எல்லையற்ற பேரழகே!!!
—பாரதி கண்ணம்மா…
அத்தியாயம் 5 :
புகழ் பெற்ற மருத்துவமனையின் முன் விலைபதிப்பற்ற இரண்டு வாகனம் அதி வேகத்துடன் வந்தது…அதில் இருந்து இறங்கியவர்கள் முகத்தில் கவலையும் பதட்டமும் சூழ, விரைந்து உள்ளே சென்றனர்….
அவசர சிகிச்சை பிரிவில் இருந்த தன் மகன் அர்ஜுனை காண முடியாமல் பெற்றோர் இருவரும் கலங்க,உள்ளே இதை எதையும் அறியாத அர்ஜுனோ, கண் மூடி மயக்கத்தில் இருந்தான்….
இங்கு அதே மருத்துவமனையில் இருந்த ஒரு அறையில் கை கால்களில் அடியுடன், மனம் முழுவதும் கண்ணா கண்ணா…. என்ற முனங்கலுடன் வேதனையில் கண் மூடி இருந்தாள் நம் கண்ணம்மா….வெளியே கவலையுடன் கண்ணம்மாவின் பெற்றோர் இருந்தனர்…
யாரோ ரோட்டில் செல்பவர்கள் இவர்களின் நிலையை பார்த்து இவர்களை அந்த மருத்துவமனையில் சேர்த்தது மட்டும் அல்லாமல் அர்ஜுன் மற்றும் கண்ணம்மாவின் குடும்பத்திற்கு தகவல்களையும் தந்தனர்…..
“யார் கண்ணு பட்டுச்சோ, என் பையனுக்கு இப்டி ஆயிடுச்சே..” என்று அழும் மனைவியை பார்த்த விநாயகம்….
“அதெல்லாம் ஒன்னும் இல்ல, சரஸ்வதி..இங்க பாரு சீக்கிரமே அவன் கண்ணு முழிச்சிடுவான்….” என்று தன் மனம் கலங்கியதை மறைத்து அவருக்கு ஆறுதல் அளிக்க…. அந்த இன்னொரு வாகனத்தில் வந்த நந்தினியின் பெற்றோருக்கும் நந்தினிக்கும் இந்த கல்யாணத்தில் ஏதேனும் குளறுப்பிடி ஆகி, நின்றுவிடுமோ என்று பதட்டத்துடன் காத்திருந்தனர்….
இதில் ஏற்கனவே அர்ஜுனை சேர்க்கும் போது கண்ணம்மாவையும் சேர்த்திருப்பதை அறிந்த நந்தினிக்கு மிளகாயை உடம்பில் பூசியது போல் எரிய…. எங்கே இத்தனை நாள் தான் செய்த அத்தனை முயற்சியும் வீணாகிடுமோ என்ற பயத்தில், பதட்டத்தில் இருந்தாள்..
சிறிது நேரத்தில் கண் விழித்த கண்ணம்மா முதலில் தேடியது தன் கண்ணனை தான்….
பொறுக்க முடியாத வலி இருந்தும்… தன் கண்ணனிற்கு எண்ணானதோ என்று பேதையவள் பதறி துடிக்க…தன் வலியையும் மறந்து அவனை காண சென்றாள்…. அனைவரின் மறுப்பையும் மீறி….
அங்கு அப்போது தான் சிறிது ஓய்வெடுக்க விநாயகம் சரஸ்வதியை அழைத்து சென்றார்..அதனால் எந்த வித தடையும் இன்றி உள்ளே சென்றவள்…. அங்கிருந்த செவிலியரிடம் அனுமதி வாங்கி உள்ளே சென்றாள்…
அவனை நெருங்க நெருங்க….கண்ணம்மாவின் உள்ளம் சிறிது சிறிதாய் நொறுங்கி கொண்டே வந்தது…காரணம் அவன் இருக்கும் நிலைமை…
தலையில் பெரிய அளவில் கட்டு போட்டு இருக்க, கை கால்களில் அங்கங்கு சீராய்ப்புகளுடன் கண் மூடி இருந்தான், ஆக்சிஜனின் உதவியுடன்…
“க..கண்ணா…..” என்று அந்த வார்த்தைக்கே வலிக்குமோ என்ற வண்ணம் மென்மையாய் அழைக்க….அவள் அழைத்ததை அவன் மனம் உணர்ந்தோ என்னவோ கருவிழி மெல்ல அசைய….
அதனை கண்டவள் மனம் மகிழ்ச்சியில் துடித்தது….மெதுவாய் அவன் அருகினில் சென்றவள் அவனின் அடிபடாத கையை தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்….
அவள் வேண்டுமானால் அமைதியாய் இருக்கலாம்…ஆனால் அவள் உள்மனம் எப்போதும் போல் அவனிடம் தன் உரையாடலை ஆரம்பித்திருந்தது….
‘உனக்கு…இப்டி ஆகும்னு நான் நெனச்சிகூட பாக்கல கண்ணா…ரொம்ப வலிக்குதா..ஒன்னும் இல்ல சீக்கிரமா சரி ஆய்டும்….நீ சீக்கிரமா கண்ணு முழிச்சிடுவ…எனக்கு தெரியும்…ஏன்னா உனக்காக இந்த உசுர குடுக்க தான் நான் இருக்கேன்ல….அதனால உனக்கு ஒன்னும் ஆகாது…
ஆனா….உன்ன இந்த நிலமைல என்னால பாக்க முடில கண்ணா…மனசு வலிக்குது….நான் இருக்க வரைக்கும் உனக்கு ஒன்னும் ஆகாது கண்ணா…இந்த கண்ணம்மா இருக்க வர….இந்த கண்ணனுக்கு ஒன்னும் நடக்க விடமாட்டா….நீ வேணும்னா பாரு கண்டிப்பா நீ சீக்கிரமா கண் முழிச்சிடுவ….’ என்று தன் மன குமுறலை தன் கண்ணன் மனதிடம் சொல்லியவள்…..
அவனிடம்….
“உயிர் போகும் வலியையும் தாங்குவேன்….உன் ஒற்றை சிரிப்பிற்காக….” என்றவள்
அவன் நெற்றியில் அவனுக்கே தெரியாமல் தன் இதழ் முத்தத்தை வைக்க..அது தந்த உணர்வில் அவள் சொன்ன செய்தியில் முயன்று தன் கண்களை திறக்க முயற்சிக்க….அப்போது தான் தன் நிலையை உணர்ந்தாள்…
சிறிது நேரம் கண் முழித்து பார்த்த அர்ஜுனிற்கு அவன் முன் இருந்த உருவம் ஏமாற்றத்தையே தந்தது….காரணம்….அங்கு அவன் கைகளை பிடித்துக் கொண்டிருப்பது நந்தினி….
“அர்…அர்ஜுன்…முழிச்சிட்டியா…என் வேண்டுதல் பலிச்சிடுச்சி..நல்ல வேல உனக்கு ஒன்னும் ஆகல….” என்றவாறு அவன் கைபிடித்து பேச…அவனோ அவளை வேற்று கிரகவாசியை பார்ப்பது போல் பார்த்து வைத்தான்….
கூடவே….அவன் மனமோ….தான் கண் மூடி இருந்த வேலையில் தான் காதுக்குள் கேட்ட தன் கண்ணம்மாவின் குரலை நினைவுக்கு கொண்ட வர முயன்று பார்க்க…அவன் மூளையோ அவன் கண்ணம்மா சொன்ன கவிதையிலேயே உழன்றது….
இத்தனை அன்புடையவளா என் கண்ணம்மா….என்று அவன் மனம் உழல…அவன் கண் முன் இருந்த உருவத்தை அவன் மனம் தான் கண்ணம்மாவாக ஏற்க முடியாமல் தவிக்க…அவளோ
“என்ன ஆச்சு அர்ஜுன்?…” என்று கேட்க
“இ..இல்ல….இதுக்கு முன்னாடி யாராவது வந்தாங்களா?..” என்று தன் கேள்வியை கேட்க..
இவளுக்கு சற்று முன் அவசரமாய் கண்ணம்மா வெளியேறியது நினைவில் வந்து போனது…மனதில் ஏதோ கணக்கு போட்டவளாய்
“இல்ல அர்ஜுன்..நான் தான் ரொம்ப நேரமா நீ கண்னமுழிக்கிறதுக்காக இங்க உன் கைய புடிச்சிட்டு காத்திட்டு இருக்கேன்…” என்று சொல்ல
அவனோ
“அப்போ..அந்த கவிதை….” என்று சொல்ல வர..
அது தெரிந்தால் தானே அவள் சொல்வதற்கு…
அவனை சமாளிக்கும் விதமாக…
“நீ கண்னமுழிச்சதை வீட்ல முதல்ல சொல்லணும்…” என்றவாறு அந்த இடத்தை விட்டு காலி செய்ய போனவள், அவனின் அடுத்த கேள்வியில் மின்சாரம் தாக்கியதை போல் அதிர்ந்து விழித்தாள்….
—கண்ணன் வருவான்…