காதல் தோழா 7
”வாங்க, வாங்க சம்மந்தி…”
“வரோம், சம்மந்தி…”
“காஃபி எடுத்துகொண்டு வந்தார் கௌசி…”
“எடுத்துக்கோங்க அண்ணா, அண்ணி…” வந்தவர்களை உபசரித்தார்.
“பொண்ணையும், மாப்பிள்ளையும் மறுவீட்டு அழைக்க வந்திருக்கோம், சம்மந்தி.”
“ ரொம்ப நல்லது… இருங்க மருமகளை கூப்பிடுறேன்…”
“ ஹேத்தும்மா… ரகு…” அவர் அழைக்க.
“சரியாக, இருவரும் சிரித்துகொண்டே மாடியில் இருந்து கீழ் இரங்கி வந்தனர்.”
“இருவரின் சிரிப்பை பார்த்த, இருவரின் பெற்றோர்களும், மனதில் மகிழ்ச்சியாய் இருந்தனர்.”
“என் மகளை சரியான மாப்பிள்ளைக்கு தான் திருமணம் செய்து கொடுத்திருக்கிறேன்.” அன்பு சந்தோஷமாக இருந்தார்.
“ரகுவுக்கு சரியான பெண்ணை தான் நாம் தேர்வு செய்து இருக்கின்றோம்.” கௌசியும், ரத்தினமும் நினைத்து கொண்டிருந்தனர்.
“தனது பெற்றோரை பார்த்ததும், ரகுவின் கையில் இருந்து அவள் கையை விடுவித்துகொண்டு ஓடினால் அவள் தந்தையிடம்”.
“அப்பா… எப்படி இருக்கீங்க… மிஸ் யூப்பா… அம்மா… எப்படி இருக்கீங்க…” ஒரு நாள் கூடா பிரிந்திராத தாய், தந்தையை ஒரு நாள் இரவு பிரிவு அவளுக்கு மிகவும் கவலையாக இருந்தது.
“பிறந்த முதல் அழுத என் மகளை -இன்று
முதல் முறையாக என் மகளின்
கண்ணில் கண்டேன் கண்ணீரை.” ஒரு அப்பாவின் கவிதையாக அவருக்கு தோன்றியது.
“ நல்லா இருக்கோம், ஹேத்துமா… நீ சந்தோஷமா இருக்கியா”
“ரொம்ப… ரொம்ப… நல்லா இருக்கேன்.”
“ ஹேத்தும்மா… இப்படியே அவங்களை நிக்க வச்சு பேசிட்டு இருக்க போறீயா…”
“உக்காருங்கப்பா… ம்மா… நீங்களும் உக்காருங்க.”
“மாப்பிள்ளை… எப்படி இருக்கீங்க…” அன்புவும், சித்ராவும் கேட்க.
“ஹப்பா… இப்பாவச்சும் என் ஞாயபகம் வந்துச்சே…” அவரை கேலி செய்ய.
“இல்லை மாப்பிள்ளை… என் மகளை பிரிஞ்சி ஒரு நாள் கூட இருந்ததில்லை… அதான்”
“இருக்கட்டும் மாமா… சும்மா… கேலி பண்ணேன்… நல்லா இருக்கேன் மாமா…”
” அத்தை, மாமா, கிஷூ ஏன் வரலைம்மா…” அவள் கேட்க.
“கல்யாண வேலையில இவ்வளவு நாள் நம்ம வீட்டுல தங்கிருந்தாங்க… இன்னைக்கு காலையில தான் அவங்க வீட்டுக்கு போனாங்க. நாளைக்கு வருவாங்க”
“கிஷூ, உன்னைப்பார்க்க இன்னைக்கு சாயங்காலம் வர்றானாம்.”
“ஓ… சரிம்மா.”
“அனைவருக்கும், உணவு பரிமாரியவள் ரகு பக்கம் வருகையில் அவனுக்கு பிடிக்காத தேங்காய் சட்னியை அதிகமாக வைத்தால்.”
“இதை பார்த்த கௌசி, ‘ஹேத்தும்மா, ரகுவுக்கு தேங்காய் சட்னி பிடிக்காதும்மா’
“ஓ… அப்படியா அத்தை… ஏங்க உங்களுக்கு பிடிக்காதுனு சொல்ல வேண்டியது தானே. ஏன் அமைதியா இருந்தீங்க.”
“இல்லைம்மா, நான் சொல்லுறதுக்குள்ள அவள் வச்சுட்டா… விடுங்க… இருக்கட்டும் ஹேத்து… விடு”
“அவள் வைத்ததை ஒதுக்காமல், சாப்பிட்டான்…”
“அவளுக்கு தான் கஷ்டமாக போனது… பிடிக்காத எதையும் செய்து பழக்கமில்லாத அவளுக்கே இவனின் செய்கை கொஞ்சம் கவலையாக இருந்தது.”
“அனைவரும் உணவு முடித்து, ரத்தினம், கௌசியிடம்… ‘ நாளைக்கு பொண்ணையும், மாப்பிள்ளையும் எங்க வீட்டுக்கு, மறுவீட்டுக்கு அனுப்பனும். நீங்களும் மறக்காம மறுவீட்டு விருந்துல கலந்துக்கனும்.”
“சந்தோஷமா, அனுப்பி வைக்குறோம்… அண்ணா…”
“ முதல்ல பசங்களை அனுப்பி வைக்குறோம்… நாங்க கொஞ்சம் தாமதமா வரோம் சம்மந்தி…”
“சரிங்க அண்ணா… அண்ணி் நீங்களாச்சும் பசங்க கூடவே வரலாம் இல்லையா…” என சித்ரா கேட்க.
“பார்க்குறேன் அண்ணி… அவர் இல்லாம நான் தனியா எங்கயும் போகமாட்டேன்… நான் அவர்கூடவே வரேன் அண்ணி.”
“அப்படியா அண்ணி… சரிங்கண்ணி…”
“ நாளைக்கு கிஷூ வரான் இவங்களை அழைச்சுட்டு வர்ரதுக்கு.”
“ நாங்க வரோம் சம்மந்தி… வரோம் மாப்பிள்ளை, ஹேத்தும்மா…” அனைவரிடத்திலும் விடைபெற்றனர்.
“சமையல் அறையில் மும்பரமாக வேலை செய்துகொண்டிருந்த சரண்யாவை பின்னிருந்து அணைத்துகொண்டான் விஜய்.”
“தீடீர் அணைப்பில் பயந்தவள், அவன் குரல் கேட்டதும் தான் பயத்தைவிட்டால்.”
“என்ன சமையல்… எனக்கு காஃபி கொடுக்ககூட முடியாமல்” அவன் கேட்க.
“ப்ளீஸ்… யாரவது வந்திருவாங்க… இப்படியே நாம இருந்தா பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க.”
“என்னை நினைப்பாங்க… புதுசா கல்யாணம் ஆனவங்க அப்படி, இப்படினு இருக்க தான் செய்வாங்கனு நினைப்பாங்க.”
“அம்மா, வந்திருவாங்க…”
“வரட்டும்…”
”அப்பா வந்திருவாங்க…”
“வரட்டும்…”
“அய்யே… மாமா… ஏன் அக்காவ கட்டிப்பிடிச்சிருக்கீங்க” சிறுமியின் குரலில் அவளிடமிருந்து விலகினான்.
“இருவருக்குமே சிறுமியின் கண்முன்னே இப்படி நடந்து கொண்டோமே என சங்கடமாக உணர்ந்தனர்.
“அவளோ, ‘ நான் அப்போவே சொன்னேன் கேட்டீங்களா…” அவள் கண்களால் பேசினால்.
“அவனோ, ‘சாரி…’ அவளிடம் கண்களான் மன்னிப்பு கேட்டான்.
“அது ஒன்னுமில்ல ஷிவானி… அக்காவுக்கு உதவி செய்ய வந்தேன். நீங்க எப்போ ஊருல இருந்து வந்தீங்க…” என அவன், அந்த சிறுமியை தூக்கிகொண்டே கேட்டான்.
“ நான், அப்பா, அப்பா, பெரியம்மா, பெரியப்பா… எல்லாரும் காலையில வந்துட்டோம் மாமா…”
“ஓ… ‘ என்கிட சொல்லிருக்காலமே சரண்யா’ அவளிடம் கேட்க.
“ நான் சொல்ல வந்தேன்… ஆனா பெரியப்பா தான் நீங்க நல்லா தூங்கட்டும் சொன்னாங்க அதான் நான் சமையல் பார்க்க வந்துட்டேன்.”
“ப்ச்… மாமா அப்படி தான் சொல்லுவாங்க… நீ என்னை எழுப்பி விட்டுருக்கலாம். நான் அவங்களை பார்த்துட்டு வரேன்.” அவளை லேசாக கடிந்துவிட்டு, சரண்யாவின் குடும்பத்தை வரவேற்க சென்றான்.”
“வாங்க மாமா… வாங்க அத்தை… வாங்க சின்ன மாமா… வாங்க அக்கா…” அனைவரையும் வரவேற்றான்.
“வரோம் மாப்பி்ள்ளை…”
“விஜய், உன்னையும், என் மகளையும் மறுவீட்டுக்கு அழைக்க வந்திருக்காங்க…” என அவனின் மாமா சொன்னார்.
“ஓ… சரிங்க மாமா…”
“மாப்பிள்ளை… நாங்க சரண்யாவுக்கும், உங்களுக்கு ஒரு புது ப்ளாட் வாங்கிருக்கோம்… உங்க ஆபீஸ் பக்கத்துல. தப்பா நினைக்காதீங்க இது எங்க மகளுக்கு செய்ய வேண்டிய சீர். இதை நீங்க கண்டிப்பா ஏத்துக்கனும்.” என அவர் வீட்டின் பத்திரத்தை கொடுத்தார்.
“அவனோ, தன் மாமாவையும், அத்தையும் பார்த்தான்.”
“இல்லை மாமா… எனக்கு இந்த சீர் வேண்டாம். எப்பவும் என் மாமா, அத்தைய நான் பிரிஞ்சி இருக்க மாட்டேன்… இப்போ தனியா நானும், அவளும் போயிட்டா என் மாமாவுக்கும், என் அத்தைக்கும் தான் வருத்தமாக இருக்கும், அதைவிட எனக்கு கவலையா இருக்கும். அதனால எனக்கு இந்த வீடு வேண்டாம்”
“அய்யோ மாப்பிள்ளை… நாங்க உங்களை தனியா போக சொல்லலை. எங்க பொண்ணுக்கு கொடுக்குற சீர் தான் இது. எங்களுக்கு தெரியாத நீங்க எந்தளவுக்கு உங்க அத்தை, மாமா மேல பாசம் வச்சுருக்கீங்கனு. உங்க மாமா, அத்தைகிட்ட இருந்து நாங்க உங்களை பிரிக்க நினைப்போமா… அவங்களும் எனக்கு ஒரு அண்ணே மாதிரி தான்.”
“விஜய், அவங்க பொண்ணுக்கும், மாப்பிள்ளைக்கு அவங்க செய்யுறாங்க நீ வேண்டாமுனு சொல்லக்கூடாதுப்பா. சரண்யாவுக்கு தான் வருத்தமா இருக்கும். வாங்கிகோப்பா.” முடிவாய் அவனின் மாமா சொன்னார்.
“சரிங்க மாமா… நான் உங்க சீர ஏத்துகிறேன். இந்த பத்திரத்தை சரண்யாகிட்ட கொடுங்க.”
“அவளின் கையில் அந்த பத்திரத்தை கொடுக்க, அவளோ அவனின் முகத்தைப்பார்த்து ‘வாங்க்கிக்கொள்ளவா??? வேண்டாமா’ என பார்க்க”
“அவனோ, ‘வாங்கிக்கோ’ கண்ணால் சம்மதம் சொன்னான்.”
“அவளும், மகிழ்ச்சியாய் வாங்கினால்.”
“அனைவரையும் உபசரித்து, மறுவீட்டுக்கு அனைவரையும் அழைத்துவிட்டு, அவர்களிடம் இருந்து விடைப்பெற்றனர்.” சரண்யாவின் குடும்பத்தார்.
“ நாளைக்கு நாம கண்டிப்பா உங்க வீட்டுக்கு போகனுமா?”
“ஏன் என் வீட்டு போகமா, வேற எங்க போகனும்”
“இல்லை… அங்கயும் உன்கிட்ட அன்யோன்யமா நடந்துக்கரு மாதிரு இருந்தா… அதான் கேட்டேன்.”
“அப்படியெல்லாம் நடக்காது… நீங்க எப்பவும் போல என் கையை அவங்க முன்னாடி மட்டும் தான பிடிக்க போறீங்க… அப்புறம் பக்கத்துல உக்காரப்போறீங்க… அவ்வளவு தான்.”
“இன்னைக்கு உன்கையை பிடிச்சிட்டு கீழே இறங்கி வர்ரதுக்குள்ள எனக்கு வேர்த்துருச்சு. இதில அங்கயுமா…”
“என்னமோ, ரொம்ப டைட்டா பிடிச்சுட்டு வந்தாமாதிரி பேசுறீங்க. லேசா தான் பிடிச்சீங்க அதுக்கு இந்த சீன் போடுறீங்க… போங்க போய் வேலை வெட்டி எதாவது இருந்தா பாருங்க… எனக்கு என் ட்ரெஸ் எடுத்து வைக்குற வேலைக் இருக்கு”
“அவள் அசால்ட்டாய் பேசிவிட்டு போனதையே பார்த்து கொண்டிருந்தான். அப்பொழுது தான் காலையில் நடந்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது.”
“கிளம்பிட்டீங்களா… வாங்க கீழே நமக்காக வெயிட் பண்ணுவாங்க போகலாம்.”
“ நீ முன்னாடி போ, நான் அடுத்து வர்ரேன்.”
“அத்தையும், மாமாவும் நம்மள எதிர்ப்பார்த்து தான் காத்திருப்பாங்க. இப்போ நான் முன்னாடி போனா, அவங்களுக்கு நம்ம நடிப்பு வெளிய தெரிய வாய்ப்பு இருக்கு”
“உன்கூட எனக்கு வர்ரதுக்கு கொஞ்சம் அன்னீசியா இருக்கு. பீளீஸ்…” அவன் கெஞ்ச
“அவளுக்கோ, கோவம் வந்தது… அதை காட்டும் சமயம் இதுவல்ல… என நினைத்துகொண்டு அவனிடம் ‘சரி, நான் உங்க கையை பிடிச்சிக்கலாமா.”
“என்ன”
“அவன் எதிர்பாரா சமயம், அவனின் கையில், தன் கையை கோர்த்துகொண்டு… ‘இப்போ, நாமா சிரிச்சுட்டே கீழே போகனும் அதுக்கு நீங்க நல்லா ஈனு சிரிக்க வேண்டாம்… லைட ஸ்மைல் பண்ணுங்க…’ அவனிடம் சொல்லிகொண்டே அவர்களின் அறையைவிட்டு வெளியே வந்தபோது தான் கௌசி, அவர்கள் இருவரையும் கீழே அழைத்தார்.”
”அவனோ, அவளின் கையை தான் எப்படி, இப்படி கெட்டியாக பிடிக்க முடிந்தது. அதுவும் இருவருக்கு பொருந்தாத திருமணம், பிடிக்காத பந்தம். என அவனின் சிந்தனையில் இருந்தவனை கலைத்தால்.”
“அவள் எதிராபராது ஒன்று தான், அவளின் தந்தை, தாய் வருகை. அதுவரை அவளின் கையை கெட்டியாக பிடித்துகொண்டு வந்தவன். அவளின் தந்தையை கண்டதும், அவனின் கையை உதறிவிட்டு வேகமாக தந்தையின் அருகில் சென்றால்.”
“அவனோ, ‘அடிப்பாவி, அப்பாவ பார்த்ததும் என் கையை விட்டு போயிட்டாலே… இவளை நம்பகூடாது…”
“அவனுக்கு தெரியாது் தனது தந்தை ஒன்று என்றால் அவள் யாரையும் பார்க்க மாட்டால். அவளது தந்தை தான் அவளுக்கு உலகம் என அவனுக்கு தெரியாது.
“அவனது சிந்தனையை கலைத்தது வீட்டின் அழைப்பு மணி. யாரென்று பார்க்க கதவை திறந்தான்.”
“அவன் முன் பலூன் வெடித்து அதில் இருந்து கலர் பேப்பர் சிதறி அவன் முகம் முழுவதும், அந்த பேப்பர் இருக்க… எதிர் இருந்தவரோ, ‘ஹாப்பீ மேரேஜ் லைப் மை மாமா’ அவன் முன் கத்திகொண்டே வந்தால்.
“பலூன், சத்ததில் அவன் கொஞ்சம் அதிர்ந்தாலும், அவளின் குரலில் அவனுக்கு மகிழ்ச்சி கொடுத்தது.”
“ஹே த்ரிஷ்னா… வாலு… எப்போ வந்த”
“அவன் முகம்முழுவது அந்த கலர் பேப்பர் இருந்தாலும், அதை கவனிக்காமல் தனது அத்தை மகள் தான் தனக்கு முக்கியம் என்பது போல் அவளை வரவேற்றான்.”
“அச்சோ சாரி… சாரி மாமா… எப்படியும் இந்த வீட்டு புது பொண்ணு தான் கதவை திறக்கும்னு நினைச்சேன்… ஆனா நீ வந்து திற்ப்பனேனு நான் நினைக்கலை.” என அவனின் முகத்தில் இருந்த கலர் பேப்பரை துடைத்தபடி அவனிடம் மன்னிப்பு கேட்டால்.
“இருக்கட்டும், த்ரிஷ்னா… விடு நீ தானே…”
“யாரோ, வெடி வெடிக்கும் சத்தம் கேட்டு கீழே வந்த ஹேத்து, ரகு முகத்தில் இருந்ததை துடைத்துக்கொண்டிருந்த பெண்ணை பார்த்ததும். அவளுக்கு காதில் புகை வராத குறை தான். அவர்களை பார்த்துகொண்டே அவர்களின் அருகில் வந்தால்.”
“ஹேத்துவை கண்டதும், ‘ஹே புது பொண்ணு எப்படி இருக்கீங்க’”
“ நான் நல்லா இருக்கேன்… நீங்க…”
“ நான் யாருனு உனக்கு தெரியாதா…”
“ஹ்கும்…” என இடவலமாக ஆட்டிகொண்டே ரகுவை பார்த்தால்.
”என் அத்தை பொண்ணு… பேரு த்ரிஷ்னா…” ஹேத்துக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
“ஹாய்…”
“இவங்க என் மனைவி… ஹேத்தான்சிகா”
“ஹாய்… ஹேத்து…”
“வாடியம்மா… வா… கல்யாணத்துக்கு வரவேண்டியவ… கல்யாணம் முடிஞ்ச பின்னாடி வர்ர…” கௌசி அங்கு வந்தார்.
“என்ன பண்றது என் அருமை அத்தையே… என் படிப்பு அப்படி… அதை சரியாக முடித்தால் தானே உனது மில்லில் எனக்கு வேலை போட்டு கொடுப்பாய்.” அவள் கேலியாக பேசினால்.
“போதும் டி உன் கேலி பேச்சு… எப்படி இருக்க”
“பார்த்தால் எப்படி தெரியுது…” அவள் தன்னை தானே சுற்றி காட்ட.
“ம்ம்ம்… இன்னும் அழகா இருக்க” அவளை திரிஷ்டி சுத்தினார்.
“சரி போய் குளிச்சுட்டு வா… சாப்பிடலாம்.”
“ம்ம்ம்… சரி அத்தை…, ஓய் புது பொண்ணு… உன் கையால எனக்கொரு காஃபி ஒகே…” ஹேத்துவிடம் ஒரு வேலை வைத்துவிட்டு அவளது அறைக்கு சென்றால்.
“என் மாமா பொண்ணு… என் வீட்டுக்கு இன்னொரு இளவரசி இவ தான். மாமாவும், அத்தையும் ஆக்சிடெண்ட்ல இரந்துட்டாங்க. அதுகடுத்து என் அம்மாவும், அப்பாவும் தான் இவளை தத்தெடுத்து வளர்க்குறாங்க. எனக்கு இவளை ரொம்ப பிடிக்கும் சரியான வாலு.” அவன் ஏதோ நினைவில் சொல்ல, ஹேத்துவோ… ‘அப்போ நான் இவனுக்கு எதுவும் இல்லையா??” யோசித்தால்.
தொடரும்……………