அத்தியாயம் 11

வீரா, கண்மணி சொந்தமில்லையென்றாலும் ஒரே ஊர், ஒரே இனம் என்பதால் சரியாக ஒரு வருடம் முன்பு இவர்களது திருமணம் பற்றி பேச்சு எடுத்த போது, போகையிலும் வருகையிலும் கண்மணி மீது பார்வை விழுந்ததில் அவனுள்ளும் விழுந்துவிட்டாள்.

 லேசாய் பிரியமும் முளைவிட தொடங்கிட திருமணத்திற்கு வீரா உடனே ஒப்புக்கொண்டு விட, கண்மணியோ அவனது முரட்டு தோற்றத்தை கண்டு பதறி வேண்டாம் என மறுத்துவிட்டாள்.

அது அப்படியே நாச்சி காதிலும் வந்து விழ, “வீராவை வேணாம்னு சொல்ற.. போடி போக்கத்தவளே..   எம்புள்ளைக்கி உன்னை விட நல்லவளா, அழகானவளா பார்க்குறேன்டி” என வாசலில் நின்று கத்தி கோபத்தை அத்தோடு முடித்துவிட்டார் நாச்சி.

ஆனால் வீராவின் காதல் சிறகு முளைக்கும் முன்பே வெட்டி எறியப்பட சிறு வெறுப்பு உண்டானது, அவள் மீது.

நாட்கள் செல்ல செல்ல அவளை கண்டாலே ஒதுங்க துவங்கிவிட்டான்.

ஆனால் கண்மணியோ அவனது விலகலின் பிறகே அவனை நோட்டம் விட துவங்கி, அவளது பார்வை அவனில் விழுந்தது.

முரட்டு தோற்றம் அவனது தம்பிமார்களுடன் இருக்கையில் காணாமல் போனதை கண் முன்னே கண்டாள்.

தாய் தந்தை இல்லாமல் போனாலும் தைரியமாய் வாழ்வை எதிர்கொண்டவனை லேசாய் பிடித்தது.

தவறான பார்வையோ, தவறான பேச்சோ எதுவும் கண்டதில்லை அவனில்.

‘மெதுவாய் ஒரு எண்ணம், நமக்கு ஒரு வேளை சரிபட்டு வருவானோ? சரி ட்ரை பண்ணி பார்ப்போமே’ எனும் எண்ணம் வேரூன்றியது.

இப்படி நகர்ந்த நாட்களுக்கிடையில் உடைகள் எடுக்க வேண்டுமென்று அவனது ஜவுளி கடைக்கு சென்றாள்.

“ஆத்தி, இவ எதுக்கு இங்கன வந்திருக்கான்னு தெரியலையே” என கடைபையன் ஒருவனை அழைத்து “என்ன வேணும்னு பாரு” என சொல்லி, இவன் கணக்கு வழக்கை பார்ப்பது போல நடித்தான்.

உள்ளே வருகையிலேயே அவனது நடவடிக்கையை கப்பென பிடித்தவள் “லேடீஸ் இல்லையா” வீராவிடம் பார்வை வைத்து, பையனிடம் மேம்போக்காய் கேட்டாள்.

“சாப்பிட போய் இருக்காங்க வர வரை காத்திருக்க முடியுமா அக்கா” என பையனும்

“காத்திருக்கலாம் முடியாது” பையனிடம் கூறியவள் “நீங்க வாங்க, சின்ன பையன்கிட்டலாம் கேட்க முடியாது” என நேடியாகவே வீராவிடம் அவள் சொன்னதை கேட்டு, “ஆத்தி என்னத்தை கேட்க போறாளோ” நெஞ்சை நீவி விட்டபடி, பையனை கண் ஜாடையிலேயே அனுப்பிவிட்டு, ‘இவ இப்படி சாப்பாட்டு நேரத்திலேயா வரணும்’ என நொந்தபடி “என்ன வேணும்” என கேட்க

அவனை நெருங்கி ‘கிட்ட வாங்க சொல்றேன்’ துணி எடுத்து போடும் டேபிளை தாண்டியும் குனிந்தாள். இவனும் லேசாய் அவள் இதழ்பக்கமாய் குனிந்து தன் காதை கொடுக்க “ஜட்டி வேணும்” இவள் கேட்தில் மீண்டுமாய் நெஞ்சை நீவிக்கொண்டு “சைஸ்” என இருந்த வாக்கிலேயே பொசிஷன் மாறாமல் இவன் கேட்க

ஹஸ்கி வயதில் “90”  என்றவள் பின் “இல்லையில்லை 95” எனவும் இவன் விழி பிதுங்கி போய், நன்றாக அவளிடம் இருந்து விலகி

“ஏய், உனக்கு “85” ஏ போதும்” என வாய் சொல்ல பார்வையோ, இவளிடையில் பதிந்து மீண்டது.

பாவி எங்கலாம் பார்க்குறான், முதல் முறையாய் வெட்கம் பிய்த்து தின்ன, முகம் சிவப்பதை தடுக்க முடியாமல் “எங்க தாத்தாக்கு 95 தானே” என்றாள் நமட்டு சிரிப்போடு.

“என்ன, தாத்தாவுக்கா?” அதிர்ச்சியில் இவன் கேட்க

“ஆமாம், தாத்தாவுக்கு தான்” சிறிதும் மாறாத நமட்டு சிரிப்போடு சொல்ல, இரண்டடி இடைவெளி விட்டு நின்றாலும் அவன் நறநறவென பற்களை கடிப்பது தெளிவாய் கேட்டது. அடக்கமாட்டாத சிரிப்பு அவளுள் இருந்தும் அடக்கி இவள் நின்றிருக்க. கடுப்பில் ரேக்கில் இருந்த எல்லாவற்றையும் எடுத்து போட்டு, “எது வேணுமோ எடுத்துட்டு போ” என எரிச்சலில் கூறினான்.

அத்தனையையும் கலைத்து போட்டுவிட்டு “இதுல ஜாக்கி கம்பேனியே இல்லையே” என நக்கலாக கேட்க

“ஏன் உங்க தாத்தன் ஜாக்கில தான் ஜட்டி போடுவாரோ” எரிச்சலில் இவன் பதிலடி கொடுக்க

“ஏன் நீங்க போடும் போது அவர் போட கூடாதோ” என இவள் எகிறினாள்

அதிர்வில் கண்கள் பெரிதாய் விரிந்து “நான் ஜாக்கி போடுவேனு உனக்கு எப்படி தெரியும்”  வாய் பேச, கையோ தானாகவே இடுப்பில் இருந்த பேண்டை ஏற்றி விட,

“ஓ அப்போ நீங்களும் ஜாக்கி தானா.. சொல்லவேயில்லை.. ஆமா சைஸ் என்ன?” கண்ணடித்து கேட்க

சுர்ரென ஏறியது கோபத்தில் “விட்டேன் வச்சுக்க, செவுலு பிஞ்சிக்கும். சைஸ் கேட்குற நீ” என இவன் கத்த

“நானாவது கேட்க தான் செஞ்சேன், நீங்க அளந்து பார்த்த மாதிரி கரெக்ட்டா சொன்னீங்க தானே” மேலும் பேச வந்தவளை பேசவிடாமல் தடுப்பது போல்

“என்னடி வேணும் உனக்கு.. வேணும்கிறதை எடுத்துட்டு போ.. சும்மா என்னை படுத்தாத!” பட்டாசென வெடித்தான்.

“அதான் ஜாக்கி இல்லையே, வந்ததும் சொல்லுங்க வந்து வாங்கிக்கிறேன்” சிலுப்பி கொண்டு இவள் சென்றுவிட்டாள்.

 “இப்போ எதுக்கு இவ வந்தா, வம்பிழுத்தா!” ஒன்றும் புரியாமல் தலையை உலுக்கிவிட்டு போகும் அவளையே பார்க்க, கண்ணாடி கதவில் கை வைத்தவள் திரும்பி ஒற்றை கண்ணை அடிக்க, உடல் அதிர, இமைக்க மறந்தவனாய்  நின்றுவிட்டான்.

அதன் பிறகும் எங்காவது இவனை கண்டால் வம்பிழுத்து, அவனை எரிச்சல் பட வைப்பதே இவள் வேலையானது.

அது அவ்வப்போது விக்ராவின் கண்ணில் பட்டாலும் கண்டு கொள்ளாது இருந்தவன், வீராவிற்கும் லாவன்யவிற்கும் திருமண பேச்சை எடுத்ததிலிருந்து எங்கே தனக்கு போட்டியாய் வந்துவிடுவானோ என நேரம் பார்த்து கண்மணியிடம் கோர்த்து விட்டுவிட்டான்.

இங்கே கண்மணியோ தனக்கு வரும் எல்லா வரண்களையும் தட்டிவிட்டுகொண்டே இருந்தாள். இன்றோ விக்ராவின் தயவில் இதற்க்கொரு முடிவு கிடைத்திருக்க மகிழ்ச்சியோடு நாச்சியை பார்க்க சென்றுவிட்டு அதன் பிறகு தான் வீட்டிற்கு வந்தாள்.

இன்றும் ஒரு வரண் வந்திருக்க, அதை கையில் கூட வாங்காமல் “வேண்டாம்” என மறுத்தாள் கண்மணி.

 பெற்றவர்கள் எத்தனை நாள் பொறுப்பார்கள்  பிடிபிடியென பிடித்து கொண்டனர். “வர்ற வரணையெல்லாம் தட்டிவிட்டுட்டே இருந்தா எப்போ தான் நீ கல்யாணம் பண்ணிக்க போற? இல்லை இப்படியே காலத்தை தள்ளிடலாம்னு நினைக்கிறியா?” என மகளை கண்டு கவலை கொண்டவரிடம் இதற்கு மேல் மறைப்பதில் பிரயோஜனம் இல்லையென உண்மையை உடைத்தாள்.

 ‘கல்யாணம் பண்ணிகிட்டா வீரபாண்டிய தான் இல்லை பண்ணிக்க மாட்டேன்’ என உறுதியாய் நின்றிட

“ஏய், யாரடி சொல்ற? சமரசு அண்ணே மகனவா?” எனவும்

“ஆம்” என இவளும் தலையசைக்க

அதிர்ந்து வாயில் கை வைத்தவர் “ஏண்டி ஒரு நிலையில் நிக்க மாட்டியா நீ.. மாத்தி மாத்தி பேசுற” அவளது அம்மாவும்

“ஏற்கனவே தானா வந்த வரணை, மூஞ்சிலேயே முள்ள கொண்டி அடிச்ச மாதிரி வேண்டாம்னு சொல்லி அனுப்பிட்ட.. இப்போ என்னை எந்த மூஞ்சை வச்சிட்டு மறுபடியும் அந்த வீட்டில் போய் நிக்க சொல்ற” அவளது அப்பாவும் ஏகத்துக்கும் எகிறி கொண்டு வந்தார்.

“அப்போ பிடிக்கலை, இப்போ பிடிச்சிருக்குபா” என தலை குனிந்தபடி சொன்னவள், “நீங்க கல்யாணம் பத்தி பேச போனாலும் அவுங்க வீட்டில் யாரும் வேணாம்னு சொல்ல மாட்டாங்க, ஏன்னா நான் நாச்சி அத்தைக்கிட்ட ஏற்கனவே பேசிட்டேன்” என்றவளின் குரல் தேய்ந்து வந்தது.

“ஏண்டி, நாச்சி மதினிகிட்ட என்னத்தடி பேசி தொலஞ்ச” கண்மணியின் தாய் அதிர

“ஏய், உனக்கு அறிவுகிறிவு ஏதும் இருக்கா இல்லையா. நீயே போய் அவுக கிட்ட பேசுற அளவுக்கு வந்திட்டியா?” அவளின் தந்தையும் அதிர்ந்தார்.

“புள்ளைய வளர்க்க தெரியலனு எங்களை தான் பேச போறாக, ஏண்டி உனக்கு கிறுக்குகிறுக்கு எதுவும் பிடிச்சு பேச்சா” என அவளது தாயும் தந்தையும்  மாறி மாறி திட்டிக்கொண்டே இருக்க, இவளோ எனக்கென வந்தது என நின்றிருந்தாள்.

சரியாய் அந்த நேரம் நாச்சியும் இவருக்கு போன் அடிக்க, அரக்கபரக்க விழித்தவரை “எடுத்து பேசுங்க, இவ வேற யாரையும் கட்டிக்கவும் மாட்டா. தவிர வீரா மாதிரி நல்ல பையன் எல்லாம் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்” என கண்மணியின் தாய் கூற, ஆழ்ந்த மூச்சொன்றை எடுத்துவிட்டு, அழைப்பை எடுத்து, அக்காகிட்ட நீ பேசு, அவுக வீட்டுகாரர்கிட்ட நான் பேசுதேன்” என விலகி விட்டார்.

கண்மணியின் அம்மா, ஸ்பீக்கரில் போட “அலோ” என நாச்சியின் ராகம் கலந்த பேச்சிலேயே, அவரது சுமூகமான மனநிலையை கூற “மதினி சொல்லுங்க” என

“நான் சுத்தி வளைச்சு பேசலத்தா. உன் வீட்டு முன்னாடி நின்னு அன்னைக்கு கத்துனது தப்புதேன். உன் மக தான் வீராவுக்குனு கடவுள் முடுச்ச போட்டுவிட்டுட்டான். கண்மணியும் எங்கிட்ட பேசுனாத்தா. முடிஞ்சத பத்தி பேச வேணாம். நீயும் மறந்துடு நானும் மறந்துடுறேன். எனக்கு இவுக கல்யாணத்துல பரிபூரண சம்மதந்தே. உனக்கும் உம் புருஷனுக்கு எப்படி” என படபட பட்டாசாய் பொரிந்து தள்ளிட

“ஏற்கனவே பேசுனது தானே மதினி, நல்ல நாள் பார்த்து வீட்டுக்கு வாங்க பரிசம் போட்டுடலாம், ஆனா அதற்கு முன்னாடி இரண்டு வீட்டு ஆம்பளைகளையும் பேசி முடிவு பண்ண சொல்லிடலாம் மதினி” என

“சொல்லிட்டல்ல விடு, மத்த எல்லாத்தையும் நான் பாத்துகிடுதேன்” என அவரிடம் முடித்து, கண்மணி கண்மணியின் தந்தை என இருவரிடமும் பதினைந்து நிமிடங்களுக்கு மேலாக பேசிவிட்டே வைத்தார்.

“முதல்ல வேணாம்னாக, இப்போ வேணும்னுதாக, என்ன நினைச்சிட்டு இருக்காக” என பாய்ந்த சமரசுவை நாச்சி வழிக்கு கொண்டு வர

“மாட்டவே மாட்டேன்” என தலைகீழாய் நின்ற  வீராவை விக்ரா வழிக்கு கொண்டு வந்தான்.

விக்ரா சென்றதும் கண்மணிக்கு தான் போன் அடித்தான். “அந்த மரத்தடிக்கு இப்படி வர்ற நீ” உன் மிரட்டி வரவழைத்தான்.

“ஹேய், எங்கம்மாகிட்ட என்னடி சொன்ன? சம்மதம் சொன்ன கையோட நிச்சயம் வரை கொண்டு வந்துட்டாங்க”  என கேட்டான் வீரா..

“சொல்ல மாட்டேன்” என இவளும் “சொல்லுடி, இல்லை இங்கேயே உன் உதட்டை கடிச்சு வச்சிடுவேன்” குரல் மட்டுமல்ல பார்வையும் மிரட்டும் தொனியில் இருக்க

“நீங்களா பண்ணி வச்சா, உங்க இஷ்டத்துக்கு ஓடியாந்து  கல்யாணம் பண்ணிப்பேன், இல்லைனா உம்மவனை இழுத்துட்டு போய் கட்டிகிட வேண்டிருக்கும்னு சொன்னேன்” ஒரே போடாய் போட்டாள்.

அவ்வா! என வாயிலேயே அடித்து கொண்டாவன், “எங்கம்மா நம்பிடுச்சாடி” என அதிர்ந்து இவன் கேட்க

“நம்பினதுனால தானே நமக்கு கல்யாணம் பேசி நிச்சயம் வரை கொண்டாந்துருக்காங்க” ஒற்றை கண்ணை இவள் அடித்தவளை

“முதல்லையே ஏண்டி வேணாம்னு சொன்ன?” சிறிது கோபமேறியது இவனுக்கு.

“தப்புதான், உன்னை போய் வேணாம்னு சொல்லி இருக்கேன். எனக்கெல்லாம் நரகம் தான்” ஒளிவு மறைவு இன்றி இவள் பேச

“என்கிட்ட நிச்சயம் நீ நரகத்தை தான் பார்ப்ப” இவனது குரலில் பட்டென இவள் பதறி நிமிர

இழுத்து இதழணைத்தான் வீரா, “வலிக்குது” என இவள் பிரிய

“வலிச்சாலும் விட மாட்டேன்” பிரியவிடாது இறுக்கி இதழணைத்தான் இவன்.

 அடுத்து ஒரு மாதத்திலேயே நிச்சயம் என பேசி்முடிவு செய்துவிட்டார்கள்.

அப்பாடி இனி லாவா நமக்கு தான் என கனவு கண்டு முடிக்கும் முன் அவனுடைய விடுப்பும் முடிந்திருக்க, இன்று ஹைதராபாத் கிளம்ப வேண்டும்.

அதுக்குள்ள முடிஞ்சா லீவு! இனி இவளை எப்படி பார்க்காம, தொடாம இருக்க போறனோ.. அடியே லாவா!  என அவளை பார்க்க கிளம்பி விட்டான்.

ஆனால் அவள் வேலைக்கு சென்றுவிட்டு இன்னும் வரவில்லை என கூற அவளுக்காக காத்திருந்தான்.