நினைவுகள் : 1
அந்த மருத்துவமனை முழுவதும் பரப்பரப்பை கொண்டுஇருந்து ஏனென்றால் அங்கு ஒரு இதயம் மாற்று சிகிச்சை நடந்துகொண்டிருக்கு..
பல்ஸ் பார்த்துகிட்டே இருங்க நர்ஸ்..
மற்றொரு மருத்துவரோ ஐஸ்பெட்டிக்குள் இருக்கும் இதயத்தை எடுத்து தலைமை மருத்துவரிடம் கொடுத்தார்….
இதயத்தை அந்த பெண்ணின் உடலில் நன்றாக பொருத்தி அது சீராக செயல்படுகிறதா என்று நொடிக்கு ஒருமுறை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்…எல்லாம் நல்லபடியாக முடிந்தது….
அங்கு ஒரு உயிர் மண்ணுலகத்தைவிட்டு விண்ணுலகம் சென்றது.,..
இன்னொரு உயிரோ விண்ணுலகத்தை தொட்டு மீண்டும் மண்ணுலகம் வந்து சேர்ந்த்தது….
அறுவைசிகிச்சை அறையில் இருந்து மருத்துவ குழு வெளியே வந்தது..
“உங்க பொண்ணுக்கு இனி எந்த பிரச்சனையும் இல்ல நல்லா இருக்காங்க.கொஞ்சம் அப்சர்வேஷன் இருக்கணும் அதனால ரெண்டுநாள் கழிச்சு நார்மல் வார்டுக்கு மாத்திடுவோம் அப்போ போய் பாருங்க ஓகே”..
டாக்டர் தேவ்க்கு என்னாச்சு…
சாரி மிஸ்டர் ராமன் அவரோட இதயத்தை தான் உங்க பொண்ணுக்கு எடுத்து வச்சுஇருக்கோம்….அதுமட்டும் இல்லாம அவரோட சுயவிருப்பதோடு தான் இந்த ஆப்ரேஷன் நடந்தது…
எல்லாம் பார்மாலிட்டிஸ் முடிஞ்சா பின்னாடி அவரோட உடலை வாங்கிகோங்க…
கடவுளே நான் என்ன பண்ணுவேன்….என்று ராமன் தவித்துக்கொண்டுயிருந்தார்….
ராமன் மனதிலோ அவன் சொன்னமாதிரியே அவன் உயிரை கொடுத்து என் பொண்ண காப்பத்திட்டானே….
என் பொண்ணு உயிரோடவந்துட்டானு சந்தோஷபடுறத…
இல்ல ஒரு உயிர் பிரிஞ்சுடுச்சுன்னு வருத்தப்படுறதா…என்று ராமன் வேதனைக்கொண்டார்…
எல்லாம் வேலைகளும் முடிந்து தேவ்வின் உடல் வந்தது..
அதை எடுத்துக்கொண்டு ராமன் தேவ்வின் வீட்டிருக்கு சென்றார்..
பணம்படைத்தவர்கள் மட்டும் வசிக்கும் தெருவில் காதை கிழித்துக்கொண்டு ஆம்புலன்ஸ் சைரன் சத்தம்…
நேராக குமரன் வீட்டின் முன்பகுதியில் நிறுத்தினர்…
விழாக்கோலம் கொண்டிருந்த அந்த வீடு ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டு உறவினர்கள் அனைவரும் வெளியே வந்ததனர்…
ராமன் “இது தேவ் வீடுதானே என்று அங்கு இருந்தவர்களிடம் கேட்க்டுகொண்டுயிருந்தார்”…
அனைவரையும் விலக்கியபடி ராதா வெளியே வந்தார்..
“யார் நீங்க விசேஷம் நடக்க இருக்க வீட்டுல இப்படி ஆம்புலன்ஸ் வண்டிய நிறுத்தி இருக்கேங்க”
ராமன் “தேவ் உங்க பையனா”..
“ஆமாம்”…
“ஏன்… என்னாச்சு என் பையனுக்கு…சொல்லுங்க” என்றார்.
“உங்க பையனுக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனை கொண்டு சொல்லுபோது அவங்க இறந்துட்டாங்க”…..என்றார் ராமன்
என்ன சொல்லுறேங்க அய்யோ கடவுளே..என்று ராதா மயக்கம் அடைந்தார்…
விழாக்கோலம் கொண்ட வீடு துக்கவீடாக மாறிவிட்டது..
தேவ்வின் உடலை சுற்றி உறவினர் கூட்டம்…
ராதவோ மகனின் அருகிலேகிடந்தார்…
எல்லாம் முடிந்தது தேவ்வின் உடலை தகனம் செய்து..அவனின் ஒரு பிடி சாம்பலோடு வீடு வந்து சேர்ந்தனர்..
மருத்துவமனை:
ராமன் எப்போது மகள் கண்விழித்து பார்ப்பாள் என்று அறையின் முன்னே தவம்கிடந்தார்..
அப்பொழுது ஒரு செவிலி வந்து, “சார் உங்க பொண்ணு கண்ணு முழிச்சுட்டாங்க பொய் பாருங்க”…
வேகமாய் சென்று மகளின் கையை எடுத்து தன் கைகளில் வைத்துக்கொண்டு “ஆயா நல்லா இருக்கியா”….என்று கண்ணீர் மொழியில் பேசிக்கொண்டு இருந்தார்..
அப்பா “ தேவ் நல்லா இருக்கான” என்றால்…..ஒரு நொடி திகைத்தார்..
ராமன் “ தேவ்க்கு ஒண்ணுமில்லமா அவன் நல்ல இருக்கான்..அவங்க வீட்டுல இருந்து தேவ்வோட அப்பா அவன வேறொரு மருத்துவமனைக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க”
“இப்போ தேவ் நல்லா இருக்கானு சொல்லிட்டாங்கமா”…
ஹ்ம்ம் சரிப்பா…
மீண்டும் மயக்க நிலைக்கு சென்றுவிட்டால் சுகி…
ஆனால் “ராமனோ தன் மகளிடம் எப்படி கூறுவது தேவ் இந்த உலகத்திலே இல்லை” என்று….
குமரன் வீட்டில்:
தேவ் இறந்து இதோடு ஒரு மாதம் ஆனது…அங்கு ராதா மகனை இழந்த சோகத்தில் இருந்தார்…
குமரனோ வெளிநாட்டில் இருக்கும் இன்னொரு மகனிடம் தேவ் இறந்ததை கூறவில்லை….
அப்பொழுது தேவ்வின் போஸ்ட்மார்ட்டம் ரீப்போர்ட்டை எதற்ச்சையாக குமரன் பார்க்க அதிர்ச்சியடைந்தார்….
ஆனால் ஒரு நொடிதான் “ அதற்க்கு பின் அந்த ரிப்போர்ட்டை யாருக்கும் தெரியாமல் தன் அலமாரியில் வைத்து பூட்டிவிட்டார்…
குமரன் மனதிலோ இந்த ரீப்போர்ட்டில் இருக்கும் விஷயம் மட்டும் நம் மகனுக்கு,மனைவிக்கும் தெரிந்தால்..விஷயம் விபரிதம் ஆகிவிடும்…வேண்டாம் இனி யாருக்கும் தெரியக்கூடாது…என்று மறைத்தார்…
(ஆனால் குமரன் மறைக்கும் விஷயம் “அவனின்” மூலம் வெளி வந்து யாரை எல்லாம் பழிவாங்கபோகிறது என்று இவருக்கு தெரியாது)
காலை நேரம் மிகவும் உற்சாகம் கொண்டவளாய் அங்குமிங்கு ஓடிக்கொண்டு இருந்தால் வாசுகி (நம் கதையின் நாயகி)..
அம்மா எங்க என் டிபன் பாக்ஸ்…எங்க என் சுடிதார் சால்
இப்படி ஒவ்வொன்றுக்கும் அம்மா அம்மா என்று அழைத்துக்கொண்டு இல்லை இல்லை கூவிக்கொண்டு இருந்தால்..
ஜானகி “ஏன் டி காலேஜ்க்குதான போற இல்லை கோயம்பேடு பஸ்ஸ்டாண்டுக்கு போரையா இப்படி ஏலம் விடுற”
நீ ஒருத்திதான் என் பிள்ளையா உனக்கு மட்டும் பார்க்க என்று பொறுமையின் சிகரம் ஜானகியே தன் எல்லையை கடந்துவிட்டார்..
“அம்மா இன்னைக்கு கடைசி எக்ஸாம்மா ப்ளிஸ் இந்த ஒருவாட்டி மட்டும்”ஹெல்ப் பண்ணுங்க வாங்க…
ஹ்ம்ம் நீ எல்லாம் எங்க கேட்க போற, படிச்சு படிச்சு சொன்னே எக்ஸாம்க்கு முன்னடியே எல்லாம் எடுத்து வச்சுக்கோன்னு என் பேச்சை என்னைக்கு கேட்டுயிருக்குற எல்லா உன் அப்பாவா சொல்லணும் உனக்கு செல்லம்கொடுக்குறதே உன் அப்பாதான்..
என்ன ஜானகி என் பேச்சு அடிபடுது என்று ராமகிருஷ்ணன் வந்தார்…
(ராமகிருஷ்ணன்-ஜானகி இவர்களின் புதல்வர்கள் தான் வாசுகி,இலக்கியன்.ராமகிருஷ்ணன் ஹார்ட்சர்ஜன் ஆக ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் வேலைப்பார்துகொண்டு இருக்கிறார்,ஜானகி அக்கம்பக்கம் குழந்தைகளுக்கு வீணை,பாட்டு என்று சொல்லிக்கொடுக்கிறார்,வாசுகி-பொறியியல் கடைசி வருடம், இலக்கியன்-மருத்துவத்துறையில் வேலைபார்த்துக்கொண்டுயிருக்கும் இளம் மருத்துவர்..)
வாங்க உங்களுக்கு இப்போதான் வர நேரம் இருந்ததா…வாக்கிங் தானே போனேங்க அப்புறம் ஏன் இவ்ளோ நேரம்…
அப்பா இன்னைக்கு உங்களுக்கு, எனக்குதான் செம டோஸ் என்று வாசுகி கூற..
ஜாணுமா உனக்கு தெரியாத நான் வாக்கிங் போன என் ப்ரிண்ட்ஸ் அவ்ளோ சீக்கிரமா என்ன விடமாடங்கனு அப்புறம் ஏன்மா…என்று பரிதாபமாக கூற…ஜானகியோ மகளை விட்டு கணவரை முறைக்க ஆரம்பித்தார்…
இங்கு விவாதம் நடக்க ஒரு அறையில் காதை கிழித்துக்கொண்டு பாட்டு சத்தம் கேட்டது அது யார் என்றால் இலக்கியன்….
வாசுகியோ இவ்ளோ நேரமா நீ தூங்குவ இது சரிபடாது…என்று பாட்டு பாடும் ப்ளையரை ஆப் செய்துவிட்டு, சுவற்றில் இருக்கும் ரப்பர் பல்லியை எடுத்து அவன் போர்வையில் உள்ளேவிட்டாதும் அங்கு இருந்து ஓடிவிட்டிட்டால்
அடுத்த நிமிடம் “அம்மா என்று அலறல் சத்தம்” என்னவோ எதோ என்று ஜானகி போய் பார்க்க “என்ன டா என்னாச்சு”
அம்மா என்மேல பல்லி ப்ளிஸ்மா எடுத்துவிடுங்கமா,அம்மா பயமாயிருக்குமா எடுத்துவிடுங்க…
“டேய் நீ எல்லாம் ஒரு டாக்டர் நு சொல்லிக்காத ரப்பர் பல்லிக்கு இவ்வளோ பயந்துபோற..”என்று ஜானகி மகனை கடிந்தார்..
எல்லாம் அந்த வசு தான்மா பண்ணிருப்பா…என்று இலக்கியன் வசுவை மாட்டிவிட…அவளுக்கு வேலை இல்லை எப்போப்பாரு உன்னையே வம்பு பண்ணுறா…..
வசு “ என்ன ஆளவே காணம் ஒரு வேலை காய்ச்சல் வந்திடுச்சோ அச்சோ அண்ணா நீ பாவம் இல்லை அந்தா பல்லிதான் பாவம்” என்று தன் அண்ணனை நினைத்து சிரித்துக்கொண்டே கல்லூரிக்கு பயணமானால்..
அம்மா ,அப்பா நான் காலேஜ்க்கு போயிடுவரேன்,என்று வீடே அதிரும்படி கூறிக்கொண்டே கிளம்பிவிட்டாள்…
ஜானகியோ “ டி வசு சாப்பிடமா போற இரு டி என்று கூப்பிடுக்கொண்டே அவளின் பின்னாடி சென்றார்”…
“அவளோ நீ எப்படிகூப்பிட்டாலும் என் காதுக்கேக்காது என்ற ரகத்தில் அவளுடைய பிங்கியில் பறந்துவிட்டாள்”
“போயிட்டாள இவளா வச்சுக்கிட்டு ஒன்னும் பண்ணமுடியாது”
வாசுகி-எவ்ளோதான் விளையாட்டு பிள்ளையை போல் நடந்துகொண்டாலும் அது தன் குடும்பத்தில் மட்டுமே தவிர வேறு யாரிடமும் அப்படி நடந்துகொள்ளமாட்டால்,அவளுக்கு அண்ணன் என்றால் மிகவும் பிடிக்கும் அதுவும் அவளின் அண்ணனை எப்படி பயமுறுத்துவது,விதவிதமாக என்று இலக்கியனை பயம்கொள்ள செய்வாள், அவளோட ப்ரிண்ட்ஸ் மலர்விழி,கண்ணன்.. இவங்க மூனுபேரு சேர்ந்த அந்த இடம் கல்யாணமண்டபத்த விட ரொம்ப கலகலப்பா இருக்கும்…இன்னும் ஒருத்தவங்க இருக்காங்க..
(ஆனா அவளுக்கு அவன் மட்டும் முக்கியமானவன்)
“நந்தன் குரூப்ஒப் கம்பெனி”
“ சற்று சுறுசுறுப்பாக செயல்பட்டுக்கொண்டு இருந்தது காரணம் அந்த கம்பெனி ஓனர் ஆர் எம் டி “தேவ்நந்தன் வந்துகொண்டுயிருகிறார்”….. அனைவரியின் வணக்கத்தை சிறு தலைஅசைப்புடன் ஏற்றுக்கொண்டு தன் அறையில் நுழைந்தான்”.
அவன் அறையில் நுழைந்தவுடன் அவனின் பிஏ வான அருண் உள்ளே வந்தான்.
“குட்மோர்னிங் சார்”
இன்னைக்கு ப்ரோக்ராம் “ஏகே குரூப்ஒப் கம்பெனி ல இருந்து உங்ககூட மீட்டிங் இருக்கு,தென் சார் இன்னைக்கு ஆல் கம்பெனி கான்ப்ரன்ஸ் டுடே ஈவ்வினங் சிக்ஸ் ஒக்லாக் சார் என வரிசை கட்டி வேலைகளை கூறிக்கொண்டு இருந்தான்…
ஆனால் இவன் “மனதிலோ இன்று காலையில் நடந்ததை நினைத்துக்கொண்டு இருந்தான்”..
ராதா “தேவ் உனக்கு கல்யாணம் பண்ணா முடிவுபண்ணிருக்கோம் ராஜா என்ன மாதிரி பொண்ணு வேணும் சொல்லு அப்பாவும் நானும் பார்க்குறோம்” என்றார்
நந்தன் “ என்ன தேவ் அமைதியா இருக்க”
தேவ் “ எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்”
ராதாவோ “ஏன் ராஜா” உனக்கு வயசு ஏறிட்டே போகுது டா
தேவ் “அம்மா எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்” என்று அழுத்தம் திருத்தமாய் கூறிவிட்டு சென்றான்.
ராதா நந்தனிடம் “ஏங்க இந்த பையன் ஏன் இப்படி நடந்துகிறான்”
நந்தன் “ அதெல்லாம் ஒண்ணுமில்லாம எல்லாம் சரிஆகிடும்” என்றார்…
அவருக்கு மட்டுமே தெரியும் மகன் ஏன் கல்யாணம் வேணாம் என்கிறான்….
வீட்டில் இருந்து தனது காரில் வந்துகொண்டு’ இருந்தபோது திடீர் என்று அவனது இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது…அவனது கார் சிக்கனலில் ஓரம் நின்றுகொண்டுயிருந்தது..
அவனது வலதுபக்கம் “ஸ்கூட்டியில் வாசுகி சிக்கனல் விழுந்ததால் அவனின் காரின் அருகே நிறுத்தினால்”….
வாசுகி “ ஏன் இதயம் இப்படி துடிக்குது எனக்கு” என்று யோசித்துபார்த்தால் ச்சே மாத்திரை போடா மறந்துட்டோம் அம்மாக்கு மட்டும் தெரிஞ்சது அவ்ளோதான் டி வசு உன்ன தொடப்பக்கட்டையிலே அடிப்பாங்க என்று தனக்குள் பேசிகொண்டால்…
தேவ் “ ஏன் எனக்கு இதயம் துடிக்குது அப்போ அவ பக்கத்துல தான் இருக்க போல” எங்க என்று அவன் சுற்றும் முற்றும் தேடிக்கொண்டு இருந்தான்….
ஆனால் வசுவோ துப்பட்டாவினால் முகத்தை மூடிக்கொண்டிஇருந்ததால் அவனின் கண்களுக்கு தெரியவில்லை.
(ச்சே தேவ் அவ உன் பக்கத்துல இருக்க டா)
பச்சை நிறம் சிக்கனல் விழுந்தால் அவனின் தேடல் தோல்வியுற்றது….
தேவ்வோ “எப்படினாலும் அவளுக்கு நான் தான்,எனக்கு அவதான்” இதை யாருலும் மாத்தமுடியாது என்று தனக்குதானே கூறிக்கொண்டு சென்றுவிட்டான்..
வசு “கல்லூரியில் ஸ்கூட்டி நிறுத்திவிட்டு அவளின் தோழி மலரையும், கண்ணையும் தேடிக்கொண்டு இருந்தால்…”
“எங்க இந்த சோடபுட்டிய காணம் ஒருவேளை எக்ஸாம்க்கு படிச்சுட்டு இருக்களோ” என்று மனதில் யோசனையுடன்.
(இது தப்பாச்சே)
கல்லூரி வளாகத்தை சுற்றி வந்தால்..
ஆனால் மலர் “ டேய் கண்ணா இந்த வசு வந்த நம்மள படிக்கவிடமாட்டா ஒழுங்கா படிச்சுக்கோ டா என்று மலர் கூறினால்” ஆனால் “கண்ணனோ அவள் சொல்லவதை கேட்டகாமல் 1st இயர் கேர்ள்ஸ்அஹ அதிமுக்கியமாக சைட் அடித்துகொண்டு இருந்தான்….
மலர் “ என்ன இவன் சத்ததையே காணம்” என்று திரும்பி பார்த்தால்.
“ எருமை எருமை உன்னை படிக்க சொன்ன என்ன அங்க பார்க்குற”
கண்ணன் “ இல்லை மலர் அந்த பொண்ண பார்த்த எங்கோயோ பார்த்தமாதிரி இருக்கு அதான் பார்த்தேன்” என்று அசடுவழிந்துகொண்டு கூறினான்..
“இந்த கர்சிப் தொடைசுக்கோ ரொம்ப வழியுது”
“அப்படி வெளிபடையவா தெரியுது” என்று அவன் பதிலுக்கு பேசிக்கொண்டு இருக்கும்போது வசு வந்தால்..
வசு “ என்ன சோடப்புடி நான் வந்த உங்கள படிக்க விடமாட்டேனுதானா சொல்லிட்டு இருந்த…என்று சரியாக கூறினால்
மலர் “ச்சே உன்ன போய் சொல்லுவேனா வசு” என்று மாற்றிக்கூறினால்..
கண்ணன் “எப்படி வசு இவ்ளோ சரியாய் சொன்ன” என்று மலரை மாட்டிவிட்டான்.
வசு “அப்போ இதைதான் சொல்லிருக்கா இந்த சோடாபுட்டி”
“சாரி மலர் ஒருவேகத்துல உளறிட்டேன்”
“போடா எருமை”
“வசு உன்ன போய் அப்படி சொல்லுவேனா”
“நீ வந்தா இந்த சம்ல ஒரு டவுட் கேட்கலாம்னு நினைச்சு அவன்கிட்ட சொன்னேன் டி அவன் மாத்தி சொல்லிட்டான் இல்லை கண்ணா” என்று அவனை துணைக்கு அழைத்தால்..
வசு “ அப்படியா மலர் செல்லம் எந்த சம் உனக்கு தெரியல சொல்லு பார்ப்போம்” என்று கேட்டால்…ஏனென்றால் அன்று கம்ப்யுட்டர் லேப் எக்ஸாம் இது தெரியாமல் மலர் உளறிக்கொட்டிவிட்டால்..
கண்ணனோ “ இன்னைக்கு எந்த மேத்ஸ் எக்ஸாம் இல்லை மலர்” என்று கூறினான்.
மலர் “ அய்யோ இது தெரியாம இவக்கிட்ட மாட்டிகிட்டோம்”
மலர் “ சாரி வசுமா தெரியம்மா சொல்லிட்டேன் இந்த அபலையை மன்னித்துவிடவும்” என்றும்.
கண்ணன் “ வசு இவளா நல்ல கவனி உன்னை எப்படி எல்லாம் சொல்லிருகாணு நான் சொல்லுறேன்”
வசுவோ “ நான் வந்த உன்னை படிக்கவிடமாட்டேனு சொன்னேள அதனால இன்னைக்கு எனக்கு ஜிகர்தண்டா நீதான் வாங்கிதரனும்” என்று அவளின் பாக்கெட்மனிக்கு ஆப்பு வைத்தால்.
(இன்னைக்கு சிறுத்தை சிக்குச்சு)
கண்ணனோ “ எனக்கு வசு”
வசு “ உனக்கிள்ளாமலா கண்ணா”
மலர் “ டி வசு என்கிட்ட பைசா கம்மி டி”
வசு “என்ன சொன்னேள” ஒழுங்கா வாங்கித்தரனும்.
மலர் “ஹ்ம்ம் இதுகளுக்கு ஜிகர்தண்டா வாங்கிகொடுத்தே என் அப்பா சம்பாரிக்கிற காசு இதுக்கே போயிடும் போலவே..
“எல்லாம் என் வாய் சும்மா இருக்கமாட்டேங்குது தேவையா டி மலர் உனக்கு” என்று தன் விரலை முகத்திருக்கு நேராய் பார்த்தபடி கேட்டுக்கொண்டால்..
(இதுதான் இவர்களின் வாடிக்கை ஆனால் வசு இல்லாமல் மலர் கண்ணனின் அன்றைய பொழுதுபோகாது, என்னதான் மலர் வசுவை கேலி பேசினாலும் அது அவர்களுக்குள் இருக்கும் ஒரு சுகம், மூவரும் சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்தவர்கள்.இவர்களின் நட்பும் இவர்களின் பெற்றோருக்கும் தெரியும் அதனால் மூவரையும் ஒன்றாக பள்ளி,கல்லூரி என்று படிக்கின்றனர்.)
மலர்விழி –தங்கம்,கற்பகம் இவர்களின் ஒரே செல்ல மகள்,தங்கம் மளிகைகடை வைத்து நடத்துகிறார்,ஓரளவு பெரியகடை,கற்பகம் கணவன் மகள் இருவர் மட்டும் உலகம் என்று வாழ்கிறார்.
கண்ணன் –சிவராஜன்,சிவகாமி இவர்களின் அருமை புதல்வன். கண்ணின் அண்ணன் பலராமன் இவர் வங்கியில் வேலை பார்க்கிறார்.சிவராஜன் –லாரி சர்வீஸ் வைத்திருக்கிறார்,சிவகாமி தையல் பயிற்சி நிறுவனம் நடத்துகிறார்.
தேவ் “ தன் நினைவில் இருந்து வெளி வந்தான் என்ன சொன்ன அருண்” என்று கேட்டான்.
அருண் “ சார் இன்னைக்கு ஏகே கம்பெனியோட மீட்டிங் அப்புறம் கான்ப்ரன்ஸ் சார் என்று பவ்வியமாக கூறினான்”
வாசு “ ஓகே மீட்டிங் எப்போ”
“2.30 குக்கு சார் ,ஈவனிங் சிக்ஸ் ஒக்ளக் கான்ப்ரன்ஸ் சார்”
ஹ்ம்ம் ஓகே அருண் நீங்க போகலாம்,,
வெளிய வந்த அருணோ “எனாச்சு சார்க்கு இப்படி இருக்குறாரு”
ஏனென்றால் தேவ் கம்பெனிக்குள் வந்துவிட்டால் அவன் வேலையே அவனை சூழ்ந்துகொள்ளும் அதில் இருந்து வெளி வருவது அவனாக நினைத்தால் மட்டுமே உண்டு..
நந்தன்குமரன் – சிறிதாக ஆரம்பித்த கணினி உதிரிபாகம் தொழில்தான் இன்று உலகளவில் பெயர்பெற்றது..இவரின் காதல் மனைவி ராதா – இல்லத்தரசி.
சார் “டைம் டூ ஒக்ளக் ஆகிடுச்சு சார் மீட்டிங் போகணும்” என்று தேவ்விற்கு நினைவுபடுத்தினான் அருண்.
“ஹ்ம்ம் போகலாம் அருண் வாங்க”
எந்த ஹோட்டல் அஹ மீட்டிங் அருண் “ஹோட்டல் சோழா சார்”
எக்ஸாம் எல்லாம் முடிந்த பின் வசு மலரை தேடிக்கொண்டு வந்தால், கண்ணனிடம் “எங்க டா சோடபுட்டிய”
கண்ணன் “ தெரியல வசு நானும் அவளதான் எதிர்பார்க்கிறேன்”
மலர் “எப்படி எக்ஸாம் எழுதினே வசு ,கண்ணன்”
வசு “ அதெல்லாம் ரிசல்ட் வந்த பின்னாடி பர்த்துக்கெல்லாம் வா ஹோட்டல் சோழா போகலாம்”
“என்னது ஒரு ஜிகர்தண்டாக்கா ஹோட்டல் சோழாவா”
ஆமா மலர் ஹோட்டல் போய் ரொம்ப நாளாச்சு வா போகலாம் என்று கண்ணன் கூற.
அடபோங்கடா இன்னைக்கு உங்களுக்கு பச்சை தண்ணிகூடா வாங்கி தரமாட்டேன் என்று மலர் ஓட பார்க்க அவளை பிடித்து நிறுத்திய வசுவோ “நான் செலவு பண்றேன் நீ எனக்கும், கண்ணனுக்கும் ஜிகர்தண்டா வாங்கிக்கொடு ஓகே” என்றால்
மலர் “ ஹ்ம்ம் ஓகே”
கண்ணன் “ ஓகே போகலாம்”
வசு,கண்ணன்,மலர் மூவரும் ஹோட்டல் சோழாவை நோக்கி பயணம் மேற்கொண்டனர்…
ஆனால் அங்கு தேவ்வோ மீட்டிங் நல்லபடியாக முடிந்ததுக்கொண்டு மதிய உணவிற்க்கா காத்துக்கொண்டுயிருந்தான்.
அருண் “சார் இந்த டீலிங் நல்லபடியா முடிந்தது,சேர்மேன் சார்கிட்ட சொல்லணும் சார்”
தேவ் “ கால் மீ தேவ் அருண் ஆபீஸ்லதான் சார் ,வெளிய நீ எனக்கு பெஸ்ட் ப்ரிண்ட் மறக்காத அருண்”
அருண் “அப்போ ஏன் தேவ் ஆபீஸ்ல ஏதோ ஒரு யோசைனையா இருந்த”
தேவ் “சுகி “ என்று ஒற்றை வரியில் முடித்துக்கொண்டன்.
அருண் “இன்னும் மறக்கலையா தேவ்”
தேவ் “இல்லை”
அருண் “வேணாம் தேவ் பழசையெல்லாம் மறக்க ட்ரை பண்ணு”
தேவ் “எப்படி மறக்கமுடியும் அருண்”
“வசு இங்க ப்ரீயா ஆஹா இருக்கு” என்று மலர் கூற.
தேவ்வும்,அருணும் திரும்பி பார்த்தனர்.
ஆனால் வசு அங்கு இல்லை…
மலர் “கண்ணா வசு எங்க” என்று அவனிடம் கேட்டல்..
கண்ணன் “ அவ அம்மா கால் பண்ணிருந்தாங்க பேச போயிருப்பா வா நாம அங்க உட்காரலாம்” என்று மலரை இழுத்துக்கொண்டு சென்றான்.
அருண் “காலேஜ் பசங்க போல”
தேவ் மனதிலோ வசு யாராய் இருக்கும் என்று பார்த்துக்கொண்டு இருந்தான்.
அருண் வெயிட் பண்ணு இதோ வரேன் என்று, எழுந்து சென்றான்.
அப்பொழுது வசு தன் தாயிடம் பேசிவிட்டு வந்தபொழுத “விஷ்ணு ஓடாத நில்லு” என்று அங்கு ஒரு அன்னை தன் குழந்தையின் பெயரை சொல்லி அழைக்க வசு திரும்பி பார்த்துகொண்டு வந்ததால் எதிரே வந்தவன் மீது மோதிக்கொண்டாள்…
தேவ்வோ “விஷ்ணு” என்ற அழைப்பில் தன்னை மறந்தான்…….
இருவரின் நினைவுகளில் இருப்பது ஒரு பெயர் மட்டுமே “விஷ்ணு”
நினைவுகள் தொடரும்………….