எல்லையற்ற பேரழகே!!!
அத்தியாயம் 6 :
வெளியே செல்ல பார்த்த நந்தினி நடையோ அர்ஜுனின் குரலில் தடை பட்டு நின்றது
காரணம் அவன் கேட்ட கேள்வியே
“நீ கண்ணம்மா தான?” என்ற அவன் கேள்வியில் உள்ளுக்குள் அவளுக்கு உதறலெடுத்தாலும் அதனை மறைத்து, ” இது என்ன க… கண்ணா என்ன பாத்து இந்த மாதிரி கேள்வி கேக்குற” என்று சோகமாய் எதிர்கேள்வி கேட்டவள் தன் நீலிக்கண்ணீரை விட அதை பார்த்தவனுக்கு அவளுக்கு ஆறுதல் சொல்ல கூட தோன்றாமல் ஏதோ ஒன்று தடுக்க, தன் தலை சிறிது சிறிதாக வின் வின் என்று வலிக்க அதனை பொறுக்க முடியாதவன்
“எனக்கு தல வலிக்குது நா தூங்கணும் ” என்று கண்களை மூட, அவனை திரும்பி கொலைவெறியுடன் பார்த்தவள் முகத்தை திருப்பிக் கொண்டு போனாள்
இங்கு இவனுக்கோ அவன் மனக் கண் முன் நெருப்பு புகையில் மூச்சு விட முடியாமல் தன்னை காப்பாற்றிய கண்ணம்மாவின் தீனமானே குரலே காதில் கேட்டது
அந்த குரலுக்கும் இவளின் குரலுக்கும் உள்ள வேறுபாடு….எதையும் யோசிக்க முடியாதவனாய் மீண்டும் தூக்கத்தில் மூழ்கினான்…
—–
“எங்களை மன்னிச்சுருமா…என் பையனால தான் உனக்கு இந்த நிலைமை..” என்று வருத்தத்துடன் பேசிய சரஸ்வதியையே பார்த்த கண்ணம்மா….அவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில்
“எனக்கு ஒன்னும் இல்லாம…பாவம் க…அது…அது அவருக்கு தான் ரொம்ப அடிபட்டுருக்கு….” என்று வேதனை பட…
அவளின் உண்மையான வருத்தத்தை பார்த்தவர்
“அவனுக்கும் சீக்கிரமே சரி ஆயிடும்மா….உன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லது நடக்கும்….இதுவே உன் இடத்துல வேற யாராவது இருந்தா, இந்நேரம் இதை பெரிய விஷயமா ஆகியிருப்பாங்க…ஆனா நீ இது எதுமே பண்ணாம அவனோட ஆரோக்கியத்துக்காக கவலை பட்டுட்டு இருக்க….உன் நல்ல மனசுக்கு ஒரு குறையும் வராதும்மா…. ” என்று ஆசிர்வதிக்க…
அதைக் கேட்டுக்கொண்டிருந்த சித்ரா….
“என்ன சொல்லி என்ன பிரயோஜனம்…..இவகுக்கு இன்னும் ஒரு வாழ்க்கை அமையலயே…எல்லாம் அந்த நெருப்பு காயத்துனால வர்றது….வைரவன் ஒருத்தனும் இவளை கட்டிக்க மாட்டிங்குறாங்க…இப்போ இந்த விபத்து வேற…” என்று மூக்கை உறிஞ்ச….
அர்ஜுனின் பெற்றோர் முன் அவளின் நிலையை சொல்லி அழும் தன் அம்மாவை பார்த்தவள் கோபத்துடன் பேச போக….அதற்குள் அருளே…
“சித்ரா….என்ன பேசுறதுனு ஒன்னு இல்ல..விசாரிக்க வந்தவங்க முன்னாடி இப்படியா அழுது பொலம்புவாங்க….” என்று கண்டிக்க…
அவர் மேலே பேசும் முன்….சரஸ்வதியே…
“இதுல என்ன இருக்கு அண்ணா….பெத்த மனசுக்கு தான் தெரியும்…புள்ளைங்க வாழக்கையை பத்தி, பயத்தை பத்தி..அவங்க சொல்றதுலயும் ஒரு அர்த்தம் இருக்குல்ல…”என்றவர்
“ஏன்மா…எதுக்காக ஆபரேஷன் வேணாங்குற…இந்த காலத்துல எது எதுக்கோ ஆபரேஷன் செஞ்சிக்கிறாங்க….நீ என்னடா?… உன் நல்லதுக்கு தானமா சொல்ராங்க…” என்று அக்கறையை பேச…அவரின் அக்கரையில் நெகிழ்ந்தாலும் கண்ணம்மாவிற்கு அவளின் காதலின் சின்னம் மறைவதில் விருப்பம் இல்லை..இதை வெளியே சொல்லமுடியாமல் தவித்தவள் அவரை பார்க்க…..
அவளின் கண்களில் சொல்ல முடியாத வேதனையை கண்டவர்….அவளை அணைக்க…அந்த ஆறுதலில் அவளும் சற்று தெளிந்து தன் மென்னகையை தந்தாள்…
அவளிடம் இருந்து விடை பெற்று வெளியே வந்த சரஸ்வதியிடம் அவள் கணவர்…
“ஏம்மா….இது வரை அவ்ளோ சீக்கிரம் யாருகிட்டேயும் பழக மாட்ட….அப்டி இருக்கும் போது இந்த பொண்ணு கிட்ட மட்டும் எப்படி இவ்ளோ தூரம் ஒட்டிகிட்ட…” என்று அதிசயமாய் கேட்க…
இவரோ…
“அது அப்டி தாங்க…ஒரு சிலரை பார்த்த உடனே மனசுக்கு புடிச்சிரும்..ஒரு சிலரை…பார்த்து அவங்க கிட்ட பேசி பழகுனதுக்கு அப்புறம் புடிக்கும்…ஒரு சிலரை ஏன்னே தெரியாம புடிச்சி போயிரும்…. ரொம்ப நாள் பழகின மாதிரி ஒரு உணர்வு வந்து ஏதோ ஒரு பாசம் நம்ம மனசுக்குள்ள இருந்து ஆழி பேரலை மாறி வந்து நம்மள சொழட்டி அடிக்கும்…இந்த பொண்ண பாக்கும் போது எனக்கு அப்டி தாங்க இருக்கு….
என்னன்னே தெரியாம…இந்த பொண்ணுகிட்ட உறவாட சொல்லி என் மனசு ஏங்குது….என்னவோ எனக்கும் அந்த பொண்ணுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குன்ற மாதிரி உள் மனசு அடிச்சிட்டே இருந்துது…. அதான் எனக்கே தெரியாம அந்த மாதிரி நடந்துக்கிட்டேன்….ஆனா ரொம்ப நல்ல பொண்ணுங்க….” என்று கண்ணம்மாவை பற்றி சொல்ல…
அவரும் அதனை கேட்டு புரிந்த வண்ணம் தலை அசைத்தார்….
———–
“ஏங்க…சம்பந்திமா என்ன சொல்ராங்க?…” என்று கேட்க..
நந்தினியின் தந்தை ரகுபதியோ…
“அவங்க என்ன சொன்னா எனக்கு என்ன?….என் பொண்ணு விருப்பப்பட்ட மாதிரி இந்த கல்யாணம் நடந்தே தீரும்….” என்றவர் முகமோ, வேங்கையின் சீற்றத்தோடு விகாரமாய் இருந்தது….
மனமோ அவரின் திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்று கணக்குபோட்டுக் கொண்டிருந்தது….
—பாரதி கண்ணம்மா…