அத்தியாயம் 7
ஆழ்கடல் போல் மனம் அமைதியடைந்தவனாக ஷரப் ஆன்ஷியை காண அவள் இருந்த அறைக்கு வர அங்கே அவள் இல்லை. அவள் அணிந்திருந்த ஆடை மாத்திரம் இருக்க அதை கையில் எடுத்தவன்.
“வ்ருஷாத் அவ கண்ணு முழிச்சி துணியையும் மாத்தி இருக்கா. நாம கடத்தினதா நினைச்சி இங்கிருந்து தப்பிச்சு போக பார்ப்பா. நம்மாளுங்கள மீறி போக முடியாது இருந்தாலும் வேட்டை நாய் கிட்ட மாட்டி அவளுக்கு ஏதாச்சும் ஆகிடுமோனு பயமா இருக்கு சீக்கிரம் எல்லாரையும் அலாட் பண்ணு”
ஷரப் வ்ருஷத்துக்கு கட்டளையிட்டவாறே வந்தவன் வரவேற்பறையில் உள்ள ஸ்விட்போர்ட் அருகில் வந்து ஒரு ஸ்விட்சை தட்டி விட அந்த விருந்தினர் மாளிகையில் உள்ள அனைத்து விளக்குகளும் ஒளிர்ந்தன. அலாரம் மாதிரி ஒலி எழுப்ப கூடிய ஸ்விட்ச்சில் வ்ருஷாத் கைவைக்க போக
“முதல்ல நம்மாளுங்கள அலர்ட் பண்ணு அவ எந்த ஆபத்தும் இல்லாம எனக்கு வேணும்” ஷரப் சொல்லி கொண்டிருக்கும் போதே வ்ருஷாத் ஓட, ஷரப்பின் உள் மனமோ அவள் இங்கில்லை என்று ஓலமிட்டது.
மாளிகையினுள் தேடுதல் வேட்டை நடக்கும் போதே “இல்லை” “இல்லை” என்று ஒவ்வொரு இடத்தில் இருந்தும் பதில் வர ஷரப் வண்டியை ஆன்ஷியின் வீட்டை நோக்கி செலுத்தினான். அவன் தனியாக செல்வதை பார்த்து ஐந்து அடியாட்கள் ஓடிச் சென்று அவனின் வண்டியில் தாவி ஏறி இருந்தனர்.
மனீஷின் வீட்டை அடைந்தவன் எந்த உத்தரவும் போடவில்லை. படியில் சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தான். அடியாட்களோ அவன் சொல்லும் வரை தாமதிக்காமல் வீட்டினுள் புகுந்து தேடி விட்டு “யாருமில்லை”. எனக் கூற அங்கிருந்து செல்ல மனமில்லாது, எதையோ விட்டுச் செல்வதை போன்ற உணர்வுடனையே! கிளம்பிச் சென்றான்.
மீண்டும் விருந்தினர் மாளிகைக்கு வந்தவனை “ஆன்ஷி இங்கு எங்குமே இல்லை” என்ற வ்ருஷாத்தின் பதிலே வரவேற்றது.
“இங்க இல்லனா? எங்க மாயமா போய்ட்டா? cctv தரவா செக் பண்ணிட்டியா?
“ஹா சார் எந்த cctv யிலும் அவங்க இல்ல” அடியாட்கள் பக்கத்தில் இருப்பதால் வ்ருஷாத் ஷரப்பை சார் என்று அழைக்க
பேசியவாறே கதிரையில் வந்தமர்ந்தவன், முன் புறம் சாய்ந்து கையால் முகத்தை மூடி சில நிமிடங்கள் சிந்தித்தவன்.
“எந்த cctv லையும் அவ போனது இல்லனா cctv எங்க இருக்குனு முன் கூட்டியே அவளுக்கு தெரிஞ்சிருக்கணும், இல்ல யாராவது அவளுக்கு ஹெல்ப் பண்ணி இருக்கணும். யாரந்த கருப்பாடு வ்ருஷாத் சீக்கிரம் அந்த கருப்பாடு என் முன்னாடி இருக்கணும். அண்ட் ரோட் சைட்ல உள்ள cctv செக் பண்ணிட்டியா?
வ்ருஷாத்தை தலை நிமிர்த்தி பாத்து கேக்க “இல்லை ” என்று சொல்ல அஞ்சியவன்.
“இனிமேல் தான்” என்றிலுக்க. அவனை உறுத்து விழித்து cctv அறைக்குள் சென்று மாளிகையின் வெளிப் புறமுள்ள எல்லா காமெராக்களையும் செக் செய்ய வேலை செய்யும் ஆட்கள் குடியிருப்பு சுவர் புறமாக உள்ள காமெராவில் அவள் பாதையில் ஓடுவது தெரிந்தது. அதை அவன் கண்டு பிடிக்க எடுத்த நிமிடங்களில் ஆன்ஷி லாரியில் ஏறியிருந்தாள்.
“வ்ருஷாத் அந்த துணி மாத்த சொன்ன பொம்பளைய வரச்சொல்லு” ஷரப்பின்குரலில் இருந்தது என்ன வென்று வருஷத்துக்கு புரியவில்லை. துணி மாற்றிய அந்த வயதான பெண்மணி வர
“உங்களுக்கு துணிய தானே மாத்தி விட சொன்னேன். தப்பிச்சு போக வழி காட்ட சொல்லலையே!” அவர் வெலவெலத்து போய் அவனை பார்க்க, எழுந்து வந்தவன் அவரிடம் “அவளை நீங்க எங்கயாவது அனுப்பி வச்சீங்களா? இல்ல அவ எங்க போறான்னு சொல்லிட்டு போனாளா?” அவனுடைய நேரடியான கேள்வியை அப் பெண்மணி எதிர்பாக்க வில்லை போலும் வாய் தந்தியடிக்க பயத்தால் உடல் நடுங்கியவாறே இருந்தவர்.
“நான் நான்” என சொல்வதையே சொல்லியவர் வேறேதும் சொல்லாமல் தடுமாற
“வ்ருஷாத் வேலையாட்கள் வந்து போக பின் புறமா ஒரு சின்ன கேட் போட்டிருக்கே உடனே அத மூடிட்டு யாரானாலும் முன் கேட் வழியாகவே வந்து போகட்டும்” ஷரப் உரத்த குரலில் கத்த அப் பெண்மணி மயங்கி விழுந்தார்.
“சே.. இவங்க கண் முழிச்சதும் நா கேட்ட கேள்விக்கு பதில் வரணும்” என்றவன் மீண்டும் மாளிகையிலிருந்து வெளியேறினான்.
“ஆமா அம்மணி உன் பேரென்ன?” டைவர் கேட்டதும் ஆன்ஷி எழுதிக் காட்டினாள்.
“என்ன பேரோ அழகா தமிழ்ல பேர் வைக்காம” டைவர் அழுத்துக் கொள்ள
“சரி ஊர் போய் சேரும் வர தமிழ் பேர் வச்சி கூப்பிடுவோம்” கிளீனர் சொல்ல
“உனக்கு பிடிச்ச பேர் ஏதாவது இருக்கா?” டைவர் கேக்க ஆன்ஷி “தெரியாது” எனும் விதத்தில் தலையாட்டினாள்.
“யோவ் மாமா அங்கன பாரு போலீஸ் நிக்குறாங்க” கிளீனர் தடுமாற
“ஏன்டா நாம கள்ள கடத்தல் பண்ணுற மாதிரி பயந்து சாகுற நீயே காட்டிக் குடுத்துடுவ போலயே!”
“நிறுத்து நிறுத்து வண்டி எங்க போகுது” ஏட்டு
“கோயம்புத்தூர்” கிளீனர்
“எங்க இருந்து வரீங்க” ஏட்டு
“ராஜஸ்தான்” டைவர்
“பொண்ணு யாரு” ஏட்டு
“என் தங்கச்சி” கிளீனர்
“என் மச்சினிச்சி” டைவர்
“தங்கச்சியா? மச்சினிச்சியா?” ஏட்டு
“இவனுக்கு தங்கச்சி எனக்கு மச்சினிச்சி” டைவர்
“இவன் கலரும் இந்த பொண்ணு கலரும் செட்டாகளையே !” லத்தியை நாடியில் தட்டியவாறு கேக்க
“அது வந்து அது வந்து” கிளீனர் தலையை சொரிந்த வண்ணம் யோசிக்க
“மம்மி மில்க் டாடி டிகாசனா?” ஏட்டே பதில் சொல்ல
“ஆமா ஆமா” கிளீனர்
“என்னாங்கடா என்ன நம்ப சொல்லுறீங்களா?”
“சார் சார் இதைப் பாருங்க இது என் பொண்டாட்டியும் பொண்ணுங்களும். பொண்டாட்டி சிவப்பா இருக்கா பொண்ணுங்க அவ தம்பி இவன மாதிரி கருப்பா இருக்காளுங்க. இவ என் பொண்டாட்டி தங்கச்சி தானுங்க” டைவர் தனது குடும்ப புகைப் படத்தை காட்ட ஒரு வாறு சமாதானமடைந்தவர்
“சரி சரி போய் எல்லா ஆவணங்களையும் எடுத்துட்டு வா. ஐயா வைட்டிங்”
“என்னய்யா எல்லாம் தரவா செக் பண்ணிட்டீங்களா?” சப்பின்ஸ்பெக்டர்
“ஆமா சார் சந்தேகப்படும் படியா ஒன்னும் இல்ல” ஏட்டு
“சரி சரி வண்டிய எடுக்க சொல்லு நெறய வண்டீங்க நிக்குது பாரு ராஜஸ்தான்ல வேற அரச குடும்பத்து பொண்ண காணமாம். எவனாச்சும் தூக்கிட்டு போய்ட்டானோ என்னமோ” சப்பின்ஸ்பெக்டர்
‘என்ன மாமா ரெண்டு நாளா எத்துன ஸ்டேட்ஸ் தான்டி வந்தோம் நம்ம ஊரு போலீஸ் மட்டும் வெரப்பா வேல பாக்குது” கிளீனர்
“கத்தாம வாடா இந்த பொண்ண சேர்க்க வேண்டிய எடத்துல சேர்த்துடு, பொருளை ஒப்படைச்சிட்டு வீட்டுக்கு வேற போகணும்” டைவர்
“நாங்க மட்டும் என்ன காட்டுக்கா போக போறோம்” கினார் புலம்பியவாறே வண்டியில் ஏற வண்டி ஊருக்குள் சென்றது.
‘ரெண்டு நாளாகுது அவளை பத்தின எந்த தகவலும் இல்ல. எங்க போய் இருப்பா?” ஷரப் மது பாட்டிலும் கையுமா வ்ருஷாத்தை வசை பாட அவனின் காது கொடுத்து கேக்க முடியாத சொற்களால் முகம் மாறாது இருக்க பெரும் பாடு பட்ட வ்ருஷாத்
“அவங்க பதிமூணுவயசுக்கு அப்பொறம் ஸ்கூல் கூட போனதில்லை மனீஷ்கு சொந்த பந்தம்னு யாருமில்ல இருந்தாலும் அவங்க கிட்ட போய் இருப்பாங்கன்னு தோனல. அந்தம்மாவோட சொந்த பந்தங்கள் எங்க இருக்காங்கனு தெரியல. அந்தம்மா இப்போ இருக்குற நிலைமையில் கண்ணு முழிப்பாங்கனே சந்தேகமா இருக்கு. அவங்க பின்மண்டை உரல்ல மோதியதால் சுயநினைவில்லாம இருக்காங்க டாக்டர்ஸ் வேற கண்ணு முழிச்சா தான் என்ன வேணாலும் சொல்லலாம் காப்பாத்துறது கஷ்டம்னு, இன்சிடென்ட் நடந்த உடனே கொண்டு வராம அரை மணி நேரமா என்ன பண்ணீங்கன்னு கேக்குறாங்க”
“சொல்ல வேண்டியது தானே அவ பொண்ண காப்பாத்த போய்ட்டேனு” ஷரப் கடுப்பாக மொழிய
“என்ன செய்வியோ ஏது செய்வியோ எனக்கு தெரியாது அவ எனக்கு வேணும் பாட்டி வேற போன் பண்ணிகிட்டே இருக்காங்க, எடுத்தா யொத்தா பத்தி மட்டுமே பேசி என் மூட கெடுத்துடுவாங்க. எனக்கு யொத்தாவும் வேணும், அவளும் வேணும் என்ன செய்யலாம்?” ஷரப் மதுபான பாட்டிலை வாயினுள் சரித்தவாறே சொல்ல வ்ருஷாத் முழி பிதுங்கி நின்றான்.
“என்ன ஷரப் ரெண்டு நாளா அரண்மனைக்கே வராம எங்க போயிட்ட” வசுந்தராதேவி கேள்வி கேக்க ஷரப் பாட்டுக்கு படியேறி மேலே சென்று விட்டான்.
“என்னாச்சு இவனுக்கு கேள்வி கேட்டா பதில் சொல்லாம போறான். ஒருநாளும் இப்படி இருந்ததில்லையே!” வசுந்தராதேவி யோசனைக்குள்ளாக
“அம்மா ஷரப்புக்கு ஒரு கல்யாணத்த பண்ணினா என்ன?” பத்மா யோசனை சொல்ல
“யொத்தா இல்லாம அவன் கல்யாணம் நடக்காது” முடிவாய் வசுந்தராதேவி சொல்ல
“அப்போ அவனுக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது” இவர்களின் பேச்சை கேட்டவாறே வந்த தேஜ்வீர் ” முணுமுணுத்தான்.
“பத்மா வைஷு வேற எக்ஸாம் முடிஞ்சி லீவுல வருவா அவளுக்கும் கல்யாணம் பண்ணனும் பெத்த பொண்ண பத்தி கொஞ்சமாவது அக்கறை இருக்கா? உனக்கு” தேஜ்வீர் வசுந்தராதேவியை பார்த்தவாறே கூற
கணவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்துக் கொண்ட பத்மா “அவ படிப்பு முடியட்டும்” என்று சொல்ல
“என் பேத்திக்கு எப்ப கல்யாணம் பண்ணனும்னு எனக்கு தெரியும் முதல்ல நீ நல்ல அப்பாவா நடந்துக்க” வசுந்தராதேவி எரிச்சலாக சொல்ல
“ஆளாளுக்கு என்னையே குத்தம் சொல்லுங்க என்றவாறே தேஜ்வீர் அகன்றான்.
“இந்த அட்ரஸ் தான் மா. வீடு நல்ல பெருசா தான் இருக்கு நீ உள்ள போ நாங்க இப்படி ஓரமா இருக்கோம்” டைவர் சொல்ல ஆன்ஷி வாயிலில் அருகே செல்ல காவலாளி
“யாரும்மா நீ இங்கயெல்லாம் நிக்க கூடாது போ போ” ஆன்ஷியை துரத்த பேச முடியாததால் ஆன்ஷி தடுமாற அவள் அருகே ஓடி வந்தார் டைவர்.
“யோவ் யாரப் பாத்து யா வெளிய போணு தொரத்துற அவங்க இந்த வீட்டு பொண்ணு யா” டைவர் குரல் கொடுக்க
“எத்தன வருசமா இந்த வீட்டுல இருக்கேன். இந்த வீட்டு மனிசங்கள எனக்கு தெரியாது” காவலாளி முறைக்க அங்கே வந்து சேர்ந்தார் சிவஞானம்.
“யாருப்பா அது, என்ன சத்தம்?” என்றவாறே அவர் வர தனது தாத்தாவை கண்டு கண்களில் நீர்கோர்க்க ஆன்ஷி சைகையால் ஏதோ சொல்ல முயற்சிக்க
“ஏதாச்சும் உதவி வேணுமம்மா” என்றவர் “பராமூ” என்று உள்ளே பார்த்தவாறே குரல் கொடுக்க “பராமூ” என்று அவரால் அழைக்கப் படும் அவரின் மனைவியும் ஆன்ஷியின் பாட்டியுமான பரமேஸ்வரி பாட்டி வெளியே வர அவரை கண்ட ஆன்ஷி தன் தாய் பாட்டி மாதிரி என நினைத்து தாயின் நியாபகமும் அதை தொடர்ந்து தாய்க்கு நடந்த கொடுமையும் நியாபகத்தில் வர வாயில் கம்பியை பிடித்தவாறே கீழேயே சரிந்தது அழ ஆரம்பித்தாள்.
அவள் அழுவதை கண்ட பரமு பாட்டி கவலையடைந்தவராக “இந்த பொண்ணுக்கு என்ன கஷ்டமோ முதல்ல உள்ள வாம்மா ஏதாச்சும் சாப்பிடு” என்று அன்பாக அழைக்க காவலாளியும் வாயிலை திறந்து விட்டான்.
உடனே கண்ணை துடைத்துக் கொண்டவள் தான் கொண்டு வந்த மஞ்சாப் பையிலிருந்து மீனாட்ச்சியின் புகைப் படத்தை காட்டி அன்னை என்று சைகையால் சொல்ல, அதே நேரம் ஆன்ஷியை பிடித்து கீழே தள்ளி இருந்தாள் அந்த வீட்டு மருமகள் லதா.