அவள் நான் பயணம் – 15
நீ நான் பேதம் இனியில்லை
என்னுள் நீ… உயிராய் நீ…
உன்னுள் நான் உணர்வாய் நான்
நம்மை இணைக்கும் நதியாய் காதல்….
உவர்ப்பில்லா ஊற்றுகளை மனங்கள் தோறும் தோண்டிச் செல்கிறது காதல், வறட்சியும் வாழ்வும் மண்ணில் உள்ளது…. பாலையில் பூத்த முல்லையென பாவையென் நெஞ்சில் பூத்தாள்…. உவர்மணலையெல்லாம் உதறிவிட்டு உவகையில் அவளுக்காய் நிமிர்ந்தேன்…. முகில் உரசும் மலையானேன், எங்கெங்கும் பசுமை….. அவளின்றி இங்கு அழகியல் இல்லை…..
நெருப்பூ மலரும் இதழ்களாய் அவள் நா உதிர்த்த வார்த்தைகள்,….
“தலையே உடைஞ்சு ரெண்டா போனாலும், சீரியஸா பேசக்கூடாதுன்னு ஒரு முடிவோட இருக்கேன், ஆனாலும் ஏன் டி இப்படி பண்ற….. என்னடி பொண்டாட்டி என்ன பேசவைக்கிறையா”
“உங்களை பேசவைக்குறதுக்குன்னே கடவுள் என்னைய படைச்சிருக்காரா என்ன… இது நல்ல கதையா இருக்கே…”
“பேச வைக்குறதுக்கு மட்டுமில்லை டி, எனக்காகவே உன்னைய படைச்சிருக்காரு”
“ஓ ஓ ஓ ஓ ஓ……. அப்படியா இந்த விசயம் எனக்கு தெரியாம போயிடுச்சே…”
“உன் பேச்சே சரியில்லையே…”
“இல்லை உங்களுக்காகவே என்னை படைச்ச ஆண்டவன் எனக்காக யாரை படைச்சிருப்பாருன்னு யோசிக்கிறேன்……”
”…………………………………………………………………………………………………………………………………………………………….”
“என்னப்பா மாறா என்னாச்சு, ஏன் இப்ப சடன் ப்ரேக் போட்ட”
“அது ஒண்ணுமில்லைப்பா டக்குன்னு எதோ க்ராஸ் ஆனுச்சு, அடிச்சிடக்கூடாதுன்னு, ப்ரேக் போட்டேன்”
“ஓ சரிப்பா, பார்த்து பொறுமையா ஓட்டனும், இப்ப தான் ஹாஸ்பிட்டல்ல இருந்து டிஸ்சார்ஞ் ஆகி வரோம், டிரைவர் போட்டுக்கலாம்னு அதுக்குத்தான் சொன்னேன், பிடிவாதமா அனுப்பீட்ட, முடியலைன்னா கொஞ்ச நிப்பாட்டி போட்டு எடுப்பா”
“அய்யோ அம்மா அப்பா நான் நல்லாதான் இருக்கேன், இவ்வளவு தூங்குனா மாதிரி இப்பயும் நிம்மதியா தூங்கீட்டு வாங்க”
“அத்தை மாமா டென்ஷன் ஆகாம ரிலாக்ஸா இருங்க, அதான் நான் கூடவே இருக்கேன்ல,”
“அதில்லை மா சக்தி”
“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பேசாம கண்ணை மூடி ரிலாக்ஸா வாங்க மாமா, அத்தை உங்களையும் தான்”
”ம்ம்ம்ம் சரிம்மா”
ஒரு நீண்ட அமைதி….
“உங்க யோசனையெல்லாம் ஓரங்கட்டீட்டு ஒழுங்கா வண்டிய மட்டும் ஓட்டுங்க”
“ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்”
“வீட்டுக்கு போய் பேசிக்கலாம், முக்கியமான கச்சேரியெல்லாம் ரோட்டுல வைக்க முடியாது….”
”கிளம்பும் போது அத்தை போன் பண்ணியிருந்தாங்க, அவங்களும் கிளம்பீட்டாங்களாம், நாம வீட்டுக்கு போகும் போது அவங்க வந்திருப்பாங்க…”
“எனக்கு போன் பண்ணலை உங்களுக்கு பண்ணாங்களா….”
“உனக்கு தான் போன் பண்ணாங்க…. நீ கவனிக்கல நான் தான் எடுத்து பேசுனேன்”
“ஓ”
“ம்ம்”
அந்த ஒரு “ஓ” போட்டு வாயையும் கண்ணையும் மூடுனவ தான், வீடு வந்திடுச்சி, சக்தி எழுந்திரின்னு நான் சொல்றவரைக்கும் திறக்கவே இல்லையே, இராட்ஸசி…. இப்ப எதுக்கு இப்படி இருக்கான்னே புரியலை…. நாம கொஞ்சம் தெளிவா இருக்கோம் , இனிமே எல்லாத்தையும் சமாளிச்சிடலாம்னு நெனைக்கும் போது புதுசா, ஒரு இடியாப்ப சிக்கல் வந்து தட்டுவிழுகுதே என்ன செய்ய…”
“சாப்பிட வேண்டியது தானே இதுல என்ன யோசனை வேண்டி கிடக்கு”
“என்னது…”
“தட்டுல இடியாப்பம் வச்சு எவ்வளவு நேரமாச்சு…. பாத்துக்கிட்டே இருந்தா பசி தீராது எடுத்து சாப்பிடுங்க”
சக்தி தான் சொல்லுறா, இப்ப ”ஙே”ன்னு பாக்குறது நானு…
உடனே எங்கம்மா…. “ஏன் டா ஆஸ்பத்திரியில நல்லாத்தானே இருந்த வீட்டுக்கு கிளம்பும் போது கூட இவ்வளவு சீரியஸா இல்லை நீ, இப்ப என்னடான்னா, வீட்டுக்கு வந்ததில இருந்து இப்படியே இருக்க, அத்தை மாமா பாட்டி, இன்னும் சக்தி வீட்டில இருந்து சொந்தக்காரங்க வேற வந்திருக்காங்க,
இப்ப போய் இப்படி இருக்கியே, எதுவா இருந்தாலும், அப்புறமா பேசிக்கலாம், இப்ப சாப்பிட்டு போய் அவங்க கிட்ட கொஞ்ச நேரம் நல்ல படியா பேசிக்கிட்டு இரு, அப்ப தான் அவங்களுக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்… உனக்கு என்ன ஆனுச்சோ எல்லாருமே பயந்து போய் இருக்காங்க, இதுல நீ வேற இப்படி முழிச்சுகிட்டு இருக்க, ”
“சரிமா”
“வர வர நீயும் உன் மகனும் மாத்தி மாத்தி இன்ப அதிர்ச்சி குடுக்குறீங்க பூரணி….”
“நீங்க வேற கால நேரம் தெரியாம”
”இதுல என்ன கால நேரம், அவன் அமைதியா இருக்கான், நீ என்னடான்னா அவனுக்கு நல்ல புத்தி சொல்லிகுடுக்குற என்ன நடக்குது… என்னால நம்பவே முடியலை….”
“நான் நல்லது சொல்லிகுடுக்காமத்தான் அவன் வளர்ந்திருக்கானா, என்ன பேச்சு இது, தூங்க போறப்போ என்கிட்ட வாங்கிக் கட்டிக்கலைன்னா தூக்கமே வராதா உங்களுக்கு, போங்க, போய் அந்த ப்ரஷர் மாத்திரை சுகர் மாத்திரையெல்லாம் போட்டுகிட்டு படுங்க,”
“பெப்பர் கொஞ்சம் தூக்கலா போயிடுச்சோ, இந்த கத்து கத்துறாளே…. காலையில பால் வாங்கீட்டு வந்து குடுத்து சரிபண்ணிக்கலாம்….”
எங்கப்பா எக்கச்சக்கமா வாங்கி கட்டிகிட்டு, ஒண்ணுமே நடக்காத மாதிரி, மீசை மாமா கூட போய் உக்காந்து பேசிகிட்டு இருந்தாரு, எங்கம்மா, சக்தி, அத்தை, கமெண்ட்ரி பாட்டி எல்லாரும் கிச்சன்ல எதோ மாநாடு போட்டுகிட்டு இருந்தாங்க….
நானும் போய் மாமா கூட உக்காந்து கொஞ்ச நேரம் அவர்கிட்ட பேசிகிட்டு இருந்தேன்….
அவர் கண்ணுல இத்தணை நாளா தெரியாத ஒரு புது மாற்றம்…. எப்பயும் மீசையை முறுக்கிகிட்டு, ரெண்டு ரவுண்டு கஞ்சிய சட்டைக்கும் சட்டைக்கு உள்ளயும் விட்ட மாதிரி விறைப்பா தெரியுற மனுசன், இன்னிக்கு என் கண்ணுக்கு சந்தன காப்பு வைச்ச அய்யனாராட்டம் சாந்தமா தெரிஞ்சாரு….
ஒரு வேளை நம்ம கண்ணுல தான் எதும் ப்ராப்ளமா…. திடீர்ன்னு இவர் ஏன் இப்படி பாக்குறாரு… ஒரு வேளை நம்ம பொண்ணுகிட்ட மாட்டிகிட்டு பாவம் மாப்பிள்ளை கஷ்டப்படுறாரேன்னு யோசிச்சிருப்பாரோ….
நம்ம புத்தி ஏன் இப்படி சின்னபுள்ள தனமாவே யோசிக்குது… மனுசன் யோசிக்கிறதை பார்த்தா பெருசா தெரியுதே….
“மாறா….”
“மாமா…”
மனுசன் கண்ணுல தண்ணி வந்திடுச்சி…..
“மாமா என்னாச்சு மாமா, ஏன் கண்ணு கலங்குறீங்க…..”
“அதில்லை கண்ணு… உன்னை எத்தனையோ நாள் தூக்கி கொஞ்சியிருக்கேன்… எழிலையும் தான்… ஆனா நான் கடைசியா தூக்குனப்போ என் கையிலயே அந்த பிஞ்சு உசிரு போயிடுச்சு….
அன்னைக்கு நான் பட்ட கஷ்டம், அதுக்கப்புறம் என் கையால இன்னிக்கு வரைக்கும் எந்த குழந்தையும் தூக்கவே இல்லை மாப்பிள்ளை, உங்களை திரும்ப பாப்பேன்னு நினைக்கவே இல்லை…
அந்த கடவுளே எனக்காக திரும்ப உங்களை அனுப்பின மாதிரி இருந்துச்சி, எம்பொண்ணையும் குடுத்து இந்த ஜென்மத்தில பண்ணா பாவத்தை இந்த ஜென்மத்திலயே போக்க வழி கிடைச்சிது…
ஆனா அதை கெடுக்கிற மாதிரி உங்களுக்கு ஆக்சிடெண்ட்ன்னு சொன்னதும் உசிரே போயிடுச்சு மாப்பிள்ளை…
ஒரு மாசம் கழிச்சு உங்களை முழுசா பாக்குறேன்… அப்புடீன்னு சொல்லி கட்டிபிடிச்சுகிட்டாரு…. இதை நான் எதிர்பாக்கவே இல்லை…
கல்லுக்குள் ஈரம், குடைக்குள் மழை, நெருப்பில் நீர்க்குமிழி இப்படி எவ்வளவு வேணும்னா சொல்லலாம்… ஆனா அதையெல்லாம் தாண்டின ஒரு பந்தம்…
“எப்பயும் நான் உங்களுக்கு மாறன், இனிமே எழிலும் நான் தான் இளாவும் நான் தான் மாமா…..”
“நான் நல்லா இருக்கேன் மாமா, இனிமேலும் நல்லா இருப்பேன், நீங்க பயப்படாம போய் ரெஸ்ட் எடுங்க…. எந்த கையில எழில் போயிட்டான்னு ஃபீல் பண்ணீங்களோ, அதே கையில் ரெட்டை பிள்ளை பெத்து தரோம் மாமா… ஆசை தீர கொஞ்சுங்க…. எழில் திரும்ப வருவான் மாமா….”
“ஹா ஹா ஹா சரிங்க மாப்பிள்ளை, நீங்க சொன்னதை காப்பாத்துங்க…. சரியா….”
“ஹி ஹி சரிங்க மாமா….”
அவர்கிட்ட என்னமோ பெருசா வாக்கு குடுத்திட்டேன், கொடுத்த வாக்கை காப்பாத்த எம் பொண்டாட்டியை காணோமே….
என் கண்ணு முழுக்க சக்தியைத் தான் தேடிகிட்டு இருந்துச்சு…. அவ ஏன் இப்படி பேசினான்னு, மூளை தீவிரமா தேடுதல் வேட்டை நடத்திகிட்டு இருந்துச்சு… ஆனா சரியா காரணம் எதுவுமே சிக்கல, அவளா வந்து சொல்ற வரைக்கும் எதுவும் புரிய போறதில்லை…. சோ ரிலாக்ஸா டிவிய போடுவோமேன்னு போட்டா சோட்டா பீம், டோலக்பூரை காப்பாத்த தீவிரமா லட்டு சாப்பிட்டுகிட்டு இருந்தான்.
“என்ன மாப்ளை இன்னும் லட்டு சாப்புடுற சோட்டா பீம் தான் பார்க்க பிடிக்குதா…” மீசை மாமா கேட்ட அப்புறம் தான் அவர்கிட்ட பேசிகிட்டு இருந்தோம்ல அப்படீன்னு ஞாபகம் வந்துச்சி, எல்லாம் சக்தியால, மண்டைக்குள்ள புகுந்து என் யோசனை பூராவும் திருடிக்கிறா,”
“என் பேரனுக்கு லட்டுனா ரொம்ப பிடிக்கும் இல்லைப்பா….”
“கமெண்ட்ரி பாட்டி, அடுத்த அனொன்ஸ்மெண்ட் குடுக்க வந்திருச்சு….”
”ஹி ஹி ஹி ன்னு அக்மார்க் சிரிப்பை காட்டிட்டு, கிச்சனுக்குள்ள அவளை தேடுனா காணலை, எங்க போயிருப்பான்னு, கண்ணை வீடு முழுக்க ஓடவிட்டா, அதுக்குள்ள அடுத்த அனொன்ஸ்மெண்ட்….
“சக்தி உன்னை மாப்பிள்ளை தேடுறாரு பாருமா, சீக்கிரம் அந்த பாலை எடுத்துகிட்டு வா….”
“என்னடா நடக்குது இங்கன்னு பாத்தா, மீசை மாமா, எங்கப்பா, நம்ம கமெண்ட்ரி, யாரையுமே காணோம், அடப்பாவிங்களா எல்லாரும் அதுக்குள்ள எங்கயா போயிட்டீங்க, கிச்சன்ல இருந்த எங்கம்மா அத்தையை கூட காணலையே…. எல்லாம் அவங்க அவங்க ரூம்ல போய் செட்டில் ஆகீட்டாங்க போல, அதுக்குன்னு இப்படி சொல்லாம கொள்ளாமயா…. என்னவோ சரியில்லையே…”
“ஒரு அமானுஷ்ய அமைதி…… என் ரூம் கதவை திறந்தா ஒரே இருட்டு, ஜன்னல் திறந்திருச்சு, ஜன்னல்ல போட்டிருந்த வெள்ளைகலர் துணி வேகமா பறக்குற அளவுக்கு காத்து வேகமா வீசிகிட்டு இருந்து, வானத்தில பௌர்ணமி நிலா, ரூம்ல அந்த வெளிச்சம் மட்டும் தான் இருந்துச்சு, மெலிசா புகை, லைட்டா மல்லிகைப்பூ வாசம்…. திகில் பட ஓபனிங்க் ரேஞ்சுக்கு என் ரூமை வச்சது யாருன்னு, லைட்டை போடபோறேன்… வளையல் சத்தம்…. சுவிட்சு போர்டுல என் கைய யாரோ பிடிச்சுட்டாங்க….
”ஐயோ அம்மா பேயி……” அப்படீன்னு சக்தி கத்துறா….
“ஹே என்னடி நான் கத்த வேண்டியது நீ கத்துற”
“நீங்க கத்துனா எனக்கு தான் அசிங்கம் அதுனால தான் நானே சத்தம் போட்டு நீங்க குடுத்த ஹாரர் எண்ட்ரிய முடிச்சுவச்சேன்”
“க்கும்,…. இப்ப லைட்ட போடலாமா….”
“ஃபுல் மூன், பெட் ரூம்ல ஸ்மோகிங் எஃபெக்ட் எண்ட்ரில, பக்கத்தில பொண்டாட்டிய வச்சிகிட்டு, லைட்ட போடவான்னு கேட்ட ஆளு நீயா தான் இருப்பயா, என்ன மேனுஃபேக்சுரிங்கோ….”
“வேணாம் டி, மனுசனை மூட் அவுட் பண்ணிவிட்டுட்டு, சீண்டி விளையாடுறியா…. “
“நான் உங்களை மூட் அவுட் பண்ணேனா, எப்போ….”
“விளையாடதடி….”
“இன்னும் விளையாடவே இல்லை மாமோய்”
“நீ தானே டி, காலையில கிளம்பும் போது புருசனே இல்லைன்னு சொன்ன,… அப்புறம் நான் அழகா ரொமாண்டிக்கா டிரைவ் போன மாதிரி இருக்கும்னு முன்னாடி சீட் உக்காரவைச்சு கூட்டிகிட்டு வந்தா, ’உங்களுக்காக என்னைய படைச்ச கடவுள், எனக்காக யாரைப் படைச்சிருக்காரோன்னு’ கேட்குற, கும்பகர்ணணுக்கு ஒண்ணுவிட்ட தங்கச்சி மாதிரி அப்படி தூங்கீட்டு வர்ற, ஆஸ்பிடல்ல இருந்து டிஸ்சார்ஜ் ஆகி போறோமே, உடம்பு முடியாம இருந்த மனுசன் நமக்காக தானே டிரைவரை துரத்திவிட்டுட்டு காரை ஓட்டிகிட்டு வராரு, ஆசையா ரெண்டு வார்த்தை பேசுவோம், இல்லை சிரிச்ச முகமா, முழிச்சுகிட்டு வருவோம்னு இல்லாம, தூங்குற தூங்குற அப்படி தூங்குற…..”
“ஹா ஹா ஹா”
“என்னடி டி சிரிக்குற”
“சிரிக்காம என்ன பண்ணுறதாம்…. வாய் கிழிய கதை பேச தெரியுது என் கேள்விக்கு பதில் பேசி என் வாயை அடைக்கத் தெரியலையா….”
“பதில் பேசத் தெரியாம இல்லை,…….”(பதில் சொல்லாமயே உன் வாயை அடைக்கத் தெரியும், இதை சொன்னா அடிப்பாளே)
“என்ன இழுக்கிறீங்க, அப்ப மனசுல முழுசா இன்னும் யதார்த்தம் வரலை…. ”
“ஆமா கல்யாணத்துக்கு முன்னாடியும் பின்னாடியும் இவ்வளவு அழுத்தமா இருந்த, அதெல்லாம் கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி பாரு”
“ஆமா எனக்கு எல்லாம் ஞாபகம் இருந்துச்சி, ஆனா உங்களுக்கு இல்லை, அந்த நேரம் உங்க கிட்ட அதே மாதிரி எதிர்பார்த்து ஏமாந்து போக சொல்றீங்களா…. ஆனா உங்க கிட்ட நான் பழைய இளமாறனை தேடவே இல்லை, காலேஜ்ஜில அட்ரஸ் கேக்கும் போது கண்ணுல குறும்போட பார்த்த மாறனை, பொண்ணு பார்க்க வந்தப்போ கண்ணுல ஒரு இன்ப அதிர்ச்சியும், சுவாரஸ்யமும் தெரிஞ்ச மாறனை, நிச்சயம் பண்ண வந்தப்போ கண்ணுல காதல் தெரிஞ்ச அந்த மாறனை மட்டும் தான் உங்க கிட்ட தேடுனேன்…
கழுத்துல தாலி கட்டும் போதும் இல்லை, அப்புறமும் இல்லை, உங்களுக்குள்ள என்ன குழப்பம், என்ன கேள்வி, ஏன் அந்த விலகல், ஒரு சாதாரண ரூம் மேட் மாதிரி கூட உங்க அப்ரோச் இல்லை, இன்னிக்கு பெரிய ஜேம்ஸ் பாண்டு கணக்கா, உண்மையில நடந்தது என்னன்னு ஊருக்கெலாம் விளக்குறீங்களே, ஒரு நிமிஷம் என் கூட உக்கார்ந்து எனக்கு இப்படி தோணுது,… நீ என்ன நினைக்கிறன்னு ஒரு நிமிஷம் பேசியிருந்தா எல்லாம் என்னைக்கோ முடிஞ்சிருக்கும்…
உண்மையை கண்டுபிடிக்க என்னோட பழைய டைரிய நம்புன நீங்க, கூடவே இருந்த என்னைய நம்பி எதையும் பேசலை, ஷேர் பண்ணிக்கலை…
இவ்வளவு தூரம் உங்க கிட்ட இருந்து என்னைய விலக்கி வச்ச உங்க எண்ணம் என்னன்னு நான் சொல்லவா…
எதோ சின்னபுள்ளைங்க கதையெல்லாம் சொல்லி கல்யாணம் பண்ணி வைக்குறாங்களே, நமக்கு அவளை பிடிச்சிருக்கு, அவளுக்கு நம்மள பிடிச்சிருக்குமா, ஒரு வேளை பெரியவங்க சொன்னாங்கன்னு கட்டாயத்துல கட்டிகிறாளான்னு தானே…”
“ஹே மயிலு எப்பிடி டி, நிஜமாலுமே நீ ஸ்மார்ட் பொண்டாட்டி டி, இவ்வளவு அக்யூரட்டா சொல்றியே டி”
“இங்க பக்கத்தில வா மாமோய், உக்காரு அட சும்மா உக்காரு, எப்பிடின்னா அதுக்கு பேர் தான் காதல்”
“ஆனாலும் இந்த லொள்ளு தானே வேணாம்குறது, அடியே பொண்டாட்டி, நீ ஸ்மார்ட்னா, நான் செம ஸ்மார்ட்டாக்கும்…., என் கப்போர்டுல இருந்து ஊருக்கு வர்றதுக்கு முன்னாடி உன்னோடதுனு நெனச்சி நீ எடுத்திட்டு வந்த என்னோட டைரி இதுதானே பேபி்….”
“ஹி ஹி ஹி ஆமா மாமோய்”
“அடியே எப்பிடி எப்பிடி… என் டைரிய தூக்கீட்டு போய் படிச்சிட்டு…. காதல்னு கதை விடுறீகளோ, அதெப்பிடி டி, அடுத்தவன் ஆட்டோ கண்ணாடியை திருப்புனா, என் ஆட்டோ ஸ்டார்ட் ஆகும்…”
“வேணா வேணா கிட்ட வராத மாறா…. சொன்னாக்கேளு…. பேசிகிட்டு இருக்கும்போதே எதுக்கு இப்படி பாக்குற, கிட்ட வர்ற… வேணா பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்.”
“அடியே என் ஆசை பொண்டாட்டி, பேசிகிட்டே இருக்குறதுக்கா…. என்ன சொன்ன என்ன சொன்ன, “ஃபுல் மூன், பெட் ரூம்ல ஸ்மோகிங் எஃபெக்ட் எண்ட்ரில, பக்கத்தில பொண்டாட்டிய வச்சிகிட்டு, லைட்ட போடவான்னு கேட்ட ஆளு நீயா தான் இருப்பயா, என்ன மேனுஃபேக்சுரிங்கோ(manufacturing)….”ன்னு கேட்டீல்ல, ஆக்சுவலா நான் பேசீட்டு இருக்கலாம்னு தான் நெனைச்சேன்,… நீ கேட்டதுக்கு பதில் சொல்லணுமே…..
”நான் நான் என்ன கேட்டேன்.. நானா ஒண்ணும் கேக்கலை”
“என்ன மேனுஃபேக்சுரிங்ன்னு சொல்ல வேணாமா…..”
“வேணாம், நான் தெரியாம கேட்டுட்டேன்….”
“நான் தெரிஞ்சுக்கத்தான் சொல்ல போறேன் பேபி…. இனி நீ போகணும்னா, ஜன்னலை உடைச்சிட்டு போனாத்தான், இப்ப என்ன சொல்ற”
”இப்பவும் பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் சொல்லிபுட்டேன்”
“சரி பொண்டாட்டி நீயே சொல்லீட்ட கேக்காம இருப்பேனா, பேசுவோம்,”
“ஹப்பாடி…..”
“ஹா ஹா ஹா”
“எதுக்கு இந்த வில்லன் சிரிப்பு….”
“மாமனோடா கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்குற செல்லம்”
“…………………………”
”அட என்ன இப்படி பேய் முழி முழிக்கிற….பேசுவோம் பேசுவோம், என் உதடும் தனியாவே பேசிகிட்டு இருக்கா, உன் உதடும் தனியாவே பேசிகிட்டு இருக்கா, சோ சேர்ந்து பேசுவோம், என்ன நான் சொல்றது…”
“ம்ம்ம்ம் இதெல்லாம் ஒத்துக்க முடியாது….”
“அப்படியா இந்த உதடு பொய் சொல்லுதே…. இரு கண்ணை செக் பண்றேன்….. ஹப்பா அது எப்பயும் உண்மையை மட்டும் தான் சொல்லுமாம், சோ டபுள் ஓ கே சொல்லீடுச்சி, அப்புறம் இந்த மூக்கு, கன்னம், அடேங்கப்பா….. பச்சை தான் எல்லா இடத்துல முன்னேறி போக சிக்னல், ஆனா இங்க வெட்கத்தில ரெட் சிக்னல் காமிக்குற கன்னம் கூட எனக்கு ஓகேன்னு தான் சிக்னல் குடுக்குது…. அப்புறம் இந்த உதடு,,,,, இது ரொம்ப பொய் பேசுது, என்னையே பேச்சுல கவுத்திடுது, சோ இதை சும்மா விட முடியாது…. எப்படி அதுக்கு பாடம் சொல்லிக்குடுக்குறேன்னு பாரு….”
”…………………………………………………………………………………………………………………………………………………………………”
நரம்புகள் மீட்டும் காதல் வீணையின் இசையாவும் முத்தங்களே……
”இது சாம்பிள் தான் பேபி”
“மூச்சு முட்டுது விடு மாமா”
“அதுக்குள்ள ஓடுனா எப்படி….”
“மாறன் முன்ன மாதிரி இல்லை, ரொம்ப பேட் பாய் ஆயிட்ட, விடு என்னை,…. “
“ஐயாம் வெரி குட் பாய் பேபி யூ நோ…. வெயிட் ஐ வில் ஷோ யூ”
“……………………………………………………………………………………………………………………………………………………………………………………….”
இமை மூடி இதழ் தின்னும் காதலின் பசி…. முத்தம்…………….
”இப்ப விட்ட கூட போக மாட்ட போல”
“உங்கள… உங்களால தான் எல்லாம்…..”
“ஹே ஹே அடிக்காதடி…. அப்புறம் நான் தடுக்க வேண்டி வரும்….”
“பண்றதெல்லாம் பண்ணீட்டு டைலாக் வேறையா…… “
“ஓ டைலாக் பேசிகிட்டே இருக்காதடா ஆக்ஷன்ல இறங்குன்னு சொல்ற…”
”அய்யோ மாமா முதல்ல பதில் சொல்லு அப்புறம் தான் எல்லாம்”
“முதல்ல நீ சொல்லு, ஏன் என்னை புருசனே இல்லைன்னு சொன்ன”
“புருசன்னா சகலத்தையும் புரிஞ்சுக்குவான்னு நீங்கதானே சொன்னீங்க, ஆனா நீங்க தானே புரிஞ்சுக்காம என்கிட்ட சண்டை போட்டீங்க, அத்தைக்கு உடம்பு முடியாம போனதுக்கு முன்னாடி….. அதுக்கப்புறம் உண்மையெல்லாம் தெரிஞ்சப்பறம் அதை பத்தி ஒரு வார்த்தை பேசினீங்களா….”
“ம்ம்ம்ம்”
“என்ன ம்ம்…. யோசிச்சு பாருங்க “
”ம்ம்ம்”
“யோசிக்கிறேன் டி….”
“சரி… ஒரு தடவையாவது உங்க மனசுல இருந்த காதலை என்கிட்ட சொன்னீங்களா…. சின்ன பிள்ளைங்களா இருந்தப்போ பழகினப்போ யாருக்கும் லவ் வந்திடாது….
எனக்கும் அப்படித்தான்… எழிலோட இறப்பு, உங்களோட பிரிவு எல்லாம் உங்களை நான் மறக்கவே விடாம வச்சிருச்சி…. திரும்ப உங்கள பாக்கணும்ங்குற ஒரு முடிவோட மட்டும் தான் உங்களைத் தேடுனேன், உண்மையிலயே உங்களை லவ் பண்ணனும், கல்யாணம் பண்ணிக்கனும் நெனைக்கல, காலேஜ்ஜில உங்களைப் பார்த்திட்டு அத்தையை பாக்கப் போனப்போ அவங்க உங்க போட்டோவ காட்டுனாங்க,
அப்ப உங்களுக்கு ஞாபகம் வந்துதான் வேணும்னே என்னைய சுத்த விட்டீங்கன்னு நெனச்சேன்…. அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா என் மனசுல உங்க பிம்பம் வேற மாதிரி தெரிய ஆரம்பிச்சுது… கல்யாணம் ப்ளான் நானா போடலை, பெரியவங்க போட்டது தான்…. ”
“ஓ….”
“என்ன ஓ”
”ஒண்ணே ஒண்ணு சொல்றேன் கேப்பியா….”
“சொல்லுங்க”
“இதுவரைக்கும் நடந்ததை பேசி பேசி எதுவும் ஆகப்போறதில்லை… முடிஞ்சது முடிஞ்சு போயிடுச்சு,,,, இந்த நிமிஷம் இந்த நொடி, நீ நான் நிலா இது மட்டும் தான் நிஜம்….. என் கைக்குள்ள இருக்க நீயும் உன் கண்ணுக்குள்ள இருக்க நானும், ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம்…. நிலா தினமும் தான் பூமியை சுத்தி வருது… அது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நான் உன்னை லவ் பண்றது…. இத்தனை நாளாவும் சுத்தி வந்த நிலா எப்படி முழுசா தெரியலையோ…. அதே மாதிரி, என் காதலை உனக்கு தெரியப்படுத்த முடியாம நிறைய தடைகள்…. இன்னிக்கு முழுசா என்னோட காதலை உனக்கு தெரியப்படுத்த சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு சக்தி…. ஐ லவ் யூ……………………”
“ஆஹான்”
“என்னடி இவ்வளவு சீரியஸா ஃபீல் பண்ணி லவ் ப்ரப்போஸ் பண்றேன், வடிவேல் மாதிரி ஆஹான்னு சொல்ற”
“இப்ப தானே ப்ரப்போஸ் பண்ணியிருக்கீங்க, வெயிட் பண்ணுங்க, எனக்கு கொஞ்சம் டைம் வேணும்….”
“அந்த டைமை எப்படி வரவைக்கிறேன்னு பாரு…. என்னடி சொன்ன…. புருசன் இல்லைன்னா,,,, ஏன்னா புருசன் பொண்டாட்டிங்குற பந்தத்தை தாண்டி நம்ம உறவு ஆழமானது டி, அப்புறம் என்ன சொன்ன…. எனக்காக உன்னை படைச்ச கடவுள் உனக்காக யாரைப் படைச்சிருக்காரோன்னு தானே, எனக்காக உன்னைய படைக்கும் போதே, இந்தப்புள்ளைக்குன்னு இனிமே புதுசா யாரையும் படைக்க முடியாது, நீயே பார்த்துக்கோப்பான்னு சொல்லீட்டார் அந்த கடவுள்…. அப்புறம் வேறென்ன வேறென்ன சொல்லு சொல்லு டி,,….”
”வேறையா…. ம்ம்ம்ம்ம்ம்”
“என்னடி யோசிக்கிற இன்னுமா லிஸ்ட் இருக்கு”
“ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்”
“அடக்கடவுளே மாறா, போடா போய் பேசாம தூங்கு…”
“ரொம்ப தூக்கம் வருதா மாமோய், அப்ப போய் தூங்குங்க, நான் சொல்லல”
“அடியே அந்த மூணு வார்த்தைய சொல்ல இன்னும் எவ்வளவு டி பில்டப் பண்ணுவ…. மாறன் பொண்டாட்டி ஆனதுல இருந்து ரொம்ப கெட்டு போயிட்ட நீ, இதுக்கே இவ்வளவு டைம் எடுத்தா மாமாவுக்கு நான் குடுத்த வாக்கு என்னாகுறது…”
”என்ன வாக்கு”
“எழில் திரும்ப ரெட்டை பிள்ளையா வந்து எங்களுக்கு பிள்ளையா பிறப்பான், திரும்பவும் நீங்க அவனை உங்க கையில தூக்கி கொஞ்சுவீங்க மாமான்னு சொன்னேன்”
“மாமோய்…. ஐ லவ் யூ…………”
வார்த்தைகள் அதிகப்படியாய் அறியப்படும் உலகில் இரு ஜீவன்கள் உலா வரத்துவங்கியிருக்கிறது…. இனி என்றும் அவர்கள் வாழ்வில் வசந்தம் வீச வாழ்த்தி விடை பெறுவோம்….
ஹலோ ஹலோ நில்லுங்க…. அதெப்படி கதைய நாங்க துவக்கி வைச்சு, கதை முழுக்க உசிர குடுத்து பேசி கதைய சொல்லுவோமாம், இவங்க கடைசி பக்கத்தில வந்து சுபம் போடுவாங்களாம்…. இது நல்ல கதையா இருக்கே…. நான் சொல்ல ஆரம்பிச்ச கதைய நானே தான் முடிப்பேன்… இல்லை இல்லை நாங்க தான் முடிப்போம்…. என்னடி பொண்டாட்டி நான் சொல்லுறது… அப்படி சொல்லுங்க மாமோய், எங்களுக்குள்ள பேசிக்காம விட்ட கதையெல்லாம் பேசிக்கப்போறோம்… அதெல்லாம் ப்ரைவேட் சோ… மக்களே, இவ்வளவு நாளா எங்க கதைய கேட்ட, சாரி சாரி படிச்ச உங்க எல்லாருக்கும் டாட்டா, பை பை, சொல்லி விடை பெறுவது.. அமைதியின் சிகரம் இளமாறன்….. மற்றும், சக்தி இளமாறன்…”
முடிஞ்சா பிள்ளை குட்டிகளோட வந்து திரும்பவும் மீட் பண்ணுறோம்…. யாருமா அது இந்த கதை எழுதுனது… ரெண்டு ரோசாப்பூ மோதிக்கிற மாதிரி ஒரு படத்தை போட்டு…. உன் மொக்கை கவிதை எதாவது ஒண்ணு சொல்லி எண்ட் கார்டு போட்டுக்கோ….
அவனுக்கான அவள் தேடல்
அவளுக்கான அவன் தேடல்
காதலுக்கான இதயங்களாய்
கண்ணிரண்டில் உயிர்கொண்டது….
பிரிவில் பூத்த காதலிதை
இளமாறன் சக்தியோடு
இனிதாய் படைத்தனள்
ச.பு.நிவேதா…..