அருணகிரி “அதுகில்லடி.. நீயும் வா சாப்பிடு.. எல்லாம் சரியாகிடும் வா..” என அழைத்தார் மீண்டும்.
விசாலாட்சி இல்லை என்பதாக தலையசைத்துவிட்டு அமர்ந்துக் கொண்டார் தன் டேபிள் முன்.
அருணகிரி வெளியே வந்துவிட்டார்.. அவருக்கு நடந்துவிட்டு வந்தது பசி.. மகனுக்கு போனில் அழைத்து “சாப்பிட வா பா.. உங்க அம்மா இன்னும் சாப்பிடல” என கடமைக்கு சொல்லிவிட்டு தான் எடுத்து வைத்து உன்ன தொடங்கினார்.
கருணாவிற்கு இந்த அம்மாவின் செயல் புதிததல்ல.. ஆனாலும் இறங்கி வந்தான். அன்னையை, பேசி அழைத்து வந்தான்.
விசாலாட்சி, கணவர் உண்டுவிட்டு.. டிவியில் நியூஸ் பார்த்து அமர்ந்திருப்பதை பார்த்தவர் “உன் அப்பாக்கு, இடியே விழுந்தாலும் எட்டு மணிக்கெல்லாம் சாப்பிட்டிடனும்.. தன் வேலை நடக்கணும் அவருக்கு” என கணவனை நொடித்துக் கொண்டே டைனிங் அறைக்கு சென்றார்.
கருணா புன்னகைத்துக் கொண்டே சென்றான். இருவரும் பேசிக் கொண்டே உண்டனர்.
விசாலாட்சி எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டே “இப்போ நான் நடக்கணுமே.. என்கூட யார் வருவா..” என்றார் கணவனை பார்த்து.
அருணகிரி “ம்.. நான் கூப்பிட்டு நீ வந்தியா.. உன் பையன் கூப்பிட்டுத்தானே வந்த, போ.. அவன் கூடவே போ.. “ என்றார். அவரின் மனையாள் முகம் வாடினார்.
பின், மகன் மேலே செல்லுவதை பார்த்தவர் “கருணா, உனக்கு பாஸ்போர்ட் ஆபீஸ்சில் உன் பிரென்ட் ஒருத்தி இருக்கா தானே.. இப்போ இங்க இருக்காளா” என்றார்.
கருணா “என்ன ப்பா.. வேண்டும் விவரம் சொல்லுங்க” என்றான்.
அருணகிரி ‘நம்ம மாசிலாமணி அவருடைய பொண்ணு.. உனக்கு தெரியுமில்ல அவள.. அவ ஆஸ்ட்ரேலியாவில் இருக்கா.. எட்டு வருஷம் கழிச்சி கன்சீவாகியிருக்காலாம்.. ஐந்து மாசம் ஆகுதாம்.. பெட் ரெஸ்டில் இருக்க சொல்லிட்டாங்களாம். மாசிலாமணியும் அவன் வைபெப்’பையும் அங்க வர சொல்றா போல.. உடனே விசா வேணுமாம்.. ஏதாவது ஏற்பாடு.. நான் சொல்லியிருக்கேன்.. முடியுமா’ என்றார்.
கருணா கேட்டுக் கொண்டான் “பார்க்கிறேன் ப்பா.. ரெண்டுநாள் டைம் கொடுங்க.. நம்பர் பார்த்துட்டு பேசிட்டு சொல்றேன்” என சொல்லிவிட்டு மேலே சென்றான்.
மறுநாள் கருணா எங்கும் செல்லவில்லை.. மதியமாக மகனை தான் அழைத்து வருவதாக சொல்லி பள்ளிக்கு கிளம்பினான்.
அன்னை தந்தை சாரதா என எல்லோருக்கும் ஆச்சர்யம்.
கருணா, மகனின் பள்ளிக்கு வந்துவிட்டான். எப்போதும் தாத்தாதான் வருவார் என காத்திருந்த பிள்ளைக்கு.. அதிர்ச்சி. அவனின் வார்டன் வந்து “உன் பாதெர் வந்திருக்காங்க.. குருகுகன் பாக் த்தே திங்க்ஸ் பாஸ்ட்” என சொல்லி சென்றார்.
குரு சலித்துக் கொண்டான் தன் நண்பனிடம் “டேய்.. இன்னமும் என் தாத்தாவை பாதெர்ன்னு சொல்றாங்க இந்த வார்டன்” என சொல்லிக் கொண்டே எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டு.. பொறுமையாக வந்தான்.
அந்த ரிசப்ஷனில்.. கருகரு சிகையுடன்.. புல்ஹன்ட் ஷர்ட்.. கை விரலில் சுற்றிய கார் சாவி என அமர்ந்திருந்த தன் தந்தையை தூரத்திலிருந்து பார்த்தவன்.. தாத்தா இல்லை என உணர்ந்துக் கொண்டு.. எட்டி பார்த்தான்.. குரு. அஹ.. அப்பாதான். படபடவென தன் ட்ராலியை சத்தமில்லாமல் அங்கேயே வைத்துவிட்டு.. தன் நண்பனை அழைத்துக் கொண்டு வந்தான் “வா டா.. பிரணவ்.. வா… என் டாடி டா.. வா” என சொல்லி இருவரும் ஓடி வந்தனர்.
குரு, வரவேற்பறை வந்ததும் சத்தமில்லாமல் வர.. பிரணவ் “ஹேய்.. அங்கிள்” என கத்திக் கொண்டே வந்தான் கருணாவின் அருகே.. “ஹாய் அங்கிள், நான் குருவோட ப்ரென்ட்.” என்றான்.
கருணா புன்னகைத்தான்.. வந்துக் கொண்டிருந்த மகனை பார்த்தான்.. எந்த பாவமும் காட்டாமல் மகன் நிதானமாக வருவது தெரிந்தது.. கருணா மகனின் வீம்பு பார்வையை ரசித்தான் முதல்முறை.. பிரணவ்விடம் “எப்படி இருக்கீங்க எல்லோரும். நெக்ஸ்ட் டைம் சாக்லெட்ஸ் வாங்கிட்டு வரேன்..” என்றான்.
பிரணவ் “இட்ஸ் ஓகே அங்கிள்..” என்றான்.
கருணா மகனை பார்க்க.. மகன் தந்தையை கடந்து சென்றுக் கொண்டிருந்தான். கருணா, குட்டி பிரணவ்விடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.
கருணா மகனின் பின்னால் வந்தான்.. “தாத்தா ஏன் வரலை” என்றான் காரின் அருகே வந்ததும்.
தந்தை “சும்மாதான், நான்தான் வந்திருக்கேனே” என்றான். அவனின் உடமைகளை எடுத்து காரில் வைத்தான். அதற்குள் குரு காரில் ஏறி அமர்ந்துக் கொண்டான்.
இருவரும் சற்று நேரம் ஏதும் பேசிக் கொள்ளவில்லை.. கருணா ஒரு சிற்றுண்டி கடையில் வண்டியை நிறுத்தினான். குருவின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது.. இருவரும் இறங்கினர். கருணா கண்மட்டும்தான் காட்டினான் மகனிடம்.. மகன் தனக்கு தேவையானதை சொல்லிவிட்டு அமர்ந்தான். சும்மா இருக்கவில்லை.. அங்கு வைத்திருந்த டிஷூஸ் எடுத்து எதோ செய்தான்.. மற்றவர்கள் என்ன உண்ணுகிறார்கள் என எட்டி பார்த்தான்.. துருதுருவென இருந்தான். கருணா எல்லாவற்றையும் கவனித்தான்.
இருவரும் உண்டனர்.. காரிலேறி வீடு வந்தனர். ஏதும் பேசிக் கொள்ளவேயில்லை. அப்படியே அழுத்தமாக இருந்தான் கருணா.. இல்லை, தான் கவனிக்காமல் விட்ட தன் குழந்தை.. பெரியவனாக நடந்துக் கொள்வதை.. பார்த்து கொண்டிருந்தான். என்னமோ கவனிக்க மட்டுமே செய்தான். மகன், தன் அருகே வரவில்லை.. பேசவில்லை.. ‘ப்பா.. என் பையன் ஸெல்ப்மேட் போலவே..’ என எண்ணிக் கொண்டான்.
இருவரும் வீடு வந்தனர்.
பாட்டிதான் பேரனிடம் விசாரித்தார் உன் அப்பா என்ன வாங்கி தந்தான்.. என. பேரன் சொன்னான்.. அப்படியே ஓடிவிட்டான் தன் நண்பனை பார்க்க.
கருணாவை காணோம்.
இரவு உண்பதற்குதான் வந்தான் கருணா. தந்தை “ஏன் ப்பா.. விசாரிச்சியா, அன்னிக்கு சொன்னேனே” என்றார்.
உண்டு முடித்து வாசலில் நின்று.. யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தான், கருணா.
மகன் இப்போது விசாகனோடு சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தான். அதை பார்த்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தான்.
சற்று நேரத்தில்.. சுபிக்ஷா காரில் வந்தாள். குருவின் வீட்டின் எதிரே இடம் இருக்கும் அங்கேதான் காரினை அவள் பார்க் செய்வாள்.. அவர்கள் வீடு இறக்கம்.. அத்தோடு கார் நிறுத்த இடம் இருக்காது.
இப்போது பிள்ளைகள் இருவரும் வந்து நின்றனர்.. வியர்வை வழிய அவளின் அருகே. அன்னை, விசாகனின் நெற்றியை துடைத்துவிட்டு “என்ன இது.. கொஞ்சம் பிரேக் எடுக்க வேண்டாமா” என்றாள்.
குரு சுபிக்ஷாவையே பார்த்திருந்தான்.
விசாகன் “ம்மா.. எங்களுக்கும் அந்த பெரிய அண்ணாக்கும் நாளைக்கு சைக்கில் கம்படிஷன்..” என பேசிக் கொண்டிருந்தான்.
குரு அமைதியாக நின்றிருந்தான் இருவரையும் பார்த்து.
இப்போது குருவை உணர்ந்தவள்.. “ஏன் குரு இவ்வளோ ஹேர் நெற்றியில் விழுது.. ஹேர்கட் பண்ணலையா.. நெற்றியில் முடி விழ கூடாது.. கட் பண்ணும் போது சொல்லி கட் பண்ணிக்கோ” என சொல்லிக் கொண்டே அவனின் நெற்றியில் விழுந்த முடிகளை கோதிவிட்டாள்.
குரு சாந்தமாக தலையை மட்டும் அசைத்தான்.. ‘சரி’ என்பதாக. இதெல்லாம் கருணாவின் கண்களில் தப்பாமல் விழுந்தது.
இன்னமும் எதோ இருவரிடமும் பேசிக் கொண்டிருந்தாள் சுபிக்ஷா.. குருவும் விசாகனும் கைகளை ஆட்டி தாங்கள் சைக்கிள் ஓட்டுவது பற்றி விவரித்தனர்.
இப்போது குரு “ஆன்ட்டி, சொல்ல மறந்துட்டேன்.. எனக்கு வெட்நஸ்டே பர்த்டே. நான் இங்கதான் இருப்பேன்..” என்றான் தகவலை அவளிடம் முதலில் சொன்னான்.
சுபிக்ஷா “அஹ.. சூப்பர்..” என சொல்லி வாழ்த்தினாள். “உனக்கு என்ன கிபிட் வேண்டும் கேளு” என்றாள்.
விசாகன் “ம்மா.. அவனுக்கு, கிரிக்கெட் பேட் பிடிக்கும்.. வாங்கி கொடும்மா.. நானும் அவனும் விளையாடுறோம்.” என்றான். மகனின் தலையை கலைத்து.
சுபிக்ஷா புன்னகைத்தாள்.. “ம்.. வாங்கிடலாம்” என்றாள்.. குருவின் சிகையை மீண்டும் நேர் செய்து.
இப்போது கருணா “குரு” என்றழைத்தான்.
குரு சைக்கிளோடு வந்தான் தந்தையிடம். சுபிக்ஷா மகனோடு நடந்தாள்.
குரு இப்போது வந்து “ஆன்ட்டி, அப்பா கூப்பிடுறார்” என்றான்.
கருணாகரன் “ம்.. நாளைக்கு, டிடைல்ஸ் எல்லாம் கொடுங்க.. நான் முதலில் பார்த்து கொடுத்திட்டு பேசிட்டு வரேன். அப்புறம் அவ என்ன சொல்றான்னு கேட்டுட்டு சொல்றேன்.” என்றான்.
அந்த களைப்பான புன்னகை கொஞ்சம் இதமாக இருந்தது.. எதிரில் நின்றிருந்தவனை பேச சொல்லியது இன்னும் “சங்கீதா நம்பர் அனுப்பேன்” என்றான்.
“ம்.. “ என சொல்லி, அவன் முகம் பார்த்தாள்.
கருணாகரனுக்கு புரிகிறது தன் எண் அவளிடம் இல்லை என.. ஆனாலும் “என்ன” என்றான்.
பெண்ணவள் போனினை எடுத்து அவன்முன் நீட்டினாள்.. “நோட் செய்துக்கோங்க, அக்கா நம்பர்” என்றாள்.
லேசான புன்னகை.. அவனுள், அதை மறைத்துக் கொண்டு.. அவள் போனினை வாங்கி எதோ செய்தான் இரண்டு நிமிடம்.. குருவும் விசாகனையும் வேடிக்கை பார்க்க தொடங்கினாள் சுபி.
“காலையில் கிளம்பும் போது.. இதெல்லாம் கொடு.. கால் பண்ணு வந்து வாங்கிக்கிறேன்” என்றான்.
சுபி கிளம்பும் விதமாக தலையசைத்து விடைபெற.. கருணாகரன் தலையசைக்கவில்லை “எப்படி இருக்க நீ” என்றான்.
சுபிக்கு சின்ன புன்னகை.. முன்பே தெரியும் இவனை.. அக்காவின் தோழன். எங்கு பார்த்தாலும் அக்காவிடம் சொல்லி கொடுத்திடுவான். அவன் இருக்கும் பக்கமே போக மாட்டாள். அதெல்லாம் நினைவு வந்தது இப்போது.. “ம்..” என்றாள்.
கருணாகரன் “பையன் அப்படியே உன்ன மாதிரி போல.. ரோட்டில்தான் இருக்கான் போல” என்றான்.
சுபிக்கு அவ்வளவுதான் லிமிட்.. மனது எங்கோ ஓட காத்திருந்தது.. அதற்குமேல் பேசினாள்.. தான் ஒருவாரம் மூட்ஆப் ஆகவேண்டி வரும். அதனால் “அஹ..ம்.. சரி, பை.. மோர்னிங் கூப்பிடுறேன்” என்றவள் விடைபெற்று கிளம்பினாள்.
கருணாகரன், பிள்ளைகள் விளையாடுவதையே பார்த்துக் கொண்டு சற்று நேரம் நின்றான்.