அத்தியாயம் -19
கிருஷ்ணா சொல்வதைக் கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ந்து நிற்க,
பத்மாவோ ‘என்ன இந்த மனுஷன் என்ன வச்சு பிளான் பண்ணுறாரு. என்னை வச்சு எதாவது பன்னுன்னா என் மாமியார் கிழவிக்கு மூக்கு வேர்த்து பிளானை கொட்டி கவிழ்துடுமே. அடேய் புருஷ் எதா இருந்தாலும் பார்த்து பதமா பண்ணு.
உன் ஆத்தாக்கும் சரி நான் பெத்ததுக்கும் சரி நான்லாம் ஒரு ஆளே இல்ல. என்ன நடக்க போகுதோ தெரியலையே’ என்று தனக்குள் புலம்பி கொண்டு நின்றிருந்தார்.
ஹர்ஷா தந்தையை புரியாமல் பார்த்து “என்னப்பா சொல்றீங்க” என்க,
அவரோ “ஆமாப்பா. நம்ம மித்துவ நிரஞ்சனுக்கு கேட்டாங்க. எங்களுக்கும் விருப்பம்தான். அதான் சரி ஜாதகம் பார்த்துட்டு வந்திடலாம்னு அவங்களையும் அழைச்சுட்டு போனோம். அங்க போய் பார்த்ததுல ரெண்டு பேருக்கும் பொருத்தம் சரியா இருக்குன்னு சொன்னாங்க”.
“சரி. அதான் அவங்க ரெண்டு பேருக்கும் சரியா இருக்கே. அந்த கல்யாணத்தை முதல்ல முடிக்க வேண்டியதுதானே. இடைல நான் எங்க வந்தேன்”.
பத்மா,’அட இவன் வேற பானைல போட்ட நண்டு மாதிரி நொய் நொய்ன்னுட்டு இருக்கான். அந்த மனுஷனே இப்போதான் ஒரு புளோல போயிட்டு இருக்காரு. அப்படியே போன்னு விடாம கேள்வி கேட்டுட்டே இருக்கான். அப்படியே அவன் பாட்டி மாதிரி சரியான அவசர குடுக்கை’ என்று மகனை மனதில் வறுத்து எடுத்து கொண்டு இருந்தார்.
அதான்ப்பா நானும் சொல்ல வரேன் சரி உனக்கு நேரம் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்னு உன்னோட ஜாதகத்தையும் பார்க்க சொன்னோம். பார்த்துட்டு எங்க தலைல இடிய இறக்கிட்டார்”
பத்மா, “அட…அட…அட…. என் புருஷன் என்னமா நடிக்கராரு. நடிகன்டா…நீ நடிகன்” என்று கணவனை அவர் பெருமையாக பார்க்க,
ஹர்ஷாவோ கடுப்பாக “என்ன இடி” என்று கேட்க,
பத்மாவோ “ஆஆஆ….. வானத்து இடி. லூசு பயலே அப்பா சொல்றதை பொறுமையா கேளேண்டா” என்று அவரும் பொறுமை இழந்து கத்த,
ஹர்ஷா தந்தையை பார்த்தான் “அதுப்பா இன்னும் மூணு மாசத்துக்குள்ள உனக்கு கல்யாணம் முடிஞ்சுருக்கணுமாம். இல்லைன்னா உன் அம்மா உசுருக்கு ஆபத்தாம். நம்ம எல்லாம் விட்டுட்டு போயிடுவாளாம்” என்று சொல்ல,
பத்மாவோ ‘அட பாவி மனுஷா இத்தனை நாள் இப்படி ஒரு வஞ்சம் வச்சுதான் என் கூட வாழ்ந்தியா. வன்ம குடோனா டா நீ. உடம்பு முடியாம போயிடும்னு சொல்லுவன்னு பார்த்தா போட்டு தள்ளவே முடிவு பண்ணிட்டியா’ என்பது போல் ஒரு பார்வை பார்த்து அதிர்ந்து நின்றிருக்க,
கிருஷ்ணனோ மனைவியை பார்த்து மகனை சமாளிப்பதற்கு தான் என்பது போல் கண்ணால் காட்ட,
அப்போது எங்கிருந்து வந்தார் என்றே தெரியாத அளவுக்கு வேகமாக ஓடி வந்த தேவகிப்பட்டி ஹர்ஷாவிடம் சென்று “டேய் கண்ணா உனக்கு கோடி புண்ணியமா போகும். தயவு செஞ்சு இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்காதடா. உங்க அம்மா போனா போய் சேரட்டும். உனக்கு வேணா வேற ஒரு நல்ல சித்தியா பாட்டி நான் வாங்கி தரேன்” என்க,
பத்மா, “மாமியார் கிழவிக்கு கொழுப்ப பாரேன். காலம் போன காலத்துல இது மகனுக்கு இன்னொரு பொண்ணு கேட்குதா. ஏதோ கடைல முட்டாய் வாங்கி தரேன்னு சொல்ற மாதிரி சித்தி வாங்கி தர்றேன்னு சொல்லுது. எல்லாம் அந்த மனுஷனால.
நான்பாட்டுக்கு சிவனேன்னுதானேடா இருந்தேன். என்னை கோர்த்துவிட்டு ஏன்டா வேடிக்கை பார்க்குறீங்க’ என்பது போல் மாமியாரையும், கணவரையும் முறைத்து கொண்டு நின்றிருக்க,
ஹார்ஷாவோ, “சும்மா இருங்க பாட்டி. சும்மா தேவையில்லாம பேசிக்கிட்டு” என்றவன் தந்தையின் புறம் திரும்பி “படிச்சவருதானேப்பா நீங்க. எந்த காலத்துல இருக்கீங்க. செவ்வாய் கிரகத்துலயே வீடு கட்ட ஆரம்பிச்சுட்ட காலம் இது. இப்போ சைன்ஸ் எவ்ளோ டெவெலப் ஆகி இருக்கு. அதை எல்லாம் புரிஞ்சுக்காம இன்னும் பழைய பஞ்சாங்கம் பேசிட்டு இருக்கீங்க” என்று கோபமாக சொல்ல,
கிருஷ்ணனோ “எந்த காலமா இருந்தாலும் மகனுக்கு அம்மா வேணும்தானே. நீ சொல்ற மாதிரி சைன்ஸ் இப்போ வேணா டெவெலப் ஆகி இருக்கலாம். அதுக்கு முன்னாடியே சித்தர்கள் எதிர் காலத்தில் என்னென்ன நடக்கும்னு கனிச்சு ஓலை சுவடில எழுத்திட்டுதான் போயிருக்காங்க. அதன்படிதான் நடந்துட்டு இருக்குன்னு நானும் நியூஸ்ல பார்த்துட்டுதானே இருக்கோம்.
“ஆனா…. அப்பா. ஜோசியக்காரங்க சொல்றது எல்லாம் அப்படியே நடக்கும்னு உண்மை இல்லையே”.
“நடக்காதுன்னு சொல்லவும் வாய்ப்பு இல்லையேப்பா”
தேவகி பாட்டி, “டேய் கண்ணா வேண்டாம்னு நின்னுடுடா” என்று பேரன் காதில் குசு குசுக்க,
அவரை முறைத்தவன் “உனக்கு உன் கவலை கொஞ்சம் பேசாம இரு கிழவி. நானே கடுப்புல இருக்கேன். நீ வேற நொய் நொய்ன்னுட்டு” என்று பார்க்களை கடித்தவாறு சீறியவன். “ப்பா….” என்று ஏதோ சொல்ல வர,
“ஹர்ஷா உனக்கே தெரியும். நாம எந்த விஷயம் புதுசா செஞ்சாலும் ஜாதகம் பார்த்துட்டுதான் ஆரம்பிப்போம்னு. அப்படி இருக்கும்போது நீ இப்படி சொன்னா என்ன அர்த்தம்.
மித்துக்கு எல்லாம் சரியா இருக்குன்னு சொல்லும்போது ஏத்துகிட்டதானே, இப்போ உனக்குன்னு வந்தவுடனே ஏன் மறுக்கற? நம்பறதா இருந்தா ரெண்டையும் நம்பனும் இல்லை ரெண்டையும் நம்ப கூடாது. இப்போ நீ கல்யாணத்துக்கு சம்மதிக்கற” என்றவர் அழுத்தமாக சொல்ல,
அவனோ கடுப்பாக “முடியாதுப்பா. இது மாதிரி சில்லி ரீசன்க்கு எல்லாம் என்னால கல்யாணம் செய்துக்க முடியாது”,
உடனே கிருஷ்ணன் பொங்கிவிட்டார். “ஹார்ஷா என்ன பேசற. உங்க அம்மா உயிர்ன்னு சொல்றேன். நீ சில்லி ரீசன்னு சொல்ற. உனக்கு வேணா உன் அம்மா உயிர் சில்லியா இருக்கலாம். ஆனா எனக்கு என் பொண்டாட்டி வேணும்”
“ப்பா…. நான் அந்த அர்த்தத்துல சொல்லல”
“சில்லின்னு சொன்னா வேற என்ன அர்த்தம் ஹர்ஷா. எனக்கு புரியல இப்போ கல்யாணம் செய்துக்கறதுல உனக்கு என்ன பிரச்சனை.
ஒருவேலை நீ வேற பொண்ண லவ் பன்றியா. பண்றேன்னா சொல்லு. அவங்க வீட்டுக்கு போய் நாங்க பேசறோம். எங்களுக்கு இன்னும் மூணு மாசத்துல உன் கல்யாணம் நடக்கணும் அவ்வளவுதான். எனக்கு என் பொண்டாட்டி உயிர் முக்கியம்.
நல்ல பையனா அம்மா உயிரை காப்பாத்த போறியா. இல்லை உனக்கு உயிர் கொடுத்துவள நீயே கொல்ல போறியானு நீயே முடிவெடு” என்று கோபமாக சொன்னவர் அறைக்கு செல்ல திரும்ப,
பாட்டியோ “டேய் அவன்தான் கல்யாணம் இப்போ வேண்டாம்னு சொல்றானே ஏன்டா அவனை டார்ச்சர் பண்ணுற? “ என்று கேட்க,
தாயை நினைத்து மானசீ கமாக தலையில் அடித்து கொண்ட கிருஷ்ணன் “அம்மா…….” என்று பல்லை கடித்தவாறு கத்த,
பத்மாவோ இடுப்பில் கைவைத்து தாயையும் மகனையும் முறைத்துக் கொண்டு நின்றிருந்தார்.
ஹர்ஷா இப்போது என்ன செய்வது? இதிலிருந்து எப்படி தப்பிப்பது? நாம லவ் பண்ற விஷயத்தை சொல்லிடலாமா? சொன்னா அர்ச்சனாவை ஏத்துப்பாங்களா’ என்றுபல யோசனையோடு நின்றிருந்தவன் அருகில் வந்தார் பாட்டி.
“டேய் கண்ணா…….”
“சும்மா இரு பாட்டி கடுப்பேத்தாம”என்று கத்த,
அவரோ “நல்லதுக்கே காலம் இல்ல. என்னவோ பண்ணிக்கோ” என்க,
பத்மாவோ ‘அடியே உன் புருஷன் அவர் பார்பாமன்ஸ முடிச்சுட்டாரு. அடுத்து உன்னோட டெர்ன். இப்போ நீ போய் நடிக்கற நடிப்புல. அடுத்த ஆஸ்கர் உனக்குதாங்கற மாதிரி இருக்கணும் போ…போ…’ என்று தனக்குள் சொல்லி கொண்டவர் முகத்தை சோகம் போல் வைத்து கொண்டு மகன் அருகில் சென்றார்.
“ஹர்ஷா” என்ற தாயை நிமிர்ந்து பார்த்தவனிடம் “ உன் விருப்பம்தான் என்னுடைய விருப்பம். எனக்காக எந்த அவசர முடிவும் நீ எடுக்க வேண்டாம். உனக்கு இப்போ மேரேஜ் வேண்டாம்ன்னா பரவால்லை விடு. அப்பாகிட்ட நான் பேசறேன்.
வாழ்க்கை முழுக்க உங்களுக்காகதான் வாழ்ந்தேன். சாகும் போதும் உங்களுக்காக சாகறேன். நீ தேவையில்லாம எதையும் போட்டு குழப்பிக்காத” என்றுவிட்டு செல்ல,
ஹர்ஷா தலையில் கை வைத்தவாறு தொப்பென்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்.
அண்ணன் அருகில் வந்த மித்ரா “அண்ணா……அம்மா…….” என்று ஏதோ சொல்ல வந்தவள் முன் ‘நிறுத்து’ என்பது போல் கையை நீட்டியவனிடம் “இல்லண்ணா அது….. உங்களுக்கு ஹாசிய பிடிக்கலையா. ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொல்லறீங்க” என்று பதிலுக்காக காத்திருக்க,
அவன் அமைதியே அவளுக்கு பதிலாக கிடைத்தது. இருந்தாலும் தோழியின் காதலை நிரஞ்சன் மூலம் அறிந்தவள் அவளுக்காக பேச எண்ணி “அண்ணா ஹாசியை பிடிக்கலைன்னா எதுக்காக அன்னைக்கு கோவில்ல அவளுக்கு பொட்டு வச்சிங்க”என்று அடக்க முடியாமல் கேட்டுவிட,
அவள் கேள்வியில் திகைத்தவன் அவளை ஆழ்ந்து பார்க்க “அது…. அது…. நீ பொட்டு வச்சதை நான் பார்த்தேன்” என்க,
பெருமூச்சுடன் எழுந்து நின்றவன் முகத்தை பர பரவென்று தேய்த்து “இங்க பாரு மித்து சில விஷயங்களை பேச கூடிய நிலமைல நான் இல்ல. ஆனா என்னால கண்டிப்பா இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க முடியாது”.
“அதான் ஏன் அண்ணா….ஹாசிய நீங்க….”
“ஸ்டாப் இட் மித்து. நான் வேற பொண்ண லவ் பண்றேன். அதனால இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க முடியாது. அப்பாட்ட நான் பேசிக்கறேன்” என்றுவிட்டு செல்ல,
மித்ராவிற்கு அவன் பதில் அதிர்ச்சியை கொடுத்தது. உடனே அண்ணன் பின்னாடியே வேகமாக ஓடியவள் “அண்ணா நீங்க சொல்றது உண்மையா இல்லை கல்யாணத்தை நிறுத்தன்னு……”
“ஷட் அப் மித்து. எனக்கு பொய் சொல்லணும்னு அவசியம் இல்ல”என்றுவிட்டு செல்ல, நெஞ்சில் கை வைத்தவள் நிரஞ்சனிடம் இந்த விஷயத்தை சொல்ல வேண்டும் என்று தன் அறை நோக்கி ஓடினாள்.
அறைக்கு வந்த ஹர்ஷா ஹாசியிடம் பேச எண்ணி அவளுக்கு அழைக்க, போன் போகவே இல்லை.’என்ன போன் போகவே மாட்டிக்கிது. ஈவ்னிங் பேசுனமே’ என்று யோசித்தவன் ‘சரி நாளைக்கு நேர்ல போய் பார்த்து பேசுவோம். இன்னொரு லவ் பண்றேன்னு தெரிஞ்சும் ஹாசி எதுக்கு கல்யாணத்துக்கு சம்மதிச்சா, அவளுக்கு இந்த கல்யாண விஷயம் முதல்ல தெரியுமா தெரியாதா’ என்று பல யோசனையோடு இருந்தவன் அப்படியே தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான்.
ஹாசியை நிரஞ்சன் வீட்டிற்கு அழைத்து வர, அதுவரையுமே ரேவதியும் ராஜும் அவர்களுக்காக காத்திருந்தனர்.
மகள் தலையில் இருக்கும் கட்டை பார்த்து பதறியவர்கள் என்ன ஆனது என்று கேட்க நிரஞ்சனும் ஹாசி சொல்ல சொன்னது போல் சொல்ல,
“என்ன ஹாசிம்மா பார்த்து நடக்க கூடாதா”என்று ராஜு மகள் தலையை பாசமாக வருட,
ரேவதியோ, “ஏன்டி உனக்கு கண்ணே தெரியாதா? இப்படிதான் சின்ன பிள்ளை போல மேல பார்த்துக்கிட்டே நடப்பியா”என்று கத்த,
ராஜோ, “சரி விடும்மா. இப்போ திட்டி என்ன ஆக போகுது. இனி என் பொண்ணு கவனமா நடந்துக்குவா” என்று சொல்ல,
“ஆமா இப்படியே எதாவது ஒரு காரணம் சொல்லி என் வாயை மூட வைக்கலாம். நாளைக்கு கல்யாணம் ஆகி போற வீட்ல இருக்கவங்க என்ன சொல்லுவாங்க பொறுப்பில்லாம விளையாட்டுத்தனமா இருக்கானுதான் சொல்லுவாங்க. எப்படிதான் ஒரு குடும்பத்தை சமாளிக்க போறான்னு எனக்கு புரியவே இல்ல” என்று புலம்பி கொள்ள,
தாயின் திருமணம் என்ற வார்த்தை அவளது பல வருட கனவு அழிந்து போனதை நினைவுப்படுத்த கண்கள் கண்ணீரை பொழிந்து கொண்டு இருந்தது.
நிரஞ்சன் தங்கையை கவலையாக பார்த்து கொண்டு இருக்க,
மகள் அழுவதை கண்ட ராஜ் “அட என்னடா அம்மா பேசுறது எல்லாம் பெருசா எடுத்துட்டு அழற, எப்போல இருந்து அவ பேசறதை எல்லாம் காதுல வாங்க ஆரம்பிச்ச? எப்போவும் போல நீ கத்து நான் கண்டுக்க மாட்டேங்கற மாதிரி போடா. இதுக்கு போய் சின்ன புள்ளையாட்டம் அழுதுட்டு”என்று மகளை சமாதானப்படுத்த,
ரேவதியோ தந்தையையும் மகளையும் முறைத்து கொண்டு அமர்ந்திருந்தார்.
தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, மகள் மன நிலையை மாற்ற எண்ணி அவளிடம் பேச்சு கொடுத்து கொண்டிருந்தார் ராஜ்.
அப்போது பார்த்து சரியாக நிரஞ்சன் போன் அடித்தது. அதை எடுத்து பார்த்தவன் மிதுக்குட்டி என்று வருவதை பார்த்து முகம் கசங்கியவன் அதை கட் பண்ணினான்.
மீண்டும் மீண்டும் அவள் அழைத்து கொண்டே இருக்க, அதை கட் பண்ணி கொண்டே இருந்தான்.
ஹாசிக்கு புரிந்தது யார் அழைப்பு என்று காலை “போன் அட்டன் பண்ணி பேசுண்ணா முக்கியமான காலா இருக்க போகுது” என்ற தங்கையை அவன் ஆழ்ந்து பார்க்க,
அவளோ அவனை கண்டிக்கும் பார்வை பார்த்தாள். பெரு மூச்சு விட்டவன் போனை எடுத்து கொண்டு அறைக்கு சென்றுவிட்டான்.
தந்தையின் கேள்விகளுக்கு பதில் சொல்லி கொண்டிருந்தவளுக்கு மனபாரம் அதிகமாக இருக்க, அதற்கு மேல் தன்னை சாதாரணமாக காட்டி கொள்ள முடியாதவள் “ப்பா….. எனக்கு டயர்ட்டா இருக்கு போய் தூங்கறேன்” என்றுவிட்டு தன் அறை நோக்கி செல்ல .
மகள் செல்வதை கவலையாக பார்த்து கொண்டு இருந்தனர் பெற்றோர் இருவரும்.
ரேவதி, “என்னங்க இன்னைக்கு அவங்களோட கல்யாண விஷயம்பத்தி பேசலாம்னு பார்த்தா இப்படி அடி பட்டு வந்து நிக்குறா. எனக்கு என்னமோ மனசே சரி இல்லைங்க. நாம வேணா உங்க குல தெய்வம் கோவிலுக்கு ஒரு டைம் போயிட்டு வந்து இந்த கல்யாண விஷத்தை ஆரம்பிப்போமா”
“என்ன ரேவா நீ. இப்படி எல்லாம் யோசிச்சுட்டு இருக்க. ஹாசி அடி பட்டு வந்தது ஒரு ஆக்சிடண்ட். அதை இதோட கலந்து யோசிக்காத.
அவளுக்கு அடிபட்டது எனக்கும் வருத்தம்தான். இப்படி எல்லாம் யோசிக்கறது தப்புடா. ரெண்டு பேரும் அவங்க வாழ்க்கைல நல்லா இருப்பாங்க.
உனக்கு விருப்பம்னா சொல்லு. கோவிலுக்கு வேணா போயிட்டு வரலாம்” என்று சொல்லி அவரை சமாதானப்படுத்த, அவரும் சம்மதமாக தலையசைக்க, அடுத்த நாளே கோவிலுக்கு செல்ல வேண்டிய ஏற்பாடுகளை துவங்குவதாக சொல்லிவிட்டு இருவரும் உறங்க சென்றனர்.
இங்கு அறைக்கு வந்த நிரஞ்சன் போனில் மின்னும் தன்னவள் பெயரையே பார்த்து கொண்டு இருந்தான். பின் அதை அட்டன் செய்து காதில் வைத்தவனை பேச கூட விடாமல் மித்ரா அந்த பக்கம் வேகமாக பேச துவங்கினாள்.
“நிரன்…ஏன் போன் அட்டன் பண்ண இவ்வளவு நேரம். சரி அதை விடுங்க. இன்னைக்கு என்ன ஆச்சு தெரியுமா…” என்று இன்று வீட்டில் நடந்த அனைத்தையும் சொல்ல, நிரஞ்சனிடம் எந்த பதிலும் இல்லை.
“என்ன நிரன். நான் எவ்வளவு பெரிய விஷயம் சொல்லியிருக்கேன். நீங்க என்னன்னா அமைதியா இருக்கீங்க. ஹாசிக்கு இந்த விஷயம் தெரிஞ்சா எவ்வளவு வருத்தப்படுவா.
அவகிட்ட இந்த விஷயத்தை நாம ரொம்ப பொறுமையா சொல்லணும், மறைக்கவும் முடியாது” என்று பட படவென பேச, நிரஞ்சன் மனம் பாரமாகி போனது. இவளையா விட்டு செல்ல நினைத்தோம் என்று.
“நிரன் நாளைக்கு ஹாசிய வெளிய போலாம்னு சொல்லி கூட்டுட்டு வாங்க. நானும் வரேன். எப்படியாவது பேசி எல்லாத்துக்கும் நாம அவளை ரெடி பண்ணி வைக்கணும்” என்று சொல்ல,
இப்போது அவனிடம் இருந்து பெருமூச்சே பதிலாக கிடைத்தது. அப்போதுதான் அவன் அமைதியை கவனித்த மித்ரா “நிரன்…. ஆர் யூ ஓகே…” என்று கேட்க,
அவனோ ஆழ்ந்த குரலில் “ஹாசிக்கு உன் அண்ணன் லவ் பண்ற விஷயம் தெரியும்” என்று சொல்ல,
மித்ரா அதிர்ந்து போனாள். “வாட்…. ஹாசிக்கு தெரியுமா. அவ இந்த சிட்சுவேஷன எப்படி ஹேண்டில் பன்னுன்னா. முதல்ல அவளுக்கு எப்படி இந்த விஷயம் தெரிஞ்சுது” என்க,
ரஞ்சன் ஹாசி கூறிய அனைத்தையும் கூறி “உன் அண்ணன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கான். நாங்க பாரின்ல வளர்ந்தோம்ங்கறதுக்காக எல்லா விஷயத்தையும் சாதாரணமான எடுத்துக்கணுமா. அவன் மட்டும் இப்போ என் கண் முன்னாடி இருந்தான்” என்று கோபமாக பேசியவன் சுவற்றில் தன் கைகளால் ஓங்கி குற்ற,
மித்ரா அதிர்ந்து போனாள்.. “நிரன் ப்ளீஸ். அண்ணா பண்ணுறது சரின்னு நான் சொல்ல வரல. ஆனா……”
“ஆனா…. ஆனா….. என்னடி”
“கோவப்படாதீங்க நிரன். அவன் ரொம்ப நல்லவன்தான். ஆனா…. ஹாசி விஷயத்துல அவசரப்படுறானோனு தோணுது. நான் வேணா ஹாசிக்காக அவன்கிட்ட பேசவா”.
“என்ன பேசப்போற ஒன்னும் வேண்டாம். ஹாசி அமெரிக்கா போலாம்னு சொல்றா”
“வாட்… அப்போ அவளோட காதல் அவ்வளவுதானா”
“ஷட் அப் மிது. அவ காதலை பத்தி பேச வேண்டிய அவசியம் இப்போ இல்ல. உன் அண்ணன் வேற பொண்ண லவ் பண்றேன்னு சொல்லும்போது. அவ என்ன பண்ண முடியும்னு நீ எதிர்பார்க்கற. இல்லை என்னை கல்யாணம் பண்ணு. நான் உன்னை சின்ன வயசுல இருந்து லவ் பண்றேன்னு சொல்லி காதல்பிச்சை கேட்க சொல்றியா.
அப்படி ஒரு அவசியம் என் தங்கச்சிக்கு இல்லை. இனி அதைப்பத்தி பேச வேண்டாம். அப்புறம் தேவையில்லாம நமக்குள்ள பிரச்சனைதான் வரும்.
நம்ம கல்யாணம் கண்டிப்பா நடக்கும். சீக்கிரமே நாம இங்க இருந்து கிளம்புவோம். கெட் ரெடி” என்றுவிட்டு போனை கட் செய்ய,
மித்ராவிற்கோ தோழியின் நிலை நினைத்து கவலையாக இருந்தது.
இனி ஹாசி காதல் என்ன ஆகும். ஹர்ஷா தன் காதலைபற்றி வீட்டில் சொல்லுவானா அடுத்தடுத்த எபியில் பார்க்கலாம்.