சாரதா, அன்னை தந்தையிடம் கருணா வந்துட்டான் என சொல்லிவிட்டு வந்தாள்.

கருணா “ஹாய் சுபி.. என்ன வந்துட்ட.. தூக்கிட்டு வந்தாளா உன்னை” என்றான் கிண்டலாக.

சாரதா சத்தமாக சிரித்தாள்.

சுபி “அண்ணனும் தங்கையும் மிரட்டிதானே கூட்டி வந்தீங்க.. உண்மைதானே” என்றாள்.

கருணா “ஆமாம், டம்மி பீஸ்ச மிரட்டுறாங்க.. அப்படியே தண்ணியில் சேர்ந்து, கடலில் கலந்திடலாம்ன்னு பார்த்தியா.. அதெல்லாம் நடக்காது. நீ மட்டும் எப்படி நிம்மதியா போய்ட முடியும்” என்றான் விளையாட்டாகவே.

பிரகாஷ் “கருணா” என அதட்டினான்.

கருணா கம்ப்ளைன்ட் வாசிக்கும் குரலில் “வா’ன்னு சொன்னால்.. என்னமோ இவளை பொதி சுமக்க கூப்பிடாமாதிரி ஒரு சீன். சரியான பிடிவாதம். சாப்பிட்டியா” என்றான் அதே அதட்டல் மிரட்டலில்.

பிரகாஷ் கருணாவின் பேச்சினை யோசனையோடு பார்த்தான்.. முன்போல தடுக்கவில்லை.

சுபி “இல்லை.. உங்களுக்காகத்தான் வெயிட்டிங், உங்களால்தான் லேட்… இந்நேரம் நான் தூங்கி, எனக்கு ரெண்டு ஜாமம் முடிஞ்சு போயிருக்கும்..” என்றாள் அவளும் விளையாட்டாகவே வெடுக்கென.

கரண் “யாரு நீ தூங்கியிருப்ப” என சொல்லி நிறுத்திக் கொண்டான்.. எனக்கு தெரியுமே நீ மொட்ட மாடியில் நடக்கும்நடை.. என சொல் வந்தான். அமைதியாகிவிட்டான்.

பிரகாஷ் இந்த பேச்சினை சுபியிடம் எதிர்பார்த்திருக்கவில்லை.

நால்வரும் பேசிக் கொண்டே உண்டனர்.

அப்படியே அமர்ந்து சின்ன வயது கதைகள்.. பேச தொடங்கினர். நடுவில் கருணாவின் பெண் தேடும் பேச்சும் வந்தது.. சாரதா ‘இந்த செகன்ட் மேரேஜ்’ல் நிறைய ட்ரப்பில் இருக்குல்ல.. நிறைய எதிர்பார்க்குறாங்க.. அண்ணனுக்கு ஒரு இடம் வந்தது. நிறைய கண்டிஷன்ஸ்.. அதைத்தவிர நிறைய பிரச்சனை.. பயமா இருக்கு..” என சொல்ல..

கருணா “எதுக்கு சாரதா இந்த டாக்.. போதும் விடு” என்றவன் எழுந்தான்.

சாரதா “இல்ல கருணா, சொல்றேன். நமக்கே இப்படி இருக்கே.. நம்மை போல நிறைய பேர் இருக்காங்க.. துணையை தேட பயந்து. துணையில்லாமல் தனியாக.. கஷ்ட்டம்தானே, நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டிருக்காங்க..” என்றாள்.

சாரதா, சுபியை பார்த்து “அவளுக்கும் அதே பயம் தானே.. மீண்டும் இன்னொரு தொடக்கம்.. எப்படி அமையுமோ என அவளும் எண்ணுவாள்.. தனியாகவே இந்த வாழ்க்கையை ஓட்டனும்.. ஏன் ஆண்டவன் இப்படி ஒரு நிலையை கொடுக்கிறான். எனக்கு கஷ்ட்டமா இருக்கு.. துணையோடு இருக்கும் போது நாட்கள் நீளாதா என தோன்றும்.. யாருமே இல்லையென்றால்.. எப்போதுடா இது முடியும் என தோன்றாதா..” என்றாள்.

பின் சின்ன குரலில் சாரதா, “சுபி.. நீயும் இன்னொரு மேரேஜ் பற்றி யோசிக்கலாம்.. தனியாவே எப்படி சமாளிக்க முடியும்” என்றாள்.

கருணா “சாரு.. போய் படு.. சும்மா ஏதாவது பேசிகிட்டு” என்றான்.. தண்ணீர் பருகிக் கொண்டே.

காற்றின் வேகம் நன்றாக தெரிய தொடங்கியது. வெளியே இருந்த மரத்தின் கிளைகள் வீழும் சத்தம் கேட்டது.. சின்ன சின்ன பொருட்கள்.. கோலம் போட வைத்திருந்த டப்பா.. தண்ணீர் ஊற்றும் வாலி.. என நிறைய சாமான்கள் உருண்டு விழுந்துக் கொண்டிருந்தது. 

எல்லோரும் உறங்க செல்லாம் என நகர்ந்தனர். கருணா, பிள்ளைகளை எல்லாம் அவர்களுக்கான ஒவ்வொருவரையாக தூக்கி சென்று விட்டு வந்தான், அறையில்.

சுபி “நான் விசாவை தூக்கிக்கிறேன்” என்றாள்.

சாரதா “எல்லாம் அந்த தடியன் தூக்குவான்.. நீ போய் படு” என்றாள்.

பிரகாஷ் பெண்ணை தூக்கிக் கொண்டு மேலேறினான்.. சாரதாவும் கணவனோடு சென்றாள்.

சுபி, கதவை திறந்து சிட்அவுட் சென்று நின்றாள்.

ஊ..ஊ.. என காற்றின் வேகம் சுழன்று சுழன்று வந்தது. கருணா வந்து “வா சுபி” என சொல்லி வெளியே வந்து நின்றான்.

சுபி “நீங்க போய் தூங்குங்க, எனக்கு அவ்வளவா தூக்கம் வராது.. நான் கொஞ்ச நேரம் இங்கிருந்துட்டு வரேன்” என்றாள்.

கருணா “இந்த இருட்டில் என்ன பார்க்குற.. உள்ள வா..சாரல் அடிக்குது” என்றான்.

சுபி “அட என்ன இப்போ கரைஞ்சிடவா போறேன்..” என்றாள், புன்னகையோடு.

கருணா “உனக்கு பயமே இல்லையா” என்றான்.. அவளின் தோரணை பார்த்து.

சுபி “ஏன் இல்லை! நிறைய இருக்கு.. இந்த இடி.. காற்று.. மழை.. இதுகெல்லாம் பயமில்லை.. வேற பயம். அதை சொல்ல தெரியலை.. இந்த இடி மழையில் நின்னுடுவேன்.. ஆனால், உள்ளே சென்று உறங்க பயமா இருக்கு..” என்றாள்.. வாடாத புன்னகையோடு.

கருணா “அது.. எனக்கும் தெரியும்.. தனியான பயம், வேறென்ன. அருகில் யாருமில்லா வெறுமையில் வரும் பயம். அதுவும் பிடித்த வாழ்க்கையை இழந்ததால் நிறைய இருக்கும் உனக்கு. சரியாகிடும்ன்னு சொல்லமாட்டேன்.. சரி செய்துக்கோ.” என்றான் அவன் சொன்ன அதே இருட்டினை வெறித்து பார்த்துக் கொண்டே.

சுபி “நீங்க எப்படி கரண்.. உங்களோட நிலையை என்னால்.. யோசிக்கவே முடியவில்லை” என்றாள்.

கரண் “அஹ.. எனக்கு உடல்நலமில்லாத போதே.. எனக்கு புரிய தொடங்கிவிட்டது. அதிலிருந்து குழப்பம். மனது ஈசியாக.. எனதில்லை அவள்ன்னு ஒத்துக்கலை. ஆனால், திரும்பவும் ஆபரேஷன் நடந்தது.. அப்போது, உண்மையை ஏற்றுக்க என் மனசு தயாராகிடுச்சி. எப்படி ஏற்றுக் கொண்டேன் என தெரியலை.. ஆனால், உண்மை மட்டுமே நிலைக்குமில்ல.. நான் பாசம் வைக்க தெரியாதவன் அப்படின்றத அப்போதான் புரிந்துக் கொண்டேன்.” என சொல்லி மீண்டும் வெறித்தான் இருளை.

சுபியும் கருணாவை பார்க்கவில்லை.. அதே இருளைதான் வெறித்துக் கொண்டிருந்தாள்.

கரண் தன்னை சுதாரித்துக் கொண்டு “சுபி, எதோ இரக்கம் தேடுறேன்னு நினைக்காத.. இப்போது பிரென்ட்ன்னு யாருமில்ல.. எனக்கு எந்த இரக்கமும் அனுதாபமும் தேவையில்லை.. யாரிடமும் நான் நின்று பேசுவதில்லை.. நீ ஏதும் நினைச்சிக்காத.. நான் எதோ அனுதாபம்.. க்கும்..” என சொல்லி நிறுத்தினான்.

சுபி “கரண்.. அப்போது நானும் லக்ஷ்மியை பத்தி சொன்னபோது அப்படிதான் நினைச்சியா..” என்றாள்.

கரண் “ஏய்” என்றான், தலையை கோதிக் கொண்டே.. 

சுபி “அப்புறம், நான் மட்டும் என்ன ஏலியனா.. இவரு மட்டும் அப்படியே நல்லவர்.. ஸெல்ப் எக்ஸ்ப்ளைன் வேற.. இதெல்லாம் எல்லோரிடமும் சொல்ல முடியாதில்ல.. ஒரு ப்லொவ்வில் வருவதுதான். அப்படியே நாங்க.. அனுதாபத்தை கொட்டுவோமா..” என சொல்லி.. அந்த சிட்அவுட் ஆரம்ப இடத்தில்.. நிலைக்கதவின் அருகே அமர்ந்தாள்.

கருணா, லேசாக புன்னகைத்தான்.. புயலின் வேகம் தென்றலானது.. ஆழ்ந்து மூச்செடுத்து.. அந்த மழை காற்றினை உள்ளே இழுத்துக் கொண்டான்.. பிரெஷ் ஏர்.. என எண்ணிக் கொண்டான்.

சற்று நேரம் நின்றுக் கொண்டே காற்றின் வேகத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தான்.. சுபியிடம் “என் ரெசார்ட் என்ன ஆகியிருக்கோ” என.

சுபி எப்படி இருக்கும் ‘கரணின் ரெசார்ட்’ என கேட்டுக் கொண்டிருந்தாள்.