நினைவுகள் 4
இலக்கியன் “அத்தை,மாமா என்று மலரின் வீட்டு வாசலில் நின்று அவர்களை அழைத்துகொண்டு இருந்தான்”
கற்பகம் “அடடே வாங்க மாப்பிளை ஏன் அங்கேயே நிக்குறேங்க,ஏங்க இங்க வாங்க நம்ம வீட்டு மாப்பிளை வந்திருக்காங்க” என்று இலக்கியனை வரவேற்றரர்.
இலக்கியன் “இருக்கட்டும் அத்தை”
கற்பகம் “என்ன சாப்பிடுறேங்க மாப்பிளை,டீ,காபி,”என்று உபசரித்துக் கொண்டு இருந்தார்.
இலக்கியன் “இருக்கட்டும் அத்தை இப்போதான் சாப்பிட்டு வந்தேன்”
கற்பகம் “காபியாவது குடிங்க மாப்பிளை” என்றார்.
இலக்கியன் “சரிங்க அத்தை”.
தங்கம் “வாங்க மாப்பிளை எப்படி இருக்கேங்க,வீட்டுல எல்லோரும் நல்ல இருகாங்களா,”என்று அனைவரையும் நலம் விசாரித்தார்.
இலக்கியன் “எல்லோரும் நல்ல இருகாங்க மாமா,நீங்க அத்தை எப்படி இருக்கேங்க”என்று அவனும் விசாரித்தான்.
கற்பகம் “எல்லோரும் நல்லா இருக்கோம் மாப்பிள்ளை இந்தாங்க மாப்பிளை,காபி”
தங்கம் “என்ன மாப்பிளை,கிருஷ்ணன் மச்சான் எதாவது சொல்லிவிட்டாரா,”
இலக்கியன் “மாமா நிச்சயத்துக்கு துணி எடுக்க நாளைக்கு போகலமனு அப்பா கேட்டு வரசொன்னார் மாமா,அப்பா வராத இருந்தது அப்பாக்கு ஹோஷ்பிடல் அஹ இருந்து எமர்ஜன்சி போன் உடனே கிளம்பிட்டாரு, அதான் நான் வந்தேன் மாமா”என்று கூறினான்.
தங்கம் “என்ன மாப்பிளை இதுக்கு போய் நேருல வரணுமா என்ன ஒரு போன் பண்ணிருந்தா போதுமே,”என்றார்.
இலக்கியன் “போன்ல கேக்குறது நல்லா இருக்காது மாமா அதான் நேருல வந்தேன்”
கற்பகம் “மாப்பிளை நாளைக்கு நல்ல நாள் தான் நாளைக்கே போகலாம் என்று கற்பகம் கூற.
தங்கம் “மாப்பிளை உங்ககிட்ட ஒன்னு சொல்லணும் “
இலக்கியன் “சொல்லுங்க மாமா”
தங்கம் “மலரு ஒரு மாசம் வேலைக்கு போகணும்முனு ஆசைபடுது,அதான் உங்ககிட்டையும்,மச்சான்கிட்டயும் கேக்கணும் இருந்தேன்,”என்றார்.
இலக்கியன் “ நல்ல விஷயம் மாமா,போகட்டும் கல்யாணம் முடிஞ்சபின்னாடியும் போகட்டும் மாமா” என்று சம்மதம் தெரிவித்தான்.
கற்பகம் “சரிங்க மாப்பிளை,நாளைக்கு நல்ல நேரம் பார்த்து கிளம்பலாம் அண்ணிகிட்ட சொல்லுங்க,”என்றார்.
இலக்கியன் “சரிங்க அத்தை,அப்புறம் அத்தை என்னை பேரு சொல்லியே கூப்பிடுங்க அத்தை மரியாதை எல்லாம் வேணாம் அத்தை” என்றான்.
கற்பகம் “அதெப்படி மாப்பிளை,என் பொண்ணை கட்டிக்கபோற உங்களை மாப்பிளைன்னுதான் கூப்பிடனும்,அதுதான் முறையே”என்று முற்றுபுள்ளி வைத்தார்.
இலக்கியனோ சிரித்துகொண்டு “சரிங்க அத்தை ,நான் கிளம்புறேன்,வரேன் மாமா”என்று வாசல் வந்து வழியனுப்பிவைத்தனர்.
இலக்கியன் தந்து காரை எடுக்க வந்தான்,அப்பொழுது அவன் எதிரில் மலர் வந்துகொண்டு இருந்தால்,இலக்கியன் மலரை பார்த்துவிட்டான்,ஆனால் மலர் அவள் போனில் வசுவிடம் சண்டைபோட்டுகொண்டு வந்ததால் இலக்கியனை கவனிக்கவில்லை.
மலர் “ஒழுங்கா ஓடிடு வசு என் கையில மாட்டுன கைமாதான்”
அந்த பக்கம் என்ன சொன்னாலோ
மலர் “ஆமாம் அப்படியே உன் அண்ணா என் எதிரில நின்னு வா வெளிய போகலாம் கூப்பிடபோரங்க பாரு போடி”
வசு “உண்மையில அண்ணா உன் எதிர்ல நிக்க போறாங்க அப்போ நீ உன் வாயில இருந்து ஒரு வார்த்தைகூட வராது என்ன பெட் அஹ”,என்றால்.
மலர் “பார்போம், உன் அண்ணா என் எதிர்லகூட வரமாட்டாங்க,என்று கூறும் போது அவள் எதிரில் இலக்கியன் நின்றுகொண்டு இருந்தான்.
மலரோ “ஹா” என்று கண்களை விரித்து பார்த்துகொண்டு இருந்தால் இலக்கியனை.
வசு “ஹலோ இருக்கியா டி,மலர் ,ஹெலோ,ஆஹா அண்ணா ஆல்ரெடி அங்கதான் இருகாங்க போல,எப்படியோ நான் வின் பண்ணிட்டேன்”
“மலரோ”அடிபாவி இவளுக்கு தெரிஞ்சிருக்கும் இல இங்க வராங்கனு,மலர் இப்போ என்ன பண்ணபோற”என்று மனதில் யோசித்துக்கொண்டே இருந்தால்.
இலக்கியன் “என்ன மேடம் ரொம்ப சத்தமா பேசிட்டு வரேங்க,அதுவும் எதிர்ல யாரு இருக்காங்கனு தெரியாம,என்று வம்பிழுத்தான்.
மலர் “அதெல்லாம் ஒன்னுமில்லைங்க வசுதான் கிண்டல் பண்ணிட்டு இருந்தான் அதான் “
இலக்கியன் “என்னமோ “உன் அண்ணா வந்து என்னை வெளிய கூட்டிட்டு போவாங்கலான்னு” பேசிட்டு வந்த மாதிரி இருந்தது”என்று சரியாக கூறினான்.
“மலர் எல்லாமே கேட்டுட்டான,போச்சு டி மலர் இன்னைக்கு நீ அவ்வளோதான்”
மலர் “இல்லைங்க வசுகிட்ட வெளிய போகலாம் சொன்னே அதான் வேற ஒண்ணுமில்லை”என்றால்.
இலக்கியன் “அப்படியா விழி”
மலர் “ஆமாங்க”,அவளின் பெயர் வித்தியாசத்தை கண்டறியவில்லை.
இலக்கியன் “அப்போ வா போகலாம்,இன்னைக்கு நாள் முழுவதும் உன்கூட தான் எங்க போகலாம் சொல்லு விழி”என்றான்.
மலர் “என்னது, அம்மாக்கு தெரிஞ்ச திட்டுவாங்க,வேணாங்க இருக்கட்டும் இன்னொருநாள் நீங்க,நான் ,வசு ,கண்ணன் எல்லோரும் சேர்ந்து போகலாங்க”என்றால்.
இலக்கியன் “இவங்கள மட்டும் விட்டுட்ட,என் அம்மா அப்பா ,உன் அம்மா அப்பா இவங்களையும் சேர்த்துக்கலாம் சரியா” என்று அவளை கேலி செய்தான்.
மலர் “ஹ்ம்ம் இதுவும் நல்ல இருக்கேங்க,அம்மா அப்பாவையும் கூட்டிட்டு போகலாம்”அவனின் கேலி புரியாமல்.
இலக்கியன் “உன்னையெல்லாம் வசு கேலி பண்ணுறதுல தப்பே இல்லை”
மலர் “நான் கிளம்புறேன்,என்று நகர எத்தனித்தால்”
இலக்கியன் “இரு விழி உன்கிட்ட பேசணும் எப்போ ப்ரீய அஹ இருப்ப சொல்லு”
மலர் “வீட்டுல அம்மா அப்பா இருப்பாங்க அதனால நம்ம நிச்சயம் முடிஞ்சா பின்னாடி பேசலாம்ங்க”என்று அவனிடம் கூறிக்கொண்டு சென்றுவிட்டால்.
இலக்கியன் “விழி ஒரு நிமிஷம்” என்று நிறுத்தினான்.
மலர் “சொல்லுங்க”
இலக்கியன் “நிச்சயம் முடிஞ்ச பின்னாடி எப்படி பேசுவ,என் போன் நம்பர் வேணாமா”என்றான்.
மலர் “என்கிட்ட இருக்குங்க”என்று சிரிப்புடன் அவள்வீட்டிக்குள் சென்று மறைந்தால்.
“இலக்கியன் மனதில் நல்ல முன்னேற்றம் தான்,நாளைக்கு அவளையும் துணி எடுக்க கூப்பிட்டு வரசொல்லனும்,அவளுக்கு பிடிச்சமாதிரி எடுத்துகொடுக்கணும் என்று நினைத்துகொண்டான்”
நந்தன் குரூப் ஆப் கம்பெனி :
தேவ் “அருண் எல்லாமே ரெடி ஆகிடுச்சா,நீங்களும் டாடியும் இன்டர்வியூ பண்ணுங்க எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அதானால நான் வெளிய இருப்பேன்” என்றான்
அருண் “சார் நான் எப்படி இண்டர்வ்யூ பண்ணுறது, சார் பண்ணுறாரே அதுவே போதும் சார்”என்று தயங்கினான்.
தேவ் “அருண் எனக்கு வெளிய முக்கியமான மீட்டிங் இருக்கு அதுனால நீங்க பண்ணுறேங்க சரியா”என்று முடித்தான்.
அருண் “ஓகே சார்”
வசு “டேய் கண்ணா இந்த கம்பெனிதான மாத்தி வேறேதாவது கம்பெனிக்கு வந்துற போறோம்”
கண்ணன் “அதெல்லாம் சரியான அட்ரெஸ்க்குதான் வந்திருகோம்,நீ முதல உன் கண்ணாடியை கழட்டிட்டு நல்லா பாரு பக்கி”
வசு “இல்லைடா கண்ணுகுட்டி சூரியன் முகத்துல அடிக்குதுடா, கண்ணுகூசுது அதான் கூலர் போட்டு இருக்கேன்,என்று அவள் கண்ணாடியை அகற்றிவிட்டு பார்த்தால்,அமாடியோவ் இவ்ளோ பெரிய கம்பெனியா,டேய் கண்ணா நமக்கு வேலைகிடைக்குமாங்குறது சந்தேகம்தான்,முக்கியமா எனக்கு”என்றால்
கண்ணன் “கண்டிப்பா கிடைக்காது”என்று சத்தமாக கூறினான்.
வசு “என்ன சொன்ன, எனக்கு வேலை கிடைக்காத,இங்க பாரு நான் இந்த கம்பெனில இண்டர்வ்யூல செலக்ட் ஆகி,வேலை பார்த்து ஒரு மாசம் சம்பளத்துல உனக்கு ஜிகர்தண்டா வாங்கித்தரலா என் பேரு வாசுகி ராமாகிருஷ்ணன் இல்லைடா”என்று கம்பெனி வாசல் முன்னாடி சபதம் செய்தால்.
“யாருமா நீ.. இங்க நின்னு சபதம் செய்யுற கிளம்புமா முதல இங்கிருந்து” என்று அங்கு வேலை செய்யும் வாட்ச்மேன் துரத்தினார்.
கண்ணன் “ஹாஹா வசு,அந்த வாட்ச்மேன்கே நீ பண்ணுற சபதம் பொறுக்கல போல”என்றன் கேலியுடன்.
வசு “சிரிக்காதடா எருமை”என்று அவனை அடித்துக்கொண்டே கம்பெனிக்குள் சென்றனர்.
கண்ணன் “வசு மலர் வரலைய இண்டர்வ்யூக்கு”
வசு “தெரியலையே இரு அவளுக்கு போன் பண்ணிட்டு வரேன்,நீ ரிசப்ஷன் ஏரியல இண்டர்வ்யூ பத்தி விசாரிச்சுட்டு இரு வரேன்”என்றால்.
கண்ணன் “ஓகே வசு”
வசு “ஹலோ மலர் எங்க இருக்க இன்னுமா இண்டர்வ்யூக்கு கிளம்பிவர, இதுக்குதான் என்கூட வான்னு சொன்னே, இப்போ லேட் ஆகுது டி சீக்கிரம் வா”
மலர் “சாரி டி,கொஞ்சம் லேட் ஆகிடுச்சு, வந்துட்டு இருக்கேன்,என்று கூறினால்.
வசு “ஓகே டி வா உனக்கா நானும் கண்ணனும் வெயிட் பண்ணுறோம்”
மலர் “சரி டி”
“வசு மனதிலோ இப்படி மெதுவா பேசுறா அப்படி யாருகூட வந்துட்டு இருக்கா,சரி இல்லையே,வரட்டும் பார்த்துக்கலாம் அந்த சோடாபுட்டிய”
மலர் “போச்சு உங்க தங்கச்சி வசு கண்டுபிடிச்சிருப்பா இதுக்குதான் உங்ககூடா வரமாட்டேனு சொன்னே கேட்டீங்களா இப்போ என்னையும் உங்களையும் வச்சு செய்வா அவ.”என்று இலக்கியனிடம் கூறிகொண்டுவந்தால்.
இலக்கியன் “வசு ஒன்னும் சொல்லமாட்டா,நீ இப்படி பயந்தா அவள் உன்னை வம்பிழுக்குறதுல தப்பே இல்லை”
மலர் “ஏங்க இப்படி சொல்லுறேங்க,நான் வசுகூடவே வந்திருப்பேன் நீங்கதான் என்கூடவான்னு சொல்லி கார்ல கூட்டிட்டு வந்துடேங்க,
இலக்கியன் “இங்க பாரு விழி வசு உன்னை ஒன்னும் சொல்லமாட்டா அதுக்கு நான் பொறுப்பு சரியா”,என்று அவளை சமதானபடுத்தினான்.
மலர் “சரிங்க”
“இலக்கியன் கம்பெனி முன்னாடி காரை நிறுத்தினான்”
இலக்கியன் “சரி இண்டர்வ்யூ நல்லா பண்ணு,டென்ஷன் ஆகக்கூடாது சரியா,என்று அவள் கையை பிடித்து “ஆல் தி பெஸ்ட்”என்று கூறினான்.
மலர் “ஹ்ம்ம் சரிங்க,தேங்க்ஸ்”காரைவிட்டு இறங்கி அவனிடம்”போயிட்டு வரேங்க”என்று கூறி கம்பெனி வளாகத்தில் நடந்தால்.
அட்டெண்டர் “இங்க சாருமதி யாரு”
“நான் தான்” என்று ஒருபெண் எழுந்தால்.
“நீங்க உள்ள போகலாம்”
இண்டர்வ்யூ ஆரம்பித்து ஒவ்வொருவராக உள்ளே போனார்கள்.
மலர் “என்ன வசு இண்டர்வ்யூ ஆரம்பிசுட்டங்களா” என்று கேட்டுக்கொண்டு வந்தால்.
வசு “அது ஆரம்பிச்சு ஒரு மணிநேரம் ஆச்சு,நீ ஏன் இவ்ளோ லேட் அஹ வர”என்று கேட்டால்.
மலர் “இல்லை டி அப்பா கொண்டுவந்து விட நேரமாச்சு அதான் கொஞ்சம் லேட்”என்று காரணம் கூறினால்.
வசு “பார்த்த தெரியலையே, நீ ஏசி கார்ல வந்த மாதிரி இருக்கே”என்று அவளை சந்தேகமாக கேட்டால்.
மலர் “இல்லையே நான் அப்பாகூட பைக் ல வந்தேன் டி வசு”
“போச்சு கண்டுபிடிச்சுட்டாலே அப்போவே சொன்னே கேட்டாரா அவரு இப்போ மாட்டிகிட்டு முழிக்குறது நான்தான்”.
“இங்க வசு யாருங்க அவங்க உள்ள போங்க என்று அட்டெண்டர் வந்து மலர் காப்பாற்றினார்”
வசு “ஓகே டி நான் போயிட்டு வரேன்,கண்ணா வரேன் டா”என்று கூறிக்கொண்டு உள்ளே போனால்.
மலர் “நல்ல வேலை இந்த அட்டெண்டர் வந்து காப்பாத்தினான் இல்லையினா என்னை கேள்வி மேல கேள்விகேட்டு கொன்றுவா” என்று மூச்சுவிட்டால்.
“மே ஐ கம்மின் சார்” என்று கேட்டுக்கொண்டு உள்ளே நுழைந்தால்”,வசு.
அருண்,நந்தன் “எஸ்”
“வசு, நந்தனை பார்த்ததும் ஒருநிமிடம் ஆச்சர்யம் தான் ஆனால் அதை காட்டவில்லை”
“நந்தனும் அதை வெளிகாட்டவில்லை”
அருண் “உங்க பைல்ஸ் அஹ குடுங்க”
வசு “எஸ் சார்,இந்தாங்க”
“நந்தனும் அருணும் மாத்தி மாத்தி கேள்வி கேட்டனர் ஆனால் வசுவோ சளைக்காமல் பதிலை கூறிக்கொண்டு இருந்தால்”
நந்தன் “ஆர் யூ செலக்ட், நீங்க பக்கத்துல உள்ள மீட்டிங் ஹால் அஹ வெயிட் பண்ணுங்க,இப்போ நீங்க போகலாம்”என்று அவளின் பைல் அஹ கொடுத்தனர்.
வசு “தேங்க் யூ சார்” என்று கிளம்பினால்.
நந்தன் “அருண் இந்த பொண்ணுகூட வந்திருக்குற ரெண்டுபேர் இருப்பாங்க அவங்களையும் செலக்ட் பண்ணிரு அப்புறம் முதல் மூன்று பேர் இருக்கங்கள அவங்களையும் செலக்ட் பண்ணிரு ஓகே”என்றார்
அருண் “சார், ஏன் இப்போ வந்த பொண்ணையும்,அவங்ககூட வந்தவங்களையும் செலக்ட் பண்ண சொல்லுறேங்க”
நந்தன் “அருண் இப்போ நான் சொல்லுறதை செய்யுங்க அப்புறம் உங்களுக்கு ஏன் இந்த பொண்ண அஹ செலக்ட் பண்ணேன்னு நீயே தெரிஞ்சுக்குவ”என்றார் ஒரு காரணத்துடன்.
அருண் “ஓகே சார் அப்பிடியே பண்ணிடலாம்”
வசு “மலர்,கண்ணனிடம் அந்த ஹால் அஹ வெயிட் பண்ண சொல்லிருகாங்க நான் அங்க இருக்கேன் நீங்க செலக்ட் ஆனாதான் நானும் இங்க வொர்க் பண்ணுவேன் சரியா”என்று அவர்களிடம் கூறிக்கொண்டு சென்றாள்.
அடுத்தடுத்து மலரும் ,கண்ணனும் சென்றனர்.அதற்கு பின் வேறு யாரையும் செலக்ட் பண்ணவில்லை.
மலர் “டேய் கண்ணா வசு பசிக்குது சொல்லி மெசேஜ் அனுப்பிருக்கா டா வா அவளுக்கு எதாவது வாங்கிட்டு போகாலாம்”என்று அங்கு இருக்கும் கேண்டினுக்கு சென்றனர்.
கண்ணன் “அவளுக்கு பசிக்காம இருந்தான் அதிசயமே,இப்போ பாரு என் போன்னுக்கு ஜிகர்தண்டா வாங்கிட்டுவான்னு அனுப்புவா”என்று அவன் சொல்லி முடித்ததுமே மெசேஜ் ஒலி கேட்டது.
கண்ணன் “நான் சொல்லல” என்று மெசேஜ் வந்ததை மலரிடம் காண்பித்தான்.மலர் “ஆமா டா ,எப்படி டா”என்று கேட்டால்.
கண்ணன் “பாம்பின் கால் பாம்பறியும்”
தேவ் “அருண் நான் மீட்டிங் ஹால் அஹ இருக்கேன் நீங்க இண்டர்வ்யூ ல செலக்ட் ஆனவங்க எல்லாம் அங்க வர சொல்லுங்க”என்றான்.
அருண் “ ஓகே சார்”
தேவ் மீடிங்க ஹால்லை நெருங்க அவனுக்கு இதயம் துடித்தது.
வசுக்கும் இதயம் துடிக்க ஆரம்பித்தது.
தேவ் “சுகி இங்க இருப்பாளோ”
வசு “மாத்திரை போட்டேனே அப்புறம் ஏன் இதயம் துடிக்குது”
தேவ் மீட்டிங் ஹாலின் கதவில் கை வைத்து திறந்து உள்ளே சென்றான், அப்பொழுது “கண்ணா ஒரு ஜிகர்தண்டா வாங்கிட்டு வர இவ்ளோ நேரமா” என்று வசு கேட்டுகொண்டே திரும்பினால்.
தேவ்வோ “சுகி”என்று சுகமாய் அதிர்ந்தான்.
மனதினில் உன்னை
சுமப்பதினாலே
மரணத்தை தாண்டி
வாழ்ந்திருப்பேன்
என் கண்ணில் உனை வைத்தே
காட்சிகளை
பார்ப்பேன்
ஒரு நிமிடம் உனை மறக்க
முயன்றதிலே
தோற்றேன்
நீயே என் இதயமடி,
நீயே என் ஜீவனடி
வசு “யாரு இவன்,இப்படி என்னையவே பார்த்துட்டு இருக்கான்”என்று மனதில் நினைத்துக்கொண்டால்.
தேவ் மனதில் “உன்னை பிரிஞ்சு நான் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு சுகி,இப்போ என் எதிர்ல நிக்குற,கிட்டத்தட்ட மூணு வருஷமா உனக்காக காத்திட்டு இருந்தேன் இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு”என்று அவள் நினைவிலே பேசிக்கொண்டு இருந்தான்.தேவ் அவளையே வைத்த கண் மாறாமல் பார்த்து இருந்தான்.
வசு “அவன் முன் கையை ஆட்டி பேசினால்,ஆனால் அவன் கண்டு கொள்ளவில்லை”.
மலர் “டி வசு இந்தா உனக்கு ஜிகர்தண்டா” என்றபடி வந்தால் மலரும் கண்ணனும்.
மலர், கண்ணனுக்கு அந்த புதியவன் யார் என்று தெரியவில்லை.
மலர் “யாரு டி இவங்க”என்றால்
வசு “தெரியலை டி அப்போ இருந்து அவன்கிட்ட கேட்டு இருக்கேன் அவன் ஒரு பதிலும் சொல்ல மாற்றான்.
தேவ் சுதாரித்துகொண்டு “நீங்க எல்லாம் இங்க என்ன பண்ணுறேங்க என்றான்”
கண்ணன் “ சார் நாங்க இந்த கம்பெனி இண்டர்வ்யூ செலக்ட் ஆனாவங்க”
“தேவ் மனதில் அப்போ சுகி என்கூடதான் இருக்கபோறா என்று மிகவும் மகிழ்ச்சியில் இருந்தான்.”அப்பொழுது.
அருண் “சார் எல்லறோம் வந்துட்டாங்க,சேர்மேன் சார் இன்னும் கொஞ்சம் நேரத்துல வரேன்னு சொல்லிக்காருங்க சார்”.
தேவ் “ஓகே அருண் எல்லோரையும் உக்கார சொல்லுங்க”
மலர் “அப்போ இவங்கதான் இந்த கம்பெனி எம்.டி அஹ” என்று அவள் பக்கத்தில் இருக்கும் ஒருவரிடம் விசாரித்தால்.
“ஆமாம் மலர் இவங்கதான் நம்ம பாஸ்”
வசுவோ “என்னது பாஸ் அஹ்ஹா”அலறினாள்.
மலர் “வசு நீ உன்னை வேலைய விட்டே தூக்கபோறாங்க,சார்வே அவன் இவன் பேசிட்ட”என்று வசுவை பயமுறுத்தினால்.
வசு “சும்மா இரு டி நீ வேறா அவனுக்கு கேட்டுற போகுது”
அருண் “பிளிஸ் போய் உக்காருங்க,இப்படி எல்லாம் நிக்கக்கூடாது”
தேவ் இண்டர்வ்யூவில் செலக்ட் ஆனா பைலை பார்த்துகொண்டு இருந்தான் அதில் வசுவின் பைலை மட்டும் தனியாக வைத்துவிட்டு,அவர்களிடம் உரையாட ஆரம்பித்தான்.
தேவ் “வெல்கம் ப்ரிண்ட்ஸ்,ஐ அம் தேவ்நந்தன் என் கம்பெனியோட எம்.டி அஹ உங்களை வெல்கம்பண்ணுறேன்,அப்புறம் என் கம்பெனி ல செலக்ட் ஆனா உங்களுக்கு என் விஷஸ்,நமக்கு புது ப்ரோஜெகட் சைன் ஆகிருக்கு,அந்த ப்ரொஜெக்ட் லீடர், மிஸ்டர்.அருண்”என்று அறிவித்தான்.
அருண் அதிர்ந்து தேவ்வை பார்த்தான்.
தேவ் “தென்,அருண்கிட்ட வொர்க் பண்ணபோறவங்க,என்று வசுவைதவிர மீதி உள்ள ஐந்து பேரை செலக்ட் செய்தான்
மலர் “வசு உன் பேர் அஹ சொல்லலா”என்றால்.
வசு “தெரியல டி,
தேவ் “அப்புறம் எனக்கு புது பி.ஏ,மிஸ் வாசுகிராமகிருஷ்ணன்,”என்று வசுவை அதிர வைத்தான்.
வசு அதிர்ந்து அவனை பார்த்தால்.
தேவ் “அவளை பார்த்து கண்சிமிட்டினான்”
வசு “ஹா என்று அதிர்ந்து”ச்சே அவன் என்னை பார்த்து கண்ணசிமிட்டலா” என்று தனக்குதானே கூறிக்கொண்டால்.
மலர் “வசு சார் உன்னை கூப்பிடுறாங்க”என்று அவளிடம் கூறினால்.
வசு தேவ்வை பார்க்க அவனோ “உங்க பேருதான வாசுகி”என்று அவளை பார்த்து கேட்டான்.
வசு எழுந்து நின்று, “சொல்லுங்க சார்”
தேவ் “இனிமே நீங்க தான் என் பெர்செனல் பிஏ புரிந்ததா”என்று ஒவ்வொரு வார்த்தையை அழுத்தி கூறினான்.
வசு “எஸ் சார் புரிஞ்சது”
தேவ் “ஓகே ப்ரிண்ட்ஸ் நாளையில இருந்து நம்ம வேலைய தொடங்கலாம்,இப்போ நீங்க கிளம்பலாம்”என்றான்.
அருண் “சார் எனக்கு உங்க பிஏ இருக்குறதை போதும் எதுக்கு இந்த ப்ரொஜெக்ட்ல என்னை லீடர் அஹ போட்டு இருக்கேங்க”என்றான்.
தேவ் “அருண் உங்க டேலன்ட் அஹ பார்த்துதான் உங்களுக்கு இந்தபோஸ்ட் சோ நீங்கதான் இந்த ப்ரொஜெக்ட் ஹெட் ஓகே”என்று கூறிவிட்டு சென்றான்.
தேவ் மிகவும் உற்சாகமாய் வீடு வந்தான்,
ராதா “என்ன ராஜா இவ்வளோ சந்தோஷமா இருக்க புது ப்ரொஜெக்ட் கிடைச்சிருக்கா”என்றார்.
தேவ் “ஆமாம் மா,”என்று சொல்லி ராதாவை கட்டியணைத்தான்.
ராதா “எப்போவுமே நீ சந்தோஷமா இருக்கனும் ராஜா”என்று ஆசிர்வதித்தார்.
தேவ் “அம்மா நான் ட்ரெஸ் சேன்ஞ் பண்ணிட்டுவரேன்”என்று விசில் அடித்துக்கொண்டு படியேறினான்.
ராதா மனதில் “அவனும் இருந்திருந்தா நல்லா இருக்கும் இந்நேரம் ரெண்டு பேருக்கும் திருமணத்தை முடிச்சுஇருப்பேன்”.என்று மௌனமாக அழுதார்.
சசி “எதுக்குடா ஊருல இருந்து வந்தவன இப்படி போன் மேல போன் போட்டு வரச்சொன்ன” என்று சரணிடம் கேட்டான்.
சரண் “இது யாருன்னு தெரியுதா”என்று ஒரு புகைப்படத்தை காட்டினான்.
சசி “இது…..என்று போட்டோவை பார்த்து அதிர்ந்து கூறினான்.,சரண் இதுல இருக்குறது விணு தாலிக்கட்டினா பொண்ணு டா, ஆனா இந்த பொண்ணுதான் இறந்துடுச்சே டா அப்புறம் எதுக்கு இப்போ இந்த போட்டோவ காட்டுற”என்றான்.
சரண் “அந்த பொண்ணு உயிரோட இருக்கா சசி”என்று கூறினான்.
“நான் அந்த கம்பெனில வொர்க் பண்ணமாட்டேன்”என்று வசு,கண்ணன் மலரிடம் கூறினால்.
மலர்,கண்ணன் இருவரும் அதிர்ந்தனர்.
வசு எடுத்த முடிவு சரியா????சுகி தேவ்வை அறிவாளா????
உன்நினைவுகள் தொடரும்………..