அத்தியாயம் 6:
ஒரு நிமிடம் தான்….ஒரே ஒரு நிமிடம் தான்…..வழி தெரியாமல் சென்றவள்…. அணையின் பாலத்தின் வழியாக செல்லாமல்….மாற்றுப் பாதையில் சென்றதால்….தடுப்புகள் இன்றி…கால் இடறி நீரில் விழுந்திருந்தாள்.
அது ஓரமான பகுதி தான் என்றாலும்…..அணையின் நீர் சாதாரண நீரைப் போல் இருக்காது.ஐஸ் கட்டி தண்ணீர் போல்…நீர் மிக குளுமையாய் இருக்கும்.
விழுந்த வேகத்தில்…தண்ணீரின் குளிர்ச்சி…அவளது உடலை எலும்புக் கூடாய் விறைக்க செய்தது.
வாய் திறந்து கத்தக் கூட முடியாமல்…உதடுகள் தந்தியடிக்க…. வெளியேறுவதற்கான எந்த முயற்சியும் அவளால் செய்ய முடியவில்லை.
அவளின் பின்னே வந்த ரிஷி….தனது ஜெர்கினை கலட்டி அருகில் எறிந்து விட்டு…..அவளைத் தேடி நீருக்குள் சென்றான்.
அவனுக்கு கழுத்தளவு மட்டத் தண்ணீருக்கே….அவள் மூழ்கியிருந்தாள்.
“அபி…அபி….” என்ற அழைப்புடன் அவளைத் தேட….சில நிமிட தேடுதலுக்குப் பிறகு அவனின் கைகளில் அகப் பட்டாள் அபிராமி.
உடல் நடுங்கிக் கொண்டிருக்க…..அவளால் எதுவும் செய்ய இயலவில்லை.
அவளைத் தூக்கிக் கொண்டு வந்தவனுக்கு …அவளின் நிலை பார்த்து ஒரு நிமிடம் கலங்கினாலும்….அவனது போலீஸ் மூளை விடாமல் வேலை செய்தது.
நீரின் குளிர்..அவனையும் தாக்க…..நடுங்கிய உடலைக் கட்டுப்படுத்திய படி…அவளைத் தூக்கிக் கொண்டு ….அருகில்….காவலர்களுக்கென ஒதுக்கப் பட்டிருந்த அறைக்கு சென்றான்.
அவனைப் பார்த்த உடன் அடையாளம் தெரிந்து கொண்ட அந்த காவலர்…”சார் வணக்கம் சார்…!” என்றார் சல்யூட் ஒன்றை உதிர்த்தபடி.
அவருக்குத் தலையை ஆட்டியவன்….”உள்ள ஹீட்டர் இருக்கா..?” என்றான்.
“இருக்கு சார்…!” என்று அவன் கைகளில் அபி இருந்த நிலைமையைக் கண்டவர்…வேகமாய் உள்ளே சென்று ஹீட்டரை ஆன் செய்தார்.
ரிஷி…அபியை அங்கு கிடத்த……
“சார்..! இவங்க…!” என்று இழுத்தார் அந்த போலீஸ்காரர்.
“இவங்க…எனக்கு வேண்டிய பொண்ணு…..பாதை மாறி…தடுப்பு இல்லாத பக்கம் போனதால தண்ணீர்ல விழுந்துட்டாங்க…!” என்றான்.
“இந்த பக்கம் இவங்க வரலையே சார்….!” என்றார் அந்த காவலர்.
“அதான் சொன்னேனே…! பதை மாறி அந்த பக்கம் போயிட்டாங்கன்னு…!” என்று ரிஷி எரிச்சலுடன் சொல்ல…
“சாரி சார்…!” என்றார் அவர்.
“ஆமா….நான்கு பேர் இருக்கணுமே இங்க….நீங்க மட்டும் தான் இருக்கீங்க…?” என்றான்.
“சாரி சார்…அவங்க மூணு பேரும் அணையில மீன் பிடிக்க போயிருக்காங்க….அதான் நான் மட்டும்..” என்று இழுக்க…
“நல்லாயிருக்கு சார்… நீங்க டியூட்டி பார்க்குற லட்சணம்….!” என்று அவரைக் கடிந்தவன்…
”அந்த கரையோரத்துல என் ஜெர்கின் இருக்கு எடுத்துட்டு வாங்க…..!” என்று அனுப்பினான்.
“கோயம்பத்தூர் எஸ்பி….இங்க வந்து நாட்டாமை பண்ணிட்டு இருக்கார்…” என்று மனதிற்குள் எரிச்சல் பட்ட அந்த காவலர்….அவன் சொன்ன வேலைக்காக சென்றார்.
“அபி…அபி…” என்று அவளின் கன்னங்களைத் தட்டியவன்….அவளின் உள்ளங்கால் உள்ளங்கைகளில் சூடு பறக்கத் தேய்த்தான்.
ஹீட்டரை அவளின் அருகில் வைத்து…..அவள் உடலின் குளிர்ச்சியை கொஞ்சம் கொஞ்சமாக போக்கினான்.
அவனின் அருகாமையில்…. மெல்ல கண்களைத் திறந்தாள் அபி.உடலில் உள்ள சக்தி எல்லாம் வடிந்து…ஏதோ வேறு உலகத்தில் இருப்பது போல் இருந்தது அவளுக்கு.
“நாம எங்க இருக்கோம்…! செத்துட்டோமா…?” என்று நினைத்தபடி கண்களை மெதுவாக திறக்க…..எதிரில் மங்கலாய் ரிஷியின் முகம் தெரிந்தது.
அவனின் முகம் தெளிவாய் இப்பொழுது தெரிய….மற்ற அனைத்தையும் மறந்தவளாய்….”ரிஷிஷிஷஈஈஈ……” என்ற கேவலுடன் அவனின் நெஞ்சில் தஞ்சம் அடைந்தாள்.
அவளின் எதிர்பாராத இந்த செயலினால் அதிர்ந்து தான் போனான் ரிஷி.உடலில் சட்டென்று ஒரு இறுக்கம் தோன்ற….அவளை அணைக்கத் துடித்த கைகளை கட்டுப் படுத்த பெரும் பாடுபட்டான்.
அவளின் அணைப்பும்….அருகாமையும்…அவனை சோதனை செய்து கொண்டிருந்தது.
ஆனால் அவளோ…! விட்டால் சென்று விடுவான் என்கிற அளவுக்கு அவனை இறுக்கமாக கட்டிக் கொண்டிருந்தாள்.
“சார் உங்க ஜெர்கின்..!” என்று அந்த காவலர் வந்து நிற்க….வேகமாய் அவளை விலக்கினான் ரிஷி.அப்பொழுதுதான் சுற்றுப் புறம் உணர்ந்தாள்.
ஒரு புதிய மனிதர் தங்கள் முன் நிற்க….தன்னை ரிஷியின் முதுகுக்கு பின்னால் ஒழித்துக் கொண்டாள்.
அந்த காவலர் இருவரையும் சந்தேக கண்ணோடு பார்க்க….அவரின் பார்வையை வைத்தே அவரின் எண்ணத்தைப் புரிந்து கொண்டான் ரிஷி.
வேகமாய் தனது ஜெர்கினில் இருந்த செல்போனை எடுத்து தைலாவிற்கு தொடர்பு கொண்டான்.
“தைலா…காரை எடுத்துட்டு…அவலாஞ்சி அணைக்கு…..வா….அபி இங்கதான் இருக்கா…..!” என்றபடி போனை வைத்தான்.
இப்பொழுது அந்த காவலரின் பார்வை கொஞ்சம் நம்பிக்கையானதாய் மாறியிருக்க…..தன் பின்னால் இருந்த அபியை சட்டென்று உதறினான் ரிஷி.
அவனின் உதறலில்….கொஞ்ச தூரம் தடுமாறி போய் நின்றாள் அபி.ஜெர்கினை அவளை நோக்கி வீசியவன்…சட்டென்று வெளியே சென்றான்.அவனைத் தொடர்ந்து அந்த போலீஸ்காரரும் வெளியே செல்ல…திக் பிரம்மை பிடித்தவள் போல் நின்றிருந்தாள் அபி.
“என்ன அபி..? என்ன பண்ணிட்டு இருக்க நீ…? ஏற்கனவே உன்னைக் கண்டாலே அவனுக்கு ஆகாது….இந்த லட்சணத்துல மறுபடியும் மறுபடியும் அவன்கிட்ட அவமானப் படுறதே உனக்கு பொழப்பா போயிடுச்சு….!” என்று மனசாட்சி எடுத்துரைக்க….
தன் விதியைத் தானே எண்ணி நொந்து கொண்டாள் அபி.சமீப காலமாக அவள் நினைப்பதற்கு மாறாகவே எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.
அடுத்த அரைமணி நேரத்தில் வந்து சேர்ந்தாள் தைலா.
“என்னாச்சு ரிஷி…? ஏன் உடனே காரை எடுத்துட்டு வர சொன்ன…? இந்த பாதையில் வருவதற்குள் போதும் போதும்ன்னு ஆகிவிட்டது…!” என்றாள்.
“உள்ள அபிராமி இருக்கா…கூட்டிட்டு வந்து கார்ல ஏறு…!” என்று சொன்னவன்….அருகில் இருந்த அந்த காவலரிடம் தலையை அசைத்தபடி காரினில் ஏறி அமர்ந்தான்.
“அபிராமியா…அவ எப்படி இங்க தண்ணில…?” என்று ஒன்றும் புரியாமல் சென்ற தைலாவிற்கு உள்ளே சென்று அவளைப் பார்த்தவுடன் எல்லாமே விளங்கிற்று.
“வா அபி…” என்று மட்டும் பேசியவள் அதற்கு மேல் பேசவில்லை.
அபிராமிக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாக அவள் பின்னால் சென்றாள்.
வீடு வந்து சேரும் வரை யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.ரிஷி அவ்வப்போது முன் கண்ணாடி வழியாக அபியைப் பார்த்தவன் யோசனையில் ஆழ்ந்தான்.
இதையறியாத அபி….”திரும்பவும் அவனிடமே அடைக்கலமா..?” என்ற மனப்பான்மையில்…இருந்தாள்.
வீட்டில் காரை நிறுத்தியவன்…அவளை திரும்பியும் பாராது உள்ளே செல்ல…அபிக்கு தான் என்னவோ போல் ஆயிற்று.
“நீ செய்ததும் தப்பு தான் அபி.அவன் ஏதோ கோபத்துல சொன்ன வார்த்தைக்காக… நீ இவ்வளவு தூரம் சென்றிருக்க வேண்டாம்….சரி விடு…நீ போய் ரெஸ்ட் எடு..!” என்று தைலா சொல்ல….அதை ஆமோதித்தபடி சென்றாள் அபி.
அதே சமயம் அறைக்கு சென்ற ரிஷிக்கு….எல்லாமே குழப்பமாக இருந்தது.
“என்னாச்சு இவளுக்கு…..?” என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
மற்றவர்களுக்கு அவள் சாதாரணமாக தண்ணீரில் விழுவது போல் தெரிந்தாலும்…ரிஷியின் மனம் அதை ஏற்க மறுத்தது.
அவள் சென்ற பகுதி ஆபத்தான பகுதியும் இல்லை.நீரில் விழுந்தவள்… எழுவதற்கான எந்த முயற்சியும் செய்யவில்லை.ஏன்….? அவன் சென்று அவளைத் தூக்கும் போது கூட அவளாக எந்த ஒத்துழைப்பும் தரவில்லை.
அப்போ…அவள் வேண்டுமென்று தான் தண்ணீரில் விழுந்தாளா…? என்று சிந்திக்க தொடங்கியிருந்தான்.
“ரிஷி..!”
“சொல்லு தைலா…!”
“என்னாச்சு…?ஏன் ஒரு மாதிரி இருக்க..?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை…நல்லாத்தான் இருக்கேன்…” என்றான்.
“பொய்..! உன் முகமே சொல்லுது….எதையோ தீவிரமா யோசிச்சுட்டு இருக்கேன்னு…” என்றாள்.
“ம்ம் ஆமா…எல்லாம் இந்த அபிராமியைப் பற்றி தான்..!” என்றான் மொட்டையாக.
“அவளைப் பற்றி யோசிக்க என்ன இருக்கு..?” என்றாள்.
“இருக்கு…நிறைய இருக்கு…! அவள் தற்கொலை வரைக்கும் போயிருக்கா..!” என்றான்.
“ரிஷிஷி…” என்று அதிர்ச்சியில் தைலா வாயைத் திறக்க…
“ஆமா தைலா…நான் மட்டும் போகலைன்னா….இந்நேரம் அவள் கதை முடிந்து இருக்கும்…!” என்றான்.
“என்னால் நம்பவே முடியலை…!” என்றாள்.
“என்னாலையும் தான் நம்ப முடியலை.நானும் முதலில் அவள் பாதை தெரியாமல் சென்று தவறி விழுந்து விட்டாள் என்று தான் நினைத்தேன்….ஆனா…” என்று ரிஷி நிறுத்த….
“ஆனா….” என்றாள் தைலா.
“இப்ப யோசிக்கும் போது….அவள் தானாக விழுவதற்கு எந்த காரணியும் அங்கு இல்லை.அவள் வேண்டுமென்று தான் விழுந்திருக்கா…அதனால் தான் என்னைப் பார்த்தவுடன் ஓடியிருக்கனும்..!” என்றான்.
“எனக்கென்னமோ இதெல்லாம் உன்னோட கற்பனையோன்னு தோணுது…!” என்றாள்.
“கற்பனையும் இல்லை..கட்டுக் கதையுமில்லை…என் கணிப்பு சரின்னா…அவள் தானா தான் விழுந்திருக்கணும்….!” என்றான் உறுதியாய்.
“அப்படி சாகப் போற அளவுக்கு அவளுக்கு என்ன பிரச்சனையாய் இருக்கும்..?” என்றான்.
“எனக்கென்ன தெரியும்…?அதை அவகிட்ட தான் கேட்கணும்…!” என்றான்.
“ஏன் உனக்கு தெரிஞ்சுக்கனும்ன்னு தோணலையா…?” என்றாள்.
“அதைத் தெரிந்து நான் என்ன பண்ண போறேன்..?” என்றான்.
“நம்பிட்டேன்…!” என்றாள் நக்கலாய்.
“நீ நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதான் உண்மை…!” என்றான் அவனும் விடாமல்.
“சரி..! எதுக்காக அவ பின்னாலேயே அவ்வளவு தூரம் போன….போனா போகட்டும்ன்னு விட வேண்டியது தான..?” என்றாள்.
“நான்…. நானா மட்டும் இருந்திருந்தா அப்படியே விட்டுருப்பேன்….நான் ஒரு காவல் துறை அதிகாரி.என் கண் முன் நடக்குறப்போ.. என்னால் வேடிக்கைப் பார்க்க முடியாது..!” என்றான்.
“அவளை போக சொன்னதே நீ தான..!” என்று மடக்கினாள் தைலா.
அதற்கு என்ன சொல்வதென்று அவனுக்கு தெரியவில்லை.
“ஆமா….நான் தான் அவளை போக சொன்னேன்…பிறகு நான் ஏன் அவள் பின்னால் செல்ல வேண்டும்….எதற்காக அவளுக்காக மனம் துடிக்க வேண்டும்…?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டிருந்தான்.
“தூங்குறவங்களை எழுப்பலாம்…ஆனா தூங்குற மாதிரி நடிக்கிறவங்களை எழுப்புறது ரொம்ப கஷ்ட்டம்..!” என்றாள் தைலா.
“இங்க யாரும் நடிக்கலை..!” என்றான்.
“நானும் யாரையும் சொல்லலை..!” என்றாள்.
“தைலா..! ப்ளீஸ்…என்னைக் கொஞ்சம் தனியா விடு….!” என்று ரிஷி சொல்ல….
“ஓகே….டேக் கேர்…” என்றபடி அவனின் அறையை விட்டு வெளியேறினாள் தைலா.
அறையில் விட்டத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அபி.”எனக்கு ஆயுசு கெட்டி போல…அதான் ஒவ்வொரு முறையும் தப்பிச்சுடுறேன்…!” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டாள்.
“இவர் தானே என்னை அவ்வளவு திட்டி…..வீட்டை விட்டு போக சொன்னார்…பிறகு ஏன் என் பின்னால் வர வேண்டும்….?” என்று யோசித்தவளுக்கு விடை மட்டும் கிடைக்கவேயில்லை.
“அடி லூசு….அன்னைக்கும் உன்னை இவன் தான் காப்பாத்துனான்… இன்றைக்கும் இவன் தான் உன்னை காப்பாத்தி இருக்கான்….ஆனா அப்பவும்…இப்பவும் ஒரு தேங்க்ஸ் கூட அவனுக்கு சொல்லலை…!” என்று மனசாட்சி இடித்துரைக்க…
“ஆமாம்ல…ஒரு நன்றி கூட சொல்லாம இருந்திருக்கேன்…!” என்று தனக்குத் தானே குட்டியவள்…அவனிடத்தில் சென்று பேச அஞ்சினாள்.
“ஒரு நன்றி சொல்றதுக்கு எதுக்கு இவ்வளவு பயம்…நேரா போற…. தேங்க்ஸ்ன்னு சொல்லிட்டு வந்துட்டே இருக்க போற…அவ்வளவு தான்…” என்று மனம் பாயிண்டை எடுத்துக் கொடுத்தது.
ரிஷியின் செல்போன் அலற……அவன் இருந்த மனநிலையில் கண்டு கொள்ளாமல் விடுத்தான்.
மீண்டும் மீண்டும் அலற…”ச்ச….இந்த நேரத்துல யாரு…இப்படி விடாம கால் பண்றது…?” என்று சலித்தவனாய் போனை எடுத்தான்.
அதில் தெரிந்த நம்பர் புதிய நம்பரை இருக்க…குழம்பினான்.
“யாராய் இருக்கும்…?” என்று யோசித்த படி எடுக்க…
“ஹலோ…!”
“ஹலோ..! வணக்க்கம் எஸ்பி சார்…!” என்று கேட்டது ஒரு நக்கலான குரல்.
“யார் நீ…?” என்றான்.
“உங்கள் நண்பன் சார்….!” என்றான் மீண்டும் அதே நக்கலான குரலில்
“டேமிட்…..யாருடா நீ…யார்கிட்ட பேசுறேன்னு தெரிஞ்சுதான பேசுற…?” என்றான் ரிஷி இறுகிய குரலில்
“ஹோ…தெரிஞ்சுதான் பேசுறேன் சார்….உங்களை எனக்கு நல்லாவே தெரியும்… ஆனா உங்களுக்கு என்னை சுத்தமா தெரியாது.தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமும் இல்லை…” என்றான்.
“இப்ப என்ன சொல்ல வர்ற..?” என்றான் ரிஷி.
எதிர்புறம் இருந்தவன் என்ன சொன்னானோ…ரிஷி ருத்ரமூர்த்தயாய் மாறினான்.
“டேய் என்னை என்ன பொட்ட பயன்னு நினைச்சியா…? உங்கள மாதிரி கழிசடைங்க மிரட்டலுக்கு பயப்படுறவன் நான் இல்லை…எதா இருந்தாலும் நேர்ல வாடா நாயே…!” என்றான் வாயில் வந்த வார்த்தையெல்லாம் கொட்டி.
“கோபப் படாதிங்க எஸ்பி சார்….ஒரு மாசம் லீவைப் போட்டோமா….பேசாம போய் ரெஸ்ட் எடுத்தோமான்னு இருக்கனும்…அதை விட்டுட்டு…இப்படி பிபி பேஷன்ட் மாதிரி கத்துறிங்க….
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்க கூட ஒரு பொண்ணு இருந்ததே…யாரு சார்…? சும்மா சொல்லக் கூடாது..செம்ம பிகரு சார்.நாட்டுக் கட்டை…” என்று எதிர்புறம் இருந்தவன் சொல்ல…
“டேய்…நீ யார்கிட்ட பேசுறோம்ன்னு தெரியாம பேசிட்டு இருக்க….என் முன்னாடி வந்து சிக்குன….அது தான் உனக்கு கடைசி நாளாயிருக்கும்…!” என்றான் ரிஷி ஆத்திரமாய்.
“சரி சரி…விடுங்க சார்…நீங்க ரொம்ப கோபப்படுறிங்க….? உங்களை எங்க பார்க்கணுமோ…அங்க பார்த்துக்கறேன்…..” என்று போனை வைக்க போக…
“வாடா வா…நானும் அதுக்குதான் வெயிட் பண்றேன்…!” என்று ரிஷியும் ஆத்திரம் குறையாமல் போனை வைத்தான்.
போனை வைத்தவனுக்கு ஆத்திரம் தலைக்கேறியது.கொஞ்ச நேரத்துக்கு முன்னால் அபியுடன் அங்கு இருந்தது இவனுக்கு எப்படி தெரிந்தது.யார் இவன்..? எதுக்காக என்கிட்டே தானா வந்து வாலாட்டுறான்….? என்று யோசிக்க யோசிக்க அவனுக்கு தலைவலி வந்தது தான் மிச்சம்.
“எல்லாம் இவளால் வந்தது….இவளை….” என்று கோபம் முழுவதும் அபியின் மேல் திரும்ப..
இதையறியாத அபி….அவனின் அறைக்கு வெளியே தயங்கித் தயங்கி நிற்க….
“யாரு அங்க..?” என்றான் கர்ஜனையாய்.
அந்த குரலில் உலுக்கி விழுந்தவள்…”நா…நான்… தான்..” என்றாள் திணறி.
“உள்ள வா..!” என்றான்.
அவள் தயங்கி தயங்கி உள்ளே வர…..
“என்ன…? இப்ப என்ன பிரச்சனை உனக்கு…?” என்றபடி அவளை நோக்கி வந்தான்.
“நான்…நான் ..உங்களுக்கு நன்றி….” என்று அவள் முடிக்கும் முன் அவளை ஓங்கி அறைந்திருந்தான்.
அவன் அறைந்த இடம் தீயாய் தகிக்க…கன்னத்தில் கைவைத்தபடி நின்றிருந்தாள் அபிராமி.
“என்ன நினைச்சுட்டு இருக்க..? என்னைப் பார்த்தா கேனைப் பயல் மாதிரி இருக்கா…..உன் போதைக்கு நான் ஊறுகாயா…? நீ தற்கொலை பண்ணிக்கிட்டு சாகனும்ன்னு நினைச்சா….போய் தனியா சாக வேண்டியது தான…?
இங்க இருந்து ஏன் போய் சாகப் போன…? அப்ப தான் நாளைக்கு கேஸ் ஆகும்…பழி எம்மேல விழும்…உன்னைக் காப்பாத்தி கூட்டி வந்ததுக்கு எனக்கு தண்டனையா…? சொல்லு எனக்கு தண்டனையா..?” என்றான்.
‘இல்லை…நான் தெரியாம….” என்று அவள் முடிக்கும் முன்…மீண்டும் அவளைஅறைய கையை ஓங்கியவன் தன்னைக் கட்டுப் படுத்தினான்.
“எனக்கு பொய் பேசுறவங்களை சுத்தமா பிடிக்காது…என்கிட்டயே உன் தில்லாலங்கடி வேலையைக் காட்டுறியா…? நீ தானா விழுந்தியா…இல்லை தவறி விழுந்தியான்னு தெரியாத அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் கிடையாது..” என்றான்.
அவள் அதிர்ச்சியாய்ப் பார்க்க…அவள் கண்களைப் பார்த்தவன் மேலும் கடுப்பானான்.
“ஆமா என்ன நினைச்சுட்டு இருக்க நீ….ஆனா ஊனான்னா கண்ணை முழிச்சு முழிச்சு பார்க்குறதும்….தானா வந்து கட்டிப் பிடிக்கிறதும்…என்ன பழக்கம் இது….கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம…?” என்றான் வார்த்தைகள் சாட்டையடியாய்.
அவனின் வார்த்தைகள் அவளைத் தீயாய் கொளுத்தியது.அதே இடத்திலேயே வெந்து செத்துவிட மாட்டோமா…? என்று நினைத்தாள்.
“தயவு செய்து இப்ப இடத்தை காலி பண்ணு…உன் நன்றி எல்லாம் தூக்கி குப்பையில் போடு…போ..!” என்று அவளை விரட்ட…
கண்களில் தேங்கிய கண்ணீருடன் அவ்வறையை விட்டு வெளியேறினாள் அபி.
“ஒரு நிமிஷம்..!” என்றான்.
“இன்னொரு தடவை இந்த வீட்டை விட்டு வெளிய போன…தேடி வந்து காலை ஒடிப்பேன்…ஜாக்கிரதை…!” என்று மிரட்டி அனுப்பினான்.
அவன் சொன்ன வார்த்தைகள் எதுவும் அவள் காதில் விழுந்த பாடில்லை.
சுவற்றை வெறித்தபடி சென்று கொண்டிருந்தாள்.
விடை கொடுத்தேன்…விடு விடு விலகி விடு….
தினம் தினம் என்னை ஏன் துரத்துகிறாய்….!
அடி இதயக் கதவை இழுத்தே அடைத்தேன்…
எதற்காய் அதை தட்டுகிறாய்…!