அத்தியாயம் 18

மாலை நேரம் போல தான் தூக்கத்தை விட்டே எழுந்தான் விக்ரா. தமையன்களோடு, நாச்சி, ராதை கூடவே சமரசுவும் மிஸ்ஸிங்.

எழுந்தவனுக்கு முதலில் கண்களில் பட்டது தன் சட்டையை பிடித்தபடி உறங்கி கொண்டிருந்த லாவா தான். உதட்டில் லேசாய் புன்முறுவல்.

ஆனாலும் எவ்வளவு நேரம் இப்படியே தூங்குவாள் என சட்டையை விட்டு இவள் கையை பிரித்து, அலேக்காய் தூக்கி கொண்டு தங்கள் அறைக்குள் சென்று கட்டிலில் படுக்க வைத்தான்.

ஆனால் அதிலேயே இவளுக்கு விழிப்பும் வந்துவிட்டது. எழுந்து அமர்ந்துவிட்டாள்.

“பெயின் கொறஞ்சிருக்கா, இல்லை ஹாஸ்பிடல் போவோமா?” என கேட்டபடி இவனும் அருகில் அமர்ந்தான்.

 “பெயின் குறஞ்சிருக்கு, சமாளிக்க முடியலைன்னா போய்க்கலாம்” என்றவள். “எங்க வீட்டில் விட்டுடேன். ரொம்ப கில்ட்டியா இருக்கு!” மீண்டும் பேச்சை துவங்கினாள்.

“போகலாம் ஆனா இப்போ இல்லை. இப்போ உன் அப்பா அளவுக்கு அதிகமான கோபத்தில் இருப்பாங்க. இப்போ நீ அங்க போனா வார்த்தை தடிக்கும். ஆம்பளைங்க அடிச்சிகிட்டா கூடரொம்ப நாளைக்கு வலிக்காது.

ஆன உன் அப்பா ஏதாவது வார்த்தை விட்டா இந்த ஜென்மத்துக்கு இரண்டு குடும்பமும் விரோதிங்க ஆயிடுவோம்.

கொஞ்ச நாளில் கண்டிப்பா இரண்டு குடும்பமும் பழைய மாதிரி ஆகிடுவோம். அதுக்கு டைம் ஆக தான் செய்யும். அதுவரை நாம பொறுமையா தான் இருக்கனும்” சாதாரணமாய் பேசிக்கொண்டிருந்தவனின் குரல், சற்று இறுக்கமாய் மாற

“எல்லாத்துக்கும் மேல இத்தனை சிரமத்துக்கு பிறகு எனக்கு கிடைச்ச உன்னை போக விட மனசே இல்லை. எம் மேல நம்பிக்கை இருந்தா நீ இங்கேயே இரு. இல்லைன்னா..” சொல்ல வாய் வரவேயில்லை இவனுக்கு. அதை விட எங்கே கிளம்பிவிடுவாளோ என்கிற பயம் தான் அதிகமாய் ஆட்டிபடைத்தது.

இருக்கிறேன் என்றும் சொல்லவில்லை போகிறேன் என்றும் சொல்லவில்லை. என்னவோ செய் எனும் மனப்பான்மையை நன்றாகவே உணர்ந்தான்.

இந்த பிரச்சனைக்கு மற்ற பெண்களாய் இருந்தால் வானுக்கும் பூமிக்கும் குதித்து கொண்டிருப்பார்கள். இவளென்ன இவ்வளவு அமைதியாய் இருக்கா, என்ற யோசனைகளுக்கிடையில் இவன் பார்வை அவள் கழுத்தில் விழ “தாலியை கழட்டி போட்டிருந்த, எப்படி மறுபடியும் கழுத்துக்கு வந்தது?” கேட்டான் இவன்.

“நீ எஸ்ஐ கிட்ட பேசினதுன்னு சொல்லி வீரா ஒரு மேசேஜ் போட்டு விட்டிருந்தான்” அதான் அலர்ட்டாகி தாலியை போட்டுட்டு வந்தேன்.

ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வரும் போது அடிச்சாரா உங்கப்பா? அவள் கன்னத்தை பிடித்து, அதிலிருந்த ஐவிரல் தடத்தை பார்த்தபடி கேட்டான்.

“ம்.. உன் மேல கேஸ் கொடுக்கனும்னு அடிச்சாரு”

 “விருப்பமில்லாம தானே தாலி கட்டினேன். அதற்கு பிறகும் டார்ச்சர் பண்ணினேன் தானே? சொல்ல போனால் நிறைய பிரச்சனை என்னால் தான்.  ஸ்டேஷன் வந்த நீ ஏன் என் மேல கம்ளைண்ட் பண்ணல?” கேட்டவனிடம் “பண்ணிருக்கலாம் தான். ஆனால் அந்த இன்ஸ்பெக்டர்” என இழுக்க

“இன்ஸ்பெக்டர்?”

“அப்பா அடிச்சது கொஞ்சம் தான் ஆனால் போலீஸ் அடி தனி தானே! பத்தாததுக்கு உன்னோட உயிர் தனியா, உடம்பு தனியா பிரிச்சுடுவேன்னு வேற சொன்னார். நாழு போலீஸ் வேற இருந்தாங்க. நாழு பேரும் அடிச்சுடு வாங்களோன்னு பயந்து” சொல்லி முடிக்கையில்

“பொய் சொன்னீயாக்கும்” நமட்டு சிரிப்பு தான் இவனுக்கு.

“ம்” என இவள் தலையசைக்க

“ஆனாலும் என்னை காப்பாத்த இவ்வளவு தூரம் பொய் சொல்லி, அப்பா, அம்மாவை விட்டு வரணும்னு என்ன அவசியம்”

“நீ ஏன் ஃபிரண்ட், பெஸ்டி, உனக்காக செய்வேன்” இவள் இழுக்க

“ஓ.. அப்போ எப்போ புருஷன் போஸ்டலாம் கொடுப்பீங்க” வம்மிழுத்தான் இவன்.

“அது லவ் வந்த பிறகு, கொடுக்கலாமா, வேணாமான்னு யோசிச்சு சொல்றேன்”

“ஓ.. இப்படி இரண்டு பேரும் அடி வாங்கி, மிதி வாங்கி, போலீஸ் வரைக்கும் போனதுக்கெல்லாம் என்ன பேராம்..”

“கொழுப்பு தான் வேறென்ன? அமிக்கிட்டு இருந்திருக்கனும், வேலியில போற ஓணானை தூக்கி வேட்டிக்குள்ள விட்டா, குத்தாம! கொஞ்சுமா?” என இவள் கேட்க

“ஓணான் நீயா, இல்லை உங்கப்பனா” சிரிப்பை அடக்கி இவன் கேட்க

“இரண்டு பேரும் இல்லை, நீ பினாத்திட்டு திரிவியே காதல் காதல் காதல்னு.. அதான் ஓணான்” இவள் கூறிட

“ம்..ஓணான்” என பார்த்தவன்

“இரத்த களரியான இவ்வளவு கலவரத்திலும், சிரிச்சு பேசிகிட்டு சீரியஸ்னஸ் இல்லாமல் இருக்கோம்.. இதுக்கெல்லாம் பேர் லவ் இல்லாம, வேற என்ன?” இவன் கேட்க

தலை குனிந்து கொண்டாள் இவள் “நீ எப்போ இதை புரிஞ்சிகிட்டு காதல்ன்னு பேர் வைக்க, நான் எப்போ என் புள்ளைக்கு பேர் வைக்க..? ம்.” என குனிந்திருந்த இவள் தலையை நிமிர்த்தி புருவங்கள் ஏறி இறங்க இவன் கேட்க

“நான் இருக்குற கன்டிஷன்க்கு சோப்பு போட்டு கூட குளிக்க முடியாது, பிள்ளை வரைக்கும் போய்ட்ட” ஒரு மார்க்கமாய் பார்த்து கேட்டாள்.

சிரித்தே விட்டான் விக்ரா ‘லேய் விக்ரா, நீ கனவு கண்ட மாதிரி பர்ஸ்ட் நைட் கனவுல கூட நடக்காதுடா’ எண்ணங்கள் இப்படி ஓட, கூடவே இவன் பார்வையோ இவளை வட்டமடித்தது.  இவளும் அவனையே பார்த்தாள்.

சண்டை, சச்சரவு, காட்டு கத்தல் பேச்சு, கோரசான பாடல் என எப்போதும் சத்ததிற்குள்ளேயே தோழமையை வளர்த்தவரிகளிடத்தில் பேரமைதி!

கட்டிக்கொண்டு உரசிகொண்டு, முத்தமிட்டுகொண்டு இருந்த போதெல்லாம் வராத ஓர் மென் உணர்வு இப்போது இருவரின் உள்ளேயும்.

அதை உணர்ந்தோ என்னவோ இவள் பார்வை தாழ, தாழ விடாது நிமிர்த்தி தன்னை நோக்கி இழுத்து நெற்றியோடு நெற்றி சேர்த்து மூக்கோடு மூக்குரசி அவள் முகத்தில் இளைப்பாறினான்.

அந்நேரம் ராசு என அழைத்துக்கொண்டு நாச்சி வர, இருவரும் பிரிந்து அமர்ந்தனர்.

இரண்டொரு வார்த்தைகள் லாவாவிடம் பேசி அதன் பின் தான் மகனிடம் திரும்பினார்.

“ஏய்யா, ராசு மீனாகிட்ட போன்ல பேசுனேன். அந்த மிலிட்டரிகாரன் மீனாவையும் அடிச்சுப்புட்டான் போலய்யா, நைட்ல இருந்து காய்ச்சலாம், அது தான் எழும்பல போல!” நாச்சி கூற, இவன் லாவாவை பார்க்க “ஆமாம்” என இவளும் தலையசைத்தாள்.

“லாவா இங்க இருக்கான்னு சொன்னீங்களா! என்ன சொல்லுச்சு அத்த?”

“வீட்டுக்கு வந்தாய்யா, நீங்க தூங்கிட்டு இருந்தீங்க. எழுப்ப மனசுவரலை.. பிறவு உன் அப்பா, நானு மீனா மூனு பேரும் பேசிட்டு இருந்தோம். அந்த பாரிஜாதம் தேன் எல்லாத்துக்கும் காரணம், அவ தூண்டி விட்டு தேன் ராஜசேகரு அந்தாட்டம் ஆடிருக்கான் போல.. அவ அங்க நடந்தை சொல்ல, நானும் இங்கன நடந்தையெல்லாம் சொல்லிட்டேன் ராசு. அவ புருஷன் ஊருக்கு போக தண்டிக்கும் வர மாட்டேனுட்டா.. பிறவு எம்புள்ளையை சந்தேஷமா பார்த்துகோங்கன்னு கிளம்பிட்டா, ஆனால் சந்தோஷமில்லை  முகத்தில” என சேர்த்தே சொல்ல, லாவா எப்போ இந்த பிரச்சனை தீர! என கண்களை இறுக்கி மூடிக்கொள்ள

“ஒரே பொண்ணுல்ல, எவ்வளவு கனவிருக்கும், கவலை இருக்க தான் செய்யும்.  திடீர்ன்னு நடந்த கல்யாணம் ஏத்துக்க முடியாதும்மா.. உனக்கு ஒரு பொண்ணு இருந்து இந்த மாதிரி வந்தா நீ முதலில் சும்மா இருப்பியா? அப்பா சொல்லவே வேண்டாம் வெட்டி போட்டுடுவார்ரு.. இந்த விசயத்தில் மீனாத்த எனக்கு சப்போர்ட் பண்றதே பெரிசும்மா. அவ அப்பாவை இப்போ சமாதானம் பண்றதெல்லாம் முடியாத விசயம். தானா தான் சரியாகனும் அதுக்கு ரொம்ப நாளாகும்” மனதில் பட்டதை பேச

இவனது கவலை கண்டு “விடுய்யா பார்த்துகலாம்” என மகனை தேற்றினார் நாச்சி.

ஆரவாரத்துடன் மகிழ்ச்சியாய் நடக்க வேண்டிய திருமணம், கலவரத்திற்குள் நடந்ததை யாராலும்  ஏற்று கொள்ள முடியவில்லை. காலம் மாற்றும்.

******

அன்று இரவு தூங்குவதற்காக இவன் இவனது அறைக்கு வர, மதியம் போல வரமாட்டான் என தைரியமாய்  படுத்திருந்தவளின் அருகே அமர்ந்தபடி “தள்ளிபடு லாவா” என அருகில் வந்து அமர்ந்தான்.

திடுக்கிட்டு இவள் உருள, உருண்ட வேகத்திற்கு கீழே விழப்போனவளை இடையில் கைப்போட்டு இழுத்து தனபக்கமாய் நகற்றினான்.

“ஸ் ஆ..” என வலியில் முகம் சுருக்கியவளிடம் “தள்ளிபடுன்னு தானே சொன்னேன்.. உருளவாடி சொன்னேன்” என இவன் கத்த

முகம் சுருக்கியவளிடம் “முதுகு தான் பார்க்கிங்.. மத்த இடமெல்லாம் நோ பார்க்கிங்னு சொன்னதெல்லாம் மறந்திடுவியா!” கோபமாய் கத்தியதில் இவனை ஒண்டிப்படுத்தாள்.

இருவரின் இடையே நான்கு விரல்கடை அளவு இடமிருக்க “இது என்னடி கேப்பு” பற்களுக்கிடையே கடித்து வார்த்தைகளை துப்ப

“இதுக்கும் மேலன்னா, உன் மேல தான் ஏறிபடுக்கனும்” இவளும் கடுப்புடனே கூற

‘அதற்கு தாண்டி தவிமிருக்கேன்’ வாய் சொல்ல துடித்தது ஆனால் இவள் இருக்கும் நிலைக்கு தான் யோசிப்பதே தவறு என அமைதியாய் படுத்துவிட்டான்.

ஆனால் தூக்கம் தான் வந்த பாடில்லை. காலையில் இவளது வீட்டின் பின்புறம் வைத்து பேசிக்கொண்டிருக்கையிலயே “ஏற்கனவே அடிவாங்க வேண்டிவ தான்” என்ற விரக்தியான அவள் குரல் இவன் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

இவளது பிரச்சனையின் ஆரம்பத்தில் இருந்து இவன் கண்டறிந்த ஒன்றே ஒன்று விஜய் மட்டும் தான்.

ஆம் அவன் தான்.. ஒரு வேளை அவன் எதுவும் குடைச்சல் கொடுக்கிறானோ? படாரென எழுந்தமர்ந்தவன், இவள் தூங்குவதை உறுதி செய்துவிட்டு நடுநிசி என்றும் பாராமல் லாவன்யாவின் போனை எடுத்துக்கொண்டு வந்தான். லாவாவின் போன் பேட்டர்னை அவள் போன் உபயோகிக்கையில் பார்த்துவிட்டான்.  ஆகையால் அன்லாக் செய்தான். வாட்ஸ் அப், இன்ஸ்டா என கேலரி, பைல் மேனேஜர் என ஒரு மணி நேரமாய் நோண்டியவன் ஏதும் கிடைக்காமல் தூக்கி போட்டுவிட்டு சோபாவிலேயே தலை சாய்ந்தான்.

மீண்டும் ஒரு எண்ணம் மனதில், சட்டென எழுந்தான் வாட்ஸப்பை மட்டும் அன்இன்ஸ்டால் செய்து, மீண்டும் பேக் அப்போடு இன்ஸ்டால் செய்தான்.

இப்போது அதை ஓபன் செய்து விஜய்யுடனான  சாட் ஹிஸ்டரி கண்ணில் பட்டது.

ஒரு நொடி கண் மூடி திறந்தவன் பின் மனதை ஒரு நிலைபடுத்திக்கொண்டு ‘விக்ரா என்ன நடந்திருந்தாலும் லாவாவை விட்டுடாதே’ மனதோடு இவன் பேச ‘நீ விட்டாலும் நான் விடமாட்டேன்டா.. நிறையை மட்டுமில்லை குறையையும் சேர்த்து ஏத்துகிறது தான் காதல்’ இவன் மனமும் பதிலடி கொடுத்தது.

ஆழ்ந்த மூச்செடுத்து ஒரு முடிவோடு ஆரம்பத்திலிருந்து படிக்க துவங்கினான்.