சுபிக்கு இருக்கும் உறவுகளே சொற்பம்.. அதிலும் அவளின் அக்கா வீட்டுகாரர் அவளுக்கு மிக முக்கியம். அவர்தான் அவளின் இந்த சென்டர் வைத்து.. அவளை தனிமனுஷியாக மாற.. எல்லோரின் அனுமதியையும் வாங்கி தந்தவர். அவர்தான் லக்ஷ்மியை தன் வாழ்வில் கொண்டுவந்தவர்.. இப்படி குடும்பத்தில் முக்கியமானவர் அவர். சுபியின் நலன்விரும்பி.. அவர் இப்படி பேசவும்.. அழுகை வந்தது சுபிக்கு.

தவறாகிவிட்டதா! என கோவமும் வந்தது. வீராவை பற்றி சொல்லாமல் எப்படி சொல்லியிருக்கிறார்கள் என தோன்ற.. சுபி “மாமா.. வீரா வந்தான் மாமா.. அவன் எல்லாத்துக்கும் எதுக்கு வரான். அவன் யாரு..” என தொடங்க.. விசாகன் வந்து நின்றான். பிள்ளையை பார்த்தவள் “விசா, நீ குரு வீட்டில் விளையாடுறியா” என்றாள், கலங்கிய கண்களோடு.

விசாகன் “ஏன் ம்மா” என்றான், அன்னை அழுகிறாள் என தெரிந்து. சுபி, தொண்டையை சரி செய்துக் கொண்டாள்.. மகனுக்கு காட்டாமல் கண்களை துடைத்து  இயல்பாகி, சுதாரித்து மகனிடம் “சும்மாதான். அம்மாக்கு தலைவலி.. நான் ஆர்டர் போடுறேன்.. நீ அதுவரை விளையாடு.” என்றாள்.

மகன் நகரவில்லை, அமர்ந்திருந்தான் அன்னையின் அருகேயே. சுபி போனில் நிதானமாக “அதெல்லாம் யாரும் சொல்லலையா.. இதென்ன பழக்கம்.. அம்மா அப்பா ஊருக்கு போறாங்க, அவன் எதுக்கு வரணும்..” என நடந்தவைகளை பேசிக் கொண்டிருந்தாள்.

குரு வந்தான்.. விசாகன் கதவினை திறந்து விட்டான். சுபி இயல்பாகிக் கொண்டாள். குரு புன்னகைத்தாள் அவனை பார்த்து. 

சங்கீதா “யாரு” என்க, “உன் பிரென்ட் பையன்” என சொல்லி.. குருவிடம் “விசாகனின் பெரிம்மா” என்றாள், சுபி.

விசாகன் முன்பே பேசிவிட்டான்.. குரு இப்போது பேசினான் பிள்ளையிடம் எதோ கேட்டுக் கொண்டிருந்தாள், சங்கீதா.

விசாகன் “பெரிம்மா, அம்மாவை அழ சொல்லாதீங்க.. நான் விளையாட போறேன்.. பாவம் அம்மா” என்றான்.

சங்கீதா “இல்ல டா தங்கம்..” என சமாதானம் சொன்னாள்.

குரு “ஆன்ட்டி அழுதீங்களா” என்றான்.. சுபியை பார்த்து.

சுபி அவனின் சிகையை கலைத்து “சும்மா டா.. என் அக்கா கூட சண்டை போட்டு சும்மா விளையாடினேன்” என்றாள். இரு பிள்ளைகளும் நம்பவில்லை. ஆனால், பெரிதாக இல்லை என கிளம்பி சென்றனர்.

இருவரும் பேசிக் கொண்டே சென்றனர்.. விசாகன் ‘அம்மா அழுதாங்க டா..’ என்றான்.

குரு “உங்க அப்பாகிட சொல்லி.. உங்க பெரியம்மாவை திட்ட சொல்லு” என்றான். பின் அவனே “சாரி டா.. உன் அப்பா சாமிகிட்ட போயிட்டாரில்லா.. நாம ப்ரே பண்ணி, அவர்கிட்ட சொல்லி.. ஏதாவது செய்ய சொல்லலாம்” என்றான்.

இருவரும் பேசிக் கொண்டே குருவின் அறைக்கு வர.. நடுவில், விசாலாட்சி பாட்டி “யாருடா அழறா” என்றார்.

விசாகன் குரு இருவரும் பதில் சொல்லினர்.

உண்டுக் கொண்டிருந்த கருணாவின் காதுகளில் விழுந்தது. சுபி ‘எதுக்கு அழறா..’ என அவனின் சிந்தனையை சுபி எடுத்துக் கொண்டாள்.

விசாலாட்சி “விசா சாப்பிட்டியா “ என அவன் பேச்சுக்கு நடுவே கேட்க்க விசாகன் “அம்மா ஆர்டர் செய்யறேன்னு சொன்னாங்க பாட்டி” என்றான்.

கருணா இதையெல்லாம் கேட்டவன் “விசாகன் குருகூட சாப்பிடு, உன் அம்மாகிட்ட நான் சொல்லிக்கிறேன்” என்றான்.

விசாகன் “பாட்டி அம்மாகிட்ட போன் செய்து கேளுங்க” என்றான், கருணாவிடம் பேசாமல். விசாகன் அம்மாவிடம் சொல்லாமல் செய்யமாட்டன்.. இதுபோன்ற காரியங்களை.

கருணா “நான் சொல்றேன் விசாகன்” என்றான்.

கேட்கவில்லையே. விசாலாட்சி பாட்டியும் “உங்க அம்மாகிட்ட குருவோட அப்பா சொன்னால் கேட்ப்பாங்க டா..” என ஏதேதோ எடுத்து சொன்னார் கேட்கவில்லை விசாகன் .

கருணா தன் போனிலிருந்து அழைத்தான் சுபிக்கு. நல்லவேளை அவள் எந்த அழைப்பிலும் இல்லை.. உடனே அழைப்பினை ஏற்றாள்.. குரல் கரகரவெனதான் இருந்தது.. “ஹெலோ” என்றாள்.

கருணா “சுபி, உன் பையனை இங்கே குருவோடு சாப்பிட சொன்னேன்.. உன்கிட்ட கேட்க்காமல் சாப்பிடமாட்டானாம்.. நீ சொல்லு” என்றான்.

சுபி புன்னகையோடு “ஹெலோ” என்றாள்.

கருணா ஸ்பீக்கரில் போட்டு விசாகனிடம் நீட்ட விசாகன் “ம்மா” என்றான்.

சுபி “நீ சாப்பிடு கண்ணா” என்றாள்.

மகன் “நீ ம்மா..” என்றான்.

சுபி “அம்மா ஆர்டர் போட்டிருக்கேன் டா.. நீ சாப்பிட்டு விளையாடிட்டு வா.. அம்மா ஆல்ரைட்.. ம்” என்றாள். விசாகன் “நீ தூங்கு ம்மா.. நான் வந்து எழுப்பறேன்” என்றான்.

எல்லோரும் அசந்துதான் போயினர். 

கருணா இம்ப்ரெஸ் ஆகிவிட்டான் விசாகனின் செய்கை பேச்சுகளில். 

விசாகன் பேசி முடிக்கவும் கருணா “ஓகே வா.. சாப்பிடுவியா” என்றான் இலகு புன்னகையோடு.

விசாகன் எந்த புன்னகையும் கொடுக்கவில்லை.. தலையசைத்து குருவோடு சென்றான்.

கருணா போனை காதுக்கு கொடுத்து “ஹலோ சுபி, என்னாச்சு குரலே ஒருமாதிரி இருக்கு” என்றான்.

சுபிக்கு, அடக்கி வைத்திருந்த அழுகை திரண்டு வந்தது அவள் தொண்டைக்கு “ம்..க்கும்.. இருங்க” என்றவள் நன்றாக மூச்சினை இழுத்துவிட்டுக் கொண்டவள் “அது.. எல்லோருக்கும் நான் கட்டுப்பட்டவள்.. ம்.. அவங்க செய்யவது எல்லாம் சரியாகிடும், ஆனால், நான் செய்வது மட்டும் தவறாகிவிடும்” என்றாள்.

கருணாவிற்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும்,அமைதியாக இருந்தான்.

சுபி “ச்சு.. உங்களுக்கு என்ன தெரியும் விடுங்க” என்றாள்.

கருணா “விடு, என்னாச்சு இன்னமும் சாப்பிடாமல் இருக்க” என்றான்.

சுபி “இல்ல.. இன்னிக்கு, வேலை செய்யும் அக்கா வரமாட்டாங்க.. எனக்கு சமைக்க என்னமோ போல இருந்தது.. காலையில் தோசை சாப்பிட்டு அப்படியே போன் பேச.. இது அப்படி ஆகிடுச்சி. bp லோ ஆகிடுச்சி.. இப்போதான் டீ குடிச்சேன். ஆர்டர் போடணும் கரண்.. சாப்பிடனும்” என்றாள், சலிப்பாக.

கருணா “இன்னமும் ஆர்டர் போடலையா, சரி வா நான் சாப்பிடதான் போயிட்டிருக்கேன்.. சாப்பிட போலாம்.. கிளம்பி வா.. ம்.. சீக்கிரம்” என்றான்.

சுபி “அஹ.. அதெல்லாம் வேண்டாம். பத்துநிமிஷத்தில் வந்திடும்.. நீங்க போயிட்டு வாங்க” என்றாள்.

கருணா “சுபி.. வா சுபி.. ம்.. பிரெண்ட் சொன்னால் கேட்கனும் சீக்கிரம் கிளம்பு, வா.. காரில் வந்து வாசலில் நிற்பேன்.. கிளம்பு” என்றான் அதிரடியாக.

அதன்படி பத்து நிமிடத்தில் சுபியின் வீட்டின் முன் நின்றான்.

சுபி வீங்கிய கண்கள்.. அயர்வான முகம்.. என ஒரு பிங்க் வண்ண காட்டன் சுடியில்.. காரில் ஏறினாள்.. எதையும் யோசிக்கவில்லை அவள்.

கருணா புன்னகையோடு வரவேற்றான்.. சுபி “நான் ஆன்ட்டி கிட்ட சொல்லிட்டுறேன்..” என சொல்லி போனினை எடுத்தாள். 

கருணா “நான் அம்மாகிட்ட சொல்லிட்டேன், நானும் சுபியும் வெளிய போறோம்.. நாங்க வரும்வரை விசாகன் இருக்கட்டும் என சொல்லிட்டேன்” என்றான்.

சுபி தெளியாத முகத்தோடு “இல்ல, விசாகிட்ட நான் சொல்லணும்” என சொல்லி.. விசாலாட்சி ஆன்ட்டிக்கு அழைத்து மகனிடம் பேசித்தான் அமைதியானாள் சுபிக்ஷா.

கருணா “என்னாச்சு சொல்லு.. விசாகனும் குருவும் வந்து நீ அழுதேன்னு சொல்றாங்க அப்படி பசங்களுக்கு தெரியும்படி அழுதியா.. என்னாச்சு? சங்கீதா ஏதாவது சொன்னாளா” என நிறுத்தி நிதானமாக இடைவெளிவிட்டு.. பொறுமையாக கேட்டான்.

சுபி வெறித்துப் பார்த்துக் கொண்டே “உங்களுக்கு குயில் பற்றி தெரியுமா” என்றாள்.

கருணா “என்ன” என்றான்.

சுபி “இந்த குயில் இருக்குல்ல.. அது கூவும் போது கேட்டிருக்கீங்களா கரண், எதோ சோகம்.. இருக்குமில்ல. பாவம் அதோட சோகம் யாருக்குமே புரியாது.. என்ன ஜென்மா? அந்த குயிலுக்கு.. பாவம். யார் வீட்டிலோதான் முதலில் பிறக்கும்.. அங்கேயும் அதனை அடியாளம் கண்டுக் கொண்டால் கீழே தள்ளிவிடும் காகம்.. அப்போதிலிருந்து தொடங்குகிறது அதன் போராட்டம்.. கூடில்லாமல் எப்படி வாழும் அது. பின்னும், முட்டையிடும் போது.. அடுத்தவர்கள் கூடு தேடி போகும்.. தன் குழந்தைகள் வெளிவருவதை எப்படி அறிந்துக் கொள்ளும்.. வாழ்நாள் முழுதும் எங்கேதான் இருக்கும் கூடில்லாமல். எப்போதும் எதிர்பார்த்து.. எதோ ஒண்ணுக்காக ஏங்கி.. என அந்த குயில் கூவும் போது.. அதன் சோகம்.. யாருக்குமே தெரியாதில்ல” என்றாள், கண்ணில் நீர் துளிர்க்க.

கருணா “அஹ்ன்.. என்ன சுபி இது. இப்படி எல்லாம் யோசிக்காத.” என்றான்.

கருணா, ஒரு பெரிய உணவகத்தின் முன் காரினை நிறுத்தினான்.. பெண்ணவள் இன்னமும் வெறித்து பார்த்து அமர்ந்திருந்தாள்.. அவளின் மடிமீது, அவளின் கைகள் கோர்த்திருந்தது.

சுபி “ம்.. நானும் யோசிக்கக் கூடாதுன்னுதான் நினைக்கிறேன்.. அதனாலேயே லக்ஷ்மிகிட்ட எல்லாத்தையும் எப்போதும் கொட்டி தீர்த்துடுவேன். ஆனால், சிலநேரம் முடியலை.. ரொம்ப கஷ்ட்டமா இருக்கு” என்றாள், கண்களை துடைத்துக் கொண்டு.. கைகளை காரின் டேஷ்போர்டு மீது வைத்து விரல்களால் தாளம்போட்டுக் கொண்டே, மூச்சினை இழுத்து விட்டு.. தன்னை சமன் செய்துக் கொள்ள முயன்றுக் கொண்டிருந்தவள்.. திரும்பி கருணாவை பார்த்து சங்கடமாக புன்னகைத்தாள்.

கருணா, லேசாக புன்னகைத்து “காம்டோவ்ன்..” என சொல்லி தன் கண்களால் ஸ்டியரிங்கில் இருந்த தன் விரல்களை காட்டினான்.. அவனின் விரல்களும் ஒரு தாளத்தில்.. மேலும் கீழும் அசைத்தவன் “சுபிக்கு, தெரியாதது இல்ல.. சிங்கிள்ளாக இருந்தால்.. கொஞ்ச கஷ்ட்டம்தான். ஆனால், நீ அதற்கெல்லாம் அசரும் ஆளா.. தைரியமாக இரு.. ம்.. காம்டோவ்ன் சுபி” என்றான் புன்னகையோடு.

சுபி அமைதியானாள்.

இருவரும் இறங்கி உள்ளே சென்றனர்.