அத்தியாயம் மூன்று :

 மாலை நெருங்கி விட்டது, நிகிலின் பெற்றோர்கள் வரும் பொழுது, “நிகில்” என்று ஆர்வமாக அம்மா வந்து அணைத்துக் கொள்ள,

“காவ்யா, முதல்ல மாப்பிள்ளையை அறிமுகப்படுத்து” என்று வரதராஜன் எடுத்து சொன்னார்.

ஸ்ம்ரிதியும், அவளின் மாப்பிள்ளை பரத்தும் நின்றிருப்பதை பார்த்தவன், “ஹாய்” என்று அம்மாவோடு சென்று வரவேற்றான்.

பரத்தும் கை பற்றி குலுக்க,  “எப்படியோ இந்தியா வந்துட்ட நீ! உன்னை வரவைக்க உன் கூட பேசாம இருந்தேனா, இங்க வந்த பிறகு நடந்தது எல்லாம் மறந்து போயிட்டேன்! இப்போ எப்படி சொல்ல?” என்று ஸ்ம்ரிதி வேறு கவலைப்பட,

“தங்கையோட கல்யாணத்துக்கு வரணும்னு தான் வந்தேன், இனிமே இப்படி எல்லாம் ப்ளாக் மெயில் செய்யாத, அப்புறம் நான் உன் கூட பேச மாட்டேன்” என்றான். வரவழைத்து விட்ட எரிச்சல் அவனின் குரலில் நன்கு தெரிந்தது.

“போடா அண்ணா! போடா!” என்று அசால்டாக சொல்லிய ஸ்ம்ரிதி, “நீங்க பேசிட்டு இருங்க, ஒரு ஃபைவ் மினிட்ஸ் வந்துடறேன்!” என்று சொல்லிப் போக,

பரத்திடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான் நிகில், தங்கைக்கு தேர்ந்தெடுத்து இருக்கும் மாப்பிள்ளை, இவனிடம் வரதராஜன் தெரிவிக்க மட்டுமே செய்தார், ஆலோசனைக் கேட்கவில்லை, அவருக்கு இந்தியாவோடு எந்த வகையிலாவது தொடர்பு வேண்டும்.

நிகிலிடம் முதலில் சொன்ன பொழுது அவன் அமெரிக்காவில் பிறந்த இந்தியப் பையன்களை சொல்ல, தன் மகனை கொண்டு அவருக்கு அவ்வளவு திருப்தியில்லை. அவனைப் போல ஒரு வேளை இருந்து விட்டால் என்ற பயம்.

அவருக்கு இந்திய மணமகன் தான் வேண்டும் என்று உறுதியாக இருந்தார். நிகில் எப்படியோ ஸ்மிருதி அமெரிக்க பிரஜையாக இருந்தாலும், இந்திய வளர்பாகத் தான் வளர்ந்தாள். நிகிலிடம் அதைக் கொண்டு வர அவர்களால் முடியவில்லை. ஆனால் ஸ்மிரிதி இந்தியப் பெண்களின் குண நலன்களே அம்மா காவ்யாவைக்  கொண்டு. அதனால் அங்கே வளர்ந்த பையன்களின் மன நிலையுடன் அவள் ஒத்துப் போகாவிட்டால் என்ன செய்வது என்று இங்கே இந்தியாவில் பார்த்தார். 

நிகிலுக்கு எப்படியாவது ஒரு திருமணம் செய்து விட வேண்டும் என்று பெற்றோர்கள் எவ்வளவோ முயல, “நோ ஐ அம் நாட் இன்ட்ரஸ்டட் இன் மேரேஜ்” என்று தெளிவாக இருந்தான். அசைக்கவே முடியவில்லை. திருமணம் வேண்டாம் என்பதால் தங்களின் மகன் இன்னும் பிரம்மச்சாரி என்று நம்பும் அளவிற்கு அவனின் பெற்றோர்கள் முட்டாள் கிடையாது.

ஆனாலும் தலைக்கு மேல் வளர்ந்த பையன் ஒன்றும் செய்ய முடியவில்லை, வருத்தப்படும் நிலையை எல்லாம் கடந்து விட்டனர். அதனால் மகளிற்கு பார்த்து பார்த்து மணமகனை தேர்ந்தெடுத்தார். மகளும் டாக்டர், மருமகனும் டாக்டர். திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் இந்தியாவில் இருக்கட்டும், பிடித்தால் இங்கே இருக்கட்டும், இல்லை என்றால் அமெரிக்கா அழைத்துக் கொள்ளலாம் என்பது அவரின் எண்ணம்.

ஆம்! இங்கே பரத்தின் குடும்பத்திற்கு பெரிய ஹாஸ்பிடல் இருந்தது. அவனின் அப்பாவும் பெரியப்பாவும் டாக்டர்கள், அவர்களின் மனைவி மார்களும் டாக்டர்கள். பிள்ளைகளும் டாக்டர்கள், அபிமன்யு, பரத் மற்றும் அவனின் தங்கை நிர்மலா. அதில் தப்பிப் போனவள் அக்ஷரா மட்டுமே .

ஸ்ம்ரித்தி திரும்ப வந்த போது நிகிலும் பரத்தும் மும்முரமாக பேசிக் கொண்டிருக்க, நிகில் ஒரு விஷயத்தை மும்முரமாக பேசினால் அது மருத்துவம் தொடர்பானது மட்டுமே, அதை அறிந்த ஸ்மிரிதி, “நிக், அவரை போர் அடிக்காதே, ப்ரொஃபஷன் பேசாதே, வேற ஏதாவது பேசு!” என்று சொல்ல,

“வேற எனக்குத் தெரியாது, என்ன பேசட்டும்?” என்றான். பேச்சு கொடுத்துக் கொண்டு இருந்தாலும் பரத்தை பார்வையால் அளந்து கொண்டிருந்தான். ஒரு தீர்க்கமான பார்வை, சொல்லப் போனால் அது பரத்திற்கு டென்ஷன் கொடுத்தது.  

இப்படியாக பேச்சுக்களை வளர்க்க மாலை ஐந்து மணி ஆகியது. நேரம் பார்த்தவள், “ஷ்ரத்தா வந்திருப்பா, லெட் மீ செக்” என ஸ்ம்ரிதி எழ, விட்டால் போதும் என்று “இரு நான் பார்க்கிறேன்” என்று பரத் முந்திச் சென்றான்.

    “ஷ்ரத்தா அவரோட மருமகள், அதாவது நீஸ், அக்கா பொண்ணு” என்று அண்ணனிற்கு பெரிய விளக்கம் கொடுத்தாள்.

ஆனால் ஈசியாக “பார்த்தேன், மார்னிங், அபிமன்யு கூட!” என்று அண்ணன் சொல்ல.

“ஸோ ஸ்வீட் நிக், என்னன்னே தெரியலை, ஷீ அட்ராக்ட்ஸ் மீ மோர்!” என்ற அவளிடம்,

“அது ஒண்ணுமில்லை, நீ மேரேஜ் பண்ணப் போற, நெக்ஸ்ட் ஸ்டேஜ் யு மே ப்ரோசீட் ஃபார் எ பேபி, அதுதான் உன்னை அவ அட்ராக்ட் பண்றா!” என்று நிகில் விளக்கம் கொடுக்க,

“உன்கிட்ட சொன்னேன் பார்!” என்று தன்னையே திட்டிக் கொண்டால் ஸ்ம்ரிதி.

அதற்குள் பரத் ஷ்ரத்தாவை அழைத்து வந்திருந்தான்… பள்ளி சீருடை கூட மாற்றவில்லை,

ஸ்ம்ரிதி அவளை அருகில் அழைத்து அமர வைத்தாள். “ஏன் இன்னைக்கு ரூ பேபி இன்னும் டிரஸ் மாத்தலை”

“அம்மாக்கு இன்னைக்கு க்ளாஸ் இருக்கு, லேட்டா வருவாங்க, அக்கா மாத்தி விடறேன் சொன்னாங்க, நான் வேண்டாம் சொல்லிட்டேன்”

“ஏன் மாத்திக்கலாம் தானே!”

“வேண்டாம்” என்பது போல தலையசைத்து சிரித்தாள்.

“என்ன கிளாஸ் அம்மாக்கு”

“அம்மாக்கு டேக் வான்டோ கிளாஸ், காலேஜ்லயே!” என்றாள் பெருமையாக.

“கத்துக்கறாங்களா?”

“ம்கூம், அம்மா சொல்லிக் குடுப்பாங்க! அம்மா அதுல சேம்பியன்!” என்று சொல்ல,

அதுவரை அசுவாரசியமாய் அந்த உரையாடலை கேட்டிருந்த நிகில் இப்போது கவனமாக கேட்டான்.

“டேக் வாண்டோ” என்றதும் மீண்டும் அவளின் நினைவுகள்,

காவ்யா “அது என்ன டேக் வாண்டோ” என்று கேட்க, “அதும்மா கராத்தே மாதிரி ஒரு தற்காப்பு கலை” என்று விளக்கம் கொடுத்தாள் ஸ்ம்ரிதி,

“ஓஹ்,  பேபியோட அம்மா கராத்தே சேம்பியனா” என்று காவ்யா பேச…

“எஸ், பாட்டி!” என்று ஸ்ரத்தா சொல்ல,

“அம்மா! நீ பாட்டியா!” என்று நிகில் சிரித்தான்.

“சிரிக்காதடா உனக்கு கல்யாணம் ஆகியிருந்தா இவ்வளவு பெருசு இல்லைன்னாலும் ஒரு குழந்தை என்னை பாட்டின்னு கூப்பிட்டு இருக்கும்!” என,

“அப்போ இந்த பேபியே கூப்பிடட்டும், இதுக்காக எல்லாம் நான் கல்யாணம் பண்ண முடியாது” என்றான் சிரிப்போடு.

“மா, உன் பையன் ஒரு கேவலமான ஜோக் சொல்லி அதுக்கு சிரிக்க வேறு செய்யறான்” என ஸ்ம்ரிதி சொல்ல,

“என்ன ஜோக் சொன்னாங்க?” என்பது போல ஷ்ரத்தா பார்த்து, “நான் பாட்டி கூப்பிட்டது ஜோக்கா?” என்று வேறு கேட்க..

“குழந்தைங்க முன்னாடி என்ன பேசணும்னு இல்லையா?” என்று வரதராஜன் கடிய,

அப்பா திட்டினது பெரிய விஷயமாக தெரியவில்லை, அவன் பேசியது அவனுக்கு தப்பும் கிடையாது. ஆனால் தன்னையே பார்த்திருந்த ஸ்ர்த்தாவின் முகத்தை அப்படியே ஏதோ ஒன்றாக கடந்து விட முடியாமல்,

 “பேபி, நீ குட்டி பேபி! இது என்னோட மாம், எனக்கு பெரிய பேபி! அதனால நீ பாட்டி சொன்னதுக்கு கிண்டல் பண்ணினேன்!”

“அப்போ நான் எப்படி கூப்பிடட்டும் அங்கிள்” என்று கேட்டவளிடம்,

“நான் அங்கிளா, எனக்கு வயசான மாதிரி இருக்கு, இவங்களை காவ்யா கூப்பிடு, என்னை நிக் கூப்பிடு, இவளுக்கு கல்யாணம் அகப் போகுது! சோ, வயசாகிடுச்சு. அதனால இவளை மட்டும் ஆன்ட்டி கூப்பிடு!” என்று ஸ்மிரிதியைக் காட்டி, “இஸ் தட் ஓகே!” என்று ஸ்ம்ரிதியையும் பார்த்தான்.  

“போடா அண்ணா!” என்று சொல்லி, ஸ்மிரிதி எழுந்து குழந்தைக்கு சாப்பிட கேக் எடுத்து வர, “நோ ஆன்ட்டி,  வேண்டாம்!” என்று மறுத்து அமர்ந்திருந்தாள்.

“நல்லா பேசுவா, ஆனா எதுவும் சாப்பிட மாட்டா!” என்றார் காவ்யா.

“சாப்பிடு பேபி!” என்று ஸ்ம்ரிதி என்று திரும்பத் திரும்ப சொல்ல,

“நோ, ஸ்ம்ரிதி டோன்ட் ஃபோர்ஸ், யார் குடுத்தாலும் சாப்பிடக் கூடாதுன்னு ஒரு நல்ல ஹேபிட் இருக்கும் போது, அதை பிரேக் பண்ணாத, லீவ் ஹர்!”  என்றான்.

அவன் சொன்ன விதத்தில் அடுத்த நிமிடம் ஸ்ம்ரிதி அதை எடுத்து வைத்திருக்க, பரத் அவனை ஆச்சர்யமாகப் பார்த்தான்.

“என்ன பரத்?” என்ற நிகிலிடம், “இந்த நாட்கள்ள. நான் பார்த்து ஒரு வார்த்தை கூட ஸ்ம்ரிதி இப்படி ஒத்துக்கவேயில்லை, நீங்க சொன்னதும் உடனே கேட்டுட்டா!” என,

“அதை அவன் கிட்ட கேட்கக் கூடாது, என் கிட்ட கேட்கணும்.. அவன் சொல்றதை கேட்கலை, அத ஜஸ்டிஃபை பண்ண பேசியே நிக் கொன்னுடுவான்!” என்று ஸ்ம்ரிதி ஒரு ஸ்டேட்மென்ட் கொடுக்க,

அதை பற்றியெல்லாம் நிகில் கவலைப்படவேயில்லை.. ஷ்ரத்தா தன்னையே பார்த்துக் கொண்டிருக்க, அவளைப் பார்த்தான்.

காலையில் தெரியவில்லை, இப்போது ஷ்ரத்தாவை ஊன்றி கவனிக்க, குழந்தையிடம் ஒரு ஈர்ப்பு.

“ரூ பேபி..” என்ற குரல் அதற்குள் வெளியில் இருந்து கேட்க,

“வர்றேன் மம்மா…” என்றவள் யாரிடமும் சொல்லாமல் வெளியில் விரைய, அந்தக் குரல்… நிக் ஆராய முற்படும் போதே ஸ்ம்ரிதி எழுந்தவள் வெளியே சென்று “உள்ள வாங்க!” என்று அக்ஷராவை அழைத்தாள்.

“இப்போ இல்லை, சம் அதர் டைம்” என்றாள் அக்ஷரா, முகத்திலும் வேலை செய்த அதீத களைப்பு,

“யு லுக் டையர்ட், வாங்க ஒரு ஃகாபி சாப்பிடுவீங்களாம்!” என்று சொல்ல,

“நோ ப்ளீஸ், நாட் நொவ்” என்று சொல்லி அக்ஷரா சென்று விட, கையசைத்து அம்மாவோடு ஷ்ரத்தாவும் செல்ல..

உள்ளே வந்தவள் “கூப்பிட்டேன், வரலை!” என்றாள் பரத்தை பார்த்து,

“வரமாட்டாங்க, ரொம்ப பிடிவாதம்!” என்றான்.

இவர்களின் சம்பாஷணையை பார்த்து, “யார் அது!” என்றான் நிகில்.

“இவரோட அக்கா, ஷ்ரத்தாவோட அம்மா!”

“வாட் இஸ் ஹெர் நேம்!” என்றான். “அக்ஷரா” என,

அவளா மனம் அதிர்ந்தது. ஒரு வேளை பார்ப்பேன் என்பதால் தான் உள்ளுணர்வு அவளை இந்த இரண்டு மூன்று நாட்களாக அதிகமாக நினைத்ததோ? ஆனால் ஊருக்குள் அக்ஷரா என்று நிறைய பேர் இருக்கக் கூடும்.

எப்படி இப்போது தெரிந்து கொள்ள.. இல்லை நிச்சயம் அவள் தான்! டேக் வான்டோ சேம்பியன் என்று கூட ஷ்ரத்தா இப்போது தான் சொன்னாளே!

“அப்போது நான் வருவேன் என்று தெரியுமா?”

முயன்று அமைதியாகக் காட்டிக் கொண்டு “என்ன பண்றா உங்க அக்கா?”

“காலேஜ்ல ரிசெர்ச் ஸ்காலரா வொர்க் பண்றாங்க!”

“என்ன பிரான்ச்?” என்றான், மனது படபடப்பாக என்ன பதில் வரப் போகின்றதோ என்று எதிர்பார்த்து இருக்க..

“ரோபோடிக் இஞ்சினியரிங்!” என்ற வார்த்தை விழுந்ததுமே அது அவள் தான் என்று நிச்சயம் ஆகிற்று. ஊப்ஸ் அவளை பார்க்கப் போகிறோமா?

“ஷ்ரத்தா அவ குழந்தையா?” என,

இதென்ன அவ சொல்றான் என்று பரத் நினைக்க.. காவ்யா திருத்தினார், “நிக்கி அவ சொல்லக் கூடாது!” என,

“லீவ் தட் மா வில் ரெக்டிஃபை” என்றவன், பதிலை எதிர்பார்த்து இருக்க, “எஸ், அவங்க பொண்ணு!”

“என்ன பண்றார் ஷ்ரத்தா அப்பா?” என்ற அடுத்த கேள்வி தனிச்சையாக வந்து விழுந்தது. எப்படி தன் கணவனை தேர்ந்தெடுத்து இருக்கின்றாள் என்று அறிய ஆர்வமாக இருந்தது. என்னை விட பெஸ்ட்டாக தேர்ந்தெடுத்து இருப்பாளோ?     

என்ன வென்று சொல்லுவான் பரத், அவனுக்கே தெரியாத போது, சங்கடமாகப் பார்த்தான்..

ஸ்ம்ரிதி அறிவாள், அக்ஷரா தன கணவனுடம் இல்லை என்று, ஆனால் இப்போது அதை பரத் முன்னிலையில் சொல்ல முடியாதவளாக, “நிக் எதுக்கு இப்படிக் கேட்கற?” என்றாள்.

“எதுக்கு கேட்பாங்க? தெரிஞ்சிக்க தான்” என்றவனுக்கு அதற்கு மேல் இருப்பே கொள்ளவில்லை, அது அக்ஷரா என்று தெரிந்த விட்ட போது, பார்த்தே ஆகவேண்டும் போலத் தோன்ற,

எழுந்தவன், “நீ அவளோட பேசுவியா?” என,

“என்ன நிக்கி? திரும்பத் திரும்ப அவ சொல்ற!” உடனே தன்னுடைய பேச்சை ஆங்கிலத்தி மாற்றி, “இட்ஸ் நாட் கமிங் ஃபார் மீ, லெட் மீ லெர்ன்” என்றவன், திரும்ப ஆங்கிலத்திலேயே தொடர்ந்தான்.

“நீ அவளோட பேசுவியா?” என,

“எஸ் நிக், இங்க வரமாட்டாங்க, இந்த ஷ்ரத்தா பேபி ஒரு ரெண்டு மூணு முறை அவங்க வீட்டுக்கு இழுத்துட்டு போயிருக்கா”

அதிலேயே விவரங்கள் அறிந்திருப்பாள் என புரிந்தது, “இன்னைக்கு என்னோட அண்ணா வர்றான்னு சொல்லியிருக்கியா?”  “எஸ் நிக், எதுக்கு இப்படிக் கேட்கற”

“எனக்கு ஒரு பொண்ணை அக்ஷரான்ற பேர்ல தெரியும். அங்கே யு எஸ் ல ஹையர் ஸ்டடீஸ் பண்ணினா” என,

“எஸ், அக்கா அங்க தான் பண்ணினாங்க” என பரத் சொல்ல, ம்கூம்! ஒரு நொடி கூட தாமதிக்கவில்லை, “நான் பார்த்துட்டு வர்றேன்!” என்று எழுந்து வெளியே சென்றான்.

ஷ்ரத்தாவின் வீட்டு அழைப்பு மணியை அழுத்த, மனதில் ஒரு அலைபுருதல். “பித்தனாக்கினால் உன்னை, திரும்ப பார்க்கப் போகின்றாயா? இப்படியே திரும்பிவிடு!” என்று மனது ஒரு பக்கம் சொல்லியது. “நான் என்ன இப்போது சின்னப் பையனா? மனதளவில் மிகுந்த பக்குவப் பட்டுவிட்டேன் . அப்படி ஒன்றும் என் மனம் அவள் பின்னால் சுற்றாது என்று யோசித்த போதே கதவு திறக்க..   

திறந்தவளை பார்த்து நின்றான்… இந்த வயதில் முன்பு பார்த்தவளை விட இன்னும் அழகானது போன்ற தோற்றம். கண்களில் அவளை நிரப்பிக் கொள்ள..

சுவாதீனமாக, “என் வாய்ஸ் கேட்டே வருவேன்னு எக்ஸ்பெக்ட் பண்ணினேன், ரொம்ப வருஷம் ஆச்சு இல்லையா? தெரியலையோன்னு நினைச்சேன்!” என்றாள் புன்னகையுடன்.

“நான் வருவேன்னு தெரியுமா?”

“எஸ்! உங்க அப்பா, அம்மா, தங்கை எனக்கு தெரியும், உன்னோட ஃபாமிலி ஸ்னாப்ஸ் சிலது என்கிட்டே இருக்கு, உன் தங்கை வளர்ந்துட்டா, ஆனா உன் அப்பா அம்மா அப்படியே இருக்காங்க. உன் தங்கை கல்யாணம், நீ வருவேன்னு எதிர்பார்த்தேன், ரூ பேபி நேத்து சொன்னா, ஸ்ம்ரிதி  ஆன்ட்டியோட அண்ணா நாளைக்கு வர்றாங்கலாம்னு. சோ ஐ வாஸ் எக்ஸ்பெக்டிங்!”

“ஓஹ், அப்போ நீ என்னை நினைச்சிட்டே இருந்தியா?” என நிகில் கேட்க…

“ஆனா நீ என்னை நினைச்சு இருக்க மாட்டியே!” என்றாள் அக்ஷரா.   

நிகில் கேட்ட கேள்விக்கு அக்ஷராவும் பதில் சொல்லவில்லை, அக்ஷராவின் கேள்விக்கு நிகிலும் சொல்லவில்லை.   

“மாறவேயில்லை அக்ஷி அப்படியே இருக்க.. யுவர் அப்பியரன்ஸ் லுக்கிங் மோர் கார்ஜியஸ்”

“பட், நீ ரொம்ப மாறிட்ட, முதல்ல மாதிரி இல்லை.. லாட் ஆஃப் சேஞ்சஸ்.. உன்னோட சாக்லேட் பாய் அப்பியரன்ஸ் இல்லை லுக்கிங் மோர் மேன்லி” என்றாள்.   

“வெல், இன்னும் நான் உன்னை அட்ராக்ட் பண்ணறனா?”

“இருக்கலாம்! இல்லாமலும் இருக்கலாம்! பார்த்தவுடனே தெரிஞ்சிடுமா என்ன? அண்ட் மோர் ஓவர் அதை வெளில சொல்ற ஃப்ரீடம் இப்போ நான் எடுக்கறது இல்லை” என்றாள் அலட்சியமாக!  

“ஃப்ரீடம் எனக்கு இல்லை என்று சொல்லவில்லை என்று நிகிலின் கவனத்தில் பதிய, முகத்தில் ஒரு முறுவல், “நீ மாறவேயில்லை அக்ஷி” என்றான் திரும்ப,

“எஸ், எதுக்கு மாறணும்! நான் இப்படி தான்னு சொல்ல ஆசையா இருக்கு, ஆனா அப்படியும் சொல்ல முடியாது, யு நோ கொஞ்சம் மாறிட்டேன், எனக்கே அது தெரியுது” என்றாள்  அவளும் முறுவலுடன்.