அர்ச்சனா அழுது கொண்டே செல்ல, வேகமாக அவள் எதிரில் ஓடி போய் நின்ற ஹர்ஷா அவளை உறுத்து விழித்தான்.
அர்ச்சனா அவனை பார்க்கும் திராணி அற்றவளாக தலையை குனிந்தவாறு நிற்க, அவனோ “நான் கேட்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டு போ” என்று அழுத்தமாக சொல்ல, அவள் அமைதியாக நின்றிருந்தாள்.
“என்னை கழட்டி விட்டடலாம் என்ற எண்ணத்துலதான், லவ்க்கு ஓகேவே சொன்னியா” என்றவன் கேட்க,
விழுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் வலி நிறைந்திருந்தது. அதை அவன் புரிந்து கொண்டாலும் அப்படியே நின்றிருக்க,
அவளோ “இ…இ…. இல்ல ஹர்ஷா சத்தியமா எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்ல. வீட்ல எப்படியாவது பேசி சமாளிக்கலாம்னு பார்த்தேன். ஆனா…இவ்ளோ சீக்கிரம் என்னால பேச முடியல.
உடனே கல்யாணம்னு வேற சொல்ற, இந்த நேரத்துல அதுவும் அக்கா கல்யாணம் ஆகாம இருக்கும்போது, நான் போய் எப்படி பேச. நீயும் இவ்ளோ சீக்கிரம் சொல்லுவன்னு நான் எதிர்பார்க்கல, அது மட்டும் இல்லாம அக்கா……”
“ஜஸ்ட் ஸ்டாப் இட். நீ போகலாம்”
“சாரி ஹ…. ஹர்ஷா….” என்றவள் கண்ணீரோடே ஓடிவிட, தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான் ஹர்ஷா.
அடுத்து என்ன இப்போது வீட்டில் என்ன சொல்லி சமாளிப்பது. காதல் என்று போய் நின்றாள் கண்டிப்பாக வீட்டில் ஒத்து கொள்வார்கள்தான். ஆனால் அந்த காதல் இப்போது இல்லையே.
எனக்கு நீ வேண்டாம். என் அம்மா அப்பாவைவிட நீ எனக்கு முக்கியமானவன் இல்லை என்று சொல்பவள் பின் செல்லவும் அவனுக்கு மனம் வரவில்லை. அப்போது அவன் மனதில் டக்கென்று வந்து நின்றது ஹாசிதான்.
ஒரு நீண்ட மூச்சை இழுத்துவிட்டவன் தன் வண்டியை எடுத்து கொண்டு ஹாசி ஆபிஸ்க்கு வந்துவிட்டான். வரும் வழி முழுவதும் அவனுள் பல யோசனைகள். கேன்டீனில் அமர்ந்து ஹாசியிடம் எப்படி பேச வேண்டும் என்ற ஒத்திகை எடுத்து கொண்டு இருந்தவன் முன் அவளே வந்து நிற்க, தான் யோசித்து வைத்ததை அவளிடம் சொல்லிவிட்டான்.
ஆனால் அதை கேட்ட ஹாசியோ அதிர்ந்து போனாள்.
“ஹாசி ப்ளீஸ் கொஞ்சம் புரிஞ்சுக்கோ வீட்ல பேசும்போது கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லு”
“லூசா ஹர்ஷா நீ. என்ன பேசிட்டு இருக்கேன்னு உனக்கு புரியுதா இல்லையா. அர்ச்சனாக்கு இந்த விஷயம் தெரிஞ்சா……”
“ஒன்னும் சொல்ல மாட்டா. எனக்கும் அவளுக்கு பிரேக் அப் ஆகிடுச்சு”
“வாட்….” என்று திகைத்து போனவள் அவனை ‘என்னடா சொல்ற….. என்ன சொல்ற’ என்பது போல் பார்த்து வைக்க,
அவனோ “அதைப்பத்தி இனி நாம பேச வேண்டாம். முடிஞ்சு போனது முடிஞ்சதாவே இருக்கட்டும். இனி அதை நோன்றது தேவையில்லாத ஆணிய புடுங்கற கதைதான். அது பாட்டுக்கு ஒரு ஓரமா இருக்கட்டும். நாம கண்டுக்க வேண்டாம். அடுத்து என்னன்னு மட்டும் யோசிப்போம். இப்போதைக்கு எனக்கு காதல், கல்யாணம் அதுவும் பொண்ணுங்கன்னு சொன்னாளே கடுப்பாகுது.
“ஹேய் நிறுத்து…. நிறுத்து. பொண்ணுங்கன்னா கடுப்பாக்குதா நானும் பொண்ணுதான்டா” என்று ஹாசி சொல்ல,
அவனோ “நான் சீரியஸா பேசுறேன். காமெடி பண்ணாத” என்று தீவிர முகப்பாவத்தோடு சொல்ல,
அவளோ “அடப்பாவி நான் பொண்ணுன்னு சொல்றது. உனக்கு காமெடி பண்ற மாதிரி இருக்கா” என்று கேட்க, அவனோ அவளை முறைக்க,
“சரி…. சரி சொல்லும் சொல்லி தொலையும்” என்றவள் முணு முணுத்து கொண்டு அவனை கவனிக்க துவங்கினாள்.
“ஹாசி எனக்கு வேற வழி தெரியல. வீட்ல வேற மேரேஜ் பண்ணிக்க சொல்லி கம்பெல் பண்ணிட்டு இருக்காங்க. நான் வேண்டாம்னு சொன்னாலும் பிடிவாதமா யாரையாவது கட்டி வைக்கணும்னு நினைப்பாங்க.
தேவையில்லாம ஒரு பொண்ணு வாழ்க்கையை எதுக்கு கெடுக்கணும்.எப்படியும் ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்கதான் போறாங்க அது நீனா……”
“ஹேய் என்ன பேசற நீ. அப்போ என் வாழ்க்கை வீணா போனா பரவால்லையா”
“ம்ப்ச்….. என்னை முதல்ல பேச விடுறியா? உன் வாழ்க்கை ஒன்னும் வீணா போகாது. அதுக்கு நான் முழு பொறுப்பு” என்றவுடன் ஹாசி அவனை ஆழ்ந்து பார்த்து கொண்டிருக்க,
“ஹாசி எனக்கு உன்னால மட்டும்தான் ஹெல்ப்பண்ண முடியும். இப்போ வீட்ல மேரேஜ்க்கு ஓகே சொன்னா. ரெண்டு பேருக்கும் கல்யாணம் பேசுவாங்க.
எல்லா வேலையும் ஜரூரா நடக்கட்டும். அவங்களுக்கு எந்த சந்தேகமும் வராம நாம அமைதியா இருப்போம்”.
“ம்ம்ம் அமைதியா இருந்து,….. அமைதியா இருந்தா கல்யாணம்தான் நடக்கும் வேற ஒன்னும் நடக்காது. இது சரிப்பட்டு வராது….”
“ஹேய் ஹாசி இப்போதைக்கு அவங்கள சமாளிப்போம் ஆனா…. எப்படியாவது கல்யாணத்தை நிறுத்தறதுக்கு என்ன பண்ணணுமோ நான் பண்றேன்”.
“என்ன பண்ணுவ, உன்னால என்ன பண்ண முடியும்”.
“யோசிக்கறேன். ஆனா…. இப்போ….”
“முடியாது. நீ என்ன பண்ணுவன்னு சொல்லு” என்றவள் சொல்ல, அங்கும் இங்கும் மாறி மாறி நடந்தவன் “ஹான்…. ஐடியா…” என்று முகம் பளிச்சிட சொன்னவனை அவள் யோசனையாக பார்க்க,
அவனோ “பேசாம கல்யாணத்து அன்னைக்கு நீ ஓடி போயிடு. சிம்பிள் கல்யாணம் நின்னுடும். எப்புடி……” என்று பெருமையாக காலரை தூக்கி விட்டவனை கேவலமாக பார்த்தாள் ஹாசி.
“ஹேய் இப்போ என்ன சொல்லிட்டேன்னு இப்படி பாக்குற”.
“ஏன் டா டேய். உனக்கு எவ்வளவு சுயநலம்டா. நான்பாட்டுக்கு சிவன்னேன்னு இருக்காம. கல்யாணத்துக்கு ஓகே சொல்லணுமாம். அதுவும் இவனுக்காக சொல்லணுமாம். வீட்ல யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி நார்மலா இருக்கணுமாம். கடைசியா கல்யாணத்து அன்னைக்கு ஓடி போகணுமாம். அதுவும் இவனுக்காக நான் போகணுமாம்.
நீ யாருடா எனக்கு நான் ஏன் இதெல்லாம் பண்ணனும்” என்றவளை அதிர்ந்து போன பார்த்த ஹர்ஷா “ஹாசி நான் உன் ப்ரண்டு இ….”
“பிரண்டு….. பிராடு …..உனக்கு தேவைன்னா நீ ஓடிப்போ. வை மீ…. இவன் மட்டும் எல்லாருக்கும் நல்லவனா இருக்கணுமாம். நானும் என் குடும்பமும் எல்லாரு முன்னாடியும் அசிங்கப்படணுமாம் என்ன ஒரு சுயநல பிசாசுடா நீ” என்று முகம் கோபத்தில் சிவக்க உக்கிரமாக அவனை பார்த்து அவள் கேட்க,
அப்போதுதான் அவள் சொன்ன கோணத்தில் யோசித்த ஹர்ஷாவுக்கும் அவள் நிலைமை புரிந்தது. தான் எப்படி தப்பிப்பது என்று யோசித்தவன் அவளையும் அவள் குடும்பத்தின் நிலையையும் யோசிக்க மறந்துதான் போனான்.
ஹாசி முகம் இறுகி போனவள் “நான் கிளம்பறேன்” என்றுவிட்டு செல்ல போக,
அவள் கையை பிடித்து தடுத்தவன் “நாம கல்யாணம் பண்ணிக்கலாமா ஹாசி” என்று ஆழ்ந்த குரலில் கேட்க,
அவள் கண்களில் கண்ணீர் வடிந்து ஓடியது. இத்தனை வருடம் எந்த வார்த்தைகளை அவளவன் சொல்ல கேட்க வேண்டும் என்று தவமாய் காத்திருந்தாளோ அதே வார்த்தை, ஆனால் அதை சந்தோஷமாக ஏற்று கொள்ள முடியாமல் தடுமாறினாள் பேதை. மனதில் ஏற்பட்ட வலியால் அவளுக்கு கண்களில் கண்ணீர் கொட்டி கொண்டிருந்தது .
“ஹேய் ஹாசினி எதுக்கு அழற. ப்ளீஸ் நான் சொல்றதை பொறுமையா கேளு.”
‘இன்னும் என்ன சொல்லி என்னை வதைக்க போறடா’ என்பது போல் அவள் பார்க்க,
“ஹாசி ப்ளீஸ் அழாத. எனக்கு இந்த ஹெல்ப் மட்டும் பண்ணு. ம்ம்ம்…. நான் வேணா இன்னொரு பிளான் சொல்றேன். இது உனக்கு ஓகேவா இருக்கும்னு தோணுது. ரெண்டு பேருக்கும், ரெண்டு பேமிலிக்கும் எந்த பிரச்சனையும் இல்லாம போயிடும்”.
“என்ன பிளான்”
“நாம கல்யாணம் செய்துக்கலாம். இரு…. இரு…குறுக்க பேசாத நான் பேசிடறேன். நமக்கு கல்யாணம் ஆனாலும் நீயும் நானும் எப்போவும் போல நல்ல பிரண்டா இருப்போம். உன்னோட ப்ராஜெக்ட் முடியும் வரை இங்க இரு. அதுக்கு அப்புறம் நீ கிளம்பி அமெரிக்கா போயிடு.
அப்புறம் கொஞ்ச நாள்கு அப்புறம் நாமக்குள்ள செட் ஆகலன்னு சொல்லி பிரிஞ்சிடலாம். அப்போவும் என் மேலதான் தப்புன்னு சொல்லி நாம டைவர்ஸ் பண்ணி க்கலாம்..
அப்புறம் அங்கேயே வேற ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் நீ செய்துக்கோ. நாம ரெண்டு பேருக்குமே எந்த பிரச்சனையும் இருக்காது.
அதுமட்டும் இல்லாம நீ என்னோட பிரண்ட் நல்லா புரிஞ்சுப்ப. கல்யாணத்துக்கு அப்புறமும் ரெண்டு பேரும் ஒரே ரூம்ல அன்கம்பர்ட்டபில் இல்லாம பிரியா இருக்கலாம்.
ஒரு வருஷத்துக்கு அப்புறம் எதுவும் சொல்லாம கிளம்பி போயிடுவ. தேவையில்லாத டென்ஷன் எனக்கு இருக்காது. இதுவே வேற பொண்ணா இருந்தா அவ எப்போ என்ன பண்ணுவான்னு தெரியாம நான் மண்டைய பிச்சுக்கிட்டு இருக்கணும். நீனா நான் நிம்மதியா இருப்பேன்.
எப்படியும் நீ அமெரிக்காலதான் செட்டில் ஆகணும்னு நினைப்ப. வந்த பிராஜெக்ட் மட்டும் இல்லாம. இன்னும் ஒரு வருஷம் மட்டும் இங்க இருக்க டைம் கேட்டு எனக்கு ஹெல்ப் பண்ணிட்டு. நீ போயிடு. இதுல உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லல்ல. எனக்காக உன் பிரண்டுக்காக இந்த உதவி செய்ய மாட்டியா” என்க,
ஹாசி இதயத்தில் யாரோ கத்தியால் குத்தியது போல் வலி எழுந்தது, பற்களை கடித்தவள் மனதில் கோவம் சுறு சுறுவென்று ஏற துவங்கியது. ‘இவன் என்ன நான் அமெரிக்கலதான் மீதி வாழ்க்கைய வாழ போறேன்னு சொன்ன மாதிரியே பேசிட்டு இருக்கான். நானே எப்போடா அங்க இருந்து இங்க வருவோம்னு காத்திட்டு இருந்தா. இந்த மாக்கான் மறுபடியும் என்னை அங்கேயே தள்ள பாக்குறான். அவனே யோசிப்பனாம், அவனே முடிவு எடுப்பானாம் அதுக்கு நான் ஒத்துக்கணுமாம்.
கண்டிப்பா இவனை எதாவது செஞ்சே ஆகணும். எனக்கு மட்டும் டைம் கிடைக்கட்டும் அப்போ இருக்கு இவனுக்கு’ என்று தனக்குள் அவனை வறுத்து எடுத்தவள் வெளியே “இல்ல ஹர்ஷா…….”
“ப்ளீஸ்…. ஹாசி. இது நல்ல பிளான்தானே. எப்படியும் நீ அமெரிக்காவிட்டு இங்க வர விரும்ப மாட்ட. அங்கேயே ஒருத்தர பார்த்து கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிடு. உனக்கும் எதுவும் ப்ராப்லம் இல்ல. எனக்கும் இல்ல. ப்ளீஸ் ஹாசி எனக்காக வேண்டாம். எங்க அம்மாக்காக யோசிச்சு முடிவெடு.
அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாரு. கல்யாணம் பண்ணிதான் ஆகணும்னு. என்னால வேற என்ன பண்ண முடியும் சொல்லு.
நம்ம கல்யாணம் நடக்கலைனா நிரஞ்சன், மித்ரா கல்யாணமும் நிற்க வாய்ப்பிருக்கு. நம்ம ரெண்டு குடும்பமும் நல்ல நட்புல இருக்கு. அதையும் கொஞ்சம் யோசி.
அதுமட்டும் இல்லாம……”
“இல்லாம….. அதையும் சொல்லு. நீ பேசறது என்னை கார்னர் பண்ற மாதிரி இருக்கு. வீட்டு நிலைமை. என் அண்ணன் கல்யாணம் எல்லாத்தையும் சொல்லி என்னை பிளாக் பண்ற மாதிரி இருக்கு ஹர்ஷா” என்று கோவமாக சொல்ல,
“இல்ல ஹாசி. உன்னால எனக்கு ஹெல்ப் பண்ண முடியும். அதைதான் சொல்றேன். நான்தான் முதல்லயே ஹெல்ப் பண்ணுன்னு சொன்னேன்ல, நம்ம ஒரு கல்யாணத்துனால என்னென்ன நடக்கும்னு சொல்றேன் அவ்வளவுதான்.” என்றவுடன் இப்போது தலையில் கை வைத்து அமர்வது ஹாசி முறையானது.
“ஹர்ஷா நா…. நா….. நான் உன்னை அப்படி பா…. பா…. பார்க்கல. அப்புறம் எப்படி?”
“ஹேய் நாம என்ன கல்யாணம் பண்ணி சேர்ந்து வாழவா போறோம். நானும் உன்னை பிரண்டா மட்டும்தான் பார்க்கறேன். இது முழுக்க முழுக்க நம்ம பேரண்ட்ஸ்காக மட்டும்தான். ஒரு வருஷம் அதுக்கப்புறம் பிரியதானே போறோம்” என்றவன் சொல்ல, வார்த்தை உயிரை கொல்லுமா ஆணவன் வார்த்தை பெண்ணவளை கத்தியின்றி இரத்தம் இன்றி கொன்றது.
அவள் அப்படியே அமைதியாக அமர்ந்திருக்க,
“ஹாசி நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். இனி முடிவு உன் கைல. அப்புறம் வீட்ல என்கிட்ட உன்னை கட்டிக்க சம்மதமான்னு கேட்டா……” என்று அமைதியானவனை,
ஹாசி எந்த உணர்வும் இல்லாமல் பார்க்க, அவனோ “நான் சம்மதம்னு சொல்ல போறேன். இனி நீ வேண்டான்னு சொன்னா, எல்லாரும் உன்னைதான் கேள்வி கேட்பாங்க. நீயே பதில் சொல்லிக்கோ. கிளம்பலாமா” என்றவாறு எழ,
ஹாசியோ தான் மனதில் என்ன நினைக்கிறோம் என்றே புரியாத நிலையில், என்ன முடிவு எடுப்பது என்றும் புரியாமல் அவனுடன் சென்றாள்.
வண்டியில் அமர்ந்தவள் யோசனையோடே இருக்க, வண்டி கண்ணாடியில் அவள் முகத்தை பார்த்தவன் பெரு மூச்சு ஒன்றை வெளியிட்டு ‘சாரி ஹாசி’ என்று மனதுக்குள் சொல்லி கொண்டு வண்டியை எடுத்தான்.
அவள் வீட்டின் முன் வண்டியை நிறுத்தியவன் ஹாசி யோசனையோடே இருக்க, “ஹாசி…. ஹாசி….”
“ஹான்….” என்று அப்போதுதான் சுயநினைவுக்கு வந்தவள் அவனை கேள்வியாக பார்க்க, அவனோ “வீடு வந்துடுச்சு” என்று சொல்லி கொண்டிருக்கும்போதே, ராஜும் அப்போது அலுவகத்தில் இருந்து வந்திருந்தார்.
அவரை பார்த்து ஹர்ஷா சிரிக்க, ஹாசி வண்டியில் இருந்து இறங்கியவள் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.
ராஜ், “நல்லா இருக்கியாப்பா ஹர்ஷா. பாக்கவே முடியல”
“நல்லா இருக்கேன் அங்கிள். டைம் ஆச்சு. நான் கிளம்பறேன்”
“இல்ல அங்கிள் இன்னொரு நாள் வரேன். ஒரு முக்கியமான வேலை இருக்கு. போகணும். ஹாசிய ட்ராப்பண்ணலாம்னு வந்தேன் கிளம்பறேன் அங்கிள்” என்றுவிட்டு அவர் பேச இடம் கொடாமல் சென்றுவிட்டான்.
ராஜிற்கு மகளை ஹர்ஷா ட்ராப் பண்ண வந்தது மகிழ்ச்சியை கொடுக்க சிரிப்போடு வீட்டிற்குள் சென்றார்.
மகள் யோசைனையோடு செல்வதையும், கணவன் சிரித்து கொண்டே வருவதையும் பார்த்து கொண்டிருந்த ரேவதி “என்னங்க என்ன ஆச்சு? எதுக்கு சிரிச்சுட்டே வர்றீங்க.அவ வேற என்னமோ கோட்டய பிடிக்க போறது மாதிரி யோசனையோடு போறா. என்ன நடக்குது இங்க”.
“ம்ம்…கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஹாசி நடந்தா. இப்போ நான் நடந்து வந்தேன்…”
“ம்ம்ம்….” என்று கணவனை மேலும் கீழும் பார்த்தவள் “என்ன ஜோக்கா… அடுத்த மாசம் நியாபகப்படுத்துங்க சிரிக்கறேன்” என்று கடுப்பாக சொல்ல,
ராஜோ சத்தமாக சிரிக்க துவங்கினார். அப்போது சரியாக ரஞ்சனும் உள்ளே வந்தவன் “என்ன இங்க சத்தம்….. என்ன இங்க சத்தம். நாங்க இல்லைன்னா உடனே ஜோடி புறா ரெண்டு பேரும் ரொமான்ஸ் பண்ண ஆரம்பிச்சுட்டீங்களாக்கும்” என்றவாறு உள்ளே வந்தவன் அங்கிருந்த சோபாவில் அமர,
அவரோ “அவகிடக்கற, ரசனை இல்லாதவ. ஒரு ஜோக் சொன்னா சிரிக்காம. அடுத்த மாசம் சொல்றேன்னு சொல்றா. நீ கேளு நிரஞ்சா…”
“வேண்டாம்ப்பா. வேண்டாம். அம்மா அடுத்த மாசம்னு சொல்லும்போதே தெரியுது. உங்க ஜோக்கோடா லட்சனம். இந்த விஷபரிச்சைக்கு நான் வரல. ஆள விடுங்க” என்று தலைக்கு மேல் கும்பிடு போட்டவன் ஓடி விட, ரேவதி சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.
அன்றைய நேரம் அப்படியே செல்ல, இரவு உணவு உண்ணும் சமயம் கணவனுக்கு சைகை காமித்து கொண்டு இருந்தார் ரேவதி.
ராஜும் கண்களை மூடி தான் பார்த்து கொள்வதாக சொன்னவர் திருமண விஷயத்தைப்பற்றி ஹாசியிடம் சொல்லி, அவள் விருப்பத்தை கேட்க,
அவளோ குடும்பத்தார் மூவரையும் மாற்றி மாற்றி பார்த்து கொண்டிருந்தாள்.
ரேவதியும், ராஜும் மகள் பதிலுக்கு ஆவலாக அவள் முகத்தை பார்த்து கொண்டிருக்க,
ரஞ்சனோ ‘எனக்குதான் நீ என்ன பதில் சொல்ல போறன்னு தெரியுமே’ என்ற ரேஞ்சில் தட்டில் இருந்த தோசையை பிய்த்து சாப்பிட்டு கொண்டிருந்தான்.
ஹாசி என்ன பதில் சொல்வாள். ஹர்ஷா வீட்டிற்கு சென்று திருமணத்திற்கு சம்மதம் என்று சொல்லியிருப்பானா. இல்லை காதல் தோல்வியை கொண்டாட சென்றிருப்பானா அனைத்தையும் அடுத்த எபியில் பார்க்கலாம்.