அத்தியாயம் 5:
அங்கு நடந்து கொண்டிருந்த அவ்வளவு பரப்பரப்பான சூழ்நிலையிலும்…. தன்னை மறந்து நின்று கொண்டிருந்தாள் அபிராமி.
ஆசிட் பாதிப்புக்குள்ளான பெண் மிகவும் கவலைக்கிடமான நிலைமையில் மருத்துவமனையில் இருக்க….கேஸ் தீவிரமான விசாரனையை நோக்கி சென்று கொண்டிருந்தது.
ஆசிட் ஊற்றியவன் இவர்கள் டிப்பார்மென்ட் பையன் என்பதால்…. விசாரனை நேரடியாக இவர்கள் பகுதியில் இருந்து தொடங்கியது.
“அந்த பையனோட குளோஸ் பிரண்ட்ஸ் யாரு…?” என்றான் இறுகிய குரலில் ரிஷி.
அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க….தயக்கமே அவர்களை சூழ்ந்திருந்தது.
அதில் ஒரு பையன் மட்டும்….”நான் தான் சார்…!” என்றபடி முன்னால் வந்தான்.
அவனை ஏற இறங்க பார்த்த ரிஷி…” “குளோஸ் பிரண்ட்….கண்டிப்பா உனக்கு ஏதாவது விஷயம் தெரிஞ்சிருக்கும்….!சொல்லு…இப்ப அவன் எங்க இருக்கான்…!”” என்றான் அவனது கண்களை நேராகப் பார்த்து.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது சார்….அவன் அந்த பொண்ணை லவ் பண்ணான்….அந்த பொண்ணும் தான்.அதுவரைக்கும் தான் எனக்குத் தெரியும்….மத்தபடி என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியாது சார்…!”” என்றான் சாவகாசமாய்.
“அவனோட பிரண்டுன்னு சொல்ற…? ஒன்னும் தெரியாதுன்னு சொல்ற…?”” என்றான் ரிஷி அவனை நோட்டம் விட்டபடி.
“என்ன சார் நீங்க…? நான் சொன்னதவே திருப்பி சொல்றிங்க….! எனக்கு ஒன்னும் தெரியாது சார்…பிரண்டுன்னா எல்லாமே தெரிந்திருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை சார்..!”” என்று திமிராய் சொல்ல….
அந்த இடமே ஒரு நிமிடம் சுற்றி நின்றது அவனுக்கு.பிறகுதான் தெரிந்தது ரிஷி அவனை அறைந்திருக்கிறான் என்று.
ரிஷியின் அடி அவனுக்கு எரிச்சலைக் கிளப்ப….””என்ன சார்…காலேஜ்க்கு உள்ளையே வந்து….ஸ்டூடன்ட் மேலே கை வைக்கிறிங்களா…! இதுக்காக ரொம்ப வருத்தப் படுவிங்க சார்…!” என்றான் கன்னத்தில் கை வைத்தபடி.
“யாருடா ஸ்டூடண்ட்…..கூடப் படிக்கிற பொண்ணு மேலையே ஆசிட் ஊத்துறவன் நல்ல ஸ்டூடண்டா….இதுல திமிரா வேற பேசுற….அப்பறம் பேச வாய் இருக்காது… ஜாக்கிரதை..!” என்று ரிஷி உறுமிக் கொண்டிருக்க…
அவன் கூட வந்த இன்ஸ்பெக்டர்….கல்லூரி நிர்வாகத்தினரை அழைத்து வந்தார்.கவனத்தை அவர்கள் புறம் திருப்பினான் ரிஷி.
“யப்பா சாமி…!என்னா அடி…!”” என்று அபிராமியின் தோழி லட்சுமி சொல்ல…
“பின்ன…இப்படி பேசினா ….இப்படித்தான் அடி கிடைக்கும்….”” என்றாள் அபி அவனை ரசித்துக் கொண்டே.
“அடிப்பாவி…! என்னடி ஆச்சு உனக்கு….அந்த ஆளு நம்ம டிப்பார்மென்ட் பையனை அடிக்கிறாரு….நீ என்னடான்னா அவருக்கு சப்போர்ட் பன்ற…?” என்றாள் லட்சுமி.
“இவனுகளுக்கெல்லாம் இந்த அடி பத்தாது லட்சு….அவன் கூடவே திரிவன்…. ஆனா ஒன்னும் தெரியாதாம்….அவன் மூஞ்சியே சொல்லுது அவன் சொல்றது பக்கா பொய்ன்னு…” என்று அபி சொல்ல…
அது என்னவோ உண்மைதான் அபி…..பாவம் அந்த பொண்ணு….என்று அந்த பெண்ணுக்காக இரக்கப் பட தொடங்கினர் இருவரும்.அந்த சூழ்நிலையில் அவர்களால் அது மட்டுமே செய்ய முடிந்தது.
“சாரி…வெளிய நியூஸ் போனா காலேஜ் பெயர் கெட்டுடும்…அது மட்டும் இல்லாம பையன் வேற பெரிய இடம்…” என்று கல்லூரி உரிமையாளர் சொல்ல…
“அதுக்காக…என்ன செய்யனும்ன்னு நினைக்கிறிங்க…?” என்றான் இடுங்கிய கண்களுடன் ரிஷி.
“விஷயம் வெளிய தெரியாம….” என்று அவர் இழுத்துக் கொண்டிருக்கும் போதே….
“ஸ்டாப் இட் ஐ சே….என்னை பத்தி என்ன நினைச்சிங்க….ஒரு பொண்ணு அங்க உயிருக்கு போராடிகிட்டு இருக்கு….ஆசிட் ஊத்துனவன் ஆனந்தமா திரியறான்….கல்லூரி நிர்வாகம் மூடி மறைக்கப் பார்க்குது…இதுல பையன் பெரிய இடமாம்….
பெரிய இடமா இருந்தா அவன் என்ன வேணும்ன்னாலும் செய்வான்…. நாங்க கண்டுக்காம சல்யூட் அடிக்கனுமா…இதுக்காகத் தான் நாயா பேயா படிச்சு…போஸ்ட்டிங் வாங்கிட்டு வந்திருக்கோமா….
அவன் யாரா இருந்தாலும் சரி…யாரோட பையனா இருந்தாலும் சரி…என்னோட பார்வையிலும் சரி விசாரணையிலும் சரி தப்பவே முடியாது.முடிஞ்சா அவனை எச்சரிக்கை பண்ணி வைங்க…” என்று நக்கல் சிரிப்புடன் சொன்னவன்…வேகமாக அபிராமியின் வகுப்பறை பக்கம் வந்தான்.
அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு….அவன் திடுமென வகுப்பிற்குள் வரவும்…குப்பென்று மூச்சையடைத்தது அபிக்கு.
அவன் நடந்து வரும் போது…அவன் நடையில் தெரிந்த கம்பீரம் அவளை இமைக்கவும் விடவில்லை.
”நீ நடந்தால் நடையழகு…அழகு….” என்று அபியின் காதோரமாக பாடினாள் லட்சு.
அபி அவளை முறைக்க…”என்னை எதுக்குடி முறைக்கிற…? இங்க என்ன பிரச்சனை நடந்துகிட்டு இருக்கு….நீ என்ன மனநிலையில் இருக்கிற…இது சரி வராது…உன் பாட்டிக்கு தெரிந்தது….சுத்தம்….” என்று லட்சு அர்ச்சனை பாட…
அபியின் முகம்…. பாட்டியின் நினைவில் ஒரு நிமிடம் சுருங்கியது.அடுத்த நிமிடம் தனது எண்ண அலைகளுக்கு கட்டுப் போட்டவள்….தன் முகத்தை அமைதியாய் வைத்துக் கொண்டாள்.
“ஸ்டூடண்ட்ஸ்….உங்களில் யாருக்கு அவனைப் பற்றிய தகவல் தெரியும் என்றாலும் தயங்காமல் என்னிடம் சொல்லலாம்…யாருக்கும் பயப்படத் தேவையில்லை…” என்று அனைவரையும் ஒரு முறைப் பார்த்தான்.
அவர்களின் முகத்தில் எதைப் படித்தானோ…..”எல்லார் முன்னாடியும் சொல்ல வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை….என் நம்பருக்கு கால் பண்ணி கூட நீங்க இன்பார்ம் பண்ணலாம்…உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது என் பொறுப்பு….” என்று சொன்னவன்…
அங்கிருந்த போர்டில்…தனது பெயரையும்,தொலைபேசி என்னையும் எழுதி விட்டு….அங்கிருந்து நகன்றான்.
“ரி..ஷி…வர்…மா…” என்று அவனது பெயரை தனது மனதிற்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டாள் அபிராமி.
அவளின் மனதை அறிந்த லட்சு…”எனக்கென்னமோ…அவருக்கு கல்யாணம் ஆகியிருக்கும்ன்னு தோணுது அபி….” என்றாள்.
திக்கென்று இருந்தது அபிக்கு.அவன் திருமணம் ஆனவனா என்ற ரீதியில் அவளால் யோசிக்க முடியவில்லை.
“இதென்ன முட்டாள்த்தனம் அபி…! அவனுக்கு திருமணம் ஆகவில்லையென்று உனக்கு உறுதியாக தெரியுமா…? அப்படியே தெரிந்தாலும் இதெல்லாம் நடக்குமா….முதலில் அவனுக்கு உன்னைப் பிடிக்குமா….?” என்று மனசாட்சி அடுக்கடுக்காய் கேள்விகளை அடுக்க….பதிலின்றி தவித்தாள் அபி.
சிறு வயது முதல் அதிக எதிர்பார்ப்புகள் வைத்துக் கொள்ளாததால் அவள் கண்ட ஏமாற்றங்கள் கொஞ்சமே…அதனால் அவளது மனதை அவள் எளிதில் அடக்கினாள்.
ஆனால் அவனது பெயரும்..அவனின் தொலைபேசி எண்ணும் நீக்கமற அவளின் நெஞ்சில் பதிந்து போனது.
அதன் பிறகு அந்த கேஸ் விஷயமாக பல முறை அந்த கல்லூரிக்கு வர….அவனைப் பார்த்தாலும் பார்க்காததைப் போல் இருந்து கொள்வாள்.ஆனால் அந்த தருணங்களை மனதினுள் செடியாய் நட்டு….அதற்கு தண்ணீர் ஊற்றி….நினைவுகள் மலர்களாய் பூத்துக் குலுங்க…தன்னுள்ளே ஒரு வட்டத்தை அமைத்துக் கொண்டாள்.
நினைவுகளில் இருந்து மீண்டாள் அபிராமி.திரும்பி அவனைப் பார்க்கவே முடியாது என்று எண்ணியிருந்தவளுக்கு…..விதி அவனிடத்திலேயே தன்னை சேர்த்திருப்பதைக் கண்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
“என்ன தனியா சிரிச்சுகிட்டு இருக்க அபி…?” என்றபடி வந்தாள் தைலா.
“ஒன்னுமில்லைக்கா….சும்மாதான்…!” என்றபடி அவளைப் பார்த்து மென்மையாய் சிரிக்க…
“என்ன முகம் இவளுடைய முகம்…! எந்த விதமான உணர்வுகளையும் பிரதிபலிக்காத முகம்….!” என்று தைலா எண்ணிக் கொண்டிருக்க….. அவளுடைய செல்பேசி சிணுங்கியது.
“ஹலோ…சொல்லுடா வருண்…!” என்றாள்.
“என்னத்தை சொல்ல…? அண்ணன் எப்படி இருக்கான்…” என்றான் வருண் சலிப்பாய்.
“உங்க அண்ணனுக்கு என்ன…மப்பும் மந்தாரமுமா…கொப்பும் கொளையுமா… சீரும் சிறப்புமா இருக்கான்….” என்றாள் தைலா.
“கொழுப்பாடி உனக்கு…! எல்லாம் என்னை சொல்லணும்….கூடவே யாராவது குரங்கை அனுப்புவாங்களா…?” என்றான்.
“அடப்பாவி…! நான் உனக்கு குரங்கா…! மவனே கையில சிக்குன நீ கைமா தான்…!” என்று தைலா வில்லத்தனம் பேச..
“அடிப்பாவி…ஒரு டாக்டர் மாதிரியா பேசுற…பக்கா பேட்டை ரவுடி மாதிரி பேசுற….ம்ம்ம்…சரி சரி…இப்போ ரிஷி என்ன மன நிலையில் இருக்கான்…!” என்றான்.
“ம்ம்….ரிஷி நல்ல லவ் மூடுல இருக்கான்..!” என்று தைலா சொல்ல.. எதிர்புறம் அதிர்ந்தான் வருண்.
“நீ என்ன சொல்ற தைலா….!” என்று அவன் அதிர்ச்சியாய் கேட்க…
“ம்ம்ம் நடந்ததுக்கு அவன் என்ன மனநிலையில் இருப்பான்னு தெரியாதா…? பிறகு ஏன் இந்த கேள்வி….!” என்று தைலாவும் விளையாட்டுத் தனத்தை கைவிட்டாள்.
“இங்க தீபி தொல்லை தாங்க முடியலை….அண்ணனைப் பார்க்கணும்… நானும் ஊட்டி போறேன்னு ஒரே அடம்….” என்றான் வருண்.
“வாவ்..சூப்பர்…வர சொ…..” என்று சொல்லப் போனவள்…எதிரில் தன்னையேப் பார்த்து அமர்ந்திருக்கும் அபிராமியைப் பார்த்தாள்.
தீபி இப்ப இங்க வந்தா அபியை எப்படி எடுத்துப்பா….? ரிஷி சரின்னு சொல்லுவானா..? என்று மூளை ஒரு நிமிடம் யோசிக்க…அதற்குள் வருண் எதிர்முனையில் “ஹலோ….ஹலோ..” என்று கத்திக் கொண்டிருந்தான்.
“இல்லை தீபிக்கு இன்னும் எக்ஸாம் முடியலைல.அப்பறம் எப்படி…?” என்று நிறுத்த…
“ஆமால்ல…நானும் மறந்துட்டேன்….சரி எக்ஸாம் முடிந்த உடன் அவளை அனுப்புறேன்….நீ கிளம்பி வந்திடு….” என்று சொன்னவன்…பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தான்.
தைலாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த அபிராமிக்கு எதுவும் புரியவில்லை.புரியாத பாவனையில் அவள் முகம் இருக்க…”என்ன..?” என்பதைப் போல் கேட்டாள் தைலா.
“ஒன்றுமில்லை…”என்பதைப் போல் அபியின் தலை ஆட…இவை அனைத்தையும் தனது அறையின் ஜன்னலருகில் இருந்தவாறு பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி.
ஆம்…அபியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.வரும் போதே அவளைக் கண்டும் காணாததும் போல் வந்தவனுக்கு….ஏனோ அவளைப் பார்க்க வேண்டும் போல் தோன்ற….தனது அறையின் ஜன்னல் கதவைத் திறந்தவன்….அப்படியே நின்று விட்டான்.
“யார் இவள்….! பார்த்தாள் சின்ன பெண் போல தெரிகிறாள்…! ஆனால்…அவள் கண்கள் ஏதோ ஒன்று என்னிடம் சொல்வது போல் உள்ளது…ஆனால் என்னவென்று புரியவில்லையே…!இவள் ஏதோ ஒரு வகையில் என்னைத் தாக்கம் செய்கிறாள்…! இது எப்படி சாத்தியம்…உடனே என்னுடைய மனம் எப்படி மாறும்…இது சாத்தியமா…?” என்று மனம் யோசித்துக் கொண்டிருக்க…கண்கள் அபியையே பார்த்துக் கொண்டிருந்தது.
இளம் பனியாய் அவள் முகம் அவன் மனதில் பதிந்துகொண்டிருந்தது. பனித்துளியின் குளிர்ச்சியையும்,அழகையும் அவனுள் விதைத்துக் கொண்டிருந்தாள்.
தைலா யதார்த்தமாய் ரிஷியின் அறைப் பக்கம் திரும்ப….அங்கு அபியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த நண்பனைக் கண்டாள்.
அவனின் அசைவுகளை வைத்தே …..மனதை அறியும் தைலாவிற்கு தெளிவாய் புரிந்தது அவன் பார்வைக்கான அர்த்தம்.”கடவுளே…இது மட்டும் நடந்தா….என்னை விட யாரும் சந்தோஷப் பட மாட்டாங்க…! ஆனா இந்த அபி சரி சொல்லணுமே…!” என்று வேண்டிக் கொள்ள மட்டுமே அவளால் முடிந்தது.
“செம்ம போர் அடிக்குது அபி…என்ன பண்ணலாம்..?” என்றாள் தைலா.
“என்ன பண்ணலாம்….?” என்றாள் அபியும்.
“சுத்தம்..!” என்று மனதிற்கு நொந்த தைலா….”ஹி…ஹி ஒன்னும் பண்ண வேண்டாம்….!” என்றாள்.
“ஏதாவது சமைக்கலாமா…?” என்றாள் அபி.
“சமையலா….?” என்று தைலா முகத்தை சுளிக்க….அவளின் முக ரியாக்சனைப் பார்த்த அபிக்கு சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
“ஏன் உங்களுக்கு சமையல் பிடிக்காதா..?” என்றாள் சிரிப்பை அடக்கிக் கொண்டு.
“ஹிஹி….சாப்பிட பிடிக்கும்…சமைக்க தான் பிடிக்காது..” என்றாள் தைலா அசடு வழிந்தபடி.
“ஓகே…டன்…நான் உங்களுக்கு சொல்லித் தரேன்….சரியா…” என்று குழந்தையைப் போல் தலையை சரித்து சொல்ல….
அந்த அழகில் மயங்கித்தான் போனான் ரிஷி.அவனுடைய மன வேதனைகள் காற்றில் பறக்கக்…
தன் மனம் அறியாதவனாய் அவளின் பாவனைகளை உள்வாங்கிக் கொண்டான் ரிஷி.யாருக்காகவும் எதற்காகவும் அசைந்திடாத அவனின் இரும்பு மனம்….அவள் விழிகளின் நர்த்தனத்தில் அசைந்து தான் போயிருந்தது.
தன்னை யாரோ பார்ப்பது போல் ஒரு உணர்வு உந்த…சுற்றும் முற்றும் பார்த்தவளின் விழிகள்….ரிஷியின் விழிகளை சந்தித்த போது…அப்படியே நிலைத்தது.
அவள் சட்டென்று தன்னைப் பார்க்கவும்….உடனே முகத்தைத் திருப்பிக் கொள்ள முடியாமல் தவித்தான்.
“என்ன பண்ற ரிஷி…அவ சின்ன பொண்ணு…அவள் கவனத்தை ஏன் ஈர்க்கனும்ன்னு நினைக்கிற…தப்பு பண்ற…தப்பு….” என்று மனம் கத்த….
தன்னை அடக்க முடியாமல் வேகமாய் வெளியே வந்தான்.
தன்னைப் பார்த்துக் கொண்டிருந்தவன்…திடுமென தன் முன் வரவும் அதிர்ந்தாள் அபி.
“ஏய்..! நீ எப்ப கிளம்புறதா உத்தேசம்…? ஏதோ சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்த மாதிரி சாவகாசமாய் இங்க தங்கியிருக்க…அடுத்தவங்க வீட்ல இருக்கிறோம் என்ற ஒரு உணர்வு வேண்டாம்….முதலில் இங்க இருந்து கிளம்புற வழியைப் பாரு…என் கண்ணுலையே படாத..!” என்று கத்த…
“டேய் ரிஷி…திடீர்ன்னு உனக்கு என்ன ஆச்சு…? அமைதியா இருடா….பிளீஸ்…” என்று தைலா சொன்னது எதுவும் காதில் விழாமல் போக…
“என்ன பேசுகிறோம்…என்பதை மறந்து….அவள் தன்னுள் ஏற்படுத்தும் பாதிப்பை ஏற்க மனமில்லாது அவன் மனம் போன போக்கில் பேசிக் கொண்டிருந்தான்.”
அவன் எதிரில் நின்றிருந்த அபிக்கு முதலில் புரியாமல் பின் சுதாரித்தாள்.அவன் முகம் தெரியாத அளவிற்கு கண்ணீர் திரை படலமாய் நிற்க…அவனை வெற்று பார்வை பார்த்த படி நின்றிருந்தாள்.
ஆனால் அவன் விடுவேனா என்று பேசிக் கொண்டிருக்க….”போதும் நிறுத்துங்க…!” என்றாள் அழுகையுடன்.
வேகமாய் கண்களைத் துடைத்தவள்….”இனி என்னால் உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது.அடைக்கலம் கொடுத்ததுக்கு நன்றி… நான் வரேன்..” என்றபடி தைலாவிடம் தலையை அசைத்தபடி நடக்கத் தொடங்கினாள்.
“எங்க போவ அபி….அவன் கிடக்குறான்…இரு..!” என்று தைலா சொல்ல…அதை காதிலேயே வாங்காதவாறு நடக்கத் தொடங்கினாள்.
“டேய்..கூப்பிடுடா…!” என்று ரிஷியிடம் சொல்ல….அவனோ தன்னையே நொந்து கொண்டான்.
அழுந்த உதட்டைக் கடித்தவன்….”ச்ச்ச….கோபத்துல என்ன பேசுறேன்னு தெரியாம பேசிட்டேன்…” என்று மனதிற்குள் சொன்னவன்…
“போகாத அபி…!” என்று சொல்வதற்கு திரும்ப,….அந்த இடத்தில் அவள் இல்லை.வேகமாய் ஓடி சென்று வெளியே பார்க்க….கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவளைக் காணவில்லை.
“ஷிட்…” என்று தரையைக் காலால் ஓங்கி உதைத்தவன்….வேகமாய் உள்ளே சென்று தனது ஜெர்கினை மாட்டிக் கொண்டு….அவளைத் தேடி சென்றான்.
எல்லாம் சில நிமிடங்களில் நடந்து முடிந்திருக்க…தைலாவிற்கு தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது.
“அங்க இருந்து இவளையே தான் பார்த்துட்டு இருந்தான்…அப்பறம் எதுக்கு வந்து இவ்வளவு ஹார்ஷா பேசுனான்….என்னதான் பிரச்சனை இவனுக்கு…” என்று தன்னைத் தானே குழப்பிக் கொண்டாள்.
அவனின் சொல் பொறுக்காமல் ஒரு வேகத்தில் வந்து விட்டாள் அபி.ஆனால் எங்கே செல்வது..? எப்படி செல்வது..? என்று ஒன்றும் புரியவில்லை.
கால் போன போக்கில் நடக்கத் துவங்கினாள்….அபி.ஏன் போகிறோம்…என்று திக்கு தெரியாமல் நடக்க…..ஒரு கட்டத்தில் எல்லாப் பாதைகளும் ஒரே பாதையாக இருக்க…..தூரத்தில் ஒரு ரோடு தெரிவதைப் போல் இருந்தது.
அதன் அருகில் வேகமாய் சென்ற பிறகு தான் புரிந்தது…அது தைலாவுடன் வாக்கிங் சென்ற..அவர்களின் எஸ்டேட் செல்லும் பாதை என்று.
“இப்படியே போனா…அவங்க எஸ்டேட் தானே வரும்…?ஊருக்கு எப்படிப் போறது..?” என்று யோசிக்க..
“இப்ப இருக்குற நிலைமையில் நீ ஊருக்கு போனா…பாட்டி உன்னை கொன்று புதைத்தாலும் ஆச்சர்யப் படுவதற்கு இல்லை…” என்று ஒரு மனம் சொல்ல….
“பேசாம திரும்பி அவன் இடத்துக்கே போயிடு…இருந்தாலும் உனக்கு இவ்வளவு ரோசமெல்லாம் வரக் கூடாது..” என்று ஒரு மனம் சொல்ல…
குழம்பியவளாய் எங்கும் செல்லாமல் அதே இடத்தில் நின்றாள்.அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை.சுற்றும் முற்றும் பார்க்க…”அவலாஞ்சி டேம்..” செல்லும் வழி என்ற தகவலை ஒரு பலகைத் தாங்கி நிற்க….ஒரு முடிவு எடுத்தவளாய் அவ்வழியே நடக்கத் தொடங்கினாள்.
சிறிது தூரத்தில் அவளைக் கண்டுவிட்டான் ரிஷி.”இப்ப எதுக்காக டேம் இருக்குற பக்கம் போறா…இவ என்ன லூசா..?” என்று மனதில் நினைத்தவன்…அவளை நோக்கி பின் தொடர்ந்தான்.
அவலாஞ்சியில் குந்தா மின் திட்டம் செயல்படுவதால் அதில் பணிபுரியும் மின் ஊழியர்களின் வசிப்பிடங்கள் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப் படும்.மற்றபடி ஆட்களின் நடமாட்டத்தை கான முடியாது.
அந்த பகுதியில்….மான்களையும்,காட்டெருமைகளையும் அதிகம் காண முடியும்.
டேம் அருகில் உள்ள ஒரு சிறிய அறையில் அணையின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினரைக் காணலாம்.
அனுமதி இல்லாமல் அந்த பகுதிக்குள் நுழையவோ….புகைப்படம் எடுக்கவோ கூடாது.
இதையறியாத அபி…தன் போக்கில் முன்னேற…..அவளை வேகமாய் பின் தொடர்ந்தான் ரிஷி.
“ஹேய் அபி…நில்லு…! அங்க போகக் கூடாது…!” என்று ரிஷி கத்த….அவனின் குரலில் திரும்பியவள்….ஒரு நிமிடம் நிற்க…அவன் சொன்ன வார்த்தைகள் நியாபகத்திற்கு வர…விடுவிடுவென்று நடக்கத் தொடங்கினாள்.
இவ்வளவு நேரம் அமைதியாய் நடந்தவளுக்கு…அவன் தன்னை பின் தொடர்ந்து வருகிறான் என்று தெரிந்த உடன்…கண்ணீர் வழிய ஆரம்பித்தது.
நடந்த அனைத்தும் ஒரு முறை கண் முன் வலம் வர…..அந்த சிந்தனைகளில் நடந்தவளுக்கு தெரியவில்லை….தான் அணையின் மற்றொரு பகுதியின் வழியாக சென்று கொண்டிருக்கிறோம் என்று…!
ஆபத்தை அவள் உணராமல் செல்ல…அதை உணர்ந்த ரிஷி…ஓடி வரத் தொடங்கினான்.
“ஹேய்…நில்லு அபி….அந்த பக்கம் போகாத…நில்லு…நில்லு….””அபி…!” என்று கத்தியபடி செல்ல…
“அம்ம்மம்மாஆஆஆ…..”“ என்ற வார்த்தையில் அவள் குரல் அடங்க…
“அபிராமி….”“ என்ற அலறலுடன் ரிஷியின் குரலும் மூச்சு வாங்கியது.