Episode 06

 

ஏதேதோ எண்ணங்கள் தோன்ற விரைவாக காரை வீட்டை நோக்கி செலுததியவன்.பதினைந்து நிமிடங்களில் வீட்டை வந்தடைந்தான்.கார் அவன் வீட்டு வாசலில் வரும் சத்தம் கேட்டதுமே அவனது தாயார் ஓடி வந்து அந்த பெரிய கேற்றை திறந்து விடவும், அவன் காரை கொண்டு போய் போா்டிகோவில் நிறுத்தி விட்டு காரில் இருந்து இறங்கி ஓட்டமெட்ரிக் லொக் போட்டுவிட்டு  நடந்து வந்தவன் அருகில் சிறு குழந்தை போல் ஓடிவந்த தாயை “ ஏன் அம்மா இந்த வீட்டில எத்தனை பேர் இருக்கிறார்கள். அதைவிட நாலைந்து வேலையாட்கள் வேற இருக்கினம். அவர்களிடம் சொல்லி கேட் திறக்கச் சொல்லாமல் நீங்க ஏன்? சின்னக் குழந்தை போல ஓடியோடி திரிகிறீர்கள் என்று மென்மையாய்” கடிந்தான்.

 

“எனக்கு கை கால் நல்லாத்தானே இருக்கின்றது.நான் ஓடுவேன்,ஆடுவேன் என்ற தாய், இரண்டு வருடமாகத்தான் நீ இங்கே இல்லை. அதற்கு முதலும் நான் தான் கேட் திறப்பது என்று என் பிள்ளை மறந்து விட்டான் போல” என்று மகனது காலை வாரினார்.

 

“அம்மா நான் உங்களை சிரமப்பட வைக்க வேண்டாமே என்பதற்காய்” என்று சொன்னவனின் காதை திருகினாா்  தாயாா். “ஒரு அம்மாவிற்கு அவனது குழந்தை எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும் அவன் சின்னக் குழந்தை போல தான்.அது போல தான் கண்ணா நீயும் எனக்கு” என்றாா்.

 

“ஆமாம் ஆமாம் உன் பையனுக்கே இந்  நேரம் குழந்தை இருக்க வேண்டிய வயசு.அவன் உனக்கு குழந்தையா ? உன் பையனை தொட்டில்ல போட்டு ஆட்டி தேவை என்றால் பீடிங்பொட்டிலையும் அவன் வாயலை வை.” என்றார். இவர்களது உரையாடலை கேட்டுக் கொண்டு வந்த தந்தை கார்திகேயன்.

 

“ஓ மை கோட்.”  என்று கத்தி விட்டு விழுந்து விழுந்து சிரித்தான் அவனது தமக்கையின் மகன்.

 

“ஏன்டா அபிநய்  இப்படி சிரிக்கிறாய் என்று கேட்டான்.” அவனது மாமன் செந்தூா்.

 

இல்ல மாமா நீ தொட்டிலுக்குள் இருந்து கையையும் காலையும் உதறி பீடிங்பொட்டில் வேணும் என்று  பாட்டிகிட்ட அடம் பிடிக்கிற மாதிரி கற்பனை பண்ணி பார்த்தேன்.அது தான் எனக்கு ‘சிப்பு சிப்பா’ வருகிறது. என்று மறுபடியும் விழுந்து விழுந்து சிரித்தான்.அவனது சிரிப்பைக் தொடர்ந்து, மற்ற மூவரும் செந்தூர் தொட்டிலில் பீடிங் பொட்டிலை வாயில் வைத்திருப்பதைப் போல விதவிதமாக கற்பனை செய்தவர்களின் முகங்களிலும் புன்னகை நிரம்பியிருந்தது.

 

“அது சரி நீ இவ்வளவு நேரம் இங்கே தான் இருந்தியா

அபி.”என்று கேட்ட மாமனுக்கு,

தோட்டத்தில் இருக்கன்ற பெரிய ஊஞ்சலில் இருந்து ஆடிக்கொண்டிருந்தேன்.” மாமா என்றான் மருமகன்.

 

“நீ தனியாகத்தான் இருந்து விளையாடினியா அபி.” என்ற மாமனுக்கு, “ஆமாம் மாமா பெரிய மாமா பசங்க, என்னுடைய தங்கச்சி எல்லோரும் உள்ளே இருந்து விளையாடுகிறாா்கள்.எனக்கு அவங்க கேம் பிடிக்கேல்ல…. மாமா.அது தான் எனக்கு செம போா் அடிக்குது என்று வெளியிலே வந்து பாா்த்தேன். ஊஞ்சல் தெரிந்தது. சரி அங்கே போய் இருக்கலாம் அதிலே இருந்து விளையாடிற்று இருந்தேன். அப்படி இருந்ததனால்  தான் பாட்டியோட பாச மழையில் நீங்க நனையுறதையும் கேட்க்க முடிஞ்சுது.” என்றான் சின்னப் பையன்.

 

“அம்மா பாா்த்தீர்களா? இந்த பொடிசுக்கு எத்தனை கற்பனைவளம் என்று, கூறிக் கொண்டிருந்த போது பின் பக்கமாக “சித்து…..சி..த்..து வந்..தித்..தியா….என்று மழலைக் குரலில் கத்திக் கொண்டு, வீட்டுக்குள் இருந்து தத்தி தத்தி ஓடி வந்து அவன் காலை கட்டிக் கொண்டு தூக்கு என்று அவனை அண்ணாந்து பார்த்தது. அவனது அண்ணனின்  ஒரு வயதான வாரிசு மது.

 

குழந்தை வந்து காலைக் கட்டிக் கொண்டதும் அவன்பேச்சை நிறுத்தி விட்டு குழந்தையை வாரித் தூக்கி “மதுக்குட்டி…. பேபிம்மா என மேலே தூக்கிப்போட்டு விளையாட்டுக் காட்ட  குழந்தை தனக்கிருந்த இரண்டு மூன்று பற்களைக் காட்டி கிளுக்கிச் சிரித்தது.தன்னை தூக்கிப் போட்டு விளையாட்டுக் காட்டிய சித்தப்பாவின் முகத்தில் மாறி மாறி முத்தமிட்டு தனது மகிழ்சியை வெளிப்படுத்தியது.  

 

“சரி கண்ணா அம்மா இன்று இராசவள்ளிகிழங்க கூழ் செய்தேன். போய் எடுத்துக் கொண்டு வருகின்றேன். குடி என்று விட்டு உள்ளே” சென்றார்.

 

ஆமாம் சித்து கூழ் நல்லா இருந்துச்சு.நாங்கள் எல்லோரும் குடிச்சிட்டோம் நீயும் குடிச்சிட்டு எங்க கூட விளையாட வாறீயா? என்றனர் குழந்தைகள்.

 

கூழைக் கொண்டு வந்த நிர்மலா இவர்களது பேச்சை கேட்டு விட்டு. “சித்து இப்போது தானே வந்தான். அவன் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும். இப்போது நீங்கள் எல்லோரும் போய் விளையாடுவீங்களாம்…. அப்புறம் சித்து உங்க கூட விளையாட வருவான்.” என்றாா்.

 

“ஓகே பாட்டி” என்று விட்டு குழந்தைகள் ஓடி போய் தங்களது விளையாட்டை தொடர்ந்தனர்.

அங்கே நின்று விளையாடிக் கொண்டிருந்த அண்ணின் மூத்த மகள் ‘ஆதிரா’ வையே அவன் கண்கள் வெறித்தது. எனெனில் ‘தியா’ விடம் இருக்கும் ஏதோ ஒரு இயல்பு ஆதிராக்கும் இருந்தது.

 

அவன் கையில இருந்த உணவு அப்படியே இருப்பதை பாரத்த தாய். “என்ன தம்பி யோசனை.” எனக் கூற குழந்தைகளிடம் இருந்து பாா்வையை திருப்பியவன் கையில் இருந்ததை அள்ளி வாயில் போட்டான்.அதுவும் தொண்டைக்குள் செல்ல போா் புரிந்தது.

 

“எனக்கு போதும்” என்றவன் கையிலிருந்த  கப்பை தாயிடம் கொடுத்து விட்டு எழுந்து தனது அறை நோக்கிச் சென்றான்.

 

தாய் கையில் கொடுத்த பாத்திரத்தில் உணவு அப்படியே இருக்கவும் “சாப்பிடவில்லையா ? எனக் கேட்ட தாயின் குரல் கேட்டும் கேளாதது போல தனது அறைக்குள் சென்று கதவை அடைத்தான். வோஸ்ரூமிற்குள்  சென்று ப்ரஸ்அப்பாகி வெளியே வந்தவன் கஸ்யுவலாக அணியும் ரீ சேட்டும், த்ரீ குவாட்டரோடும் வெளியே வந்தவனை மறுபடியும் குழந்தைகள் அணைவரும் சூழ்ந்து கொண்டனர்.

 

மாமா என்று அக்காவின் பிள்ளைகளும், சித்தப்பா சித்து என்று அண்ணன் பிள்ளைகளும் பிடித்துக் கொள்ள அவனும் அவர்களின் பிடிக்குள் அடங்கி விளையாடத் தொடங்கினான். அவரகள் கூத்தும்,கும்மாளமுமாய் இருக்க அவர்களுடன் அவனது அக்கா,அத்தான்,அண்ணா,அண்ணி என அணைவரும் இணைந்து கொண்டனர்.

 

வீட்டின் நடுஹோலில் ஷோபாவில் இருந்து விளையாட ஆம்பித்தவர்கள் இப்போது  நிலத்தில் விரித்து இருந்த பெரிய நிலவிரிப்பில் நடுவில் படுத்திருக்க அவனது நெஞ்சில் மதுக்குட்டி ஏறி உட்கார்ந்து  இடக்கிடையே எழும்பி குதித்து விளையாட இதைப் பார்த்த ஆதிரா “மது சித்துக்கு வலிக்கும் கீழே இறங்கு” என்றாள்.

 

ஆதிரா குட்டி கண்டு பிடிச்சிட்டியா….? சித்துக்கு வலிக்கிறது என்று கண்டு பிடிச்சிட்டியா….?என வியந்தான் மாமன். தியாவும் அப்படித்தான் அவன் எங்கிருந்தாலும் அவன் மீது கரிசனத்தை காட்டுவாேளே…!

அன்று அவனுக்கு அந்ந கரிசனம் வெறுப்பை தந்தது. இன்று அந்த அக்கறையை அவன் வேண்டி நிற்கின்றான்.அதைக் கொடுக்க அவள் இல்லை.

 

ஏன் தம்பி உங்களிற்கு கல்யாணமாகி குழந்தைகள் பிறந்தால் அவர்களை நீங்க நல்லபடியாக ஹேர் எடுத்து ப்ரண்ட்லியா வளர்ப்பீங்க… இல்லையா? என்று கேட்ட அண்ணியை பார்த்து வெற்றுச்சிரிப்பொன்றை உதிர்த்தான்.

 

மாமா நாளைக்கு எங்க.. விட்டுக்கு போய் விடுவோம். அப்புறம்   உங்களை சனி,ஞாயிறு தான் பாா்க்க முடியும் என்ற மருமகனைப் பார்த்து “ இந்த வீட்டுக்கும் உன் வீட்டுக்கும் ஒரு சுவர் தான் இடைவெளி இருக்கு இது பெரிய தூரம் தான் போ?” என்றான் மாமன்.

 

“டேய் தம்பி நாளைக்கு அவனுகக்கு ஸ்கூல்.அதை கட் பண்ணுறதற்கு கதை கதையாக சொல்லுறான்.அவனை நம்பாதே” என்றாள் தமக்கை.

 

அவனது தமக்கையும், தமயனும் குடும்பமாய்   அவன் வீட்டுக்கு அடுத்தடுத்த வீடுகளில் தான் தங்கியிருக்கின்றனர். அவ்வீடுகளை செந்தூர் தான் அவர்களிற்கு கட்டிக் கொடுத்தது. அவனும் அவன் சகோதர்களும் தாய்,தந்தை அருகில் ஒற்றுமையாய் இருக்க  வேண்டும்என்பதற்காய் தான் இந்த ஏற்பாடு.

 

“போதும் நீங்கள் எல்லோரும் அடித்த கும்மாளம். பன்னிரண்டு மணியாகிறது நாளைக்கு வேலைக்கு, பள்ளிக்கு போக வேண்டாமோ? எல்லாரும் போய் படுங்கள்.” என்று தாய் ஒன்றுக்கு இரண்டு தடவை சத்தம் போட்ட பின்னரே மாநாடு கலைந்தது.

 

எல்லோரும் அவரவர் அறைகளுக்குள் சென்று மறைய அவனது நெஞ்சிலேயே தூங்கி விட்ட மதுவை அண்ணண் அறைக்குள் கொண்டு போய் கொடுத்து விட்டு தனது அறைக்குள் சென்று  கதவை தாளிட்டான்.செந்தூர்.

 

கையிலே செல்போனை எடுத்துக் கொண்டு லைட்டை அணைத்து விட்டு மெத்தையில் விழுந்தவனிற்கு உடம்பு அலுப்பாக இருந்த போதும் தூக்கம் வராது போக்கு காட்டியது. அதுவும் மனதுக்கு இதமாய் இருக்கவே போனை ஒன் பண்ணி ஸ்கிரீன் சேவரில் இருந்த படத்தை பார்பதும் போன் பவர் லைட்டை அணைப்பதுமாக இருக்க இவனது தொல்லையால் போன் சார்ஜ் இல்லாமல் உயிரை விட்டது.கண்ணை மூடியவாறே எழுந்து சென்று போனை சாா்ஜ்ஜில்  போட்டு விட்டு கண்ணை திறந்தவன் அவனது அறை ஜன்னல் கண்ணாடியை திறந்து வெளியிலே பாா்த்தான். ஊரே அடங்கியிருக்க அவன் வீட்டு தென்னைமர ஓலைகளின் ‘சலசல’ப்பும்,தூரத்தே கேட்ட தெருநாய்களின் ஊளையிடலும் கூட அவனுக்கு இனிமையாய் இருக்க அதை ரசித்த வண்ணம் ஜன்னல் நிலையில் தலை சாயத்து கைகளை மாா்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு நின்ற நிலையிலே அதிகாலை வரை நின்றவன் நான்கு மணி அலாரம் இரண்டு தடவை அடித்தோய்ந்து மூன்றாவது தரம் அலாரம் அடிக்கவே தவத்திலிருந்து கலைந்தவன் போல திரும்பி வந்து அலாரத்தை நிறுத்தியவன் நேரத்தை பார்க்க அது மணி நான்கை காட்டியது. இனிமேல் நித்திரைக்கு இடமில்லை என்பதை உணர்ந்தவன் தனது டவலை எடுத்துக் கொண்டு வோஸ்றூமிற்குள் சென்று நீராடி விட்டு வெளியே வர நேரம் நாலரையைக் காட்டியது. இப்போது தான் அரைமணி நேரம் போயிருக்கிறதா என நேரமுள்ளை சீக்கிரமாக சுழலுமாறு சபித்தவன் பொறுமையை இழந்து, கபேட்டில் இருந்த அவனது ஆடைகளை அணிந்து கொண்டு வெளியே வந்தவன் எல்லோரும் உறங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்து ஹாலில் இருந்த  ஷோபாவில் உட்கார்ந்தவன் ஹால் லைட்டை போட்டால் மற்றவர்களது தூக்கம் கெட்டு விடும் என நினைத்து,அவனது போனை வைத்து நோண்டிக் கொண்டிருந்தவன் அப்பொழுது தான் யோசித்தான் அவன் இன்று வழமையாக செய்யும் ஜொக்கிங்கைக் கூட செய்ய மறந்து அதிகாலையில் வெளிகிட்ட வண்ணம் வந்து இருப்பதன் காரணத்தை நினைத்து அவனே தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.

 

எப்படியிருந்தாலும் ஆபிசுக்கு எட்டரை மணிக்குத்தான் செல்ல வேண்டும். அதற்கு இன்னும் இரண்டரை மணி நேரம் இருக்கிறது. இருந்தாலும் அவன் மனது துடிக்கிறதே….!

 

ஒரு ஆறரைமணி போல எழுந்து வந்த தாய் வெளியே இருந்த மகனை கண்டு திகைப்புடன் அவனைக் கண்டு “ஏன் தம்பி சீக்கிரமாக போக வேணுமா?” என்றாா்.

 

“இல்லை ..நைட் தூக்கமில்லை  அது தான் சீக்கிரமாக ரெடி ஆகிவிட்டேன்.இப்போதே போக முடியாததல்லவா? அது தான் கொஞ்ச நேரம் லேட்டாகப் போகலாம் என்று நினைகிறேன்.” என்றான் மகன்.

 

“சரி சரி அம்மா ரீ போட்டுக் கொண்டு வருகிறேன் குடி.இன்றைக்கு அம்மா லேட்டா எழும்பினதால் ரிபன் கட்.” என்றவாறு சமையல்கட்டை நோக்கிச் சென்றாா்.

 

“ஓகே அம்மா நோ ப்ரொப்ளம்.”

என்றான். அவனுக்கு அறுசுவை உணவைக் கொண்டு வந்து கொடுத்தாலும் அவனுக்கு பசிக்காதே… அது அவனது தாய்க்கு புரியவில்லை.புரிந்திருந்தால் ஒரு வேளை தியா அவனுடன் இருந்திருக்க வாய்ப்புக்கள் சாத்தியமே. சிந்திய பாலுக்காய் வருந்தி பிரயோசனம் இல்லை என்பது அவனுக்கு தெரியும். என்றாலும் கடந்து போனவற்றைத்தானே மனம் நினைத்து மறுகுகிறது.

 

அவன் தாயாா் கொடுத்த ரீ யை குடித்துக் கொண்டிருக்கும் போது தூக்கத்தில் இருந்து எழுந்து வந்த தமக்கை இவனைப் பாா்த்து “ என்ன தம்பி நடு ராத்திரியே எழும்பி மேக்கப் போட்டுக் கொண்டு அது கலையக் கூடாது என்று உட்கார்ந்த வாக்கில் தூங்கினியா? என்றாள்.

 

‘ஆமாம் நான் என்ன பொண்ணா? மேக்கப் போட’ என்று அக்காவிடம் கூற நினைத்து விட்டு அதைக் கூறாது “அக்கா நீ காமெடி பண்ணுகிறாய் என்றால் முதல்லேயே சொல்ல வேணும்.இல்லை என்றால் நான் இது காமெடியா? இல்லையா ? என்று கென்பியூஸ் ஆக மாட்டேனா? என்றான் தம்பி.

 

“இது காமெடியாடா.”

 

பிறகு நீ காமெடி பண்ணலயா….?

 

அது தான் நான் தலைபாடா அடிச்சுக்கிறேன். கேட்கிறியா? நீ? என்றாள் தம்ககை.

 

என்ன? என்றவன் ஓ…என்று கூறிக்கொண்டு அத்தானை அடித்து களைத்து இப்பவெல்லாம் உன் தலையிலே

அடிச்சுக்கிறியா….? மை சிஸ்ரர்.என்றான்.

 

“டேய் காமெடியா ச்சு… சகிக்கல்லை.”என்றாள் அக்கா.

 

“சரி அக்கா நீ என்ன? சொல்லப் போகிறாய்.சீக்கிரம் சொல்லு.” என்றான் தம்பி.

 

நான் என்ன சொல்லுகின்றேன் என்றால் நீ சீக்கிரம் கல்யாணம் பண்ணுடா.இல்லை என்றால் ஒரு பொண்ணை லவ் ஆவது பண்ணுடா….? என்றாள்.

 

அவளது கதையை கேட்டவன் உதட்டில் கசந்த முறுவல் வெளிவர, அவனது முகம் சினத்தில் சிவந்தது.

“அக்கா ப்ளீஸ் இனிமேல் இப்படி கதைக்காதே அப்புறம் நான் காண்ட் ஆகினேன் என்றால் வீட்டுக்கு வரமாட்டேன்.” என்றான்.

 

டேய் என்னடா ? ஏண்டா இப்படி எல்லாம் பேசுகின்றாய். உன்னை நினைத்து அம்மா,அப்பா எவ்வளவு கவலைப்பட்டு யோசனை பண்ணுறாா்கள் என்பது உனக்கு தெரியும். ஆனால்  நீ எதுக்கு இப்படி பிடி கொடுக்காது இருக்கின்றாய்.”என்றாள்.

 

“நான் பிடி கொடுக்கவில்லை என்று சொல்லும் போது உன் மனச்சாட்சி உறுத்தவில்லையா…?” என்று சினந்தான். ஏற்கனவே நடந்த கல்யாணத்துக்கு பெயர் என்ன? அக்கா என்றான்.

டேய் அவளைத் தான் உனக்கு பிடிக்கவில்லை என்று தாம் தூம் என்று குதித்தாய். அவளை நடுத்தெருவில் விட்டு விட்டு ஏண்டா ? போனாய். என்று தமக்கை வேறு எதோ சொல்ல எடுக்கவும், அவர்களது தாய்  மறுபடியும் அவர்களது அருகில் வரவும் இவர்கள் பேச்சை விட்டனர்.

 

“அம்மா நான் கிளம்புகின்றேன் நைட் வர லேட்டாகும்.”என்றவன் காரை எடுக்க போனான்.

‘போடா போ இனி இங்கே தானே இருக்கப் போகிறாய்.எத்தனை தரம் டைவேட் பண்ணுவாய். மறுபடியும் வீட்டுக்கு வராமலா போகப்போகிறாய்.’ என்று கறுவிக்கொண்டாள் தமக்கை.

 

‘ஆமாம் அப்போது எனக்கு அவளைப் பிடிக்கவில்லை.இப்போது அவளை தவிர வேற யாரையும்

பிடிக்காது.’என்று கார் ஸ்ரேரிங்கில் கையை குத்தினான். நல்ல வேளை அவனை யாரும் பார்க்கவில்லை. பார்த்தால் பைத்தியம் என்று நினைக்கும் வகையில் இருந்தது அவன் செயற்பாடுகள்.

காலையிலே கடுப்பேற்றி விட்ட தமக்கை மேல் கொலைவெறியே வந்தது.

வீட்டிலே இருந்தால் அக்கா கேள்வி கேள்வியாய் கேட்கிறாளே என்று நேரத்தை கவனிக்காது கிளம்பி வந்த தன்னையே நொந்து கொண்டு காரை ஆபிசுக்குள்ளே விட்டான்.இவனைக் கண்ட காவலாளி இவனுக்கு சல்யூட் வைத்து குட்மோனிங் சொல்ல பதிலுக்கு குட்மோனிங் சொல்லிவிட்டு லிப்ட்டுக்குள் சென்று மறைந்தவன் மூன்றாவது நிமிடத்தில் அவனது காபினுக்குள் சென்றிருந்தான். அவன் சென்ற நேரம் ஆபிசில் ப்பியூன் கூட வந்திருக்கவில்லை.சலிப்புடன் தனது காபினுக்குள் சென்றமர்ந்தான். ‘காலையிலே எவ்வளவு  ஹப்பி மூட்ல இருந்தேன் இந்த அக்கா எல்லாத்தையும் கெடுத்து விட்டுட்டா….’ என்று அவளை மனதுக்குள் திட்டிக் கொண்டான்.