இத்தனை நாள் மனப் போராட்டங்கள் முடிவிற்கு வந்தது போல அப்படி ஒரு அயர்வு உடலிலும் மனதிலும் சைந்தவிக்கு.
குளித்து வந்து கடவுளை வணங்கி அமைதியாக சோபாவில் அமர்ந்து கொண்டாள். பசித்தது. எப்படியோ குளித்து விட்டாள். காபி போடுவதற்கு கெல்லாம் முடியாது. காலை ஐந்து மணி தான் ஆகியது. ஆனால் அப்படி ஒரு பசி.
கையில் இருந்து அலைபேசியினால் விஜயனிற்கு அழைக்க, நல்ல உறக்கத்தில் இருந்தவன் மெதுவாக விழித்து யார் என்று பார்க்க, சைந்தவி.
படுக்கையில் அவளை பார்க்க காணவில்லை.
பயந்தே விட்டான்
வேகமாக எடுக்க
பசிக்குது எனக்கு காபி வேணும் என்ற அவளின் குரல்
எங்க இருக்க
வெளில ஹால்ல
அங்கயிருந்து எதுக்கு கூப்பிடற
எனக்கு பசிக்குது, ஆனா எனக்கு காபி போட முடியலை
இன்னுமே பயந்து விட்டான்.
வேகமாக எழுந்து வெளியில் வந்து என்ன ஆச்சு என்று பதட்டமாகக் கேட்க
பசிக்குது என்றாள் மீண்டும்
என்னவோ முடியலைன்னு சொன்ன என்றான் பயந்து
ப்ச் டயர்டா இருக்கு என்றாள் அயர்வாய் கண்மூடி.
நேற்று மதியம் உண்டது, பின்பு மாலை ஒரு காபி அவ்வளவே, அதன் பிறகு விஜயன் எங்கே விட்டான் அவளை என்றும் சொல்லலாம், எங்கே விஜயனை விட வைத்தால் இவள் என்றும் சொல்லலாம். சரி விகிதப் பங்கு தான் ஆனாலும் அயர்ச்சி மட்டும் பெண்ணவளுக்கே அதிகம்
வேற ஒன்னுமில்லையே என்றான் கவலையாக.
அவனை பார்த்து அருகில் வருமாறு கையசைக்க…
அவன் அருகில் குனியவும், வெற்று மார்ப்பில் கை முஷ்டி செய்து வலிக்காமல் குத்தியவள், முதல்ல காபி குடு அப்போ தான் எதுவும் இருக்கா இல்லையான்னு தெரியும்
வேகமாக சென்று அவன் பாலை பிரிட்ஜில் இருந்து எடுத்து காய்ச்ச ஆரம்பித்தான் அவளை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே
அவளோ பார்வையை எல்லாம் திருப்பவேயில்லை, விஜயன் மீது மட்டுமே.
சோபாவில் அமர்ந்து எதிரில் இருந்த டீபாயில் கால் நீட்டி வைத்திருந்தாள். ஓபன் கிச்சன், அதனால் அவன் வேலை செய்வது நன்கு பார்வையில் பட்டது. ஒரு த்ரீபோர்த்ஸ் டி ஷர்டில் இருந்தாள்.
அந்த பார்வை தீவிரமாய் அவனை பார்த்து இருந்தது.
வேகமாய் எல்லாம் செய்து சுட சுட காபியுடன் அவள் அருகில் அமர,
ரொம்ப சூடா இருக்கும், நான் குடிக்கிற சூடுக்கு குடு என
வேகமாக சின்ன கப்பில் கொஞ்சமாக ஊற்றி வாயில் ஊதி அதை சுழற்றி, அவளுக்கு கொடுக்க, குடித்து கொடுக்கவும் மீண்டும் அதே மாதிரி கொடுக்க முழு காபியையும் குடித்து முடித்த பிறகு சற்று தெம்பாய் உணர்ந்தவள்…
சிறு புன்னைகையோடு அவனைப் பார்க்க
அதன் பிறகு அவனின் முகம் சற்று தெளிந்தது
நான் தூங்குமுன்ன கேட்டேன் தானே ஆர் யு ஓகே ன்னு என்று அவன் சொல்ல
அப்போ ஓகே இப்போ இல்லை ரொம்ப டயர்ட் உடம்பெல்லாம் வலிக்குது
எங்க வலிக்குது நான் பிடிச்சு விடறேன் என்றான்
என்ன காமெடியா
சே சே சீரியஸா என்றவன் அவளின் கால்களை தூக்கி மடி மீது வைத்து கொண்டு மெதுவாக பிடித்து விட, காபி வயிற்றை சற்று தெம்பாக்கியிருக்க, அவன் கால் பிடித்து விடுவது உடலுக்கு ஒரு இதத்தைக் கொடுக்க, அவன் மேலேயே ஏறி வாகாக சாய்ந்து அமர்ந்துகொண்டவள் எனக்கு வலிக்காத மாதிரி கட்டிப் பிடிச்சிக்கோ என்று சொல்லி கண் மூடியவள் தான், நிமிடத்திற்குள் உறங்கி விட்டாள்.
ராட்சசி என்னை பயமுறுத்திட்டா என்று அவளை திட்டிக் கொண்டே, அவளை ஆழ்ந்து சுவாசித்தான். குளித்து வாசனையாய் இருந்தவளின் சுகந்தம் ஒரு உற்சாகத்தை கொடுக்க அவள் மீண்டும் விழிக்கும் வரை ஆடாது அசங்காது அவளை ஏந்தி இருந்தான்.
மனது அப்படி ஒரு பரவச நிலையில் இருந்தது.
தங்களுடைய வாழ்வு சிறக்க வேண்டும் என்று மனம் விடாது இறைவனிடம் வேண்டியது.
அவளின் மொபைல் அருகில் இருக்க, அதில் நோட்டிபிகேஷன் வந்ததன் சத்தம்.