இருந்தாலும் வசுவிற்குத்தான் மணம் தெளியவில்லை, “இங்குட்டு பாரு வசு… நம்ம புள்ள உன்ற மேல இருந்த பாசத்துல இப்படி பண்ணிப்புட்டா எதையும் யோசன பண்ணாம… நாளபின்ன அங்குட்டு போய் அவ வழணும்னுட்டுத்தேன் நான் கண்ணாலத்த பத்தி பேசி அவ உண்டாக்குன பிரச்சனைய மாத்திவுட்டேன்… உம் மருவனுக்கு புடிக்கலைன்னா என்னத்துக்கு சட்டுன்னுசம்மதம்சொல்ல போறான்…?” என கேட்கும் போது

அத்தேனே…என கனிமொழி கேட்டவள், சட்டென தந்தை தன்னை திரும்பி பார்க்கவும் வாயை இறுக மூடிக்கொண்டாள் பட்டென… 

இருந்தாலும் அண்ணே… அவீக ரெண்டு பேரும் மொறச்சுட்டுல நின்னாக…என கலக்கமாக கேட்கவும்

ம்பச்ச்… அந்த பையலுக்கு ஆச இருந்தாலும் இப்படி ஆனதுக்கு கோவம் இருக்கத்தேன் செய்யும்…என்னும் போதே பதற்றமாக வசுந்தரா நிமிர்ந்து பார்க்க, ஜெயசீலன்

அதைய சிறுசுங்க ரெண்டும் பேசி தீர்த்துக்கும்… ஏன்னா கோபம் எம்புட்டு இருக்கோ அம்புட்டு பாசமும் இருக்கு ரெண்டுத்துக்கும்… என்ன வெளங்குச்சா…?” என கேட்டவர்

பொறவு முருகவேலு… அவரால நம்ம புள்ளைய ஒன்னும் பண்ண முடியாது… முக்கியமா நீ காயத்ரி மயிணிய நம்பு…என்றதும் மொத்தமும் அடங்கி விட்டார் வசுந்தரா… 

செல்லதாயிக்கு கூட ஜெயசீலன் வார்த்தையில் சற்று நம்பிக்கை வர, தெளிந்து தான் இருந்தார்… எப்படியோ இருகுடும்பமும் விட்டுபோகமால் இருக்கிறதே என்ற நிம்மதியும் அவருள்… 

அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த கவியழகனுக்கு ஜெயசீலனை எண்ணி வியப்பாக இருந்தது… அனைத்தையும் சரியாக புரிந்து சரியான நேரத்தில் சரியாக காயை நகர்த்தி இருக்கிறார்… ஒருவேலை தந்தை மன்னிப்பு வேண்டி இருந்தால் தன்னால் குழலியை ஒருபோதும் அவரது சம்மதத்துடன் திருமணம் முடித்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது… எல்லாம் எண்ணிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தான் கவி…. 

இங்கு ஜெயசீலன் மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு வீட்டிற்கு செல்ல, கனி குழலியுடனே தங்கிவிட்டாள்… அறையில் நடந்த அனைத்தையும் தோழியிடம் ஒப்பித்து அவளை சமாதானம் செய்ய விளைய, அவளோ அன்னை பாட்டியின் வார்த்தைகளிளேயே சுழன்றுக்கொண்டிருந்தாள் திருமணம் முடியும்வரை… 

அதன்பின்னரே அவ்வீட்டில் கவியையும், முருகவேலையும் ஒரு வழியாக்கும் சிந்தனையில் தன்னுள் இருந்து மீண்டு வந்திருந்தாள்… 

கோவிலில் நிழல் மண்டபத்தில் அமர்ந்து அனைத்தையும் யோசித்துக் கொண்டிருந்தவர்கள் கோவில் மணி ஓசையில் தங்கள் எண்ணங்கள் கலைந்து ஒருவரையொரு பார்த்துக் கொண்டனர்… 

பின் கவி, “போலாமா… டைமாச்சு….என்று எழுந்துக்கொள்ள உடன் குழலியும் எழுந்து நின்றாள் அவனையே பார்த்தபடி… 

அவளது பார்வையை கண்டு, “என்னடி…?” என வினவ

ம்பச்ச்… ஒன்னுமில்ல… வெரசா வூட்டுக்கு போவோம்…என்றவளை பார்த்து

ஏன்…?” 

ம்ம்ம்… பசி வயித்த பெரட்டுது… வூட்டுல என்ற மாமியார ஏதாச்சும்  பண்ணி வைக்க சொல்லிருந்தேன்… காலேஜ்ல இருந்து கெளம்பையில…என்றபடி முன்னே நடந்தவளை பார்த்து நெற்றியில் அரைந்துக்கொண்டான் கவி… 

இவளை கல்யாணம் பண்ணி, குடும்பம் நடத்தி, புள்ள குட்டி பெத்து…. ஷ்ஷஷ்ஷ்ப்ப்பாபா…. நினைச்சாலே மூச்சு வாங்குது… சரியான சாப்பாட்டு ராமியா இருக்காளே…ம்ம்ம்…என்றபடி அவளை பின்தொடர்ந்து நடந்தான் கவியழகன் விதியேயென்று… 

கோவிலை விட்டு வெளியேறியவர்கள், வண்டியை நோக்கி நடக்க, சட்டென குழலியின் நடை தடைபெற்று மெல்ல ஊர்ந்தது… 

வண்டியில் ஏறி அமர்ந்த கவி, “ம்ம்ம்… ஏறு…என்றவனின் அருகில் குழலி தயங்கி நிற்க

என்னடி ஏறுன்னு சொன்னேன்…என்றதும், குழலி லேசாக குழைந்துக்கொண்டே

அத்தான்…என  அழைக்க

ஏய்ய்ய்… இப்ப எதுக்கு நெழியுரு…?” 

அதுவந்து…. ஒரு மொற…என இழுக்க

ஒரு மொற…?” அவள் இழுத்ததை இவன் எடுத்து கொடுக்க,

நாங் உங்க புல்லட்ட ஓட்டி பாக்கட்டா…என முகத்தை சுருக்கி கெஞ்சவது போல் கொஞ்சி கேட்டவளை பார்த்து கவிக்கு எண்ணங்கள் எக்கு தப்பாய் பயணிக்க தொடங்கியது வேகமாக… 

அவளது முகத்தில் பார்வையை நிலைக்க விட்டு கர்ப்பணையில் இருந்தவனின் கையில் ஆள்காட்டி விரலால் சுரண்டினாள் பட்டும் படாமல்…

ஏதோ குறுகுறுப்பாக உணர்ந்து தலையை உழுப்பி அவளை நிதானமாக பார்க்க, குழலிஎன்ன ஒன்னுத்தையும் சொல்ல மாட்டீங்கிறீக…?” என உதட்டை பிதுக்கியவளை கண்டு அவனது மனம் சலம்பவும், அவனது உள்மனது

அய்யோ முட்டக்கண்ணி படுத்துறாளே… இவளைய வச்சுக்கிட்ட சே… இம்ச பிடிச்சவ… முதல்ல இங்க இருந்த கிளம்பி தொல டா நாயி…என உள்மனது எடுத்துரைத்ததில் புத்தி வர

ம்ம்ம்… ஓட்டலாம் ஓட்டலாம்… மொத எக்சாம் எல்லாத்தையும் ஒழுங்கா எழுதி முடி அப்புறம் ஓட்டலாம்…என்று எதையோ கணக்கு போட்டு கூற, அவனது மனைவிக்கு அதெல்லாம் கருத்தில் பதிவதாகவே தெரியவில்லை… 

இப்பொழுது அவளது கவனம் அனைத்தும் வண்டியை ஓட்ட வேண்டும் என்பதில் தான் இருந்தது… அதன் விளைவை பற்றி அவள் ஒருதுளிக்கூட சிந்திக்க தவறினாள்… 

ம்ஹும்…. இப்பவே ஓட்டணும்… உங்களுக்கு என்ன வந்துச்சு நாங் வண்டி ஓட்டுனா… அதுக்கு என்னத்துக்கு நாங் பரிட்ச முடியுற வர காத்திருக்கணும்… நீரு இப்ப வண்டிய ஓட்ட விட போறீயளா இல்லையா…?” என அடம்பிடிக்க இவனுக்கு மண்டையை பியித்து கொள்ளலாம் போல் இருந்தது… 

லூசு…. சொன்னா கேளு… ஒழுங்கா இப்ப வந்து வண்டில ஏறு… மனுஷன போட்டு படுத்தி எடுக்காத…என்றவனின் உணர்வுகளை அவள் புரிந்துக்கொள்ளும் நிலையிலேயே இல்லை… 

ம்ஹீம்… நாங் இன்னைக்கு ஓட்டிய ஆவணும்… இல்லாட்டி இங்கனையே நிப்பேன் வூட்டுக்கு வர மாட்டேன்…என முகத்தை திருப்பிக் கொண்டாள் வீம்பாக… 

அவளையே சில நொடிகள் உற்று பார்த்தவன், “விதி யார விட்டுச்சு… வந்து தொல… ஆனா ஏதாச்சாம்னா என்னை குத்தம் சொல்ல கூடாது இப்பவே சொல்லிட்டேன்…என்றவனது எச்சரிக்கை வார்த்தைகள் காத்தோடு பறந்தது அவன் அனுமதி வழங்கியதை மட்டும் கருத்தில் கொண்டு… 

அதெல்லாம் ஏதும் சொல்ல மாட்டேன்…என கண்கள் மலர, பரபரப்பாக கூறியவளின் வார்த்தையில் இருந்த குதுகலம் அவனையும் லேசாக தொற்றிக்கொள்ள

இதழ் பூத்த புன்னகையுடன் இறங்கி அவளை ஏற சொல்ல, குழலிக்கு வானில் பறப்பது போல் ஓர் உணர்வு பல நாள் கனவு அல்லவா… என்று கோவிலில் இந்த வண்டியை கண்டாளோ அப்பொழுது முளைத்த ஆசை இப்பொழுது அது நிறைவேற போகும் குஷி அவளிடம் நடக்க போகும் விபரிதத்தை அறியாமல்…

அவள் அமர்ந்ததும் அவள் பின் அமர்ந்தவன் அவளை ஒட்டி அமர்ந்து, அவளது கையோடு உரசியவாரு தன் கையை கொண்டு சென்று வண்டியினை பற்றியவன் மிக அருகில் தெரிந்த அவளது மலர்ந்த முகத்தை பார்த்தவாரே என்ன செய்ய வேண்டும் என அறிவுருத்தியவன், மெல்ல வண்டியை நகரத்த ஆரம்பித்தான்… 

குழலியின் விழிகளோ தான் வண்டியை ஓட்டுகிறோம் என்ற குதுகளிப்பில் சாலையிலும் வண்டியிலும் கவனமாக இருந்தவள் தன் தோள் உரசி கை பிடித்து காதல் செய்துக்கொண்டு வரும் கணவனை கவனிக்க தவறினாள்… அது அந்த கள்வனுக்கு வசதியாகி விட, மெல்ல வண்டியை தோப்பு வழியாக மாற்ற, குழலி

என்னத்துக்கு இந்த பக்கம் போறீக… வூட்டுக்கு நேரால போவணும்…?” என சந்தேகம் கேட்டாலும் பார்வையும் கவனமும் சாலை மீதும் வண்டியின் மீதும்தான் இருந்தது… 

ம்ம்ம்… இப்படி சுத்திட்டு போனா தூரம் அதிகமாகும் அதான் இந்த பக்கம் வந்தேன்…என்றவன் இப்பொழுது அவளது தோள் வளைவில் தன் நாடியை பதித்து தன் கன்னத்தை உரச, சட்டென மின்சாரம் பாய்ந்தது குழலிக்கு….

வெடுக்கென்று முகத்தை திருப்பியவளின் இதழ் அவனது கன்னத்தை உரசி விட, பதறி வண்டியை பிடித்திருந்த தன் பிடிமானத்தை தவற விட்டாள் பெண்ணவள், கவி அவள் மீது ஒரு கண் வைத்திருந்தாலும் தான் செய்யும் வேலையில் எப்பொழுது வேண்டுமானாலும் உசாராகி பிடியை விட்டு விடுவாள் என்று அறிந்து தன் பிடியில் கவனமாக இருந்தான்… அதன் விளைவு அவள் தடுமாறவும் கவி அதை சரியாக பிடித்துவிட்டான்… 

அப்பொழுதுதான் குழலிக்கு தான் அவனது கையணைப்புக்குள் இருப்பதையும் கணவன் தன்னை உரசிக்கொண்டிருப்பதும் உணர முடிந்தது… உணர்ந்ததும் வெட்கம் மேலிட மெல்ல தன்னை குறுக்கி அமர்ந்துக்கொண்டாள் கூச்சத்தில்… 

அவளது மற்றாங்களை கண்டுக்கொண்டவன், ‘முட்டக்கண்ணி முழிச்சுருச்சு…என எண்ணினாலும் தன் சேட்டையை அவன் நிருத்துவதாக இல்லை… 

அவளது எதிர்பாரா பரிசு அவனை மேலும் தூண்டி விட, இன்னும் நெருங்கி அமர்ந்து அவளது கன்னத்தோடு கன்னம் வைத்து உரசினான் காதல் மயக்கத்தில்… அவனது செயலில் தடுமாறிய குழலி, மெல்ல தன்னை தொலைத்து அவன் தோளோடு பின் சாய, இப்பொழுது கவிக்குமே வண்டியின் மீது கவனம் செல்லுத முடியாது தடுமாறினான்….

அவளது கன்னத்தை உரசிக்கொண்டிருந்தவன் ரோட்டில் கண்ணை பதித்தவாரே மெல்ல தன் முகத்தை மட்டும் திருப்பி, தன் தோளில் கண்கள் கிறங்கி சாய்ந்திருந்தவளின் பட்டு கன்னத்தில் அழுத்தமாக தன் இதழை பதித்தான் தன் ஒட்டு மொத்த காதலையும் சேர்த்து… 

குழலிக்கு வார்த்தையில் சொல்லிவிட முடியாத உணர்வுகள் உள்ளுக்குள்… அன்னை பாட்டியுடன் சமரசம் ஆனது ஒரு பக்கம் சந்தோஷம் என்றால் கணவனது லீலைகள் ஒருபக்கமென பெண்ணவள் மகிழ்ச்சி பெருக்கில் தன்னை மொத்தமாக தொலைக்க தொடங்கினாள்… 

கன்னத்தில் பதிந்த அவனது இதழ்கள் எங்கு பிரிந்து விடுமோ என்னும் பயத்தில், தன் ஒரு கையை மயகத்தில் அவள் அறியாது உயர்ந்து அவனது பின்னந்தலையை அழுத்தி பிடித்துக் கொண்டது…

குழலி இவ்வாறு செய்வாள் என்று எதிர்பார்க்காத கவியும் சற்று கிறங்கி விட, வண்டி ஆட்டம் கண்டது ஒருநொடி… அதில் சுதாரித்துக்கொண்டனர் இருவரும்… 

சட்டென கவி வண்டியை பிரேகிட்டு நிறுத்த, குழலிக்கு தன்னை சுற்றியிருந்த மாய வலை அறுந்து விழ, வேகமாக கண் விழித்து பார்த்தவளுக்கு சூழ்நிலை புரிந்துவிட்டது… 

புரிந்ததில் கோபம் வர, வேகமாக வண்டியை விட்டு இறங்க முயற்சிக்க, எங்கே முடிந்தால் தானே… அவளது இருபுறமும் அவனது கைகள் அணையாக இருக்க, அவளால் வண்டியை விட்டு இறங்க முடியவில்லை…

ஏய் என்னடி பண்ணுற முட்டக்கண்ணி…என கேட்க, அவளிடம் பதிலில்லை மாறாக அவனிடமிருந்து தப்பிக்கும் எண்ணம் மட்டுமே இருந்தது…

ம்பச்ச்… என்ன பண்ணுறன்னு கேட்டுக்குறேன்ல… பதில் சொல்லுடி முட்டக்கண்ணி…என சற்று குரலை உயர்த்தியவன் அவளது பதில் கூறாது அவனது கையை விலக்குவதில் கவனமாக இருப்பதை கண்டு அதை திசை திருப்ப எண்ணி இடது கையால் அவளது இடுப்பை சுற்றி வளைத்து தன்னோடு இறுக்கினான்…

அவ்வளவுதான் குழலியிடமிருந்து வார்த்தையுமில்லை, செய்கையில் எதிர்ப்புமில்லை… அத்தனையும் சிலையாகி போனது… 

அதை புரிந்துக்கொண்டவன் இதழ்ழோர சிரிப்போடு, லேசாக குனிந்து அவளது காது மடலில்என்ன டி அமைதி ஆயிட்ட..?” என்று கேட்கவும் வேகமாக அவனை திரும்பி பார்த்து முறைத்தவள்

பொறுக்கி பயலே….என முனுமுனுப்புடன் அவனது கையை வேகமாக உதறிவிட்டு வண்டியை விட்டு இறங்கி விலகி நின்றாள்… 

ம்பச்ச்… இப்ப எதுக்கு வண்டிய விட்டு இறங்குன…?” என கவி வடை போச்சே எண்ணும் சோகத்தில் கேட்க, குழலியோ கோபமாக

ம்ம்ம்… நீரு எமக்கு வண்டிய ஓட்ட உதவுனாப்புல தெரில…என முறைத்துக்கொண்டே கூற

வேற என்னடி முட்டக்கண்ணி தெரிஞ்சுது…?” என் ஒற்றை கண்ணை சிமிட்டி கேட்க, ஆத்திரம் மேலிட

சே… எம்புட்டு மோசம் நீரு… உங்களைய போய் நல்லவியன்னு நெனைச்சேன் பாரு என்னைய சொல்லணும்…என்று திரும்பி நடக்க போக, அவளது கையை பட்டென எம்பி பிடித்தவன்

அடியேய் முட்டக்கண்ணி… கட்டுன பொண்டாட்டி கிட்ட நல்லவனா நடந்துக்க நான் ஒன்னும் லூசு இல்ல டி… அண்ட் இன்னொரு விஷயம்…. நான் வேண்டாம்னு தான் சொன்னேன் நீதான் கேட்கல… அதுக்கு நான் என்ன பண்ண முடியும்….?” என்று தோலை உழுக்கி சொல்ல, அப்பொழுது தான் குழலிக்கு அவன் மறுத்ததிற்க்கான காரணம் விளங்கியது… 

கோட்டி பயலே… விடுல… படிக்குற புள்ள கிட்ட இப்படியா நடந்துக்குறது… உடுல…என திட்டியவள் அவனது பிடியில் இருந்து கையை விடுவித்து கொண்டு நடக்க தொடங்கினாள்…

கவியோ சிரித்துக்கொண்டே வண்டியை உயிர்ப்பித்து மெல்ல அவளை பின் தொடர்ந்து ஓட்டியபடி,

என்னடி முனியம்மா உன்கண்ணுல மை…

ஆரு வச்ச மை அது நான் வச்ச மைவு… 

நீ முன்னால போனா நான் பின்னால வாரேன்…” 

என சற்று உரக்க பாட, திரும்பி பார்த்த குழலி முடிந்த மட்டும் முறைத்துவிட்டு

மருவாதையா போயிருக… பொறவு என்ன பண்ணுவேன்னுட்டு தெரியாது… சொல்லிப்புட்டேன்….என விரல் நீட்டி எச்சரித்தவள் மீண்டும் தன் நடையை தொடங்க, அவளது வார்த்தைக்கு சிரிப்பை வாய்க்குள் அடக்கியவன், இப்பொழுது அவனது பார்வை அவளது நீள ஜடையில் நிலை நின்றது… 

அது அவளது நடைக்கேற்ப்ப அங்கும் இங்கும் ஆட

நடையா இது நடையா… என ஒரு வரி பாடவும், வேகமாக திரும்பி பார்த்தவள், காளியாக மாறி

உங்களைய…என அடிக்க வந்தவள் அவனது முதுகில் தயவு தாட்சன்யம் பாராமல் நான்கை வைக்க, அதை வரமாக முதலில் வாங்கியவன், பின் அவளது இருகரங்களையும் இறுக பற்றி, இடையோடு இழுத்து அணைத்தவன், அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்து

பிளீஸ் டி முட்டக்கண்ணி… கொஞ்ச நேரம் எனக்காக நேரம் ஒதுக்கு… சத்தியமா உன்ன பக்கத்துல வச்சுகிட்டு முடியல…என கிசுகிசுப்பாக மொழிந்தவனின் வார்த்தையில், முதலில் விடுபட போராடியவள் பின் அமைதியாகி போக, அவனது உதடுகள் உரசியதில் உண்டான கூச்சம் அவனது அணைப்பு என அனைத்தும் அவளை வலுவிழக்க செய்தது நொடிகளில்… 

மெல்ல தன் இரு கரங்களால் அவனது கழுத்தை வளைத்து அணைத்து கொண்டவள் அவனது செயலில் தன்னை தொலைக்க தொடங்கினாள்… 

மாலை மங்கும் நேரம் தோப்பு சாலையில் அதுவும் அவர்களது சொந்தமான தோப்பு என்பதால் யாரும் எதுவும் சொல்ல முடியாது என்பதை விட, மாலை நேரத்தில் யாரும் அங்கு வந்து விட மாட்டார்கள் என்ற தைரியத்தில் கவியழகன் தன் மனைவியை மேலும் தன்னுள் புதைத்துக்கொள்ளும் அளவிற்கு அணைத்து பிடித்து நின்றிருந்தான் வண்டியில்… 

குழலிக்கும் அவனை எதிர்க்கும் எண்ணமில்லாமல் அமைதியாக அவனது அணைப்பில் தஞ்சம் புகுந்து, அந்த நிமிடங்களை ரசிக்க தொடங்கினாள்… 

சிறிது நேரம் கழித்து அவளை விடுவித்தவன், “வா… வந்து உட்காரு…என அழைக்க

அதுக்குள்ள கிளம்புதோமா…?” என முழித்துக்கொண்டு கேட்டவளை பார்த்து இதழ் வளைத்து சிரித்தவன், அவளது கையை பிடித்து சுண்டி இழுத்தான் விஷம பார்வையோடு…

அதை கண்டு நாணம் கொண்டு விழி தாழ்த்தி மன்னவன் இழுத்த இழுப்பிற்கு உடன் சென்று அருகில் நின்றவளின் நாடி பிடித்து உயர்த்தி அவளது விழியோடு விழி கலந்து, மெல்லிய குரலில்

நான் ரொம்ப நல்லவன் டி முட்டக்கண்ணி… ஆனா என்ன ரொம்ப கெட்டவனாக்குற…என்று அவளது கன்னத்தில் இதழ் பதித்தவன், “கொஞ்ச நேரம் வண்டி ஓட்டிட்டு வீட்டுக்கு போலாம்… இது தோப்பு… நம்ம காதல் நாலு செவுதுக்குள்ள தான் இருக்கணும் பப்ளிக்கல இல்ல…என ஒற்றை கண்ணை சிமிட்டி கூற

ம்பச்ச்…என செல்லமாக சிணுங்கி அவன் நெஞ்சில் தன் தளிர் கரங்களால் அடிக்கவும், அதை தன் கரத்தில் பற்றியவன் ஆசையாக அவளது விரலில் ஒரு முத்திரையை பதித்துவிட்டு அவள் அமர வழி விட்டான்… 

அவனை கண்கள் நிறைய பார்த்து மனதில் சேமித்தவள், அவனது புல்லட்டில் அமர்ந்து, அவனது கூலர்ஸை அணிந்துக் கொண்டு, “ம்ம்ம்… இப்ப போலாம்…என்க

அவளை பார்த்து சிரித்தபடி வண்டியை உயர்பித்தவன், ஆசை காதலி மனங்கவர்ந்த மனைவி அவனது கையணைப்பில் இணங்கி வளைந்து குழைந்து கொண்டிருக்க பொழுதை கழித்துக்கொண்டிருந்தான் கவியழகன்…

சில மணி துளிகள் அந்த தோப்பை சுற்றி வந்தவர்களை கலைக்கவென்ற வந்தது கவியின் ஃபோன் அழைப்பு… வண்டியை நிறுத்திவிட்டு, யாரென்று எடுத்து பார்க்க, அதில் அன்னையின் பெயர் ஒளிரவும், தன் சேட்டையை நிறுத்திவிட்டு அழைப்பை ஏற்றான்… 

சொல்லுங்க ம்மா…என்றவனின் கன்னத்தோடு கன்னம் உரசியவள் கை யை உயர்த்தி அவனது மீசையை பற்றி இழுத்து, வம்பு செய்துக்கொண்டிருந்தாள் குழலி எதை பற்றியும் கவலையின்றி….

“…….”

இல்ல ம்மா… ஒன்னும் பிரச்சினை இல்ல… அவ என்கூடதான் இருக்கா… கோவிலுக்கு போகணும்னு தோணுச்சு அதான் கூட்டிட்டு வந்தேன்… இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுல இருப்போம்…என்றவன் தன்னை சீண்டிக்கொண்டிருப்பவளை ஒற்றை கையில் அடக்கியபடி அன்னையுடன் பேசி முடித்தவன்

ஷ்ஷ்ஷ்… ராட்சஷி… ஃபோன் பேசுற வரை சும்மா இருக்க மாட்டியா…என போலி கோபத்தோடு கத்த

இருக்க மாட்டேன்…. என்னத்த பண்ணுவீக…என திமிராக தலையுயர்த்தி கேட்க

ஓஓஓ… மேடம் கேட்க மாட்டீங்களோ…என்றவன், “இனி கேட்படி…என்றவன் தன்முன் அமர்ந்திருந்தவளின் இடுப்பில் சட்டென கிச்சு கிச்சு மூட்ட ஆரம்பிக்க, பதறிவிட்டாள் குழலி… 

அவளது கண்களில் கண்ணீர் வழிய, போதும் போதும் என துடிக்க துடிக்க அவளுக்கு சிரிப்பு மூட்டியவன், “இனி வம்பு பண்ணி பாரு… அப்ப தெரியும் நான் யாருன்னு…என்ற மிரட்டளோடு அவளை விடுவிக்க, அவளோ வேக மூச்செடுத்து இளைப்பாற அவனது தோளிலேயே பின்புறமாக சாய்ந்து அமர்ந்தாள் கண்கள் மூடி…

அவளை குனிந்து பார்த்தவன் அவளது பக்கவாட்டு நெற்றியில் ஒரு முத்தம் பதித்து லேசாக அணைத்தபடி அமர்ந்தான் நிம்மதியாக கண்களை மூடி… தன்னவள் தனக்கு வைக்க போகும் மிகபெரிய ஆப்பை பற்றி தெரியாது இந்நிமிடத்தை அனுவனுவாக ரசித்தான் கவியழகன்… 

ஏன் அவளும் தான், இன்னும் சில தினங்களில் தன் வாழ்க்கையே புரட்டி போட போகும் சம்பவம் நடந்தேறும் என்று அறியாத பேதையவள் தன்னவன் மீது சாய்ந்து அந்த நிமிடங்களை ரசித்துக்கொண்டிருந்தாள்… 

தொடரும்….