இவள் வர தாமதமாகிக்கொண்டே இருக்க, இவன் இவளுக்கு போன் அடித்தும் எடுக்கவில்லை. ‘அத்த நீங்க கூப்பிட்டு பாருங்களேன்’ என மீனாவையும் இழுத்துவிட்டான்.
தாயின் அழைப்பை உடனே எற்றாள். அவரோ வழக்கம் போல கிழித்து தள்ள, அவருக்கு பயந்து வீட்டிற்கும் வந்து சேர்ந்தாள்.
“ஏண்டி இம்புட்டு நேரம்” என திட்டிய அன்னையை கண்டு கொள்ளாது, விக்ரா வந்திருப்பது தெரிந்தும் அவனை திரும்பியும் பாராமல் டிவியின் முன் அமர்ந்தாள்.
இவர்கள் ஒட்டி திரிவதும் சண்டையிட்டு கட்டி உருள்வதும் சாதாரணம், அது போல ஏதோ சண்டை என நினைத்தவர் “ஏண்டி அவனே சொல்லிட்டு போகலாம்னு வந்திருக்கான். இப்படி மூஞ்ச திருப்பிட்டு இருந்தா என்னடி அர்த்தம், பேசு அவன்கிட்ட” என எடுத்து கொடுக்க, அந்நேரம் ராஜசேகர், மீனாவின் போனில் அழைக்க, அதை எடுத்து கொண்டு டைனிங் டேபிளில் அமர்ந்து விட்டார் மீனா.
இவன் “வெளியே வா லாவா, பேசனும்” ரிமோட்டை வாங்குவது போல் அருகில் வந்தவன் இவள் காதுக்குள் பேச “முடியாது வரமாட்டேன்” என இவன் புறமாய் முகத்தை கூட திருப்பாமல் இவள் பதிலுரைத்தாள்.
முகத்திலடித்தாற்ப்போல் கூறினாலும் இவன் பலமுறை இவளை ஜாடையிலேயே அழைக்க, இவளோ முடியாது என நின்றுவிட்டாள்.
முறைத்து பார்த்தான் இவளை. பின் ‘அத்த டீ கிடைக்குமா?” என சத்தமாய் கேட்க, போனில் பேசியபடியே “உனக்கில்லாததா?” என இவரும் சமையலறைக்குள் நகர்ந்தார்.
நகர்ந்தது தான் தாமதம், அவளருகில் வந்து அமர்ந்தவன் இடையிலும் முழங்காலிலும் கை கொடுத்து அலேக்காய் தூக்கி மடியில் வைத்து இறுக்கி அணைத்து கண் மூக்கு காது கன்னம் கழுத்து என முகம் முழுதும் தாறுமாறாய் முத்தமிட்டு தீர்த்து பின் அவசர அவரசமாய் இதழ்களில் தஞ்சமடைந்தான்.
எப்போதும் பெரும் சத்தத்தோடு அவளை முத்தமிடுபவன், இன்றோ சத்தமே இல்லாமல் முத்தமிட்டு கொண்டிருந்தான்.
அதுவும் போதாது என “வாய திறடி, ஒரே ஒரு பிரெஞ்ச் கிஸ் போயிடுறேன்” அவள் முகம் விட்டு நிமிராமலேயே இவன் கேட்க, அவள் அதிர்வில் அதிர்ச்சியில் என்ன செய்வதென தெரியாமல் சிறு பிள்ளையாய் விழித்து மாட்டேன் என மறுக்க,
‘திமிர் பிடிச்சவ வாய திறக்காளா பாரு’ ஒரு மனம் கெஞ்ச ‘திறக்க வைடா’ மறுமனம் மிஞ்ச, ஒரு நொடி அவள் உடலில் அழுத்தமாய் பதிந்தது அவன் விழிகள்.
அவள் கழுத்தை இறுக்கி பிடித்திருந்த கையை சட்டென இறக்கி இறுக்கி அழுத்தமாய் பிடிக்க ‘ம்மா’ என வாயை திறந்து அலறும் முன் திறந்த வாயில் இடம் பிடித்து கொண்டான் இவன்.
விடுவேனா என இவனும் விட்டு தொலையேண்டா என இவளும் மூச்சு முட்ட ஓர் முத்த போராட்டம் நடந்தது அங்கே.
மனமேயில்லாமல் தான் இவளை விட்டான். விடுபட்ட நொடி அடித்து துவைத்துவிட்டாள் இவனை.
அதற்கும் அசராமல் சோபாவிலேயே தலைசாய்த்து பெரு மூச்சு வாங்கி கொண்டிருந்தவனின் கட்டு போட்டிருந்த கையை பிடித்து திருகிவிட “ஆ..” வலி தாங்காது அலறிவிட்டான் விக்ரா.
ஏற்கனவே கணவனிடம் பேசும் மும்மரத்தில் சமையலறையிலேயே இருந்தவர், இவன் கத்திய சத்தத்தில் மீனா ஓடி வர, “ஏய் அவனை விட்றி, ஆம்பளை பயல போய் அடிச்சிட்டு இருக்க. அறிவில்லை” என இருவருக்கும் இடையில் வர
“உனக்கு தான் அறிவில்லை. டீ போட இவ்வளவு நேரமா உனக்கு, டீ போட போனியா.. இல்லை டீ தூள் தயாரிக்க ஊட்டிக்கே போய்ட்டியா, ஆடி அசைஞ்சு வர்ற பாரு திருவாரூர் தேரு மாதிரி” காட்டுகத்தலாய் கத்தி அவனில் இருந்த கடுப்பு மீனா புறமும் திரும்பியது.
“என்னடி வாய் ஓவரா போகுது” என தாயும் மகளும் சண்டையை ஆரம்பிக்க, ‘அப்பாடி நாம தப்பிச்சோம்’ எழுந்த சிரிப்பை வாய்க்குள்ளேயே அடக்கி நைசாக கிளம்பிவிட்டான் அவளிடமிருந்து ஆசையாய் எடுத்துக்கொண்ட முத்த நினைவுகளோடு.
ஆயிற்று ஒரு மாதம்.
இந்த ஒரு மாதமும் அவன் அழைக்காத நொடிகளில்லை. ஆனால் அவள் தான் இவனை பிளாக்கில் போட்டுவிட்டாளே வெண்ண மவ, மறுபடியும் பார்க்குறப்ப இருக்கு’ என “அத்த லாவா இருந்தா கொடுங்களேன், போனை எடுக்கவே மாட்றா” என மீனாவிடம் கூட உதவி கேட்டுவிட்டான்.
“என்ன தான் சண்டை இரண்டு பேருக்கும், அவ நீன்னாலே காத தூரம் ஓடிடுதா” என மீனா சலித்து கொள்ள, அடுத்து அவரிடம் உதவி கேட்பதை நிறுத்தி விட்டான். ஆனால் அவளை பற்றி விசாரித்து கொள்வான்.
இந்த ஒரு மாதமாய் அவளுடன் பேசாமல் நடைபிணம் போல் தான் ஆனான். பைத்தியம் பிடிக்காத குறை தான்.
பெஸ்டியாகவே இருந்திருக்கலாம், நான் அவளுக்கு சாம்பூவாகவும், எனக்கு அவள் வெண்ணயாகவே இருந்திருக்காலம். தாலியை அவள் கழுத்தில் போட்டுவிட்டு அவசரபட்டுவிட்டோம், அவசரபட்டுவிட்டோம் என புலம்பிதள்ளிவிட்டது மனது.
தான் செய்த தவறை சரிசெய்யலாம் என்றால், தாலியை, மனைவி என்ற எண்ணத்தை இவன் விட வேண்டும். ஆனால் அவனால் முடியவில்லை.
அதுவும் அவளை தொட்டு தீண்டி ‘ஐய்யோ’ நினைவுகளே அவனை கொன்று தின்ன பிடறியை அழுத்தமாய் தேய்த்து கண்கள் மூடி அப்படியே அமர்ந்துவிட்டான்.
விஜயை பார்க்கையில் அவள் கண்களில் தோன்றும் மின்னல். ச்சைய்.. அப்படியென்ன விஜய் என்னைவிட உயர்ந்து போனான், சொல்லாமல் கொள்ளாமல் ஜங்கென வந்து குதித்தது பொறாமை எனும் தீ..
அந்த தீயில் வெந்தபடி இன்னமும் ஹைதராபாதத்தில் தான் இருக்கிறான். எடுத்து கொண்ட வேலை முடிந்தபாடில்லை. இன்னும் ஐந்தாறு மாதங்களில் முடியும் என்பதால் நேரங்காலம் பாராமல் செய்தாகவேண்டிய கட்டாயம்.
நன்றாக ஓடிக்கொண்டிருந்த நிறுவனம் இழுத்து மூடும் நிலைக்கு வந்திருக்க, நிறுவன மறுசீரமைப்பிற்காக தான் ஹைதராபாத் வாசம். அவனது வேலையே அது தான்.
அதன் பொருட்டு அவ்வப்போது முதலீட்டார்களுடன், கடனாளர்களுடன் நிறைய கூட்டங்கள் நடத்தபட, இவனோ அதில் இவளை மறந்து தான் போனான்.
அப்படி ஒரு கூட்டத்தில் இருக்கையில் தன் மொபைலுக்கு லாவன்யாவிடம் இருந்து வந்திருந்த இரண்டு மூன்று மிஸ்ட்காலையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான்.
சட்டென ஒரு மின்னல் இவனில் மின்னி மறைந்தது. ஆனால் இந்த ஒரு மாத காலமாய் பேசாமல் விட்ட கோபமே முன்னுக்கு வர, பின் எடுக்க வில்லை. அழைத்து அழைத்து அவளது அழைப்பும் நின்றிருக்க, இப்போது இவன் தடுமாறி போனான், திரும்ப அழைப்பதா வேண்டாமா என?
இவர்கள் நண்பர்களாய் கொட்டமடித்த நாட்களில் இருபது முப்பது மிஸ்ட் கால் வந்தால் கூட கவலை படாமல், முப்பத்தி ஒன்றாம் முறையாய் அடிக்கையில் எடுத்து
‘போன் எடுக்கலைன்னா விட்டு தொலையேன்டி, திருப்பி திருப்பி ஏன் விடாமல் அடிக்குற?’ எரிச்சலுடனே கேட்டபடியே தான் போன் எடுப்பான்.
“அப்படி தாண்டா அடிப்பேன். முப்பது தடவை இல்லை முன்னூறு தடவை கூட அடிப்பேன், இப்ப என்ன? என் போன் காலை எடுக்க முடியாதளவு ஐய்யா என்ன புடுங்கி தள்ளிட்டு இருக்கீங்களாம்” இப்படிபட்ட முகவுரைகளுடன் தான் அந்த நாளும் முடியும்.
ஆனால் இன்றோ, இதோ அழைக்கவா வேண்டாமா என தடுமாறுகையிலேயே, இவள் மீண்டும் அழைக்க முதல் ரிங்கிலேயே எடுத்துவிட்டான் “எஸ்க்யூஸ் மீ.. இட்ஸ் இம்பார்ட்டண்ட்.. ஜஸ்ட் ஸ்டே டூ மீனிட்ஸ்” என மீட்டிங் ஹாலை விட்டு வெளியே வந்தான்.
“ஏய் என்னடி இன்னேரம் போன் பண்ணிருக்க. மப்புல எங்கேயும் விழுந்து வாரிட்டியா? என்ன?”
“இல்லை”
“இல்லையா? ஒருவேளை உங்கப்பன் வாங்கிட்டு வந்த மிலிட்டரி சரக்கை நீ திருடிட்டு போறதை பார்த்துட்டு வெளுத்துவுட்டாரா?” என
“அய்யோ இல்லைடா, இது வேற” சலித்து கொண்டாள் இவள்.
“அப்படியும் மாட்டலயா? நீ மட்டும் எப்படிடி மாட்ட மாட்டிங்கிற? நானெல்லாம் பீர் அடிச்சிட்டு போனாலேயே மாட்டிப்பேன்” புலம்பல் இவனிடம்.
“அடிச்சோமா, அமைதியா ரூமுக்கு போனமா, அடிச்சு போட்ட மாதிரி தூங்குனோமானு இருக்கனும். நீ அண்ணன் தம்பிக கூட எல்லாம் குஜால கும்மி அடிச்சிட்டு, வரவன் போறவனையெல்லாம் வம்புக்கு இழுத்துட்டு, உங்கப்பான்னு கூட பார்க்காம சலம்பிகிட்டு திரிஞ்சா? நீ குடிச்சது உங்கம்மாக்கு மட்டுமில்ல, ஊருக்கே தெரியும். இதுல மாட்டிப்பேன்னு பகுமானம் வேற” படு எரிச்சல் இவளிடம்.
“நீ..நீ.. குடிச்சுட்டு அமைதியா போற ஆளா? கிணத்தடில நின்னு பாட்டு பாடுறேன்ற பேர்ல காக்கா மாதிரி காட்டுகத்தல்ல கத்துனது மறந்து பேச்சோ. இது அமைதியா போறதாடி” என இவன் எகிறினான்.
“நான்.. நான் காட்டுகத்தலா கத்துனனா? நான் சின்மயிக்கே டப் கொடுக்குற மாதிரி பாடுவேன். என் குரல் போனதுக்கு காரணமே நீ தான்?” பதிலுக்கு இவளும் எகிறினாள்.
“நானா? எப்படி எப்படி?” கேள்வி கேட்டான் இவன்.
“சும்மா இருந்த எனக்கு பாட்டில் பாட்டிலா வாங்கி ஊத்திவிட்டு, குயில் மாதிரி இருந்த என் குரலை காக்கா குரலா மாத்தினது நீ தான்” காரணகர்த்தாவே இவன் தான் என்பது போல் இவள் பேசினாள்
“வாங்கிட்டு வந்தேனு சொல்லு, ஊத்திவிட்டேனு சொல்லாத, ஊத்திகிட்டது நீ டி”
“சரி நான் தான் ஊத்திகிட்டேன். இப்போ இவ்ளோ பேசுற நீ, பொம்பளை புள்ள இதெல்லாம் குடிக்க கூடாதுனு சொன்னீயா?”
“அதற்கு நீ பொம்பளை புள்ளைக கூட பழகனும். ஒன்னுக்கு நாழு ஆம்பளை பசங்க கூட பழகுனா, பழக்கம் மட்டுமில்ல, புத்தியும் பசங்க மாதிரி தான் வரும்”
“அப்படியா.. அப்போ இன்னையில இருந்து உன்னை டிவோர்ஸ் பண்றேன்டா. இனிமேல் நான் பொண்ணுங்க கூட மட்டும் தான் பழகுவேன்”
“பழகு பழகு, ஆனா வானவில்லா ஆயிடாத”
“வானவில்லா அப்படினா?”
‘இவளுக்கு மட்டும் கேட்கும் படி குசுகுசுவென பதில் சொன்னதில்’
“ச்சீ.. இனி உனக்கும் எனக்கும் என்னடா பேச்சு, வைடா போனை”
“ச்சீ நீ மொத வைடி போனை” பட்பட்டென போன் காலை கட் செய்துவிட்டு, எதற்கு போன் செய்தாள் என அவளுக்கும் தெரியாது, அவனுக்கும் தெரியாது. இப்படி அர்த்தமில்லா பேச்சுகள், சண்டைகள் என மணிகணக்காய் போனிலே கழிந்திவிடும் நாட்களும் உண்டு.
“என்னை இந்த மீனா அடிச்சுட்டாடா, என்னன்னு கேட்காம, எங்கிட்ட பேசாத” என குறைந்தது ஐம்பது மேசேஜ்களையாவது தட்டிவிட்டு, இவனை மீனாவிடம் பேச வைத்து, ‘லாவாவை ஏன் அடிச்சீங்கத்த’ என கேட்கும் வரை ஓய மாட்டாள்.
இப்படி தனக்காக ஆள் தேடி ‘என்னை கேட்க ஆளில்லைன்னு நினச்சியா என்னும் பெஸ்டி இருக்கும் மம்மி’ என மார்தட்டிக்கொள்ளும் நிமிடங்களும் உண்டு.
ஆனால் அதன் பிறகு இவள் செய்து வைத்ததை மீனா மூலம் கேட்டறிந்து “செய்றது பூராம் குட்டி சாத்தான் வேலை இதில் சப்போர்ட்டுக்கு ஆள் தேடுறியா நீ, உன்னால எனக்கும் திட்டுடி. இனி போன் பண்ண, மேசேஜ் பண்ண சாவடிச்சிடுவேன் வைடி போனை” என தோரணம் கட்டி தொங்க விட்டு விடுவான்.
“நீ பெரிய வெண்ண போடா” இவளும் ரோசமாய் வைத்துவிடுவாள்.
இத்தனை சண்டையிட்டும் மாத விடுமுறை நாட்களில் “டி நாளைக்கு ஊருக்கு கிளம்புறேன், எதுவும் வாங்கிட்டு வரவா?” என இவனும்
“ஹாண்ட் பேக் பிஞ்சு போச்சுடா.. நல்லதா ஒன்னு வாங்கிட்டு வா.. அப்புறம் வாட்டர் பாட்டில் மாதிரியே குடை இருக்கும்ல அதுவும் வேணும். டேய் டேய் வச்சுடாதடா.. இரண்டுமே எனக்கு ஒரே கலர்ல வேணும்” என இவளும்
“சொல்லிட்டல்ல.. கண்டிப்பா வேற வேற கலர் தாண்டி” என வில்லனாய் இவன் சிரிக்க
“அப்போ எனக்கு ஒன்னும் வேணாம். எதுவும் வாங்கிட்டு வராத” வீம்புக்காய் பேசி வைத்துவிடுவாள்.
இவன் ஊருக்கு வந்த பிறகு, வாங்கி வந்த பேக்கும் குடையும் வேறு வேறு நிறங்களில் இருந்தாலும் அவள் சொன்ன கலரை விட இவனது தேர்வு அபாரமாய் இருந்தது.
கூடவே அவள் கேட்காத அழகிய ஸ்டைலான ஹை ஹீல்சும் இருக்கும் அதில். குதூகலமாகிவிடுவாள்.
ஆனாலும் இவனிடம் அதை காட்டிக்கொள்ளாது வெகு அழகாய் இருந்த குடையையும் , பேக்கையும் அவனிடமிருந்து பறித்து எடுத்துவிட்டு “வீம்புக்குன்னே வேற வேற கலரில் வாங்கிட்டு வந்திருக்கல்ல.. போ காசு தரமாட்டேன்.. போடா.. சாம்பூ மவனே” வேண்டுமென்று ஈசிக்கொண்டு இவள் சொல்ல
“ஆமாமாம், இல்லாட்டாலும் கொடுத்துட்டு தான் மறு வேளை பார்ப்ப.. போடீ வெண்ண மவளே” போனில் மட்டுமல்லாது, வீடு வரையிலும் வந்து நிற்கும் சண்டைகள் ஏராளம்.
ஆனால் இன்றோ தாலி என்ற ஒன்று இருவரின் இடையே வந்த பிறகு இவனிடம் பெரும் தயக்கமே முன்னால் நின்றது.
ஆனாலும் முதல் ரிங்கிலே போனை எடுத்தான். ஒரு மாதம் கோபமே முன்னிற்க “சொல்லு.. என்ன?” ஒற்றை வார்த்தையில் கேட்டான்.
அவளும் அன்று எதிர்பார்த்தாளோ என்னவோ? வழமையான ஆரவாரங்கள் இன்றி வந்த அவனது அமைதியான குரலும், குரல் ஏற்படுத்தும் குறுகுறுப்பும் அவளை ஏதோ செய்தது.
எப்படியோ பேசிவிட்டோம் இனி அவள் முறை, என இவன் அமைதி காக்க, அதற்குமேல் அமைதிகாத்தாள் இவள்.
இருவரது இதழ்கள் பேசாத பேச்சை, விசாரித்து கொள்ளாத அக்கரையை இருவரது மூச்சுகாற்றும் கவனமாய் செய்து கொண்டிருந்தது.
அவளது பட்டாசு பேச்சுகளையே கேட்டு இருந்தவனுக்கு, அவளின் அமைதி புதுவித குதூகலத்தை உண்டுபண்ணியது. அவளை நினைக்கையிலேயே புது ரத்தம் பாய்ந்தது போல உணர்ந்தான்.
“ஓய்.. என்ன பேசுறியா இல்லை, நான் போனை வைக்கவா?” மிரட்டும் படி ஒரு குரல் இவனிடமிருந்து.
“அவன் போன் பண்ணான். என்னை பாக்கனுமாம், ஆஞ்சநேயர் கோவிலுக்கு வர சொல்றான் அதுவும் இன்னைக்கு நைட்டே” மொத்தமாய் கொட்டினாள் எடுத்த எடுப்பிலேயே..
யாரவன் என கேள்வி எழுப்பி அவளை படுத்த பிடிக்காமல், “விஜயா வர சொன்னான்?” கேட்டபடியே நெற்றி சுருங்கியது இவனுக்கு.
“ம்” மெதுவாய் இவள் கூற
‘போ.. போய் பாரு’ என மற்ற நேரமாக இருந்தால் சொல்லியிருப்பான். ஆனால் இப்போது இவளை அவனிடம் அனுப்பவும் தயங்கினான் அதுவும் தனியாக, அதுவும் இரவு நேரம்’
படுயோசனைக்கு பிறகு, கேலன்டரில் பதிந்த பார்வை இன்று வெள்ளியென காட்ட, “இன்னைக்கு வேணாம், நாளைக்கு நைட்டு வரேன்னு அவன்கிட்ட சொல்லு, அதுக்கு பிறகும் அவன் ஓகே சொன்னால் போய் பாரு”
“ஏன்? இன்னைக்கு வேண்டாம்?” இவள் கேட்க
“ம் நாளைக்கு தான் நாள் நட்சத்திரம் எல்லாம் ஒன்னா கூடி ஒமகுண்டம் வளக்குதாம், அன்னைக்கு நாளை தள்ளி போட்டால் உங்க காதலும் வளருமாம்” கோபத்தை வார்த்தைகளில் காட்டினான்.
மறைந்த கோபம் மீண்டும் இவளுக்கு உடைப்பெடுக்க “நீ பண்ணின வேலைக்கு கல்யாணமும், அவன் பண்ணின வேலைக்கு காதலும் ரொம்பவே கசந்து போச்சு. இதில் அவன் கூப்பிட்டதுமே போகாமல், உன்கிட்ட சொல்லனும்னு நினைச்சேன் பாரு, என் புத்தியை”
“அடிச்சுக்கோ செருப்பாலையே அடிச்சுக்கோ, நீ டொக்கு டொக்குனு போட்டுட்டு போவல்ல அந்த ஹீல்ஸ்ஸாலேயே அடிச்சுக்கோ, ஆனா அப்புறமா அடிச்சுக்கோ. இப்போ நான் சொன்ன மாதிரி அவன் கிட்ட கேட்டு பார்த்துட்டு, அவனோட பதில் என்னன்னு எனக்கு மேசேஜ் போட்டுவிடு, தனியா போன சாவடி அடிப்பேன்” குரல் மிகவும் கோபமாக தான் வந்தது.
“நான் மட்டும் சொம்பையா? நானும் சாவடி அடிப்பேன்டா” இவள் எகிற
“நானும் இழுத்து வச்சு கிஸ்..” சொல்ல வந்து, தன் வாயிலேயே படபடவென அடித்து கொள்ள
“இப்ப பேசு, சொல்லு.. பேசுடி” கொண்டாட்டமாய் இவன் பேசியதில், பட்டென போன் காலை இவள் துண்டிக்க, பெரும் குரலெடுத்து சிரித்தான் விக்ரா.
போனையே பார்த்திருந்தவன், “லாவா.. லாவ்ஸ் மை லவ்ஸ், என்னடி பண்ண? இத்தனை வருஷம் நான் இப்படியில்லையேடி, சீக்கிரமா வந்துடுடி, எங்கிட்ட இருக்குற மாதிரி வேற எவனகிட்டயும் இவ்வளவு இயல்பா நீ இருக்க மாட்டடி!’ அவள் பெயரை உச்சரித்தபடி நெற்றியில் முட்டி தேய்த்தான் கைப்பேசியை. ஸ்கிரீன் சேவராக இவளது அழகிய முகமே. ஸ்கை ப்ளூ டாப்பில், ப்ரீ ஹேரில் அழகிய சிரிப்புடன் இருந்த அவளுடனே முட்டிகொண்டாற்ப்போல் ஒரு எண்ணம்.