அன்று நடந்த நிகழ்வை இனியனது மனம் புரட்டி பார்த்தது….

 

 

 

ஆதித்யன் வேலையில் லயித்திருந்த நேரம், ஒரு சில கோப்புகளுடன் இனியன் ஆதியின் தனி அறையினுள் நுழைந்தான். அப்போது ஆதித்யனுக்கு அழைப்பு வர, அதை ஏற்று காதுக்கு குடுத்த ஆதித்யன், “எஸ்… ஆமாம்… நீங்க சொல்லி தான் தெருஞ்சது, மதிக்கு 2 முறை யாரோ உதவி பண்ணி இருக்காங்க, ஆனா அவுங்க யாருன்னு தெரியல, தெருஞ்ச நான் கண்டிப்பா அவங்கள தேன்க் பண்ணனும், இன்னும் கொஞ்சம் நம்ம மதிபத்தி பேசணும், மதிக்கு கொஞ்சம் ஆபத்து இருக்கும்னு தோனுது, நம்ம அத பத்தி கொஞ்ச நேரத்துல பேசலாம், நான் இப்ப ஒரு முக்கியமா வேலையில இருக்கே, ஐ வில் கால் யு ஆப்டர் 10 மினிட்ஸ்” என்று கூறிக்கொண்டிருந்தான்.’

 

 

இந்த சம்பவம் இனியனது பார்வையில் அவன் மனதில் வலம் வர சட்டென சுதாரித்தவனாக, “அப்போ இது உன்னோட விளையாட்டு… ஆனா நான் தான் முகத்துல எந்த ஒரு ரியச்சன்னும் காட்டலியே… அப்போ எப்படி ?” என்று கேட்டபடி நெற்றியை அழுந்த தேய்த்துவிட்டு கொண்டான்.

 

“கரெக்ட் தான்… நீ ரியாக்ஷன் காட்டல… ஆனா அது நீ தான்னு அன்னைக்கே நான் கண்டு பிடிச்சிட்டேன்… அது எப்படி இரண்டு முறையும் நீ வந்த?, அது உன் பக்கம் சந்தேகத்த நான் திருப்ப ரொம்ப வழுவா அமைஞ்சது… அட நான் இன்னும் நீ தான் காப்பாத்தின அப்படிகிறத எப்படி கண்டுபிடிச்சேன்னு சொல்லவே இல்லைல, அதுக்கு நான் இதோட வேறு சில விஷயங்களையும் சொல்லணும்” என்று கூறிவிட்டு இனியன் செய்தது போலவே அதற்கு பதிலடி குடுக்கும் விதமாய் காய்களை அமைதியாக நகர்த்த இனியன் பொறுமை அற்றவனாக அவனிடம் “இப்ப சொல்ல போறியா இல்லையா ” என்று கடினமான குரலில் வினவினான்.

 

“அட கூல் இனியன்….., இத்தன அவசரமா ?… ஹ்ம்ம் நீ என் வீட்ட சுத்தி ஆள் போட்ட மறுநாளே அத கவனிச்சிட்டே, நீ எங்கள கண்காணிக்க அவுங்கள போட்ட, நான் அவுங்கள கண்காணிக்க செழியன் மூலாம ரகசிய கேமரா பிட் பண்ணிட்டேன்… நீ இரண்டு ஆள் தான வச்சிருந்த, அந்த இரண்டு பேருக்கும் ஒருத்தர் ஒருத்தர தெரியாது.. ஆனா எனக்கு அவுங்க 2 பேரையும் தெருஞ்சிடிச்சு…. அவுங்கள பத்தி ஒரு பக்கம் டீடைல்ஸ் கலெக்ட் பண்ண ஆரம்பிச்சே அகிலன் உதவியோடு, இன்னும் ஒரு பக்கம் வேற  விஷயத்துல கவனம் செலுத்துனே.

 

 

அது என்னனு தெரிஞ்சுக்கனுமா ? ஒன்னு நீ எடுத்திட்டதா நினச்ச மதியுடைய மெமரி கார்டும், இன்னும் ஒன்னு ஹர்ஷினியும்….” என்று கூறிய ஆதித்யன் ஹர்ஷினி என்ற பெயரை உச்சரிக்கும் பொழுது ஒவ்வொரு வார்த்தையும் மிக நிதானமாகவும் அழுத்தமாகவும் கூறினான். 

 

 

“வாட் ? … கம் அகைன்…. ஆதித்யன்.. சீக்கிரம் சொல்லு” என்று இத்தனை நேரம் பிடித்திருந்த நிதானம் பறந்தோட இனியன் ஆதித்யனிடம் விளக்கம் கேட்க ஆதித்யன் பார்வையில் காட்சி விவரிக்கப்பட்டது.

 

 

‘மதி ஆதித்யுடனான நேர்க்கானளுக்கு வந்த பொழுது அவசரமாக ஆதித்யன் கிளம்பி செல்ல, அவன் போகின்ற வழியில் செழியனிடம் ஒரு முக்கியமான வேலையை குறித்து இந்த அலுவலகம் வர சொல்லி சென்று இருந்தான்.

 

அதற்காக செழியன் வந்த நேரம், இனியனை ஒரு தகவலுக்காக வேண்டி தேட, அங்கு இனியன் இல்லாததால் காத்திருக்க நேர்ந்தது. சிறிது நேரத்தில் வந்து சேர்ந்த இனியன், செழியன் கேட்ட தகவலை குடுத்துவிட்டு அவனது பேன்ட் பாக்கெட்டில் கைவிட்டு அவனது கை குட்டையை எதார்த்தமாக எடுக்க அவனது பாக்கட்டில் இருந்து அந்த சிறு மெமரி கார்டு தவறி விழுந்தது.

 

அதை கவனிக்காது இனியன் சென்று விட, தற்செயலாக செழியனது கண் பார்வையில் பட அது யாருடையது என்பது அறியாமல் அதை எடுத்து பத்திர படுத்தினான்.

 

அப்படி அவன் பத்திர படுத்தியதுக்கு காரணம் அது ஆதித்யனது அறை என்பதனாலே. ஒருவேளை ஆதித்யனுடயாதாக இருக்க கூடுமோ என்ற சிந்தனை அதை பாதுக்காக்க தூண்டியது. மறுநாள் அதை ஆதியிடம் கேட்டவன், அது தனது முதலாளியுடையது இல்லை என்பதை உணர்ந்து ஆதி அறையிக்கு அன்று வந்து சென்றவர் பட்டியல் சேகரிக்க அது மதியும் இனியனும் மட்டுமே என்று அறிந்தான்.

 

அதை விசாரித்து சேர்ப்பிக்க நினைத்த செழியன் அடுத்தடுத்த வந்த வேலை சம்மந்தமாக வெளிஊர் செல்ல நேர அதை அப்படியே விட்டு செழியன் சென்று விட்டான்.

 

அந்த சின்ன மெமரி கார்டு மீது அவன் அத்தனை சிரமம் காட்டவில்லை ஏனென்றால் அது அவனது முதலாளியின் பொருள் அல்ல என்பதனால். அதை மறந்தே கூட போனான்.

 

இது ஒருபுறம் இருக்க, மருத்துவமனையில் ஆதித்யனது மாமனாரான இளமாறன் அன்று கூறிய தகவல் படி திருடப்பட்ட காமெராவை இனியன் சிரம பட்டு கொண்டு வந்து குடுத்ததாகவும் அதில் மெமரி கார்டு போடும் பகுதி மட்டும் உடைந்து விழுந்ததனால் காணமல் போய் இருந்தது என்றும் அவர் கூறியிருக்க, அது  தெரியவர ஆதித்யனுக்கு ஏனோ மனதில் ஒரு மூலையில் சந்தேகம் துளிர்விட்டது.

 

அந்த துளிர், மருத்துவமனையில் மதி மீது படர்ந்த இனியனது பார்வையை பார்த்த ஆதித்யனுக்கு  சந்தேக துளிர் மேலும் மேலும் தளிர் விடும் வகையில் நீரூற்றாக அமைந்தது.

 

அதன் பிறகு மதியை இருமுறை காப்பாற்றியது இனியனோ என்ற எண்ணம் வளர, அதோடு சேர்த்து உளவாளிகள் பற்றிய தகவல் அறியவும் முற்பட்ட வேலை, ஹர்ஷினி அலுவலகம் வராமல்,அதோடு  முன் அறிவிப்பு ஏதுமின்றி விடுமுறையும் எடுக்க அந்த நேரம் சரியாக மதி மூலமாக ஹர்ஷினி, இனியனை விரும்பிய தகவலும் தெரியவந்தது. 

 

ஹர்ஷினியை பற்றி அலுவலகத்தில் விசாரிக்க நேர்ந்ததில், இறுதியாக இனியனது அறைக்கு அவள் சென்று விட்டு உடனே அலுவலகம் விட்டு கிளம்பியது தெரியவர இனியனது அறையில் நடத்திருப்பவையை ஆதித்யன் அறிய முடிவு செய்தான்.

 

அப்படி பார்த்த பொழுது ஹர்ஷினி இனியனிடம் காதலை யாசிப்பதும், இனியன் மறுப்பதும் ஒரு கட்டத்தில் கோவம் கொண்ட ஹர்ஷினி வார்த்தைகளினால் இனியனை காயபடுத்துவதும், அதன் பிறகு தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பதும், அவனிடம் சபதம் கொண்டு வெளியே செல்வதும் என இருந்த காட்சிகளை ஆதித்யன் பார்க்க நேர்ந்தது.

 

ஆதித்யன் கைபேசிக்கு கொடைக்கானலில் இருந்து அழைப்பு வர அதை உயிர்பித்தவன், மழையின் காரணமாய் மண் சரிவு ஏற்பட்டதால் பூதபடையனால் உடனே வர முடியவில்லை என்றும் இந்த வார இறுதியில் வருவதாகவும் கூற ஆதியோ மதியின் காதலை அவள் வாய் மொழியாய் கேட்கும் நாள் தூர போவதை எண்ணி சிறு ஏமாற்றம் கொண்டான். 

 

அன்று ஆதித்யன், இனியன் ஹர்ஷினியின் தகவல் மூலம் ஒரு சில விஷயகளை உணர்திருந்தான்.

 

அன்றைய நாள் அவனுடைய சிந்தனை அதன் பிறகு பூதபடையன் வார இறுதியில் வருவதாக கூறிய தகவல், அதன் பின் வேலை என்று கழிய ஒரு தொழில் தொடர்பு சந்திப்பில் ஆதித்யன் கலந்துக்கொள்ள நேர்ந்தது.

 

அந்த சந்திப்பு மதிய வேலையில் நிகழ அதற்கு இனியன் செழியன் உட்பட 6 நபர்கள் வந்திருந்தனர்.

 

அந்த சந்திப்பு முடிந்து அனைவரும் கிளம்ப செழியன் மட்டும் ஒரு நொடி தாமதித்து ஆதித்யனிடம், “சார் நீங்க கேட்ட டீடைல்ஸ் இதுல இருக்கு” என்று குடுத்துவிட்டு சென்றான்.’

 

அந்த தகவல் தான் ஆதியின் தொழில் மூலஸ்தனம். சில முக்கிய ஒப்பந்தம் நடக்கும் தருவாயில் ஆதித்யனது முதுகின் பின்னால் நடக்கும் விசயங்களை அரியவென செழியன் இருப்பது போல், ஒரு சில முக்கிய பொறுப்பில் இருப்பவர்களை கண்காணிக்க ரகசிய காமெராவும் வைத்திருந்தான் ஆதித்யன். அந்த காமெராவின் கட்டுப்பாடு அனைவரும் அறியும்படி அந்த அந்த கிளைகளிலே இயங்கி வந்தது.

 

 

ஆனால் அதே சமயம் எவருக்குமே அறியாதவாறு இன்னும் ஒரு ரகசிய கண்காணிப்பு காமெராவையும் ஆதித்யன் வடிவமைத்திருந்தான். ஒவ்வொரு அறையிலும் இருக்கும் அலங்கார விளக்குகளில். அது செழியன் மற்றும் இன்னும் ஒரு குறிப்பிட்ட தொழிலில் வல்லுநர் மற்றுமே அறியுமாறு அந்த கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு இருந்தது.

 

ஆக முக்கியமான பொறுப்பில் இருப்பவர் அறையில் ஒன்றுக்கு இரண்டாக கண்காணிப்பு காமெராக்கள் இருந்தன. ஆனால் ஒன்று மட்டுமே  அனைவரும் அறியும் படி இருந்தது. மற்றுமொன்று எவரும் அறியாதவாறு இருந்தது.

 

சமீபத்தில் அவன் கிளையில் நடந்த ஒப்பந்தத்தை தடுக்கும் சதி வேலை ஏதும் இருகின்றதா என்பதை அறிய அவ்வபோது இது போல ஆதித்யன் செழியன் மூலமாக பெற்று பார்க்கும் வழக்கம் உண்டு. அப்படி பார்த்த போது தான் ஆதித்யனுக்கு முதல் துருப்பு சீட்டு கிடைத்தது.

 

சாதாரணமாக பார்க்க ஆரம்பித்தவன் ஹர்ஷினி மற்றும் இனியனது உரையாடலும் அந்த பதிவில் வர, அதில் ஆதித்யன் முன்பு பார்த்த காட்சிகளோடு வேறு புது உரையாடல்களும் வர ஆதித்யனது பார்வை கூர்மை ஆனது.

 

முழுதாக பார்த்து முடித்த ஆதித்யன் தீவிர சிந்தனை வையப்பட்டிருந்தன் அந்த நிசப்தமான இரவில். செழியன் குடுத்த பதிவில் பார்த்த நிஜ காட்சிகள் இவை தான்….

 

‘ “இனியன், நீங்க ஏன் இப்படி நடத்துகுறீங்க? உங்ககிட்ட நான் இத எதிர்பார்க்கல, உங்கள காதலிச்ச மனசால உங்கள விட்டுகொடுக்க முடியல… அப்படி என்ன தான் உங்க மனசுல இருக்கு… இப்ப உங்க முடிவு தெரியாம நான் போக முடியாது இனியன்” என்று ஹர்ஷினி சிவந்த விழிகளுடன் கூறவும் தலை நிமிர்ந்த பார்த்த இனியன், “மிஸ். ஹர்ஷினி… இது ஆபிஸ், இங்க நம்மள வொர்க் பண்ண தான் அப்பாயிண்ட் பண்ணிருக்காங்க, காதல பத்தி பேசுறதுக்கு இல்ல…கொஞ்சம் புருஞ்சுக்கொங்க…அப்படி எதாச்சும் பேசுறத இருந்த நம்ம வெளியில போய் பேசுவோம். ஆனா எனக்கு உங்க கூட பேச எதுவும் இல்ல. என் மனசுல வேற இருக்கு, அந்த நினைப்புல இருந்து என்னால வெளியில வர முடியல ஹர்ஷினி…அதோட உங்க மேல காதல்னு உணர்வும் எனக்கு வரல…ஏன் நீங்க அத புருஞ்சுக்க மாட்றீங்க….” என்று இனியன் பதிலுரைத்தான்.

 

இதை கேட்ட ஹர்ஷினி, ” ஹ்ம்ம் தெரியும் இனியன்… உங்க மனசுல வேற என்ன இருக்குனு, அதோட நான்இப்ப இங்க காதல பத்தி பேச வரல, உங்கள காதலிச்சதுனால உங்கள பத்தி இன்னும் இன்னும் தெருஞ்சுக்க ஆசைப்பட்டு உங்கள நிழல் போல தொடர்ந்ததுனால தெருஞ்சுகிட்ட உண்மைய பேசவந்தே.. நீங்க ஏன் இப்படி பண்ணுனீங்க இனியன், உங்கனால எப்படி இதுபோல நடக்க முடியிது… அத்தனையும் பொண்ணுங்க, பொண்ணுங்கள இப்படி ஆக்சிடென்ட் பண்ணி சீ .. எனக்கு சொல்லவே இத்தன கஷ்டமா இருக்கே” என்று கதறி அழ ஆரம்பித்தாள். இப்படியே இருவருக்கும் சம்பாசனை ஓட அந்த சம்பாசனை முழு விவரம் அளிக்காமல் ஹர்ஷினியின் பேச்சில் அப்பெண்கள் பாவம் என்பதும் இனியனது பேச்சில் அவனுக்கும் இதற்கும் எந்த சம்பதமும் இல்லை என்பது மட்டுமே என்று கூறிய இனியன் அவனது முடிவில் தெளிவாக இருக்க, அவனின் ஒரே பதிலை கேட்டு கேட்டு வெறுத்துபோன ஹர்ஷினி அந்த சமயத்தில் சொல்ல கூடாத வார்த்தையை அவனிடம் கூறினாள்.

 

“உங்களுக்குனு ஒரு குடும்பம், பாசம், பந்தம், அன்புன்னு எதுனாச்சும் ஒன்னு இருந்துருந்தா கூட என் வேதன உங்களுக்கு புருஞ்சுருக்கும் இனியன்… யாருமே இல்லாத அனாதைய வளந்த உங்களுக்கு என் வேதன புரிய ஞாயமில்ல… நான் ஒரு பைத்தியகாரி…என்ன சொன்னாலும் புருஞ்சுகாம என்ன நோகடிக்கிற உங்ககிட்ட பேசி என்ன ஆகபோகுது… பொண்ணுங்கள வித்து அவுங்க வாழ்க்கைய அழுச்சு… இத நான் போலிஸ் ல ” என்று முடிக்க இனியனது கை ஓங்கி இருந்தது. ஆனால் அவன் சுற்றம் உணர்ந்து ஓங்கிய அவனது கையை கீழ் இறக்கி, “என்ன பாத்தா இப்படி சொல்ற, என்கிட்டையே இவ்ளோ தையிரியமா பேசுறியா, உன்ன காதலிக்கிற ஐடியா எனக்கு இல்லாட்டிக் கூட என்ன காதலிக்கிறவனு ஒரு சாப்ட் கார்னர் இருந்தது…. ஆனா இனி நான் அப்படி இருக்க மாட்டேன்.. உனக்கு ஒரு தங்க இருக்கா தான? பாத்து இருக்க சொல்லு… இனி உன்கிட்ட ஒரு வார்த்த பேச கூட விருப்பம் இல்ல…என் மனசுல என்ன லட்சியம் இருக்குனு உனக்கு என்ன தெரியும்..சொல்லு… நான் நினச்சது கிடைக்காம அதில இருந்து வெளில வர முடியாம நினச்சு நினச்சு மருகிட்டு இருக்குறே… இனி ஒரு வார்த்த…ஒரு வார்த்த கூட பேசாத” என்று அவன் வெளியில் போகும் படி செய்கை செய்ய, அப்போது தான் அவள் பேசிய வார்த்தையின் வீரியத்தை உணர்ந்த ஹர்ஷினி தங்கைக்கு எதுவும் ஆபத்து வந்துவிடுமோ என்று எண்ணி நிலைக்குளைந்து போனாள்.

 

அவசரமாக அவள் தவறை உணர்ந்து, “இனியன் ப்ளீஸ், எதோ வாய் தவறி…என்ன புருஞ்சுகொங்க இனியன்…என்னால என் தங்க இல்லாத வாழ்க்கைய கற்பனை கூட செய்யமுடியாது” என்று மன்றாட, இனியனோ அவளை வெளியே போகும் படி சைகை செய்ய ஹர்ஷினி கண்களை துடைத்துக்கொண்டு ஒரு நிமிர்வோடு அவனை ஏறெடுத்துப் பார்த்தாள்.

 

“இனியன், இப்ப நான் போறே நீங்க சொன்னது போலவே…ஆனா வெளில இல்ல போலிஸ் ச்டேசன்க்கு…. ந நான் என் தங்கைய நிச்சயம் காப்பாத்துவே… நீங்க தேடினா கூட அவள கண்டு பிடிக்க முடியாத மாதி. அப்ப புரியும் இந்த ஹர்ஷினி யாருன்னு…உண்மை மறையாது இனியன்” என்று கூறிவிட்டு விடு விடு என சென்று விட்டாள்.’

 

இதை பார்த்த ஆதித்யன் நெற்றியில் சிந்தனை ரேகை பலமாக படர்ந்தது.

 

அதையும் பழைய காட்சிகளையும் மாத்தி மாத்தி பார்த்த ஆதித்யனுக்கு தெளிவாக புலப்பட்டது என்னவென்றால் முன்பு பார்த்த காட்சிகள் உண்மையோடு பொய்யும் கலந்து சித்தரிக்க பட்டவை என்பது தான். இப்பொழுது செழியன் மூலம் கிடைத்ததில் பார்த்த காட்சிகள் தான் உண்மை என்று.

 

அதை பார்த்துவிட்டு கையில் ஒரு சிறு மெமரி கார்டு வைத்திருந்தான். அது மருத்துவமனையில் இளமாறன் கூறிய போது சந்தேகம்  வந்ததினால், அன்று செழியன் ஒரு மெமரி கார்டு தன்னுடையதா என்று கேட்டதோடு அது  அன்று மதி வந்து சென்ற தினம் என்பதும் அவனுக்கு நினைவு வர அந்த மெமரி கார்ட் பற்றி ஆதித்யன், செழியனிடம் விவரம் கேட்க செழியனும் அதை நினைவு கூர்ந்து தேடி எடுத்து ஒரு நம்பிக்கை ஆனவர் மூலம் ஆதித்யன் கைகளில் அன்று காலை தான் சேர்ப்பித்திருந்தான், செழியன் ஆதித்யன் சொன்ன வேறு வேலையில் லயித்திருந்ததனால்.  

 

இந்த ஆதாரத்தை பார்த்து இதில் சிந்தனை வையப்பட்டவன் காலையில் அவன் கையில் வந்து சேர்ந்திருந்த மெமரி கார்டை அன்றே பார்க்காமல் அவனது வீட்டின் அலுவலக அறையில் பத்திரபடுத்தினான்.

 

இது இனியன் தான் செய்து இருக்க வேண்டும் என்று எண்ணமிட்டவன்,

அதன் பிறகு, தனது அலுவகத்திலே பொய்யான ஒரு காட்சி சித்தரிக்கபடுவதென்றால் அவனது அலுவலக கேமரா பதிவு பிரிவில் இருக்கும் வேறு யாரோ ஒருவனும் இனியன் செய்ய முயன்ற களவுக்கு உடந்தை என புரிந்துக்கொண்டான்.

 

ஆதால் ஆதித்யன் அவனது அறையில் இருந்த காமெராவை அகற்றினான். ஏனென்றால் அவன் அறையில் நடக்கும் ரகசியமும் வெளி போக வாய்ப்பு உள்ளதால்.

 

ஆனால் அப்படி அகற்றப்பட்டுவிட்டதை அனைவரும் அறியும்படியே செய்தான் ஆதித்யன். தனது நடமாட்டத்தை கண்காணிக்க இனியன் ஏதேனும் செய்வான் என்று யூகம் செய்த ஆதித்யன், அவனது முன்னிலையில் மதியை பற்றி பேசிவிட்டு 10 நிமிடங்கள் கழித்து பேசுவதாக கூறி அழைப்பை துண்டிக்க இனியன் தற்செயலாய் விடுவது போல அவனது கை பேசியை விட்டு சென்றான்.

 

அதில் அந்த அறையில் பேசுபவை அவனது அதாவது இனியனது கை பேசியில் பதிவு ஆகும் படி பதிவு பட்டனை அழுத்திவிட்டு வைத்து செல்ல அந்த நேரம் மதியின் குறுந்தகவல் வர கைபேசி வெளியிட்ட பளீர் வெளிச்சத்தில் ஆதித்யனது கவனம் கை பேசி மீது படிந்து மீண்டது.

 

அதில் தற்சயம் அந்த கைபேசி பதிவு ஆகி கொண்டு இருப்பதாக கைபேசியின் ஓரத்தில் சமிங்கை காட்ட இனியனை பற்றிய சந்தேகம் வழுவடைந்தது.

 

மதிக்கு இனியனால் எவ்வித பிரச்னையும் வர கூடாது என்று எண்ணிய ஆதித்யன் யாருமே அழைக்காத அழைப்பேசியில் சில கட்டளைகளை கூற ஆரம்பித்தான். அவனது உதடுகளோ அவனது திட்டத்தில் இருந்த தெளிவின் காரணமாய் மிக உறுதியுடன் ஒவ்வொரு சொற்களையும் உச்சரிக்க தொடங்கியது, “ஹெலோ, யா, நான் உங்க கிட்ட சொன்னபடி நீங்க நடந்துக்கங்க, எனக்கு இத யாரு பண்றாங்கன்னு லூப் கிடச்சுருக்கு, மதிய யாராச்சும் கடத்த முயற்சி பண்ணினா தடுக்காதீங்க, ஒரு வேலை அவ உயிருக்கு ஆபத்து வந்தா மட்டும் நீங்க என்டர் ஆகுங்க, மதிய பின் தொடர ஒரு சில நபர நான் ஏற்பாடு செய்திருக்கேன் அதனால கவலை இல்ல, இது எப்பவேணும்னாலும் நடக்கலாம், சோ பீ அலெர்ட்” என்று கூறி தொடர்பை துண்டித்தான்.

இவை அனைத்தையும் இனியனது கைபேசி பதிவு செய்கிறதா என்று உறுதி செய்துக்கொண்டே செய்து முடித்தான்.

 

இனியன் மீது சந்தேகம் மட்டுமே, ஆனால் அவன் தான் என்று உறுதி செய்யாத நிலையிலும் அவனால் மதிக்கு ஆபத்து வாராமல் இருக்க இப்படி செய்ய அதுவே இனியனை மதியிடம் இருந்து சற்று ஒதுங்கி இருக்க காரணமாக அமைந்தது. ஆனால் அன்று உண்மையில் ஆதித்யன் யாருக்கும் அழைத்து சொல்லவில்லை.

 

பிறகு அவனே இனியனிடம் இவை யாவும் பதிவு செய்த கைபேசியையும் குடுத்தான் அவன் திட்டப்படி.

 

அதன் பிறகு சிநேகன் மூலமாக பாதிக்கப்பட்டவரான ராமலிங்கம் வீட்டிற்கு சென்று அவரது மகன் புகை படமும், மகனுடன் காணாமற் போன பெண்ணின் உருவ படமும் பெற்று வர, அப்போது அந்த மெமரி கார்டை பார்த்தவன் அதில் ஒரு பெண் விபத்துக்கு உள்ளாகி இருப்பதும் அந்த பெண்ணை ஆம்புலன்சில் ஏற்ற இனியன் உதவுவதும் பதிவு ஆகி இருக்க மெமரி கார்டு இல் இருந்த புகைபடத்தில் இருந்த பெண்ணும், ராமலிங்கம் மூல கிடைக்கப்பட்ட பெண்ணின் உருவ படமும் ஒத்து போவதை உணர்ந்தான் ஆதித்யன்.

 

ஆதித்யனது அறிவு மிக வேகமாக சிந்திக்க தொடங்கியது. அவனது மனதில் ஹர்ஷினி சொன்ன வார்த்தைகள், மதியின் கேமரா திருட்டு போனது, மெமரி கார்டில் பதிவு ஆகி இருந்த காட்சி, காணமல் போகபட்டதாக சொல்லப்படும் பெண்ணின் உருவ படம் இந்த புகை படத்தோடு ஒத்து போவது என எல்லாம் வலம் வந்தன.

 

இவை அத்தனையும் இனியனுக்கு இதில் சம்பத்தம் இருக்கிறது என்று உறுதி படுத்த, அந்த நேரத்தில் தான் அந்த உளவாளிகளின் தகவலும் தெரிய வந்தன. உளவாளிகளை தொடர்ந்து, விஜய ராஜசேகிரனை பிடித்ததை சுருக்கமாக விவரித்தான்.

 

அதன் பிறகு ஆஷிக் பற்றி விவரம் சேகரித்ததையும் கூறிய ஆதித்யன் அவனை கைது செய்ததை தவிர்த்து மற்றதை விளக்கினான்.

 

அதன் பிறகு, ஆஷிக் பற்றி விவரம் தெரிந்ததும் ஆதித்யன் அடுக்கம் சென்ற நாட்களில் செழியன் மூலம் இனியனது கல்லூரி, பள்ளி வளர்ந்த தேவாலய விடுதி என்று அனைத்திலும் விசாரித்தவன் அங்கு சேகரித்த விவரங்களும் தேவாலய விடுதியில் எடுத்த புகபடும் ஆதித்யனிடம் கொடுக்கபட்டது. அகிலன் மூலம் ஆஷிகின் புகை படமும், செழியன் மூலமாக ஆதரவற்றோர் விடுதியில் எடுத்த புகைப்படத்தில் இனியன் அருகில் ஆஷிக் இருப்பதை பார்த்த ஆதித்யன் பலமாக யோசித்தான்.

இருவரும் நண்பர்கள், ஆஷிக் செய்ததுக்கு தெளிவான ஆதாரம் இருகின்றது, இனியன் செய்ததுக்கு மேலோட்டமாக காரணம் இருந்தது. ஆயினும் அதை இன்னமும் ஊர்ஜித படுத்த எண்ணிய ஆதித்யன் ஒரு திட்டத்தை வகுத்தான்.

 

மெமரி கார்டில் பார்த்த அந்த ஆம்புலன்ஸ் ல இருந்த நம்பரை குறித்து அகிலனிடம் குடுத்த ஆதித்யன், அதே எண்னை கொண்டு  ஒரு வண்டியை ஏற்பாடு செய்ய சொன்னான்.

 

ஏனெனில் அந்த எண்னை ஒருமுறை இனியனது கை குறிப்பேட்டில் குறித்துவைத்திருந்ததை ஆதித்யன் தற்செயலாக பார்த்திருந்தான். அது நினைவு இருப்பதற்கு காரணம் அது திருவண்ணாமலையை சேர்ந்த பதிவு எண். அந்த எண்னை பார்த்து ஆதித்யன், இனியனிடம் கேட்ட போது திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு தெரிந்த நண்பரின் வண்டி எண் என்று கூறி இருந்தான்.

 

இந்த எண்நிற்கும், ஆம்புலன்ஸ் ல இருக்கும் வண்டி எண் மற்றும் ஆஷிக் இந்த வழக்கு இவை யாவும் சம்மந்த படுத்தி ஒரு பொய் கடத்தலை உருவாக்க திட்டம் வகுத்தான் ஆதித்யன்.

 

அதலால் செழியன் மூலம் மதி கடத்தப்பட போவதாக இனியன் அறியும்படி கைபேசியில் பேசுமாறு திட்டம் போட்டு கொடுக்க அதை அப்படியே செழியனும் நிறைவேற்றினான்.

 

இனியனை நம்ப வைப்பதற்காக அதே எண் , வழக்கமாக கடத்தலில் கை ஆளும் முறை என்று பார்த்து பார்த்து ஆதித்யன் திட்டம் வகுத்தான்.’

 

இவை ஆதித்யன் பார்வையில் விவரிகபட்ட போதே இனியன் இடை புகுந்தான்.

 

“வாவ் வாவ் வாட் எ பிளான் ஆதித்யன்… கிரேட் தான்… சரி தான் உன் பிளான்… செழியன் பேசுனத கேட்டதும், நீயே அமைதியா இருக்க அதுவும் மதிய கடத்த போறத  தெருஞ்சும்…அப்படினா என் ஆளுங்க போற ரூட் நீ பாலோவ் பண்ணி பிடிக்க ட்ரை பண்ணினேன்னு நினச்சே… பிளான்அ தடுக்க ஆஷிக் க்கு ட்ரை பண்ணேன்.. போன் போகல, அதுனால அந்த அவசரத்துல ஸ்பாட்க்கு வந்தேன்… வண்டி நம்பர் மேட்ச் ஆகவும் ஒரு நிமிஷம் யோசிக்காம வந்து மதிய காப்பாத்திட்டேன்… அந்த இடத்துல நீ, நான் தான் இதுக்கு காரணம்னு என்ன கேட்ச் பண்ணிட்ட சரி தானா ? ப்ரில்லியன்ட் ” என்று ஆதித்யனது திட்டத்தில் தான் எப்படி சிக்கினோம் என்பதை அறிந்து தனக்கு நிகரானா எதிரியுடன் களத்தில் இருப்பதை உணர்ந்து அதே நேரம் சற்றும் நிதானம் தவறாமல் கூறினான் இனியன்.

 

இனியனது பேச்சை கேட்ட ஆதித்யன், “ஹ்ம்ம் தான்க் யூ… பட் இனியன் 3 வருசமா நீயும் எல்லார் கண்லயும் மண்ண தூவி, அதுவும் என் ஆபிஸ் ல இருந்துகிட்டே நீ இப்படி ஒரு வேலை செஞ்சுருக்க”  என்று கூறினான்.

 

“பெர்பெக்டா பண்ணி இருக்க இனியன்… இது எல்லாம் நான் யூகிச்சது போலதான்… ஆனா அந்த பழனி வேல் ? அவர எப்படி இந்த கேம் ல கொண்டு வந்த ?” என்று ஆதித்யன் கேட்க இனியன் ஒரு மென்னகையுடன், “அது சிம்பிள், அவரு பொண்ணோட ஒரு சில விடியோஸ் என்கிட்ட இருக்க, கட்டப்பஞ்சாயத்த விட்டவரு மான மரியாதைய விடல, அத வச்சு ப்ளாக் மெயில்..சிம்பிள் ” என்று கூறி சிரிக்க அகிலன் பொறுமையை கைவிட்டு இனியனை நோக்கி கை ஒங்க அதை ஆதித்யன் தடுத்தான்.

 

“கூல் அகிலன் சார், ரிலாக்ஸ் … இன்னமும் நான் தெருஞ்சுக்க நினச்சத நீங்க சொல்லலியே… ” என்று கூற அகிலனோ, “அத ஏன்டா நாங்க உனக்கு சொல்லணும்” என்று கேட்க இனியனோ லெகுவாக, “அது தானே நம்ம டீல்… சரி டீல் கூட வேண்டாம், நான் கேட்டதுக்கு பதில் சொன்னா, உங்களுக்கு ஒரு இன்பார்மேசன் நான் குடுப்பேன்” என்று குரலை கடினமாக்கி கூறினான்.

 

ஆனால் அதற்கெலாம் அசராத ஆதித்யன், இனியனை விட நிதானமாக, “எல்லாமே தெருஞ்சிடுச்சே இன்னமும் என்ன” என்று அவனது இடது புருவத்தை ஏற்றி இறக்கி  ஒரு சிங்கத்தின் தோரணையில் கேட்ட ஆதித்யனை பார்த்த இனியன் நிதானத்தை கைவிட்டான்.

 

“ஆதி வேணாம்… சொல்லிடு, ஆஷிக்… ஆஷிக் எங்க?” என்று இந்த சம்பாசனையில் முதல் முறையாக இனியன் குரல் உயர்த்தி பேச அவனது முகபாவனையிலே இனியனுக்கு ஆதித்யன் எத்தனை முக்கியம் என்பது தெரியவந்தது.

 

“ஹ்ம்ம் பொறுமை மிஸ்டர் இனியன்… மச்சி அரெஸ்ட் பண்ணிடு டா… நமக்கு தேவையான இன்போ கிடைச்சுருச்சு, ஆனா இன்னும் சில கேள்விகள் பாக்கி இருக்கு, அந்த கேள்வி காண பதில உன்னோட காக்கி சட்ட பண்ணும்னு எனக்கு தெரியும்” என்று ஆதித்யன் இப்போது அசைடையாக பேச, அகிலனோ, ” நிச்சயமா டா.. இத்தன நேரம் உனக்காக தான் பொறுமையா இருந்தேன்… கடத்தப்பட்ட பொண்ணுங்க நிலைமை, அப்புறம் அவுங்க கூட காணாம போனவங்க, இவுங்கள பத்தி தகவல் அதுக்கு அப்புறம் உன் ஆபிஸ் ஸ்டாப் ஹர்ஷினி பத்தி டீடைல்ஸ் எல்லாம் இவன விசாரிக்கிற விதத்துல விசாருச்சா தெரிய வந்துரும், நான் என் டீம் கு தகவல் குடுத்தாச்சு, இந்நேரம் இந்த கட்டடத்த என் டீம் சுத்தி வளசுருப்பாங்க… ” என்று இருவரும் சிரிப்புடன் பேசி இனியனது முகத்தை பார்க்க இனியனது முகம் எதையும் பிரதிபலிக்கவில்லை.

 

அவர்களை பார்த்து கொண்டு இருந்த இனியன் குனிந்து மீதி இருக்கும் ஆட்டத்தை தொடர்ந்து, ஆதித்யன் பக்கம் இருந்த சதுரங்க ராஜாவிற்கு செக் வைத்துவிட்டு அவர்களிடம், “ஆட்டம் இன்னமும் முடியல… நீங்க என்ன அரெஸ்ட் பண்ணவும் முடியாது , என் நண்பன என்ன செய்தீங்க சொல்லாம மறைக்கவும் முடியாது…என்கிட்ட இருந்து கடத்தபட்டவங்களுக்கு என்ன ஆச்சுனு தெருஞ்சுக்கவும் முடியாது… ஏன்னா, உனக்கு நான் செக் வச்சுட்டேன்.. இந்த செஸ் ல மட்டும் இல்ல…உன் பொண்டாட்டி மதிய தூக்கி உனக்கு உன் லைப்ளையும் செக் வச்சுருகேண்டா, இப்ப தெரியிதா ? என்னோட தைரியத்துக்கு காரணம்… ” என்று கூறி அந்த அறையே அதிரும் அளவு, அவன் சிரிப்பே எதிரொலிக்கும் வகையில் பலமாக சிரித்தான் இனியன்.