Episode 11
காரை வீட்டுக்குள்ளே கொண்டு போய் நிறுத்தி விட்டு,இறங்கி கதவைச் சாத்தும் போது தான் உள்ளே இருந்த மருந்து வகைகளுடன் இருந்த பொலுத்தீன் கவரை கண்டவன் அவளது மருந்து வகைகளை அவளிடம் கொடுக்கவில்லை என உணர்ந்து இப்போது எப்படிப் போய் இதைக் கொடுப்பது என யோசித்துக் கெண்டே
அகிலுக்கு போன் பண்ணி அவளது போன் நம்பரை மெசேஜ் பண்ணுமாறு பணித்தவன் உள்ளே இருந்த மருந்துப்பையை எடுத்துக் கொண்டு உள்ளே போனவனைக்கண்ட தாயார் பதறி விழுந்தடித்து கொண்டு வந்து “தம்பி என்ன? என்ன? நடந்தது.” என்று கொஞ்ச நேரத்திற்குள் வீட்டையும் வீட்டிலிருந்தவர்களையும் ரணகளப்படுத்தி விட்டார்.
“அம்மா… ரிலாக்ஸ் ரிலாக்ஸ் என்றவன் சின்னக்காயம் தான் இரண்டு மூன்று நாளில் ஆறிவிடும்.” என்றான்.
“தைய்யல் போட்டிருக்கிறதா? எத்தனை தையல் போட்டிருக்கிறது.என வினவிய தாயிடம் தையல் போடவில்லை அம்மா வெறும் பன்டேஜ் மட்டும் போட்டிருக்கிறது.” என்று மனசார பொய் சொன்னான்.
இல்லையெனில் வீட்டிலிருப்பவர்களை தூங்கவிடவும் மாட்டார். தானும் தூங்க மாட்டார். “என் பிள்ளைக்கு அடிபட்டிருக்க உங்களுக்கு தூக்கமா? போங்கள் போய் அவனருகில் அமருங்கள்.”என தந்தையை ஒரு வழிப்படுத்தி விடுவார் என்பதனால் அவன் உண்மையை மறைத்தான்.
“சரி தம்பி சாப்பிடுகிறாயா?” என்ற தாயிடம்
“அம்மா நான் சாப்பிட்டு விட்டேன். நீங்களும் அப்பாவும் சாப்பிட்டு விட்டீர்களா?” என வினவ ஆம் என்பது போல தலை அசைத்த தாயிடம்
 “நான் என் அறைக்குச் சென்று ப்ரஸ்அப் ஆகிக் கொண்டு வருகின்றேன்.” என கூறிக்கொண்டு
அவன் முன்னால் இருந்த மருந்துகள் இருந்த பையை தூக்கிக்கொண்டு மேலே தன் அறைக்குப் போனான்.
அங்கிருந்த டேபிளல் கையிலிருந்த மருந்துப்பையை வைத்து விட்டு கையை நனையாதவாறு பொலுத்தீன் பை ஒன்றால் சுற்றிக்கட்டியவாறு வோஸ்றூமிற்கு சென்றவன் குளித்துவிட்டு டவலைக் கட்டியபடி வெளியே வந்தவன் கபேட்டில் அடுக்கியிருந்த லுங்கி ஒன்றை எடுத்து உடுத்திக்கொண்டு தன் றூம் பின்னால் இருந்த ரெரசில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து அவளது வீட்டைப்பார்த்தவன்
அவளது வீட்டு கீழ்த்தளத்தில் வெளிச்சம் தெரிந்தது. மேல்தளம் இருட்டாக இருந்தது. தியா மேலே தான் இருக்கிறாளோ.இல்லை கீழே இருக்கிறாளோ? என்று தெரியவில்லையே…! என யோசித்தவனுக்கு கைவலி கொஞ்சம் கொஞ்சமாக கூடுவதை உணர்ந்தவன்
வேகமாக உள்ளே சென்று மருந்துப்பையை எடுத்து மருந்துகளை விழுங்கி தண்ணீர் குடித்துக்கொண்டவனின் நினைவுகள் அவளிடமே இருந்தன.
அப்படியெனில் அவளுக்கும் வலி அதிகரிக்க கூடும் என தோன்றும் போதே அப்போதே அவளிடம் திரும்பிப்போய் கொடுத்து விட்டு வந்திருக்க வேண்டும் வராது விட்ட அவன் மடத்தனத்தை எண்ணி வருந்தினான்.
இப்போது என்ன செய்யலாம் என நினதை்தவன் கண்களில் சார்ஜில் இருந்த போன் கண்ணில் பட்டது. அதை எடுத்து அகில் அனுப்பிய  தியாவின் நம்பரை டயல் செய்ய எத்தனிக்கவும் அவனது அறைக் கதவு தட்டப்பட்டது.
அவன் போனை வைத்து விட்டு கதவைத் திறக்கவும் வெளியில் நின்றது அவனது தமயன் கதிரவன்.
“உள்ளே வா” என சிநேகமாய் புன்னகைத்தவன் வழிவிட்டு நின்றான்.
உள்ளே வந்த அண்ணன்காரன் “என்னடா வழமை போல அடிதடியா? உனக்கு இந்த கோபம் எங்கிருந்து வருகிறதோ தெரியவில்லை….!” என படபடக்கவும்.
தமயனின் பதட்டத்தை குறைக்கும் வகையில் “கூல் அண்ணா நான் யாா் கூடவும் சண்டைக்கு போகவில்லை. ஆபிசில் ஒரு பொண்னைப்பார்த்து கண்ணடிச்சேன் அவதான் கண்ணாடி கிளாசை எடுத்து ஏத்திட்டா.ஐ லைக் இட் அண்ணா.ரொம்ப தைரியமான பொண்ணு தானே அவ” என்றான்.
“என்னடா இப்பவல்லாம் பொண்ணுங்க கூடவும் வம்பு வளர்க்க ஆரம்பிச்சிட்டியாடா? கவனம்டா… ! ஈவ்டீசிங் கேசில தூக்கி மாதக் கணக்கில வைச்சிடுவாளுக….பார்த்து நடந்துக்கோ அவ்வளவு தான் சொல்லுவேன் என்ற தமயன் ஆமாம் நீ பொண்ணுங்களைப்பார்த்து ஜொள்ளு விடுபவன் இல்லையே…. அப்புறம் ஏன்? என யோசித்து விட்டு
அந்தபொண்ணு அவ்வளவு அழகா இருந்துச்சோ?” என்றான் கதிர்.
“அழகான பொண்ணா இருந்தா கண்ணடிக்கணுமா? அவ என் மனசுக்கு பிடிச்ச பொண்ணு அவகிட்ட பிடிச்சதே அவ தைரியமும்,கோபமும் தான்.நான் எதிர் பார்க்கவேயில்லை அவ இப்படி மாறியிருப்பா என்று நானே அவளை தேடிப்போகவிருந்தேன். ஆனா அவ என் இடத்திற்கு வந்து நிற்கிறா? இந்த இரண்டு நாளில் நான் நினைக்காத எல்லாம் நடந்துடுச்சு என்றால் நீ நம்புவியோ தெரியாது?” அண்ணா.என்றான்.
என்னடா….? சொல்கிறாய்……?உனக்கு  மனசுக்கு பிடிச்ச பொண்ணு என்றால் அவள் ஒருத்தி தான்.அது தியா என்ற கதிரவன் ஆச்சரியத்தாடு அப்ப நீ தியாவைப் பார்த்தியா? உன் ஆபிசிலேயே வேலை செய்யுறாளோ? ஏன்டா? ஏன்? அவளை இங்கே கூட்டிக்கொண்டு வரவில்லை.” என ஆயிரம் கேள்விகளை கதிரவன் கேட்க
அனைத்திற்கும் செந்தூரின் வெறித்த பார்வையுமே பதிலாக கிடைத்தன. இவனைப்பார்த்த தமயன் ஆதரவாக அவன் தோளில் கைபோட்டு அணைத்துக் கொண்டவன்.
“தியா நீ கூப்பிட்டும் வரமாட்டன் என்ற விட்டாளா? வேணும் என்றால் நானும் உன் அண்ணியும் போய் அவளிடம் பேசவா ?” என்றான்.
அண்ணா அப்படி ஏதும் செய்து விடாதே…! ஏனென்றால்  என்னைப்பார்த்ததும் அவளிற்கு யார்? என்று கூடத்தெரியவில்லை. நான் சொல்லும் வரை நீங்களாக எதுவும் செய்ய வேண்டாம்.என்றவன் அண்ணா கொஞ்சநேரம் பொறுத்துக் கொள்.” என்றவன் தியாக்கு அழைப்பை ஏற்படுத்தினான்.
அன்றைய நாள் தலைவலி,அன்று நடந்த கலாட்டவில் ஏற்பட்ட காயம் என்பவற்றால் ஏற்பட்ட உடல் சோா்வு காரணமாக அவளது றூமிற்கு வந்தவள் கையிலிருந்த பையை போட்டுவிட்டு கதவை மூடிவிட்டு உள்ளே வந்து நிலத்தில் சரிந்தவள் தான் அப்படியே உறங்கிப்போனாள்.
நேரம் செல்ல செல்ல அவளது உடம்பு விறைப்புற்று சூடு அதிகரித்து காய்ச்சல் தீ பரவுவது போல் பரவி அவள் உடல் தூக்கிப்போட்டு அவளை அறியாது அவளது அனத்திக்கொண்டிருந்தாள்.
அப்போது தான் அவனது ஹோல் அவளுக்கு வந்தது  அது அவளது அரைகுறை தூக்கத்தை முற்றாக கெடுத்தது. என்ன நடக்கின்றது என்று புரியாது தள்ளாடியபடியே எழுந்து வந்து போனை எடுத்தவள் புதிய நம்பராக இருக்கவும் யாரென்று தெரியாவில்லையே என நினைத்துக்கொண்டு ஆன்சர் பண்ணியவளிற்க்கு பேச்சு வரவில்லை
அதற்குள் மறுமுனையில் இருந்து அவன் “தியா தூங்கிவிட்டியா…….நீ மேல்மாடியில் தானே இருக்கிறாய் என விசாரிக்கவும்”
அவள் தொண்டையை செருமிக் கொண்டு “ம்” என்றாள்.
“ஓகே தியா நான் மாடிக்கு வந்து உன் கதவை தட்டுகிறேன் திற.” என்றவன் அவள் பதில் பேசுமுன் போனைக் கட் பண்ணினான்.
‘இவனுக்கென்ன லூசா இந்த நேரத்தில் இங்கே எதுக்கு வாறானாம்…. யாரும் பார்த்தா என்ன நினைப்பார்கள்.அவனுக்கென்ன ஆம்பிளை வீடு இல்லையென்றால் வீதியிலும் படுக்கலாம். நான் இந்த வீட்டையே எவ்வளவு கஸ்ரப்பட்டு ரென்ட்க்கு வாங்கினேன்.இவன் என்னவென்றால் அதை ஈசியா கலைச்சு விடுவான் போல் இருக்கிறதே……’ என்று நினைத்த வண்ணம் இருந்தவளது கைகள் வலியில் விறுவறுத்தன.
இறுக்கமாக போடப்பட்ட பன்டேஜ் இரத்தவோட்டத்தை குறைக்கவும் கை விரல்கள் பத்தும் மெத்து மெத்தென்று பொம்மைக்குட்டி போல வீக்கமடைந்து கொண்டிருந்தது.அவள் வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள்.
“அண்ணா இங்கேயிருந்து பார்த்தால் தெரியும் ஓற்றைமாடி வீடு தெரிகிறதா? என்றான்.
“தெரிகிறது என்ற கதிரவன் அதை விடு. இப்போது நீ தியாவுடனா போன்ல கதைத்தாய்.” என்றான் கதிரவன்.
ஆ…ஆமென தலையசைத்தவன் “அண்ணா அந்த வீடு வரைக்கும் போய் வரலாமா? என்னோடு வாறியா?” என்றான்.
“சரிடா உன் அண்ணிக்கு போன் போட்டு சொல்லி விட்டு வருகின்றேன் என்று கூறிக்கொண்டு தன் கைப்பேசியை எடுத்துக்கொண்டு தனியே  சென்று மனைவியிடம் பேசிவிட்டு வந்தவன் சரிடா வா போகலாம்.” என கூற
செந்தூரும் மருந்துப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.கீழே இறங்கி வந்தவர்களை தாய் எங்கே போகிறீர்கள் என்பது போல பார்க்க
“அம்மா வெளியே ஒரு சின்ன வேலை போய் விட்டு வரகின்றோம். நீங்கள் காத்திருக்க வேண்டாம் போய் தூங்குங்கள்.” என்றவர்கள் கிளம்பினார்கள்.
அண்ணா அந்த வீட்டுக்கு போவதற்கு குறுக்கு வழி ஒன்று இருக்கிறது.அந்தப் பாதை வழியே நடந்து போகலாம் என்ற செந்தூரை தடுத்து நிறுத்திய தமயன்  வேண்டாம் மெயின்ரோட்டாலே போகலாம் காரை எடு என்றான்.
சரி என்பது போல தலையசைத்து விட்டு காரை கதிரவன் ஓட்ட செந்தூர் அவனருகில் உட்கார்ந்திருந்தான்.அவன் அமைதியை கலைக்கும் வகையில் “டேய் யார்றா அந்த வீட்டில் இருக்கிறது.” என கதிரவன் கேட்கவும் அவனும்  
“தியா” என்றான்.
கதிருக்கு கையிலிருந்து கார் விலகுவது போல இருக்க “டேய் என்னடா சொல்கிறாய் இந்த நேரம் ஏன்டா? அவளுக்கு ஏதாவது பிரச்சனை வந்திடப்போகுது…?”
“அப்படி ஒன்றும் நடக்காது. நான் அந்த வீட்டுக்கு பின்பக்க மதிலால் ஏறி பல்கணி வழியாக மேலே போவேன். நீ கீழே காரை சைட் பண்ணி விட்டு நில்லண்ணா.நான் இதைக் கொடுத்து விட்டு சீக்கிரமாக வந்துவிடுவேன்.” என்றான் .
ஐந்தே நிமிடத்தில் காரை தியா இருக்கும் வீட்டிற்கு அருகில் சற்று தள்ளி நிறுத்தினான் கதிரவன்.
கார் கதவை சீக்கிரமாக திறந்து வெளியே இறங்கிய செந்தூர் கதவைச் சாத்திவிட்டு கண்ணாடி வரைக்கும் குனிந்து “அண்ணா பத்திரமா இரு” எனவும்
“நான் பத்திரமாக இருப்பது இருக்கட்டும் நீ முதல் பார்த்து போ மாட்டினாய் சங்கு ஊதிடுவான்கள். மற்றையது கையில் தையல் போட்டிருக்கிறது அதை கவனமாக பார். சரி சரி வீதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருக்கின்றது பாரத்துப் போ.
ஆல் தி பெஸட்.”என்றான் தமயன்.
கதிரவனைப் பார்த்து அசட்டு சிரிப்பொன்றை வைத்து விட்டு வீதியைக்கடந்து சென்றவன்  லுங்கியை மடித்துக்கட்டியவாறு அவள் இடத்திற்கு போகும் வழியை ஆராயந்து கொண்டு இரண்டு ஜம்மில் மதிலேறி குதித்தவன் மொட்டைமாடிக்கு செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த படி வழியே மேலே சென்று கதவை தட்ட முயற்சிக்க
கதவு தன் பாட்டில் திறக்கவும் அவன் உள்ளே சென்று தனது போனை ஆன் பண்ணி லைட்டை அடித்து சுற்றிலும் பார்க்க அவள் சுவரில் சாய்ந்த வண்ணம் தூங்கிக் கொண்டிருந்தவளை கண்டு விட்டு
‘ஏன் இருந்தபடியே தூங்குகின்றாள்.எதைச் செய்தாலும் விசித்திரமாய் செய்வா போலிருக்கே……!’ என நினைத்துக் கொண்டவன்
 கையிலிருந்த போன்லைட்டை சுற்ற வர அடித்து லைட் சுவிச்சை கண்டுபிடித்து போட்டவன் தன் கையிலிருந்த போனை அணைத்து வைத்தவன் அவளருகே சென்று “தியா தியா…. தியா” என அவளது கன்னத்தில் தட்டி மெதுவாக எழுப்பவும்
அவள் திடுக்கிட்டு எழுந்து தூக்ககலக்கத்தில் செய்வதறியாது திகைத்து நின்றவளைப் பார்த்து என்னென்னேவோ எண்ணங்கள் தோன்றி மறைந்தன.அவன் அவளை மறுபடியும் அழைத்து நிதானத்திற்கு கொண்டு வரவும் அவளிற்கும் பேச்சு கொஞ்சமாக வந்தது.
என்ன? என்ன? ஏன் ? இந்த நேரத்தில் இங்கே வந்தாய் என வினவியவள் வினவியவள் காய்ச்சல் வேகத்தில் மறுபடியும் சுவரோடு சாயந்து கொண்டவளின் நெற்றியில் கைவைத்தவன் உதறிக்கொண்டு கையை இழுத்தவன் “இப்படி சுடுகிறதே தியா நான் போன் பண்ணும் போது சொல்லியிருக்கலாமேடி”
என்று கேட்கவும் அவள் அதற்கு “நீ போன் பண்ணும் போது தான் எழுந்து வந்தேன்.அதை விடு என் கை ரொம்ப வீங்கிக்கொண்டு வருகிறது என்னால் முடியவில்லை. தயவு செய்து என் கையிலுள்ள பன்டேஜை அவிழ்து விடு என்றாள்.”
“உன் டப்லட்ஸ் எல்லாம் காருக்குள்ளேயே விட்டு விட்டு வந்து விட்டாய் அதைத்கொடுக்கவே வந்தேன்.” என்றவன் அவற்றை எடுப்பதற்காய் லுங்கியை சற்று தூக்கினான்.
“டேய் என்னடா பண்ணுகிறாய்…..” என அவள்  கத்தவும் தான் அவன் அவளது மருந்துகளை மதில் பாயும் போது உள்ளே போட்டிருந்த த்ரீகுவாட்டர் பாக்கட்டில் வைத்தவன் மேலே லுங்கியை கட்டியிருந்ததால் அதனை எடுக்க அவன் லுங்கியை சற்று எடுக்கவேண்டியதாயிற்று.அதற்கு தான் அவள் கத்தியிருக்க வேண்டுமென்பது அவன் ஊகம்.
மருந்துகளை வெளியிலெடுத்தவன் அவளைப்பார்த்து “உனக்கு ரணகளத்தில ஒரு கிளுகிளுப்பு. என்றவன் இந்தா இதை இப்போது விழுங்குடி…” எனக் கூறியவன்
அவள் பேசாது  இருக்கவும் அதை அவனே எடுத்துக்கொண்டு அருகிலிருந்த தண்ணீர் போத்தலை எடுத்து அவளை வாயை திற என்றவன் மாத்திரையை போட்டு தண்ணீரையும் குடிக்க வைத்தவன் அவளது கைக்கட்டை அவிழ்த்து சிறிது தளர்வாக கட்டி விட்டவன்.
அவளது அறையுடன் சேர்ந்து இருந்த அட்டாச் பாத்ருரூமுக்குள் சென்று குளிர் நீர் எடுத்துகொண்டு வந்து அவளது அருகே வைத்து விட்டு,
அவள் கழற்றிப்போட்ட கொட்டின் துப்பட்டாவை எடுத்து தண்ணீரில் போட்டு பிழிந்தவன் அதனால் அவளது முகம்,கை,என அழுந்தி துடைத்தவன் அவளது மேல்பாதங்களிற்கு கொண்டு செல்லவும் அவள் பதறி கால்களை இழுத்துக்கொள்ள
பட்டென தன் கையால் பிடிதத்துக்கொண்டு “தியா வீம்பு பண்ணுவதற்கான நேரம் இதுவல்ல என்றவன் இப்படி ஈரத்துணியால் துடைத்தால் காய்ச்சல் குறையும் என்று கூறி மறுபடியும் ஈரத்துணியால் துடைத்து விடவும் நெருப்ப போல எரிந்த வெப்பம் அவளுக்குள் குறைவது போல இருந்தது.
“தியா நிறைய தண்ணீர் குடி என்றவன் மறுபடியும் அருகிலிருந்த தண்ணீர் போத்தலை எடுத்துக் கொடுக்கவும் அவள் வேண்டாம் என தலையசைக்கவும் அவனும் விடாது வற்புறுத்தி தண்ணீரை குடிக்க வைத்தான்.
ஒரு ஐந்து நிமிடத்தில் அவளது உடம்பெல்லாம் வியர்த்து ஊற்றியது.சற்று நேரத்தில் அவளது உடம்பு குளிரந்து காய்ச்சல் குறைந்திருந்து.
தண்ணீர் வேண்டாம் வேண்டாம் என சொன்னேன் கேட்டியா…. ?
“இப்போது கொஞ்சம் ஓகே ஆன பிறகு உனக்கு பேசுவதற்கு வாய் வருகிறதா? என்றவன் அதுக்கு இப்போது என்ன? பிரச்சனை.” என்றான்.
“இப்போது நான் வோஸ்ரூம் போக வேண்டும் என்னை மேலே தூக்கி விடுகிறாயா?” என கைகளை அவனை நோக்கி உயர்த்தினாள்.
குனிந்து அவளை தூக்கி விட்டவன் அவளை வோஸ்ரூம் வரை அழைத்துச் சென்றான்.அவள் தயங்கி தயங்கி நிற்கவும் “என்ன? தியா வேறு எதுவும் வேணுமா?” என வினவ
அவள் தயக்கமாக  “என் சுடி பொட்டத்தை இந்த கையை வைத்துக் கொண்டு கழற்ற முடியவில்லை என தடுமாறிக் கொண்டு நீ போ நான் பார்த்துக் கொள்வேன்.” என்றாள்.
என்னத்தை பார்ப்பியோ? கொஞ்ச நேரம் பொறு என்றவன் அவளை பார்த்து “திரும்பி நில்லு தியா” என அவளும் திரும்பி நின்றாள்.அவன் தன் லுங்கியை தலைவழியாக கழற்றி எடுத்து  அவளது தலைவழியாக போட்டு அவளது இடுப்பைச்சுற்றிக்கட்டி விட்டவன்,
தியா தயவு செய்து தப்பாக நினைக்காதே என்று கூறிக்கொண்டு அவளது பொட்த்தை இறுகிக்கட்டியிருந்த நாடாவை அவிழ்த்து விட
அது கீழே வர தியா இடுப்பில் கட்டியிருந்த அவனது லுங்கியை பிடிப்பதா பொட்டத்தை கழற்றுவதா என திணற அவனே கீழே குனிந்து அதை கழற்றி எடுத்தவன் அவளைப் பாரத்து “தியா கையை நனைக்காதே.”  என்று சொல்லி வோஸ்ரூமுக்குள் அனுப்பி விட்டான்.
பாத்ரூமுக்குள் போனவளுக்கு குளிக்க வேண்டும் போல் இருக்க கதவை திறந்து “டேய் நான் குளிக்கப் போகிறேன் நைட்டியும்,டவலும் உனக்கருகில் இருக்கிறது. எடுத்து தருகிறாயா?” என்றாள்.
“கை நனையப் போகிறது. சொன்னால் கேட்க மாட்டாயா?”
“மாட்டேன். என் தூக்கத்தை நீ கலைக்காது போயிருந்தால் நான் இப்போது தூக்கத்தில் கனவு கண்டு கொண்டிருந்திருப்பேன்.நடு ராத்திரி மதில் ஏறி வந்ததுமில்லாமல் சும்மா சும்மா தத்துவம் பேசக்கூடாது என்றவள் நீ செய்த உதவிக்கு மிக்கநன்றி இப்போது வந்த வழியை பார்த்து போ…. மறுபடியும் இன்னொரு தடவை மதில் ஏறி வருகின்ற வேலை வைக்காதே……!” என்று கூறிக்கொண்டு பாத்ரூம் கதவை காலால் உதைத்து சாத்தினாள்.
அவள் குளிக்க போகின்றாள் எனவும் அவன் அவளது அறைக்கதவை சாத்திக்கொண்டு மொட்டை மாடியில்  இருந்த சீமெந்து பெஞ்சில் அமர்ந்தான்.