பூக்கள்-4
பூமியே பூவனம் உங்கள் பூக்களை தேடுங்கள்
“இந்த கனவு நிலைக்குமா…..
தினம் காண கிடைக்குமா…..
உன் உறவு வந்ததால்…..
புது உலகம் பிறக்குமா…..
தோழி உந்தன் கரங்கள் தீண்ட தேவனாகி போனேனே….
வேலிபோட்ட இதயம் மேலே… வெள்ளை கொடியை பார்த்தேனே….
தட்டு தடவி இன்று பார்க்கையிலே…. பாத சுவடு ஒன்று தெரிகிறதே….
வானம் ஒன்று தான்…. பூமி ஒன்று தான்…..
வாழ்ந்து பார்த்து வீழ்ந்திடலாமே….
தொட்டு தொட்டு போகும் தென்றல்….. தேகமெங்கும் வீசாதோ…..”
குருமூர்த்திக்கு இப்போதான் சற்று நம்பிக்கை வந்தது….. “எதையும் முகத்தில் காட்டாத பாவம்…….. எப்போதும் வேளையில் கவனம்….. அந்த வயதிற்கே உரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருந்த…. கைலாஷிடம் இப்படி ஓர் தாக்குதலை அவர் எதிர்பார்க்கவே இல்லை……. அதனால் வந்த மகிழ்ச்சியில் கண்ணில் நீர் நிறைந்தது குருமூர்த்திக்கு.
இப்படி தன் மகன் ஆனந்தமும்…. ஆர்பாட்டமும்மாக… இருக்க வேண்டும் என எத்தனை நாள் நினைத்திருப்பேன்…… இப்போது இதை அவனில் பார்க்கும் போது எப்பாடு பட்டாவது இந்த திருமணத்தை நடத்திக் கொடுக்கவேண்டும் என்ற உறுதி பிறந்தது குருமூர்த்திக்கு.
கைலாஷிற்கு இது எப்படி சாத்தியம் ஆனது என்ற எண்ணம் தான்….. தான் யாரிடமும் சொல்லவில்லை,, ஏன் எனக்கே கூட இப்படி நடக்க வேண்டும் என்ற கற்பனை இல்லை….. ஆனால், எல்லாம் சொல்லி வைத்தாற்போல் தானாகவே நடக்கிறது…… என்ற எண்ணம் தான்.
இதை எப்படி ஏற்பது என்ற எண்ணம் வந்து போனது…. எப்படி வெளிப்படுத்துவது என தெரியவில்லை….. தனது எமஹா…. பைக்கை எடுத்துக்கொண்டு பறந்தான்… பெசன் நகர் பீச் சாலையில் அந்த ஏகாந்த இரவில்…..
ஆம்… தந்தை சொல்லிய உடன்….. அவரிடம் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவன்…… உண்டு முடித்து உறக்கம் வராமல்…… ஒரு வித ஆனந்ததில் இருந்தான்…..
யாரிடமாவது இதை ஷேர் செய்ய வேண்டுமென தோன்றியது….. காயத்ரியை பற்றி புகழ தோன்றியது…. கால் தரையில் இல்லாது பறப்பது போலே உணர்ந்தான்…. அப்போது தான் தன் வண்டியில் பறந்தான்…..
அந்த கடற்கரை மணலிலே வண்டியை செலுத்தினான் கடலை நோக்கி….. அது ஒரு கலை…. கடல் மணலில் வண்டி ஓட்டுவது…. போலீசார் என்னும் தடையை ரூபாய் நோட்டாள் சரிக்கட்டினான்.
நாளை பௌர்ணமி…… நிலவும் அலையும் விளையாடிக் கொண்டிருந்தது….. நடுநிசியில்…… கடலின் பேரொளி…… அந்த நிலவை தொடுவதே எனது வேலை என மேலே மேலே எழும்பி ஓய்ந்தது…..
நிலவோ அந்த அலையிடம் கண்ணாமுச்சி விலையாடிக் கொண்டிருந்தது…. கைகட்டி அதனை வேடிக்கை பார்த்தான்….. கைலாஷ்….
மனதில் அவ்வளவு உற்சாகம்….. கூடவே காயத்ரியை பற்றிய எண்ணம் வலுக்க தொடங்கியது….. என்னை அவளுக்கு பிடிக்குமா…. என் நேசம் அவளுக்கு தெரியுமா….. எப்படி அவளிடம் சொல்வது எனது நேசத்தை….. என்று பலவாறு யோசனை அவனிற்கு….
அப்போது தான் தோன்றியது அவளை பற்றி ஒரு விவரமும் தான் அறிந்திருக்க வில்லை என…… நாளை தான் நேரில் செல்கிறேனே பேசிவிட வேண்டும் எல்லாவற்றையும்….. என நினைத்தான்….
ஒருவாரு தன் மனதை சமன்படுத்தி….. அந்த ஈர மணலில் மல்லாந்து படுத்து நிலைவை பார்த்திருந்தான்…. ஏதோ தனக்கு அது பலமும் நம்பிக்கையும் தருவதாக உணர்ந்தான்……
அதே நிறைவ்வுடன் தன் வீடு நோக்கி பைக்கில் சென்றான் …… நாளையை விடியைளை எண்ணி கற்பனையில் சென்றான்.
அங்கே காயத்ரிக்கு….. கல்யாணி சொல்லி இருந்தார்… “நாளை உன்னை பெண் பார்க்க வருகிறார்கள்” என அவ்வளவே…….
காயத்ரி “என்னுடைய எல்லா கண்டிஷன்னும் சொல்லிட்டிங்கள்ள……” என்ற கேள்விக்கு….
கல்யாணி “முதலில் பார்த்து செல்லட்டும் பிறகு பார்க்க்கலாம்….” என்றுவிட்டார்.
காயத்ரிக்கு இதை எதில் சேர்ப்பது என தெரியவில்லை…. “சரி, நாமே சொல்லிவிடுவோம்…” என்ற எண்ணம் வந்தது.
ஊரில் இருந்து கல்யாணியின் அண்ணன் அண்ணி மட்டும் அழைக்கப் பட்டிருந்தனர்….. வேறு யாருக்கும் தகவல் சொல்லவில்லை கல்யாணி….. தன் பெண்களை கூட தவிர்த்திருந்தார்……
சுப்ரமணியம் கூட சொன்னார்….. “என் தம்பி ஷண்முகத்திற்கு சொல்” என ஆனால் காதிலே போட்டுக் கொள்ளவில்லை கல்யாணி…..
தான், வரவழைத்தாலும் தக்க மரியாதை கிடைக்காது என எண்ணி அமைதியானார்……
அழகாக விடிந்தது மறுநாள்…… கல்யாணி அனைத்தையும் சரியாகவே செய்து கொண்டிருந்தார்….. அமைதியாக தயாரானது வீடு….. காயத்ரி மட்டும் சற்று மங்கி தெரிந்தாள்….
கல்யாணி அதனையும் கவனித்து… சரி செய்தார், தனது அண்ணியை காயத்ரியின் அருகில் விடவில்லை…. அவர் ஏதாவது சொல்லி அவளை குழப்பி விடுவார்……. என எண்ணி சமையல் அறையிலேயே வைத்திருந்தார்.
காயத்ரியிடம் “இந்தா…… இந்த புடவையை கட்டிக் கொள்…. இது தான் உங்க அக்காக்களுக்கு மாப்பிள்ளை பார்க்க வரும் போது கட்டிக் கொண்டது…” என கூறி ஒரு பழைய பட்டு புடவையை தந்தார்.
பழைய புடவை என சொல்ல முடியாத படி.. நன்றாக பராமரித்து புதிது போல் தான் இருந்தது…….. காயத்ரிக்கு பார்த்த உடன் பிடித்துவிட்டது……. தன் அம்மாவை கன்னத்தில் கிஸ் செய்து… “தேங்க்ஸ் ம்மா….” என்றாள்.
காயத்ரிக்கு கொஞ்சம் பழமை விரும்பியும் கூட….. தன் அம்மாவிடம் எப்போதாவது புடவை கட்டும் சமயம் “அம்மா… உன்னோட கல்யாண சாரி கொடு நான் கட்டிக்கிறேன்…..” என்பாள்…. “உன்னோட அந்த கெம்புக்கல்…. அட்டிகை எனக்கு தான் வேண்டும்…” என்பாள்.
அவளின் அக்காக்கள் கூட “ஏண்டி….. கட்டினா….., நல்ல லுக்கே….. இருக்காது…… இப்போ எல்லாம் எவ்வளோ வெரைட்டி வந்திருக்கு…..” என்பார்கள்.
ஆனால் காயத்ரிக்கு அந்த பழைய புடவைகள் மேல் ஒரு மோகம் உண்டு “போக்கா………பழைய பட்டு புடவை எவ்வளோ சாப்ட்…… என்ன கலர் காம்பினேஷன்…..” என ஆசையாக கூறுவாள். அதனால், அவளிடம் இந்த மலர்ச்சி…. அதை வாடாமல் பார்த்துக் கொண்டார்…. கல்யாணி.
கைலாஷிடம் இருந்து ஓர் அமைதியான புன்னகை மட்டுமே வந்தது, தனது மலர்ச்சியையும் , மகிழ்ச்சியையும் கூட அவன் தனது முகத்தில் காட்டவில்லை….
டார்க் பெர்புள் கலர் புல்ஹன்ட் பார்மல் ஷர்ட்…… ஹல்ப் வைட் கலர் பேன்ட்…… கிளீன் ஷேவ்….. கூடவே ஓர் ரேபான் கூலர் அவ்வளவே…..
இது அனைத்தையும் விட அவனின் அமைதியான புன்னகை…… அனைத்து நிறைவையும் அவனிடம் கொண்டுவந்தது…..
கைலாஷ் வீட்டிலிருந்து…… கைலாஷ், குருமூர்த்தி, குருமூர்த்தியின் அண்ணன்,அண்ணி…. குருமூர்த்தியின் தங்கை மகள், மாப்பிள்ளை, குழந்தை….. என அவர்கள் சார்பில் ஆறு பேர் வந்திருந்தனர்…..
அமைதியாக வரவேற்று பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்….. காயத்ரி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை…. தானே அனைவரையும் வரவேற்றாள்.
காபி தட்டுடன் அவளே வந்து நின்றாள்…… குருமூர்த்திக்கு இந்த அணுகுமுறை பிடித்திருந்தது…… அவர் தான் இரண்டொரு வார்த்தை பேசினார்….. காயத்ரியிடம்.
காப்பியுடன் காயத்ரியை பார்க்கவும்…. இவளா நான் பார்த்த பொண்ணு என அசந்து போனனான்…. கைலாஷ்…. கை நிறைய வளையல்…. தேன் கலர் பட்டு புடவை, பூ….. ஒரு இயல்பான பார்வை…… கள்ளமில்லாத சிரிப்புடன் கைலாஷை ஈர்த்தாள்.
எப்போதும் நம் மனதுக்கு பிடித்தவர்கள் அழகு…. அதிலும் நமக்காக…. அலங்கரித்துக் கொள்ளும் போது… பேரழகு…..
கைலாஷ் பார்த்தான் இது சரிப்பட்டு வராது என எண்ணி….. காயத்ரியை நோக்கி “ஹலோ காபில சுகர் கொஞ்சம் கம்மியா இருக்கு….. இன்னும் கொஞ்சம் கிடைக்குமா….” என்றான். அனைவர் முன்னிலையிலும்……
அனைவருக்கும் சிரிப்பு…. ஆனாலும் பெண்ணிடம் தனியே பேச முயல்கிறான், என தெரிந்து….. பெரியவர்கள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டு அமைதியாகி விட…..
கள்ளமில்லாத கல்யாணியின் அண்ணி….. “அதுக்கென்ன மாப்பிள்ள நான் போட்டு தரேன்….” என ஒரு அடி எடுத்து வைக்க. கல்யாணி கைபிடித்து தடுத்து….. “காயத்ரி…” என அழைக்க…..
காயத்ரி…. “ம்…..” என்றவள். கைலாஷிடமிருந்து டம்பளரை வாங்கிக் கொண்டு….. நகர. பின் தொடர்ந்தான் கைலாஷ் …… இதை எல்லாம் பார்த்தும் பார்க்காதது போல் பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
கல்யாணியின் அண்ணி நிலை தான் இப்போது மிகவும் மோசம்…. பாவம் அவர்க்கு என்ன சொல்லவதென்றே தெரியவில்லை. தன் கணவரை பார்த்து நின்றார்.
அவரும் அமைதியாக இரு என்னும் விதமாக கண் மூடி திறந்தார்.
காயத்ரியை தொடர்ந்து சென்றவன் அவள் சுகர் டப்பா எடுக்கவும்….. “ஹே…ய், போதும் போதும் அதெல்லாம் சரியா தான் இருக்கு….. உன் கூட பேச தான் வந்தேன்….” என விளம்பினான்.
காயத்ரி அங்கிருந்த துணி காயவைக்கும் பால்கனிக்கு அழைத்து சென்றாள் அவனை…..
கட்டம் போட்ட இரும்பு சட்டை அணிந்து கொண்டு….. தன் நெஞ்சில் மணி பிளின்ட்டையும் சூடிக் கொண்டு நின்றது அந்த பால்கனி….
கைலாஷ்…” வேல்….. எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு…… சொல்லு…. அடுத்த முகூர்த்தத்தில் கூட நான் தாலி கட்ட தாயார்….. நீ… சொல்லு… சாரி நீங்க சொல்லுங்க…. என்னை… பிடிக்குதா….. நான், உனக்கு மேச் ஆவேன்னு …. நினைக்கிறியா…..” என கம்பீரமாய் ஆரமித்த அவன் குரல்… போக போக ஒரு யாசிப்புடன் முடிந்தது…
காயத்ரி விழி விரித்து….. உதட்டில் மறைத்த புன்னகையுடன் தான் கைலாஷை பார்த்திருந்தாள்…… அவளிற்கு அவர்களின் இரண்டாம் சந்திப்பு தான் நியாபாகம் வந்தது…..
எவ்வளவு கம்பீரமான குரல் என முதலில் அவன் குரலில் தான் ஈர்க்கப்பட்டாள்…… இப்போது அது தன்னிடம் யாசிக்கிறது….. என்னும் போது…. ஒரு கர்வம் வந்தது அவளுள்…. அவளை அறியாமலே…..
காயத்ரிக்கு அவனிடம் விளையாட தோன்றியது…. “ம்….. எனக்கு அம்மா சொன்ன ஓகே தான்…..” என்றாள் அவனை வெறுப்பேற்றும் எண்ணத்துடன்.
இப்போது அவளிர்க்கு தனது கண்டிஷன் எல்லாம்….. நினைவில் இல்லை போலும்…..
கைலாஷிற்கு “அப்பாடா….. “ என உணர்ந்தவன்…… அதை காட்டாமல் “என் மாமியார்க்கு என்னை ரொம்ப பிடிக்கும்….. சோ, அடுத்த மூகூர்த்தம் கன்போர்ம்……” என்று சிரித்தவாறே கூறியவன்.
எதிர்பாரா நேரம் அவளின் கையை பிடித்து தனது கார்டை அவளிடம் தந்தவன் “கால் மீ….” என சைகையில் சொல்லியவாறே….. ஹாலிற்கு விரைந்தான்.
அவன் வந்ததை….. ஹாலில் பெரியவர்கள் அனைவரும் முன்பு போலவே கண்டும் காணாமலும் பேசிக் கொண்டிருந்தனர்…….
சிறுது நேரம் கழித்து உறவுகள் முன்னிலையில்….. குருமூர்த்தி “கைலாஷ் என்னப்பா பெண்ணை பிடித்திருக்கா…..” என சிரித்துக் கொண்டே வினவினார்….
உடனே அவனும் “எனக்கு டபுள் ஒகே ப்பா….. ஆனா, காயத்ரியோட அம்மாக்கு என்ன பிடிக்குதான்னு கேட்டு சொல்லுங்க…..” என்க…..
காயத்ரிக்கு அய்யோ என்றானது…….. பெரியவர்கள் அனைவரும் சிரிக்க….. காயத்ரி பாவமாக அவனை பார்க்க….. “இல்ல ப்பா… காயத்ரி தான் அப்படி சொன்னாங்க…… சோ, கேளுங்க….” என்க.
நல்ல வேலை கல்யாணியின் அண்ணன் தாமோதரன் தான் “அம்மா… காயத்ரி நீயே பதில் சொல்லிடும்மா….” என்றார். சிரித்துக் கொண்டே…..
காயத்ரி இப்போது தெளிவாக….. “என் கன்டிஷனுக்கு ஓகே என்றாள்…. எனக்கு சம்மதம் தான்….” என்றாள் ஒரே போடாக..
கல்யாணிக்கு முகம் பீதியில் சிவந்தது….. எவ்வவளவு கஷ்ட்டப்பட்டு நான் இதை நடத்திக் கொண்டிருக்கிறேன் இவள்…… என ஆத்திரம் வந்தது.
காயத்ரிக்கு தெரியும் தன் அம்மாவை பற்றி….. அதனால் “என்ன கைலாஷ்… நான் ஒகே னா…. என் கண்டிஷனும் ஒகேன்னு சொல்லிடுவீங்க…… தானே….” என்றாள்.
கைலாஷிற்கு என்ன அது, தான்… தனியே அவளிடம் என்னை பிடித்திருக்கிறதா என கேட்டதற்கு….. ஒன்னும் சொல்லாமல் இருந்தவள்…. இங்கு இப்போது… ஏதோ சொல்லுகிறாள்….. என்று ஒரு ஆர்வம் கூடியது அவ்வளவே….
மற்றபடி தன் பெற்றோரை உடன் வைத்துக்கொள்ள கேட்ப்பாள்….. அல்லது வேலைக்கு செல்வேன் என சொல்லுவாள் என தான் நினைத்தான் கைலாஷ்…….. இதெல்லாம் அவனிற்கு பெரிதாக தெரியபோவதில்லை…. அதனால்……
கைலாஷ் ஹாலில் இப்போது தனி சோபாவில் அமர்ந்திருந்தான்….. இப்போது அவனிற்கு சுவாரசியம் கூடியது….. நன்றாக சாய்ந்து அமர்ந்து, கால் மேல் கால் போட்டுக் கொண்டு…” சொல்லு காயு….. வித் மை ப்ளஷர்….. என்னன்னு சொல்லு….” என்றான் கர்வமாக……..
காயத்ரி அமைதியாக…. “அது ஒண்ணுமில்ல கைலாஷ்…. கல்யாணம் முடிந்த உடன் நீங்க அப்புறம் அங்கிள் இரண்டு பேரும் கனடாவிலேயே செட்டிலாகனும்…. அவ்வளவு தான்…..” என்றாள்.
அப்பா….. எவ்வளோ பெரிய விஷயம்….. ரொம்ப சாதரணாமாக சொல்லுகிறாள்…. என்னை அவளிர்ற்க்கு விலை பேசுகிறாளா…. நான் இவளிடம் விழுந்து விட்டேன் என்றதும் பேரம் பேசுகிறாளா….. என்று அவனில் எழுந்த எண்ணத்தை அவனால் தடுக்க முடியவில்லை.
இவ்வளவு நேரம் அவன் முகத்தில் தெரிந்த சந்தோஷ ரேககைகள் எல்லாம்…. மறைந்துக் கொண்டன…… அமைதியான முகம்…. எதற்கும் அலட்டிக் கொள்ளாத முகம் இப்போது அவனிடம் வந்தது…..
இது எனக்கு பழக்கம் தான்….. எனக்கு உறவுகள் நிலைக்காது தான்….. தனிமை தான் எனது வரம் என்று நொடியில் தீர்மானித்துக் கொண்டான்.
இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என உணர்ந்தவன் “அப்பா…. போலாம்ப்பா… டைம் ஆச்சு…..” என்றான்.
குருமூர்த்தி “இருப்பா… அந்த பொண்ணு ஏதோ விளையாட்டுக்கு சொல்லுது…. இத போய் நீ பெருசு பன்றியே…. இரு நாங்க பேசி சொல்றோம்….” என்றார் பதறாமல்.
அனைவர் முகமும் விழுந்து விட்டது….. யார் பேசுவது என்ற நிலை….. அமைதியாகவே இருந்தனர்.
கல்யாணி தான் “என்ன பேசற காயத்ரி…. அதெல்லாம் அப்போ…. இன்னுமா அத நினைத்து சொல்லிக் கொண்டிருக்கிறாய்…… அதெல்லாம் விடு….. யாரும் இருக்க போறதில்ல கனடால…. இது தான் நம்ம இடம்…. நானும் அப்பாவும் கூட இங்க தான் வரப்போறோம்….. “ என பேசி கொண்டே போனார் கல்யாணி.
இங்கே என்ன நடக்கிறது என பார்த்திருந்தனர் கைலாஷ் வீட்டினர். தங்களை கூப்பிட்டு வைத்து அவமானப்படுத்துவதாக தான் குருமூர்த்தி உணர்ந்தார்.
குருமூர்த்தி சுப்ரமணியை பார்த்து…. “எப்படி உன் பெண்ணிற்கு திருமணம் செய்கிறாய் என பார்க்கிறேன்…..” என்றார் குரூரமாக.