மழை-11
சூரியன் தன் பொற்கரங்களை கொண்டு பூமியில் தன் ஆதிக்கத்தை துவங்க , பால் மற்றும் பேப்பர் போடும் பையன்களும் தங்கள் பணியை துவக்க ,நடை பயிற்சி மேற்கொள்பவர்கள், தங்கள் பயிற்ச்சியை மேற்கொள்ள காலை பொழுது அழகாக விடிந்தது..
சத்யா ஒரே நாளில் காதல் ஆற்றில் பாறை மேல் இருந்து டைவ் அடிக்க கற்றுக்கொண்டதால், அவன் வரு போன் காலுக்காக வெயிட்டிங்.. சார், மேடம் முகத்தை பார்த்து தான் முழிப்பாராம், அதுவும் வீடியோகாலில் தான் மேடம் மதிமுகத்தை காண்பாராம், போட்டோவில் பார்க்கமாட்டாராம்..
\\\சத்யா ஒரே நாள்ல உன் அலும்பல் தாங்கலடா சாமி, அந்த மன்மதனே உன் அட்டகாசத்துல ஜெர்க் ஆகிட்டாரு, அவரோட கரும்பு வில்லை வைச்சு உன் மண்டைல நச்சுனு ஒன்னு போடா சொல்லறேன்,அப்போ தான் நீ அடங்குவ////..
காலை ஏழு மணிக்கு தன் அன்னையிடம் பாட்டு வாங்கிக்கொண்டே துயில் கலையும் வர்ஷி, இன்று யாரும் எழுப்பாமல், காலை ஜந்து அரை மணிக்கு எழுந்து , குளித்து எந்த வித அலங்காரமும் இல்லாமல் , தற்பொழுது தான் மலர்ந்த தாமரை போல் காட்சியளித்தாள்.. று இரவு அவன் பேசியேச்சுக்கள் செவியில் ஒலித்துக்கொண்டிருக்க, அவன் அலைபேசி வழியாக தந்த முத்தத்தின் தாக்கத்தில் தாமரை போல் இருந்தவள் முகம் செந்தாமரை ஆக ஜொலிக்க, அலைபேசியை எடுத்து உள்ளம் படபடக்க ,முகம் வியர்க்க , நெஞ்சு குழி ஏறி இறங்க , விரல்கள் நடுங்க அவனை அழைத்தாள்..
முன்னும் அவனுக்கு கால் செய்து பேசிருக்கிறாள் தான், அப்பொழுது இந்தர் தன் காதலை சொல்லவில்லை, அந்த சூழ்நிலை வேறு, இப்ப அவன் ஆசையைை சொன்ன பிறகு, அவள் பதட்டமாக உணர்ந்தாள்..
சத்யாவின் மொபைல் அழகாக
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும்மறந்து விட்டேன் – உந்தன்
கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக்
கண்டதும் கண்டு கொண்டேன் – இன்று
கழுத்து வரை இன்று காதல் வந்து இரு
கண்வழி பிதுங்கி நின்றேன்!!!
என்று இசைத்தது..வர்ஷிக்காக ப்ரத்யோகமாக வைத்துருக்கும் பாடல் இது..
/// ஒரே நாளில் இவ்வளவு மாற்றமா!!! கலக்கறீங்க கலெக்டர் சார்///
கண்ணை திறக்காமல் போனை துழாவி எடுத்து, எப்போதும் உள்ள வழக்கமாக கை தானாக பச்சை நிறக் குறியீடை அழுத்தித்தியது ..
“குட் மார்னிங் இந்தர்”, என்ற குரலில், குதூகலமாகி கண்விழித்து ,
“குட் மார்னிங்,ஹாவ் எ ஸ்வீட் அண்ட் ரொமாண்டிக் டே வரு டார்லிங்” என்று அவள் இதழை பார்த்து கொண்டே நச் என்று ஒரு இச் வைத்தான்..
///ரொம்ப ஓவரா தான் போறீங்க சத்யா சார்////..
நேற்று இரவு முத்ததில் இருந்தே முத்தத்தில் முகம் சிவக்க, உதடு ்க நின்றிருந்த தோற்றம் அவனை ஏதோ செய்தது..
ஐஸ் கிரீம்தொண்டையில் சில் என்று வழுக்கி இறங்கும்போது எப்படி தேகம் சிலிர்க்குமோ, அதே போல்
“வருமா” என்ற அவனது ஆழமான அழைப்பு , அவள் தேக்கத்தின் அடி ஆழம் வரை சில்யென்று அவளை சிலிர்க்க செய்தது!!
பதிலுக்கு அவள் குரலும் “ம் ம் ம்” என்று நெகிழ்ந்து ஒலித்தது…
“உனக்கு என்னை பிடிச்சிருக்கா வரு”என்றவன் குரலில் உருகிவயள்..
” இது என்ன கேள்வி இந்தர், உங்களுக்கு தெரியாதா?
“தெரியும்டா, ஆனாலும் நீ சொல்லணும்னு ஆசையா இருக்கு,என் செல்லமில்ல,சொல்லுடா ப்ளீஸ்”!!
அவன் கொஞ்சவும் இவளுக்கு உருகிவிட்டது, ” இந்தர் நீங்க என் உயிர்,எனக்கு என்ன விட உங்கள தான் பிடிக்கும் ” என்றாள்..
பிடித்திருக்கா என்ற கேள்வி அபத்தமாக தெரியலாம்.. ரொம்ப பிடிச்சிருக்கு பதிலும் அபத்தமாக இருக்கலாம், அபத்தங்களும்,அனர்த்தங்களும் தான் காதல் மற்றும் வாழ்க்கையை சுகமாக கொண்டு செல்கின்றது..
அவள் முகம் சுருக்கி சொன்ன விதம்,அவனுக்குள் வேதியல் மாற்றத்தை ஏற்படுத்த, அவளை பார்வையாலே கடித்து நின்றுகொண்டிருந்தான், அவளும் சளைக்காமல் அவனுக்கு பதில் பார்வை குடுத்துகொண்டிருந்தாள்…
பார்வை,பார்வை வெறும் பார்வை மட்டுமே!!!
வாய் மொழியா உணர்த்தா உணர்வுகளை,விழி வழியாக உணர்த்திக்கொண்டிருந்தனர்!!!
///ஒருவேளை நோக்கு வர்மம் கத்துக்கறாங்களோ///
கடிகார முட்களின் ஒலியில் நிகழுவுக்கு வந்த சத்யா,வர்ஷியிடம் ,
“தேங்க்ஸ்டா செல்லம், எனக்காக காலையிலே எழுந்து 6 மணிக்கு எல்லாம் பிரெஷா குளிச்சு தரிசனம் குடுத்ததுக்கு,ஆனா எதற்கும் நீ ரூம் விட்டு ஏழு மணிக்கே வெளிய போ” என்றான் குரலையும் முகத்தையும் தீவிரமாக வைத்துக்கொண்டு..
வர்ஷியும் இவ்வளவு நேரம் நல்லா தான பேசினான்,அதற்குள் yஏன் இப்படி மூஞ்சியை இறுக்கமா வைச்சுருக்கோன் என்று யோசித்தவாறே,” ஏன் இந்தர் 7மணிக்கு முன்னே வெளிய போகக்கூடாது?” என்று அப்பாவியாக வினவினாள் ..
அதற்க்கு சத்யா இதழில் ஒட்டவைத்த குறும்சிரிப்புடனும்,கண்களில் ஒளிர்ந்த கள்ளத்தன்மையுடனும்,” நீ ஏழு மணிக்கு முன்னால ரூமை விட்டு வெளிய போனா,அத்தை உனக்கு தூக்கத்துல மேக் அப் போட்டு நடக்கற வியாதி இருக்குனு நெனைச்சு பயந்துட போறாங்க” என்று கூறி விட்டு உரக்க நகைத்தான்..
அவன் சொன்னதை கேட்டவளின் முகம் அப்படியே சுருங்கிவிட்டாலும் , அவன் மனம் விட்டு சிரிப்பதையே பார்த்திருந்தவள்,இந்த சிரிப்புக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்தாள்..
அவளிடமிருந்து எந்த பதிலும் வராததால், தன் சிரிப்பை நிறுத்தி விட்டு அவளை உற்று நோக்கி “என்னடா கோபமா” என்றான்..
“இல்லைபா, நீங்க சொன்ன மாறி நான் ஏழு மணிக்கு முன்ன வெளியே போனேன், அம்மா மட்டும் இல்லை அப்பாவும்,கிஷோரும்கூட தூக்கத்துல நடக்குற வியாதினு தான் நினைப்பாங்க..
உங்களுக்காக எழுந்தேன்னு சொன்னா,அம்மா என்ன எழுப்பறதுக்காக எஸ்ட்ராவா குடிக்கற ஜூஸ் குடிக்க வேண்டாம்னு சொல்லுவாங்க, அப்பா அம்மா பொண்ணு போர்களத்துலருந்து தப்பிச்சி நிம்மதியா பேப்பர் படிக்கலாம்னு சொல்லுவாரு, கிஷோர் ஏற்கனவே உங்களுக்கு ரசிகர்மன்றம் ஆரம்பிக்கலாம்னு நினைப்பவன் ,இப்போ உண்மையாவே ஆரம்பிபிச்சி அப்பா அம்மாவை உறுப்பினரா சேர்த்துடுவான், அவங்களும் சந்தோஷமா சேருவாங்க, நான் மட்டும்தனியா இருப்பேன்” என்று சோகமாக சொன்னாள்.
அதுவரை அவள் பேச பேச அவளின் உதட்யசைவியும், தொண்டை குழி ஏறி இறங்குவதையும்,முகத்தில் வந்துபோன பாவனைகளையும், தலை ஆட்டி ஆட்டி பேசும் அழகினையும் ரசித்துக்கொண்டிருந்தவன், அவள் சோகமாக இருப்பதை கண்டவன்,,
” வருசெல்லம் இங்க பாருடா ,யாரு எகு சப்போர்ட் பண்ணினாலும், நான் எப்பவும்கு மட்டும் தான் சப்போர்ட், உனக்கு மட்டும் தான் நான் சொந்தம் முழுசா, ம் ஓகேவா” இதை மட்டும் எப்பவும் நியாபகம் வைச்சுக்கோ!!!
“என் செல்லம் எப்பவும் சிரிச்சிகிட்டே இருக்கணும், அப்போ தான் நானும் ஹாப்பியா இருப்பேன் ஓகேவா, இப்போ சிரிடா..” என்றதும் அவனை பார்த்து மெல்ல மெல்ல அழகாக இதழ் விரித்து அவனை மயக்கும் புன்னகை ஒன்றை சிந்தினாள்!!
அதில் மயங்கியவன், “இப்போ நீ மட்டும் நேர்ல இருந்தா,என்னை மயக்கிய இதழ்க்கு அழுத்தமான ஆழமானபரிசு குடுத்துருப்பேன்” என்று குறும்பு குரலில் கூறி கண்ணதிடத்தான்..
அவன் எந்த பரிசை சொல்கிறான் என்றுணர்ந்தவளின் முகம் செந்தாமரையாக மாறியது..
அவள் முகத்தையே ஆசையோடு பார்த்துக்கொண்டிருந்தவன், வெளியில் கேட்ட ஒலியில், நேரத்தை பார்த்துவிட்டு ,”செல்லம் டைம்ஆச்சுடா கிளம்பனும், நான் நைட் கால் பண்றேன், நடுவில் மெசேஜ் பண்றேன்சரியா ,நீயும் ஜாக்கிரதையா உன் கறுப்பி கூட பத்திரமா காலேஜ்க்கு போய்ட்டுவா, பைடா குட்டி”,
“ம்ம்,ஓகே இந்தர் நீங்களும் கேர்புல்லா ஆபீஸ் போயிட்டு வாங்க, பை” என்று சொல்லி கால்லை கட் செய்யும் முன் அவசரமாக அவளுக்கு முத்தம் வைத்து விட்டு அவள் சகஜநிலை வருவதற்குள் கால் சுட் செய்து விட்டான் அந்த “காதல் கள்வன்”!!!
அப்டியே அமர்ந்து வர்ஷியுடன் பேசியதை சிறிது நேரம் நினைத்து பார்த்தவன், ஆபீஸ்க்கு நேரம் ஆவதை உணர்ந்து குளிக்க சென்றான்..
குளித்து டிரஸ் செய்து டைனிங் ஹாலுக்கு சென்றவன் வழக்கம் போல் அங்கு அமர்ந்திருந்த பெற்றோரை கண்டுக்கொள்ளாமல் தாத்தா பக்கம் உட்கார்ந்து,
“குட் மார்னிங் தாத்தா” என்றான்..
“குட் மார்னிங் சத்யா இன்னிக்கி என்ன எக்சர்சைஸ் பண்ண வரலை என்ன ஆச்சுப்பா”..
“ஒன்னும் இல்லை தாத்தா அசதில தூங்கிட்டேன்” என்று வேறு பக்கம் பார்வையை திருப்பி கொண்டு சொன்னவன் முகத்தை உற்று பார்த்தவர்..
“என்னப்பா இன்னிக்கி முகம் செம களையா இருக்கு,என்ன விஷயம்” என்றார்..
” இல்லையே எப்பவும் மாறி தான் இருக்கு” என்று சத்யா சொல்லும்போதே ,
அங்கு வந்த கங்காமா,”ஐயா சொல்றது சரி தான் உங்க முகத்துல ஏதோ வித்யாசம் தெரியுது “, என்றார்..
அதைகேட்டு மனதினுள் அவ்வளவு வெளிப்படவையாகவா தெரியுது என்று எண்ணிவயன், வெளிய “ஐயோ நீங்களுமாகங்காமா..அதை விடுங்க என்று மழுப்பியவன் இன்னிக்கி என்ன மெனு” என்று கேட்டான் ..
உங்களுக்கு பிடிச்ச “கேசரி, இட்லி ,மெது வடை, வெண்பொங்கல் சட்னி சாம்பார்” என்றார்,
“அதை முதலில் வைக்காமல் என் முகத்தை பற்றிய ஆராய்ச்சி முக்கியமா என்று கங்காமாவை திசை திருப்பி விட்டான்..”
இவர்கள் பேச்சை எல்லாம் ஓருவித வருத்தம் மற்றும் சின்ன சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாவின் பெற்றோர்..தங்கள் மகன் ப மகன் பேசவில்லை தங்களிடம் பேசவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், எப்போதும் தங்கள் முன் இறுக்கமாக இக்கும் இன்று சந்தோஷமாக இருப்பதை காணவும் அவர்களும் சந்தோஷமாக உணர்ந்தனர்..
கார்த்திக் “அப்பா” என்றழைத்தார்.
அதில் திரும்பி பார்த்த ராஜவேலு “என்னப்பா” என்றார்..
சத்யா மேரேஜ் ப்ரொபசல் பத்தி என்று சொல்லும்போதே சத்யாவின் முகம் கடினமாக மாறியது..அதை கண்டு கார்த்திக் அவசரமாக” அப்பா வர்ஷினி வீட்டில் பொண்ணு கேக்க எப்போ போலாம்” என்றார்..
“தாத்தா வர்ஷிக்கு படிப்பு முடியஇரண்டு மாதம் இருக்கு, அதுக்கு அப்புறம் எங்க மேரேஜ் பத்தி பேசிக்கலாம், அப்போ கூட நீங்க நான்,அத்தை மாமா மட்டும் தான் பேசறோம் “என்று சொல்லிவிட்டு கிளம்பி சென்றுவிட்டான்..
ராஜவேலுவிற்கு அவர்களை காண பாவமாக இருந்தது..
“கார்த்திக், லட்சுமி ரெண்டு பேருக்கும் சொல்றேன் “அவன் கொஞ்ச கொஞ்சமா தான் மாறுவான்,அதுவரை நீங்க கொஞ்சம் பொறுமையாக இருங்க” என்றார் ..
வர்ஷி வீட்டில், தன்னிடம் பாட்டு வாங்காமலே எழுந்து முக்கியமாக குளித்து விட்டு வந்த மகளை கண்டதும் வள்ளிக்கு மயக்கமே வந்துவிட்டது ..
அதை உணர்ந்து கொண்ட வர்ஷி, “அம்மா நான் தான் தாயே உன் மகள் வர்ஷினி,என்னை பார்த்து மயக்கம் வரணும் ?
ஒரு பிள்ளை எழுந்து குளிச்சது தப்பா அய்யகோ!!!இதை கேக்க யாருமே இல்லையா” என்று நாடகபாணியில் பேச,
“ஏன் இல்லை நான் இருக்கிறேன் “என்று வந்தான் அவள் தம்பி கிஷோர்..
வந்தவன் அவளை பார்த்து விட்டு,” அம்மா என்னமா உன் பொண்ணு வில்லன் படம் மீனவர் ஆகிட்டா”..
“என்னடா சொல்ற,புரியற மாதிரி சொல்லு”
“இல்லாம அந்த படத்துல மீனா தூக்கத்துல நடப்பாங்க இல்ல, அது மாறி இவளும் தூக்கத்துல குளிச்சிட்டு வந்துட்டாளா??”என்றான்
“அப்படியும் இருக்குமோ” என்று வர்ஷியை பார்த்துக்கொண்டே யோசிக்க ஆரம்பித்தார் அவர்களது அன்னை..
இவர்கள் கிண்டல் செய்ய செய்ய டென்ஷன் கூடியது வர்ஷிக்கு…
நல்ல காலம் அப்பா ஆபீஸ் டுர் போய்ட்டார் இல்லைனா அவரும் அவர் பங்குக்லாய்ப்பார் தப்பிக்ச்சோம்டா சாமி என்று மனதினுள் நினைத்தவள், வெளிய சோகமாக முகத்தை வைத்து கொண்டு
“ஒரு நாள் அம்மாவ டென்ஷன் பண்ணாம நல்ல பிள்ளையா எழுந்தா பொறுக்காதே”..என்றாள்
அதற்க்கு கிஷோர் ” வர்ஷி இனிமே நீ சீக்கிரம் உன் மஞ்சத்தை விட்டு வரதா இருந்த முன்னாடி சொல்லிடு நாங்கள் ஷாக் ஆகாம இருப்போம்”என்று கூறி அவன் அம்மாவுடன் ஹய்-பை கொடுத்துக் கொண்டான்..
அதைகேட்டு வர்ஷி,” நான் இனிமே சீக்கிரம் தான் எழுந்துப்பேன்,ஏன்னா எக்ஸாமுக்கு படிக்கணும் இல்ல, அதனால ஷாக்க கம்மி பண்ணுங்க” என்றாள்..
அதை கேட்ட வள்ளி “எனக்கு ஒரு கிளாஸ் ஜூஸ் போட்டு குடிக்கற வேலை மிச்சம்” என்று சமையலை பார்க்க சென்றுவிட்டார்…
கிஷோர் மட்டும் வர்ஷியை பார்த்து யோசித்துக்கொண்டிருந்தான், அவன் தலையில் தட்டியவள்,
“என்னடாயோசனை பண்ற ஹம் “என்றாள்..
“இல்லை நீ படிக்கறதுக்காக சீக்கிரம் எழுந்திருக்க போறியா, இல்லை என் மாம்ஸ் கூட பேச சீக்கிரம் எழுந்திருக்க போறியா” என்ற அவன் கேள்வியில் மனதினுள் அவன் புத்திசாலிதனத்தை மெச்சியவள், வெளிய “இரண்டும் தான் “என்று விட்டு தன் அறைக்கு சென்றுவிட்டாள்..
கல்லூரி கிளம்ப வெகு தாமதமாக எழுபவள், லீவு நாளில் வீட்டில் வள்ளியை ஒரு வேலை செய்ய விடமாட்டாள் ..
சமையல் முதற்கொண்டு அனைத்தும் அவளே செய்வாள்..சிறு வயதில் தன்னால் முடிந்த உதவியை அன்னைக்கு செய்ய ஆரம்பித்த பழக்கம், பதினைந்து வயது முதல் விடுமுறை நாட்களில் அன்னைக்கு ஓய்வளித்து தானே செய்ய ஆரம்பித்தாள்,, அதை பார்த்து அவள் தம்பியும் அவளுக்கு உதவ ஆரம்பித்தான், வர்ஷா சமையல் செய்தால் இவன் காய் நறுக்குவது ,மசாலா அரைப்பது போன்ற வேலைகள் செய்வான், மறு நாள் அவன் சமைப்பான் வர்ஷா மேல் வேலைகளை செய்வாள், அப்பா உதவிக்கு வந்தால் அம்மா கூட டூயட் பாடுங்கன்னு அனுப்பிவிடுவார்கள்..
அந்த வீட்டில் ஆண் மகன் கிட்ச்சன் பக்கம் செல்லக்கூடாதுனு எந்த சட்டமும் கிடையாது..பல பெண்கள் சமையல் செய்வதை வீட்டு வேலை செய்வதை அடிமைத்தனமாக எண்ணுகிறார்கள்…அது அடிமைத்தனம் இல்லை,அதுவும் ஒரு கலை நம் உடம்பை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் கலை!!!
பெண்பிள்ளைகளுக்கு சமையல் வீட்டு வேலை கற்றுக்கொடுப்பதுபோல், ஆண்பிள்ளைகளுக்கும் சொல்லி குடுக்க வேண்டும்..தற்பொழுது உள்ள காலங்களிள் வேலை மற்றும் படிப்புக்காக வெளிஊர் மற்றும் வெளிநாடு செல்பவர்கள் ஏராளம்…சிறு வயதிலேயே அனைத்தயும் கற்றுக்கொடுத்துவிட்டால் அவர்கள் வெளிய சென்று கஷ்டப்படமாட்டார்கள் முக்கியமாக நல்ல உணவுக்கு!!
மழைவரும் …