“டேய்.. விக்ரா.. இன்னும் என்னத்தடா புடுங்குற, என் கண் முன்னாடியே என் விஜய் கூட போறாளே, உன்னை.. உனக்கு இருக்குடி!” வாய்விட்டே அலறியவள், ஸ்கூட்டியை விக்ராவின் வீட்டுக்கே விட்டாள் படு வேகமாக.
நீண்டு வளைந்த பாதையில், வளர்ந்து வரும் நகரங்களில் தீப்பெட்டியை அடுக்கி வைத்தார்ப்போல் இல்லாமல், அதே தீப்பெட்டிகளை சிதறடிக்கப்பட்டார் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் காற்றோட்டமான வசதியுடன் கட்டபட்டு இருக்க, சில வீடுகள், தோட்டத்தை பராமறிப்பதற்காகவே கட்டபட்டு பின்னாளில் வசிப்பிடமாக மாறி இருந்தது.
அப்படிப்பட்ட தோட்டவீடுகள் நிறைந்த தெருக்களில், வளைந்து நெளிந்து சென்றாள் விக்ராவை பிடித்து வெளுக்கும் எண்ணத்தோடு.
அவனது வீட்டிற்கு செல்ல வேண்டுமானால் தோட்டத்தை சுற்றி கொண்டு தான் விக்ராவின் வீட்டிற்கு செல்ல முடியும். ஆனால் தோட்டத்தை தாண்டும் முன்பே கண்டுவிட்டாள், தோட்ட கிணற்றின் சுற்று சுவரில் நான்கு பாண்டிகளுமே அமர்ந்து, ஒரே பாட்டிலை நால்வரும் பகிர்ந்து கொண்டிருப்பதை.
‘எத்தனை நாட்களாய் தன் பிரச்சனையை தீர்க்க இவனிடம் கெஞ்சிகொண்டு கிடக்கிறாள், ஆனால் அதைபத்தி கொஞ்சமும் கவலை இல்லாதவனாய் இருந்தவனை உக்ரமாய் முறைத்து தள்ளியவள், “தண்ணியா அடிச்சிட்டு கிடக்க, இருக்குடா உனக்கு” என ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு, தோட்டத்து கம்பிகளின் இடுக்குகளில் புகுந்து அவர்களை நோக்கி இருந்த அந்த மண்பாதையில் நடந்தாள் பூனை போல்.
அங்கே அவர்களோ காலையில் நாச்சி போட்ட உணவை உண்டுவிட்டு, கொட்டமடிக்க வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றடி தோட்டத்தின் புறம் ஒதுங்கியவர்கள் தான். நண்பகல் ஆக போகிறது இன்னும் வீடு திரும்பவில்லை.
கிணற்றின் சுற்று சுவர்களில் அமர்ந்து, தலையில் இருந்து வடிந்த நீரை கூட கண்டுகொள்ளாது, ஈரம் சொட்ட சொட்ட, தண்ணீர் கலந்த ரம் பாட்டிலை அடித்து கொண்டிருந்தனர்.
மூவர் அடித்து, நாலாவதாய் சங்கரிடம் இவர்கள் நீட்டுவதும், அவன் மறுப்பதுமாய் இருக்க, “டேய் இப்போ நீ அடிக்க போறியா இல்லையா?” அவன் கையில் பாட்டிலை திணித்து விட்டு விக்ரா பத்தாவது முறையாய் குரலுயர்த்த
“இல்லை வேணாம்” என பதினோறாவது முறையாக மறுத்தவனோ
“நேத்து தண்ணியடிச்சிட்டு கிடந்தப்போ தான் பேயும் வந்தது, இன்னைக்கும் தண்ணியடிச்சா மறுபடியும் பேய் வரும்டா” சங்கர், தன் முகத்தில் பீதி ஏற கூற, அதே நொடி
“ப்பே” அலற, அவர்கள் முன் ஜங்கென குதித்து நின்றாள். அது சங்கரின் இதயத்திற்கு சிறுதும் பெரிதுமாய் அதிர்வை கடத்த, மறுபடியும் பேய் என திடுக்கிட்டு பதறி துள்ளி கிணற்றினுள்ளே மடார் என விழ
“டேய்.. டேய்..” என அலறிக்கொண்டு ஏனைய மூவரும் பிடிக்க வர, அவர்கள் கைக்கு கிட்டியது என்னவோ பாதியாக இருந்த ரம் பாட்டில் தான். ஆக மொத்தம் மூவருமே காக்க நினைத்தது சங்கரை அல்ல, ரம்மை.
“ஹப்பா.. கொட்டலை” இருந்த பாதி அளவு ரம் வீணாகிவிடுமோ என்ற கவலை தீரந்த மகிழ்வு அப்படியே மூவரின் முகத்திலும் பிரதிபலிக்க,
“ஏண்டா எரும.. உள்ள ஒருத்தன் விழுந்தது கவலை இல்லை, இந்த கர்மம் பிடிச்ச பாட்டிலு மேல ரொம்ப அக்கரை தான் போல” லாவா எரிச்சல்பட
“ஆமாண்டி, தள்ளி விடுறது நீ.. காப்பாத்துறது மட்டும் நாங்களா.. போ.. அவ்வளவு கவலையா இருந்தா, நீயும் போய் விழு” என பிடித்து தள்ளிவிட, பட்டென லாவா விலகிட, அவளுக்கு பின் நின்றிருந்த செல்லபாண்டி விக்ராவின் அழுத்தத்தில் கிணற்றுக்குள் பெரும் அலரலோடு விழுந்தான்.
“ஆத்தி அடுத்து நாம தான் போல” என இவர்களை விட்டு இரண்டடி தள்ளி நின்றான் வீரபாண்டி.
கிணற்றிற்குள் வாரி விழுந்து எழுந்து வந்த இருவரும், தலையில் இருந்த நீரை வழித்து போட்டபடி வந்து நிற்க, அவர்களது கண்களோ விக்ராவை கொலைவெறியோடு பார்த்திருந்தது.
“ஏலே உன் பஞ்சாயத்துக்கு நாங்க தான் சொம்பா.. இப்படி என்னையும் அவனையும் கிணத்துக்குள்ள உருட்டிவிட்டு விளையாண்டுட்டு கிடக்க.. செத்தபயலே” செல்லம் திட்ட
அவர்களது பேச்சை காதிலேயே வாங்காமல் “இங்க எதுக்குடி நீ வந்த? உனக்கிங்க என்ன சோலி” குடிக்க விடாமல் தடுக்கும் கோபம் அவனிடம்..
“ஆமா ஏன் இங்க வந்திருக்கேன்னு உனக்கு தெரியவே தெரியாது.. ஏண்டா உன்னை நான் இரண்டு நாளுக்கு முன்னாடியே வர சொன்னால், திருவாரூர் தேரு மாதிரி ஆடி அசைஞ்சு இரண்டு நாள் கழிச்சு வர்ற..?” இவளது நிலையறிந்தும் எரிச்சலூட்டிக் கொண்டிருக்கிறானே என்ற கோபம் இவளிடம்..
“ஆமா.. உங்கொப்பன் தானே கம்பெனி வச்சு நடத்துறான்.. கேட்டவுடனே, கூட இரண்டு நாள் லீவ் எடுத்துகோன்னு கொடுக்குறதுக்கு, பட்டர் டாட்டர்”
“அப்படினா?” வீரா முந்தி கொண்டு விளக்கம் கேட்க
“வெண்ண மவளே” விக்ரா அர்த்தம் கூறினானா? இல்லை திட்டினானா என அவனுக்கே வெளிச்சம்
“நான் வெண்ண மவளேன்னா.. நீ வெண்ண மவன்” எகிறிக்கொண்டு வந்த லாவாவிடம், பதிலுக்கு இவன் எகிறும் முன்
“டேய்.. உங்க சண்டையை அப்புறமா போடுங்க.. அங்க பாரு அப்படா..” என தோட்டத்தின் மோட்டார் ரூமுக்குள் செல்லும் சமரசுவை கைகாட்டியபடி வந்த செல்லத்தின் குரலில், இப்போது பதறுவது விக்ரா, வீராவின் வேலையானது.
தபதபவென ஓடிப்போன வீரா, ஏதோ பச்சை இலைகளை பறித்து வர, ‘எனக்கு எனக்கு’ என பிடுங்கி, ஏன் ஏதற்கு என கேட்காமலேயே தங்களது வாயில் அமுக்கி மென்று சாறு முழுவதுமாய் தொண்டையில் இறங்கிய கனம் அதை துப்பிவிட்டனர்.
‘இந்த இலை திண்ணா கண்டுபிடிக்க முடியாதாக்கும்” லாவா கிண்டலாய் கேட்க..
“கண்டிப்பா கண்டுபிடிக்க முடியாது” என விக்ரா திமிராய் பார்க்க
“ஆனால் கண்டுபிடிச்சு கொடுக்க தான் நான் இருக்கேனே” புருவம் உயர்த்தி இவள் பார்க்க, நால்வருமே அவளை வெட்டவா குத்தவா என பார்த்திருந்தனர்.
“என்னடா முறைக்குற.. எத்தனை நாள் உன் பின்னாடி நாய் மாதிரி சுத்திட்டு இருக்கேன். கொஞ்சமாச்சும் கண்டுகிறியா? உங்கொண்ணன் கல்யாணத்துக்கு இரண்டு நாள் முன்னாடி வான்னா.. ஆடி அசைஞ்சு, நாளைக்கு கல்யாணத்தை வச்சுகிட்டு, இன்னைக்கு வர்ற” கோபம் தெறித்தது இவள் பேச்சில்.
“இன்னைக்கா.. நான் நேத்து நைட்டே வந்துட்டேன், அது உனக்கும் தெரியும் தானே.. ஏன் பேயா வேசம் போட்டு வந்ததே எனக்காக தானா? சொன்ன நேரத்துக்கு வர்லைன்னற கோபத்தை காட்ட தான?” விக்ரா பிட்டு பிட்டு வைக்க
“என்னது பேயா வந்தது நீயா?” விக்ரா தவிர்த்து அத்தனை பாண்டிகளும் வாய் பிளக்க
“ஆமா அப்படியே பேய்னு நினைச்சு பயந்து தள்ளிட்ட.. அப்போவும் பாய வந்தவன் தானே நீ.. எல்லாரும் பேய்னு நினைச்சு பறந்துட்டு ஓடுனா, நீ மட்டும் எப்படிடா, பொண்ணுன்னு கண்டுபிடிச்ச? கண்டுபிடுச்சதும் இல்லாமல், காஞ்ச மாடு கம்புல பாய்ற மாதிரி என் மேல பாய வேற வர்ற? ச்சைய்.. கர்மம்.. கர்மம்” இவள் தலையிலடித்து கொள்ள
“இது வாலிப வயசு.. இந்த வயசுல பாயாம.. வயசான பிறகு பாஞ்சு பஞ்சர் ஆகி பரலோகம் போறதுக்கா” விக்ரா விட்டாலும் அவன் வாய் விடுவேனா என்றது.
“நீ பரலோகம் போ.. இல்லை பன்னி மேய்க்க போ… ஆனால் உன்னை உன் அப்பாகிட்ட கோர்த்துவிடாமல் நான் போக மாட்டேன்” உறுதிமொழியே எடுக்க
“நாங்க மாட்டுனா நீயும் மாட்டுவ..” வலது கையில் இருந்த பாட்டிலை இடக்கைக்கு மாற்றியபடி இவன் கூற
“நான் தான் சரக்கு அடிக்கலையே” என திமிராய் கூறிய கனம், அவனது வலது கை விரல்கள் அவள் மூக்கை அழுத்தமாய் பிடித்து உயர்த்த, அன்னாந்து இவன் முகம் பார்த்தவளின் செப்பு இதழ்கள் சுவாசத்திற்காக திறந்து கொள்ள, அதில் பாட்டிலை திணிக்க, மீதமிருந்த ரம் மொத்தமும் அவள் வயற்றுக்குள் கடகடவென இறங்கியது.
இறங்கிய பின்பே இவளது மூக்கை விட, வாண்டை வாண்டையாய் வார்த்தைகள் வந்தாலும், தஸ்புஸ்ஸென மூச்சு தான் வாங்கியது அவளுக்கு.
“இப்போ மாட்டுவல்ல” உதடு குவித்து இவன் விசிலடிக்க, விக்ராவின் இச்செயலில், வீராவிற்கும், செல்லத்திற்கும் ஏறிய போதையெல்லாம் நொடியில் இறங்க, அடுத்து என்ன நடக்க போகிறதோ என திக் திக் நிமிடங்கள் நொடிகளாய் கரைந்தது.
வீராவையும், சங்கரையும் ஒற்றை விரல் கொண்டு சுரண்டிய செல்லம் “டேய், அப்பாகிட்ட மாட்டுனா கூட சேதாரம் அதிகமா இருக்காதுடா, ஆனால் இவன்” என விக்ராவை கண்ஜாடையில் காட்டி “போற போக்குல போக்ஸோ ல்ல தூக்கி நம்பள உள்ள வைக்காமல் விடமாட்டான்டா” என பீதியோடு கூற, அடுத்த கனமே காற்றில் அடித்து செல்லும் இறகுகளாய் கலைந்து போயினர் மற்ற மூவரும்.
இதில் பெரிய ஹைலைட்டே இவர்கள் யாருக்காக பயந்தார்களோ அந்த சமரசு, மோட்டார் ரூமை விட்டு எப்போதோ சென்றிருந்தார்.
தஸ்புஸ்ஸென மூச்சுவிட்டு கொண்டிருந்தவளுக்கும் சுவாசம் சீராக சிறிது நேரம் எடுத்தது.
“வயிறு எரியும், இந்தா இதை தின்னு” என அலுமினிய பேப்பரில் சுற்றபட்ட கவர் ஒன்றை நீட்ட
வேண்டாம் என வேகமாய் தலையாட்டி மறுத்தவள் ஏதோ திட்ட வர, அதற்குள், அலுமினிய கவரில் இருந்த சிக்கன் தந்தூரியை பிய்த்து இவள் வாய்க்குள் திணிக்க
அதை துப்பிவிடும் எண்ணத்திலிருந்தவளுக்கு, அதன் சுவை நாபிகமலங்களில் சென்று நர்த்தனம் ஆட, லபக் லபக் என அவன் திணித்ததை விழுங்கியதோடு, அவன் கையில் இருந்ததையும் லபக் என பிடுங்கிகொண்டு, கிணற்றின் சுவரையொட்டி கால் நீட்டி அமர்ந்துவிட்டாள்.
கிணற்றுக்கு பின்பாய் சென்றவன் ஒளித்து வைத்திருந்த இன்னொரு பாட்டிலை எடுத்து, அதை திறந்தபடி சிறு சிரிப்போடு இவனும் இவளருகில் அமர்ந்தான்.