உள்ளே திவ்யாவையும் கோகுலையும் சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றானது கஸ்தூரிக்கு

அந்தளவிற்கு.. திவ்யாவின் பேட்டரி காரை…  ஒரு வழி செய்து கொண்டிருந்தான் கோகுல் ஷிவாவின் மகன்…

திவ்யா அவனுக்காக கொடுத்தாலும்…. எதையும் உடைத்து விடுவானோ…. என்ற பயத்தில் திவ்யா அழத் தொடங்கவே… சமாதானம் செய்ய முடியாமல் கஸ்தூரி திணற, அதை பார்த்த ஷிவா…

“கோகுல்..” என ஒரு சத்தம் கொடுக்க…. அதிலேயே அமைதியாய் காரை விட்டு இறங்கி ஷிவாவிடம் வந்தவன்

“இது மாதிரி எனக்கொன்னெ வேணும்பா ” என கேட்க…

“அப்பா உனக்கு வாங்கி தராமல் வேற யாருக்கு வாங்கித் தர போறேன்“ என்றவன்

சத்ரியிடம் “கார் எங்கேடா வாங்கின  டிபரண்டா இருக்கு” பேட்டரி காராய் இருந்தாலும் முழு வெள்ளை நிறத்தில் புறாவின் உருவத்தை கொண்ட அதன் வடிவமைப்பை பார்த்தபடி கேட்க

“இது நம்ப கடையில் ரெடி பண்ணினது ணா“ என அசால்ட்டாய் சத்ரி  கூற…

“அடப்பாவி…. நீ இதையும் விட்டு வைக்கலையா ” என கேட்க

மௌனமாய் சிரித்தான் அந்த சிரிப்பே பதில் கூற….

“கோகுலுக்கு ஒன்னு ரெடி பண்ணி கொடுடா” என.சொல்லும் முன்…

“சித்தப்பா…  புறா மாடல் எனக்கு வேண்டாம். எனக்கு டிராண்ஸ்பார்மர் மாதிரி ஒரு கார் வேணும்“ என ஆசையாய் கேட்க.

“டேய்…மகனே… உனக்கில்லாததா நாளைக்கு சாயந்தரம் கடைக்கு வாடா ரெடி பண்ணி தாரேன்” என சத்ரி அவனை அலேக்காய் தூக்கி சுற்றி இறக்கி விட.

“நாளைக்கே எப்படிடா ரெடி பண்ண முடியும் ” என ஷிவா கேட்க

“நாளைக்கு சாயந்தரம் கடைக்கு வாங்க…  புரியும்” என சொன்னான்.

மறுநாள் மாலை எல்லோரையும் விட கோகுல் எதிர் பார்ப்புடன் இருக்க மாலை ஷிவாவும் கோகுலும் கிளம்ப

“சாத்வி நீயும் அவன் கடைக்கு போய்ட்டு வாம்மா…. சங்கரன் நீயும் கூட பார்க்கனும்னீயே நீயும் போய்ட்டு வாடா” என விநாயகசுந்தரம் கூற  அனைவரும் கிளம்பிச் சென்றனர்

சாத்விக்கு கல்லூரி கட்டணம் செலுத்தும்  போது மேலோட்டமாய் அவனின் வேலையைப் பற்றி அறிந்து கொண்ட ஷிவா…  ஆர்வம் மேலிட வந்தான்.

வந்தவனுக்கு  தானாகவே புருவங்கள் இரண்டும் உச்சி மேட்டிற்கே சென்றது.

வெளியில் இருந்து பார்க்கும் போது ஆரம்பத்தில் கான்கரிட் ஷீட்டுகளால் கவர் செய்யப்பட்டு நிறைய பைக்குகளால் நிரம்பி வழிந்த ஓபன் ப்ளேஸூம்…  அதன் பின்னே பைக்குளின் வேறு உலகத்தை நிரப்பி நின்ற பில்டிங்கும்.. அதிக அளவில் அதன் அமைப்பு தெரியாத வண்ணம் சுற்றிலும் நிரம்பி வழிந்த மரங்களும்… என அனைத்தும் கண்களை கவரும் வண்ணம் கச்சிதமாய் வைத்திருந்தான்…சத்ரி..

அவர்களை பார்த்தபடி வெளியே வந்தான் சத்ரி…  காக்கி நிற உடை அணிந்து… அங்கு வேலை பார்ப்பவர்களுடன் தானும் ஓர் அங்கமாய் வந்து நின்றான்

“ஆஹா…. இத்தனை பேர் வருவீங்கன்னு சொல்லவே இல்லையே ” என

ஆச்சர்யம் காட்டி வெங்க்கட் சாத்வி சங்கரன் ஷிவா என அனைவரையும் வரவேற்றவன் ஷிவாவிடம்

“ என்னோட சின்ன பஞ்சர் கடை.. ஏதோ என்னோட சின்ன கனவு “ என சிரித்தபடி கூற…

“படிப்பை முடிச்சிருந்தா கூட இந்தளவு வந்திருக்க மாட்ட போலடா” என ஷிவா கூற

“ம்… நான் கூட அடிக்கடி நினைச்சிருக்கேன்ணா” என இதழ் பிரியாமல் சிரிக்க…

சங்கருக்கும் அதே தான் தோன்றியது..

“ஆனாலும் ரொம்ப அழுத்தம்டா நீ..” என ஷிவா கூற அதற்கும் அமைதியான புன்னகை தான் பதிலாய் கிடைத்தது.

அங்கே வேலை செய்த அனைவரிடமும் சங்கரன், ஷிவா சாத்வி என மூவரையும் அறிமுகம் செய்து வைத்தான்.

“என்னோட கார் எங்கே சித்தப்பா…. முதலில் அதைக் காட்டுங்க” என பொறுமையின்றி கேட்க….

“பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை மாதரி இருக்குடா… உன் பேச்சு” என சத்ரி கிண்டல் செய்ய

“எனக்கு பொண்ணுலாம் வேண்டாம் சித்தப்பா… கார் தான் வேணும்” என சீரியசாய் கோகுல் பதில் சொல்ல

“நீ பெரியவனானலும் பேச்சு மாறக் கூடாது” என சத்ரி மேலும் கிண்டல் செய்ய..

“ சித்தப்பா..” என கத்த.

“கத்தாதடா..” என காதினை தேய்த்தபடிஉள்ளே அழைத்துச் சென்றான்

வித விதமாய் பைக்குகள்.. ஒரு புறம்..குழந்தைகளுக்கான பேட்டரி கார், மாற்று திறனாளிக்களுக்கான பைக்குகளும்.. ஒரு புறம் என களை கட்டியிருந்த அவனது தொழிலை பார்த்த சங்கரன் பிரம்மித்து தான்  போனார்.

ஷிவாவோ பெருமையாய் பார்த்தபடி இருக்க. கோகுலோ ஆச்சர்யத்தில் நின்றிருந்தான்.

“கோகுல்… பர்ஸ்ட் எப்படி ஆப்பரேட் பண்றதுன்னு கத்துக்கோ…. அப்பறமா ஓட்டலாம்“ என மெதுவாய் சொல்லி கொடுக்க ஆரம்பத்தான்.

சாதாரண ஜீப் வடிவத்தில் சற்றே கூர்மையான பற்கள் கொண்ட டயர்களுடனும், ஆர்மி மிக்ஸிங்கில் பெயிண்ட் செய்து முன்புறம் மட்டுமே கண்ணாடிகளால் மறைக்கப்பட்டு சுற்றிலும் வெறுமையாய் இருந்தது அந்த கார் மற்ற கார்களை விட சற்றே உயரத்தில் இருந்த சீட்டில் அமர வைத்து இது ஸ்டார்ட் பட்டன், இது ப்ரேக் பட்டன், இது லைட்டிங்க்ஸ்க்கு” என மேலும் அதை பற்றி விளக்கியவன்

அவனது கைகளுக்கு அருகில் இருந்த வித்யாசமான பட்டன் ஒன்றை காட்டி இது… உன்னோட ட்ராண்பார்மருக்கு” என சொல்லி

காரை விட்டு விலகி நிற்க ஆசையாய் அந்த பட்டனை தட்டினான் கோகுல்.

ஜீப்பின் நாற்புறமும் போல்டிங் செய்யப்பட்டு இருந்த வடிவங்கள் மெதுவாய் உருவம் பெற

கோகுல் அமர்ந்திருந்த இடம் ஹெல்மட் போன்ற வடிவுடன் மாற…  இடம் மற்றும் வலப்புறம்…  கைகள் போல் விரிய…. முன்புறம் சற்றே விரிந்து….  வயிற்று பகுதி போல் மாற…  உயரமான டயர்களை மறைத்தபடி இரண்டு மெட்டல் வடிவங்கள் தரை தொடும் தூரத்திற்கு இறங்கி கால்களாய் மாறி டயர்களை மறைத்த வண்ணம் மாறியது.

பார்த்த அனைவருக்கும் விழிகள் சாசராய் விரிய கோகுல் அதை ஸ்டார்ட் செய்து மெதுவாய் ஓட்ட தொடங்கினான்.

சாதாரண ஜீப் மாடல்… ஆனால் ஃபோல்டிங்…. என்ற ஒரு வகையை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு…  ஜீப்பை கவர் செய்யும் வண்ணம்…  இருந்த அந்த டிராண்ஸ்பார்மர்… அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டது

“ ஓரே நாளில் எப்படிடா … ” என வெங்க்கட் கேட்க….

“ஜீப்பா இருந்த கார் தாண்டா கொஞ்சம் ஃபோல்டிங் மெத்தட் யூஸ் பண்ணி பினிஷ் பண்ணியாச்சு” என சிரிக்க

சிறிது நேரத்தில் கோகுலின் இறுக்கமான அணைப்பில் திரும்பினான் சத்ரி “அப்பா நானும் சித்தப்பா மாதிரி ஆகனும்” என சத்ரியின் கன்னத்தில் முத்தமிட

அவனை தன் தோள்களில் ஏந்திக் கொண்டான் சத்ரி.. அவர்களின் ஆரவாரத்தை அமைதியாய் உள் வாங்கியபடி ஐந்து வருடங்களுக்கு முன் பார்த்ததை விட இப்போது அதிகமாய் வளர்ச்சியை கொண்ட அவனது பைக்கர்ஸ் பாய்ண்டை பெருமையாய் பார்த்துக் கொண்டிருந்தாள் சாத்வி.

அந்த ஆரவாரத்தையும் மீற வந்தது சங்கரின் கரகரப்பான குரல்.

“வெளித்தோற்றத்தை வச்சு ஒருத்தரோட குணத்தை தான் எடை போட முடியாது  ஆனா  படிப்பை வைத்தும் ஒருத்தரோட திறமையையும் எடை போட கூடாதுன்னு நீ காட்டிட்ட” ஒற்றை வார்த்தையில் தானும் பெரிய மனிதர் என்பதை நிரூபித்த சங்கரன்  சத்ரியின் தோள்களில் லேசாய் தட்டியபடி , நகர்ந்தார்..

அவரின் வார்த்தைகளில்…

“டேய்…  உன் மாமனாரையும் கரெக்ட் பண்ணிட்ட போல.” என ஷிவா வாய் பிளக்க, வெங்க்கட் சிரித்துவிட்டான்…

இரவின் தனிமையில்

“ கடையை அவ்வளவு ஆர்வமாய் பார்த்திட்டு இருந்தே அங்கே தான் ஒன்னுமே சொல்லலை இப்போவாவது சொல்லலாம் இல்லையா…” என

அவள் முகத்தையே பார்த்திருக்க..

அவன் கைகளில் பாலை கொடுத்தபடி…

“அதான் உங்க மாமானாரே பாராட்டிடாங்க…  நான் வேற சொல்லனுமா” என

“ம்ப்ச் அது உங்கப்பா, இப்போ நீ சொல்லு” என பிடிவாதமாய் நிற்க

அவனின் பிடிவாதத்தை ரசித்தபடி “எனக்கும் ஒரு டிரான்பார்மர் வேணும்” என சிரித்தபடி சாத்வி கூற

முதலில்  புரியாமல் விழித்தவன்

“இப்படி கூட பாராட்டுவாங்களா” என மெலிதாய் சிரித்து “வேற  எதுவும் இல்லையா” என யாரிடமும் வேண்டாத பாராட்டை இவளிடம் வேண்டி நின்றான்.

“அப்போ… பைக் மட்டும் தானே இருந்தது..  குழந்தைங்க செக்‌ஷன் எப்போ ஆரம்பிச்ச அப்போ பார்த்ததை விட நல்லா டெவலப் பண்ணிருக்க செம்மையா வேலை செய்யுது”என அவனின் நெற்றியின் இடப்புறத்தை தட்ட

அவளின் வார்த்தைகளில் கவனமாய் இருந்தவன்…சட்டென

தட்டிய அவள்  விரல்களை அழுத்தமாய் பிடித்து

“‘அப்போ’ ன்னா? இதுக்கு முன்னாடி எப்போ ஷெட்டுக்கு வந்தே” என கூர்மையாய் கேட்க, அவனின் அதிர்வை கவனக்காமல்