பூக்கள்-15
குருமூர்த்தி சொன்ன படி…. அகல்யா தனது வேலையை விட்டு ஒரு மாதம் ஆகிறது…. இப்போது அதிகாலை வேளையில் கார் ஓட்டி பழகி இருந்தாள்…..
கூடவே தனது மாமனாரின் ஆபீஸ் சென்று கொண்டிருக்கிறாள்….. குருமூர்த்தியின்….. பயிற்றுவிப்பில்…. அகல்யா சற்று மிரண்டு தான் போனால்…..
அவர்களின் யூனிட் அது போல் இருந்தது….. இவள் ஏதோ ஐம்பது இல்லை அறுபது கார்கள் இருக்கும் என நினைத்து போக….. அங்கு 200 கார்களுக்கு மேல் ரன்னிங்கிலும்…. மாற்று கார்களாக 50 கார்களும் மற்றும் சொகுசு கார்களாக 5 கார்களும் இருந்தது…..
எனவே ஆபீஸ் பெருசாக.. பரபரப்பாக… இருந்தது…. கால் பூக்கிங் தொடங்கி க்ளினர் வரை… என அவர்களின் ஸ்டாப் எண்ணிக்கை நீண்டது….. எப்போதும் எல்லோருக்கும் ஏதோ ஓர் அவசரம்…..
அதனால் ஆபீஸ் எப்போதும் சுறு சுறுப்புடன் தான் இருந்தது….. பசங்களும் அதற்கு ஈடாக பெண்களும்.. என களைகட்டியது ஆபீஸ்…..
கலகலப்பாக உயிர்ப்புடன் இருந்தது ஆபீஸ்….. குருமூர்த்தியும் இவளும் உள்ளே நுழைந்த உடன்….. அனைவரும் அமர்ந்த இடத்திளிருந்தோ…. நின்ற இடத்திளிருந்தோ…. “வெல்கம் மேம்…..” என ஒரு கோரஸ்….. அவ்வளவே…..
அகல்யா தான் பயந்து போனால்….. இந்த வரவேற்ப்பில்….. இவள் இந்த முறையிலான வரவேற்பை சற்றும் எதிர் பார்க்கவில்லை….. அதனால் தான்…
அங்கயே நின்று…. எல்லோருக்கும் கை குவித்து…. வணக்கமும், நன்றியும் ஒருங்கே சொல்லி நிமிர….. “ஓ….” என ஒரே சத்தம்….. அவ்வளவு தான்…. அதன் பிறகு…..
பழைய அவசரம் அவர்களை தொற்றிக் கொண்டது….. தங்கள் முதலாளியை கூட கண்டு கொள்ள… அவர்களுக்கு நேரமில்லை….
குருமூர்த்தி முகத்தில் அத்தனை பெருமிதம்….. யாரின் கண்ணசைவிலோ…. கையசைவிலோ காரியம் நடை பெறவில்லை…… தன்னிசையாக….. இது என் கடமை என்பது போல்….. அவர்களின் வேலை தொடர்ந்தது….
குருமூர்த்தி நேற்றே அவள் வருகை பற்றி ஆபீஸ்ல் சொல்லி இருந்ததால்…. அகல்யாவிற்கு இந்த வரவேற்பு…… அதில் கொஞ்சம் டென்ஷன் ஆகிற்று….. ‘எதுவும் தெரியாத தனகேதற்கு….’ என
அகல்யாவிற்கு….. ப்ரோக்ராமிங்கில்….. இருக்கும் அறிவு….. மனேஜ்மேண்டில் இப்போது இல்லை அவ்வளவே….. அதானல் ஒரு பதற்றம்…..
குருமூர்த்தி எல்லாவற்றையும் விரல் நுனியில் வைத்திருந்தார்….. இந்த நம்பர் வண்டி…. இந்த வே-யில் இருக்கிறது….. இன்று டிரைவர் பாலு லீவ்…. இன்று புதிதாக விவேக் என்ற பையன் வேளையில் சேர்ந்துள்ளான்…..’ என அனைத்தும் தெரிந்து வைத்திருந்தார்
அவர் தனது சிறு கான்பரன்ஸ் ஹாலில்….. அவளிற்கு, அந்த பெரிய கூட்டத்தி செம்மை படுத்தும் அந்த 6 GM களை அறிமுகப் படுத்தினார்….
என்னதான் உள்ளுக்குள்….. கலங்கினாலும், தனது முகத்தில் அதனை காட்டாமல்….. புன்னைகையுடன் அனைவரையும் எதிர் கொண்டாள்….
இந்த சிறு இன்ட்ரோ, முடிந்து….. அவள் யோசனையுடன் தான் இருந்தாள்…. குருமூர்த்தி அதனை பார்த்து….. “என் மருமகள்…. எல்லாத்தையும் சமாளிப்பா….” என்றார் அர்த்தமாக……
“நீ எப்போதும் போல் பொறுமையாகவே இரும்மா….. நான் உனக்கு எல்லாம் சொல்லி தரேன்….. ” கண்டிப்புடன் உறுதியாக….
இவள்… அவரை ‘நானா சமாளிப்பேன்…’ என்பது போல் பார்க்க…. எதுவும் பேசாமல்…. பையில் பார்த்துக் கொண்டிருந்தார் அவர்….
அங்கு அப்போது….. கைலாஷ் வந்தான்…. லைட் பிங்க் செக்க்டு ஷர்ட்டில்…. தந்து கூல்லரை அணிந்த படி…. அக்ல்யாவிடம் வந்தான்…… கண்ணில் பார்த்தவர்கள் எல்லாம் விஷ் செய்ய……
அதனை புன்னைகையுடன் ஏற்று…… அதற்கு தக்க இவனும்….. பதில் கூறி வந்தவன்….. அக்ல்யாவிடம் “குட் மோர்னிங் மேம்…..” என்றான்
அவள் அமைதியாக நிற்க…..
உள்ளே சென்றனர்…. இருவரும்…. குருமூர்த்தி…. தன் மருமகளுக்கென…. தனியாக,. தனது கேபின் அருகிலேயே…… சிறிதாக ஒன்று அமைத்திருந்தார்…..
“என்ன அகல் ஆபீஸ் பிடிச்சிருக்க…” என்க
“என்னது….. பிடிச்சிருக்காவா… பயமா இருக்கங்க…. “ என்றாள்
அவளின் கலங்கிய முகம் பார்த்து….. “பிரஸ்ட் டைம் வர அதான்….. போக போக…. உனக்கு பழகிடும்…” என்றான்.
தொடர்ந்து “எல்லாத்துக்கும்….. ஆன்லைன் தான் வேல…. உனக்கும் தான்…. எந்த வண்டி எங்க இருக்குனு நீ டிராக்… பண்ணா போதும்….” என அவன் ஈசியாக சொல்ல….
தலை சுற்றியது அவளிற்கு…. அவள் முகம் பார்த்து …..முதல் நாளே எல்லாம் சொல்ல வேண்டாம் என நினைத்தவன்….. வேறு பேசி… அவளை கலகலப்பாககினான்…..
அவள் சேர்ந்த இந்த ஒரு மாதத்தில்…. இப்போது தான்….. ஆபீஸ்ன் வடக்கு, தெற்கு தெரிந்தது அவளிற்கு…..
பயம் போய்…. கொஞ்ச கொஞ்சமாக தன்னை அந்த நிலைக்கு பழக்கி கொண்டாள்….. அவளை அந்த வேலைகளுக்கு பழக்கி இருந்தார் குருமூர்த்தி…..
இந்த வாரம் சண்டே….. கைலாஷின் பெரியப்பா வீட்டிலிருந்து வந்திருந்தனர்…..
அவர்கள் வீட்டில் ஒரே பெண் வாரிசான….. அவர்களின் தங்கை… அதாவது கைலாஷின் பெரியப்பாவின் பெண் வர்ஷினியை பெண் பார்க்க வருகின்றனர்….. அதனை முறை படி தெரிவிக்கவே…. இந்த வரவு…..
கிட்ட தட்ட எல்லாம் முடிவான நிலை…. கைலாஷ் விஷயத்தில் நடந்த குளறுபடிகளால்…. பெரியவர்கள் தீர விசாரித்தே அனைத்தையும் முடிவு செய்தனர்……….
கைலாஷின் பெரியம்மாவிற்கு…. இப்போது வீட்டின் நிலை அக்ல்யாவிடம் இருப்பதாக தோன்றியது….. அது பற்றி குருமூர்த்தியிடம் பேசவும் மறக்கவில்லை…..
“நல்ல வேலை செய்தீர்கள் அத்தான்….. அகல்யா வந்த உடன் தான் வீட்டிற்கே கலை வந்தது போல் இருக்கு…… நல்ல வேலை…. முதல் வரன் தட்டி போனது நல்லது தான்…. இல்லையா அத்தான்….” என கேட்க….
குருமூர்த்திக்கு ஒரு புறம் மகிழிச்சி…. இன்னொரு புறம் ‘அய்யோ இதை அகல்யாவின் முன் சொல்லாமல் இருக்க வேண்டுமே…’ என்ற படபடப்பு…. எதுவும் சொல்லாமல் அமைதியாக சிரித்து வைத்தார்…..
கைலாஷும் அமைதியாக இருக்க….. ஏதோ பேசாக் கூடாதது பேசிவிட்டோம் என அமைதியானார் அந்த அம்மா….
கைலாஷிற்கு இப்போது தான்….. சுருக்கென்றது….. ‘நான் அவளை எப்படி மறந்தேன்…..’ என யோசிக்க…. அதற்கு மேல் அவளை பற்றிய நினைவு வரவே இல்லை அவன் கண்ணில்…..
கைலாஷிற்கு…. இது ஏதோ…. தேவையில்லாதாக தெரிந்தது….. மீண்டும் மீண்டும் நினைவு படுத்தி பார்க்க பார்க்க…. அவள்…. முகம் மட்டும் ஏதோ…. கசங்களாக தெரிந்தது…..
இப்போது… கையில் தாம்பூல தட்டுடன் வந்த அகல்யாவை பார்த்ததும்…. தன் மனதில் உள்ள மிச்ச மீதி….. அபத்தங்களும் கரைய…. அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்….
இதை பார்த்த அவன் பெரியம்மா…. அகல்யாவை தனியே அழைத்து… அவளிற்கு தன் கைகளால் திருஷ்டி சுற்றி….. “என தங்கமே….. இனி நீ தானம்மா…. எல்லாமே….. இங்கே….. “ என்றவர்…..
ஆசையாக…. “சீக்கிரமே வந்திடு டா…… நாளைக்கு….. நீ வந்து தான் எல்லாம் பார்க்கணும்….. நம் வீடு பத்தி நீ இன்னும் தெரிஞ்சக்கணும்……” என்று பெருமையாக சொல்லி சென்றார்…
கைலாஷிற்கு இப்போது காயத்ரி பற்றி எந்த குழப்பமும் இல்லை…. அன்று அவளிடம் தன் நிலை கூறவே… பீச் கூட்டி சென்றது…. கூறியும்விட்டான் தான்…. ஆனால் முழுதாக சொல்லவில்லை….
ஆனால் அகல்யா…. அவன் தன்னை அழைத்து வந்ததும்…. சற்று பயம் வந்தது…..
கைலாஷ் திரும்பி கூட பார்க்காதா கணவன்….. இப்போது தான்… தன் கைகளால் சாப்பிடுகிறான்….. தன்னிடம் பேசுகிறான்…..
அப்படி இருக்கும் சூழ்நிலையில்….. தனிமையில் கூட்டி வருகிறான்….. அகல்யாவின் இதயம் இப்போது…. அந்த பழைய நினைவுகளை கேட்க விரும்பவில்லை……
கல்யாணதன்று…. இரவில்…. தனக்கான கேள்விக்கு விடை தெரியும் என காத்திருந்த அகல்யா இல்லை இப்போது…..
ஆம் ….. இப்போது தான், தன் அருகில் நெருங்கி இருக்கும் கணவனை இழக்க விரும்பவில்லை அவள்….. பைக்கில் இருந்து இறங்கிய உடன்….. அவன் முகம் பார்த்து நின்றே விட்டாள்…..
‘வேண்டுமா….. இந்த தனிமை நமக்குள்…..’. என அவள் கண்கள் கேட்க….. அதை சரியாக படித்தவன்…..
தனது வலக்கையை….. யாசிப்பாக அவள் புறம் நீட்ட… “வேண்டாமே….. கைலாஷ்….” என்றாள் அவள்
“நான் உன்னுடன்….. எந்த உறுத்தலும் இல்லாமல்….. ரொம்ப நாள்…. ரொம்ப நாள்….. இந்த கைபிடிச்சிக்கிட்டு….. போகணும்….. ப்ளீஸ்….. அகல்…..” என்ற வேண்டுதல் குரல்…
ஏதோ ஏதோ என அகல்யாவின் மனம் தடதடக்க…. அவன் விரல் பற்ற….. அந்த மணற்பரப்பில்….. இருவரும்…. பாரமாக நடந்து… ஓரிடத்தில் அமர்ந்தனர்…..
கைலாஷ் அமைதியாக எங்கிருந்து தொடங்குவது என யோசித்திருக்க…..
அந்த அடர்ந்த வெள்ளை பரப்பில் ஏக்கத்தையும்…. பிரவுன் நிற விழி திரையில் பயத்தை தாங்கியபடி அவனை பார்த்திருந்தாள்….
அந்த பயம் அவனை தாக்காமல் இல்லை…… தயங்கியவன்…. ஒரு முடிவுடன்…… பற்றிய கையை விடுத்து….. அவள் முகம் நோக்கி…. கண் பார்த்து….
“இப்போ…. நான் அகல்யா கைலாஷ் தான் அதில் மாற்றம் இல்லை….. இந்த, எக்ஸ்ப்ளைன்…. எல்லாம் எனக்காக…… எனக்காக மட்டும் தான்….. உன்னிடம்…..
உன்னிடம்….. மட்டுமேயான விளக்கமிது…. என கூறி…. தொடங்கினான்….
முதன் முதலில் தான்…. இடறிய…. தடம் ஒவ்வொன்றாக சொன்னான்…. அவளை பார்த்தது…. ரசித்தது….. என ஒவ்வொன்றாக…..
அனைத்தையும் அவள் உள் வாங்கினாள்…..
கடைசியாக…… தன் மனையாளிடம்…. தான் தோற்ற கதையையும் சொன்னான்…… ‘இது எல்லாம் என் நிலை தான் அகல்….. அவள் மனதில்…. நான் வரவே இல்லை….. அகல்…..’ என கலங்கிய படி சொன்னவனை…..
வெட்டவெளி என்றும் பாராமல்…. அவன் புறம் திரும்பி…. தன் இரு கைக் கொண்டு தாவி அவன் கழுத்தை பற்ற….. பின்னாடி கைகளை உன்றி, காலைநீட்டி…. அமர்ந்திருந்தவன்….. அப்படியே சாய்ந்தான்…..அவளுடன்….
அகல்யாவின் மனதில் அப்படி ஒரு நிம்மதி…. ஏதோ என கலங்கி இருந்தவள்…. இப்போது கைலாஷின் விளக்கத்தில் ‘இவ்வளவு தானா ‘ என்ற எண்ணம் வந்தது….
கண்கள் கலங்க…..
“ஜி….. உண்மையை சொல்லுங்க…. அவங்க….. உங்கள பார்க்கல தானே….” என தயக்கமாக கேட்க…..
“அத தானடி சொல்லிக்கிட்டு இருக்கேன்….” என்றான். சிரித்தவாறே…. அவளை தன் நெஞ்சில் தாங்கியவாறே…..
ஏதோ… தவறு செய்தவன் போல்….. இருந்த நிலை போய்… அவன் மனதில் அப்படி ஒரு நிம்மதி வந்தது…… தன் மனையாள் இதை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை….. என்ற நினைப்பில் வந்த ஆனந்தத்தில் அவன் முகம் கனிந்தது…..
“ம்….. இதெல்லாம் எப்போ காலேஜ் படிக்கும் போதா….” என்றாள்… சாதரணாமாக…
“இல்ல ஒரு மாதம் முன்னாடி….” என்றான்….. அவனும்
சட்டென அவன் மேலிருந்து எழுந்தாள்….. பின்னால் நகர்ந்து பழைய இடத்தில் அமர்ந்தாள்….
அந்த ஒதுக்கத்தில் பாதித்தவன்…. அவள் கைபிடித்து… தன் மேல் இழுக்க… இவள் நகரவில்லை…. அதே இடத்தில்… தலையை குனிந்து அமர்ந்திருந்தாள்…….
கைலாஷ் இப்போது… “உனக்கு என்ன பத்தி….. அதாவது, நம்ம கல்யாணம் எப்படி நடந்தது தெரியுமா…….” என்றான்.
“ம்… கூம்…” என பாவமாக தலையை இட வலமாக அசைக்க….
“அப்போ அன்னைக்கு விட்டுட மாட்டேன்… கொண்டு வருவேன்…. அப்படி இப்படி என சொன்ன…..”. கைலாஷ் கோவமாக கேட்க….
இவளிற்கு…. எதுவுமே தெரியாமல்…. திரு திருவென விழித்தபடி…. கண்ணில் நீர் வழிய…. ‘இன்னும் என்ன இருக்கோ….’ என அவன் முகம் பார்க்க…….
கோவம் தான் வந்தது கைலாஷிற்கு, கூடவே சலிப்பும்…… இவளிற்கு எல்லாம் தெரியும்…. அதனால், தன் பக்க விளக்கத்தை இவன் சொல்ல…. சொல்ல….
அவளிற்கு இது புதிய தகவல்… மேலும்…. ஏதோ இவனே காதல் செய்தது போல் ஒரு எண்ணம்…. என்ன தான் அவன்…. விளக்கினாலும்… அவனிடமிருந்து ஒதுங்கினாள்….
அதன் பிறகு, கைலாஷ் முகம் பார்க்கவில்லை, பேசவில்லை….. ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை…. ‘எப்படி நம் திருமணம் நடந்தது…..’ என
கைலாஷிற்கு இதுவும் எரிச்சலை கொடுத்து…. ‘அவளிற்கும் எதுவும் தெரியவில்லை…. தான் சொன்னபிறகும்…. அது குறித்தும் கேட்கவில்லை…. என நினைத்து அவனிற்கு எரிச்சல் தான் வந்தது….
இவ்வளவு நாள்…. ஆறுதலாக இருந்தவள்…. விஷயம் தெரியவும்… அமைதியாகியது…. ஒரு சங்கடத்தை கொடுத்தது….
அவளை பார்த்து…. “என்ன ஏதாவது கேள்… நான் சொல்றேன்…. இப்படி அமைதியா இருக்காதே..” என்க
“எப்படி அவங்களை…. மறந்துட்டு…. என்னை…” என முடிக்காமல் திக்க….
கைலாஷின் மனதில்…. திக்கிய இடங்கள் நிரப்பட்டது…. அவள் கண்களால்…..
கைலாஷ்…. வெறுமையாக அவளை பார்த்தான்…… அவள் விருப்பம் தெரியாமல்…. கற்பனையில் கூட அவளை தீண்டவில்லையயடி…. என அவன் மனதில் நினைக்க…
அகல்யாவிற்கு குழப்பம் தான் அவன் கண்களை பார்த்து…… என்ன கேட்பது அவனிடம்…. ஒன்றும் தெரியாதா வரை பராவாயில்லை….. ஆனால் இப்போது…. எதையோ கணக்கு போட்டது… மனம்.
தன் திருமணத்தின் போது நடந்ததை நினைத்து பார்த்தது….. ஏதோ உறுத்தல் அவளிடம்…. எங்கோ…. தவறு… ஆனால் அவனிடம் எப்படி கேட்பது…..
விழித்தாள்…. அவனை பார்த்து… “அப்போ நம் கல்யாணத்தில் பிரச்சனையா…” என்றாள்…. கோவமாக…..
கைலாஷ் சிரித்தே விட்டான்……. “தேங்…. காட்….” என்றான் சத்தமாக…..
“போடி… போடி… உனக்கு எல்லாம் சொல்ல முடியாது…. நீயே எல்லாத்தையும் கண்டுபிடி…..” என சிரித்தவாறே சொல்லி அவளை வெறுப்பேற்ற…..
அவள் இன்னும் கோவமாக….. கைலாஷ்க்கு சிரிப்பு தான் வந்தது…. “என்… கண்ணம்மா டி….. நீ…” என அவளை கொஞ்சி…. கெஞ்சி…. வண்டியில் வீடு வந்து சேர்த்தான்…….
அன்றிலிருந்து…. இப்போது வரை….. அவளிற்கு எதுவும் தெரியாது….. அமைதியாக தேடிக் கொண்டிருக்கிறாள்….. அது என்னவென்று….
பல பல முயற்ச்சிகள் கைலாஷிடம்…… எல்லாம் தோல்வியே…. கைலாஷ் அதையெல்லாம் ரசனையுடன் பார்த்திருந்தான்….. அவளிடம் முச்ச் விடவில்லை…..
தன் மனதில் நினைத்துக் கொள்வான்…. ‘உனக்கு சில விழயங்கள் தெரியாமல் இருப்பது…. நல்லது தான் டா கண்ணாம்மா….” என….
“கண்ணே கனியே உன்னை கைவிட மாட்டேன்…..
சத்தியம்.. சத்தியம்… இது சத்தியமே…..
மாலை சூடிய.. காலை கதிரின் மேலே….
சத்தியம்.. சத்தியம்… இது சத்தியமே…..
ஒரு குழந்தை போலே….. ஒரு வைரம் போலே….
துய்மையான என் சத்தியம்…. புனிதமானது…..
இப்பிறவியில் இன்னொரு பெண்ணை….. சிந்தையிலும் தொடேன்….
பிரிதொர் பக்கம் மனம் சாயா…. பிரியம் காப்பேன்…..
செல்ல கொலுசு சிணுங்கள் அறிந்து….. சேவை செய்வேன்…..
நெற்றி பொட்டில் முத்தம் வைத்து நித்தம் எழுவேன்……
கைப்பொருள் யாவையும் கரைத்தாலும் கணக்கு கேளேன்…
ஒவ்வெறு வாதம் முடியும் போதும் உன்னிடம் தோற்பேன்…..”