அத்தியாயம் 2
என் இதயத்தீவில்
என் அனுமதியின்றியே
என்றும் உன் ராஜாங்கம்…!
இதை இம்சையென்று
சொல்லி சலிப்பதா.??
இல்லை இனியவன் நீ தரும்
தித்திப்பு என்றே ரசிப்பதா..??
நந்தவனம் அதில் தான்
நானும் வீற்றிருந்தாலும்
நாயகன் உன் நினைவிலே தான்
நனைந்து போகிறேன்..!!
இரவின் ஆழ்ந்த தூக்கத்திலும்
இனிமையாய் உன் கனவினை மட்டுமே
இறைவனிடம் யாசிக்கிறேன்..!
இது அநியாயம் தான் என்றறிந்தும்
இவள் காதலின் போதையில்
சிக்கித்தவிக்கிறாள்…!!
அவனோ தொலைவில் இருந்தாலும்
அருகில் நின்றாலும் அழமான
காதல் எனும் காந்த விசையில்
ஈர்த்துக் கொண்டே இருக்கிறேன்..!!
முடிவிலியாய் தொடர வேண்டும்
இதயக் கள்வன் இவன் தொல்லை ..!!
ரிப்பீட் மோடில் இசைத்துக்கொண்டிருந்தது பாடல்..!!
தனக்காக அவள் ரசித்து ரசித்து எழுதிப்பாடிய வரிகள்..!!
கண்களின் ஓரம் நீர் துளிர்க்க, “எப்படி கண்ணம்மா உன்னால் என்னைவிட்டுப்போக முடிந்தது..??”, கடந்த ஒன்றரை வருடமாக தன்னுள்ளே அவன் கேட்டுக்கொள்ளும் கேள்விதான்..
உயிரருக்கும் வலியைப் பரிசாக அளித்திடும் கேள்விதான்.. இருந்தும் அந்தக் கேள்வி நித்தமும் தோன்றி அவன் மனதை வேரருத்தது..
அதன் தாக்கம் அவள் முகத்தில் பிரதிபலிக்க சிவந்த அவனது முகம் கறுக்கத்துவங்க அவனது கைகளை வருடியது அந்த முதிய விரல்கள்..
“தா..த்தா.. ஒன்னுமி..ல்லை.. ஐ ஆம் ஆல் ரைட்..”, தனக்குள் இருக்கும் எதையும் அவன் வெளியே காட்டிவிடக்கூடாதென்று மூடி மூடி மறைத்து முகமூடி அணிந்துகொண்டாலும் கண்டுபிடித்துவிடுவார் தாத்தா..
“ஒரு எட்டு பேத்தியைப் பார்த்துட்டுத்தான் வாயேன்டா..”, ஆதங்கமாக அவர் சொல்ல..
இடம் வலமாக தலையசைத்தவன், “ம்..ஹூம்.. என்னைவிட்டு அவளாத்தானே போனா.. அவளே தேடிவரட்டும் என்னை..”, நானாக அவளை இழுத்து வந்தாலொழிய அவள் தன்னிடம் வரமாட்டாள் என்று தெரிந்தும் பிடிவாதத்தின் மொத்த உருவமாய் அவன் சொல்ல..
“உன்னை நீயே கொடுமைப்படுத்திக்கற தம்பி.. அவ இருக்கற இடம் உனக்குத் தெரியலனாக்கூட பரவாயில்லை.. தெரியும் உனக்கு.. இருந்தும் உனக்கு அவளைப் போய் பார்க்கக்கூட மனசில்ல அப்படித்தானே..??”
“என்னது..?? மனசில்லையா எனக்கு..??”, மனதிற்குள் கேள்வி எழுப்பிக்கொண்டவன் அவரைப்பார்த்து விரக்தியாக புன்னகைத்துவிட்டு தளர்ந்து எழுந்து செல்ல..
தாத்தாவைப் பார்க்கவே முடியவில்லை..
பதின்பருவ வயதில் பெற்றோரை இழந்தவன்.. இன்று துணையிருந்தும் இல்லாமல்..
ஏனோ மனது பொருத்துக்கொள்ளவில்லை அவருக்கு..
இவன் பிரச்சனையை சீக்கிரம் சரிசெய்துகொள்வான் என்று நினைத்திருக்க.. தொலைத்த இடத்தைவிட்டு ஒரு ஜான்க்கூட நகராதது ஒருவித எரிச்சலை விதைத்திருந்தது தாத்தாவிற்கு..
அவள் இருக்கும் இடம் தெரிந்தாலாவது அங்கு சென்று அவளை சமாதனப்படுத்தி இங்கு அழைத்துவரலாம்..
ஆனால் எதுவும் தெரியாதே..
தாத்தாவிற்கு மட்டுமல்ல..
அவள் தாய் தந்தையென ஒருவருக்கும் தெரியாது..
அனைவரிடமிருந்தும் அவள் இருக்கும் இடத்தைப்பற்றி மூச்சுவிடவில்லை அவன்..
அழுத்தம்..!! மஹா அழுத்தம்..!!
அனைவரிடமும் அனைத்தையும் மறைத்து அவன் என்ன சாதித்துவிட போகிறானாம்..??
ஒன்றுமே இல்லை..!!
வேதனை வேதனை வேதனை மட்டுமே..!! அவன் அனைவருக்கும் இனாமாக அளித்தவொன்று அது மட்டுமே..
“ஏ..னுங்..க..?? எவ்ளோ நேரம்தான் அவன் போன திக்கையே (திசையையே) பார்த்துட்டு இருப்பீங்க..??”
“தெரியல பத்மா..”
“என்ன பதிலாம் இது..?? ஒரு இரண்டு வார்த்தையில் தனது மனதிலிருக்கும் அத்தனை எண்ணங்களையும் வெளிப்படுத்திவிடமுடியுமா ஒருவரால்..??”, ஆமென்றுதான் தோன்றியது பத்மாவதிக்கு..!!
கவலை கோபம் இயலாமை எரிச்சல் சஞ்சலம் பயம் என தனது அனைத்து மனக்குமுறல்களையும் வெளிப்படுத்தியிருந்தார் ராஜசேகர்..!!
“எல்லாம் சீக்கிரம் சரியாயிடுங்க..”, வேறொன்றும் சொல்லத்தோன்றவில்லை பத்மாவிற்கு..
“ஒன்றரை வருஷமா இதைத்தான் பத்மா நீயும் சொல்லிட்டு இருக்க.. ஆனா ஒன்னுமே நடக்கல.. அவனைப் பார்த்தியா.. எப்படி இருந்த பிள்ளை.. இதுவரை அவன் முகத்துல தாடியோ.. சட்டையில ஒரு சுறுக்கலோ பாத்திருக்கியா நீ..??”
“………………………………….”
“எப்போ அவ இவனைவிட்டுப் போனாலோ சிரிச்சுட்டே இருந்த முகம் சிரிப்ப மொத்தமா தொலச்சு.. ஏனோதானோன்னு அரை வயிறு கால் வயிறுன்னு சாப்பிடாமல் கறுத்துப்போய்.. பஞ்சத்துல அடிப்பட்டவன் மாதிரி கெடக்கறான் அந்தப்புள்ள நெனப்புல.. இம்புட்டு பாசம் வெச்சிருக்கவன் அவளைப் போய்க்கூட்டிட்டு வரலாம்ல..?? அதுவும் இல்லை.. அவன் கஷ்டப்படறது பத்தாம சுத்தியிருக்க எல்லாரையும் கஷ்டப்படுத்தறான்.. இவன் பண்றதெல்லாம் பார்க்கும்போது ஒரு சமயம் பாவமா இருந்தாலும் பல சமயம் கோபமாவும் எரிச்சாலும் வருது.. ஓங்கி நாலு போட்டாவது அவளைப்போய்க்கூட்டிட்டு வரச்சொல்லனும்னு மனசு அடிக்குது..”, என்றவருக்கு மூச்சுவாங்கத்துவங்க..
பதறிவிட்டார் பத்மாவதி..
“த..ம்பீ.. தம்..பீ..”, அவரிட்ட கூச்சலில் அவன் அங்கு வந்து சேர.. தாத்தாவின் நிலையுணர்ந்து அவசரமாக அவரது இன்ஹேலரை எடுத்து குலுக்கி அவருக்குக்கொடுத்து.. நெஞ்சை நீவிவிட்டு.. கைகாலகளை பரபரவென தேய்த்துவிட்டு அவரை சமநிலைப்படுத்துவதற்குள் ஒருமணிநேரம் ஓடிவிட்டது..
அதற்குள் அவனது பாட்டி அவனை ஒருவழி செய்திருந்தார்..
தன் மொத்த சக்திகளையும் இழந்துவிட்டதுபோல் தாத்தா படுத்திருக்க..
எல்லாவற்றிற்கும் இவன்தான் காரணம் என்பதுபோல் பாட்டியின் மனவோட்டம்..
அவனை முறைப்பதும்.. தாத்தாவைப் பார்ப்பதுமாக அவர் இருக்க..
பாட்டியின் குற்றச்சாட்டுப் பார்வையை ஏற்கமுடியாதவனாய் இறுக்கையில் தலைசாய்த்து விட்டத்தை (சீலிங்க்) வெறிக்கத்துவங்க..
சில நிமிடங்களில் கண்த்திறந்திருந்தார் தாத்தா..
கவலையாக தன் முன்னே அமர்ந்திருந்த மனைவியைக் கண்டு அவர் புன்னகைக்க முயல..
லேசான நீர்ப்படலம் பத்மாவிற்கு..
“உன்னை ரொம்பப் படுத்தியெடுக்கறேனா..??”, சோர்ந்திருந்தது குரல்..
“ஐயோ.. என்னங்க நீங்க..?? அதெல்லாம் ஒன்னுமில்லை..”
“தெரியும்.. நீ இப்படித்தான் சொல்லுவேன்னு..”, என்றவர்.. தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த பேரனைக்கண்டதும் முகம் கடினமாகத்துவங்கியது..
“தா..த்..தா..”
“பே..சாதா..டா நீ..”, அன்று ஏனோ தனது மனதிலிருக்கும் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை அவரால்..
“தா..த்..தா..”, முழுமையாக அவன் அதிர்ந்துபோக..
“உன்னைப் பேசாம இருக்கச் சொன்னேன்டா..”, என்றவருக்கு மீண்டும் மூச்சுவாங்கத்துவங்க..
“என்னங்க.. எதுவா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாங்க..”, அவரை சமாதானப்படுத்த பாட்டி முயல..
“அப்புறம்ன்னா எப்ப பத்மா..?? அப்புறம் அப்புறம்ன்னு நாளை ரொம்ப கடத்தியாச்சு.. இதுக்குமேல முடியாது..”
“தாத்தா.. கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க அப்புறம் பேசலாம்..”, அவனும் தனது பங்கிற்கு அவரை அமைதிபடுத்த..
முடிந்திடவில்லை இருவருக்கும்..!!
பேசியே ஆவேன் என்பதாய் இருந்தது ராஜசேகரின் நடவடிக்கைகள் யாவும்..
பெட்டிலிருந்து எழுந்தமர அவர் முயற்சி செய்ய.. அவரைப் படுக்கவைப்பதற்குள் இருவருக்கும் அத்தனை கஷ்டமாகிப்போனது..
“ஏங்க இப்படி அடம்பிடிக்கறீங்க..?? சொன்னாக் கேளுங்களேன்..”
“தாத்தா.. ப்ளீஸ் தாத்தா.. தயவு செஞ்சு கொஞ்ச நேரமாவது படுங்க.. ப்ளீஸ்..”
இருவரும் மாற்றி மாற்றி கெஞ்ச பிடிவாதம் ஏறியது தாத்தாவிற்கு..
“தாத்தா.. நீ..ங்க.. என்..ன.. சொன்னாலும் கேட்கறேன் நான்.. ப்ளீஸ் தாத்தா.. இப்ப எனக்காக இல்லைனாலும் பாட்டிக்காகவாவுது கொஞ்ச நேரம் படுங்களேன்..”, பிரம்மாஸ்த்திரத்தை அவன் எய்ய அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் தாத்தா..
“ஒரு வாரம் உனக்கு டைம் தம்பி.. அதுக்குள்ள என் பேத்தியை கூட்டிட்டு வந்திடனும்..”, என்றவர் கண்களை மூடிப்படுத்துக்கொள்ள..
அலையடிக்கத்துவங்கியது பரணிதரனுக்கு..!!
மார்கழி மாதக்குளிர் உடல் எலும்பிற்குள் ஊடுறுவிச்சென்றுகொண்டிருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாது அங்கு தற்காப்புக்கலைப் பயிற்சி நடந்துகொண்டிருந்தது..!!
பத்து வயதிலிருந்து பதினைந்து வயதுவரையான குழந்தைகள் வரிசையில் நிற்க.. அவர்களுக்கு பயிற்சியளித்துக்கொண்டிருந்தான் விஷ்ணு..
“கையை ஸ்ட்ரைட்டா பிடிக்கனும்.. என்னைப்பாரு இந்த மாதிரி..”, சிறுவன் ஒருவனுக்கு சொல்லிக்கொடுக்க.. அவனைப் பார்த்தவாறு வெகுநேரமாய் அரூபா..!!
அவளது பார்வையை அவன் உணர்ந்திருந்த போதிலும்.. எந்தப்பிரதிபலிப்பையும் காட்டிடவில்லை அவன்..
என்னவோ இவர்களுக்கு கற்றுக்கொடுப்பதே தனது தலையாயக் கடமை என்பதுபோல் அதற்குள் மூழ்கிப்போயிருந்தான் விஷ்ணு..
“என்னவாம் இவனுக்கு.. ரொம்ப ஓவராத்தான் போயிட்டிருக்கான்..”, அவனை மனது தானாக வசைப்பாடிட..
அவளது பொன்மொழிகள் யாவும் அவனை எட்டியதுபோல் விஷ்ணுவின் இதழுக்கிடையில் மெல்லிய புன்னகை..
அதற்குமேல் பொருத்திடமுடியவில்லை அரூபாவிற்கு..!!
அவன் அருகில் வெகுவேகமாய் சென்றவள் அனைவரும் என்னவென்று சுதாரிக்கும் முன்பே அவனது சட்டையைப்பிடித்தவள் அவனைக் கூர்மையாகப் பார்த்திட..
சளைத்திடவில்லை அவன்..!!
தூசுதட்டுவதுபோல் அவளது கைகளை தன்னிடமிருந்து விலக்கிவிட்டு, “அரூபா.. எல்லாரும் நம்ம இரண்டு பேரையும் பார்க்கறாங்க.. எதுவாக இருந்தாலும் க்ளாஸ் முடியட்டும்.. பேசலாம்.. இப்பக்கொஞ்சம் அமைதியா.. தோ.. அங்க பாரு.. அங்கிருங்க சேரில் போய் உட்காறு..”, அழுத்தம் திருத்தமாக அவன் சொல்ல..
அப்பொழுதுதான் தான் செய்த காரியத்தின் வீரியம் புரிந்தது அவளுக்கு..
“சின்னப்பசங்களுக்கு முன்னால் இப்படி அவன் சட்டையைப் பிடிச்சுட்டேனே.. அசிங்கமா இருந்திருக்கும்ல அவனுக்கு..??”, அத்தனை குற்றவுணர்ச்சி அவளுக்குள்..
சன்னமாக ஐ ஆம் சாரி என்று முணுமுணுத்தவள் சேரில் போய் தொப்பென்று அமர்ந்துகொள்ள..
தமக்கையின் அழுதமுகமே மனக்கண்ணில் காட்சியாய்..
தடைப்பட்டிருந்த கோபமெல்லாம் மீண்டும் முகாமிடத்துவங்க.. இருக்கையின் கைப்பிடியைக் கெட்டியாகப்பிடித்துக்கொண்டாள் அரூபா..
“இங்க நல்லா இருக்கறதே இந்த ஒரு சேர்தான்.. அதையும் உன் கோபத்தால உடைத்துவிடாதே..”, நக்கலாக மொழிந்தவன்.. அவள் எதிரிலிருந்த கல்மேடையில் கால்மேல் கால்ப்போட்டு அமர்ந்துகொள்ள.. தன்னால் முடிந்தமட்டும் அவனை முறைத்துப்பார்த்தாள் அரூபா..
“உன் முட்டைக்கண் வெளியே தெரித்து விழுந்துவிடப்போகிறது.. ரொம்ப முறைக்காதே என்னை..”, மீண்டும் நக்கலடித்தான் விஷ்ணு..
“வி..ஷ்..ணூ.. ஜ..ஸ்..ட்.. ஷ..ட்.. அ..ப்..”, கோபத்தில் இதழ்கள் துடித்தது அவளுக்கு..
“யா ஷுவர்..”, என்றவன்.. அவள் விழிகளில் தெரித்து வழியும் கோபத்தைக்கண்டு, “என்ன விஷயம்..?? என்னைப்பார்க்க இவ்ளோ தூரம்..??”, என்று கேட்டிட..
“தெரியாத மாதிரி நடிக்காதே விஷ்ணு..”, வார்த்தைகளைத் துப்பியவள், “எங்க அக்காவ எதுக்குடா அழவெச்ச நீ..??”, ஆங்காரமாய்..
“உங்க அக்கா ஏன் அழறான்னு அவக்கிட்டையே கேட்க வேண்டியதுதானே.. என்க்கிட்ட கேட்டா எனக்கு எப்படித்தெரியுமாம்..”
“அவ என்னென்னு சொல்லியிருந்தா நான் ஏன்டா உன்க்கிட்ட வந்து சண்டைப்போடப்போறேன்..”, சன்னமாக முணுமுணுத்தவளின் வார்த்தைகள் யாவும் ஒன்றுவிடாமல் அவனைச் சென்றடைந்தபோதும் இறுகவே காட்சியளித்தான் அவளுக்கு..
எதுவாக இருந்தாலும் நீயே கேள்.. நான் பதில் தருகிறேன் என்பதுபோல..
“வி..ஷ்ணு.. ரொம்ப அழறாடா.. என்னால அவளை அப்படிப் பார்க்கவே முடியல..”, உடைந்திருந்தாள் அரூபா..
அத்தனை நேரம் அவளிடம் மையம் கொண்டிருந்த அத்தனை ஆங்காரம் ஆக்ரோஷம் கோபம் எல்லாம் வடிந்து.. சுட்டுவிரலை யானை மிதித்துவிட்ட வலியுடன்..
“அரூ.. ஸ்டாப் க்ரையிங்க்.. நீ இவ்ளோ பீல் பண்ணவேண்டிய அவசியம் எதுவும் இல்லை.. உங்க அக்கா மனசுல அத்தனை வெஞ்சன்ஸ்.. யாரும் பக்கத்துல நிற்கக்கூட முடியாத அளவுக்கு வெஞ்சன்ஸ்.. நூறு சதவீதம் அது எல்லாருக்கும் இருக்கற ஒன்னுதான்.. ப..ட்.. அதனால் பின்னாலில் ஏதாவது ஏடாகூடமா நடந்தா.. என்ன செய்வதாம்.. அதை நான் கேட்டதுக்கு அவ என்னென்னமோ உளறுகிறாள்.. எதைப்பற்றியும் யோசிக்காமல்.. அதான் கோபத்துல திட்டிட்டேன் நான்.. எனக்கு அது தப்பா எல்லாம் தெரியல.. அவ நல்லதுக்குத்தான் எல்லாம்.. ஒரு இரண்டு மூணு நாளைக்கு கண்டிப்பா அழுவா.. நீ அவக்கூடவே இரு.. ஷி வில் பி ஆல் ரைட் சூன்..”
“எனக்கு கஷ்டமா இருக்கு விஷ்ணூ.. ஏற்கனவே ரொம்ப அடிபட்டுப்போய் இருக்கா அவ.. மேலும் மேலும் அவளை அழவைக்கனுமாடா அவளை..??”
“எனக்கு மட்டும் என்ன அவளை அழவெச்சுப்பார்க்கணும்னு ஆசையா என்ன..?? எல்லாம் அவனைச் சொல்லனும்.. அவன் கொடுக்கற குருட்டு தைரியம் எல்லாம்.. என்னமோ பழிவாங்கப்போறாங்களாமே இரண்டு பேரும்.. தெரியுமா உனக்கு..?? கன்னம் கன்னம் நாலு வைக்கணும் இரெண்டு பேரையும்..”
“என்..ன.. விஷ்..ணு.. சொல்..ற..?? யா..ரை..ப்.. ப..ழி..வாங்க..ணுமாம்..??”, பதற்றமாக..
“எல்லாம் அந்த நாய்களைத்தான்..”, கைகளை முறுக்கி தன் கோபத்தைக் கட்டுப்படுத்தியவன், “அதைக் கேட்டு எனக்கு ஒரு நிமிஷம் ஆடிப்போச்சு மனசு.. அவளை எப்படிக் கட்டுப்படுத்தன்னு தெரியல.. சோ..”, கொஞ்சம் தயக்கம்..
“சோ..??”
“சோ அவளைக் கட்டுப்படுத்த கொலைகாரியோட தங்கச்சியை எல்லாம் என்னால கல்யாணம் பண்ணிக்கமுடியாதுன்னு கத்தி..ட்டேன்..”
“வி..ஷ்..ணூ..”, அரூபாவின் குரலோடு சேர்ந்து மற்றொரு குரலும் ஹை -டெபிசலில்..!!
-பற்றி எரியட்டும்..!! தீச்சுடர்..!!