கிருத்தியும் வெங்க்கட்டும் கூட சேர்ந்து சிரிக்க… கஸ்தூரி தன் கணவனையே ஆர்வமாய் பார்த்திருக்க….
சிரிப்பில் கலங்கிய கண்களை துடைத்தபடி சத்ரியின் அருகில் வந்தவன் இரண்டு அடி போட்டு “ப்ளான் பண்றதெல்லாம் பண்ணிட்டு பிளானே இல்லைன்னு கவுத்திட்டியேடா… இதை தாண்டா என்னால தாங்கவே முடியலை..” என மேலும் சிரிக்க..
“உங்க தம்பிக்கு இருக்குற மூளை கொஞ்சமாவது உங்களுக்கு இருந்திருந்தா… நமக்கு இவ்வளவு கஷ்டமே இருந்திருக்காது” என கிருத்தி போலியாய் வெங்க்கட்டை முறைக்க…
வெங்க்கட்டிற்க்கும் அப்படித் தான் தோன்ற “ஆமாம் கிருத்தி… ஊரை விட்டு ஓடறதுக்கு முன்ன… இவன் கிட்ட ஐடியா கேட்டு இருந்திருக்கலாம்… நல்ல ப்ளானா போட்டு கொடுத்திருப்பான்” என வெங்க்கட்டும் போலியான கோபத்துடன் சத்ரியை பார்க்க…
“ இப்போ கூட ஒன்றும் பிரச்சனையல்லை வெங்க்கட்…. எனக்கு வேற ஒரு அண்ணயை ரெடி பண்ணு…. ஐடியா தரேன்” என சிரிக்காமல் சொல்ல…
“ அடேய்….“ என மற்றவர்கள் கோரசாய் சத்தம் எழுப்ப….
“இப்போ கோரசாகத்தி ப்ரயோஜனம் இல்லை. இதெல்லாம் காலம் கடந்த ஞானோதயம்.. பேசி ஒன்னும் ஆகப்போறதில்லை… இடத்தை காலி பண்ணுங்க ” என கூட்டத்திலிருந்து விலக…
“எங்கேடா போற..” என மீண்டும் கோரசாக கேட்க…
சாத்வியை திரும்பி பார்த்தவன்..
“ இப்போ நீங்க எல்லாரும் நடத்தின பாராட்டு மழைக்கு என் பொண்டாட்டி எனக்கு ரொமான்ஸ் கிளாஸ் எதாவது ரெடி பண்ணிருப்பா.. அதுக்கு தான் போறேன்” என மற்றவர்களிடம் கூறியபடி
திரு திரு வென விழித்துக் கொண்டு நின்றிருந்த சாத்வியை பார்த்து “ரொமான்ஸ் கிளாஸ் உண்டு தானே..” என சிரிக்க
இவனை என்ன செய்வது என்பது போல் பார்த்த சாத்வியின் கைகளில் பூரிக் கட்டையை கொடுத்த கிருத்தி..
“ இது போதுமா சாத்வி..” என…
அதை பிடுங்கிக் கொண்டு அவனை துரத்த…
அவளிடம் சிக்காமல் ஓடிக் கொண்டிருந்தான் சத்ரி….
சிறு வயதில் ஆரம்பித்த அவர்களின் நேசம்…
துளியும் கலங்கமில்லாது
அவர்களின் நெஞ்சில் ஈரமாய் உறைந்து நின்றது…
அன்றும்…. இன்றும்.. என்றும்.
————
தங்கள் அறைக்கு வந்த வெங்க்கட்டிடம் “ஷிவா மாமாக்கு நம்ம மேல எதுவும் கோபம் இல்லையா…. சாதாரணமா பேசிட்டு இருந்தீங்க…. நேத்தே கேட்கனும்னு நினைச்சேன்… என்ன நடந்தது“ என வெங்க்கட்டிடம் கேட்க
“ம்… என்ன நடந்தது…. சமாதானம் தான் நடந்தது” என சிரித்தான் வெங்க்கட்
” என்னன்னு சொல்லுங்க” என சினுங்க
“ சரி சரி சொல்றேன்” என சொல்ல தொடங்கினான்
சத்ரியை ஷிவா அடித்திருக்கிறான் என ஷிவாவின் மூலமே தெரிந்த வெங்க்கட் வேகமாய் சத்ரியின் அறையனுள் வந்தான்…
“அடி வாங்கின அவனே சும்மா இருக்கான்…. உனக்கென்ன” என ஷிவா வெங்க்கட்டை முறைக்க….
“முடிஞ்சு போனதை ஏன் தோண்டி எடுக்கிற விடு… வெங்க்கட்” என சத்ரி வர….
“நான் பண்ணின தப்புக்கு நீ ஏண்டா அடி வாங்கனும்… அது தெரிஞ்சும் உன்னை அடிச்சவங்களுக்கு அறிவு எங்கடா போச்சு” என சீற….
வெங்க்கட்டின் கோபத்தை தூசு தட்டினார்ப் போல் பார்த்த ஷிவா…
“ நானா சொல்ல போய் தான், அவனை அடிச்ச விசயமே உனக்கு தெரியும். இதில் நியாயம் வேற கேட்க வந்துட்ட.. அதுவும் இவ்வளவு லேட்டா இதில் உன்னை அடிச்ச மாதிரி பில்டப் வேற கொடுக்குறியே… ஒவரா தெரியலை” என
சூடு வைத்தார்ப்போல் அப்படி ஒரு வலி வெங்க்கட்டிடம் அதே வலியுடன்
“பேங்ளூரில் நீ என்னைப் பார்க்கமாலேயே இருந்திருக்கலாம் சத்ரி… எதுவுமே என் காதுக்கு வராமலேயே போய் இருக்கும் இவ்வளவு வலிச்சிருக்காது…
ஒரு தம்பியா என் மேல நீ எடுத்துகிற அக்கரையை
ஒரு அண்ணனா… எனக்கு நீ அந்த வாய்ப்பை கொடுக்கவே இல்லடா…
ஏன் அடிச்சன்னு ஒரு வார்த்தை கூட கேட்க முடியாதளவு ஆக்கிட்டடா” என வலியுடன் சத்ரியை பார்த்தவன்…. அங்கிருந்து நகர….
அவனை பிடித்து சோபாவில் அமர்த்தி அவன் தோளில் கை போட்டு அருகில் அமர்ந்தான் ஷிவா
“ஆசை வச்ச பொண்ணை யாராவது தூக்கிட்டு போனால் எல்லாருக்கும் வர்ற அதே வலி தாண்டா எனக்கும்… நீ இருக்குற இடம் இவனுக்கு தெரியாமலேயா இருக்கும்ன்னு தான் அடிச்சேன். ஆனால் அதுக்கப்பறம் ரொம்ப ஃபீல் பண்ணினேன் வெங்க்கட்”
“ம்ப்ச்…. விடு வெங்க்கட் பேச்சு வாக்கில் தான் தெரிந்தது உனக்கு எதுவும் தெரியாதுன்னு. இன்னும் எதுவும் தெரியாமல் இருக்குறியேன்னு தான் கோபத்தில் நானும் பேசிட்டேன் சாரிடா…” என
“நீங்க எதுக்குண்ணே சாரிலாம் கேட்குறீங்க… நடந்ததை இவனே சொல்லி இருந்தா கூட இவ்வளவு வலிச்சிருக்காது… நாங்க எதுவுமே தெரிஞ்சுக்காமல் சுயநலமா இருந்திருக்கோம்ன்னு.. அன்னைக்கு சாத்வி நல்லா நல்லா கேட்டுட்டு போனாள்…. இன்றைக்கு நீங்களா… நல்ல வேளை க்ருத்தி இங்கே இல்லை” என பெரு மூச்சு விட அதையும் மீறி ஓர் ஆதங்கம் வெளி வரத் தான் செய்தது
“நானே சொல்லி இருந்தால் இவ்வளவு அசிங்கப்பட்டு இருக்கமாட்டே சாரிடா வெங்க்கட்“ என சத்ரியும் அவர்கள் அருகில் அமர
“காதலிச்சவங்களையே கல்யாணம் பண்ணிக்கிறது என்ன அவ்வளவு பெரிய தப்பா” என குனிந்திருந்த தலையை நிமிர்த்தாமல் கேட்டான் வெங்க்கட்
“இதை கூட உன்னால் தலை நிமிர்ந்து கேட்க முடியலை இது தாண்டா. நீ காதலுக்கு கொடுத்த மரியாதை” என ஷிவா கூற
விலுக்கென நிமிர்ந்தான் வெங்க்கட்
“சத்ரி காதலுக்காக காத்திருந்து… கிடைச்ச சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கிட்டான்… ஆனால் அது பெரிசா தெரிய வாய்ப்பில்லாமல் பண்ணிட்டான் இந்த பய”
“ ரெண்டு பேரோட டார்கெட்டும் ஒன்னு தான்…. ஆனால் அதை நிறைவேத்திகிட்ட வழி தான் வேற வேற… உனக்கும் ஒரு பொண்ணு இருக்காடா. அதான் இத்தனை அட்வைஸ்… இரண்டு பக்கமும் பேலன்ஸ் பண்ற அப்பாவா இரு”
“மற்றபடி கஷ்படுத்தி இருந்தா மன்னிச்சுடு” என….ஷிவா சொல்ல
“பெரிய வார்த்தையெல்லாம் பேசாதீங்க” என சத்ரியும்…
“ஐய்யோ அண்ணே நீங்க போய் சாரி கேட்டுட்டு இதில் முழுசா பாதிக்கப்பட்டதே நீங்க தான்” என வெங்க்கட்டும் கூற
“உங்களால் தாண்டா எனக்கு கஸ்தூரி கிடைச்சா… கஸ்தூரிக்காகவே உங்களுக்கு என்ன வேணா செய்யலாம்டா” என ஷிவாவும் சிரிக்க….
“பாஸ்ட் இஸ் பாஸ்ட்… மறக்க முடியலைன்னாலும்… நினைக்காமல் இருக்க பழகிப்போம்” என ஷிவா தன் கையை நீட்ட அவன் கைகளோடு இணைந்தது சத்ரி வெங்க்கட்டின் கைகள்.
நடந்ததை கேட்டு கிருத்திக்கு புருவங்கள் இரண்டும் உச்சி மேட்டுக்கே செல்ல.
“ அட்வைஸ் இல்லாத ஒரு அட்வைஸ்” என்றவள்
“உண்மையிலேயே ஷிவா மாமா க்ரேட் தான்” என கிருத்தி கூற
“ம் ஆமா கிருத்தி…கிரேட் தான்… இரண்டு பேரோட சந்தோஷத்தை பார்க்கும் போது , இப்போ தான் உறுத்தல் இல்லாமல் இருக்கு” என வெங்க்கட் கூற….
“ம் எனக்கும் தான் வெங்க்கட்” என அவனின் தோள் சாய்ந்தாள் க்ருத்தி.
————–
சாத்வியுடன் சிரித்து பேசினாலும், அவ்வப்போது அவளின் மேல் அழுத்தமாய் படியும் பார்வை ‘இன்னும் என் கோபம் குறையவில்லை’ என்பதை காட்டிக்கொடுக்க அமைதியாய் இருந்தாள் சாத்வி.
திவ்யாவின் பிறந்தநாளும் அன்று சேர
பிறந்த நாள் விழாவை வீட்டிலேயே முடித்து கொண்டு ஹோட்டலில் டின்னருக்கு ஏற்பாடு செய்ததால் அங்கே சென்றனர்.
அது போக இளையவர்களின் சினிமா கொட்டமும் சேர்ந்து கொள்ள வீடு திரும்புவதற்கே நடு இரவானது.
முந்தைய நாள் தூங்காதது, காலையில் வீட்டில் நடந்த அலம்பல், பிறந்த நாள் கொண்டாட்டம் என களை கட்டியது அந்நாள்.
காலையில் சத்ரியுமே மிகத் தாமதமாய் எழுந்தான். படுக்கையின் இடதுபுறமாய் தளர்வாய் துயில் கொண்டவளை பார்த்தபடி நேரத்தை பார்க்க… அது பத்தரை என காட்டியது