பூக்கள் -9
“இன்னுமின்னும்.. என்னை.. என்ன செய்வாய் அன்பே…..
உன் விழியோடு… நான் புதைவேனோ…..
காதல் இன்றி.. ஈரம் இன்றி.. போனாய் அன்பே..
உன் மனதோடு.. நான்… முளைபேனோ…
செதிலாய்… செதிலாய்.. இதயம் உதிர…
உள்ளே.. உள்ளே.. நீயே…..
துகளாய்… துகளாய்… நினைவோ சிதறல்…
நெஞ்சம் எல்லாம் நீ கீறினாயே…..
கண்ணை விட்டு.. கன்னம் பட்டு…
எங்கே போனாய்…… என் கண்ணீரே… என் கண்ணீரே…”
குருமூர்த்திக்கு தான் மிகுந்த சோதனை….. தன் மகன் ஒருபுறம்…. அவனின் ஜாதகம் ஒரு புறம்….. அது எல்லாவற்றையும் விட தன் மகன் எதுவுமே நடவாதது போல் தன்னிடம் காட்டும் முகம் இருக்கிறதே…. அது தான் அவரை கொன்றது…….
இப்போது யார் மீது கோவம் கொள்ள முடியும் தன்னை தவிர…. தன் முட்டாள் தனத்தை தவிர.. என அவர் தான் நொந்து போனார்….
அவர் இப்போது பெண் தேடும் நிலையில் இல்லை….. ஆனால் ஏதாவது செய்தாக வேண்டும்….. என நினைத்தார்…….
எல்லோரிடமும் சொல்லி வைத்தார்….. எப்படியாவது இந்த 2 மாதத்தில் அவனிற்கு திருமணத்தை முடித்தாக வேண்டும் என தேடிக் கொண்டிருந்தார்….. உள்ளே கனன்று கொண்டிருந்தது கோவம்….. என்னையும்…. என் மகனையும் ஏமாற்றிவிட்டார்கள் என்ற எண்ணம்…..
அவள் ஒருத்தி இல்லை என்றால் என் மகனிற்கு திருமணம் நடக்காதா….. நடத்தி காட்டுகிறேன்…… என மகனை மாற்றி காட்டுகிறேன்…… அந்த சந்தோஷத்தை அவன் முகத்தில் கொண்டு வந்தே தீருவேன்… என உள்ளே சபதம் கிட்ட தட்ட அப்படிதான் எடுத்துக் கொண்டார் குருமூர்த்தி….
கைலாஷ்………. எந்த மாற்றமும் இல்லை அவனிடம்…. ஒரு சிறு கவலை கோடுகளோ…. கோவக் கோடுகளோ….. ஏன் ஏமாற்ற கோடுகள் கூட அவன் முகத்தில் இல்லை…..
இயல்பு….. நிலையில் தான் இருந்தான்….. ஆம்… அவன் எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை….. என்ன…. அவனின் இரவு தான் நீண்டது…… அடிக்கடி பார்ட்டி இருந்தது….. இரவு நேரங்களில் மட்டும் தன் தந்தையை பார்ப்பதை தவிர்த்தான்…..
வேலை.. வேலை… தவிர வேறு எதையும் அவன் நினைக்கவில்லை…. இருந்தும்…. தன் காயத்ரியை நினைத்து பெருமை தான் கொண்டான்….. என்னை பிடிக்கவில்லை என அவள் சொல்லவே இல்லை….. அது தான் அவனின் மிக பெரிய சாதனையாக இருந்தது…..
எவ்வளவு நேர்மையாக எனக்கு வேலை தான் முக்கியம்…. என்று சொல்லி தான் சென்றாள்….. எனக்கு போலி நம்பிக்கையோ…… காத்திரு….. என்று நிபந்தனையோ சொல்லவே இல்லை….. அவள் கொண்ட கொள்கையில் உறுதி……. அதை நினைத்து அவன் பெருமை படாத நாளே இல்லை. அவளை பெரிய கடவுள் காக்கட்டும் என்றே நினைத்தான்…..
ஆனாலும், அந்த நேர்மையை இன்னும் காதலிக்கும் தன் ….. மனதை… என்ன செய்து மீட்க வேண்டும் என அவனிற்கு தெரியவில்லை….
அவளின் ஒவ்வெரு அசைவும் அவன் நினைவில் இருந்து….. அவனை தின்றது……
தன்னை, அவளின் நினைவுகள்….. எதுவும் பாதிக்கவில்லை என காட்டிக் கொண்டாலும்…… உள்ளுக்குள் எரிந்து கொண்டு தான் இருந்தான்…
ஒரு 10 நாள் சென்ற நிலையில் குருமூர்த்திக்கு……. காயத்ரியின் மாமா தாமோதரன் போன் செய்தார்……. காயத்ரி செய்த செயலுக்கு மன்னிப்பு வேண்டியவர்….. இதனை சரி செய்ய வேண்டியது என பொறுப்பு என்றார்…..
அகல்யாவையே திரும்பவும் பார்ப்போம்…… நல்ல பெண் அம்மா சொல் மீறாது….. நான் பேசி முடித்து வைக்கிறேன்…… எல்லாம் நல்லபடியாக நடக்கும்… என்றார்…..மீண்டும்…….
குருமூர்த்தி…. “நீங்க பேசினதே சந்தோஷம்…… அந்த , அதாவது உங்க பாமிலியே வேண்டாம் ப்பா….” என்றார்….. தயவு தாட்சண்யமே இல்லாமல்…..
பட் விதி வலியது…………..
குருமூர்த்தியிடம்….. அதன்பிறகு பேசாத…… சுப்பிரமணியம்…… காயத்ரியிடம் தன் தம்பி குடும்பம் பற்றி தெரிந்து கொண்டார்……
வேறு ஏஜென்சி மூலமாக….. ஒரு அப்பார்ட்மெண்டை லீசுக்கு எடுத்தவர்…. தான் பாதி அமௌன்ட் கொடுத்து…. மற்றதை விசாலாட்சியை கொடுக்க வைத்தார்…. வைஷ்ணவிக்கும் காலேஜ் மாற்றி தந்தார்…… அகல்யாவை இங்கேயே வர வைத்தார்….
இப்போது…. தன் மச்சானிடம்(தாமோதரனிடம்), பேசி அகல்யாவை கைலாஷிற்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள்….. செய்துக் கொண்டிருக்கிறார்…..
அது தான் நடந்தது…. குருமூர்த்தியிடம் கொஞ்ச கொஞ்சமாக பேசி….. பேசி கரைத்திருந்தார்… தாமோதரன்…..
சுப்ரமணியமும், அகல்யாவை இப்போது எங்கும் செல்ல வேண்டாம் என்றுவிட்டார்….. கல்யாணிக்கு இதிலெல்லாம் சிறிதும் விருப்பம் இல்லை….
தன் அண்ணனிடமும் கணவரிடமும் சொல்லி பார்த்தார் கேட்கவே இல்லை….. எதற்காக கல்யாணி, விசாலாட்சியை வீட்டை வீட்டு வெளியேற வைத்தாரோ….. அது இப்போது தன்னை சார்ந்தவர்கள் மூலமாக நடக்கவும்.. கையை கட்டி வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது அவரால்…..
குருமூர்த்தியும் யோசிக்க தொடங்கினார்…… தாமோதரன் தான்…. சுப்ரமணியத்தை பற்றி சொல்லி…. அவர்கள் இதனை தங்கள் தவறாக நினைக்கிறார்…… அதனை சரி செய்யவும் நினைக்கிறார் என்றார்.
இப்போது குருமூர்த்தி இறங்கி வந்தார்…… பெண் வீட்டுகாரர்களுக்களே… இறங்கி வரும் போது….. தான் பிடிவாதம் பிடிப்பது சரியில்லை என நினைத்தார்…..
கைலாஷிடம் பேசினார்….. “கைலாஷ் உனக்கு பெண் பார்த்தாச்சு….. எப்போ போலாம் ப்பா….. பெண் பார்க்க…..”என்றார்.
கைலாஷ் “அப்பா….. என்ன அவசரம்…… இப்…. இப்போ… தான்…. எல்லாம் சரியா இருக்கே…. திரும்பியும் முதலில் இருந்தா……ப்பா……” என்றான் கண்ணில் நிராசையுடன்.
அவனின் தந்தை உடையாமல் பேசினார்…. “இல்லாப்பா…. இதை தள்ளி போடா கூடாது….. உனக்கு இப்போ தான் நேரம் கூடி வருது…. நீ எதுவும் சொல்லாத…… ம்..ன்னு மட்டும் தான் சொல்லணும்…..”என்றார் சிறிது கட்டளையாக.
கைலாஷ் தளர்வாக சோபாவில் சாய….. குருமூர்த்திக்கு இதை பார்க்கத்தான் முடியவில்லை…… குரலில் கடினம் கூட்டினார்….. “ரொம்ப யோசிக்காதப்பா….. இந்த தரம் எல்லாம் சரியாக நடக்கும்…. நான் பொறுப்பு….” என்றார்….. தீவிரமான குரலில்.
கைலாஷிடமிருந்து “உங்க இஷ்டம்….”என்ற வார்த்தையை வாங்கியே விட்டார்…..
அதன்பின்…. எதற்கும் எந்த தடங்களும் நடக்கவில்லை….. விசாலாட்சியிடம் சுப்ரமணியமே பேசினார்….. நடந்தவை அனைத்தையும் சொன்னார்….. கல்யாணியின் தவறுதான் இது, என புரிய வைத்தார்….. எனவே….. விசாலாட்சிக்கு இருந்த சங்கடம் எல்லாம்….. தீர்ந்து இந்த சம்மந்தத்திர்க்கு சம்மதித்தார்….
அகல்யாவிடம்…… “உனக்கு வரன் பார்த்திருக்கு….. நாளை நிச்சையம்…. இன்னும் 15 நாளில் திருமணம்…..” என்ற விவரம் மட்டுமே…… அவள் அன்னை சொன்னார்.
அகல்யா…..ஒரு பிரபலமான IT கம்பனியில்….. இருக்கிறாள்….. சேர்ந்து இரண்டு வருடமாகிறது….. இப்போது தான் அந்த கம்பனியின் சூழல் உணர்ந்து….. கொஞ்ச கொஞ்சமாக வளர்ந்து வருகிறாள்……. இப்போது திருமணம்….. நினைத்துக் கூட பார்க்கவில்லை அவள்……..
அதுவும் தன் விருப்பத்தை கேட்கவே இல்லை தன் அம்மா….. இதை சற்றும் எதிர்பார்க்கவே இல்லை….. அகல்யா……
அன்று….. மாலை குருமூர்த்தி மற்றும் அவரின் அண்ணன் குடும்பம் மட்டும் தான் வந்திருந்தனர்…. மற்ற விஷயங்களை பேச வேண்டி இருந்ததால்….. சுப்பிரமணியம்…. அவரின் தம்பி பாலமுருகன் அவர்களின் குடும்பம் தான் வந்திருதனர்…..
ஏனோ தானோவென தான் வந்தார்…… குருமூர்த்தி, ஆனால்…. வந்து அகல்யாவை பார்த்தவர்….. அசந்து தான் போனார்……
சராசரி பெண்களை விட சற்று உயரம் கூடுதலாக….. நல்ல நிறமாக….. பார்க்க சிரித்த முகமாக இருந்தாள்…… குருமூர்த்திக்கே மனது நிறைந்து போனது…..
அவள், என்ன வேலை செய்கிறார் என விசாரித்தர்…… அவ்வளவே…… அதிகம் பேசவில்லை யாரும்….. எல்லோரிடமும் ஒரு அந்நிய தன்மை முகத்திலும்.. செயலிலும்.. தெரிந்தது……. அந்த நேரத்தை அவர்களால் கடக்க முடியவில்லை….. மிகவும் கனமானதாக உணர்ந்தனர் அனைவரும்.
தேவையானவற்றை மட்டும் பேசி கிளம்பி சென்றனர்…..
இதில் வைஷ்ணவி தான் மிகவும் எரிச்சலாக இருந்தாள்…… ஏனெனில் அவளிற்கு தான் கைலாஷின் ஜாதகம் வந்தது…. அதில் நடந்த குளறுபடிகள்…. அதை தாண்டிய இந்த திருமணம் எல்லாம் தெரியும் பெரியவர்களை போல்….. அவளிற்கு அகல்யாவை நினைத்து கவலையாக் இருந்தது
தன் அம்மா, தன்னிடம் இதை.. அகல்யாவிடம், சொல்ல கூடாது என கூறி இருந்தார். அதனால் அமைதியாக எதிலும் கலக்கவில்லை அவள்….
குழந்தைகளுக்கு சொல்லும் அரக்கன் கதைகளில்…. ஒரு ஊரே நன்றாக இருக்க…. யாரோ ஒருவரை தினமும் அவனுக்கு பலியாக்க… ஊரிலிருந்து தினமும் ஒரு அப்பாவியை, அவனுக்கு உணவாக அனுப்புவார்கள்….. அது தான் நியாபகம் வந்தது வைஷ்ணவிக்கு…..
பாவமாக தன் அக்காவை பார்த்துக் கொண்டிருந்தாள்….. ஆனால் அகல்யாவிற்கு… இது எதுவும் தெரியாது…. அவளுக்கு இப்போதிய கவலை…. கல்யாணத்திற்கு பிறகு தான் வேலைக்கு செல்லவேண்டும் என நினைத்தால்…. அவ்வளவு தான்…
வைஷ்ணவி மனதில் நினைத்துக் கொண்டாள்….”கல்யாணத்திற்கு பிறகு….. நீ… வேலைக்கு மட்டும் தான் போகப் போற…… போடி…. போடி….. லூசு…..” என்று நினைத்தாள்.
தன்னை சுற்றி என்ன நடக்கிறது என தெரியாமல் இருக்கும் தன் அக்காவை நினைத்து கோவம் தான் வந்தது…… ‘இன்னும் தனக்கு பார்த்த மாப்பிள்ளை வந்து தன்னை பார்க்க்கவில்லையே பேசவில்லையே….. என எதுவுமே தோன்றா அவளிற்கு…..
இவள் என்ன ப்ளக் அண்ட் வைட் காலத்திலா இருக்கிறாள்…… கேள்வி கேட்கவே மாட்டாளா…. அம்மா சொன்ன சரின்னு சொல்லிட வேண்டியதா……’ இப்படியான கோவம் தான் தன், அக்கா மீது….. பாசமான கோவம் ……..
அங்கு கைலாஷ்….. தன் திருமணத்திற்கு சரி.. என்று சொன்னதுடன், தன் கடமை முடிந்தது என….. அவன் கிளம்பி வெளியூர் சென்றுவிட்டான்….
ஒரு வாரம் கடந்து வந்த பிறகும், அவனாக எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை…. குருமூர்த்தியாக எல்லா விவரமும் சொன்னாலும்….. எதிலும் அவன் ஆர்வம் காட்டவில்லை….. தன் வேலையை தவிர…. திருமண எண்ணமே இல்லாமல் இருந்தான்….
ஆனால், அகல்யா இயல்பாக எல்லாவற்றையும் எதிர்பார்த்தாள்….. கைலாஷை பார்க்க வேண்டும்…. போன் பேச வேண்டும்.. என எல்லா பெண்களும் எதிர் பார்க்கும் இயல்பான ஆசைகள் தான்…. ஆனால் அது எதுவும் அவளிற்கு நடக்கவில்லை…..
இதை தன் அம்மாவிடம் கூட அவளால் கேட்க முடியவில்லை….. நிச்சையதன்றே எல்லோர் முகத்திலும் ஒரு இறுக்கம்…… இப்போதும் எல்லாம் நடக்கிறது தான் ஆனால்…. ஏதோ ஒன்று குறைவு….. அது என்ன என்றுதான் தெரியவில்லை அவளிற்கு…..
ஒரு சின்ன பயம் வந்தது.
விசாலாட்சிக்கு…. இது எல்லாம் புரிந்தாலும்… என்ன செய்வது என தெரியாமல் அமைதியாக இருந்தார்… இந்த ஒரு குறையை தவிர மற்ற் விஷயங்கள் அனைத்தும் அகல்யாவின் விருப்படி தான் நடந்தது… புடவை நகை இப்படி அனைத்தும்…..
திருமணத்திற்கு தேவையான அணைத்து உதவிகளும்…. அகல்யாவின் சித்தப்பா பார்த்த்துக் கொண்டார்….. திருமண வேலைகள் சிறப்பக நடந்தது….
திருமண நாளும் அழகாக விடிந்தது….. குருமூர்த்தி திருமணத்தை மிகவும் விமர்சையாக தான் செய்திருந்தார்…..
ஒரே மகன்….. அதனை ஆடம்பரமாகவே செய்தார்….. அகல்யா எதிர் பார்க்கவே இல்லை…. முதல் நாள் வரவேற்ப்பு…. ஒரு ஹோட்டல் ஹால் புக் செய்திருந்தார் குருமூர்த்தி…..
மதியமே ஹோட்டல் ரூமிற்கு வந்துவிட்டார்கள்…. அகல்யா வீட்டினர்…. அகல்யாவை…. சிறப்பாக அலங்கரித்தனர்…
அகல்யாவும், நான் நல்ல இருக்கனா….. என கண்ணாடியில் பார்ப்பது…. பின் ஏதாவது, அந்த அலங்காரம் செய்யும் பெண்களிடம், சரி செய்ய சொல்வது….. என கொஞ்சம் கலாட்டா செய்துக் கொண்டு…… துல்லாளுடன் இருந்தாள்…..
அவளின் ப்ரிண்ட்ஸ் அனைவரும் வந்திருந்தனர்…… அவர்கள் கேங்கில் இவள் தான் சற்று கலாட்டா பேர்வழி…… எனவே, அகல்யா திருமணத்தில் அவள் தோழிகளும் இவளுடன் சேர்ந்து கொண்டு சிரிப்பும் பேச்சுமாக இந்த இடமே….. குலுங்கியது….. சந்தோஷத்தால்……..
இப்போது பெண்ணை அதாவது அகல்யாவை அழைத்து செல்ல….. கைலாஷின் பெரியப்பா மருமகள் மற்றும் தங்கை வந்தனர்….. தோழிகளிடமிருந்து…. அகல்யாவை மீட்டுத்தான் கூட்டி சென்றனர்…..
பல கனவுகளுடன்….. தன் கணவனை முதல் முதலில் சந்திக்க போகிறேன் என்ற எண்ணமே….. அவளிற்கு அத்தனை ஆனந்தத்தை தர….. கிட்ட தட்ட பறந்து தான் சென்றாள்… மேடைக்கு கைலாஷை காண….
நல்ல பட்ரோஸ் நிறத்தில்….. வைலெட் நிற தங்க ஜரிகை கரையிட்ட பட்டு கட்டி….. வேலைபாடு செய்த ப்ளௌஸ்….. அதற்கு தோதாக நகைகள் என…. மேடைக்கு வந்தவளை… பார்த்தவன்….. ஒரு நொடி தான் பார்த்தான்,….அவனால் அவளை பார்க்கவே முடியவில்லை….. .அப்படியே…திரும்பி நின்றான் கைலாஷ்….. அவளை பார்க்காமல் எதிர் புறமாக….
அகமும் புறமும் மலர…. அந்த பெரிய கண்களில்….. தன் கணவனை காணும் ஆவலில்….. நிமிர்ந்து அவனை பார்க்க…. அவனின் பின்புறம்….. அழகான க்ரே கலர் கல்யாண சூட் தான் தெரிந்தது…..
அவன் முகம் தெரியவே இல்லை….. அகல்யாவிற்கு ஏன் என்றே தெரியாமல்….. கண் கலங்கியது….. குப்பென வேர்த்தது….. இந்த ஒரு மாதமாக அமைதியாக தானே இருக்கிறேன் இந்த நாளுக்காக……
எத்தனை கேள்விகள்….. என் மனதில்….. எத்தனை போராட்டம்…. எத்தனை கற்பனை….. ஏன்… இதை கூட நான் எதிர்பார்க்க கூடாதா…..
நான் என்ன துறவியா….. என்ன நடக்கிறது இங்கு…. இது திருமணம் தானே…..
இல்லை, என்னை கண்டவுடன் திரும்பி கொள்கிறாரே….. ஒருவேளை நான் எதிரியா…. ஒரு சக மனிதரை காணும் ஆர்வம் கூடவா வராது அவரிடம்….. என முதல் முறையாக ஒரு எண்ணம் வந்தது….. காயத்ரிக்கு…
அருகில் இருந்த அவனின் நண்பன் ஸ்ரீராம் தான் “டேய்….. அவங்க ஏற ஹெல்ப் பண்ணுடா….” என்றான்
ம்..கூம்….. அசைவே இல்லை….. அவனிடம்…. அதுவரை அவனை எதுவும் பாதிக்காமல் நின்றவன்….. அருகில் ஒரு பெண்….. தன்னை சார்ந்து வருகிறாள்….. தன் இணையாக வருகிறாள்….. என்று இப்போது தான் அவனிற்கு…. உணர்வு வந்தது……
இத்தனை ஆழமானதா எனது பாதிப்பு…… ஒரு பெண்ணை….. அதுவும் என் மனைவியாக வர போகிறாள் இன்னும் சில மணி நேரத்தில்…… நான் அவளுடன் வாழ்ந்தாக வேண்டும்….. அவளை இப்போது பார்க்க வேண்டும்….
மனதினுள் இப்படி தான் சொல்லிக் கொண்டான்….. கைலாஷ், தன் மூலை உணர்ந்து….. தன் மனது உணர மறுக்கும் ஒரு விஷயத்தை….. தன் மனதுக்கு, அவன் உணர்த்திக் கொண்டிருந்தான்……
கேமரா கண்கள் அந்த நிகழ்வை விழுங்கின…… குருமூர்த்தி அருகில் வந்து, அதனை நிறுத்தி….. கைலாஷை காப்பாற்றினார்.. அகல்யாவையும் தான்.
குருமூர்த்தி கைலாஷை நோக்கி “இவள் தான் என்… மருமகள்…..” என்றார் ஒரு அழ்ந்த குரலில்….. அகல்யாவிடம் திரும்பிய அவர்.. கைலாஷ் காதில் விழும்படி “அகல்யா…. உன் பொறுமைக்கு ரொம்ப நன்றிமா…… இவன் என் பையன் கைலாஷ்…..” என்றவர்…. அவனை பார்த்துக் கொண்டே…”இதே போல்.. பல நேரம் நீ பொறுமையாக இருக்கனும்மா….” என்றார் வேண்டுதலாக.
அகல்யாவிற்கு இந்த வார்த்தை மேலும் பயம் கொடுத்து… .இப்போது அவள் கைலாஷை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்…. ஆனால், இப்போது கூட அவள் முகத்தை பார்க்கவில்லை அவன்..
அமைதியாக தன் அப்பாவை பார்த்தான்…. அவர் அகல்யாவை பார்க்க அந்த இடமே சங்கடம் சூழ்ந்தது……
ஸ்ரீராம் தான் இதனை பார்த்து….அகல்யாவிடம் “ஹாய் சிஸ்டர்….. நான் இவன் பிரின்ட் ஸ்ரீ ராம் …” என தன்னை தானே அறிமுகம் செய்து பேசி கொண்டிருந்தான்…..
அதன் பின் அனைவரும் வந்து வாழ்த்த நேரம் சென்றது….. அகல்யாவின் ஆபிஸ் ப்ரிண்ட்ஸ் வந்தனர் ….. அகல்யா… “கைலாஷ்..” என அழைக்க திரும்பி கூட பார்க்கவில்லை அவன்…..