வேண்டாம் என நிறுத்தி விட்டு புறப்பட்டு போய் பத்து நிமிடங்களாய் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தான்.