“வேலை எதுவும் இருக்கா…. அத்தை நான் செய்யவா ” சிவஹாமியிடம் கேட்டாள்…
“ வேலையெல்லாம் நான் பார்த்துக்கிறேன் சாத்வி… நீ என் மகனை கவனி அது போதும்” என சிவஹாமி சிரித்தபடி கூற
“இங்கே இப்படி சொல்லிட்டு நம்ப வீட்டுக்கு போன அப்பறம், அந்த வேலை பாரு, இந்த வேலையை பாருன்னு என் பொண்டாட்டியை சொல்லக் கூடாது” என சிரித்தபடி சத்ரியும் அங்கே வர
“உன் பொண்டாட்டி வேலை பார்க்க கூடாதுன்னா, என் பொண்டாட்டியும் வேலை பார்க்க கூடாது” என விநாயகமும் அங்கே வர
“அப்போ சரி , இனி நீயும் வேலை பார்க்காதே, நானும் பார்க்கலை சத்ரியும் அவங்க அப்பாவும் பார்த்துப்பாங்க” என சிவஹாமி நமட்டு சிரிப்புடன் கூற….
“ உனக்கு போய் சப்போர்ட் பண்ணினேன் பாரு .. என்னை சொல்லனும்” என விநாயகசுந்தரம் முறைத்து “வாடா, மகனே ஓடிருவோம்… இங்கே இருந்தா மாமியாரும் மருமகளும் நம்பளை பாத்திரம் தேய்க்க விட்ருவாங்க… ” என சத்ரியை போலியாய் இழுக்க..
“நீங்க வேணா போங்கப்பா…. நான் என் பொண்டாட்டிக்கு ஹெல்ப் பண்ணிட்டு வாரேன்“ என சாத்வியின் அருகில் செல்ல….
“அய்யோ… நீ என்ன சத்ரி வேலை செய்ய போற.. போ… இங்க இருந்து” என அசையாமல் தின்றிருந்த சத்ரியை இழுத்து சமகயலறையின் வெளியில் நிறுத்தி..
“போ” என விரட்ட… அப்போதும் அவளை புன்னகையுடன் பார்த்திருக்க
“போ“ என அவனை திருப்பி, சாத்வி முதுகில் கை வைத்து தள்ள சிரித்தபடியே சென்றான் சத்ரி.
க்ருத்திகா சமையலறையில் இருந்து பார்த்தபடியே இருக்க, வெங்க்கட் “நான் சொன்னப்போ நம்பவில்லை, சத்ரி சாவி கொடுத்த பொம்மைன்னு..” என சிரித்தபடி க்ருத்திகாவை பார்க்க.
அவளும் பதிலுக்கு தலையசைத்தாள்… மேலும் இரண்டு நாட்களின் பின்
திருச்சியும் வந்தாயிற்று சிறிது நாட்கள் சங்கரும், மஹாவும் திருச்சியிலேயே இருக்க கட்டாயப்படுத்தி இருந்தார் விநாயகம்.
கடையில் நிறைய வேலைகள் பெண்டிங்கில் இருக்க… அன்று.. நேரத்திற்கு எழுந்து சத்ரி கிளம்பி டெனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தான்.
சாத்வியோ.. பயண அலுப்பில் நன்றாகவே உறங்கிவிட, நேரம் கழித்து தான் எழுந்தாள். எழுந்தவள் ‘ஐயோ லீவ் முடிஞ்சதே.. இன்னையில் இருந்து போங்குக்கு போகனுமே?’ என அவசரமாய் கிளம்பி கீழே வந்தாள்.
பேங்கிற்கு போகிறாள் போல, என உணர்ந்து சிவஹாமியும் “சாப்பிடுட்டு போமா” என தட்டில் அவளுக்கு பூரிகளை எடுத்து வைக்க.
“வேலை செய்ய உடம்பில் தெம்பு வேண்டாம்..பட்னியா போய்….எங்காவது மயங்கி விழறதுக்கா” என அவளை பார்த்தபடி கூற..
அங்கருந்த அனைவரும் அவனை ஆச்சர்யமாய் பார்க்க..
“ஒரு விள்ளலை விழுங்கியவள் “டைம் ஆச்சு சத்ரி..” என மீண்டும் சொல்ல
“வாதம் பண்ற நேரத்தில் வயிறை நிரப்பிடலாம்..” என அவளை சோபாவில் அமர வைத்து அவளருகில் நின்ற படியே சத்ரி….அவளுக்கு ஊட்ட
“ஒரு நாளாவது உன் மகளுக்கு ஊட்டி விட்ருப்பியா ” என மஹாவை சங்கரன் பார்க்க..
அதை உணர்ந்த மஹாவோ “சாப்பிடுன்னு ஒரு வார்தை உங்க வாயில் வராது.. இதில் எங்கே ஊட்டி விட” என பதில் பார்வை பார்க்க..
மாடியில் இருந்தபடி க்ருத்திகா,வெங்க்கட் ஹாலில் இருந்து சற்றே உள் வாங்கய அறையில் இருந்து மஹா சங்கரன்… என அனைவரின் பார்வையும்….
அதட்டி ஊட்டிக் கொண்டிருந்த சத்ரி, அதை ரசித்தபடி உண்ணும் சாத்வி என இருவரின் மீதும் இருக்க.. அந்த இருவரோ மற்றர்வர்களை மறந்த வண்ணம்… இருந்தனர்
அவள் வாயில் தொடர்ந்து பூரிகளை அடைக்க.. உதடுகள் ஒரு புறம் சிரிப்பில் விரிய…. எத்தனை பூரிகள் உள்ளே சென்றன என தெரியாமலேயே உள்ளே சென்றது… சாத்விக்கு…
அதிகமாக என்பதை வயிறு உணர்த்த..மீதமிருந்த பூரியை பார்த்தபடியே “சாப்பிட முடியலை சத்ரி போதும்” என அவன் கைகளை தடுக்க..
“மிஞ்சம் வைக்கிற பழக்கத்தை இன்னும் விடலையா நீ..” என அவளை பார்த்தபடியே.
மீதமிருந்த பூரியை.. தன் வாய்க்குள் அடைக்க…
அதை பார்த்த சாத்வி…
அவன் கைவிரலுக்கும்.. இதழுக்கும் இடையில் தன் கையை வைத்து “வேண்டாம் எச்சி… ” என
“சாப்பாடை வேஸ்ட் பண்றது எப்போவுமே எனக்கு பிடிக்காது சாத்வி” என ப்ளேட்டை காலி செய்தான் “நீ மாறவே இல்லை” என வாய் விட்டு கூறியவளுக்கு தண்ணீரை கொடுக்க..
சிரித்தபடியே வாங்கிக் குடித்தவள். “பாய் சத்ரி..” என அவனிடம் கூறி… “வரேன் அத்தை” என சிவஹாமியிடமும் சொல்லிவிட்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.
சத்ரியும் கடைக்கு சென்றுவிட.. இரவு தான் வீடு திரும்பினான் சத்ரி..
மாலை இறங்கி இரவு கவிழ ஆரம்பிக்க… சத்ரி தங்கள் அறையினுள் வந்தான்.
புடவையை கூட மாற்றாமல், ரூமின் நடுவில் டிராவல் பேக்…. டிராலி பேக் என இரண்டையும் பிரித்து… அதில் இருந்தவற்றை கப்போர்டில் அடுக்கிக் கொண்டிருந்தாள்.
ஏற்கனவே இருந்த கோபங்கள் குல தெய்வம் கோவில் போய் வந்த பின் சற்று மட்டுப்பட்டிருக்க.. அவளை பார்த்த வண்ணம்.
“கீழே எல்லாரும் இருக்கிறாங்க… போய் பேசிட்டு இருக்கிறதை விட்டுட்டு, இங்கே என்ன பண்ற” என சர்ட் பட்டன்களை கழட்டியபடி கேட்க…
“அப்பார்ட்மெண்டை இன்றைக்கு தான் காலி பண்ணினேன்… அதான் திங்க்ஸ் எல்லாத்தையும்… ஷிப்ட் பண்ணிட்டு இருக்கேன்” என மீண்டும் அவள் வேலையை தொடர…
“தனியாவா போன… சொல்லி இருந்தா நான் வந்திருப்பேன்ல..” என அவளிடம் சிறிது எரிச்சலுடனே கேட்க
“நீயும் தான் அங்கே வந்தியே… என்ன பொருள் இருந்தது…. ஒரு டிராலி பேக், டிராவல் பேக்… இது போதும் என் மொத்த பொருளையும் வைக்கறதுக்கு என சிரிக்க…
“அப்போ…. டேபிள் சேர், பெட் இதெல்லாம்“ என கேட்க…
“ஸ்வீப்பர் ஒருத்தவங்க வருவாங்க அவங்க கிட்ட கொடுத்திட்டேன்” என மெலிதாய் புன்னகைக்க…
“சரி…போ…மற்றதை நான் எடுத்து வைக்கிறேன்” என டிராலி பேக்கை தன் புறமாய் நகற்ற
“இன்னும் கொஞ்சம் தான் நா…நானே பார்த்துக்கிறேன்” என அவனிடம் இருந்து ஏறக்குறைய பிடுங்க…
அவளின் தடுமாற்றத்தைப் பார்த்தவன்.. “என்கிட்ட என்னத்தை மறைக்கிறா ” என
“ஏய் விடு” என அவளிடமிருந்து பிடுங்கி.. அதற்குள் பார்க்க….
டைரிகள் நான்கு ஐந்து கிடக்க “ஆமா… இதற்காகவா இப்படி தடுமாறினே டைரியில் என்ன இருக்க போகுது “ஸ்ரீ ராம ஜெயம்” தானே ஏற்கனவே தெரிஞ்சது தானே…. இதையா மறைக்க பார்த்த” என டைரிகளை அடுக்கி அவள் கையில் வைக்க…
வாங்கிய சாத்வியின் பார்வை வித்யாசமாய் இருக்க… ‘இவ ஏன் இப்படி பார்க்குறா..’ என யோசித்தவனுக்கு… .
“என்னோட காயங்களுக்கு பின்னாடி ஸ்ரீராம ஜெயம் இருந்தாலும், அந்த ஸ்ரீ ராம ஜெயத்திற்கு பின்னாடியும் நீ தான் இருக்க” என்ற குரல் அவன் காதில் மோத..
அவள் கைகளில் இருந்த டைரியில் ஒன்றை அவள் எதிர்பாரத வண்ணம் உருவி… அதை பிரட்டி பார்க்க “ ஸ்ரீ ராம ஜெயமே” இருக்க அதை கீழே வைக்க போனவன். பாதி பக்கத்திற்கு மேல் பிரட்ட அதில் ஸ்ரீராம ஜெயத்திற்கு பதில்
“சத்ரியன்” என அவன் பெயரையே மந்திரமாக்கி எழுதியிருந்தாள். பார்த்தவனுக்கு கண்களை வேறெங்கும் நகர்த்தவே முடியவில்லை கண்கள் நிலைகுத்தி டைரியிலேயே பதிந்திருக்க.
என்ன மாதிரி உணர்ந்தான் என அவனுக்கே தெரியவில்லை.. அதிர்வா? மகிழ்வா? என தெரியவில்லை…
சாத்வியினால் ஒவ்வொரு முறையும் புதிதாய் உணரும் உணர்வுகள்… ஒவ்வொன்றும் இதயத்தை தைப்பதாய் இருக்க… அதன் வலி தாங்காமல் டைரிகளை ஓரிடத்தில் வைத்துவிட்டு கட்டிலில் சென்று படுத்துக் கொண்டான்..
அவனை அமைதியாய் பார்த்தாலும் எந்த ஒரு விளக்கமும் கொடுக்காமல் மற்றவைகளை ஒதுக்கி வைத்து விட்டு குளித்து உடை மாற்றி அவனருகில் அமர்ந்து.
“சத்ரி….சாப்பிட வா” என எழுப்ப
அவளின் ஒரு வார்த்தைக்கே கண் திறந்தவன் “மனசு நிறைஞ்சிருக்கும் போது வயிறு நிறையிறதா முக்கியம்.” என தீ பார்வை பார்க்க
“ இப்போ என்னாச்சுன்னு இவ்வளவு கோபம்”
“ என்ன கோபமா… ஸ்ரீராம ஜெயமும் நானும் ஒன்னாடி.. “
“ நிச்சயமா இல்லை… .”
“ அப்பறம் ஏன் இரண்டையும் ஒரே டைரியில் எழுதி வச்சு இருக்க”
“எதுக்கா..? சிம்பிள் லாஜிக்… தான்.. “ ஸ்ரீராம ஜெயம்” கவலைகளுக்கு.. “ சத்ரியன்” என் காயங்களுக்கு” என அவன் முகத்தை கொஞ்சமும் தடுமாற்றம் இன்றி பார்க்க..
விருட்டென எழுந்து அமர்ந்தவன் “நான் உனக்கு இந்த அளவுக்கு தேவையா இருந்தா ஷிவா அண்ணா கிட்ட ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை “சத்ரிகிட்ட பேசனும்….ன்னு” ஒரு வார்த்தை சொல்லி இருந்தா. நானே வந்திருப்பேண்டி.. நானே வந்திருப்பேன்… இத்தனை வருசமும் உன்னை இப்படியெல்லாம் கஷ்ட பட விட்டு இருப்பேனா ஏண்டி சொல்லலை” என அவளின் பின் கழுத்தடியில் கை கொடுத்து… தன் முகம் நோக்கி இழுத்தவன் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவளை இறுக்கிக் கொண்டிருக்க..
சத்ரி கண்கள் செவ்வரியோடி சிவந்திருக்க… மூக்கு கோபத்தில் விடைக்க… தாடைகள் இறுகிப் போய்.. கழுத்தின் எழும்புகள் துருத்தி நிற்க… அவன் முகமே ஆக்ரோஷமாய் மாறி இருக்க..
“உனக்கு மட்டும் தான் நான் தேவையா..? எனக்கு நீ எவ்ளோ… தேவைன்னு காட்டவா” என அவள் இதழ்களை தனக்குள் ஆக்ரோஷமாய் இழுத்துக்கொள்ள காலடியில் பூமி்நழுவியது சாத்விக்கு. அடுத்த சில நொடிகளில் அவளை விடுவித்து
கண்களை இறுக்கமாய் மூடி “இங்கே இருந்து போ… போய்டு இல்லை உன்னை… உன்னை———” என சில அந்தரங்க வார்த்தைகளை விட்டு “ஏதாவது செஞ்சிடப் போறேன்… போ..” என கத்தியவன்
“உன் விஷயத்தில் எனக்கு பொறுமையும் நிதானமும் சுத்தமா கிடையாது.. எழுந்து போய்டு” என சீறி மீண்டும் கண்களை இறுக மூடியபடி படுத்துவிட்டான்.
இவளோ அங்கேயே நின்றிருந்தாள்.
அடக்க முடியா கோபம் தாபம் ஏக்கம் தேவை துடிப்பு என அத்தனையும் இருவரையுமே கொல்ல. சாப்பிடக் கூட இல்லை. அப்படியே சோபாவில் சென்று அமர்ந்துவிட்டாள்.
சில பல நிமிடங்களில் சத்ரி உறங்கியும் போனான்.
இவளுக்கும் உறக்கம் கண்களை சுழற்ற, மெதுவாய் எழுந்து சென்று அவனருகில் அவளும் படுத்து கொண்டாள்.
ஏசி குளிருக்கு போர்வை போர்த்தும் முன் சத்ரி அவளுக்கு போர்வையாய் மாறி இருந்தான்.
இவன் தூங்கலையா? என இவள் எண்ணம் ஓடும் போதே முழுதாய் அவள் மீது படர்ந்து இறுக்கிக் கொண்டு உறங்க தொடங்கினான் சாத்வியும் எதிர்க்கவில்லை. அவனுக்கு வாகாய் தன்னை கொடுத்தபடி அவளும் உறங்கிப்போனாள்.
மறுநாள்…
கடைக்கு செல்ல கிளம்பிக்கொண்டிருந்தான் சத்ரி. நேற்றைய கோபம் இன்னும் அவனிடத்தில் கொஞ்சமும் குறையாமல் இருக்க இறுகிய முகத்துடன்.. டிரெஸிங் டேபிள் முன்பு நின்று தலைவாரிக் கொண்டிருக்க அவன் பின் சாத்வி வந்து நின்றாள் .
“உங்கிட்ட கொஞ்சம் பேசனும் சத்ரி” என..
திரும்பவே இல்லை இவன் நேற்றைய கோபம் அப்படியே இருந்தது அவனுள்.
ஆனாலும் சாத்வியை வெறுப்பவனா சத்ரியன்? கண்ணாடி வழியாய் அவளை பார்த்தான். கண்ணாடியில் பாதிக்கும் குறைவாய் தெரிந்த சாத்வியின் உருவத்திற்கு இன்னும் அதிகமாய் வழி விட்டு சற்று விலகி கண்ணாடியின் ஒரு ஓரமாய் நின்று பார்க்க
இப்போ சாத்வியின் முழு உருவமும் தெரிந்தது ‘என்ன பேசனும்’ என கேட்க வந்தவனின் வார்த்தைகள் அப்படியே தடுமாற, அன்று முதல் நாள் ஹோட்டலில் பார்த்த நினைவு எழுந்தது.
சத்ரியின் கைகள் தானாகவே உயர்ந்த கண்ணாடி வழியாய் தெரிந்த அவளின் நெற்றியில் நிலைத்து, நெற்றி, கண்கள் , மூக்கு, கன்னம், இதழ்கள் என வருடி கழுத்தில் இறங்கி.. அதன் நெளிவு சுளிவுகளின் பாதையில் பயனித்து.. இடையில் வெகு நேரமாய் இளைப்பாறி… அது கண்ணாடி என்பதை மறந்து, அவள் உருவத்தின் மேலேயே நிலைத்திருக்க.. சத்ரியின் பார்வைகளும் அவன் கைகள் பயணித்த இடங்களில் எல்லாம் அழுத்தமாய் பதிந்து மீள… அவள் உருவம் சுடிதார் அணிந்து இருந்த அவளின் வடிவை தலை முதல் இடை வரை தெரிந்தவளின் உருவத்தை அவன் கைகள் அவளுக்கு உணரவைத்தன..
சாத்விக்கு மூச்சு நின்றே போனது.. அதன் கீழும் கைகள் பயணிப்பதை உணர்ந்து கண்ணாடியை விட்டு விலகி நின்றாள் சாத்வி.
அவள் விலகும் முன் கை விரல்கள் எங்கிருந்ததோ… அங்கேயே வெகு நிமிடங்களாய் நிலைத்திருக்க வெறும் கண்ணாடியிலும் உணர்ந்த அவளின் உருவம் இன்னும் மூளையில் உறைந்திருக்க… கண்ணாடியில் பதிந்திருந்த விரல்கள் ஒரு இன்ச் கூட நகர மறுத்தது.. ஆனால் கண்களோ விலகி நின்ற சாத்வியை ஓயாத தேடலுடன் பார்த்திருக்க.. அவன் பார்வையை கொஞ்சமும் தவற விடாது.. அதை தாங்கி நின்றிருந்தாள்..