அவர்கள் வீடு வந்து நுழையவுமே ப்ரித்வியிடம் இருந்து அழைப்பு, “எங்கடா போனீங்க? என் பேபியை தனியா விட்டுட்டு” என்று வேகமாய் பேசினான்.
“டேய் வீட்டுக்கு வந்துட்டோம், பேபியை அவ பாட்டிக்கிட்ட விட்டுட்டு தான் வந்தோம்”
“உங்களை தானே பார்த்துக்க சொன்னேன்”
விஜயனிடமிருந்து அலைபேசியை வாங்கியவள் “அண்ணா டேய், அடங்குடா, உன்னை அப்புறமா பார்த்துக்கறேன், இப்போ அங்கே பாரு, மூத்த மாப்பிள்ளை இல்லைன்னா என்னவோ ஏதோன்னு பேசுவாங்க, காலையில முகூர்த்ததுக்கு இல்லை, இனியாவது எல்லாம் முடியறவரை அங்கே இரு, சரியா” என்று அதட்டலோடு வற்புறுத்தலாய் பேசினாள்.
“அப்புறம் உன் பொண்டாட்டி பண்ற பிரச்சனையை பார்க்கவே உனக்கு நேரம் சரியாயிருக்கும்”
“பிரச்சனை பண்ணினா அவ என் பொண்டாட்டியா இல்லையான்னு நான் முடிவு பண்ணிருவேன்”
“டேய் அண்ணா, அப்படியெல்லாம் பேசக் கூடாது”
“பார்த்துக்கலாம் வை” என்று சொல்லி வைத்துவிட்டான்.
“என்னவோ ஆச்சு ப்ரித்விக்கு?” என்று கவலையாய் பேசினாள். இது அவனின் இயல்பு அல்ல என்றுணர்ந்து.
இவர்கள் உடை மாற்றி அமர, மூர்த்தியின் அழைப்பு, “பூவ பிரசவத்துக்கு ஆசுபத்திரில சேர்த்திருக்கோம்” என்று.
“எந்த ஹாஸ்பிடல்?” என்று கேட்டவன், “சரி நான் வர்றேன்” என்று வைத்தான்.
சைந்தவி பார்க்க “அக்காவை டெலிவரிக்கு ஹாஸ்பிடலைஸ் பண்ணியிருக்காங்க, நான் போகணும்”
“நான் வர வேண்டாமா?” என்று கேட்டவளிடம்,
குழந்தை பிறக்கட்டும் அப்புறம் வருவியாம், இப்போ வேண்டாம் என்றவன் கிளம்பிவிட்டான்.
பெரிய ஹாஸ்பிடல் தான், அஆனாலும் இவர்கள் ஏரியா கூட்டம் சற்று இருந்தது, கவுன்சிலரின் மனைவி அல்லவா>
டேய் இன்னாங்கடா பண்றீங்க, கிளம்புங்க கிளம்புங்க என்று அவர்களை இவன் சென்றதும் விரட்டினான்.
எதா இருந்தாலும் ஊட்டாண்ட கண்டுக்கோ, இப்போ கிளம்பிகினே இரு, ஆசுபத்திரில சவுண்டு உட்ட்கினு போங்கடா என்று விரட்ட
இவன் அணிந்திருந்த ஆடைக்கும் இவனின் தோற்றத்திற்கும் இவன் பேசும் மொழிக்கும் சற்றும் சம்மந்தம் இல்லை. ஆனாலும் கூட்டம் இவன் பேச்சிற்கு கட்டுப் பட்டு அமைதியானது
பின்னே இத்தனை நேரம் ஹாஸ்பிடல் நிர்வாகம் திணறிக் கொண்டிருந்தது.
வேகமாக வந்த ரிசப்ஷனில் இருந்த பெண், உள்ளையும் நாலஞ்சு லேடீஸ் ரொம்ப சத்தம், அவங்களையும் அனுப்பிவிடுங்க சர் என்றாள் பரிதாபமாக
நான் பார்த்துக்கறேன் என்றபடி அவன் அங்கே போக,
பிரசவ அறைக்குள் பூங்கோதை இருக்க…
வெளியில் மூர்த்தி, அவனின் அம்மா, இவனின் அம்மா, மற்றும் அவனின் ஏரியா பெண்கள் ஒரு பத்து பேருக்கு மேல் இருப்பார்.
மூர்த்தி டென்ஷனாக நின்றிருக்க
இன்னாத்துக்கு இம்புட்டு டென்ஷனு, நீ எங்கம்மா உங்கம்மா உன்னோட அச்சியடன்ட் ன்னு ரெண்டு பேர் இர்ப்பானுங்கலே அவனுங்க மட்டும் இருக்கீங்க, பாக்கி எல்லாரையும் கிளப்பற நீ இப்போ, ஆசுபத்திரி யா இன்னா இது, வேற பேஷன்ட் இல்லை…
அவனின் அம்மா எல்லோரும் வீட்டுக்கு வந்ததும் சொல்றோம், இப்போ கிளம்புங்க என்று சொல்ல
எல்லோரும் முனகிக் கொண்டே செல்ல, அப்படியே வெளில இருக்குரவனையும் கூட்டிட்டு கிளம்புங்க என்றான் சத்தமாக
மூர்த்தி அமைதியாக அமர்ந்திருக்க… நல்ல படியா பொறக்கும், டென்ஷன் ஆகாத என்று அமைதியாக உடன் அமர்ந்து கொண்டான்.
சில நிமிடம் கழித்து, உனக்கு எதுவும் குடிக்க வாங்கிட்டு வரட்டுமா என்று கேட்க
இல்லை வேண்டாம் என்று மூர்த்தி சொல்ல
அட அவ நல்லா குழந்தையை பெத்தெடுப்பா என்று மீண்டும் தைரியம் சொன்னா
உள்ளே யாரையும் அவர்கள் விடவில்லை
இவர்கள் கும்பலாக செல்லவும், அவளின் அம்மா, அத்தையை கூட விடவில்லை.
இவனாக அங்கிருந்த சிஸ்டரை அழைத்து எப்படி இருக்காங்க என்று கேட்க
பிரசவ வலி தான் சார் எப்போன்னாலும் குழந்தை பிறக்கும் என்று சொல்ல
சொல்லி சில நிமிடங்களில் குழந்தை பிறந்து விட்டது. நார்மல் டெலிவரி தாயும் சேயும் நலம், பெண் குழந்தை, மிகுந்த சந்தோசம் மூர்த்திக்கு.
அவன் எல்லோருக்கும் கைபேசியில் தகவல் சொல்ல, யாரும் ஹாஸ்பிடல் வரக் கூடாது, ஒன்னு ரெண்டு நாள்ல வீட்டுக்கு அனுப்பிடுவாங்க, அங்கே வந்து பார்த்துக்க சொல்லு என்று விஜயன் சொல்லிக் கொண்டிருந்தான்.