அத்தியாயம்: 14

               கொஞ்சநாளாகவே சந்துரு சபியின் நினைவாகவே இருந்தான்.அவள் நினைவினால் இரவெல்லாம் தூங்காமல் தவித்தான்.அவளுடன் இருக்கும்போது அந்த பொன்னான நேரங்களை அனு அணுவாக ரசித்தான் .அவளை பிரிந்து இருக்கும் நேரங்களை வெறுத்தான்.எப்போது அவளை காண்போம் என விடியலை எதிர்பார்க்க தொடங்கினான்.அவள் அருகில் இருக்கும் போது ஏற்படும் ஒரு இதமான உணர்வு இப்போது அவள் தன்னருகில்  இல்லாத போதிலும் அவளின் நினைவு தருவதை உணர்ந்தான்.

ஏனோ தனிமையில் வாடினாலும் அவள் நினைவு தரும் சுகத்தில் அந்த தனிமையையும் சுகமாக அனுபவித்தான்.இப்படியாக சந்துரு கையில் இருக்கும் பைலை பார்க்காமல் சபியின் நினைவில்  திளைத்திருக்க அப்போது மது அவனின் கேபினிற்குள் நுழைந்தான்.மது வந்ததை கூட அறியாமல் சந்துரு உதட்டில் சிறு புன்னகையுடன் கையில் இருக்கும் பைலை பார்க்காமல் வேறோ எங்கோ பார்துகொண்டிருந்ததை கவனித்த மது அவனிற்கு எதிரே இருக்கும் சேரில் அமர்ந்து

“சந்துரு”என அழைக்க அவனோ அவன் அழைப்பதை கூட உணராமல் அதே நிலையில் இருக்க அதை பார்த்து சிரித்துகொண்டே மது அவன் முன் சொடக்கு போட்டு மறுபடியும் அழைக்க அதில் சுயநினைவு பெற்ற சந்துரு எதிரே தன்னை பார்த்து சிரித்துக்கொண்டே அமர்ந்திருக்கும் மதுவை கண்டு

“சொல்லு மது இதோ அஞ்சு நிமிசத்தில இந்த பைலை கரெக்சன் பண்ணி கொண்டு வரேன்”என பதறியடித்து கொண்டு தன் கையில் இருக்கும் பைலில் பார்வையை ஓடவிட ,மதுவோ அவன் கையில் இருக்கும் பைலை வாங்கி டேபிள் மீது வைத்தவன் அவனை பார்த்து

“என்ன சந்துரு பகல்யே ட்ரீம்ஸா”என கேலிபண்ண

“இல்லடா சும்மா வேற எதையோ யோசிச்சுட்டு இருந்தேன்”என அவன் கேட்டதிற்கு பதில் சொல்லாமல் மழுப்ப

“எது சபி தங்கச்சியை பத்தியா யோசிச்சுட்டு இருந்த”என பட்டென்று கேட்டுவிட இதை எதிர்பாராத சந்துருவோ ஒரு நிமிடம் திகைத்து

“அடப்பாவி சுப்ரமணியபுரம் ஜெய் மாதிரி இவன் ஆள பார்த்து தலையை தடவவே நேரம் சரியாயிருக்கும் இதுல எப்படா என்னையெல்லாம் கவனிக்க ஆரம்பிச்ச”என நினைத்துக்கொண்டே அவனை பார்த்து

“டேய் மது நீ வேற சும்மா இரு நான் எதுக்கு  “சது”(சபிதவுக்கு இவன் வச்ச செல்லபெயர்)வை பத்தி யோசிக்கனும்”என அவனையும் அறியாமல் அவளிற்கு அவன் வைத்த செல்ல பெயரை சொல்லிவிட அதை கவனித்த மது

“அப்படி யோசிக்காதவன் தான் அவளுக்கு செல்ல பெயர் எல்லாம் வச்சுருக்க”என சிரித்துக்கொண்டே சொல்ல ,அப்போதுதான் சந்துருவுக்கு புரிந்தது தன் அவளிற்கு வைத்திருக்கும் பெயரை கூறி இருக்கோம் என்று அதை நினைத்து மதுவை பார்த்து அசடு வழிய அதைக்கண்ட மதுவோ

“இது எப்போ இருந்து “என மது அவன் காதலிக்க ஆரம்பித்ததை கேட்க

“டேய் நீயா எதாவது நினைக்காத அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை”என சந்துரு தனக்கே இன்னும் என்னவென்று உணராத நிலையில் மதுவிடம் என்னன்னு சொல்வது என நினைத்து சொல்ல அதை கேட்ட மதுவோ

“அப்படியா சரி நம்பிட்டேன்”என மர்மபுன்னகையுடன் சொல்ல அதை பார்த்த சந்துரு

“ஹய்யோ இவன் சொல்றா விதத்தை பார்த்தா இன்னும் நான் சொன்னதை நம்பவில்லை போல இருக்கே”என மனதினுள் நினைத்து கொண்டிருக்க அந்த சமயம் பார்த்து மதுவுக்கு கால் வர அதை எடுத்து பார்த்தவன் மகி அழைத்திருக்க

“என்ன இவ இப்போ கூப்பிடுறா இந்த டைம்  காலேஜ்ல தான இருப்பா என்னவாயிருக்கும் “என யோசித்துக்கொண்டே போனை அட்டென்ட் பண்ணி காதில் வைத்து

“சொல்லு மகி என்ன காலேஜ் டைம்ல கால் பன்னிருக்க என்ன விஷயம்”என கேட்க

“மது இன்னைக்கு கிளாஸ் வரமுடியாது சபிக்கு ஹெவி fevar ஹோச்பிட்டல ட்ரிப்ஸ் ஏறிட்டு இருக்கு ஸோ நாங்க நாளைக்கு வந்து study materials வாங்கிக்கிறோம்”என மகி  சொல்ல அதை கேட்ட மதுவோ

“ஏன் என்னாச்சு நேத்து கூட நல்லாதான இருந்தாங்க சபி திடீர்ன்னு எப்படி ஹெவி fevar வந்துச்சு,சரி எந்த ஹோச்பிட்டல்ன்னு சொல்லு நான் வரேன்”என பதட்டமாக கேட்க

“மது நான் அப்புறம் பேசுறேன்  டாக்டர் கூப்பிடுறாங்க”என சொல்லி மகி போனை கட் பண்ண ,அதுவரை மதுவின் முகத்தை பார்த்துகொண்டிருந்த சந்துருவுக்கும் அவனின் பதட்டம் தொற்றிக்கொள்ள

“என்ன மது யாருக்கு fevar ட்ரிப்ஸ் வேற ஏறிட்டு இருக்குனு சொல்ற”என பதட்டமாக கேட்க மது மகி சொன்னதை சொல்ல அதை கேட்ட சந்துரு

“என்ன சபிக்கு திடீர்ன்னு fevar நேத்து நல்லத்தான இருந்தா ட்ரிப்ஸ் வேற ஏறிட்டு இருக்குன்னு சொல்றான்,ட்ரிப்ஸ் ஏறுற அளவுக்கு உடம்புக்கு  என்னாச்சு அவளுக்கு,சபி இப்போ எப்படி இருக்கான்னு தெரியலையே”என மனதினுள் நினைத்து மதுவை பார்க்க அவனோ அவன் மனதை படித்தவனாக

“டேய் சாதாரண fevar தாண்டா பீல் பண்ணாத”என ஆறுதல் சொல்ல சந்துரு அவனின் ஆறுதலை கேட்கும் நிலையில் இல்லாமல் சபியின் நினைவாக இருக்க மது அருகில் இருக்கும் தண்ணியை அவனிடம் எடுத்து கொடுத்து குடிக்க சொல்ல அதை கையில் வாங்கியவன் குடிக்காமல்

“மது நான் இப்பவே சபியை பார்க்கணும்”என சந்துரு சொல்ல

“டேய் நாளைக்கு வருவாங்க அப்போ பார்த்துக்கலாம் நீ தண்ணியை குடிச்சு முதல்ல ரிலாக்ஸ் ஆகு “என இப்போது அவளை எப்படி பார்க்க முடியும் என நினைத்து அவனை சமாதானபடுத்த,

“மது ப்ளீஸ் எனகென்னவோ இப்பவே சபியை பார்க்கனும்னு தோணுது”என சந்துரு விடாமல் மதுவை பார்த்து சொல்ல, அவன் கேட்டதில் மனம் இறங்கிய மது

“இதுக்கு முன்னாடி வரை நான் ஏன் சபியை நினைக்க போறேன்னு சொன்னான் இப்போ என்னடான்னா சாதாரண fevar அவளை பார்த்தே ஆகணும்னு அடம் பிடிக்கிறான் இந்த மகி பேசுனதை வச்சு பார்த்தா ஏதோ தப்பா இருக்கே அத இவன் கிட்ட சொன்னா கேட்கமாட்டான் வேற என்ன பண்ணலாம் சரி என்னானு போய் பார்ப்போம் “என நினைத்துகொண்டே அவனிடம்  

“சரி வாடா கிளம்பலாம் “என சொன்னதும் சந்துரு எப்போ இந்த வார்த்தையை சொல்வான் என்று காத்திருந்தவன் போல உடனே அவனுடன் கிளம்ப இருவரும் போட்டதை போட்டபடி ஆபிசை விட்டு கிளம்பினர்.

                      மதுவோ மகிக்கு விடாமல் கால் பண்ண அது full ரிங் ஆகி கட்ட ஆக ,

“ஏன் கால் அட்டென்ட் பன்னமாட்ரா”என யோசித்துக்கொண்டே சந்துருவை பார்க்க அவனோ சபியை நினைத்து பித்துபிடித்தவன் போல அமர்ந்திருக்க அவனின் நிலையை கண்டு

“டேய் சந்துரு ஜஸ்ட் fevar சரியாயிரும் நீ ரொம்ப பீல் பண்ணாத “என மறுபடியும் மறுபடியும் சொல்ல அதை கேட்டு சந்துரு சிர்த்து மன தெளிந்தாலும் அவளை பார்க்கும்வரை பதட்டமாக இருந்தான்.பின் சுயநினைவு வந்தவன் போல்

“டேய் மது எந்த ஹோச்பிட்டல்ல சேர்த்துருக்காங்க”என்று கேட்டதும் மதுவுக்கு மகியிடம் ஹாஸ்பிட்டல் பற்றி விசாரிக்காதது நினைவு வர காரை சட்டென்று நிறுத்தியவன் சந்ருவை பார்த்து

“டேய் மகி எந்த ஹோச்பிட்டல்லன்னு சொல்லலடா”என சொல்ல அதை கேட்ட சந்துரு

“பின்ன எப்படி அவளை பார்க்கிறது”என பாவமாக கேட்க

“இருடா யோசிக்கலாம்” என அவனை சமாதானபடுத்தியவன் சிறிது நேரம் அமைதியாக யோசிக்கலானான் .அப்போது அவன் கண்முன்னே ஒரு பைல் தட்டுபட அதை கண்டவன் உடனே வண்டியை எடுத்தான்.வண்டியை நேராக சபியின் வீட்டின்முன் நிறுத்த ,சந்துருவுக்கு இது யார் வீடு என தெரியாததால் மதுவிடம்

“டேய் இது யார் வீடு நாம ஏன் இங்க வந்துருக்கோம்”என கேட்க

“டேய் இதுதான் சபி அதாவது இப்போ உன் ஆருயிர் காதலி வீடு “என மது அந்த நேரத்திலும் அவனை கேலிபண்ண அதில் ஒருநிமிடம் சிரித்த சந்துரு பின்

“டேய் அவ வீட்டுக்கு எதுக்கு வந்துருக்கோம் உன்னை நான் அவகிட்டதான கூப்பிட்டு போக சொன்னேன் நீ என்னடானா அவ பக்கத்திலேயே எனக்கு ஒரு பெட் போட்டு அவளுக்கு கம்பெனி கொடுக்க வச்சுருவ போல “என அந்த நேரத்திலும் மதுவை கலாய்க்க

“டேய் உளறாம வா “என அதட்டி மறக்காமல் அந்த பைலை எடுத்துக்கொண்டே சபியின் வேட்டின்முன் இருந்த காலிங்பெல்லை அழுத்த தேவி வந்து கதவை திறந்தார்.மதுவை சந்துருவையும் பார்த்து

“யார் நீங்க உங்களுக்கு என்ன வேணும்”என கேட்க

“அம்மா நாங்க சபியோட ப்ராஜெக்ட் டிரைனர்,xxxx கம்பெனி M.D ஐ அம் மதுசூதனன் அண்ட் ஹி இஸ் சந்துரு  மை பிரின்ட் அண்ட் ஒன் ஆப் தி பார்ட்னர் இன் மை கம்பெனி “என அவனை அறிமுகபடுத்த சந்துரு அவரை பார்த்து வணக்கம் வைத்தான்.தேவிக்கோ அவர்களை பார்த்ததும் அவர்களின் பணிவான பேச்சும் நடவடிக்கையும் பிடித்து போக அவர்களை வீட்டினுள் அழைத்தார்.

“அப்படியா உள்ள வாங்க தம்பி”என சிரித்துக்கொண்டே வரவேற்க,இதை பார்த்த சந்துரு

“என்னடா சபிக்கு ட்ரிப்ஸ் ஏறிட்டு இருக்குனு மகி சொல்லுச்சு ஆனா சபி அம்மா என்னமோ மறுவீட்டுக்கு வந்த மாப்பிள்ளையை வரவேரற்கற மாதிரி சிரிச்சுட்டே பேசுறாங்க”என மதுவிடம் கேட்க

“அதுவும் ஒரு நாள் நடக்கத்தான போகுது, எப்படியும் நீ மறுவீட்டுக்கு இங்கதான வரணும்  “என மது மெதுவாக சொல்ல அதை கேட்டு சந்துரு லேசாக சிரிக்க அதற்குள் தேவி அவர்கள் உள்ளே வராமல் இருப்பதைகண்டு மறுபடியும் அழைக்க இருவரும் உள்ளே சென்றனர்.

                     தேவி அவர்களிருவரையும் அமர சொல்லிவிட்டு உள்ளே ஜூஸ் எடுக்க சென்றார்.சந்த்ருவுக்கு இது சபியின் வீடு என்ற ஆவலில் அவன் சுற்றும் முற்றும் வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க மதுவோ குழப்பத்தில் இருந்தான்.அப்போது ஜூஸுடன் வந்த தேவி அவர்களிடம் அதை கொடுக்க இருவரும் மெலிதாக சிரித்துக்கொண்டே எடுத்துகொண்டனர்.அப்போது தேவி அவர்களிருவரை பார்த்து

“உங்களுக்கு ரொம்ப தாங்க்ஸ் சொல்லனும் தம்பி”என சொல்ல அதை கேட்டு இருவரும் புரியாமல் முழிக்க மது அவர்களிடம்

“எதுக்குமா”என கேட்க

“உங்க கம்பெனிக்கு ப்ராஜெக்ட் பத்தி  படிக்க வந்த பிறகுதான் இந்த சபி சூரிய உதயத்தையே பார்க்குறா”என்றவர் தொடர்ந்து

“இல்ல பத்து மணிக்குதான்  எழுந்து பெட் காபியே குடிப்பா,ஏன் காலேஜ்க்கு கூட நான் அடிச்சு எழுப்புனாதான் அவசராம எழுந்து ஓடுவா இப்போதான் கரெக்ட் டைம்க்கு எழுந்திரிக்கிரா”என தன் மகளின் அருமை பெருமைகளை சொல்ல அதை கேட்டு மதுவும் சந்த்ருவும் சிரித்தனர்.

“சரி மா சபி இருந்தா வர சொல்லுங்க ப்ராஜெக்ட் study materials கேட்டாங்க நாங்க இன்னைக்கு ஈவ்னிங் மீட்டிங் போறதால கிளாஸ் இல்லைன்னு சொல்லிட்டு அப்படியே இந்த பைல் கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன்”என்று தன் கையில் இருக்கும் பைலை பார்த்து சொல்லியவன்  தொடர்ந்து

“நாங்க அத சொல்லலாம்னு கால் பண்ணோம் எடுக்கமாட்றாங்க அத வீட்டுக்கே வந்து கொடுத்துட்டு போகலாம்னு வந்தோம்”என வீட்டுக்கு வந்த விளக்கத்தையும் சொல்ல தேவிக்கு அவனின் இந்த பொறுமையான பேச்சை கேட்டு ஆச்சரியமாக இருந்தது

“M.D ன்னு கெத்து இல்லாம பணக்காரன் திமிரு இல்லாம எவ்ளோ அடக்கமா அதுவும் எங்கே நான் சபியை தேடி வீட்டுக்கு வந்துட்டங்கலேன்னு தப்பா நினைசுருவேன் பொறுமையா,அம்மா அம்மான்னு உரிமையா பேசின மதுவை ரொம்ப பிடிச்சு போக “அவனிடம் சிரித்துகொண்டே

“அவ காலையிலேயே மகிமாவுக்கு காய்ச்சல்ன்னு கிளம்பிட்டா தம்பி ,அவள ஹாஸ்பிட்டல் கூப்பிட்டு போகணும்னு வேற சொன்னா “என சொல்ல அதை கேட்ட இருவரும் ஒருவரையொருவர் புரியாமல் பார்த்து பின் மது அவரிடம்

“சரிமா நாங்க  கிளம்புறோம் சபி வந்தாங்கன்னா சொல்லிருங்க”என சொல்ல அவரும் சரியென தலையாட்ட இருவரும் வெளிய அவ்விடத்தைவிட்டு நகன்றனர்..மதுவோ மகியின் மீது ஏகப்பட்ட கோபத்தில் இருந்தான்

“அடிப்பாவி நான் ஆரம்பத்திலேயே சந்தேகப்பட்டேன் என்னடா எந்த ஒரு டென்ஷன் இல்லாம சாதாரணமா பேசினேன்னு இரு வரேன் “என நினைக்க சந்துருவோ

“அப்போ சபிக்கு fevar இல்லையா என்ன ஒண்ணுமே புரியல அவள பார்த்தாதான் நிம்மதியா இருக்கும் “என நினைத்துகொண்டே மதுவை பார்த்து

“என்ன மது ஒண்ணுமே புரியல மகி என்னடான்னா சபிக்கு fevarnu சொன்னங்க சபி என்னன்னா மகிக்கு fevarnnu சொல்லிட்டு வெளிய போயிருக்கா”என புரியாமல் கேட்க

“ஹ்ம்ம் ரெண்டுபேரும் ஏதோ தில்லாலங்கடி வேலை பண்ண போயிருக்குங்க “என மது கடுப்பில் சொல்ல அதைகேட்ட  சந்துருவுக்கோ தலைவலியோடு சேர்ந்து காலையில் சாப்பிடாததால் பசியும் எடுக்க

“டேய் மது ஒரே டயர்டா இருக்குடா பசி வேற எடுக்குது “என வாய்விட்டே சொல்ல அப்போதுதான் மதுவுக்கு காலையில் சாப்பிடாமல் இருவரும் கிளம்பியது நினைவு வர அவனிடம்

“ஏன்டா சபியை பார்க்கணும் பார்க்கணும் என்னை படுத்தி எடுத்த ,அப்போ தெரியாத பசி இப்போதான் தெரியுதா”அவன் சாப்பிடாமல் இருப்பதை நினைத்து கோவமாக கேட்க சந்துருவோ

“சரி சரி வாடா “என சொல்லி அவனை இழுத்துக்கொண்டு காரை நோக்கி இருவரும் நடந்தனர்.

                          ஒரு பெரிய ஹோட்டலின்முன் காரை நிறுத்திய மது சந்துருவை பார்த்து

“நீ உள்ள போடா நான் கார் பார்க் பண்ணிட்டு வரேன் “என சொல்ல சந்துரு இறங்கி ஹோட்டலினுள் நுழைந்தான்.அங்க இருக்கும் ஒரு empty டேபிளின் முன் அமர்ந்தவன் நினைவு முழுவதும் சபி மகியும் ஏன் அப்படி போய் சொன்னாங்க,இன்னும் சபி எங்க இருக்கானு பார்க்கவே முடியல என நினைத்தவன் மறுநிமிடமே

“ஆமா ஏன் நாம இவோ கஷ்டபடுறோம்.அவளுக்கு சாதாரண fevarnu சொன்ன உடனே ஏன் என் மனது அவளை பார்க்கவேண்டுமென துடித்தது???.அதுவும் மது சொன்னா எதிர்த்தே பேசமாட்டேன் அனால் அவன் சொன்ன ஆறுதலை கூட மதிக்காம பிடிவாதமா அவனிடம் பேசுனேனே எதனால??? இந்த மாதிரி மகிக்கு ஆயிருந்தா கூட நான் இவ்ளோ தூரம் கஷ்டப்பட்டு இருப்பேனான்னு தெரியலையே???? மது கேட்ட அப்போ இல்லைன்னு சொன்ன நான் இப்போ ஆமான்னு சொல்ல தோணுது, அப்போ சபியை நான் நேசிக்கிறேன்… அவகூட இருந்தப்ப ஏற்பட்ட உணர்வு வெறும் பிரிண்ட்ஷிப்னு இத்தனை நாள் நான் தப்பா புரிசுட்டு இருந்துருக்கேன்…..எஸ் ஐ லவ் சபி என வாய் விட்டே சொல்லி சிரிக்க அவன் மனமோ ரெக்கை கட்டி பறந்தது….சந்துரு சபியின் மேல் உள்ள காதலை உணர்ந்த நொடியில் ஏதோ ஒரு பாரம் விலகி மனது லேசாவது போல் உணர்ந்தான்.அவன் சந்தோசத்தில் திளைத்திருக்க அந்த நேரம் பார்த்து அங்கே மது வர அவனை கண்ட சந்துரு அமைதியாகி விட மது அவனை பார்த்து

“என்னடா இன்னும் எதுவும் ஆர்டர் பண்ணலையா”என கேட்க

“நீ வந்ததும் ஆர்டர் பண்ணலாம்னு வெயிட் பண்ணேன்டா”என சந்துரு சொல்ல அந்த அப்போது ஆர்டர் எடுக்க சர்வர் வர அவரிடம் மது ஆர்டர் பண்ண ஆரம்பிக்கும் போது பின்னே இருந்த டேபிளில் சத்தம் வர திரும்பி பார்த்தான் மது .அங்கே ஒரு டேபிளின் முன் நாலைந்து சர்வர் நின்று கொண்டிருப்பதை கண்டு ஆர்டர் எடுக்க வந்தவரிடம்

“என்னாச்சு அங்கே ஒரே கூட்டமா இருக்கு”என விசாரிக்க அவரோ

“சார் ரெண்டு பொண்ணுங்க இங்க சாப்பிட வந்துருக்காங்க அவுங்க இங்க இருக்குறதுல எல்லாத்திளையும் ஒரு ஒரு item உடனே கொண்டு வர சொல்லிருக்காங்க அதுக்குதான் இத்தனை சர்வர்ஸ் அங்க சப்ளை பண்ணிட்டு இருக்காங்க இன்னும் அந்த பொண்ணுங்க அவுங்கள விடாம ஏதோதோ கேட்டுட்டு இருக்காங்க “என சொல்ல அதை கேட்ட மதுவுக்கோ ஏதோ புரிபட சந்துருவை இங்கே இருக்குமாறு சொல்லிவிட்டு அந்த டேபிளை நோக்கி நடந்தான்.

                         அங்கே இருக்கும் சர்வர்ஸ் எல்லாத்தையும் விலக்கிவிட்டு உள்ளே சென்று பார்த்தவன் அதிர்ச்சியாகி நின்றான்.

                          மகிக்கும் சபிக்கும் இன்று final yr staff மீட்டிங் என்பதால் final yr க்கு மட்டும் லீவ் விட்டிருக்க மகி இன்று சபியை தனக்கு இன்று ட்ரீட் வைக்குமாறு சொல்ல அவளும் சரியென கூறினாள்.இன்று மது study materials வாங்க வர சொல்லிருந்ததால் எங்கே லீவ் என தெரிந்தால் full டே கிளாஸ் வச்சு உயிரை வாங்குவான் என நினைத்து அவனிடம் காலேஜ் என பொய் சொல்ல அவனும் சரி ஈவ்னிங் வந்து கண்டிப்பா வாங்கனும்னு அவர்களை பிளாக் பண்ணினான்.மகியும் சபியும் இங்கே ட்ரீட் முடித்து அங்கே இங்கே சுற்றிவிட்டு கிளாஸ் போகமுடியாது என நினைத்து என்ன பன்னுவது என தெரியாமல் முழிக்க வழக்கபோல் மகி தன் காலேஜில் சொல்லும் பொய்யை சொல்லலாம் என நினைத்து மதுவுக்கு கால் பண்ணி சபிக்கு fevar எக்ஸ்ட்ரா பிட் போட மதுவோ எந்த ஹாஸ்பிட்டல்ன்னு கேட்டதும் மகிக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் டாக்டர் கூப்பிடுறாங்கன்னு கட் பண்ணி சைலன்ட் மோடில் போட்டுவிட்டாள்.

                       இங்கே வந்த சபியும் மகியும் ஒரு family உட்கார்ந்து சாப்பிடும் டேபிளை பார்த்து அமர்ந்தனர்.மகியோ அங்கே உள்ள மெனு கார்டில் இருக்கும் அத்தனை டிஷ் ஆர்டர் பண்ண சபியோ

“ஹேய் நம்ம ரெண்டு பேருக்கும் மட்டும் ஆர்டர் பண்ணு டி  நீ என்னமோ மொத்த ஹோட்டலுக்கும் சேர்த்து ஆர்டர் பண்ற”என கேட்க

“ஹேய் இப்போ சொன்னது எனக்கு மட்டும் தான் உனக்கு வேணும்னா நீ தனியா சொல்லிக்கோ”என சொல்லி மெனு கார்டை பார்த்து வேற என்ன ஆர்டர் பண்ணலாம்னு யோசிக்க இதை கண்ட சபியோ

“என்ன எனக்கு தனியா ஆர்டர் பண்ணனுமா இனி என்ன இருக்கும் ஆர்டர் பண்றதுக்கு அதுதான் மொத்தமா நீயே குத்தைகைக்கு எடுத்திட்டியே”என சொல்ல மகியோ கவனிக்காமல் அவள் வேலையை செய்ய

“இவ இன்னைக்கு என்னை கிச்சன்ல மாவாட்ட விட்டு கிச்சடியாக்கமா விடமாட்ட போலயே” என மனதினுள் புலம்ப மகியோ

“அவ்ளோதான் இருக்க எல்லாமே இங்க கொண்டுவந்தாச்சா “என கேட்டு எதும் மிஸ் பண்ணிடோம என நினைத்து மெனு கார்டில தேட அதை கண்டு வெறியான சபி

“அடியேய் குண்டு பூசணி இனி அந்த கார்டில புதுசா அச்சடிசாதான் உண்டு “என மகியை பார்த்து திட்ட அதை கேட்டு அங்கு இருக்கும் அனைவரும் சிரிக்க அதை பார்த்து மகி முறைக்கலானாள்.அப்போது ஏற்பட்ட சத்தத்தில் தான் மது என்னவென்று விசாரித்து இங்கே வந்து பார்த்தவன் கண்ணில் மகியின் முன் பல வகையான டிஷ் நிரம்பியிருக்க எதிரே சபி தலையின் மேல்  துப்பட்டாவை போட்டு தலையில் கை வைத்து சோகமாக அமர்ந்திருந்ததை கண்டவன் அதிர்ச்சியாகி நின்றான்.அப்போது அவர்களை பார்த்து

“இத எப்போ இருந்த ஹோச்பிட்டலா மாத்துனாங்க”என கோபத்தில் கேட்க அதுவரை அவனை கவனிக்காமல் இருந்த மகி நிமிர்ந்து பார்த்தவள் கண்ணில் கோபம் கொண்டு மது நிற்பது கண்டு ஷாக் ஆக  இங்கே மதுவை எதிர்பாராத சபியோ திருதிருவென முழிக்க மதுவோ அருகில் இருக்கும் சர்வர் எல்லோரையும் இங்கிருந்து நகருமாறு கண் ஜாடையில் சொல்ல அவர்களும் அவ்விடத்தைவிட்டு நகர்ந்தனர். இதை கண்ட மகியோ

“ஹய்யோ இவன்கிட்டயா மறுபடியும் மறுபடியும் மாட்டனும் சும்மாவே சிங்கம் படம் சூர்யா மாதிரி சுத்தி சுத்தி பன்ச் டையலாக் பேசி காதை கிழிப்பான் இப்போ சொல்லவே வேணாம் காக்க காக்க சூர்யா மாதிரி டைரக்டா ஆக்சன்ல இறங்கிருவான் போலயே “என மனதினுள் புலம்ப மறுபுறம் சபியோ

“என்ன சிங்கம் சிங்களா வந்துருக்கு கூடவே ஒரு சிறுத்தையே கூப்பிட்டு வருமே அதை காணோம்”என சந்துருவை காணோம் என தேட அவள் எண்ணத்தின் நாயகனே அங்கு வந்தான். மது இன்னும் வராததால் என்னவென்று பார்க்க வந்த சந்துரு இங்கே இருக்கும் சபி மகியை கண்டு திகைத்து நின்றான்.சபியை பார்த்த நிமிடத்தில் அவள் நலமாக இருப்பதை ஆராய்ந்தவன் இருந்தும் அவளிடமே கேட்க வேண்டும் என்ற ஆவலில்அவள் அருகே சென்றவன் அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்து

“சபி உனக்கு fevar அதுவும் ட்ரிப்ஸ் ஏறிட்டு இருக்குன்னு மகி தங்கச்சி சொல்லுச்சு உனக்கு ஒன்னுமில்லேல,”என அவன் திடமாக பேசினாலும் அவன் கண்கள் அவளிற்கு ஒன்று ஆகிவிடக்கூடாது என பரிதவிக்க,அவனின் இந்த எதிரபாராத செயலில் திக்குமுக்காடினாள் சபி.அவன் பேசிய வார்தியிலும் அவன் கண்ணில் தெரிந்த பரிதவிப்பிலும் ஏதோ ஒன்றை உணர்ந்தாள்.அவன் தனக்காக இவளோ நேரமும் துடித்ததை நினைத்து உள்மனம் சந்தோசம் அடைந்தது.இவனின் அன்பை நினைத்து பாகாய் உருகி பேச்சற்று அவனை பார்த்துக்கொண்டே சிலையாக நிற்க,

உன்னை கண்ட நாள் முதல்

என் தூக்கம் போனது

தூங்கினாலும் உன் முகம்

என்னென்று சொல்வது

விழுந்தாய் என் விழியில்

கலந்தாய் என் உயிரில்

நொடியில்

எனது தோளில் தலையை சாய்த்து

நெருங்கி நீ வாழ வேண்டும்

பிரிந்து நீயும் நடக்கும் போது

என் இதயம் காயம் படும்

விழிகள் பார்த்து விரல்கள் கோர்த்து

மடியில் நான் தூங்க வேண்டும்

உனது அன்பில் கரையும்போது

உதட்டில் பூ பூத்திடும்

உலகமே..மறக்கிறேன்

சிறகில்லை ..பறக்கிறேன்

மழை இல்லை ..நெனைகிறேன்

உன்னில் கரைகிறேன்  

சிரித்து பேசும் உனது வார்த்தை

தினமும் நான் கேட்கவேண்டும்

உறவு என்று எவருமில்லை

என் உலகம் நீ ஆகிடும்

இதயம் தன்னில் அறைகள் நான்கில்

எனக்கு நீ மட்டும் வேண்டும்

தரையின் மேலே நிழலை போலே

இணைந்து நாம் வாழனும்

உதடுகள் சிரிக்கிறேன்

உலகினை ரசிக்கிறேன்

உனக்கென்ன இருக்கிறேன்

நெஞ்சில் சுமக்கிறேன்

                    மதுவோ சந்த்ருவின் இந்த செயலில் மனம் நெகிழ்ந்தான்.மகியோ சந்துருவை பார்த்து வாய் பிளந்து நின்றாள்.இதுவரை இவர்களின் பேச்சும் செயலும் எதார்த்தமாக இருப்பதுபோல் நினைத்தவள் இன்று சந்த்ருவின் இந்த செயலில் ஒரு வித்தியாசத்தை கண்டாள்.தான் சொன்ன பொய்யை நம்பிய அவன் சபியின் கையை பிடித்துகொண்டு கண்ணில் காதலோடு பேசுவதை கண்டு

“ஹய்யோ சந்துரு அண்ணா சபியை லவ் பண்றாங்களா ,கடவுளே சபிக்கு இவுங்கதான் கரெக்டான ஜோடி எப்படியாவது அவுங்கள சேர்த்து வை”என மனதிலுள் கடவுளை வேண்டி கண்ணை மூடி திறந்தவள் கன்னத்தில் பளார் என்று அரை விழுந்தது.அந்த சத்தத்தில் கலைந்த சபியும் சந்த்ருவும் தங்கள் நிலையை கண்டு பதறி விலகி நிற்க ,மகியோ தன்னை அறைந்த மதுவை பாவமாக பார்த்து

“அடப்பாவி பொசுக்குன்னு அடிச்சுட்டியேடா ஆமா இப்போ எதுக்கு அடிச்சான். ஒருவேள இவுங்க ரோமன்ஸ் பார்த்ததுக்கு அடிசுட்டானோ.”என மனதிலுள் நினைக்க சந்துரு மதுவை பார்த்து

“மது என்ன பண்ற”என கேட்க மதுவோ அவனை பார்த்து கை காட்டி அமைதியாயிருக்குமாறு சைகையில் சொல்லி மகியிடம் திரும்பி

“உனக்கு எல்லாம் விளையாட்டா போச்சு ,மனுசனோட பீலிங்க்ஸ்ல விளையாடுறதே வேலையா வச்சுருக்க,இங்க தான் போறோம்ன்னு ஒரு வார்த்தை சொன்னா வேணாம்னா சொல்லிருப்பேன்,இதுக்காக சபிக்கு fevar போய் சொல்லி எவ்ளோ தவிச்சிட்டான் தெரியுமா”என தன் நண்பன் பட்ட வேதனையில் பொங்கி எழுந்த மது மகியை திட்ட,சன்றுவோ என்ன செய்வது என தெரியாமல் தவிக்க,சபியோ

“என்ன சொல்றாங்க fevar தான இதுக்கு யார் தவிச்சா ஐயோ புரியலையே”என மண்டையை போட்டு குழப்ப மகியோ அவன் தன் நண்பனுக்காக கோபப்பட்டு பேசுவதை என்னை பெருமையாக பார்த்துகொண்டிருக்க,மகியை திட்டுவது பொறுக்காத சபி

“அண்ணா ஏன் இதுக்கு போய் கோபபடுறீங்க,நாங்க காலேஜ்ல சொல்றத தான் உங்ககிட்டையும் சொன்னோம்,உண்மையை சொல்லி திட்டு வாங்குறதுக்கு பதிலா போய் சொல்லி எஸ்கேப் ஆகலாம்”என பன்ச் டையலாக் பேச அதை கேட்ட மது ரோமது ரொம்ப பேசிவிட்டோமோ என நினைத்து மகியை பார்க்க அவளோ அவளின் முட்டைகண்ணை வைத்து தன்னை பாவமாக பார்த்துகொண்டிருந்தாள்.சபியின் பேச்சை கேட்ட சந்துருவோ

“குட் பாலிசி “என நிலைமையை மாற்ற எண்ணி வழக்கம்போல அவளை பார்த்து கலாய்க்க,அதை கேட்டு மகி சிரிக்க ,மதுவோ அவளை அடித்தது மனது கஷ்டப்பட அவர்களை பார்த்து

“நான் கிளம்புறேன்”என சொல்லிவிட்டு நகர அவன் பின்னோடு சந்த்ருவும் வர அதை கண்ட மது

“சந்துரு நீ காலையில் இருந்து சாப்பிடல அதுவுமில்லமா  அப்பவே பசிக்குதுன்னு வேற சொன்ன நீ இவங்களோடு இருந்து  சாப்பிட்டு வா நான் கிளம்புறேன் ”என சொல்ல

“மது நீயும்தான் காலையில் இருந்து சாப்பிடல வா சேர்ந்தே சாப்பிடலாம்”என சந்துரு கூப்பிட

“எனக்கு பசியில்லை”என மது மறுத்துவிட்டு மகியை ரொம்ப அடிச்சுட்டோம் என நினைத்துகொண்டே முன்னே நடக்க ,சந்துருவும் அவன் இல்லாமல் தான் சாப்பிட பிடிக்காமல் அவன் பின்னால் செல்ல அப்போது அவனை தடுத்த மகி

“அண்ணா நீங்க இங்கயே இருங்க நான் மதுவை கூப்பிட்டு வரேன்”என அவனை பார்த்து சொல்ல அதை கேட்டு சந்துரு சபியை பார்க்க அவளும் அமாம் என்பது போல தன் கண்ணை மூடி திறக்க சந்துரு சரியென் தலையாட்டினான்.மகி மதுவை துரத்திக்கொண்டே பின்னால் ஓடினாள்.

                      கார் பார்க்கிங்கில் உள்ளே நுழைந்த மதுவின் கையை பின்னால் ஓடிவந்த மகி பிடிக்க யாரென்று திரும்பி பார்த்த மது மகியை கண்டு முறைக்க,அதை கவனித்த மகி

“டேய் இப்போ எதுக்கு நீ  சம்பந்தமே இல்லாமே என்னை பார்த்து முறைக்கிற,ஆக்சுவலி உன்கிட்ட அடிவாங்கின நான் தான் உன்னை பார்த்து முறைக்கனும்”என தன் தலையை சாய்த்து கன்னகுழி விழ சிரித்துக்கொண்டே சொன்ன மகியை பார்த்து ஒருநொடி சொக்கி நின்றான்.இருந்தாலும் அதை அவள்முன் வெளிகாட்டாமல் மறுநொடியே அவளை பார்த்து முறைக்க மகி தொடர்ந்தாள்

“வா மது சாப்பிட்டு போகலாம் “என சிறுபிள்ளை போல் அவன் கையை பிடித்து இழுக்க மதுவோ

“எனக்கு வேணாம் நான் கிளம்புறேன் “என பிடிவாதமாக இருக்க அதை கண்டு சோர்ந்த மகி

“மது நான் வேணும்னு சொல்லல எங்க இணைக்கு லீவ்னு தெரிஞ்ச கிளாஸ் வச்சு உயிரை எடுப்பனுதான் அப்படி  சொன்னேன் அதுவும் இந்த மாதிரி நாங்க எத்தனையோ தடவோ சொல்லிருகோம் ,ஆனால் அது உன்னை இந்த அளவுக்கு கோபபடுத்தும் நான் நினைக்கல ப்ளீஸ் என் மேல கோபப்பட்டு நீ சாப்பிடாம போகாத”என மகி கெஞ்ச அதை கண்ட மதுவோ மனம் உருகி நின்றான்.அவளை மேலும் கெஞ்ச விடாமல்

“சரி வா சாப்பிடலாம்”என தன் சம்மதத்தை சொல்ல அதை கேட்ட மகியோ சிரிக்க மது அவளை பார்த்து

“சாரி மகி நான் எதுக்காக கோபபட்டேனா”என சொல்ல வருவதற்குள் முந்திகொண்ட மது

“சந்துரு அண்ணாவுக்காகதான புரிஞ்சுகிட்டேன்”என இடையில் சொல்லிமுடிக்க அதை கேட்டு ஆச்சர்யமான மது

“உனக்கு எப்படி தெரியும்”என கேட்க

“அதான் வந்த உடனே ப்ரீ ஷோ காமிசுட்டாங்களே”என சந்த்ருவின் செயலை நினைத்து சொல்லி சிரிக்க அதை கேட்டு மதுவும் சத்தமாக சிரித்தான்.பின் அவளிடம்

“இதை எல்லாம் நல்ல நோட் பண்ணு இந்த இன்வோல்வமென்ட் படிப்புல  காட்டிஇருந்தேன்னா நீதான் கிளாஸ் first “என மது கலாய்க்க

“இங்க பாரு மது நான் எப்பவும் மத்தவுங்களுக்கு போட்டியா இருக்க மாட்டேன்”என சீரியஸ் ஆக சொல்ல

“படிப்பு வரலைன்னு சொல்றதுக்கு இது ஒரு சாக்கா”என மது மறுபடியும் கேலிபண்ண அதை கேட்ட மகி அவனை பார்த்து பொய்யாக முறைத்து பின்

“சரி வா ரொம்ப பசிக்குது நீ அடிச்ச அடியில நான் ரொம்ப டயர்டா ஆகிட்டேன் ,கன்னமெல்லாம் வீங்கிருச்சு,பல்லு வேற ஆடுது முதல டாக்டரை போய் பார்க்கணும்”என அவனை இழுத்துக்கொண்டே சொல்ல அவள் சொன்னதும் அவளை ரொம்ப பலமாக அடித்துவிட்டோமோ என நினைத்து வருந்திய மது மகியின் தோளை தொட்டு திருப்பி அவளின் கன்னத்தின் மேல் தன் முரட்டு கைகளை வைக்க இதை எதிர்பாராத மகியோ திகைத்து நிற்க மதுவோ அவளின் குண்டு கன்னத்தில் தான் அறைந்த இடத்தை தன்னுடைய நீண்ட விரல்களால் வருடி விட ,அந்த சுகமான தொடுதலில் கண் மூடிய மகி அவன் வருடியதில் மெய்மறந்து நின்றாள்.

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்

அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்

அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது

அதிலே என் மனம் தெளியும் முன்னே

அன்பே உந்தன் அழகு முகத்தை

யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது

புயல் வந்து போனதொரு வனமாய்

ஆனதடி என்னுள்ளம்

என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்

என் நிலைமை அது சொல்லும்

மனம் ஏங்குதே… மனம் ஏங்குதே….

மீண்டும் காண…. மனம் ஏங்குதே…

                           மதுவோ அவள் மெய்மறந்து நின்ற நிலையை கண்டு  தன்னுடைய முரட்டு இதழை அவள் கன்னத்தில் மெதுவாக பதித்தான் .அதில் சட்டென்று கண்விழித்த மகி அவனை பார்க்க அவனோ மகியை விட்டு சற்று தள்ளி நின்று கை கட்டி அவளையே குறும்பாக பார்த்துகொண்டிருக்க அதை கண்ட மகி “இப்போ என்ன பண்ணான் இவன் ஒருவேள கனவா இல்ல பிரம்மையா” என தன் கன்னத்தை தடவியபடியே குழம்பி நிற்க அதை கண்டு ரசித்த மது அவளை பார்த்து

“ஆமா என்னைக்கு உன் கன்னம் ஒல்லியா இருந்தது நான் அடிச்சா உடனே வீங்குரதுக்கு “என சீரியஸா கேட்க அதை கேட்டு முதலில் புரியாமல் முழித்த மகி பின் அதன் அர்த்தம் புரிந்ததும் கோபமாகி

“டேய் அடிக்கிறதையும் அடிச்சுட்டு இப்போ நான் குண்டா இருக்கேன்னு கலாய்க்கிரியா உன்னை “என அடிக்க துரத்த அவனோ அவள் கையில் சிக்காமல் சிரித்துகொண்டே எஸ்கேப் ஆனான்.

                      அவர்களிருவரும் இன்னும் வராததை எண்ணி சபியும் சந்த்ருவும் காத்திருக்க அப்போது மகியும் மதுவும் சிரித்துக்கொண்டே அங்கு நடந்து வந்தார்கள்.அவர்களை கண்ட சபியும் சந்த்ருவும் நிம்மதி அடைய அவர்கள் முன் அமர்ந்தனர் மதுவும் மகியும்.அப்போது மகி சபியை பார்த்துக்கொண்டே மதுவிடம்

“இங்க பாரு மது நான் இருக்குற வரை சபிக்கு ஒன்னும் ஆக விடமாட்டேன்”என விளையாட்டாக சொல்ல(ஆனால் மகி சொல்வது ஒரு நாள் உண்மையாக போவது உணராமல் சொல்ல) மகி சொன்னதை கேட்டு சபி நெகிழ மதுவும் சந்த்ருவும் பெருமையாக மகியை பார்க்க அவளோ

“பின்ன இந்த சாப்பாடுக்கு எல்லாம் யார் பில் கட்டுறது”என சொல்லி சிரிக்க அதை கேட்டு வெறியான சபி

“அடியேய் குண்டு பூசணி ஒரு நிமிஷம் உன்னை போய் நல்லவன்னு தப்பா நினைச்சுட்டேனே “என சொல்லி அவளை செல்லமாக அடிக்க அதை சிரித்துக்கொண்டே வாங்கிகொண்டாள் மகி.இவர்களை பார்த்து சந்த்ருவும் சபியும் வாய்விட்டு சிரித்தனர்.

                       பின் நால்வரும் பேசி சிரித்துக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தார்கள்.மதுவுக்கு மகி பார்த்து பார்த்து பரிமாற,சபிக்கு சந்துரு கேலி பண்ணிக்கொண்டே பரிமாறினான்.மகி அவனிற்கு என்ன தேவையென்று அவன் தட்டை பார்த்துக்கொண்டே எடுத்து வைத்ததை கண்டு மதுவிற்கு அன்னையின் நினைவு வர அந்த நினைவில் மதுவின் கண்ணில் நீர் தேங்கி நிற்க அத மகி அறியாமல் துடைத்தான்.சந்துரு சபிக்கு பார்த்து பார்த்து பரிமாறினான்.அவன் தன் காதலை செயலின் மூலம் சபிக்கு உணர்த்த ஆரம்பித்தான்.ஏனோ மதுவும் சந்துருவும் நீண்ட நாள் கழித்து திருப்தியாக சாப்பிட்டதுபோல் உணர்ந்தார்கள்.

உருகுதல் தொடரும்…………………………………