இன்னைக்கு உன்ன விடுறதா இல்ல டி முட்டக்கண்ணி…’ என முனுமுனுத்தபடி சாலையில் கவனமாதை செலுத்த…
 
இவன் அங்கு போய் சேரவும், குழலியும் கனியும் பேருந்தை விட்டு இறங்கவும் சரியாக இருந்தது… தங்களுக்குள் சிரித்து பேசியபடி வந்தவர்கள் தீடிரென கவியழகனை காணவும் திருதிருவென விழித்தனர் புரியாமல்.
 
கவியின் கண்களோ, தன்னவளை தான் உச்சி முதல் பாதம் வரை இமைக்காத பார்வையில் விழுங்கிக்கொண்டிருந்தது… அவனது பார்வையை கண்டு கனி சிறு சிரிப்புடன், “நாங் வாரேன் புள்ள…என்று நாசுக்காக நகர்ந்து விட, குழலிதான் சற்று தடுமாறி போனாள்…
 
இவனோ வண்டியை விட்டு இறங்காமல் அவளையே இமைக்காது பார்த்திருந்தான் தீவிரமாக… ஒருவார்த்தை பேசவும் இல்லை பார்வையை திருப்பிக்கொள்ளவும் இல்லை…
 
என்ன இவீக இப்படி பார்த்தா நாங் என்னத்த பண்ண…என குழம்பி பின் தயங்கி ஓரடியை சைக்கிள் நிற்கும் பக்கம் எடுத்து வைக்க, கவியின் புல்லட்டின் உறுமல் கர்ஜனையாக மாறியது…
 
அதில் அரண்டு காலை பின்னுக்கு இழுத்துக்கொண்ட குழலி... ‘இப்ப என்னவாம் இவீகளுக்கு… வா ன்னு கூப்பிடா கொரஞ்சு போயிருவாகளோ… ரொம்பத்தேன்… ‘என முகத்தை சுருக்கி உள்ளுக்குள் சிணுங்கியவளுக்கு சற்று நேரத்தில் வெயில் மண்டையை பொளந்தது…
 
காலை வேறு சரியாக சாப்பிடாதது, இப்பொழுது பசியையும் தூண்டி விட, அடிக்கும் வெயிலுக்கு மயக்கம் வரும் போல் இருந்தது… இதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாது என தெரிந்ததும் மெதுவாக கால்களை நகர்த்தி அவன்புறம் சென்றவள், அவனை தயங்கி தயங்கி பார்த்தவாரே வண்டியில் ஏறி அமர்ந்தாள்…
 
அமர்ந்ததுதான் தாமதம் வண்டி அவனது கையில் அத்தனை வேகத்தில் பறந்தது… அதில் கொஞ்சமே கொஞ்சம் முதலில் மிரண்டவள், ‘தொர ஒருமுடிவோடுத்தேன் வந்திருக்காக போல… ம்ம்ம்… எதுவா இருந்தாலும் எம்புட்டு திட்டுனாலும் அசர கூடாது டி…என எண்ணிக்கொண்டவள், அவனது வேகத்தை ரசிக்க தொடங்கினாள்…
 
எதுவும் பேசாது வண்டியை வேகமாக ஓட்டியவன், அன்று போல் இன்றும் தோப்புக்குள் வண்டியை விட, அதை அவள் கவனித்தாலும் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை…
 
ஆள் அரவமற்ற ஒரு இடத்தில் வேப்பமரத்தின் அடியில் வண்டியை நிறுத்தியதும் இறங்கி நின்ற குழலி சுற்றி முற்றி தன் பார்வையை சுழல விட்டாள்… கண்ணுக்கெட்டிய தூரம்வரை மாமரமும் நடுநடுவே வேப்ப மரமும் இருக்க அவ்விடமே பச்சை பச்சையாக கண்களுக்கு விருந்தளித்தது…
 
அதை ரசித்தக்கொண்டிருந்தவளின் முளங்கையை பற்றி வேகமாக இழுத்தவன், அவளது இதழை வன்மையாக முற்றுகையிட்டிருந்தான்
 
இத்தனை நாள் போக்கு காட்டியதற்கு திட்டுவான் அல்லது வாக்குவாதம் புரிவான் என்று எதிர்பார்த்திருக்க அவனோ தன் கோபத்தை வேறு விதமாக அவளிடம் காட்டிக்கொண்டிருந்தான்
 
முதலில் அதிர்ந்து விழி விரித்தவள் பின்னே சுயம் வந்து அவனிடம் இருந்து விடபட போராடினாள்… ஆனால் அவனது அத்தனை கோபமும் அவளது போராட்டத்தில் மேலும் மேலும் வழுபெற, இடையோடு பிடித்திருந்த அவனது அணைப்பு இறுகிக்கொண்டே போனது…
 
ஏனோ ஒருகட்டத்திற்கு மேல் அவளால் தாக்கு பிடிக்க முடியாமல் கண்களில் கண்ணீர் வரவும், மூச்சு முட்ட உடல் வழுவிழந்து அவனது கைகளில் மயங்க தொடங்கினாள்…
 
இத்தனை நாள் கண்ணில் படாது ஏமாற்றிய கோபம் அவனுள்… அமைதியாக இருந்திருந்தால் அவனே ஒதுங்கி நின்று பார்வையால் வருடி விட்டு காத்திருந்திருப்பான் ஆனால் அவளோ அறையை விட்டு தொரத்தியதோடு அல்லாது நாட்கள் பல என கண்ணில் படாமல் இருக்க, அத்தனை கோபம் முகிழிந்தது அவனுள்…
 
அதே இப்போது அவனை சற்று மூர்கத்தனமாக நடந்துக்கொள்ள தூண்டியது அவளிடம்…. என்ன செய்கிறோம் என்று புரியாமல் அவளை இறுகி அணைத்தபடி, அவளது இதழில் தன் கோபத்தை தனித்துக்கொண்டிருந்தான்…
 
சில பல நிமிடங்கள் கழிந்த பின்னரே சற்று மலை இறங்கினான் தன் செயலை தொடர்ந்துக்கொண்டே, மெதுமெதுவாக வன்மையில் இருந்து மென்மைக்கு தாவியவன், அப்பொழுது தான் மனைவியின் உடல் கணத்தை உணர்ந்தான் கையில்….
 
ஏன்னென்ற சந்தேகத்தோடு மெல்ல அவளை விட்டு தன் இதழை பிரித்தவன், அப்பொழுது தான் கண்கள் கிறங்கி, சிறு சொட்டு கண்ணீர் இமையோரம் தேங்கி இருக்க, இதழ்கள் பிரிந்து, தலை சரிந்து அவனது கையில் மிதந்துக்கொண்டிருந்தவளை கண்டு திகைத்து ஸ்தம்பித்து போனான் கவி…
 
குழலி…. குழலி…. குழலி….” என கன்னம் தட்டி அழைக்க, மெல்ல விழி திறந்தாள் பூங்குழலி…
 
தன்னையே பதற்றத்துடன் பார்த்திருந்தவனை பார்த்து பேந்த பேந்த விழித்தவள், தன் இடது கரம் கொண்டு அவனது தோளை பற்க்கோலாகி தன்னை நிலையாக நிறுத்தி நின்றவள், தடித்த தன் இதழ்களை சிரம பட்டு அசைத்து,
 
உம்ம அறையவுட்டு தொறத்துனது செரித்தேன்… பாத்தியளா என்ன பண்ணி வச்சுபுட்டீகன்னு....” என முகத்தை சுருக்கியவளை முறைத்தவன்,
 
திமிரு டி உனக்கு… உன்னை…” என மீண்டும் பேசிய அவள் வாய்க்கு தண்டனை தர எண்ணி அவள் முகம் நோக்கி குனிய, சட்டென தலையை திருப்பிக்கொண்டாள் குழலி…
 
ம்ஹும்….” என தலையை திருப்பி வேண்டாம் என்பது போல் ஆட்ட,
 
இது நீ பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும்…” என்றவன் செயல் அவளை விடுவதாக இல்லை…
 
தன் மறுப்பை தலையை ஆட்டியபடி, பின்பக்கமாக சரிந்தவளின் முதுகில் கைவைத்தவன், சட்டென அவளை தன்பக்கமாக இழுக்க, குழலிக்கு என்ன செய்வது என்று யோசிக்கும் முன்னரே தன் வேலையை தொடர்ந்திருந்தான்…
 
அவனது வன்மையில் கொஞ்சம் திணறி தான் போனாள்  என்று சொல்லலாம்… மூச்சுக்காற்றுகாக அவன் கொடுத்த ஒருநொடி விலகலில் தன் பலத்தை கூட்டி அவனிடம் இருந்து பிரிந்து நின்றவள், வேக மூச்செடுத்து நிற்க முடியாமல் தள்ளாடியவளை கண்டவனுக்கோ பாவமாகி போனது…
 
விழிகள் கலங்க, உதட்டை துடைத்தபடி தள்ளாடி விலகி நின்றவள், “இந்தா இதுக்குத்தேன் உங்க கண்ணுளையே நாங் படாம இருந்த்தேன்…என உதட்டை பிதுக்க…
 
ஆமா டி… கல்யாணம் ஆன நாள்ல இருந்து இதே வேலையா தான் சுத்துறேன் பாரு…” என கேட்கவும், குழலி இப்பொழுது தலை கவிழ்ந்து தயங்கி தயங்கி,
 
இல்ல நாங் அப்படி சொல்லல… அன்னைக்கு பொழுது அந்த நெ..நெருக்கம்உ…உங்களையும் சும்மா இருக்கவுடாது என்னையும் இருக்கவுடாது… நாங் முன்னமே சுமாராத்தேன் படிப்பேன்இப்ப நீரு இப்படியெல்லாம் பண்ணா நாங் எங்குட்டு போய் படிக்க, பொறவு நாங் பெயில் ஆயிட்டா என்ன பண்ணுறது… அடுத்த பரிட்சைக்கு எல்லாம் எம்மால திரும்ப படிச்சுகிட்டு இருக்க முடியாது… அப்ப நாங் எங் வயத்துக்குள்ளாற இருக்க எங் குழந்தைய கவனிப்பேனா இல்ல படிச்சு பரிட்சை எழுதுவேனா நீரே சொல்லும்…என சாலின் நுனியை திருகியபடி பேசியவளின் வார்த்தையை கேட்டுக்கொண்டு வந்தவனுக்கு கோபம் போய் சிரிப்பு வர இருந்த நேரம் கடைசியாக சொன்ன செய்தியில் கண்கள் பளிச்சிட அவளை திகைத்து பார்க்கும் பொழுது தயக்கமாக தலை நிமிர்ந்து பார்த்தவள் அவனது வதனத்தில் தெரிந்த மகிழச்சியில் நாணம் கொண்டு மீண்டும் தலையை கவிழ்ந்து கொண்டாள் பெண்ணவள்…
 
தன்னை விட்டு இரண்டடி விலகி நின்றிருந்தவளின் கையை பற்றி சுண்டி இழுக்க, அவன் மேல் போய் மோதி நின்றவளை வாரி அணைத்துக்கொண்டான் கவியழகன்…
 
ம்பச்ச்…. விடுக… விடுக என்னைய…என்று அவள் திமிர அவனோ அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் அவள் சொல்லாமல் சொல்லிய சம்மதம் என்ற வார்த்தையில் மனம் குதியாட்டம் போட,
 
பிளீஸ் டி முட்டக்கண்ணி….என்றபடி அவளது கழுத்து வளைவில் ஒரு முத்திரையை பதிக்கவும், அப்படியே அடங்கி போனாள் அவனது கைகளில்…
 
அவளது திமிரல் அடங்கவும் மேலும் தன்னுள் இறுக்கி கொண்டவனின் அணைப்பு இனி உன்னை ஒருபோதும் விட்டுவிட மாட்டேன் என்பது போல் இருக்க… விதியோ இது கடைசியாக இருக்கலாம் என்பதை போல் சிரித்து வைத்தது…
 
அவனது கழுத்தை சுற்றி தன் கரங்களால் கட்டி கொண்டவள், மெல்லிய குரலில் “அத்தான்… “என்றழைக்க,
 
ம்ம்ம்…” என்ற பதில் அவனிடமிருந்து…
 
என்னமோ மாதிரி இருக்கு… கொஞ்சம் மெல்லமா கட்டிக்கிடுதீகளா….என கேட்கவும் மயக்கத்தில் இருந்த கவி, இதழ் பிரித்து சிரித்து மேலும் தன் பிடியின் இறுக்கத்தை கூட்ட, குழலிக்கு கூச்சம் தாழவில்லை…
 
ம்பச்ச்… விடுக…” என திமிரியவளை விடுவித்தவன், அவளது உணர்வுகளை மதித்து விலகி நின்று வண்டியில் சாய்ந்து நின்று, அவளது கரத்தோடு கரம் கோர்த்து நின்றான் அவளை ஆசையாக விழிகளால் வருடியபடி….
 
ஏனோ இப்பொழுது அவனது விழிகளை நேர்க்கொண்டு பார்க்க முடியவில்லை அவளால், அத்தனை வெட்கம் வந்தது… இவை அனைத்தும் எங்கிருந்து வந்தது என அறியாமல் திணறியவள் உதட்டை கடித்து நிற்க… கவிக்கு அவளது நிலை அத்தனை சிரிப்பை அளித்தது…
 
முட்டக்கண்ணி என்ன இன்னைக்கு புதுசு புதுசா பண்ணுறா…என இதழ் பூத்த புன்னகையுடன் அவளையே விழிகளால் ஆராய்ச்சி பார்வை பார்க்க, அவளால் அதற்கு மேல் அவனது பார்வையை தாக்குபிடிக்க முடியவில்லை…
 
ம்க்கும்….” என சிணுங்கியபடி அவனது நெஞ்சில் சாய்ந்துக்கொண்டாள் வெட்கத்தில்….
 
அதையும் ரசித்தவன், அவளது தலையில் தன் நாடியை பதித்து, தோளோடு அணைத்தபடி, மெல்லிய குரலில், “என்னடி ஆச்சு…?” என வினவ,
 
நீரு என்னவோ போல பாக்குதீய… எமக்கு என்னவோ போல இருக்கு அத்தேன்….” என மெல்லிய குழைந்த குரலில் கூற,
 
அதான்…” என இழுக்க, அவளோ அவனது நெஞ்சில் முகத்தை புதைத்துக் கொள்ள, கவி அவளது செவியோரம்
 
கட்டிக்கிட்டியோ…?”என கேட்க, வெட்கத்தில் சிணுங்கியவள் பட்டென்று ஒரு அடியை அவனது நெஞ்சில் வைக்க, அதை சிரித்தபடியே வாங்கி கொண்டான் கள்வன்…
 
பின் இருவரும் அமைதியாகி விட, அந்த அழகிய நிமிடங்களை தங்களுக்குள் சேமிக்க தொடங்கினர் கண்கள் மூடி… சில பல நிமிடங்கள் கழிந்து தன்னை விட்டு குழலியை பிரித்தவன், அவளை திருப்பி முதுகோடு அணைத்தபடி அவளது தோள்பட்டையில் நாடியை பதித்து,
 
ஆமா இத்தன நாள் எஸ்கேப் ஆயிட்டு, இப்ப மட்டும் இப்படி நிக்குற…?”என தன் சந்தேகத்தை கேட்க, அவளோ அவனது நெஞ்சோடு தன் முதுகை ஒட்டி நின்றவள்,
 
அவனது கன்னத்தோடு கன்னம் உரசியபடி நிற்க, கவிஅய்யோ… கொல்லுற டி முட்டக்கண்ணி… வீட்டுக்கு போலாமா…” என கிறக்கத்தோடு கேட்கவும்,
 
அவளும், “ஓஓஓஓ…. போலாமே…என கண்கள் மூடி அவனது நெருக்கத்தை உணர்ந்துக்கொண்டே பதிலளித்தவளை வெடுக்கென்று திரும்பி பார்த்தவன்,
 
சத்தியமா…?என இன்பதிர்ச்சியில் கேட்க,
 
ம்ம்ம்...” என நாணத்தோடு தலையை ஆட்டியவளை இழுத்து அணைத்துக்கொண்டவன் பின் அவளை விலக்கி,
 
அப்ப உன் எக்சாம்….?”
 
அத்தேன் இன்னையோடு முடிஞ்சுத்தே…என தோள் குழுக்கி நக்கலாக சிரிக்க,
 
ஓஓஓ… அதான் மேடம் இப்படி நிக்குறீங்களா…?” என கேட்க,
 
ஆமா… இப்ப என்னகுறீக…”என மிதப்பாக கேட்க,
 
ஒன்னுமில்ல டி முட்டக்கண்ணி…” என்று சிரித்தவன் அவளை இழுத்து அணைத்துக்கொண்டான்…
 
பின் இருவரும் இத்தனை நாள் பிரிவின் கஷ்டத்தை, அவள் அவனுக்கு தெரியாமல் ஒளிந்து ஒளிந்து காலேஜ் சென்றது, திருட்டுதனமாக அறை ஜன்னல் வழியாக அவனை பார்வையால் விழுங்கியது, அவளது நினைவில் அவன் செய்த தவறுகள், அவளை பார்க்க வேண்டி அறை வாசலில் சில நாள் தவம் கிடந்தது என அனைத்தையும் பேசி சிரித்து தங்களது அந்த பொழுதை அத்தனை அழகாக மாறிக்கொண்டிருந்தனர் சிறு சிறு சீண்டல், சண்டை, வாக்குவாதம், காதல் பார்வையால்…
 
போவலாமா அத்தான்…?என முகத்தை சுருக்கி கேட்க,
 
ஏன்னடி… கொஞ்ச நேரம் இப்படியே பேசிட்டு போலாம்…” என அவளது தளிர் விரல்களை நோண்டியபடி பதிலளித்தவனை பார்த்து வெடுக்கென்று கையை உருவி கொண்டாள் குழலி….
 
அதற்கு கவி, “ம்ப்ச்ச்… என்ன டி…”என சலிப்புடன் கேட்ட படி மீண்டும் அவளது கைவிரல்களை பிடித்து நோண்ட,
 
பசிக்குது அத்தான்… நீரு நல்லா மொக்கிட்டு வந்து தேம்பா பேசுதீக… நாங் அப்படியா காலைல கூட ஒழுங்கா சாப்புடல…” என முகத்தை சுருக்க, அதை பார்த்து சிரித்தவன்,
 
அவளது மூக்கை பிடித்து ஆட்டியபடி, “சாப்பாடு மூட்ட…”என்க, அவனது கையை தட்டி விட்டவள், கோபமாக அவனை பார்த்து முறைக்க,
 
சரி… சரி… முறைக்காத… போலாம்…என்று வண்டியில் ஏறி, அதை உயிர்ப்பிக்க போக, ஏதோ யோசனை தோன்றவும்,
 
அடியேய் முட்டக்கண்ணி… நீ வண்டிய ஓட்டுறியா…?” என கண்கள் மின்ன கேட்கவும், குழலி அவனையும் வண்டியையும் மாற்றி மாற்றி பார்த்தவள், தன் விரல் நகத்தை கடித்து சில நொடிகள் யோசித்தாள் தீவிரமாக…
 
எதுக்கு இவ்வளவு யோசிக்குறா…?’என அவளது முகத்தையே பார்க்க, அவளோ யோசனையின் முடிவாக,
 
இல்ல வேணாம்… வூட்டுக்கு போவோம்…என்றவளை ஏமாற்றத்துடன் பார்த்தவன்,
 
ஏன் டி…” என கேட்க,
 
அவனை முறைத்து பார்த்தவள், “மம்ம்…”என இடுப்பில் கை வைத்தபடி, “நீரு என்னைய வண்டி ஓட்ட விட மாட்டீருஉம்ம கையும் காலும் சும்மா இருக்காது… எமக்கு இப்ப சோறுத்தேன் முக்கியம்… “என்று வீம்பாக நின்றவளை பார்த்து,
 
ஏறி தொல.…” என முறைத்தவன், ‘முட்டக்கண்ணி சரியான சாப்பாட்டு ராமி…. சே…என முனுமுனுத்தபடி வண்டியை உயிர்ப்பிக்க, குழலி உள்ளுக்குள் சிரித்தாலும் வெளியே வெரப்பாக முகத்தை வைத்துக்கொண்டு வண்டியில் ஏறினாள் அமைதியாக