ஆபிஸ் சென்றதும் தான் கமாலி ஷா லீவில் சென்று விட்டது தெரிந்த்து. வீட்டிலேயே சொல்லி அழைத்து வந்திருந்தாள் என்ன நடந்தது என்று தெரிந்தால் ஓகே ஆனால் நீயாக தெரிந்து கொள்ள முயற்சிக்காதே என்று
சக அலுவலர் ஒருவர் சொல்ல, ஒஹ் அப்படியா என்று கேட்டுக் கொண்டாம் அவ்வளவே
சைந்தவி அவளிடத்தில் அமர்ந்த பிறகு அவளின் மொபைலை பார்க்க, ப்ரியா விடமிருந்து மெசேஜ் கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணனும், இன்னைக்கு ஈவ்னிங் வரட்டுமா என்பது போல்
இன்னும் கொஞ்சம் நேரத்துல சொல்றேன் என்று அவளுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு அவளின் மெயில் லை பார்க்க…
அவளின் மேற்படிப்புக்கான மெயில்
வாவ் என்று குதிக்கத் தோன்றியது.
வேகமாக எழுந்து சென்றால் விஜயிடம் சென்று அவனிடம் தன் மொபைலை காண்பிக்க, காலையிலயே பார்த்துட்டேன், நீ பார்த்து அதை பீல் பண்ணனும்னு அன்ரீத் பண்ணிட்டேன்
ஏன் என் கிட்ட அப்போவே சொல்லலை என்று சிணுங்க
கங்க்ராட்ஸ் என்றான் மலர்ந்த முகத்துடன்.
தேங் யூ நான் ப்ரித்விவிக்கு சொல்றேன் என்றாள் மகிழ்வாக.
பேசு என்றான்
என்ன முடிவானாலும் அவளின் சாதனை இது, மனது மிகவும் சஞ்சலம் கொண்டது.
அந்த என்குயரி டீம் சென்றிருக்க, பிரவீன் மட்டும் இருந்தார். அலுவல் வேலைகள் முடிய, கமாலி ஷாவிற்கு அடுத்து இருபவனுக்கு தற்காலிக பொறுப்பு கொடுத்தார்
பின் மதியம் லஞ்ச் க்கு போவோம்டா என்று கேட்டார். சென்னை வந்தால் அவரோடு சுற்றுபவன் அவன் தானே, நேற்று இந்த பிரச்சனைகளில் விலகி இருந்தார்.
ம்ம் என்று தலைய்சைத்தவன், சைந்தவிக்கு ஒரு மெசேஜை தட்டி விட்டு கிளம்பிவிட்டான்.
இருவரும் காரில் ஏறவும், என்னடா டல்லா இருக்க என்றார்
அவ்வளவு தெரியுதா பாஸ் என்றவன் ஒண்ணுமில்லை ஐ அம் ஓகே
நல்ல அருமையான அழகான புத்திசாலிப் பொண்ணு டா, உனக்காக எல்லாம் விட்டு வந்திருக்கு யு ஆர் லக்கி, வாழ்க்கையை நல்ல படியா வாழு. நேத்து சைந்தவி பேசினது கேட்டு எனக்கு ரொம்ப ஆச்சாராயம் என்றார்
பாஸ் என்றவன் அவளுக்கு கிடைத்திருக்கும் மேற் படிப்பை சொல்ல
வாவ் சூப்பர்டா, நான் தான் சொன்னேனில்லையா நிறைய உயரத்துக்குப் போவா
ஆனா திரும்ப விட்டுட்டு இருக்கணும் அது தான் நானே நினைச்சாலும் டவுன் ஆகிடரேன்
போடா பூல் எதுக்கு விடணும், அவ பின்னயேப் போ
என் அப்பா பாருங்க அமெரிக்கா காரன் விசா குடுக்க, குடுத்தாலும் அங்கே போய் நான் என்ன செய்வேன் இன்கம் வேணும் பாஸ் இன்கம் வேணும் மீ சிம்பிள் galli boy பாஸ், அம்மா அப்பா இருக்காங்க, மனைவி இருக்கா, பணம் வேணும் பாஸ் பணம் வேணும் அதுக்கு வேலை வேணும் எப்படி பின்னாடி போவேன்
தேடுவோம் டா எத்தனை காண்டேக்ட்ஸ் இருக்கு என்றார் அவனை தைரியப் படுத்தும் விதமாக
சைந்தவியின் முடிவு என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் இவரிடம் பேசிய பிறகு ஒரு நம்பிக்கை, கண்டிப்பா அவளை படிக்க சொல்லணும் என்பதாக.
யார் அவனின் நண்பர்கள் அங்கே இருக்கிறார்கள் என்று யோசிக்க ஆரம்பித்தவன்
அங்கே எதுவும் ஆன்சைட் க்கு வாய்பிருக்கா பாஸ், புதுசா விசிட் எல்லாம் வந்துட்டு போனானுங்க என்று கேட்க
அவனுங்க ஒரு மார்க்கமா இருக்கானுங்கடா எதையும் கடைசி நிமிஷத்துல தான் சொல்றானுங்க… எதுவும் வாய்பிருந்தா செய்வோம். ஹாப்பி பார் யு மென் நாளைக்கு தான் ஊருக்கு கிளம்பறேன் நைட் எனக்கு பார்ட்டி கொடுத்தே ஆகணும்
பாஸ் அக்கா என்னை கொன்னுடுவாங்க என்று அவரின் மனைவியை சொல்ல
கொஞ்சமா லிமிட் டா பார்டி பண்றோம் நைட் என்னோட வந்துடு என்றார்
ஓகே என்பதாக தலையசைத்தான். பின்னே எதிர்காலத்தில் எதுவும் உதவி வேணுமென்றால் நின்றாக வேண்டுமே
ஆனால் இருவருமே கமாலிஷா பற்றிய பேச்சை எடுக்கவேயில்லை. அவர் மேலதிகாரி எதை பேசவேண்டும் பேசக் கூடாது என்பதில் திண்ணமாய் இருக்க
சொல்லிட்டேன் இவனுங்க என்ன பண்ணினா எனக்கென்ன என்று அவனும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை
ப்ரித்வியிடம் சொல்லிவிட… அவனுக்கும் மிகுந்த சந்தோசம் ஆனால் உடனே அண்ணனாய் அடுத்து என்ன என்று யோசித்தான்
என்ன பண்ணப் போற சைந்து என்று ப்ரித்வி கேட்க
இப்போ வேலை பண்ணப் போறேன், எதுவானாலும் அப்புறம் பார்க்கலாம் என்று சொல்லி அவள் வேலையில் ஆழ்ந்து விட
ப்ரித்விக்கு யோசனை, இவ்வளவு தெளிவானவள் இவ்வளவு புத்திசாலி எப்படி இவனிடம் வீழ்ந்தாள்