“உன் மகன் ப்ராடு வேலை பார்த்து தான் சாத்வியை கல்யாணம் பண்ணினான் சொன்னா நம்பவா போற” என நடிக்க
“என் மகனை குறை சொல்லலைன்னா…உங்களுக்கு தூக்கமே வராதே” சிவஹாமி முறைக்க…
“ப்ராடு வேலையும் பார்த்துட்டு நல்லவன்னு பேரு வாங்க உன் மகனால் மட்டும் தான் முடியும்” என திருமணத்தில் ரமேஷின் காதலை தனக்கு சாதகமாய் பயண்படுத்தக் கொண்ட விதத்தை கூற
சிவஹாமியும் மஹாவும் சத்ரியா இப்படியெல்லாம் பண்ணினான். என ‘பே‘ வென பார்த்திருக்க சங்கரன் மட்டுமே அமைதியாய் நடக்கும் கூத்தை வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தார்.
எல்லாவற்றையும் சொல்லிய விநாயகம்
“இப்படிபட்டவனை நீ நல்லவன்னு சொல்லிட்டு திரியுறீயே“ என சிவஹாமியை இழுக்க
“சத்ரி யா இப்படியெல்லாம் செய்தான்?” என ஒரு நிமிடம் குழம்பித் தான் போனார் சிவஹாமி ஆனால் அதை தகர்த்தது மஹாவின் வார்த்தைகள்.
“அண்ணே சத்ரியை மட்டும் எதுவும் சொல்லாதீங்க… அவன் இல்லைன்னா இன்னைக்கு சாத்வி எந்த நிலையில் இருப்பான்னு கூட எங்களால் சொல்ல கூட முடியாது… சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டாலும் பெரியவங்களுக்கு எந்த ஒரு தலைகுனிவும் இல்லாமல் தன்னோட கல்யாணத்தை நடத்தினதே போதும் அண்ணே அதனால சத்ரியை இனி இதில் இழுக்காதீங்க” என கராராய் மஹா பேச
இந்த முறை ‘பே’ என விழிப்பது விநாயகத்தின் முறையானது.
“மஹா சொல்றதும் சரி தான் மச்சான் சத்ரியை இனி இதில் இழுக்காதே” என சங்கரனும் பேச
“நான் எல்லாத்துக்கும் ஷாக் கொடுக்கலாம்ன்னு பார்த்தா…. நீங்க எல்லாம் எனக்கு ஷாக் கொடுக்குறீங்க….உன்னையும் மயக்கிட்டானாடா என் மகன்” என விநாயகம் வாய் பிளக்க
“ ம் அப்படித் தான் வச்சுக்கோயேன் மச்சான்” என வாய் விட்டு சிரித்தார் சங்கரன்.
சங்கரின் வாயையே பார்த்தவர்களுக்கு பதில் கூற தொடங்கினார் சங்கரன்.
“சாத்விக்காவது என் இஷ்டபடி கல்யாணம் பண்ணனும்னு தான் இங்கே வந்தது. ஆனால் சத்ரியோட ஒவ்வொரு நடவடிக்கையும் சாத்வியை சத்ரி விரும்புறான்னு காட்டிக் கொடுத்துடுச்சு..
ஆனால் சத்ரி சரியா படிக்காதது.. மெக்கானிக் ஷாப்பில் என்ன வருமானம் வர போகுதுன்னு தான் நான் சத்ரியை வேண்டாம்னு சொன்னதுக்கு காரணம்.
ஆனால் அந்த தைரியம் எல்லாம் ஒன்னுமில்லாமல் ஆனது. ரமேஷ் கல்யாணமே செஞ்சு ஒரு பொண்ணோட வந்து நின்னப்போ தான்.
அந்த நேரம் வரை சாத்வி மேல் இருந்த ஒரு உரிமை உணர்வு, என் சந்தோஷத்தை அவள் மேல திணிக்கனும்ன்னு திமரா இருந்தது எல்லாம் அந்த இடத்திலேயே உடைஞ்சு போய்டுச்சு மச்சான்.
சாத்விக்கு இந்த விசயம் தெரிய வந்தா.. என்ன ஆகும்ன்னு தலையே வெடிச்சிடுச்சு..ரமேஷை ஏத்துக்க வைக்குறதுக்குள்ளேயுமே நாக்கு தள்ளி போச்சு… மறுபடியும் முதலில் இருந்தான்னு ரொம்ப பயந்துட்டேன்
அப்போது தான் சத்ரியை கொண்டு வந்து நீ நிறுத்தின… அப்போ கூட எனக்கு முழு சம்மதம் இல்லை… வேற வழியே இல்லைன்னு தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்..
ஆனால் நீ எங்கிட்ட பேசின அப்பறம்… சத்ரி என்கிட்ட தனியா பேசினான் நிச்சயம் நடக்கும் முன்னேயே… பேசினான்.
நீ இப்போ கதை கதையா சொன்னீயே அதை அப்படியே ஒன்னு விடாமல் எங்கிட்ட சொன்னான்” என்றவர்
அதன் பின் நடந்தவைகளை கூற தொடங்கினார். இதற்குள் மற்ற இளைய தலைமுறையினர் பேச்சு சத்தம் கேட்டு ஒவ்வொருவராய் வர ஆரம்பிக்க, முதலில் வந்த ஷிவா மற்றவர்களை தடுக்க ஓரமாய் நின்று இதெல்லாம் கேட்க தொடங்கினர்.
என்னவோ ஏதோ வென கேட்க ஆரம்பித்த சத்ரியும் இவர்களின் பேச்சை கேட்டு “ஐய்யோ” என போஸ் கொடுத்தபடி நிற்க…
சாத்வியோ அவனை விழுங்கும் படி பார்த்திருக்க மற்றவர்கள் சிரிப்புடன் சங்கரன் பேசுவதை பார்த்திருந்தனர்.
“அப்போ இதெல்லாம் உன்னோட ப்ளான்னா…. இதுக்கு அந்த ரமேஷூம் உடைந்தையா… இரண்டு பேரும் சேர்ந்து தான் இந்த கல்யாணத்தை ப்ளான் பண்ணி நிறுத்துனீங்களா” என கோபம் கொப்பளிக்க சங்கரன் நிற்க…
“ப்ளானா! நானா!” என சிரித்த சத்ரி
“ஒரு வருங்கால மருமகனா அவனை ஏத்துக்க தயாரா இருக்கும் போது… அவனோட சம்மதம் இருக்கா இல்லையான்னு கூட தெரியாமல் அவசர அவரசமா முடிவு பண்ணினது நீங்க.. ஏற்கனவே ஒரு பொண்ணை விரும்புவது தெரிஞ்சும், துணிஞ்சு உங்களுக்கு நம்பிக்கை கொடுத்தது கோதண்டம் சித்தப்பா இதில் என்னோட ப்ளான் எங்கே இருக்குது” என நேரடியாய் கேட்டான் சத்ரி
அவனின் கேள்வியில் பதில் சொல்ல முடியாமல் சங்கரன் நிற்க
“பேசாமல் உங்க கிட்டேயே நேரடியாய் சாத்வியை கேட்கலான்னு கூட நினைச்சேன்… ஆனால் என்னோட படிப்பையும் உழைப்பையும் கிண்டலா பேசி என்னை வேண்டாம்னு சொன்னதை ஏற்கனவே நான் கேட்க வேண்டியதாயிடுச்சு….
இதுக்கு மேல கேட்டாலும் பயனில்லைன்னு தோணினது. அதுக்கப்பறம் தான் கல்யாணத்தை நிறுத்த ஏதாவது ப்ளான் போடலாம்ன்னு நினைச்சு ரமேஷ் கிட்ட நான் பேசினது. ஆனால் இவ்வளவு பெரிய வாய்ப்பு எனக்கு கிடைக்கும் போது விடுவேனா கப்புன்னு புடிச்சுக்கிட்டேன்.. சந்தர்ப்பத்த பயன்படுத்திக்கிட்டேன்..” என தோள்களை குலுக்க
சத்ரியின் இப்பேர்பட்ட பேச்சுக்களை எதிர் பார்க்காத சங்கருக்கு அவன் மேல் சந்தேகம் எழ
“சத்வியை நீ விரும்புறீயா”என தன் சந்தேகத்தை அவனிடம் கேட்க….
“ஆமாம் ” என்றான் சத்ரி எதையும் மறைக்காது.
“ இது எப்போ இருந்து” என கூர்மையாய் பார்க்க…
“ ‘சாத்வியை தான் நான் சத்ரிக்கு பேச நினைச்சுது… வெங்க்கட்டை இல்லை’ இது நீங்க சொன்னது தான்…. சொன்ன நிமிஷம் நியாபகம் இருக்கா?”என சத்ரி சொல்லி நிற்க
“ ஷாக் அடித்தார்ப்போல் ஒரடி பின் நகர்ந்தார் சங்கரன். அவரின் அதிர்வை உள்வாங்கியவன், பயமூட்டாமல் மெதுவாய் பேச தொடங்கினான்.
“சாத்விக்கு நான் தான் பொருத்தமாவேன்னு.. எங்களோட சின்ன வயதிலேயே முடிவெடுத்தீங்க… அப்போ….அந்த சின்ன வயசில் இருந்த நம்பிக்கை…. இப்போ எங்கே போச்சு மாமா… அப்போ இருந்த அதே சத்ரி தான்…. இப்போவும்… ரொம்ப வருசம் சாத்விக்காகவே காத்திருக்கேன்… சாத்வியை எனக்கு கொடுத்துடுங்க மாமா… நான் பார்த்துக்கிறேன்” என மெதுவாய் கேட்க….
அவன் வார்த்தைகளில் தெரிந்த உண்மை சுட்டாலும்….
“ஆனால் சாத்வி ஒத்துக்கனுமே..” என முதல் முறையாய் மகளுக்காய் யோசித்தார் சங்கரன்.
“ நான் சொன்னதுக்காகவே கல்யாணத்துக்காக சம்மதம் சொன்னவள்.. அவளோட கணவன் நான் தான்னு தெரிஞ்சா? சம்மதம் சொல்லாமல் இருப்பாளா?” என பொறுமையாகவே பதில் கூறியவனை பிடித்து தான் போனது சங்கருக்கு
“சாத்வியும் உன்னை விரும்புறாளா?” என மீண்டும் சந்தேகத்துடன் கேட்க
“இப்போ வரை ரமேஷோட தான் கல்யாணம்ன்னு நினைச்சிட்டு இருக்கா.. அப்படி இருக்கும் போது…. உங்க கேள்வி இப்போ அவசியமே இல்லை” என சாத்வியை தன்னுடன் இணை கூட்டாமல் அழகாய் பதில் சொன்னான்…
“ப்ளீஸ் மாமா” என நின்ற சத்ரியை வெறுக்க முடியவில்லை…
“இப்படி ஒரு நல்ல புள்ளையை குறை சொல்றியே மச்சான். உனக்கே நியாமா இருக்கா ” சொல்லி முடிக்கும் முன் ஷிவாவிற்கு சிரிப்பு வெடிக்க
கஸ்தூரியின் புடவை முந்தனையை எடுத்து தன் வாய்க்குள் அடைத்தபடி கண்ணீர் வர ஷிவா சிரித்தான் .
உருண்டு புரண்டு சிரிக்கவில்லை அவ்வளவு தான்.. மற்றபடி அதை தான் செய்து கொண்டிருந்தான் ஷிவா மற்றவர்கள் புரியாமல் பார்த்தலும் சிரிப்பு அவர்களையும் தொற்ற அடக்கப்பட்ட புன்னகையோடு சாத்வி கிருத்தி வெங்க்கட் நின்றிருக்க….
“அண்ணி.. கொஞ்சம் நகருங்க” என சத்ரி ஷிவா முன் வர
வாய்க்குள் இருந்த புடவையை வேகமாய் உருவி நகர்ந்தாள் கஸ்தூரி
“இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி சிரிக்கறண்ணே.” என சத்ரி கடுப்பாய் கேட்க…
பதிலில்லை ஷிவாவிடம் மீண்டும் சிரிப்பு தான் வந்தது.. சத்ரியையும் சாத்வியையும் பார்த்து பார்த்து சிரிக்க
“அண்ணே…” என சத்தம் வராமல் கத்தியவன் அருகில் இருந்த அறைக்குள் தள்ள மற்றவர்களும் உள்ளே வந்தனர்
சத்தமில்லாமல் அதுவரை சிரித்தவன் அறைக்குள் வந்ததும் பலமாய் சிரித்தபடி
“பண்றதெல்லாம் பண்ணிட்டு நல்லவன்னு எப்படிடா பேர் வாங்குற… இதில் சாத்வி உன்னை காதலிக்கவே இல்லைன்னு பொய் வேற… எல்லாம் சோத்துல பூசனிக்காயை மறைச்சா… நீ…. பூசனிக்காய் தோட்டத்தையே மறைச்சுட்டியேடா” என கடந்த கால சத்ரி சாத்வியின் நிகழ்வுகளை நினைத்தவனுக்கு மீண்டும் சிரிப்பு பீரிட
சத்ரியோ மானசீகமாய் தலையில் அடித்துக் கொள்ள… சாத்வி முகத்தை வேறு புறம் திருப்பிக்கொண்டாள்.