பதட்டத்துடன் அவளது கண்ணத்தில் கைவைத்து உளுக்கியவள் “ ஜெனி பாருடி என்னாச்சு கண்ணை முழிச்சு பாருடி” என்று கத்திக்கொண்டிருக்க “ அய்யோ ஜெனி! என்னடி பண்ண அவளை” என்று அறைவாயிலில் ஸ்ரேயின் குரல் கேட்டது.
பையை வெளியிலேயே விட்டவள் ஜெனியின் அருகில் வந்து நின்றுக்கொண்டு “ ஜெனி ஜெனி எழுந்திருடி!! எனக்கு ஒன்றும் தெரியாதுடி எல்லாம் இவ தான்டி பண்ணச்சொன்னா! எனக்கு பயமா இருக்குடி” என்று எல்லாவற்றையும் உளறிக்கொட்ட ஸ்ரீக்கு எங்கேயாவது சென்று முட்டிக்கொள்ளலாம் போல் இருந்தது.
“ நிலமை புரியாம இவ வேற “ என்று வெளிப்படையாக தலையில் அடித்துக்கொண்டவள் ஜெனியை அப்படியே விட்டுவிட்டு ஸ்ரேயாவின் கையைப்பிடித்து தரதரவென அறையை விட்டு வெளியே இழுத்துக்கொண்டு விட்டவள் கதவை இழுத்து சாற்றியிருந்தாள்.
“ ஹே விடு அம்மு ஏன்டி கதவை சாத்துற!! அவளை முதல்ல பாக்கனும்! கதவை திற” என்று அவளது பிடியில் இருந்து விலகப்பார்க்க “ அடியே மெண்டல் கத்தாம இருடி முழிச்சிட ஏற்கனவே சொதப்பினது பத்தாதா?மொத்த பிளானும் ஊத்திக்கும் அமைதியாக இருடி!” என்று அவளை அடக்கப்பார்த்தாள்.
“ உன் பிளானை தூக்கி குப்பையில போடுடி! நான் சண்டை போட்டா அவ எப்படிடி கான்ஃபிரன்ஸுக்கு போவா குரங்கே! நான் அப்பவே வேண்டாம்னு சொன்னேன் கேட்டியா நீ! பாரு எப்படி மயங்கி கிடக்கறானு! எனக்கு எப்படி பதறுது தெரியுமா?? உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?” என்று ஆவேசமாக கத்த அவளது வாயில் கைவைத்து மூடியவள் தன் வாயில் சுட்டுவிரலை வைத்து அமைதி என்பது போல் சைகை செய்தாள்.
“கையை எடுடி! அவ இதெல்லாம் தாங்கமாட்டானு சொன்னேன்ல !நான் எல்லாத்தையும் பாத்துக்கறேன் அவ என் பொறுப்பு பருப்புன்னு டயலாக் மட்டும் அடிச்ச அவளே இல்லாம போயிட்டா என்னடி பண்ணுறது சொல்லு” என்றிட ஸ்ரீ கட்டிவைத்திருந்த பொறுமை காற்றில் பறந்துவிட்டது.
“எருமை எருமை!! கிளிப்பிள்ளைக்கு சொல்லுற மாதிரி எத்தனை தடவை சொல்லிக்கொடுத்தேன் எல்லாத்தையும் மறந்து உளறிக்கொட்டி கிளறி மூடினது மட்டும் இல்லாம டிஆர் மாதிரி பக்கம் பக்கமாக டயலாக் அடிக்கற நீ” என்று ஸ்ரே தலையில் நங்குநங்கென கொட்டினாள் ஸ்ரீ.
“ ஸ்ஸ்ஆஆஆஆ தலையில் மட்டும் அடிக்காத அம்மு வலிக்குது ” என்று தலையை தேய்த்துக்கொண்டாள்.
“ வலிக்குதா நல்லா வலிக்கட்டும்!! ஏன்டி இவ்வளவு சீரியஸான விசயம் நடந்து இருக்கு எவளாவது காஃபி கப்போட வந்து சண்டை போடுவாளா? கொஞ்சமாச்சும் அறிவுவேணாம்?”என்று அவளது காதைப்பிடித்து திருகினாள்.
“ ஹே சும்மா என்னையே திட்டாதடி ஜெனிதான் மெசேஜ் பண்ணா தலைவலிக்குது காஃபி வாங்கிட்டு வா அப்படின்னு! பாவம்ல அதான் வாங்கிட்டு வந்தேன்! ஆனால் அதை நல்லா மொக்கிட்டு என்ன குத்தம் சொல்லுற?”
“ கிழிச்ச வெறுமனே விபியை போட்டுக்கொடுத்தேன் என்று மட்டும் தானே சொல்ல சொன்னேன்?? குழந்தைக்குட்டினு எதுக்கு எக்ட்ராவா போட்ட”
“நல்லா ஃபோர்ஸா இருக்கும் சேர்த்துக்கோ அப்படின்னு விபிதான் சொன்னான்! நீ மட்டும் முதல்தடவை மூனாவது தடவைன்னு கேட்டல்ல பதிலுக்கு பதில் சரியா போச்சு போ”
“ அடியே குழந்தைன்னு சொன்னா எமோஷனல் ஆவான்னு தெரியுமில்லை வேற எதுவும் தோனலையா உங்களுக்கு லூசுங்களா” என்று எரிந்து விழுந்தவள் ஒருகணம் நிறுத்தி
“ அதுவா என் ஹெட்போன் சார்ஜர் எடுத்து வைக்க மறந்துட்டேன்டி அதான்” என்று இழுத்தாள்.
அவளை மேலிருந்து கீழ் பார்த்தவள் “ஏன் ஸ்ரே நீ லூசா? இல்லை லூசு மாதிரி நடிக்கிறியா??” என்று கேட்டாள்.
“ஏன்டி இப்படி சொல்லுற? நீ சொன்னதெல்லாம் பிடிக்கலன்னாலும் பண்ணேன்ல” என்று சிணுங்கினாள்.
“ எதுவுமே ஒழுங்காக பண்ணலடி! இரு வரேன்” என்று சலித்துக்கொண்டே கூறியவள் சென்று அறைக்கதவை திறக்க அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.
“தெரிஞ்சோ தெரியாமலோ உன்பிளானுக்கு நல்லதுதான் பண்ணியிருக்கோம் அம்மு! யோசிச்சு பாரு இந்த ஷாக்ல இருந்து அவளால வெளியேவே வரமுடியாது! இந்த இம்பாக்ட் முடியறதுக்குள்ள ஒத்துக்க வைக்கறது உன் சாமர்த்தியம்” என்று பால்கனி சுவற்றில் சாய்ந்து கொண்டு பெருமையாக சொன்னவள் “ என்னடி ரொம்ப நேரமாக அதே பொஷிஷன்ல நிக்கற என்னாச்சு! நான் சொன்னது கரெக்ட் தானே?” என்று கேட்டாள்.
“ ம்ம்ம் ரொம்ப கரெக்ட்” என்று குரல் மட்டும் கேட்டது.
“ என்ன வேற வாய்ஸ் கேட்குது” என்று கதவிற்கு நேராக வந்து எட்டிப்பார்க்க ஸ்ரீயின் முன்னால் நின்றிருந்தாள் ஜெனி.
அவளைக்கண்டதும் அதிர்ச்சியில் வாயைப்பிளந்து அப்படியே நின்றுவிட்டாள் ஸ்ரே.
அவளது பதிலில் இருந்தே ஸ்ரீக்கு அனைத்தையும் கேட்டுவிட்டாள் என்று தெரிந்துவிட்டது.
“ ஜெனி உன் நல்லதுக்குத்தான்டி” என்று ஸ்ரீ பேச வாயெடுக்க “அதுக்காக என் எமோஷன்ஸ் ஓட விளையாடுவீங்களா! நான் என்ன ஜடமா? நானும் மனுஷிதான்டி எனக்கும வலிக்கும்டி” என்று உணர்ச்சியற்றக்குரலில் கூற ஸ்ரீக்கு அவளை எப்படி கையாள்வது என்றே தெரியவில்லை.
“ நான் சொல்லுறதை கொஞ்சம் புரிஞ்சிக்க ட்ரைபண்ணு ஜெனி ” என்று ஜெனியின் கையை பிடிக்கப்போக தனது கையை பின்னால இழுத்துக்கொண்டாள்.
“ இனி பேச என்னடி இருக்கு? நீங்கசொல்லுறதெல்லாம் நம்பி ஏமாந்தது தான் மிச்சம்! போதும்டி ஆளவிடுங்க” என்றவள் தடுமாறி விழப்போக ஸ்ரீ அவளைத்தாங்கி பிடித்தாள்.
அவளை கைநீட்டித்தடுத்தவள் தலையைப்பிடித்துக்கொண்டே சென்று கட்டிலில் அமர்ந்துக்கொண்டாள்.
ஸ்ரேக்கு நிலைமையை எப்படி கையாள்வது என்றே புரியவில்லை.
“ஜெனி மார்னிங் பேசிக்கலாம்டி டயர்டாக இருப்ப! இப்ப எதுவும் வேணாம்டி” என்று கூற “கையும் களவுமா சிக்கிட்டீங்கல்ல இன்னும் எதுக்குடி நடிச்சிட்டு இருக்கற?” என்றுக்கூற ஸ்ரேவுக்கு கண்ணெல்லாம் கலங்கிவிட்டது.
“ஜெனி நான் சொல்லித்தான் அவப்பண்ணா! தேவையில்லாம அவளை ஹேர்ட் பண்ணாதே” என்றாள்.
“மேலும்மேலும் என்னை ஏமாத்திட்டே இருப்பீங்க நான் பல்லைக்காட்டி இளிச்சிட்டே இருக்கனுமோ? இதுக்கு மேல அடிவாங்க தெம்பில்லைமா? உங்களுக்கும் ஒரு கும்பிடு உங்க ஃபிரன்ஷிப்புக்கும் ஒரு கும்புடு” என்று தலைக்குமேல் கையெடுத்து கும்பிட்டாள்.
“ என்னது ஏமாத்தினோமா? எங்க அன்பு உனககு ஏமாத்து வேலையா தெரியுதா? எங்கே என்னைப்பார்த்து சொல்லு” என்றுக்கேட்டுக்கொண்டே உள்ளே வர ஜெனி அவளை ஒரு வெற்றுப்பார்வை பார்த்தாளே தவிர ஒன்றுமே பேசவில்லை.
“ இதோ பாரு ஜெனி உனக்கு உண்மை தெரிஞ்சிடுச்சு என்கறதுக்காக பம்மி பதுங்கியெல்லாம் நான் பேசமாட்டேன்! நீ கோவப்படுவ வருத்தப்படுவ என்கிற சில்லி ரீசனுக்காக உன்னை அப்படியே விடவும் என்னால முடியாது! நீ போற அவ்ளோதான் அதுக்காக நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன்! இன்னைக்கு நடந்ததில் இருந்து உனக்கு அது நல்லாவே புரிஞ்சு இருந்துருக்கும்னு நினைக்கிறேன் தேவையில்லாம எனெர்ஜி வேஸ்ட் பண்ணாதே” என்று கூறினாள்.
“ ஓஹ் எப்பவுமே கூட இருப்பீங்களா? நான் பாத்ரூம் போகும்போது கூடவே வருவீங்களா? இல்லை என் க்ளாஸ்ல கூடவே வந்து உட்கார்ந்துக்குவீங்களா? இல்லை திட்டம் போட்டு ஊருகடத்த பாத்தீங்களே அங்கேயும் பின்னாலேயே வந்து வேவு பாப்பீங்களா முடியுமா உங்களால” என்று மெல்லியக்குரலில் அதே சமயம் அழுத்தமாக லேசான மிரட்டல் தொனியில் கூற ஸ்ரேக்கு என்ன பதில்வினை ஆற்றுவதென்றே தெரியவில்லை.
“ சரி என்கூடவே இருந்து பத்திரமாக பார்சல் பண்ணி அனுப்பி விட்டுறீங்க! வழியிலே போகும்போது ட்ரெயின்ல இருந்து குதிச்சிட்டா என்னப்பண்ணுவீங்க?அதுக்கூட வேண்டாம்! ஆறு மாசம் அங்கே தனியாக நான் இருக்கனும் போற இடத்துல ஒரு குண்டூசிக்கூடவா கிடைக்காது” என்று கிட்டத்தட்ட மிரட்டிக்கோண்டிருக்க ஸ்ரே வாயில் வாயில் கைவைத்து அப்படியே நின்றுவிட்டாள்.
அவளது தொனியே சொன்னது கண்டிப்பாக செய்வேன் என்று. ஏனென்றால் ஜெனியைப்பற்றி ஸ்ரீக்கு நன்றாகத்தெரியும்.
நினைத்ததை நடத்தாமல் விடமாட்டாள்.
அவளது பிடிவாதக்குணம் தெரிந்ததால்தான் ஸ்ரீ இப்படியொரு பிரச்சினையை கொண்டுவந்ததே.
இந்த குழப்ப மனநிலையிலேயே அவளை சம்மதிக்க வைத்து ஊருக்கு அனுப்பி வைத்துவிடலாம் என்று நினைத்து இருக்க எல்லாம் மொத்தமாக சொதப்பிவிட்டது.
“ ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் ஜெனி!” என்று அறையே அதிரும்வண்ணம் கத்தியிருந்தாள் ஸ்ரீ. சலனமில்லாமல் அவளை ஏறிட்டு பார்த்தவள் “ ஆரம்பிச்சது நீ நீதான் முடிக்கனும்! என்ன பண்ணனும்னு உனக்கே தெரியும்” என்றாள்.
“ஓகே நானே போறேன் இனி எதுவும் பண்ணலை போதுமா” என்றிட எழுந்து விறுவிறுவென ஸ்ரீயிடம் வந்தவள் அவளது கையை தனது தலையில் வைக்க “குழந்தைத்தனமாக இருக்குடி” என்று கையை எடுக்கப்போக “இவ்ளோ பண்ணியிருக்க எப்படி உன்னை நம்பறது?இனிமே இது சம்மதமாக எதுவும் பண்ணக்கூடாது!சத்தியம் பண்ணு” என்று அவளது கையை தனது தலையில் வைத்து அழுத்தினாள்.
“அப்படி என்னடி உனக்கு வரட்டு பிடிவாதம் வேண்டிக்கிடக்கு? உனக்காகத்தானே எல்லாம் பண்ணோறோம்?” என்று ஜெனிக்கு புரியவைக்க முயற்சித்தாள்.
“ அப்போ வேற ப்ளான் வச்சிருக்க ரைட்” என்று கேட்க
“இதுக்கு மேல உனகூட மலலுக்கட்ட எனக்கு தெம்பில்லை, ஆளை விடு” என்று விலகப்பார்த்தாள்.
இன்னமும் ஜெனி அவளது கையை இறுக்கமாக பற்றிக்கொள்ள “இனிமே எந்த ப்ளானும் பண்ணமாட்டேன் இது சத்தியம் போதுமா” என்றிட “ சொன்ன சொல்ல காப்பாத்துவ என்று நம்புறேன்” என்று கூறியவள் அமைதியாக சென்று பெட்டில் முதுகு காட்டி படுத்துக்கொண்டாள்.
இருவரது சம்பாஷனைகளையும் ஏதோ பேய்படம் பார்ப்பதுபோல் திகிலுடன் பார்த்துக்கொண்டு இருந்தது என்னவோ ஸ்ரேதான்.
பையை கையில் வைத்துக்கொண்டு ஸ்ரீயையும் ஜெனியின் முதுகையும் மாறிமாறி பார்த்தவள் தலையை உலுக்கிக்கொண்டு “ஒருத்தி டிசைன் டிசைனா சூசைடு பிளான் சொல்லுற இன்னொருத்தி உனக்காக என்ன வேணுமின்னாலும் பண்ணுவேன்னு சொல்லுறா? என்னடா மேக் இதுங்க?கடவுளே இந்த பேய்ங்க கிட்டயிருந்து எனக்கு விடுதலையே கிடையாதா” என்றுதான் மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாக சொல்லிவிட “பேயா வாலான்டியரா போய் அப்ரூவர் ஆகிட்டு விடுதலை வேற வேணுமா?? நான் கொடுக்கறேன் வாடி” என்று பக்கத்தில் இருந்த புத்தகத்தை எடுத்துக்கொண்டு அடிக்கப்பாய்ந்தாள்.
“ நீங்க பேய்தான்டி பாசப்பேய்ங்க” என்றவள் அறையைச் சுற்றிக்கொண்டு ஓட “ ஓடாதே நில்லுடி” என்று அவளை விரட்டிக்கொண்டு ஓடினாள் ஸ்ரீ.
ஜெனி இருவரையும் ஏனென்று திரும்பிக்கூட பார்க்கவில்லை.
அப்படியே ஒருவித இறுக்கத்துடன் அந்தநாள் முடிந்தது.
மூவரும் ஒரே அறையில் தங்கியிருந்தாலும் ஒருவிலகல் இருக்கத்தான் செய்தது. அன்றைய இரவுக்குப்பிறகு யாருமே சரியாக பேசிக்கொள்ளவில்லை.
தேவைக்கு பேசுவதுக்கூட அரிதாக இருந்தது.
எப்போதுமே கலகலவென சுற்றிக்கொண்டு இருக்கும் அறையில் இப்போதெல்லாம் பேரமைதி மட்டுமே நிலவுகிறது.
இப்படியே ஒருவாரம் சென்றிருந்தது.
ப்ராஜெக்ட் சம்மந்தமாக சில டிஸ்கஷன்களுக்கு ஸ்ரீ பிரசாத் வீட்டிற்கு செல்ல வேண்டியிருந்தது.
அவர்கள் எடுத்து இருப்பது நேர்மையான போலீஸ் அதிகாரி ஒருவரின் ரியல் லைஃப் ஸ்டோரி என்பதால் நிறைய தரவுகளும் அதற்கான சாட்சியங்களும் தேவைப்படும்.
எனவே சட்டப்பூர்வமாகத்தான் தான் இதனை கையாளவேண்டும்.
அதேசமயம் சில ஆபத்துக்களும் இருக்கத்தான் செய்தது.
அனைத்து ஏற்ப்பாடுகளும் கிட்டத்தட்ட முடிந்திருந்த நிலையில் ஸ்ரீ கிளம்ப வேண்டிய நாளும் வந்தது