அத்தியாயம் மூன்று :

கொன்னாங்கன்னா குத்தி கொன்னானக்லா இல்லை விஷம் குடுத்தாங்களா என்ன பண்ணினாங்க , இன்னும் எத்தனை காலத்துக்கு சொல்லப் போறீங்க என்றான் நேரடியாக தாத்தாவை பார்த்து

இதெல்லாம் செஞ்சா தான் கொன்னதுக்கு அர்த்தம் கிடையாது, என் பொண்ணு சாவுக்கு காரணம் அவன் அவன் பொண்ணை நீ கல்யாணம் பண்ணக் கூடாது என்றார் கடினமாக

தாத்தா இதுவரை எங்கம்மா என்கிட்டே எதுவும் சொன்னதும் இல்லை கேட்டதும் இல்லை, இதை சொல்றாங்கன்னா நான் கண்டிப்பா செஞ்சு தான் ஆகணும், என்று நிறுத்தியவன், அவரின் கோபத்தில் ஜொலிக்கும் முகம் பார்த்து பதிலை அப்படியே மாற்றினான்

அப்படின்னு நான் சொல்வேன்னு தான் இந்த கல்யாணம் வேண்டாம் சொல்றீங்களா என்று நிறுத்தினான்

இது தான் மந்திரன் திரு மந்திரன் அவனின் முழுப் பெயர். ஒரு முகம் திரு மந்திரத்திற்கு உரியது என்றால் மற்றொரு முகம் மாய மந்திரற்க்கு உரியது.         

மாயம் அவனோடு இன்னும் சேராத போதே

அப்படியில்லை தாத்தா , உங்க பொண்ணை கொன்னுட்டு அவன் எப்படி நிம்மதியா இருக்கலாம் அதான் அவன் பொண்ணை ஒரு வழிய்யாக்கலாம்னு கல்யாணம் பண்ணப் போறேன், நீங்க நம்பினாலும் நம்பலைன்னாலும் இதுதான் நிஜம் என்றவன் நிற்காமல் உள் சென்று விட்டான்.

இதுவும் அவன்… அறிய முடியாதவன் புரிய முடியாதவன்  அவனை போல பணிவானவனும் இல்லை அவனை போல திமிறேடுத்தவனும் இல்லை… முகங்கள் வேறு வேறு ஆட்களிடம் இல்லை.. எல்லாம் ஒரே ஆட்களிடம் கூட வெளிப்படும்

அவனின் சூழ்நிலைகளை கையாளும் திறனே அவனின் குடும்பத்தையும் சரி அம்மாவின் குடும்பத்தையும் சரி உடையாமல் காத்துக் கொண்டிருபது.

அதனையும் விட இருவரின் அசுர வளர்ச்சியும் அவனை கொண்டே. அம்மாவின் தொழிலில் இவனது பங்கு எதுவும் இல்லை. ஆனால் இவன் அவரின் மகன் என்பது அப்படி ஒரு பாதுக்காப்பு.

தொழிற்கு வந்து மூன்று வருடங்கலாகிற்று. மாயமந்திரனாய் இருப்பதால் சமாளிகின்றான். அவர்களது பெரிய ராஜ்ஜியமல்ல அது ஒரு சாம்ராஜ்ஜியம், அதனின் ஒற்றை ஆண்வாரிசு அவன்.

 அவர்களின் தொழில் பறந்து விரிந்த தொழில் , தரையில் பறப்பதற்கு காரணமான தொழில் , டயர் கம்பனி! ரீஜனல் டயர்ஸ் அவர்களினது.