இதோ காலையில் முதல் முறை இருவரும் ஒருங்கே அலுவலகம் கிளம்பினர்.
சென்றவன் ஹெச் சார் ரிடம் ரிப்போர்ட் செய்து கமாலியிடமும் வந்து நின்றான்.
அவள் அமர்ந்திருக்க, கை கட்டி அவன் நின்ற தோற்றம் ஒரு பயத்தைக் கொடுத்தது.
“என்ன?” என்றாள்.
“மிசஸ் ஷா, நான் இங்க வேலை பார்க்கிறேனான்னு ஒரு போலிஸ் என்குயரி, எதுக்குன்னு கூடத் தெரியாது, எதுக்குன்னு கேட்கணும், இல்லை இங்க வேலை பார்க்கிறான், இல்லை வேலை பார்க்கலைன்னு பதில் சொல்லியிருக்கணும். ஆனா நீங்க என்ன பண்ணுனீங்க? அந்த போலிஸ் கிட்ட இதோ இவ அவன் மனைவி கேட்டுக்கோன்னு சொல்வீங்களா?” என்றான் அடக்கப்பட்ட ஆத்திரத்தோடு.
“உன் மனைவி தானே அவ? அதுதானே விசிட் அப்போ பிரச்சனை ஆச்சு, அது தான் சொன்னேன்” என்றாள் அலட்சியத்தோடு.
“தமிழ்நாடு வந்து எத்தனை வருஷமாச்சு. இன்னும் இந்த மரியாதை இல்லாத தமிழை விட முடியலை ரைட். என்ன பிரச்சனைன்னு உனக்கு தெரியாது” என்று அவனும் மரியாதையை கைவிட்டு ஒருமையில் பேசினான்.
“ஒரு பொண்ணை உன்னோட பதில் போலிஸ் ஸ்டேஷன் போக வெச்சிருக்கு, அவளுக்கு அசிஸ்டன்ட் கமிஷனர் தெரியுன்றதால அவரோட போயிருக்கா, பிரச்சனையில்லாம திரும்ப வந்துட்டா, ஆனா அந்த சமயம் அவர் கூட போயிருக்கலைன்னா என்ன வேணா நடந்திருக்கலாம். அப்போ அதுக்கு பொறுப்பு நீ எடுத்துப்பியா?”
“நீயும் ஒரு பொண்ணு ஒரு ரெஸ்பான்சிபில் போஸ்ட்ல இருக்குற, அவ்வளவு என்ன ஈகோ உனக்கு, இப்படி ஒரு பதில் சொல்லியிருக்க?”
“வெல், நான் உன் மேல என்னோட பேர் போட்டு நடந்த இன்சிடன்ட் சொல்லி வைஸ் பிரசிடென்ட்கிட்ட கம்ப்ளைன்ட் குடுத்திருக்கேன் அண்ட் திஸ் இஸ் ஃபார் யுவர் நாலேட்ஜ்” என்று சொல்லி சென்றுவிட்டான்.
“சொல்லியிருக்ககூடாதோ” என்று தோன்றிய போதும் “என்ன நடந்துவிடும்?” என்ற அலட்சியம் இருக்கத் தான் செய்தது.
“வார்னிங் குடுப்பாங்க… இல்லை எக்ஸ்ப்லனேஷன் கேட்பாங்க, என்ன ஒரு அப்ரைசல் கட் ஆகும் பார்த்துக்கலாம்” என்று மிதப்பாக இருந்தாள்.
ஆனால் விஜயன் அவளை விடுவதாய் இல்லை. எத்தனை அடி எத்தனை உதை, யாரும் அவளை வேணுமென்றே ஒரு அடி அடித்திருந்தால் கூட என்னாவது, சாகும் வரை அதை எப்படி மறப்பான், எப்படி தீர்ப்பான்.
அதையும் விட “அந்த எம் எல் ஏ பொண்ணு வந்தா தான் உன் பொஞ்சாதியை விடுவோம்” என்று அந்த இன்ஸ்பெக்டர் சொன்ன வார்த்தைகள் இன்னும் கூட காதில் ஒலிக்கிறது.
வெளியே வந்துவிட்டார்கள் அவளுக்கு எந்த சேதாரமுமில்லாமல், பெரிதாய் எதுவும் நடந்திருக்காது என்றாலும், சிறிதாய் எதுவும் கூட என்றாலும், ஒன்று யாரையும் தாக்கி இன்னும் சிக்கல்களை அதிகமாக்கி அவனுமல்ல ஜெயிலில் இருந்திருப்பான்.
இத்தனை நாட்களாய் வஞ்சம் வைத்திருந்தான் கமாலி ஷா மேல்.
இப்போது களத்தில் இறங்கிவிட்டான்.
அவளின் மேல் டிசிப்ளினரி அக்ஷன் எடுக்க வேண்டும் இல்லை அவளை பதவியில் இருந்து கீழிறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து. அவள் மற்றவர்களிடம் நடந்து கொள்ளும் அலட்சியங்கள், வார்த்தைகளால் கத்துவது துன்புறுத்துவது என்று ஆதாரத்தோடு அனுப்பியிருந்தான்.
அடுத்த நாள் காலையே ஒரு என்குயரி டீம் வந்து இறங்கியது.
இது எதுவுமே சைந்தவிக்கு தெரியாது…
பிரவீன் அவரின் ஒரு டீமுடன் வந்து இறங்கினார். அதில் இன்னும் மூன்று பேர் இருந்தனர். மொத்தம் நான்கு பேர்.
பிரவீனும் விஜயனுடன் பேசவில்லை, விஜயனும் ப்ரவீனுடன் பேசவில்லை, ஏன் அறிமுகப் பார்வை கூட இல்லை. என்குயரி என்பதினால் தான் ஒரு தலை பட்சமாக நடந்ததாக வந்துவிடக் கூடாது என்பதினால் மிகுந்த கவனமாக பிரவீன் இருக்க, விஜயன் அவர் புறம் திரும்பக் கூட இல்லை.
மிஸ் சைந்தவி உங்களை இலவன் ஒ க்ளோக் கூப்பிட்டாங்க என
என்னய்யா எதுக்கு என்ற குழப்பம் அவளிடமிருந்தாலும் பெரிதாக அதனை பற்றி யோசிக்கவில்லை. ஏனென்றால் என்குயரி என்று அவள் யோசிக்கவேயில்லை.
அவள் அவளிநிடத்தில் இருந்து எழும் போது, என்ன நடந்ததோ அதை அப்படியே சொல்லு, கூட்டாவும் வேணாம் குறைக்கவும் வேண்டாம் என்றான்
அவளுக்கு தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை, என்ன என்றாள் புரியாமல்
போ என்றான்
நேரமாகிவிட்டதால் அவள் உள்ளே வர…
கேமரா வில் இதனை பார்த்திருந்தனர்,
என்ன சொன்னாங்க மிஸ்டர் விஜயன் உங்க கிட்ட என
அவன் சொன்னதை சொல்ல
சரி என்ன நடந்ததோ சொல்லுங்க
எதை பத்தி எனக்கு தெரியலை, இங்க என்னை எதுக்கு கூப்பிட்டு இருக்கீங்க