‘அச்சோ… இவ்வளவு நேரமாகவா தூங்கிட்டோம்’ என உடலை நெறித்தபடி எழுந்தவனுக்கு

“இவ இன்றைக்கு பேங்குக்கு வேற போகனுமே…. ஏற்கனவே இரண்டு நாள் லீவ் வேற எடுத்திருந்தா?” என சாத்வியை எழுப்பினான்.

ஆனால் அவள் அசைந்தாள் அல்லவோ எழுவதற்கு அத்தனை அழுப்பு…அசையக்கூட இல்லை இவள்.

மீண்டும் மீண்டும் எழுப்ப…. சிறிதாய் உறக்கம் கலைந்து… “ம்..” என்ற முனங்கள் மட்டுமே வந்தது.

அவளின் அசதியை பார்த்து “பேங்குக்கு போகலையா” என அவளை எழுப்ப….

எந்த பதிலும் இல்லை அவளிடம், ஆனால் சத்ரியின் உலுக்கலில் கொஞ்சம் கொஞ்சமாய் துயில் கலைந்து கொண்டிருந்தது சாத்விக்கு.

அவளின் அசதியை பார்த்து.

‘இன்றைக்கும் பேங்குக்கு லீவ் சொல்ல வேண்டியது தான்’ என

டிரஸிங் டேபிளின் மேல் கிடந்த அவளின் மொபைலை எடுத்தான் மேனேஜரின் எண்ணை எடுப்பதற்காக.

வழக்கம் போல் பாஸ்வேர்ட் கேட்க “என்ன பாஸ்வேர்ட்” என யோசித்தவனுக்கு.. ஒரு நாள் பேங்கில் வைத்து அவளிடம் பாஸ்வேர்ட் கேட்ட நியாபகம் வந்தது.

சிரித்தபடியே அவளின் அருகில் வந்தவன் அவளது வலது கையை போர்வையினுள் இருந்து எடுத்து அவளின் பிங்கர் பிரின்டை சென்சாரில் வைத்து அழுத்தினான்.

லாக் ஓபன் ஆனது.. ஸ்கிரினில்  குலதெய்வம் கோவிலில் அவளும் அவனுமாய் எடுத்துக் கொண்ட   ஸ்னாப் ஒன்றை வைத்திருக்க.. அதை வெகு நேரமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.

பின் கான்டாக்டில் பேங்க் மேனேஜரின்  நம்பரை தேடி எடுத்து  சாத்விக்கு உடல் நிலை சரியில்லை என.. லீவ் சொன்னான்.

மீண்டும் ஸ்கிரினில் இருந்த போட்டோவை பார்த்த படி கட்டிலில் அவளின் அருகில் தலையணையில் முழங்கைகளை பதித்தபடியே.. குப்புற படுத்தவன் அவள் மொபைலில் கேலரி சென்று வேறு போட்டோகளை பார்க்க  குல தெய்வம் கோவில் எடுத்த போட்டோக்கள் அணிவகுத்து நின்றது.

ஒவ்வொன்றாய் பார்த்தவன் அதை தன் போனுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியும் வைத்தான்.

  பின் வேறு எதுவும் இருக்கிறதா? என கேலரி முழுவதும் தேட, சாத்வியின் செல்பிக்கள. அணி வகுத்து நின்றது.

போட்டோவில் இருப்பதெல்லாம் இவள் தானா? என அதிசயமாய் பார்த்தபடி வந்தான்.

 ஒவ்வொரு போல்டர்களாய் சாத்வியை பார்த்தவனின் கண்களுக்கு சிக்கியது முழுதாய் ஒரு போல்டர் முழுவதும் அடைத்து நின்ற சத்ரியின் நிழல்கள்..

அதிர்ந்து ஒரு முறை சாத்வியை பார்த்து பின் மற்ற போட்டோக்களை பார்த்தவன்…

‘இதெல்லாம் இப்போ எடுத்த போட்டோ இல்லையே..’ என வேக வேகமாய் அடுத்தடுத்த போட்டோக்களை பார்க்க, வரிசை கட்டி நின்றது எல்லாமே  அவனது போட்டோக்களே

‘ இவ்வளவு போட்டோ….எப்படி கிடச்சது இவளுக்கு..’

‘ஒரு வேளை நம்ப போனில் இருந்து சுட்டு இருப்பாளா’ என நினைத்தபடி யோசித்தவன் சட்டென உதித்த ஐடியாவில்…

 ‘இமேஜ் டீடையில்ஸ்’- ல் சென்று  போட்டோக்களை பற்றிய விவரங்களை தேடினான். அதில் டவுண்லோட் ப்ரம் என “சாத்வியின் மெயில் அட்ரெஸூம்”

டவுன்லோட்  டைம் அண்ட டேட்..   என ஒரு ஏழு எட்டு மாதங்களுக்கு முந்தைய தேதியை காட்டியது.

குழம்பிப் போனான் சத்ரி.

சத்ரியின் போட்டோக்கள் எல்லாம் கொஞ்சம் இளவயது போட்டோக்களாக ஆரம்பித்து தற்போதைய போட்டோக்கள் வரை அனைத்தும் இருக்க.  இதெல்லாம் எப்படி எட்டு மாதங்களுக்கு முன் இவளுக்கு கிடைத்தது.

குழப்பமே மிஞ்ச ‘மெயிலில்’ இருந்து தான் போட்டோ எல்லாத்தையும் டவுன்லோட் பண்ணி இருந்தாள்! என்ற நினைவு வர

மொபைலில் இருந்த அவளின் மெயிலை ஓபன் செய்து  வெகு நேரமாய்த் தேடினான்.

கிட்டதட்ட நாற்பது நிமிடங்களுக்கு மேலான தேடல்களுக்கு பின்பு அவன் கண்களுக்கு விருந்தானது சாத்வியின் காதல் மெயில்.

“MY CHATHRI” என பெயரிடப்பட்ட மெயிலை நடுங்கும் விரல்களால் ஓபன் செய்தான்.

சத்ரியின் நிழல்களால் நிறைந்த மெயிலை முழுவதுமாய் பார்த்தவனுக்கு வியர்த்துத் தான் போனது சாத்வியின் காதலை எண்ணி..

அந்த ஒரு மெயில் மட்டுமல்ல, வேறு வேறு தேதிகளில் வேறு வேறு மெயில்கள் ‘my chathri’   என அணி வகுத்து நின்றது.

அனைத்தையும் தேடி எடுத்தவன் கடைசி மெயிலையும் எடுத்து ஓபன் செய்தான். சொல்லப்போனால் அது தான் சாத்வியின் முதல் மெயில்.

அது காட்டிய தேதியில் அப்படியே உறைந்தான்.. கிட்டதட்ட எட்டு வருடங்களுக்கு முன் காட்டிய தேதி அது.

மொபைல் கை நழுவி மெத்தையிலேயே விழ..

விழியும் நழுவி அவளில் விழுந்தது.

 சாத்வியை துளைத்து எடுத்துக் கொண்டிருந்தது.. சத்ரியின் பார்வை

இறங்கியிருந்த காதல் வெறி மீண்டும் தீப்பிடிக்க ஆரம்பித்தது.

 அதை அணைக்கும் ஒரே வழி சாத்வி மட்டுமே என அவளை நெருங்கினான்.

அவளது இடையில் தாராளமாய் அழுத்தம் கொடுத்து தன் புறம் திருப்ப படாரென விழிகளை திறந்தாள் சாத்வி திரு திரு வென விழித்தபடி சத்ரியை பார்த்தவள், அவனின் துளைத்தெடுத்த பார்வையில் முழுதாய் கண் விழித்து பார்க்க

கோபத்தில் கண்கள் சிவக்க, மூக்கு விடைக்க தாடை இறுகிப்போய் தொண்டையில் மேலும் கீழும் இறங்கி அவனின் அமைதியின்மையை வெளிக்காட்டியபடி துருத்தி நின்ற எலும்பும் அவள் கண்களில் பட….

ஏதோ சரியில்லை என அழுத்தமாய் கண்களை தேய்த்துக் கொண்டு எழுந்து அமர, அவளை எழ விடாமல் இடையில் இன்னும் அழுத்தம் கொடுத்து தன் புறமாய் இறுக்கியவன்.

மறுகையால் பெட்டில் கிடந்த மொபைலை எடுத்து… அதில் இருந்த போட்டோக்களை அவள் முகம் நோக்கி காட்ட

‘ஐயோ… இதை எப்போ பார்த்தான்’ என விழிகள் விரிய அவனை பார்க்க..

அதற்குள் இருந்த இடத்திலேயே மொபைலை வைத்துவிட்டு

“செத்தா போய்டேன் நான்.” என கண்கள் தெரித்து விழும் அளவு கோபத்தோடு கேட்க

தூக்க கலக்கத்தில் எழுந்தவள் முதலில் பேசிய பேச்சுக்களை கிரகிக்கும் முன்பே இதயத்துடிப்பை நிறுத்தும் வார்த்தைகள் தெரிந்து விழுந்த அடுத்த நொடி… இடியென இறங்கியது சாத்வியின் கைகள்…  சத்ரியின் கன்னத்தில்.

அடித்த அடிக்கு சிறிதும் பதில் இல்லை….சத்ரியிடம்…

“ சொல்லுடி செத்தா போய்ட்டேன்”

“ என் போட்டோவை வச்சு பூஜை பண்ணிட்டு இருக்க…”

“அதுவும் எட்மு வருஷமா” என காதலின் அதீத வெறி பிடித்தாற்ப்போல் கத்திக் கொண்டிருந்தான் சத்ரி

சாத்வியோ “இனி இப்படி சொல்லுவியா…. சொல்லுவியா” என கேட்டு கேட்டு…  அவனை அறைந்து தள்ளியவள்

அவன் கண்களில் இருந்த வலியை பார்த்து..சாத்வி அவன் கழுத்தோடு சேர்த்து இறுக்கமாய் அணைத்துக் கொண்டு

“ஏண்டா இப்படியெல்லாம் பேசுற.. இதுக்காடா என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட” என அழவே ஆரம்பிக்க….

எந்த ஒரு பிரதிபலிப்பையும் காட்டாமல்

“ஐஞ்சு வருசத்துக்கு முன்னாடி தேடி வந்து.. சொல்லாமல் ஓடிட்ட

இப்போ ஏழு வருசத்துக்கு முன்னாடியே என் போட்டோவை தேடி எடுத்திருக்க..

இது மட்டும் தானா? இல்லை இன்னும் எதுவும் இருக்கா..! இருந்தா  இப்பவே சொல்லிடு ஒவ்வொரு தடவையும் சாகற மாதிரி இருக்கு” என மூக்கு சிவந்து தாடைகள் இறுக.. அவளை வெறுப்பா விருப்பா என தெரியாத அளவு  பார்வையாலேயே எரித்தவன்  கண்களை இறுக மூடி

வலிகளை தனக்குள்ளே புதைத்துக் கொண்டு  எழுந்து சென்றான்.

அவனை சிறிதும் தடுக்கவில்லை சாத்வி.

அவன் பேசிய வார்த்தைகளின் வீரியம் அறிந்த சாத்விக்கு உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது.

 அப்படி ஒரு நிலையை மனக்கண்ணில் கண்டவளுக்கோ…  அதீதமாய் வெறுப்பு வர…. அழுகையுடன் அவன் பின்னே செல்ல எழுந்தாள்.

எழுந்தவள் ஷாக் அடித்தார் போன்று மீண்டும் கட்டிலிலேயே அமர்ந்தாள்.

அறையை விட்டு வெளியேறியதாய் சாத்வி நினைத்திருக்க… அவனோ கதவை நன்றாக பூட்டிவிட்டு மீண்டும் அவளருகில் அமர்ந்து

கண்ணீர் வடிந்த கன்னங்களை துடைத்தபடி “எப்படி இந்த போட்டோ உனக்கு கிடச்சது” என அவளது மொபைலில் இருந்த போட்டோகளை பார்த்து கேட்க.

அவனின் கோபம் கொண்ட முகத்தை பார்த்தவளுக்கு தானாகவே பதில் வந்தது…

“பேஸ்புக்கில் இருந்து “