அதில் வேண்டுகோளும் இருந்தது. அதிகாரமும் இருந்தது. வில்வநாதன் இரண்டையும் புரிந்து கொண்டான்.
பாண்டி நாட்டு அழகியை தன் நெஞ்சோடு சேர்த்து கொள்ள, அந்த வீட்டின் போன் ஒலித்தது.
கஜலக்ஷ்மி “ஏன் ராஜா அங்க இருக்கீங்க?” என்று பதட்டம் கொண்டு கேட்க,
“சும்மா தான் பாட்டி, இதோ வந்திடுவோம்” என்று வைக்க,
அடுத்து பானுமதி அழைத்துவிட்டார். “மாம். வந்துடுவோம்” என்று வைத்தவன், “இனி நாம போகலை என்னமோ ஏதோன்னு இங்கேயே வந்திடுவாங்க” என்றான்.
“அவங்களை அவ்வளவு அரட்டி வைச்சிருக்கீங்க” என்றாள் மனைவி.
“இது வேறயா, வா” என்று அவளுடன் மாளிகைக்கு திரும்ப, வழியில் ஊஞ்சல் அருகில் நின்றுவிட்டான்.
“கொஞ்ச நேரம் உட்காரு” என்று மனைவி மறுக்க கேட்காமல் அமர வைத்தான்.
“என்கிட்ட கூட மேடம் கூல் ஆக மாட்டாங்க. ஆனா ஊஞ்சல் அவங்களை கூல் ஆக்கிடும் இல்லை” என்று அசைந்தாடும் பெண்ணை ரசித்தபடி கேட்டான்.
“உங்களுக்கு அப்படி தோணினா நான் என்ன செய்யட்டும்?” என்று மீனலோக்ஷ்னி கேட்க,
வில்வநாதன் ஆடி கொண்டிருந்த ஊஞ்சலில் பாய்ந்து மனைவி பக்கம் அமர்ந்து கொண்டான். “என்னங்க இது. நானே நிறுத்தி இருப்பேன் இல்லை” என்று மனைவி அதிர்ந்து கேட்க,
வில்வநாதன் அவளை தோளோடு அணைத்து கொண்டான். “வெளிய வைச்சு என்ன பண்றீங்க?” என்று பெண் சங்கடம் கொண்டாள். அத்தனை கேமரா இருக்கிறதே. உடன் செக்கியூரிட்டி ஆட்கள் வேறு.
“கட்டி பிடிக்கலை தானே, அப்பறம் என்ன?” என்று அவன் குறும்பாக கண்ணடிக்க,
“போதும். நாம ரூமுக்கு போலாம்” என்று ஊஞ்சலை நிறுத்த பார்த்தாள்.
வில்வநாதன் அப்போது தான் இன்னும் வேகத்தை கூட்ட, “அச்சோ” என்று கணவனின் மார்பு சட்டையை பற்றி கொண்டாள்.
அறையில் தனியாக ஊஞ்சல் வைக்க வேண்டும் என்று அந்த நொடி முடிவெடுத்து கொண்டான் கணவன்.
அவளின் நெருக்கத்தை ரசித்தபடி ஆடி முடிக்க, இருவரும் அறைக்கு திரும்பினர்.
அங்கு மிதமான சூட்டில் பால் வைக்கப்பட்டிருக்க, இருவருக்குமே தேவைப்பட்டது.
வில்வநாதன் பிடி வலுவாக இருக்க, கணவன் கழுத்து வளைவிலே முகத்தை வைத்து கொண்டாள். அங்கு அவள் தேடிய இதம் இருக்க, நன்றாக புதைந்து கொண்டவளுக்கு அவன் வாசனை, உச்சந்தலைக்கு பித்தமாக ஏறியது.
“ம்ஹா” என்ற அவளின் சுவாசிப்பு, வில்வநாதனின் அதிர்வை பூகம்பமாக மாற்றி கொண்டிருந்தது.
“என்னடி பண்ற?” என்றவனின் குரல் கிறக்கத்தில் இறங்கி ஒலித்தது.
“ஸ்ஸ்” என்றவள் கணவனின் முகம் பார்த்து, அவனின் மயக்கத்தில் ஜொலித்த கண்களின் வேட்டையில், அச்சம் கொண்டு, பதட்டத்தில் அவனுக்குள்ளே மூழ்கினாள்.
காற்று கூட நுழைய இடம் கொடுக்க மாட்டேன் என்பதாய் அவள் அணைப்பு இருக்க, வில்வநாதனுக்கு தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை.
கணவனின் கைகள் உரிமையாய் அவளின் இடை சேலைக்குள் நுழைய, மீனலோக்ஷ்னியின் மென் விரல்கள், அவனின் பின் கழுத்து முடியை இறுக்கமாக பிடித்தது.
வலி தந்த அந்த சுகம், அவனை கிறங்க வைத்தது.
கணவனின் கை, அழகியின் இடைக்குள் முழுதுமாக ஆக்கிரமித்து கொள்ள, பிடிமானம் இல்லாமல் அவன் மேல சரிந்தாள்.
வில்வநாதன் அவளின் பாரத்தோடு, கட்டிலில் ஒருவர் மேல் ஒருவராக விழுந்தனர். மற்றவர் உடலை அப்படியே உணர, வெட்கத்தில் தவித்து போனாள் பெண்.
அவளின் வெட்கத்தை விழுங்குவது போல் பார்த்த கணவன், அவளின் கழுத்தில் தன் முகம் புதைத்த நொடி, “ஸ்ஸ்” என்ற மனைவியின் ரகசிய குரல், அவன் அதிகமாக தூண்டிவிட்டது.
கண்களை இறுக்கமாக மூடி கொண்டிருந்த மனைவியிடம், “என்னை பாருடி” என்றான்.
“மாட்டேன்” என்று தலையசைக்க,
“முதல் முத்தம் என் கண்ணோடு தான் இருக்கணும்” என்று இடைக்கு அழுத்தம் கொடுத்தான்.
மீனலோக்ஷ்னியின் சிணுங்கிய கண்களுடன் தன் கண்களை இணைத்து கொண்டவன், அழகியின் உதடுகளோடு தன் உதட்டை இதமாக, முத்தமாக பதித்தான்.
பாண்டி நாட்டு மீனம்மாவின் கண்கள் விரிந்து போக, கணவன் அவளின் கண்களில் முழுதாக மயங்கினான்.
அழகியின் மயக்கத்தில், இதமாக பதிந்த உதடுகள் நான்கும் ஒன்றோடு ஒன்று, ஜோடி சேர்ந்தது. மனைவி கண்களை மூடி கொள்ள, வில்வநாதன் வன்மையை கூட்டினான்.
மீனலோக்ஷ்னி ஏன் என்று கண்களை திறந்து கேள்வி கேட்க, இதுக்கு தான் என்பதாய் மீண்டும் மென் முத்ததிற்கு வந்தான்.
நான்கு கண்களும், நான்கு உதடுகளும் கலக்க, நாங்க ஏன் கலக்க கூடாது என்று தம்பதியின் கை, கால்கள் கேள்வி கேட்டு ஏங்கி நின்றது வில்வநாதனை போல்.
மீனலோக்ஷ்னி கணவனின் மென் முத்தத்தில் மயங்க, கணவன் கால்களை பிணைத்தபடி மனைவியின் கழுத்து வளைவுக்கு வந்தான்.
மீனலோக்ஷ்னியின் சிலிர்ப்பு வெளிப்படையாக தெரிய, அதன் பின்னான வேகம் அதிகம்.
மனைவியின் முந்தானைக்குள் கணவன் இருக்க, கணவனின் டீசர்ட் எங்கோ சென்று விழுந்தது.
அறை மெல்லிய வெளிச்சத்தில் மனைவியை பார்த்தவன் கண்கள் ரசனையில் மயங்கியே போனது.
மனைவி வெட்கத்தில் துடித்து போக, அதற்கு மேல் கணவன் அவளை தவிக்க வைத்தான்.
இருவரின் தொண்டையும் வறண்டு போக, மற்றவரிடமே தங்களின் தாகத்தை தீர்த்து கொண்டனர்.
எவ்வளவு இறுக்கமாக அணைத்தாலும் போதா நிலை. உணர்வுகளின் தாக்கத்தில் வெளிவரும் முனகல்கள் தன் இணைய அதிகமே கொண்டாட வைத்தது.
மனைவியின் வெட்கத்தோடு அவளையும் முழுதும் கலைத்து போட்டவன், இறுதியில் அவளின் முந்தானையில் சரணடைந்து தான் விட்டான்.
மீனலோக்ஷ்னியின் சோர்ந்த உடல், இன்னும் மிதந்து கொண்டிருந்தது.
வில்வநாதனுக்கு இன்னும் மூச்சு வாங்கி கொண்டிருந்தது.
அவர்கள் சென்று வந்த தூரம், தங்கள் இணையிடம் தெரிய, மற்றவரை இதமாக அணைத்து கொண்டனர்.