தூரிகை 18 :
மாலை வெயில் கொஞ்சம் கொஞ்சமாய் மறைய ஆரம்பிக்க….அடுத்த இரண்டு நாட்களுக்கு செய்ய வேண்டிய வேலைகளை குணாவிடம் ஒப்படைத்து விட்டு,கீர்த்தனாவையும் அழைத்துக் கொண்டு…..மாமனாரின் ஊருக்கு பயணமானான்.
கீர்த்தனாவும் எந்த வித வாக்குவாதமும் செய்யாமல் அவனுடன் கிளம்பினாள்.அவள் அமைதியாய் இருப்பது கண்டு தேவாவிற்கே ஆச்சர்யமாகத்தான் இருந்தது.
அவர்கள் கிளம்பும் போதே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
“மழை வர மாதிரி இருக்கு…காரை ரொம்ப வேகமா ஓட்ட வேண்டாம்…பார்த்து போயிட்டு வாங்க..” என்று பத்மா சொல்ல…தேவா பதில் பேசாமல் தலையை மட்டும் அசைத்தான்.
”சரின்னு வாயைத் திறந்து சொன்னா குறைஞ்சா போய்டுவான்….? இம்சை…!” என்று மனதிற்குள் அவனை வசைபாடியவள்…“சரி அத்தை…!” என்று சொல்ல..பத்மாவின் முகம் பிரகாசமானது.
எதுவும் பேசாமல் அவள் அமர்ந்திருக்க….அவனும் அவளை தொந்தரவு செய்யாமல் அமைதியாய் காரை செலுத்திக் கொண்டிருந்தான்.
ஆனால் கீர்த்தனாவின் மனதிற்குள் ஆயிரம் கேள்விகள்….”இப்ப ஊருக்கு போனா…அம்மா கேக்குற கேள்விக்கு எல்லாம் எப்படி பதில் சொல்லி சாமாளிப்பது….?” என்ற ஒத்திகையில் லயித்திருந்தாள்.
சாரலாய் ஆரம்பித்த மழை….பெரும் இடிகளுடன் பேயத் துவங்கியிருந்தது.
“இவ்வளவு பெரிய மழை பெய்யுது…..இவ என்ன இப்படி அமைதியா இருக்கா…?” என்ற யோசனையுடன் அவளைப் பார்த்தவன் திகைத்தான்.அவள் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.யோசனையில் இருந்தவள் தன்னையும் மீறி உறங்கிக் கொண்டிருந்தாள்.
“அடிப்பாவி…!இப்படி ஒரு தூக்கமா…!” என்று நினைத்தவன்…,”எழுப்பி பின் சீட்ல நல்லா வசதியா தூங்க சொல்லாமா…?” என்று யோசித்தவன்… அதனையும் கைவிட்டான்.
நிதானமாய் காரை செலுத்த…..சிறிது நேரத்தில் அவன் தோளில் வாகாய் விழுந்தாள் கீர்த்தனா.
அவளின் திடீர் செய்கையில், அவன் உடலில் மின்சாரம் பாய…சடனாக பிரேக் போட்டான்.அப்படியும் அவள் தூக்கம் கலைந்த பாடில்லை.வெளியே பெய்து கொண்டிருந்த மழையும்….தன் தோளில் சாய்ந்திருந்த மனையாளின் முகம் சேர்ந்து அவனை இம்சை படுத்திக் கொண்டிருந்தது.
அவளின் முகத்தை அப்படியே அள்ளியெடுத்து அவளை முத்தமிட வேண்டும் என்று தன் மனதிற்குள் ஏற்பட்ட ஆசையை அடக்க அவன் வெகு பிரயத்தனம் பட வேண்டியிருந்தது.
“தேவா…உனக்கு வந்த சத்ய சோதனையாடா இது..!”என்று நினைத்தவனின் கைகள் இருக ஆரம்பித்து.அவனின் உணர்வுகள் அவன் ஆளுமையை வெல்ல முடியாமல் அவனுக்கு அடங்கின.
அவள் தன் தோளில் சாய்ந்திருப்பதே….ஒரு சுகமாய் தோன…அதை கெடுத்துக் கொள்ள மனமின்றி….அவள் உறக்கம் கலையாதவாறு மெதுவாக காரை செலுத்தினான்.
கீர்த்தனாவோ நேரம் ஆக ஆக…அவனை வாகாக கட்டிக் கொண்டு….தூங்கிக் கொண்டிருந்தாள்.
“ராட்சசி…..என்னை வேணுமின்னே இம்சை பண்றா…!” என்று செல்லமாய் மனதிற்குள் கோபித்தவன்…கொஞ்சம் சிரமப்பட்டு தான் காரை ஓட்ட வேண்டியிருந்தது.
விருப்பாச்சி கிராமத்தை அவன் அடையும் போது…….இருட்டாகி விட்டிருந்தது.
மழை நேரத்தில் பத்திரமாய் வீடு வந்து சேரணுமே…! என்று தவித்துக் கொண்டிருந்த செழியனுக்கும்,கலையரசிக்கும் அவனின் காரைப் பார்த்த பின்பு தான் நிம்மதியாய் இருந்தது.
“என்ன மாப்பிள்ளை….! மழை விட்டதுக்கு அப்பறம் கூட கிளம்பியிருக்கலாம்ல…!” என்று செழியன் சொல்ல….
”கிளம்பும் போது மழை இல்லை மாமா…!” என்றான் சிரித்த முகமாய்.
கலையரசி ஆவலாய் மகளைத் தேட…..அவரின் எண்ணம் புரிந்தவனாய்….”கீர்த்தனா நல்லா தூங்குறா அத்தை…!” என்றான்.
“எழுப்பி விடுங்க மாப்பிள்ளை…!என்ன பொட்ட பிள்ளைக்கு இந்நேரத்தில் தூக்கம் வேண்டி கிடக்கு…” என்று தாயாய் அதட்ட…,.
“பரவாயில்லை அத்தை…!” என்றவன்….சற்றும் யோசிக்காமல்….அவளைத் தூக்கினான்.அவளும் சிணுங்கிய படி வாகாய் அவனுள் புதைய…
இவனின் திடீர் செய்கையை எதிர்பார்க்காத கலையரசியும்,செழியனும்…. வெட்க புன்னகையை பூக்க..அதை எதையும் கவனியாது வீட்டினுள் நுழைந்தான் தேவா. அவளின் அறைக்கு சென்று அவளை கட்டிலில் கிடத்தியவன்….ஒரு பெட்ஷீட்டையும் எடுத்து போர்த்திவிட்டான்.
குழந்தையாய் சுருண்டு உறங்கிக் கொண்டிருந்தாள்.அவளையே இமைக்காமல் பார்த்தவன்…தன்னையும் மீறி…அவளின் நெற்றியில் தன் இதழ்களைப் பதித்து விட்டு வெளியேறினான்.
அவள் சரியாக தூங்கியே பல நாட்கள் ஆனதை அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
“வாங்க தம்பி….சாப்பிடலாம்..!” எண்டு கலையரசி அழைக்க..
“இல்லை வேண்டாம் அத்தை…!பசியில்லை.இந்த மழைக்கு ஒரு கப் காபி குடுத்திங்கன்னா சூப்பரா இருக்கும்…!” என்றான் சிரிப்புடன்.
“இதோ ஒரு நிமிசத்துல எடுத்துட்டு வரேன் தம்பி…!” என்று ஓடினார் கலை….மருமகனை கவனிக்கும் மாமியாராய்.
அவரது செய்கையைக் கண்டு சிரித்தவன்….அவளின் அறையில் நின்று மழையை ரசிக்கத் துவங்கினான்.பழைய நியாபங்கள் படையெடுக்க…..அவனின் முகம் உணர்ச்சிகளைத் துடைத்த கல்லானது.
வாழ்க்கையில் நாம் எதிர்பார்த்த அனைத்தும் உடனடியாக நிறைவேறுவதில்லை.அப்படியே எதிர்பார்ப்புகள் முழுமை அடைந்தாலும்… நம்ம முழுமைப் படுத்துவதில்லை.
காதல் என்ற ஒற்றை உணர்வின் பிடியில் சிக்கியிருந்த தேவாவிற்கு….வரும் காலமும்,வாழும் காலமும் என்ன வைத்திருக்கிறது என்பது அவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை.
அவ்வளவு சொத்து,பணம் இருந்தும்…. நிம்மதி என்ற ஒன்று அவன் அருகில் வராமல் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தது.
உணர்வில்லா உறவுகளுக்கும்,உயிரில்லா காதலுக்கும் இடையில் அவன் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தான்.
எப்பொழுதும் மற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாத ஒரு புதிராக அவன் இருப்பதுதான்…. இதற்கு எல்லாம் காரணமோ என்னவோ…?
எது எப்படி இருந்தாலும்….தன் வாழ்வை சீர் படுத்திக் கொள்ள வேண்டிய கடமை தனக்கு இருக்கிறது என்பதை அவன் முழுமையாய் உணர்ந்திருந்தான்.
கீர்த்தனா எப்படியும் தன்னைக் காதலிப்பாள்,தன்னைக் கணவனாக ஏற்றுக் கொள்வாள் என்ற நம்பிக்கையை அவனுக்கு அவனே ஏற்படுத்திக் கொண்டான்.
“இந்தாங்க மாப்பிள்ளை காபி…!” என்று கலையரசி நீட்ட…”தேங்க்ஸ் அத்தை…” என்றபடி வாங்கிக் கொண்டான்.
“எது வேண்டும் என்றாலும் உடனே கூப்பிடுங்க மாப்பிள்ளை…!” என்றபடி சென்றார்.
மழையினால் ஏற்பட்ட குளுமைக்கும்,அந்த காபிக்கும் மிகவும் இதமாக இருந்தது.
பொழுது போகாமல் அந்த அறையையே சுற்றிக் கொண்டிருந்தான்.அங்கிருந்த மேஜையில்….கீர்த்தனாவின் சிறு வயது புகைப்படங்கள் அடங்கிய ஆல்பம் இருக்க…சுவாரஸ்யமாய் அதைப் பார்க்கத் தொடங்கினான்.
ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான போஸ்களில் மனதை நிறைத்தாள் கீர்த்தனா..!
அதிலும் பாவாடை தாவணியில் அவளைப் பார்த்தவனின் மனம் சிறகில்லாமல் பறக்கத் தொடங்கியது.அந்த புகைப் படத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்…நேரம் ஆனதே தெரியாமல்.
அவன் உடல்… அசதியில் தூக்கத்திற்கு அழைக்க….ஆல்பத்தை மூடி, இருந்த இடத்தில் வைத்தான்.
“எங்க படுக்குறது…?” என்று யோசிக்க….தரையைத் தவிர சோபாவும் இல்லை.போன தடவை வந்தப்ப இருந்ததே…?” என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
அறையில் அதிகப்படியான….தலையணை,போர்வை கூட இல்லாதைக் கண்டு…மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.தன் மாமியாரின் மூளையை மெச்சாமல் இருக்க முடியவில்லை அவனுக்கு.
“எல்லாம் பிளான் பண்ணிதான் செஞ்சுருக்காங்க..!” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு சிரித்தவன்..
“தேவா….! ம்ம்ம்ம்….உன் நேரம் இப்படி இருக்கு….இங்க நான் தூங்குறதை இவ மட்டும் பார்த்தா..பத்ரகாளி ஆகிடுவா…!” என்று புலம்பியபடி…
வேறு வழியில்லாமல் அவளுக்கு அருகில் படுத்தான்.ஆனால் உறக்கம் தான் வர மறுத்தது.
“ஐயோ தேவா..! உனக்கு இந்த இப்படி ஒரு நிலை தேவைதானா…?” என்று புலம்பினாலும் அந்த தருணத்தை இழக்க அவன் மனம் முற்படவில்லை.
உறங்கும் அவளுடைய முகம் நிதர்சனமாய் இருக்க….கலைந்த கூந்தல் அவள் முகத்தில் ஓடியாடி விளையாட…. தேவாவின்கதி அதோ கதியாய் இருந்தது.
“இது சரிப்படாது…!” என்று பெருமூச்சு விட்ட படி அவன் எழுந்து கொள்ள ஆயத்தமாக….கீர்த்தனாவோ…அவன் மீது கையைப் போட்டுக் கொண்டு…மேலும் அவன் அருகில், அவனை அண்டி தூங்கத் தொடங்கினாள்.
அவளது செய்கையில் அதிர்ந்தவன்.. “சரிதான்..!இவ நம்மளை ஒரு வழி பண்ணாம விட மாட்டா போல….” என்று நினைத்தபடி….விலக மனமின்றி…..அப்படியே உறங்கிப் போனான்.
வெகு நாள் கழித்து அவனுக்கும் அது நிம்மதியான தூக்கமாக அமைத்தது.
இரவு முழுவதும் மழை பெய்ததின் விளைவாக…அதிகாலை ஐந்து மணியளவில் மழை முழுதும் விட்டிருந்தது.மர இலைகளில் இருந்த நீர் சொட்டு…. சொட்டு…. என்ற வடிய…காலை நேர கற்று அந்த அறையை ஊடுருவ…விடிந்தும்,விடியாத அந்த வெளிச்சத்தில் கண் விழித்தாள் கீர்த்தனா.
‘ஊருக்கு வந்துட்டோமா…!” என்ற நினைப்புடன் பார்க்க….அது அவள் அறையாயிருந்தது.
இந்த குளிரிலும் தன் நிலை மட்டும் கதகதப்பாய் தெரிய…நன்றாக கண்ணைத் திறந்து பார்த்தவளுக்கு…..அருகில் அயர்ந்து தூங்கும் தேவாவைப் பார்க்கும் வரை நன்றாகத் தான் இருந்தது.
அவனை அண்டி….அவன் தோள் வளைவில் முகம் வைத்து தூங்கிக் கொண்டிருந்த தன் நிலையைப் பார்த்தவள் வேகமாக துள்ளி எழுந்தாள்.
“இவன் எப்படி ..என் ரூம்ல…?” என்று ஒரு நிமிடம் யோசிக்க….காரிலேயே தூங்கியது மங்கலாய் நினைவுக்கு வர….
“அடப்பாவி….! நான் தூங்கிட்டு இருக்கவும் என் ரூம்லேயே,அதுவும் என் பக்கத்துலையே தூங்குவியா….?” என்று கடுப்புடன் யோசித்தவள்…அவனை தட்டி எழுப்ப போக…
அசதியில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவனின் முகம் பார்த்தவள்….தன் எண்ணத்தை கைவிட்டு எழுந்தாள்.
நேரத்தைப் பார்த்தவள்..”ஐயோ…!இப்படித் தூங்கியிருக்கேன்…அம்மா கிட்ட செத்தோம்..!”என்று புலம்பியபடி எழுந்து சென்றாள்.
அது கிராமம் ஆதலால்…வெயில் அடித்தாலும்,புயல் அடித்தாலும்,மழை பெய்தாலும்…..அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து விடுவார்கள்.
அனைவரின் வீடுகளிலும் தவறாமல் பசு மாடுகள் இருப்பதால்…பால் கறப்பவர்கள் நான்கு மணிக்கே வந்து பாலை கறந்து விட்டு செல்வர்.
பிறகு மாட்டைப் பிடித்துக் கட்டி,தொழுவம் சுத்தம் செய்து,வாசல் தெளித்து,கோலமிட்டு என்று அவர்களின் வாழ்க்கை முறை அப்பொழுதே துவங்கி விடும்.
நேராக தன் தாயைத் தேடிப் போக….பின்னால் மாட்டுத் தொழுவத்தில் சத்தம் கேட்டு அங்கு விரைந்தாள் கீர்த்தனா.
அவர்களின் செவளை மாடு கன்று ஈனுவதற்கு கஷட்டப்பட்டுக் கொண்டிருந்தது.
அங்கு வேலை செய்யும் பெண்மணி…கம்பு,சோளம் என்று விறகு அடுப்பில் அதை அவித்துக் கொண்டிருக்க….சில சிரமங்களுக்குப் பிறகு..தன் கன்றை ஈன்றது அந்த தாய்ப் பசு.
“மாசி போட்டுசுச்சா…” என்று செழியன் கேட்க….”ம்ம் ஆமாங்கய்யா..” என்று சொன்ன வேலையாள் அதை சுத்தம் செய்ய….
அதைப் பார்த்துக் கொண்டிருந்த கீர்த்தனாவிற்கு உடல் நடுங்க ஆரம்பித்தது.இது எப்போதும் நடப்பது தான்.அவர்கள் வீட்டில் பசு கன்று ஈனும் போது….அது படும் கஷ்ட்டத்தைப் பார்ப்பவளுக்கு உடல் நடுங்க ஆரம்பித்து விடும்.
“அய்யா…கிடாரி…(பெண் கன்று) கன்னுக்குட்டி ஈந்திருக்குதுங்க….!”என்று வேலையாள் சந்தோஷமாக சொல்ல….
“ரொம்ப சந்தோசம்…!கொஞ்சம் நேரம் கழிச்சு சீம்பாலை கறந்துருங்க..!”என்றபடி கலையரசி திரும்ப…அங்கே கீர்த்தனா நின்றிருந்தாள்.
“என்ன கண்ணு…எப்ப எந்திருச்ச..!குளிக்கலையா …?வர வர என்ன பழக்கம் பழகுற…போய் குளிச்சுட்டு,மாப்பிள்ளைக்கு குளிக்க எல்லாம் தயாராய் எடுத்து வை..!” என்று விரட்டினார்.
கலையரசிக்குத் தெரியும்….அவள் அங்கே நின்றிருந்தாள் அழுவாள் என்று.
”இன்னும் சின்ன புள்ளையாவே இருக்கு.இப்படியே இருந்த…நாளைக்கு எப்படி இவ ஒரு பிள்ளையப் பெக்குறது….?” என்று புலம்பியபடி செல்ல..கீர்த்தனா அமைதியாக திரும்ப…அவளின் எதிரில் கைகளைக் கட்டியபடி நின்றிருந்தான் தேவா.
“தைரியம் எல்லாம் வெளிப்பார்வைக்கு தான் போல…?” என்றான் கிண்டலாய்.
அவனை உற்று முறைத்தவள்….! எதுவும் பேசாமல் விலகிப் போக…
“என்ன பதிலையே காணோம்…!வாயைத் திறந்தா விடாம பேசுவ…?இப்ப பேசு பார்ப்போம்..!” என்று அவள் அம்மா போன திசையை கண் சிமிட்டிக் காட்ட…
“மவனே எனக்கும் ஒரு நேரம் வரும்..!அப்ப இருக்கு உனக்கு கச்சேரி…!” என்று கருவியவள்…அங்கிருந்து நகர…
“அத்தை நான் அப்படியே அருவிப் பக்கம் போயிட்டு..” என்று அவன் முடிப்பதற்குள்….
“இல்லை வேண்டாம்..! மழை பெய்ததால் தண்ணி நிறைய வரும்…பாறை எல்லாம் வழுக்கும்..!” என்று அவசர அவசரமாக சொல்லி முடித்தாள்.
அவளைப் பார்த்து ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தவன்..”என் மேல் உனக்கு அவ்வளவு அக்கறையா..?” என்று கேட்க…
“அக்கறையும் கிடையாது,ஒரு மண்ணும் கிடையாது….அன்னைக்கு மாதிரி தலைவலின்னு சொல்லுவிங்க,மயக்கம் போட்டு விழுவிங்க…!அப்பறம் உங்களைத் தூக்க ஒரு ஆள் வரணும்…அதுக்காகத்தான் சொன்னேன்…!” என்றாள் துடுக்காய்.
அவளின் பதிலில் அவனின் முகம் விழுந்துவிட்டது.இருந்தாலும் அவள் அறியாது மறைத்துக் கொண்டாள்.
அவள் அவனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் செல்ல….வேதனை தான் மிஞ்சியது அவனுக்கு.
சிறிது நேரத்தில் அவனும் குளித்து விட்டு வர….அவன் முன் சூடான சீம்பால் நீட்டப்பட்டது.
“என்ன அத்தை இது..!” என்று தேவா கேட்க..
“சீம்பால் தம்பி…! கண்ணு போட்டதுக்கு அப்பறம் கறக்குற முதல் பால்…நல்லா இருக்கும் தம்பி…சாப்பிடுங்க…!” என்று நீட்ட…
அதை வாங்கி சுவைத்தவின் முகம்….பிரகாசம் அடைந்தது.
“சூப்பரா இருக்கு அத்தை..!”என்றவன் அதை ரசித்து சாப்பிட….கீர்த்தனாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
வர வர இந்த வீட்ல எனக்கு மரியாதையே இல்லை என புலம்பியவள்….அந்த காட்சியை காண சகிக்காது….வெளியே சென்றாள்.அவர்களுடைய வீட்டின் முன் செடிகளை விட மரங்களே அடர்ந்து இருக்கும்.
வெளியே சென்றவளின்….”அம்மா..!அப்பா….!இங்க வாங்களேன்…”“ என்று அவள் கத்திய சத்தத்தில்… கலையரசி என்னவோ ஏதோவென்று செல்ல….தேவாவும் விரைந்தான்.
மாமரத்தின் முன்னால் நின்றிருந்தவள்…தாயைப் பார்க்கவும்…”அம்மா..இங்க பாருங்க..!நான் வச்ச மரத்துல ரெண்டு மாங்காய் இருக்கு….!”என்று தவ்விக் கொண்டு சொல்ல…
தேவா..அவளின் செய்கையை ரசனையுடன் பார்க்க…கலையரசி எரிச்சலுடன் பார்த்தார்.
“கீர்த்தனா என்ன இது…சின்ன பிள்ளைத்தனமா…?ஒரு நிமிஷத்துல பதறிட்டோம்..!” என்று கடிந்து கொண்டு உள்ளே செல்ல…கீர்த்தனாவிற்கு முகம் விழுந்து விட்டது.
“இது நீ வச்ச மரமா…?” என்றான் ஆசையாய்.
உடனே அவள் முகம் பிரகாசமாய் மாற..”ம்ம்…நான் தான் வச்சேன்..ஆனா காய் காய்க்கவே இல்ல…இப்ப தான் காய்ச்சிருக்கு..!” என்றாள் குதுகலமாய்.
“உங்களுக்கு மாங்காய் பிடிக்குமா…?” என்றாள் ஆவலுடன்.
“காயா…? மாம்பழம் தான் சாப்பிட்டு இருக்கேன்..! காய் புளிப்பா இருக்கும்..” என்றான் தேவா.
“இல்லை.மாங்காய் செம்ம டேஸ்ட்டா இருக்கும்..அதுவும் உப்பு,மிளகாய் தூள் சேர்த்து சாப்பிட்டா ருசி அள்ளும்…” என்று அவள் சொல்லும் விதத்திலேயே….மாங்காய் மீதான அவள் பற்றை ஊகித்துக் கொண்டான் தேவா.
“நான் வேணா அதைப் பிடுங்கித் தரட்டுமா..?” என்றான்.
அவனை ஒரு மார்க்கமாய் பார்த்தவள்…”ம்ம்ம்…” என்றாள் குறுஞ்சிரிப்புடன்.
ஒரு பேச்சுக்குத் தான் கேட்டானேத் தவிர…மரம் ஏறுவதற்கான அடிச்சுவடு கூட தெரியாது தேவாவிற்கு.இருந்தாலும் ஆண் என்ற கர்வம் தலை தூக்க…
“வேகமாய் இரண்டு பிடி வைத்து ஏரியவன்..ஏறிய வேகத்தை விட…வேகமாய் கீழே வந்தான்…மீண்டும் முயற்சி செய்ய…அவனின் ஒவ்வொரு முயற்சியும் நழுவிப் போனது…”
கீர்த்தனாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.”என்ன பண்றிங்க..? உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை..!” என்று நக்கலடிக்க…
“இல்லை…ஏறிடுவேன்…மழை பெய்ததால கொஞ்சம் வழுக்குது… அவ்ளோதான்..!” என்றான் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப் போல்.
“அப்படியா..? எங்க விலகுங்க பார்ப்போம்..” என்று அவனை விலக்கியவள்….சேலையை இழுத்து சொருகியபடி லாவகமாய் ஏறினாள்.
சேலை என்பதால் அங்கங்கு தடுக்க…சமாளித்து ஏறினாள்.அவள் ஏறுவதை அதிசயமாய் பார்த்துக் கொண்டிருந்தவன்…நமட்டு சிரிப்பு சிரிக்க…
“நீ சிரிப்பதைப் போல் ஒன்றும் இல்லை என்பதைப் போல…சேலையை சுருட்டியிருந்தாள்.
பக்கக் கிளையில் நின்று அந்த மாங்காய்க்காக அவள் கைகளை எக்க…அவளின் இடுப்பு சேலை விலக….பளிச்சென்ற அவளின் இடை தேவாவின் கண்களுக்கு காட்சியாய் அமைந்தது.
வேகமாய் சுற்றும் முற்றும் பார்த்தவன்….”கீர்த்தனா..! வேண்டாம் கீழ இறங்கு…!” என்றான் அவஸ்தையாய்.
அவள்.., அவனை சட்டையே செய்யாமல்.. ஒரு எட்டு முன்னே போய் மாங்காயில் கையை வைக்கவும்….”கீர்த்தனா..!” என்ற கலையரசியின் குரலில் உலுக்கி விழுந்தவள்…பேலன்ஸ் தவறி…ஐயோ..!அம்மா..” என்றபடி விழ…
அவளை லாவகமாய் பிடித்தான் தேவா.விழுந்த வேகத்தில் மூச்சு வாங்க…”மரம் ஏறத் தெரியலைன்னாலும்….விழுபவர்களை கரெக்ட்டா எனக்குப் பிடிக்கத் தெரியும்…”என்று தேவா குருஞ்சிரிப்புடன் சொல்ல…
பட்டென்று அவன் கைகளில் இருந்து கீழே தவ்வினாள் கீர்த்தனா.அவ்வளவு ரணகளத்திலும் மாங்காயை அவள் கையேடு பிடுங்கியிருந்தாள்.
“டோண்டோடைன்…பிடுங்கிட்டேன்..!இந்தாங்க..!” என்று அவன் முன் நீட்ட…
“இவளை எந்த வகையில் சேர்ப்பது…?” என்று குழம்பினான் தேவா.
“நான் தான் ஏறிப் பறிசேன்னு அம்மாகிட்ட சொல்லிடாதிங்க.. அவ்ளோதான்…சக்கையா புளிஞ்சுடுவாங்க..!” என்றவள்..கலைந்திருந்த கூந்தலை சரி செய்தபடி சென்றாள்.
“இவ நல்லவளா…கெட்டவளா..”என்ற ரீதியில் பார்த்துக் கொண்டிருந்தான் தேவா.ஆசை மனைவி ஆசையாய் பறித்துக் கொடுத்த மாங்காயுடன்.
உன்னை காணும் வரை காதல் தெரியவில்லை…
கண்ட பின்பு கண்ணில் தூக்கமில்லை…
நிலவு நீயின்றி இரவும் எனக்கில்லை…
பாவை நீயின்றி பகலும் எனக்கில்லை…
இன்னும் ஒரு கோடி ஜென்மம் வரும்போதும்…
வஞ்சி நீயின்றி வாழ்க்கை எனக்கில்லை…
உன் புன்னகையில் என் மனது திறக்கும்…
உன் கண்ணசைவில் காதல் கொடி பறக்கும்…