சில்லென புது மழைத்துளி!

2

விசாலாட்சி அரசு இடைநிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார். கருணாவின் தந்தை அருணகிரி தலைமை செயலகத்தில் வேலையில் இருந்தவர். பணி ஒய்வு பெற்று இரண்டு வருடம் ஆகிறது, இப்போது. 

கருணாகரன் சிவில் இஞ்சினியரிங் முடித்தான். தந்தை அவனை அரசாங்க வேலைக்கு தேர்வு எழுத சொன்னார். முடியாது.. சொந்த தொழில்தான் என்றான். பிடிவாதமாக.. கொஞ்சநாட்கள் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன்னில் வேலை செய்தான். தொழில் கற்றுக் கொள்ள என.

அப்போதுதான், நண்பன் ஒருவன் தங்களின் ரிசார்ட் வேலையை கவனித்துக் கொள்ளும்படி கருணாவினை கேட்க. கருணா, ஆர்வமாக  சரியென்றான்.

பெரிய வேலை.. அங்கே முன்பே இருந்த கன்ஸ்டேக்ஷ்ன் ஆட்கள் ஒரு வாக்குவாதத்தில் பாதியில் வேலைகளை விட்டு சென்றிருந்தனர். கருணா, தான் வேலை செய்த கம்பெனி ஆட்களோடு சேர்ந்து பாதியில் விட்ட வேலையை மீண்டும்  தொடர்ந்தான்.

இப்படி ஆரம்பித்ததுதான் அவனுக்கும் அந்த ரிசார்ட்டுக்குமான தொடர்பு. ஒரு கட்டத்தில் அந்த நண்பனுக்கு பணம் முடங்கி போக.. தன்னுடைய முதல் வேலை.. என இறங்கி செய்தவனுக்கு.. அந்த வேலையை பாதியில் விட மனதில்லாமல்.. தானே தன் தந்தையிடம் பணம் கேட்டு.. தங்களின் ஒரு சொத்தினை விற்று அந்த ரிசார்ட்டினை தன் விருப்பத்திற்கேற்ப கட்டி.. இன்டிரியர் எல்லாம் தானே செய்து முடித்தான். 

நண்பனை விட முடியாதே. அதனால்.. 60-40 பார்ட்னர்ஷிப் என இருவரும் வேலை செய்தனர். பணத்தினை தண்ணீராக இறைத்தான்.. எல்லா ஏற்பாடுகளும் இவனின் பொறுப்பு. அதை நிர்வகிக்க தன் நண்பன் என.. நண்பனை விடாமல்.. இந்த ரிசார்ட் தொழிலை எடுத்துக் கொண்டான் கருணா.

கருணாவும் எல்லா வேலையையும் கற்றுக் கொண்டான், தன் நண்பனோடு சேர்ந்து. இருவரும் தொழிலில் அடுத்தடுத்த காலங்களில் நன்றாகவே பயணித்தனர்.

கருணாவிற்கு நிறைய தொடர்புகள் கிடைத்தது. ரிசார்ட் தொழில் பிடித்து போனது. எந்தநேரமும் வேலை பிசியாகவே இருந்தான் கருணா. 

அவனின் தந்தைக்கு நிம்மதி. வேலையில் கவனமாக இருக்கிறானே என. வருடங்களும் இனிதாக சென்றது. 

சரியான வயதில் கருணாவிற்கு லாவண்யாவோடு திருமணம். ஊர் போற்றும் திருமணம். மணமக்கள் இனிமையாக தங்களின் வாழ்க்கையை தொடங்கினர்.

லாவண்யா, எந்த வேலைக்கும் செல்லவில்லை. வீட்டில் இருந்தாள். அவளை வேலைக்கு செல்லும்படி மாமியார் மாமனார்.. கணவன் என எல்லோரும் சொல்லினர். லாவண்யா பயந்தாள். 

விசாலாட்சி நடுநிலை பள்ளியில்  தலைமை ஆசிரியர். எல்லோரும் காலையில் கிளம்பிடுவர். மாமனாரும் அரசாங்க வேலை. கணவன் நேரங்காலமில்லாமல் வேலை. லாவண்யா தடுமாறினாள் முதலில். வேலைக்கு என ஆட்கள் இருந்தனர்.

பெரிய வீடு.. அண்ணாநகரில் மஞ்சள் வண்ணமடித்த எண்பதுகளை நிணைவு படுத்தும்  வீடு. முன்பக்கம் மூன்று கார் நிறுத்துமளவு இடம்.. மேலும் கீழுமாக பெரிய வீடு என எல்லாம் லாவண்யா.. பழகவே நாட்கள் எடுத்தது.

கருணா வேலையில்தான் கவனம் வைத்திருந்தான். திருமணமான புதிதில் சுற்றத்தார் வீடு.. தியேட்டர்.. ஹனிமூன் என சென்றுவந்தான் மனையாளோடு. 

கருணாவிற்கு அந்த நேரங்களில் லாவண்யாவின் பயந்த முகம் பிடித்திருந்தது. ஒருத்தி எல்லாவற்றுக்கும் தன்னை தேடுவது புதிததாக இருந்தது.  தான் எது சொன்னாலும் செய்வது பிடித்திருந்தது. மனையாள் என்பது இதுதானோ என தனக்குள் எண்ணிக் கொண்டான். தான் பார்த்து பழகிய பெண்ணிலிருந்து லாவண்யா வேறு என்பது கருணாவிற்கு புரிந்தது. அவன் சொல்லிக் கொடுத்து.. நிறைய விஷயங்கள் அவள் கற்றுக் கொண்டாள். டூ வ்விலர் உபயோகிப்பது.. உணவு ஆர்டர் போடுவது.. gpay என எல்லாம் அவன்தான் சொல்லிக் கொடுத்தான்.

நாட்கள் சென்றது. கருணா நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனையாளோடு நேரம் செலவிட்டான். ஆனால், இரவு தாமதமாக வருவது.. சீக்கிரம் ரெசார்ட் சென்றுவிடுவது என இருந்தான். காரணம்.. ரெசார்ட்டினை விரிவித்துக்  கொண்டிருந்தனர். இந்த நிலையில் லாவண்யா தனிமையை உணர தொடங்கினாள். 

ஆறுமாதங்கள் கடந்த நிலையில் லாவண்யா கருவுற்றாள். எல்லோரும் அருமையாக பார்த்துக் கொண்டனர். ஊரிலிருந்து அவர்களின் அன்னை தந்தை வந்து இருந்தனர் ஒரு வாரம். அடுத்த வாரம் விசாலாட்சி விடுப்பு எடுத்து பார்த்துக் கொண்டார். இப்படியே நாட்கள் கடந்தது.

கருணா மனையாளை பார்க்க இரவில் நேரமாக வந்திடுவான். அவளோடு வாங்கிங்.. அந்த நேரம் இருவருக்கும் பிடித்தமான நேரம். 

கருணா காலையில் நேரமாக கிளம்பிடுவான். இரவில் சிலநேரம் தாமதமாகவும் வந்தான். அவளை செக்கப் அழைத்து செல்வதற்கு நேரம் இல்லை என தன் நண்பன் செந்தூரனை அனுப்பி வைத்தான். சிலநேரம் விசாலாட்சி உடன் செல்லுவார்.. இல்லை செந்தூரன் மட்டும்தான் லாவண்யாவை கூட்டி செல்லுவான்.

ஏழாவது மாதம் வளைகாப்பிட்டு லாவண்யா அம்மா வீடு சென்றாள். கருணா மாதம் ஒருமுறை பார்க்க வந்தான். லாவண்யாவிற்கு, கணவன் மீதான பிம்பம் உடைய தொடங்கியது. தான் அழைக்கும் போதெல்லாம் போனில் பேசுவதில்லை.. எதோ கடமைக்கு கணவன் தன்னை பார்க்க வருவதாக தோன்றியது. தங்களுக்குள் எதுவுமே இல்லை என்பதாக எண்ணம் எழ தொடங்கிவிட்டது லாவண்யாவிற்கு.

கருணா, மனையாளுக்கு பிரசவ நாட்களில் அவளின் உடன்தான் இருந்தான்.. ஆண் பிள்ளை பிறந்தது கருணா லாவண்யாவிற்கு. ஒருவாரம் பொறுமையாக அங்கேயே இருந்து மனையாள் மகனை கவனித்துதான் சென்னை வந்தான். லாவண்யா தான் உணர்ந்தது.. தவறு என எண்ணி.. கணவனிடம் சகஜமாக பேசினாள்.. வலி எல்லாம் கணவனின் அன்பில் கரைந்தே போனது பெண்ணவளுக்கு.

ஆனால், கணவன் சென்னை கிளம்பி சென்றதும் மீண்டும்.. அவனை வேலை இழுத்துக் கொள்ள.. மீண்டும் கணவனின் பாராமுகம்தான் லாவண்யாவை வாட வைத்தது. ஆனால் மகன், அதிகம் அவளை தனியே விடவில்லை. பிள்ளையை கவனிப்பதில் நேரம் சரியாக இருந்தது.

கருணா, இந்த மூன்று மாதமும் உணர்ந்தது மனையாள் தன்னை போனில் அதிகம் அழைக்கவில்லை.. தானாக இரண்டுநாட்களுக்கு ஒருமுறை அழைத்ததால் மட்டுமே பேசுகிறாள் லாவண்யா என்பதை உணர்ந்தான்.

அதனால், அடிக்கடி வேலையை விட்டு மாதத்திற்கு இரண்டுமுறை மனையாளையும் மகனையும் பார்க்க வந்தான். மூன்றாம் மாதம் பிள்ளைக்கு பேர் வைத்தனர் ‘குருகுகன்’ என. கருணாவிற்கு முருகர் என்றால் விருப்பம், அதனால் இந்த பெயர். மனையாள் பெரிதாக இதில் விருப்பம் காட்டவில்லை. இந்தமுறை கணவனின் கனிவில் கரையவில்லை.. கேட்டகேள்விக்கு பதில் சொன்னால்.. அதிகம் தேடவில்லை கணவனை. கருணா, இந்த மாற்றத்தை உணர்ந்தான்.. ஒருவேளை பிள்ளையை கவனிக்கிறாலோ என எண்ணிக் கொண்டான். 

ஆறாம் மாதம் சென்னை வந்தனர் தாய்சேய் இருவரும்.

ரிசார்ட்டின் இறுதிகட்ட வேலைகள் நடந்துக் கொண்டிருந்தது. புதிதாக குடில் போன்ற அமைப்பில் அறைகள் இப்போது கட்டப்பட்டு, அந்த திறப்பு விழாவினை மகன் வரவில் ஏற்பாடு செய்யலாம் என இருந்தான் கருணா. அதற்கான வேலையில் அவன் பிசி. இறுதிகட்ட வேலைகள்.

மகன் வந்து ஒருமாதத்தில் மிக விமர்சையாக நடந்தது அதன் திறப்புவிழா. முழுக்க முழுக்க.. இது கருணாவின் பொறுப்பில் மட்டுமே நடக்கும் ரிசார்ட். அதனால், அவனே நின்று பார்த்து உருவாக்கி இருந்தான். வந்தவர்கள் எல்லோரும் புகழ்ந்தனர்.. மகன் வரவு.. உன்னை உயர்த்தியிருக்கிறது என்றனர். குடும்பம் குழந்தை தொழில்.. எல்லாம் அழகாக இருக்கிறது என வாழ்த்தி சென்றனர். கருணாகரன் பூரித்து நின்றான்.

செந்தூரன் ஒருமாதிரி காயப்பட்டு நின்றான். முதல் தொழில்.. இருவரும் சேர்ந்து உருவாக்கியது. கருணா, பெரும்பகுதி பங்குதாரார் என்றாலும்.. செந்தூரம்னும் பங்குதாரர் எனும் அளவிற்கு பெயர் இருந்தது. ஆனால், இப்போது உருவாகி இருக்கும் பகுதி முழுக்க முழுக்க.. கருணாவினுடையது.. எல்லோரும் சொல்லுவது போல.. தனக்கு திருமணமும் ஆகவில்லை.. தொழிலும் அமையவில்லை என ஒரு எண்ணம் வந்துவிட்டது.

கருணாவின், உழைப்பு.. மூளை.. தொழில் யுக்தி.. பணம்.. எல்லாம் சரியாக இருக்க முன்னேறிக் கொண்டே இருந்தான். வீட்டிற்கு என நேரம் இல்லை அவனின் நாட்குறிப்பில். எதற்கு என்றாலும் செந்தூரந்தான்  வந்தான். பிள்ளைக்கு உடல்நலமில்லை.. பிள்ளைக்கு உடைகள் வாங்க.. பிள்ளைக்கு மருந்துகள் வாங்க.. சின்ன சின்ன விழாக்களுக்கு செல்ல.. இப்படி  எல்லாவற்றுக்கும் செந்தூரந்தான் வந்து காரெடுத்தான். வீட்டில் ஒரு நபர் என்பதால்.. யாரும் விகல்பமாக எண்ணவில்லை. எண்ணியிருக்க வேண்டுமோ?.

இப்போதெல்லாம் போட்டிகளில்லை எதிலும்.. வஞ்சகம்தான். யாரும் எதிரிகள்.. பிடிக்காதவர்கள்..  என சொல்லிக் கொள்வதில்லை.. தூரோகிகளாகதான் வெளிப்படுகிறார்கள். முன்பு எதிரி என்பவன் நீ எது செய்தாலும் எதிர்ப்பான். வெளிப்படையாக தெரியும் அவனின் செயல்.. நம்மால் கண்டுக் கொள்ள முடியும். போட்டிகளிட.. வளர.. எதுவாக இருக்கும். இப்போது எதிரியே இல்லை.. நண்பனாக கூடவே இருப்பேன்.. நீ எங்காவது இடரும் தருணத்திற்காக காத்திருப்பேன்.. அப்போது, உன் திட்டங்கள்.. உன் பணம்.. உன் அதிகாரம்.. உன் சுயமரியாதை.. உற்பட அனைத்தையும் காவு வாங்கிடுவேன். அதற்கு, ஊர் என்ன பெயர் வேணுமானாலும் சொல்லட்டும்.. என்பதுதான் துரோகத்தின் செயல். 

வருடங்கள் சென்றது. கருணா லாவண்யா இடைய பனிப்போர் தொடங்கியது. குருவிற்கு இரண்டு வயது. நடக்க தொடங்கிவிட்டான்.. நிற்பதில்லை ஓரிடத்தில்.. ஓடி பழகிக் கொண்டான். ஒருமுறை மாடி படியில் உருண்டு விழுந்து தலையில் இரத்த காயம். லாவண்யா, தன் கணவனுக்கு அழைக்கவில்லை.. செந்தூரனுக்கு அழைத்து பேசினால். செந்தூரனும், கருணாவிடம் சொல்லாமல்.. வீடு சென்று அங்கிருந்து இருவரையும் கூட்டிக் கொண்டு மருத்துவமனை சென்றான். அதுவரை.. லாவண்யா யாருக்கும் அழைக்கவில்லை.

செந்தூரன் மதியம் தாண்டியும் ஆபீஸ் வரவில்லை எனவும்.. பணியாளர்கள் அழைப்பினையும் ஏற்கவில்லை எனவும்.. கருணா தானாகவே அழைத்தான் செர்ந்தூரனை. அப்போதுதான் செந்தூரன் ‘குருவிற்கு அடிப்பட்டிருக்கு.. நானும் லாவண்யாவும் இங்க இருக்கோம்’ என்றான்.

கருணாவிற்கு பேச்சே இல்லை.. ‘எனக்கு தெரியாதே’ என எண்ணிக் கொண்டு.. எந்த மருத்துவமனை என கேட்டுக் கொண்டு அங்கே சென்றான். செல்லும் வழியில் அன்னை தந்தைக்கு அழைத்து சொன்னான்.. என்ன பண்றீங்க.. நீங்க பார்க்க மாட்டீங்களா.. பையன் பத்தி உங்களுக்கு கவலையே இல்லையா என கத்தினான். ஆனால், பயனற்றது. எல்லோருக்கும் அவனை போலவே வேலை.. மாலையில் இருவரும் பேரனோடுதான் இருக்கிறார்கள்.. நடுவில் நடப்பதை எப்படி அறிய முடியும் சொன்னாலன்றி.

கருணா, மருத்துவமனை வந்து சேர்ந்தான். எங்கே? என விசாரித்து வர.. அந்த  வராண்டாவில் செந்தூரன் கைகளை பற்றிக் கொண்டு.. மனையாள் அமர்ந்திருந்தாள். கருணாவிற்கு ஏதும் கண்ணில் படவில்லை.. இருவரும் சட்டென விலகினர்.

கருணா பதட்டமாக “செந்தூரா என்ன ஆச்சு டா” விவரம் அறியும் குரலில் கேட்டான். கூடவே மனையாளின் தோள் பற்றி நின்றுக் கொண்டான்.

லாவண்யா.. கண்களை துடைத்துக் கொண்டு.. கணவனிடமிருந்து விலகி மகனை பார்க்க வந்து நின்றாள்.

செந்தூரன் மருத்துவர் சொன்ன விவரங்களை சொல்லிக் கொண்டிருந்தான்.

மகன் உறங்கிக் கொண்டிருந்தான். மனையாள் இப்போது மகனிருக்கும் அறைக்கு சென்றாள்.

கருணா, மகனை பார்க்க வந்தான். “ப்பா ப்பா.. “ என துள்ளி திரிந்த பிள்ளை.. அசந்து உறங்கிக் கொண்டிருந்தது. மகனின் கேசம் வருடி மனைவியை பார்த்து “என்னாச்சு ம்மா” என்றான்.

மனையாள் கணவன் முகம் பாராமல் மகனை பார்த்துக் கொண்டே “ஓடிட்டே மாடிபடியை கவனிக்காமல் விழுந்துட்டான்..” என்றாள் ஒரு வெறுமையான குரலில்.

கருணா “நான் டாக்டர் பார்த்துட்டு வரேன்” என கிளம்பினான்.

அதற்குள் பெற்றோர் வந்தனர்.. இருவரிடமும் பேசி.. அவர்கள் பேரனை பார்க்க வைத்து.. அன்னையை லாவண்யாவோடு விட்டுவிட்டு.. தந்தையோடு மருத்துவரை பார்த்து வந்தான் கருணா.

செந்தூரனுக்கு எல்லோரும் நன்றி சொல்லினர். செந்தூரன் விடைபெற்று வீடு கிளம்பினான்.

அன்னையும் தந்தையும் வீடு சென்றனர்.. அவர்களால் முடியாது.. அத்தோடு காலையில் அன்னை விடுமுறை எடுத்துக் கொள்கிறேன் என்றதனால்.. உறங்கி வர சொல்லி அனுப்பினான், கருணா.

லாவண்யா இப்போதெல்லாம் மாமனார் மாமியாரோடு அதிகம் பேச்சில் கலப்பதில்லை. அதனால், இப்போதும் ஏதும் பேசவில்லை.

கருணாவிற்கு உதவ என கருணாவின் உதவியாளர் வரவா என்றதற்கு.. வேண்டாம் என மறுத்துவிட்டான். தானே மானையாளுக்கு உணவு வாங்கிக் கொண்டு வந்தான்.. அவளோடு அமர்ந்து உண்டான். மகனுக்கு உணவு மருத்துவமனையில் கொடுத்துவிட்டனர். மகன் எழுந்தது முதல் வெளியே போக வேண்டும் என அழுகைதான். அவனை சமாதானம் செய்து.. தன் மடியிலேயே கிடத்தி உறங்க வைத்தான். குரு எல்லா பிள்ளைகளையும் போலதான்.. தந்தையை கண்டால்.. அவரை விட்டு பிரியமாட்டான்.. அவனிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டே இருப்பான். கருணாவும் மகனோடு விளையாடுவான் அது பத்து மணிக்கு மேல்.. வீடு திரும்பினாலும். அதனால், இப்போதும் தந்தையோடு ஒட்டிக் கொள்ள.. லாவண்யா கொஞ்சம் உறங்கினாள் இரவில் இப்போது.

மகன் மனையாளோடு இருந்தான் அந்த இரவு, பாரமாக உணர்ந்தான். எதோ சரியில்லை தங்களுக்குள் என முழுதாக உணர்ந்துக் கொண்ட நேரம் அது. உறங்கவேயில்லை கணவன். யோசித்துக் கொண்டே இருந்தான்.. என்ன நடக்கிறது.. எப்படி தன்னை தகவமைத்துக் கொள்வது.. இவர்களுக்காக என எண்ணிக் கொண்டேயிருந்தான்.

மகன் பூரணமாக குணமடைந்து வீடு வந்தான். கருணா, மதியம் வீடு வர தொடங்கினான்.. பிள்ளை மனையாளோடு நேரம் செலவிட தொடங்கினான். ஆனால், மனையாள், மகனை கணவனிடம் விட்டு அதிக நேரம் போன் பேச சென்றுவிட்டாள். அப்போதும் கருணா, மகனோடு விளையாடி அசந்து உறங்கி எழுந்து இருப்பான். மனையாளிடம் சிலநாட்கள் வெளியே போகலாமா என சிலநேரம் கேட்டதுண்டு.. மனையாள் “நான் வரலை.. குருவை கூட்டி போங்க” என்றிடுவாள்.

கருணாவிற்கு கோவம் எரிச்சல் என எந்த உணர்வும் வந்ததில்லை.. சரி என இயல்பாக எடுத்துக் கொண்டு சென்றிடுவான். மகனோடு வெளியே செல்லுவான்.. அவனோடு விளையாடும் இடங்களுக்கு சென்று அவனை விடலையாட விடுவான். புகைப்படம் எடுத்து மனையாளுக்கு அனுப்புவான்.

லாவண்யாவிற்கு இதெல்லாம்.. மகன் மீதான அன்பாகவே தெரிந்தது. கருணாவும்.. மனையாளை நெருங்கி என்ன ஆகிற்று என கேட்கவில்லை.. பேசி அவளை ஆற்றுப்படுத்தவில்லை.. சரியாகிடும் என இருந்தான். என்னமோ தெரியவில்லை  நெருங்க முடியவில்லை அவனால்.

புதிதாக harley Davidson பைக் வாங்கிக் கொண்டு வந்தான் ஒருநாள். பூஜை போட வேண்டும் என மனையாள் மகனை கூட்டி செல்ல வீடு வந்தான். ம்கூம்.. மனையாள் இன்னிக்கு நான் கோவில் வரமாட்டேன் என்றுவிட்டாள். கருணாகரன்.. மகனோடு கோவில் சென்றான். பின் மனையாளை பின்னில் அமர வைத்து.. தனது ரெசார்ட் கூட்டி சென்றான்.. பின் அங்கேயே இரவு உணவு.. ஸ்பெஷல் ஏற்பாடாக செய்திருந்தான். லாவண்யா அன்று புன்னகையோடு பேசினால் தன்னிடம் என உணர்ந்தான். 

ஆனால், செந்தூரன் அங்கே இருந்தான் என்பதை அவன் உணரவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக கருணா மனையாளை  சமாதானம் செய்கிறேன் என எண்ணிக் கொண்டான்.

நாட்கள் கடந்தது. மகன் ப்ளே கிளாஸ் செல்ல தொடங்கினான்.

ஒருநாள்.. இரவு.. அருணகிரிக்கு.. மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்தது. ECR சாலையில் உள்ள.. ஒரு மருத்துவமனையில் உங்கள் மகன் அனுமதிக்கப்பட்ட்டிருக்கிறான் என.

 இருவரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை..

விழா முடித்து இரண்டு வாரம் ஓடிற்று. விழாவிற்கு வர முடியாதவர்கள் விசாலாட்சியிடம் போனில் அவர்களின் பேத்தியின் காதுகுத்து வைபவத்தை விசாரிக்கிறேன் என.. அவர்களின் முன்னாள் மருமகள் பற்றிதான் நிறைய விசாரித்தனர்.