அத்தியாயம் 15
ஆரோஹியின் மனதை கவரனும், அவள் தன்மேல் காதல் கொள்ள வேண்டும் என்பது மட்டுமல்ல குழந்தைகளும் இத்தனை நாட்கள் தந்தை இல்லாமல் ஏங்கித்தவித்த நாட்களுக்கு ஈடாக அவர்களோடு அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்றெண்ணினாலும், விஷ்வதீரனின் வேலை அவனை அவர்களிடம் ஒன்ற விடவில்லை.
அதற்க்காக அவன் எடுத்த முடிவுதான் காலையிலும், வீட்டுக்கு செல்ல முன்பும் அவர்களை பார்த்து விடுவது என்பதே, அதன் படி இரவில் வீட்டுக்கு வந்தவனை மருண்ட பார்வையோடு ஆரோஹி வரவேற்க குழந்தைகளை கொஞ்சியவன் சாப்பிடாமல் கிளம்பிச்சென்றிருந்தான்.
“பாய் பாட்டி” அஜய்யும் விஜய்யும் ஆயிஷாவிடம் விடை பெற்று பாடசாலை செல்ல வெளியே வர
“போயிட்டு வரோம் அத்த” என்று ஆரோஹியும் விடை பெற
“டாடி” என்ற குழந்தைகளின் குரல் கேட்டு ஒரு கணம் ஸ்தம்பித்தவள் “இவன் எதுக்கு வந்தான்” ஒரு வித படபடப்பு தோன்ற மறுகணம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வெளியே சென்றாள்.
அஜய்யும், விஜய்யும் அவன் இரு கைகளிலும் அமர்ந்தவாறு கதை பேசிக்கொண்டிருக்க
“அஜய், விஜய் லேட்டாச்சு சீக்கிரம் வாங்க” விஷ்வதீரனை கண்டுக்காது சொல்ல
பாடசாலை செல்ல ஆரோஹி அணிந்திருந்த சாதாரண கார்ட்டன் சேலையில் கூட அவள் பேரழியாக தோன்ற விஷ்வதீரனின் பார்வை அவள் மீது ரசனையாக படிந்தது.
அவனின் காதல் பார்வை அவளுள் ஏதோ செய்ய அந்த உணர்வை வெறுத்தவள், “என்ன வேணும் உனக்கு, காலங்காத்தால வந்திருக்க” ஆரோஹியின் குரல் எரிச்சலாக வர
“என் பொண்டாட்டியையும், புள்ளைங்களையும் ஸ்கூலுக்கு டிராப் பண்ண போலாம்னு வந்தேன்” முகத்தில் பெரியதொரு புன்னகையை பூசியவாறே சொல்ல
பல்லை கடித்தவாறே ஆரோஹி “எனக்கு எங்க வேலைய பாத்துக்க தெரியும். நீ உன் வேலைய பாரு”
அவளின் பேச்சை பொருட்படுத்தாது “அஜய், விஜய் டாடி கூட ஸ்கூல் போலாமா?”
அவன் கன்னத்தில் முத்தமிட்ட இருவரும் ஒன்று சேர்ந்து “ஹே..” எனக் கத்த இப்போ என்ன செய்வது என்று ஆரோஹி குழம்ப வெற்றிப் பார்வையை அவள் மீது செலுத்தினான் விஷ்வதீரன்.
அஜய்யும், விஜய்யும் அவனது ஜீப்பில் ஏறப்போக “என்னது போலீஸ் வண்டியிலா? நாம என்ன அக்கியூஸ்ட்டா? போலீஸ் வண்டில ஸ்கூல் போக” ஆரோஹி படபடவென பொரிய குழந்தைகளும் அவளை ஏக்கமாக பார்த்தனர்.
அவள் வீண் பிடிவாதம் பிடித்து வர மறுப்பதை நொடியில் புரிந்துக் கொண்ட விஷ்வதீரன்
“போலீஸ் வண்டியில இல்ல உன் வண்டில போலாம் நான் ட்ரைவ் பண்ணுறேன்” என்று புன்னகை முகமாகவே புருவம் உயர்த்தியவன் சாவிக்கு கையை நீட்ட
“இப்போ நீ என்னடி பண்ண போற” என்று விஷ்வதீரன் சவால் விடுவதை போல் ஆரோஹிக்கு தோன்றியது. குழந்தைகளும் ஆவலாக துள்ளிக் குதிக்க எப்படி மறுப்பதென்று தெரியாமல் குழந்தைகளுக்காக என்று மனதை சமாதானப் படுத்தி ஆரோஹி சாவியை அவன் கையில் கொடுத்திருந்தாள்.
அவளின் முகபாவத்தை பாத்தவனுக்கோ “என்னடி உன் பிரச்சினை?” என்று கண்ணால் கேட்டவன் அவனது வாகன ஓட்டுனரை அழைத்து பின்தொடருமாறு சொல்லி, வண்டியில் ஏறி வண்டியை பாடசாலை நோக்கி கிளப்பி இருக்க அஜய்யும், விஜய்யும் அவனிடம் புதிய பாடசாலையை பற்றி சொல்லலானார்கள்.
ஆரோஹி பின்னாடி அமர்ந்தவாறு அவனை வசைப்பாட கண்ணாடியூடாக அவளை பார்த்து சிரித்தவன் கண்ணடிக்க, அவனது செய்கைகள் யாவும் அவளின் மனதை கவர “எதுக்கு வம்பு” என்று வெளியே வேடிக்கை பார்க்கலானாள்.
“தீரா உன் பாடு திண்டாட்டம் தான்” என்று முணுமுணுத்தவன் வண்டியை பாடசாலையின் உள்ளே சென்று பாக்கிங்கில் நிறுத்த அஜய்யும் விஜய்யும் அவன் கன்னத்தில் முத்த மீட்டு விடை பெற தலைமை ஆசிரியர் விஷ்வதீரனை கண்டு
கொஞ்சம் பயம் கலந்த குரலிலேயே “சார் நீங்களே இங்க வந்திருக்கிறீங்க, என்ன விஷயம்”
“ஆரோஹி என் வைப். பசங்கள டிராப் பண்ண” வந்தேன் என்று சொல்ல அவனுடன் சில நிமிடங்கள் பேசியவர் விடை பெற
“என்ன நினைச்சி கிட்டு இருக்க உன் மனசுல?” கோபமாக ஆரோஹி கேக்க
“உன்ன தாண்டி என் பொண்டாட்டி. அதுவும் பத்து வருஷமா நினைச்சி கிட்டு இருக்கேன்” என்று கண்சிமிட்ட
அவனுக்கு பதில் சொல்ல பிடிக்காமல் ஆரோஹி விலகி நடக்க அவளின் கையை பிடித்து நிறுத்தினான் விஷ்வதீரன்.
“விஷ் கைய விடு, என்ன பண்ணுற? இது ஸ்கூல்” சாதாரணமாக பிடித்திருந்தாலும் அது உறுதியான பிடியாகவே இருந்தது.
“அப்போ வீட்டுக்கு வந்து இதெல்லாம் பண்ணு னு சொல்லுறியா?” என்ன பேசினாலும் குதர்க்கமாக பேசும் அவனை வெட்டவா குத்தவா என்று பார்த்தவள் அவனிடமிருந்து கையை விடுவித்துக் கொள்ள போராடினாலும் அது முடியாமல் போகவே
“இப்போ உனக்கு என்ன வேணும்?” அவனை இங்கிருந்து அனுப்பினால் போதும் என்ற எண்ணத்தில் கேக்க
“முத்தம் கேட்டா குடுப்பியா? ஸ்கூல்னு மறுத்துடுவ” குறும்பாக அவன் சொல்ல ஆரோஹியின் கண்ணில் நீர் கோர்த்தது
“சே இதுக்கு இவ இப்போ டம தொறக்குறா” என்று பார்த்தவன் “ஆரா சாரிடி கை வலிக்குதா?” என்று அவன் பிடித்திருந்த கையை தளர்த்தி தடவி கொடுக்க கையை இழுத்துக் கொண்டவள் உள்ளே சென்று மறைந்தாள்.
“விஷ்வா பொறுமையா கையாளனும்னு அவள கண்டதும் ரொம்பதான் சீன்டுற. என்ன பண்ண போறாளோ?” மனம் கூவ பாடசாலையிலிருந்து வெளியே வந்தவன் வண்டியில் ஏறினான்.
வானே வானே வானே
நானுன் மேகம் தானே
என் அருகிலே
கண் அருகிலே
நீ வேண்டுமே
மண் அடியிலும்
உன் அருகிலே
நான் வேண்டுமே
சொல்ல முடியாத காதலும்
சொல்லில் அடங்காத நேசமும்
என்ன முடியாத ஆசையும்
உன்னிடத்தில் தோன்றுதே
நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
நீதானே பொஞ்சாதி
நானே உன் சரிபாதி
******************************************************************
“இந்த குட்டச்சி எதுக்கு நம்மள பார்க்குக்கு வர சொன்னா?” தீரமுகுந்தன் புருவம் நீவியவாரே பிங்கிக்காக காத்திருந்தான்.
பிங்கி கண்விழிக்கும் போது நேரம் பதினொன்றை தாண்டி இருந்தது “இவ்வளவு நேரமா தூங்கினேன். என்ன புஷ்பா டார்லிங் குரல் கேக்கவே இல்ல. பார்ட்டிக்கு போய் நடு ஜாமத்துல வந்ததுக்கே விளக்குமாத்தால விளாசுவா. இவ்வளவு நேரம் தூங்கி இருக்கேன் ஒண்ணுமே சொல்லல” என்று மனதுக்குள் புலம்பியவள் குளித்து விட்டு கீழே செல்ல அவளுக்கு பிடித்த எல்லா வகையான உணவுகளும் மேசையில் தயாராக இருந்தன.
“இன்னைக்கு என் பர்த்டே கூட இல்லையே” என்று முணுமுணுத்தவள் “என்னப்பா பேங்க்குக்கு போகலையா” என்றவாறே சாப்பாட்டு மேசையில் அமர புஷ்பா அவளுக்கு பாத்து பாத்து பரிமாறினாள்.
“என்ன புஷ்பா டார்லிங் இன்னைக்கி ராசி பலன்ல என்ன போட்டிருக்கு? கூடிய சீக்கிரத்துல நான் மேல போய்டுவேன்னு போட்டிருக்கா?”
“வாய கழுவுடி, கூறுகெட்ட கழுத்த, நல்ல நாள் அதுவுமா?” புஷ்பா பிங்கியின் தலையில் கொட்ட
“வதனி என்ன பேச்சு இது, புஷ்பா நீயும் பேசாத” தங்கதுரை இருவரையும் அதட்ட
“உங்க பொண்ணு கிட்ட நீங்களே சொல்லுங்க” புஷ்பா முறிக்கிக் கொள்ள
கேசரியை வாயில் திணித்தவாறே பிங்கி இருவரையும் மாறி மாறி பார்க்க
“வதனி உனக்கு ஒரு வரன் வந்துருக்கு பேசி வச்சு ஒரு வருஷம் இருக்கும். நம்ம சொந்தம் தான். அம்மாக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு, உன்னையும் பாத்திருக்காங்க, அவங்க சூழ்நிலை இப்போ சீக்கிரம் கல்யாணத்த வைக்கணும்னு சொல்லுறாங்க” தங்கதுரை பேசிக்கொண்டே போக கேசரி பிங்கியின் தொண்டையில் இறுகி இரும ஆரம்பித்தாள்.
அவளின் தலையை தட்டி தண்ணீர் புகட்டிய புஷ்பா “மாப்புள போட்டோவ உன் ரூம்ல வச்சிருக்கேன் பாரு” என்று சொல்ல சாப்பிடுவதையும் நிறுத்தியவள் அறையினுள் புகுந்திருந்தாள்.
“கல்யாணம் வேணாம்னு துள்ளுவானு பாத்தா மாப்புள போட்டோவ பார்க்க இந்த ஓட்டம் ஓடுறா” புஷ்பாவின் சந்தோச குரல் காதில் கேட்க கண்ணில் வழியும் நீரை கண்டு பெற்றவர்கள் கேள்வி கேப்பார்களோ என்று அஞ்சியவள் ஓடி வந்து கதைவடைத்து ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.
எதுக்குடி இப்போ அழுது கரையிற? கல்யாணம் தானே பேசி இருக்கிறாங்க, முதல்ல போய் அவன் கிட்ட பேசு, அவன விரும்புறத சொல்லு” மனசாட்ச்சி குரல் கொடுக்க தீரனுக்கு அழைத்து பார்க்கிற்கு வரும் படி கூறியவள் அவனை காண புறப்பட்டாள்.
ஒரு குருட்டு தைரியத்தில் தீரமுகுந்தனை அழைத்து சந்திக்கணும்னு சொன்னாலும் காதலை அவனிடம் எப்படி சொல்வது என்று குழம்பியவாறே வீட்டிலிருந்து புறப்பட்டவள், தான் செய்வது சரியா? தவறா? “நீங்க பாக்குற மாப்பிளையையே கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று புஷ்பாவிடம் சத்தியம் செய்து கொடுத்து விட்டு இப்போது காதல் என்று போய் அவர்கள் முன் நின்றால் என்ன சொல்வார்களோ? தீரமுகுந்தன் தனது காதலை ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்ன செய்வது? குழம்பிய மனநிலையிலேயே வண்டியை கிளம்பினாள். மழையும் மெதுவாக தூரத்தொடங்கியது.
எப்படி நான் சொல்வேன் அட எப்படி நான் சொல்வேன்
என் காதலை எப்படி நான் சொல்வேன்
அவன் கண்ணை பார்த்து சொல்வேனா
இல்லை மண்ணை பார்த்து சொல்வேனா
அவன் எதிரில் நின்று சொல்வேனா
இல்லை ஒழிந்து கொண்டு சொல்வேனா
நான் பேச்சின் நடுவே சொல்வேனா
இல்லை மௌனம் காத்து சொல்வேனா
நான் சுதத் தமிழில் சொல்வேனா
இல்லை ஆங்கிலத்தில் சொல்வேனா
அட சொல்லித்தான் விடுவேனா
இல்லை சொல்லாமல் தவிப்பேனா…
காதலை யாரது முதலில் சொல்வது
நீயா இல்லை நானா
அந்த பார்க்கினில் நுழைந்த பிங்கி கண்களை சுழற்றி விட அவளின் வரவை எதிர் பார்த்து காத்திருந்த தீரமுகுந்தன் தூறலுக்கிடையிலேயே மரத்தடியில் நின்று கொண்டு யாருடனையோ அலைபேசியில் பேசிக்கொண்டிருப்பதை கண்டு கால்கள் பின்ன மெதுவாக அடியெடுத்து வைத்து அவனை நெருங்கினாள்.
அந்த தூரலை ரசித்தவாறே மழைநீரை கையில் ஏந்தியவாறு அவன் இருந்த இடது பக்கத் தோற்றம் அவள் மனதை நிரப்ப மனதில் உள்ள ரணம் கூட கரைவது போல் தோன்றியது.
அவளின் இதயமோ தாறுமாறாக அடிக்க, வியர்வையில் குளித்து படபடப்பாக இருக்க, மழைத்தூரலின் குளிரும் மேனியில் பட்டு இன்ப அவஸ்தையை கொடுக்க, கையை பிசைந்தவாறே அவனை நெருங்க அவனின் குரல் ஓங்கி ஒலித்தது.
“அப்பா அதான் கல்யாணம் பண்ண சரினு சொல்லிட்டேனே, உங்க மருமகளுக்கு என்ன வேணுமோ அத அவ விருப்ப படி அவ கூட போய் எடுங்க, இதுக்கு எதுக்கு நான் வரணும்? சாரிய பத்தி எனக்கு என்ன தெரியும், அவளுக்கு புடிச்சதே எடுங்க, விஷ்வாக்கு என்ன எடுக்கிறீங்களோ அதையே எனக்கும் எடுங்க. சும்மா எப்ப பாத்தாலும் எல்லாத்துக்கும் போன் பண்ணி கிட்டு”
அவன் சொன்னது காதில் விழ இவ்வளவு நேரமும் இருந்த பதட்டம் நீங்கி பிங்கியின் மனம் கனக்க ஆரம்பித்தது. “கல்யாணமா? அவனுக்கு கல்யாணம் முடிவாகிரிச்சா?” அதிர்ச்சியும் கவலையும் ஒன்று சேர தாக்க ஸ்தம்பித்து நின்று விட்டாள். அவன் மேலே பேசியது கூட காதில் விழ வில்லை. கூர்ந்து கேட்டிருந்தால் கூட கல்யாணத்தில் அவனுக்கு பெரிதாக ஈடுபாடு இல்லாததை உணர்ந்திருந்திருப்பாள்.
சுயநினைவுக்கு வந்தவள் தீரனை தேட அங்கே அவன் இல்லை. மழையில் நனைந்தவாறே சுற்றிமுற்றி தேட அந்த பூங்காவில் அவன் இல்லவே இல்லை.
மழையும் வேகமாக பொழிய மரத்தடியில் ஒதுங்கியவாள் , தீரனுக்கு அழைப்பை ஏற்படுத்த அது அடித்துக் கொண்டிருந்ததே தவிர அழைப்பு இணைக்கப் படவில்லை. “என்ன ஆச்சு? ஏன் போன் எடுக்க மாட்டேங்குறான்” குழம்பியவள் அவனுடன் பேசியே ஆகா வேண்டும் என்ற முடிவோடு பலதடவை அழைப்பை ஏற்படுத்த அவன் பதில் அளிக்கவில்லை.
அவள் அலைபேசி குறுந்செய்தி வந்ததாக சொல்ல அதை திறந்தவளுக்கோ “முக்கியமான வேலையா போறேன். ஐ வில் கால் யு” என்றிருக்க கோபம் தலைக்கேற விறு விறுவென பூங்காவை விட்டு வெளியேறி இருந்தாள் பிங்கி.
அந்த பேய் மழையில் ஓதுங்க கூட தோன்றாமல் பிங்கி வண்டியை அதன் போக்கில் செலுத்திக் கொண்டிருந்தாள். அவள் எண்ணமெல்லாம் தீரன் பேசியத்திலேயே இருக்க “அப்போ நிஜமாகவே அவனுக்கு கல்யாணமாக போகுதா? காதல் கல்யாணமா இருக்குமோ?”
“ரொம்ப முக்கியம்” மனசாட்ச்சி அவளை குட்ட
தாங்க முடியாத வலி நெஞ்சை இறுக்க கண்களில் வழியும் கண்ணீரை கூட துடைக்க தோன்றாமல் மழையிலேயே நனைந்தவாறு வீடு சென்றாள். படபவென பேசும் பிங்கி கூட காதல் வைரஸ் தாக்கியதால் நிலைகுலைந்து தான் போனாள்.
கணங்கள் மோதலால் , இது வந்த காதலா …
நினைத்தேனே … நான் நினைத்தேனே …
ஊசி தூறலா … நீ பேசு காதலா ,
தவிதேனே … நான் தவிதேனே …
காற்றாய் மாறி காதலிக்கிறேன் , கண்ணா ஒருமுறை சுவாசம் கொள் …
நானும் உன்னை சம்மதிக்கிறேன் , இன்றே ஒருமுறை வார்த்தை சொல் …
மன்னவனே , மன்னவனே , உயிரில் உயிராய் கலந்தவனே …
ஆரோஹி உள்ளே செல்லலாமா வேண்டாமா என்று மனதோடு பட்டிமன்றம் நடத்தி விட்டே உள்ளே சென்றாள்.
“சார் எபாய்ன்ட்மென்ட் இல்லாம யாரையும் பார்க்க மாட்டாரு, என்னனு தெரியல உங்க பேர சொன்னதும் உள்ள வர சொன்னாரு” முதலமைச்சரின் பி.ஏ அவளை அழைத்து சென்று சோபாவில் அமரவைக்க உள்ளே இருந்து அவரும் வந்தார்.
அவரை கண்டு எழுந்து வணக்கம் வைத்தவளை அமரும் படி செய்கை செய்து தானும் அமர அவரிடம் விஷ்வதீரனை பற்றி எப்படி சொல்வதென்று தயங்க
“என்னம்மா பிரச்சினை?” அவர் அமைதியாக அவளின் முகத்தை பார்த்து கேக்க
ஆரோஹி அவரை ஒரு நேர்மையான மனிதன் என்றும், அதிகாரிகள் செய்யும் தவறுக்கு நொடியில் தண்டனை பெற்றுக் கொடுப்பார் என்றும், விஷ்வதீரனின் மீது வேலையின் அலட்ச்சிய போக்குக்காக நடவடிக்கை எடுக்க இருப்பதாக டிவியிலும், பத்திரிக்கையிலும் வந்த செய்திகளை நம்பி இங்கே வந்து விட்டாள்.
“சொல்லுமா? என்ன பிரச்சினை?”
இவரால் மாத்திரமே தனக்கு உதவ முடியும் என்று முடிவு செய்தவள் விஷ்வதீரன் தன்னை கல்யாணம் பண்ணிக்க கொள்ள சொல்லி வற்புறுத்துவதாக மாத்திரம் சொல்ல,
“நா என்ன பண்ணனும்னு நினைக்கிற?”
“அவன்” என்றவள் சுதாரித்து “அவர் என் வாழ்க்கைல குறிக்கிடாம இருந்தா போதும்” என்று ஆரோஹி சொல்ல
அணிந்திருந்த கண்ணாடியை கழற்றி அதன் நுனியை வாயில் வைத்தவாறு யோசித்தவர், எழுந்து உள்ளே சென்று சில பத்திரங்களை எடுத்து வந்து அவள் முன் வைத்தவர்
“இதுல மட்டும் ஒரு சைன் பண்ணிடுமா? மத்ததெல்லாம் தானா நடக்கும்” என்று சொல்ல
தங்களுடைய வாழ்க்கையில் அவனின் தொந்தரவு இல்லாமல் இருந்தால் போதும் என்று எண்ணியவள் யோசிக்காமல் அவர் சொல்லும் இடங்களில் கையொப்பமிட்டாள்.
அவள் கையொப்பமிட்ட அடுத்த நொடி விஷ்வதீரன் சுவிங்கத்தை மென்றவாறு உள்ளே நுழைய
“வாங்க சார் வாங்க, உங்கள பத்தி கம்பளைண்ட் பண்ணத்தான் வந்திருக்கிறாங்க” என்று முதலமைச்சர் கிண்டலாக சொல்ல ஆரோஹி அமர்ந்திருந்த சோபாவில் அவளோடு ஒட்டிக்கொண்டு அமர்ந்தவன் அவள் கையொப்பமிட்ட ஆவணங்களை சரி பார்த்து தானும் கையொப்பமிட ஆரோஹி பட்டென்று எழுந்து நின்று கொண்டாள்.
“டில்லியில் எங்களுக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் நடந்ததா அதுவும் ஆறு வருடங்களுக்கு முன் நடந்ததா ஆவணங்கள் வேணும்” அன்று முதலமைச்சரை சந்தித்த போது விஷ்வதீரன் கேட்டது இது தான்
“அதெல்லாம் ஒரு பிரச்சினையில்ல,ஆனா எதுக்கு தாத்தா கிட்ட பொய் சொல்லணும் உண்மையா சொல்லி இருக்கலாமே”
“நான் போதைல இப்படி ஒரு காரியத்தை பண்ணி இருந்தாலும் அத அவரால ஏற்றுக் கொள்ள முடியாது. இதுல ரெண்டு குழந்தைகளை வேற பெத்து வச்சி அவனுங்கள பத்தி தெரியாமளையே இருந்திருக்கிறேன் என்று சொன்னா என்ன மன்னிக்கவும் முடியாம, ஏற்றுக் கொள்ளவும் முடியாம அவர் மனசோடஞ்சி போய்டுவாரு. பொய் சொன்னாலும் யாரும் மனம் நோக கூடாதுன்னு தானே சொல்லுறேன். அது மட்டுமில்ல நாளைக்கு யாரும் என் மனைவிய பத்தி தப்பாவும் பேச கூடாது நானே பண்ணி இருப்பேன் அதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும்னு தான் உங்க கிட்ட வந்தேன்” என்று விஷ்வதீரன் சொல்லி முடிக்க
விஷ்வதீரன் சொன்னது போல் டில்லியில் விஷ்வதீரனுக்கும், ஆரோஹிக்கும் ஆறு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது போல் ஆவணங்களை வரவழைத்தவர்
“விஷ்வா நீ சொன்னது போல் ஆவணங்கள் வந்தாச்சு, நீயும் உன் மனைவியும் கையொப்பமிட்டு, ரெண்டு சைனையும் ஸ்கேன் பண்ணி அனுப்பி வச்சா போதும், இப்போ எல்லாமே கம்பியூட்டர் மயம் என்பதால அத என் ஆளுங்க சரியா சேவ் பண்ணிடுவாங்க” என்று அலைபேசி வழியாக விஷ்வதீரனுடன் தொடர்ப்பில் இருந்த போது தான் அவருடைய பிஏ வந்து ஆரோஹி வந்திருப்பதாக கூற விஷ்வதீரனுடன் தொடர்ப்பில் இருந்தவாறே என்ன, ஏது என்று விசாரித்தவர், உள்ளே சென்று அவன் சொல்படி ஆரோஹியிடம் கையொப்பம் பெற்று விட்டார்.
“ஹாய் பொண்டாட்டி இங்க என்ன பண்ணுற? என்ன சார் நீங்க என் பொண்டாட்டி வந்திருக்கா குடிக்க ஒண்ணுமே கொடுக்கலயா?”
“சார் பாத்தீங்களா? உங்க முன்னாடியே எப்படி பேசுறார்னு” ஆரோஹி எகிற
“இதுக்குதான் பா நான் கல்யாணமே பண்ணிக்கல” அவர் சத்தமாக சிரிக்க
விஷ்வதீரனோ “காதல் தோல்வினு சொல்லுங்க, தாத்தா எல்லாம் சொல்லிட்டாரு” என்றவாறே சிரிக்க ஆரோஹி அவர்களை அதிர்ச்சியாக பாத்திருந்தாள்.
“என்ன பொண்டாட்டி ஒன்னும் புரியலயா? டிவி நியூஸ பாத்து இப்படி ஏமாந்துட்டியே! நாமெல்லாம் ஒண்ணுக்குள்ள ஒன்னு” என்றவன் கையிலிருந்த ஆவணத்தை காட்டி இது என்னனு தெரியுமா? நமக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் நடந்துக்கான சான்று. இத உன் சித்தி கைல கொடுத்தா போதும், உன் சைன நானே பண்ணணுமோனு நெனச்சேன், நீயே சைன் பண்ணி முறைப்படி நம்ம கல்யாணத்த அங்கீகரிச்சிட்ட” என்று கண்சிமிட்ட
“இவன் பண்ணது தப்புதான் மா அதுக்காக பசங்கள இவன் கிட்ட இருந்து பிரிக்க நினைக்கிறது ரொம்ப தப்பு, விஷ்வா தங்கமான பையன், அவன புரிஞ்சி வாழ்க்கையை வாழ பாரு” என்று உள்ளே செல்ல ஆரோஹி வாயடைத்து அதிர்ச்சியில் அமர்ந்து விட்டாள்.
நிலவை உரசும் மேகம்
அந்த நினைவை நினைத்தே உருகாதா
உயிரை பருகும் காதல்
அது ஒரு நாள் உனையும் பருகாதா
நீ முடிந்த பூவிலொரு இதழாய்
வாழ்ந்து விட்டு போவதற்கு நினைத்தேன்
நீ நடந்த மண்ணெடுத்து சிலனாள்
சந்தனத்தின் வாசம் அதில் முகர்ந்தேன்
நிழல் தீண்டும் போதிலும் மனதோடு வேர்க்கிறேன்
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா
கண்ணுக்குள் பாரம்மா நீயின்றி யாரம்மா
கோபங்கள் இன்னும் இங்கு ஏனம்மா