அத்தியாயம்-30

நாட்கள் அதன்போக்கில் செல்ல, இருஜோடிகளின் நிச்சய நாளும் வந்து சேர்ந்தது.

ஹர்ஷா மனம் நடப்பதை ஏற்று கொள்ள முயற்சித்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றது. நினைவுகளை ஒதுக்கி உன் மனைவிக்கு உண்மையாக இரு, என்ற மனதின் குரலுக்கு பதில் சொல்லும் வகையில் ஹாசியை தோழி என்ற பார்வையில் இருந்து மனைவி என்ற உரிமையோடு பார்க்க துவங்கினான்.

ஆனாலும் ஏனோ முதலில் இருந்த துள்ளல், மனம் நிறைந்த சிரிப்பு இது எதுவும் அவனிடம் இல்லை.

மெரூன் நிற லெஹங்காவில் அழகு தேவதையாக ஹாசியும், பிங்க் நிற லெஹங்காவில் அழகிய தாமரை போல் மித்ராவும் தயராகி கொண்டிருந்தனர்.

உடனே திருமணம் என்பதால் வீட்டில் நெருங்கிய உறவுகளை வைத்து மட்டுமே நிச்சயம் நடைபெற்றது.

பேச்சு பாட்டி வந்தவுடன் “பாட்டி…..” என்று ஓடி போய் அவரை அணைத்து கொண்டான் நிரஞ்சன்.

“அடேய் உன் பாசத்தை கொஞ்சம் குறைச்சுக்கோ. ஊர்ல இருக்கும்போதுதான் என்னை வச்சு செஞ்ச இங்கயுமா” என்க,

அவனோ அவரை பார்த்து அழகாக சிரித்தவன் “எங்கன்னா என்ன? நான் என் பேச்சிய வம்பிழுத்துட்டுதான் இருப்பேன். அதெல்லாம் இருக்கட்டும் என்னோட மிட்டாய் எங்க” என்று கண்ணடித்து கேட்க,

அவன் சொன்னதில் மனதில் உண்டான மகிழ்ச்சியை மறைத்தவர், நெஞ்சில் கை வைத்து “ஆத்தி….. மீண்டும் மீண்டுமா. எப்பா ராசா என் பேத்தி வர்ற நேரம் ஆச்சு போய் மாப்பிள்ளையா லட்சணமா மேடைல நில்லுப்பா”

“முடியாது. என் மிட்டாய் எங்க பேச்சி” என்றவனின் பிடிவாதத்தை கண்டு ரசித்தவர் தன் சுருக்கு பையில் வைத்திருந்த மிட்டாயை எடுத்து கொடுக்க, அவர் கன்னத்தில் முத்தம் கொடுத்தவன் “தேங்க் யூ பாட்டி” என்றுவிட்டு செல்ல,

பேச்சி பாட்டியோ தன் பேர பிள்ளைகள் கூட தன்னுடன் அதிகம் ஒட்டாமல் இருக்க, ரஞ்சன் தன்னிடம் நன்றாக பேசுவதில் மகிழ்ந்துதான் போனார்.

இவர்கள் இருவரையும் பார்த்த தேவகி பாட்டியோ என்னடா நடக்குது இங்க. ஆண்டி ஹீரோ கேள்விபட்டிருக்கேன் இவன் பாட்டி ஹீரோவா இருப்பான் போலயே.அப்போ என் பேத்தி வாழ்க்கை’ என்று யோசிக்க அவர் அருகில் சென்றவன் “டோன்ட் ஒர்ரி பாட்டி. யாம் இருக்க பயமேன். இந்த நிரஞ்சன் இருக்க பயமேன்.

உங்க பேத்தி வாழ்க்கைக்கு நான் கியாராண்டி. அப்படியும் உங்களுக்கு திருப்தி இல்லைன்னா சொல்லுங்க. உங்களையும் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போறேன். பாட்டியும் பேத்தியும் சண்டை போடாம சந்தோஷமா இருப்பீங்க.

எங்க கூடவே இருந்து நாங்க எப்படி இருக்கோம்னு பார்த்து உங்க சந்தேகத்த தீத்துக்கோங்க. உங்க கவலையும் போயிடும். உங்களுக்கு நல்லா சமைக்க தெரியுங்கரதால என் கவலையும் போயிடும். ஒரே கல்லுல ரெண்டு மாங்க ” என்று சொல்ல,

அவரோ “ம்கூம்….. பாட்டிய கட்டிக்கிறியான்னு கேக்கும்போதே தெரியுது உன் வாழ்க்கை எப்படி இருக்கும்னு. பேத்திய கரெக்ட் பண்ண சொன்னா பாட்டிய கரெக்ட் பண்ண வந்து நிக்கறான்.

போடா போ போய் என் பேத்திய கரெக்ட் பண்ணி வாழற வழிய பாரு கல்யாணம் பண்ணுன பத்து மாசத்துல கொள்ளு பேரன் என் கைல இருக்கணும்”.என்க,

கிழவி அசிங்கப்படுத்திருச்சே என்று மனதில் நினைத்தாலும் வெளியே கொள்ளு பேர புள்ளதானே வேணும். இதோ இப்போவே போய் அதுக்கான வேலைய ஆரம்பிக்கறேன்” என்று செல்ல போனவன் கையை தடுத்து பிடித்தவர் “அடேய் நான் கல்யாணத்துக்கு அப்புறம்னு சொன்னேன். இப்போவே எங்க ஓடுற” என்று அவன் வேகத்தை கண்டு அரண்டு போய் அவர் கேட்க,

“ஓஓ……சொன்னீங்களா…. எனக்கு கேட்கலையே”

‘கேட்காது ராசா கேட்காது. உனக்கு ஏன் அது எல்லாம் கேட்க போகுது’ என்றவர் மனதில் புலம்ப,

அவனோ, “என்ன பாட்டி செய்ய சொல்லறீங்க. நமக்கு எது தேவையோ அதை மட்டும்தானே நம்ம கவனிக்கணும். அதான் நீங்க சொன்ன மத்தது எல்லாம் காத்தோட போயிடுச்சு. எனக்கு தேவையான விஷயம் மட்டும் தெளிவா என் காதுல விழுந்து மண்டைல ஏறிடுச்சு” என்றவனை அதிர்ச்சியாக பார்த்தவர் ’எப்புட்றா…’ என்க,

அவனோ “அது எல்லாம் ஒரு தொழில் ரகசியம் பாட்டி” என்றுவிட்டு அங்கிருந்து அகன்றான். அடுத்து யாருடன் வம்பிலுக்கலாம் என்ற யோசனையோடு வந்தவன் கண்ணில் தனியாக நின்றிருந்த ஹர்ஷா விழ,

ஐ….. அடுத்த பலி ஆடு அவன்கிட்ட போய் பேச்சு கொடுப்போம் என்றுவிட்டு அவனை நோக்கி சென்றாலும் பார்வை என்னவோ தன்னவளை பார்க்கும் ஆவலில் மணமகள் அறையையே அடிக்கடி தொட்டு மீண்டு கொண்டு இருந்தது.

ஹர்ஷா அமைதியாக அங்கிருந்த சோபாவில் அமர்ந்திருக்க அவன் அருகில் வந்த தேவகி பாட்டி “என்ன ராசா குழப்பத்துல இருக்க மாதிரி தெரியுது”,

“இல்லை பாட்டி தெளிவாதான் இருக்கேன்”.

“அப்புறம் ஏன் ராசா ஒரு மாதிரி இருக்க. நல்ல சந்தோஷமா இரு. பார்க்க ராசா கணக்கா இருக்க. சிரிச்சனா இன்னும் அம்சமா இருப்ப”என்றவுடன் அவருக்காக தன் மனதில் இருக்கும் வருத்தத்தை மறைத்து சிரித்தான்.

உடனே தானும் சிரித்த பாட்டி அவன் கன்னத்தை வழித்து நெட்டி முறித்து ”ம்ம்ம்…. இப்படியே இரு. அப்போதான் பார்க்க நல்லா இருப்ப” என்று சொல்ல,

அவர்கள் அருகில் வந்த நிரஞ்சன் “என்ன டார்லிங் ஹேன்சமா இருக்க எனக்கு திருஷ்டி எடுக்காம, ஜிஞ்சர் ஈட்டிங் மங்கி மாதிரி இருக்க இவனுக்கு போய் திருஷ்டி எடுக்கறீங்க” என்று சொல்ல,
அவனை முறைத்த ஹர்ஷா “பாட்டி திருஷ்டி எல்லாம் அழகா இருக்கவங்களுக்கு எடுக்கறதுனு சொல்லுங்க. தன்னை தானே அழகா இருக்கேன்னு சொல்லிக்கறவங்களுக்கு இல்லை”

“அழகா இருக்கவங்களுக்கா…… அப்போ ஏன்டா உனக்கு எடுத்தாங்க”

“டேய்…. உன்னை……”

பாட்டி, “ஹார்ஷா என்ன இருந்தாலும் நிரஞ்சன் நம்ம வீட்டு மருமகன் ஒழுங்கா மாப்பிள்ளைன்னு கூப்பிட்டு பழகு.

பேராண்டி உனக்கு என்ன பிரச்சனை. திருஷ்டி எடுக்கணும் அவ்வளவுதானே, வா நான் எடுக்கறேன்” என்றவர் அவன் கன்னத்தையும் வழித்து நெட்டி முறிக்க,

அவர் இரு கன்னத்தையும் பிடித்து கிள்ளி கொஞ்சியவன் சோ…. ஸ்வீட்” என்க,

ஹர்ஷாவோ நிரஞ்சனை முறைத்து முகத்தை திருப்பி கொண்டான்.

ரஞ்சனோ அவனை நக்கலாக பார்த்து “அப்புறம் வீட்டு மாப்பிள்ளை நான் நின்னுட்டு இருக்கேன். நீ உட்கார்ந்து இருக்கியே. இது எல்லாம் நல்லாவா இருக்கு” ,

ஹர்ஷா “நானும் உங்க வீட்டு மாப்பிள்ளைதான் நினைவு இருக்கட்டும்” ,

உடனே தோள்களை குலுக்கியவன் “ஒரு வருஷ மருமகனுக்கு எல்லாம் மரியாதை குடுக்க முடியாது” என்றவுடன் அவனை அதிர்ந்து பார்த்த “என்ன உளறுற” என்க,

“உளறல் இல்ல. உன்னோட வார்த்தைகள்தான். உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா. ஒரு வருஷம் வாழலாம் அதுக்கு அப்புறம் பிரிஞ்சுடலாம்னு என் தங்கச்சிகிட்டயே சொல்லுவ. அவளுக்காக மட்டும்தான் இப்போ நான் அமைதியா இருக்கேன்.இல்ல…..”

“இல்ல….. இல்ல……என்னடா பண்ணுவ என்ன பண்ணுவ சொல்லு”என்றவனை கண்கள் கோபம் பொங்க பார்த்த ரஞ்சன் உன்னை வெட்டி புதச்சுடுவேன்டா வெண்ண. என்ன பாரின்ல இருந்தவன் எப்படி பண்ணுவான்னு நினைக்காதா என் தங்கச்சிக்காக நான் என்ன வேணா பண்ணுவேன்.

உன்னை கொல்ற அளவுக்கு கோவம் இருக்க என்கிட்ட நீ மரியாதை எதிர்பார்த்தா அது கிடைக்குமா. வாய்ப்பே இல்லை…. கடல்லையே இல்லையாம்” என்று நக்கலாக சொல்ல,

அவன் பேசுவதில் உண்டான கோபத்தை கண்களை மூடி கட்டுப்படுத்தியவன், முகம் இறுக “நீ மரியாதை குடுத்தாலும் குடுக்கலைனாலும் நான்தான் உனக்கு மச்சான். அதை யாராலும் எப்போவும் மாத்த முடியாது. மாத்தவும் விட மாட்டேன்” என்று அழுத்தமாக சொல்ல,

அவனோ “ஆமா…. என்ன பண்ணி தொலைக்கறது. உன் தங்கச்சியால நீ எனக்கு மச்சான்தான் வேற என்ன பண்ண”

“உன் தங்கச்சி மூலமாவும் நான் மட்டும்தான் உனக்கு மச்சான்”.

“அதுக்கு எல்லாம் வாய்ப்பில்லை. நான் என் பிரண்ட் மைக்கேல ஹாசிக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். ஒரு வருஷத்துக்கு அப்புறம் மைக்கேல்தான் எனக்கு மச்சான். கல்யாணத்துக்கு வருவான் பாரு “.

“நானும் பார்க்கதான் போறேன். என்னை மீறி வேற ஒருத்தன் எப்படி ஹாசி பக்கத்துல வரான்னு. என் ஹாசி எனக்கு மட்டும்தான்” என்றுவிட்டு அங்கிருந்து சென்றுவிட,

ரஞ்சனோ அவன் சொன்னதை கேட்டு புருவம் சுருக்கினான் ’இப்போ இவன் என்ன சொல்ல வரான். கடைசி வரை பிரண்டாவே ஹாசிய வாழ்க்கை முழுக்க கூட வச்சிக்கணும்னு நினைக்கறானா. இல்லையே என் ஹாசின்னு வேற சொல்றான். எந்த அர்த்தத்துல சொல்றான்.

ஒருவேலை இனி என் தங்கச்சி கூட வாழற வாழ்க்கைக்கு உண்மையா இருக்கணும்னு முடிவு பண்ணி சொல்லிட்டு போறானோ. தெரியலையே.

எப்படி இருந்தாலும் அடேய் பால்டப்பா ‘தேவையில்லாம ஒரு சில் வண்ட சொறிஞ்சி விட்டுட்ட, இதுக்கு மேல அது உன்னை நிம்மதியா இருக்க விடாம, உன் காதை சுத்தி நொய்….. நொய்னு சத்தம் குடுத்துட்டே இருக்கும். அனுபவிப்ப ராசா அழகா அனுபவிப்ப’ என்று நினைத்து கொண்டிருந்தவனை ரேவதி “டேய் என்ன இங்க நின்னு கனவு கண்டுட்டு இருக்க. நல்ல நேரம் போகுது. போய் முன்னாடி நில்லு. ஐயர் வர சொல்றாரு பாரு”என்க,

அவனும் முன்னால் போய் நின்றான். அவன் அருகில் ஹர்ஷாவும் நின்றிருக்க, அவன் பக்கம் குனிந்தவன் “அடேய் கொஞ்சம் தள்ளி நில்லுடா. என் ஆளதான் இங்க நிற்கணும். நீ வந்து நிக்கற. நான் அந்த மாதிரி பையன் இல்லை” என்று அலறல் போல் சொல்ல, பல்லை கடித்த ஹர்ஷா விலகி நின்று கொள்ள, அதை கண்டு தனக்குள் சிரித்து கொண்டு தன்னவள் வருகைக்காக ஆவலாக காத்திருக்க துவங்கினான்.

பெண்கள் இருவரும் மேடையை நோக்கி வர, தன்னவள் அழகை கண்டு சிலையாகி போனான் ரஞ்சன்.

ஹர்ஷா வந்த சொந்தங்களுடன் பேசி கொண்டு இருந்தாலும் மனது முழுதும் ரஞ்சன் சொன்ன அந்த மைக்கேலே நிறைந்து இருந்தான்.

‘லூசு பய எங்கிருந்துதான் எனக்குன்னு வருவனுங்களோ தெரியல. எல்லாம் அந்த பாரின் எலியால வந்தது. ரஞ்சா….. உனக்கு இருக்குடா’ என்று மனதில் திட்டி கொண்டிருந்தவன், எதேச்சயாக திரும்ப முகம் நிறைந்த புன்னகையுடன் தேவதையென நடந்து வந்தவளை கண்டு ஒரு நொடி ஸ்தம்பித்துதான் போனான் ஆணவன்.

அவள் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியை கண்டு புருவம் சுருக்கியவன் பின் “இது என் முதல் கல்யாணம் அதனால அதை நான் சந்தோஷமா செலப்ரேட் பண்ணுவேன்” என்றவள் சொன்னது நினைவு வர,

’சாரி ஹாசி உன்னை கார்னர் பண்ணி இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சது தப்புதான். ஆனா என்னோட மனம் மாறின பின்னாடி, உன்னை மனைவியா என்னோட மனசுல எந்த உருத்தலும் இல்லாம ஏத்துகிட்ட அப்புறம் கண்டிப்பா நம்ம வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்.

அந்த வாழ்க்கைக்காக என்னோட கடந்த காலத்தை மறக்க என்னால ஆன எல்லா முயற்சியும் நான் பண்ணுவேன். எனக்கு கொஞ்சம் டைம் மட்டும் குடு’ என்று தனக்குள் சொல்லி கொண்டவன் முகம் எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் இருந்தாலும் பார்வை என்னவோ ஹாசியை விட்டு நகறவில்லை.

ஹர்ஷா மனதோடு பேசி கொண்டதை ஹாசியிடம் சொல்லி டைம் கேட்டிருந்தால் நிச்சயம் அவள் அவனுக்கான நேரத்தை கொடுத்திருப்பாள். ஆனால் இங்கு மனதோடு பேசியவனிற்கு வெளியில் பெண்ணவளிடம் பேச தைரியம் இல்லாமல் போனதுதான். விதியின் சதி.

தனக்குள் யோசித்து கொண்டு இருந்தவனின் முகம் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் இருக்க, ஆணவனின் நிர்மலமான முகத்தை கண்ட ஹாசி ‘உனக்கு இருக்குடா இன்னைக்கு’ என்று மனதில் அவனை திட்டி கொண்டே அருகில் சென்று நின்றாள்.

அப்போதும் தன் யோசனையில் மூழ்கி இருந்தவன் கையில் கிள்ளினாள் ஹாசி.

“ஷ்….. ஆஆஆஆ……” என்றவன் கத்தி அவளை முறைக்க,

அவளோ “என்ன அர்ச்சனாக்கூட நின்னுருக்க வேண்டியதுன்னு பீல் பண்ணுறியா ஹர்ஷா”.என்க,

அவளை முறைத்தவன் “தேவையில்லாம பேசாத ஹாசி. நான் அதை எல்லாம் நினைக்கல”

“சரிவிடு. அப்புறம் ஏன் மூஞ்ச இப்படி வச்சிருக்க. நீ சொன்னதுனாலதான் இந்த கல்யாணத்துக்கே ஒத்துக்கிட்டேன். அப்புறமும் எதுக்காக டல்லா இருக்க. பிடிக்கலைனா சொல்லிடு இப்படியே நாங்க கிளம்பி போயிடறோம். இப்படி மூஞ்ச தூக்கி வச்சுட்டு நின்னா பார்க்க, கேவலமா இருக்க.

எனக்குகூடாதான் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல. ஆனா என் குடும்பத்துக்காக, என்னோட முதல் கல்யாணங்கறத்துக்காக சந்தோஷமா முகத்தை வச்சுக்கல அது மாதிரி நீயும் உன் முகத்தை மாத்து.

எப்படியும் இன்னும் ஒரு வருஷம் நாம இப்படி நடிச்சுதானே ஆகணும். எல்லாரும் நம்மைதான் பாக்குறாங்க கொஞ்சம் சிரி” என்று மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் முணு முணுக்க,
ஹர்ஷாவிற்கு ஏனோ அவள் வார்த்தைகள் கோபத்தை உருவாக்கியது.

இருக்கும் இடம் கருதி கைகளை இறுக மூடி தன் கோபத்தை கட்டுப்படுத்தியவன் முடியாமல் போக, அவள் காதோரம் குனிந்து “உண்மையா மனபூர்வமா நீ சிரிச்சா, நானும் சிரிப்பேன். நீதான் நடிக்கறியே மத்தவங்களுக்காக, நான் ஏன் நடிக்கணும்” என்க,

அவனை ஆழ்ந்து பார்த்தவள் “நான் நடிக்கல” என்று அழுத்தமாக சொல்ல,

அவனோ அவளை புருவ முடிச்சுடன் பார்த்து “நடிக்கலையா….! அப்போ உனக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதமா?”என்றவன் ஆச்சர்யமாக கேட்க,

அதற்கு அவள் சொன்ன பதிலை கேட்டு. “ஏன் இந்த கேள்வியை அவளிடம் கேட்டோம். என்று நொந்து கொள்ளும் அளவிற்கு இருந்தது அவள் பதில்,

“ஹாசி…. ஏன் இப்படி பேசற. நீ இப்போல்லாம் புதுசா தெரியற. பேசறதும் புதுசா இருக்கு”.

“ஏன் என்ன புதுசா இருக்கு. நீ சொன்னதையும். நான் வளர்ந்ததா நீ சொல்ற கல்ச்சரையும் யோசிச்சு பாரு. என் கல்ச்சர்படி கல்யாணம் எல்லாம் கடலை மிட்டாய் சாப்பிடற மாதிரி. டக்குன்னு அந்த ரிலேசன்சிப்ல இருந்து வெளிய வந்துடுவோம்.

அதனால எடுத்து குடுக்கற புது ட்ரெஸ், நகை இதையெல்லாம் நினைக்கும்போது சந்தோஷம் வருமா, வராதா? நான் சந்தோஷமாதான் இருக்கேன்”

“ஹாசி….. நீ…..”

மாப்பிள்ளை போதும் கொஞ்சம் அமைதியா நில்லுங்க, பொண்ணுட்ட அப்புறம் பேசிக்குவீங்க” என்ற ஐயரின் வார்த்தையால் வாயை மூடி கொண்டவன் மனதில் ஏனோ அழைப்புறுதல் அதிகமாக இருந்தது.

ரஞ்சன் மித்ரா காதோரம் குனிந்து “குல்பி செம்மையா இருக்கடி. அப்படியே உன்னை இறுக்கி அணைச்சு….”என்றவுடன் பதட்டமான மித்ரா “நிரன் எல்லாரும் இருக்காங்க ப்ளீஸ்….”

“அப்போ யாரும் இல்லாதப்ப ஓகேவா” என்று கேட்க, முகம் அந்தி வானமாக சிவக்க “நிரன் அதான் கல்யாணமே ஆக போகுதே கொஞ்சம் அமைதியா இருங்க”.

“திருட்டு மாங்காக்குதான் குல்பி ருசி அதிகம்” என்று சொன்னவன் குரலிலேயே பெண்ணவளை சிவக்க வைத்தான்.
நல்ல நேரம் முடிவதற்குள் வழக்கம் போல் நிச்சய பத்திரிக்கை வாசிக்க பட, இரு ஜோடிகளும் மோதிரம் மாற்றி கொண்டனர்.

மித்ரா, நிரஞ்சன் முகம் காதல் கை கூடிய மகிழ்ச்சியில் திளைத்து இருக்க, ஹாசியோ தாள முடியாத வேதனையை மனதில் நிறைத்து கொண்டு இறுகி போய் நின்றிருந்தாள்.

எவ்வளவு கனவுகளுடனும், ஆசையுடனும் அவள் எதிர்பார்த்த நாள் இது. ஆனால் அதற்கான எந்த மகிழ்ச்சியும் ஏனோ அவள் மனதில் தோன்றவே இல்லை. என்னைவிட்டு நீ எப்படி இன்னொருத்தியை காதலிக்கலாம் என்ற கோபம் அவளுள் கணன்று கொண்டேதான் இருந்தது.

ஹர்ஷாவோ’இனி இவள்தான் என் மனைவி. இனி இருக்கும் மீதி வாழ்க்கை இவளுடன்தான். அதை மகிழ்ச்சியாக மாற்ற வேண்டியது என் பொறுப்பு” என்ற முடிவுடன் அவள் கையில் மோதிரத்தை அணிவித்தவன் அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்க, அதுவோ இறுகி போய் இருந்தது.

அவள் முகத்தை கண்டு திடுகிட்டவன் ‘இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம்’ என்று அமைதியாக இருந்துவிட்டான்.

அதன்பின் பெரியவர்கள் அனைவரும் வந்து மணமக்களுக்கு நலுங்கு வைத்து சென்றனர்.

நேரம் இப்படியே செல்ல, அன்றைய நாளும் அழகாக முடிந்தது.

அடுத்து இவங்க கல்யாணம்தான் அடுத்தடுத்த எபியில் பார்க்கலாம்.